Showing posts with label நியமனம். Show all posts
Showing posts with label நியமனம். Show all posts

May 13, 2011

கலீபாவை நியமனம் செய்யும் வழிமுறை : طريقة نصب الخليفة பகுதி 2


முதல்நிலையைப் பொறுத்தவரை உள்ள விளக்கமாவது:

கலீபாவை நியமனம் செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள முஸ்லிம்கள் இருக்கவேண்டும் என்ற எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. மாறாக கலீ*பாவுக்கு பைஅத் கொடுப்பதில் எத்தகைய எண்ணிக்கை உள்ள முஸ்லிம்களும் இடம்பெறுவதற்கு அனுமதியுண்டு, மேலும் மற்ற முஸ்லிம்கள் வெளிப்படுத்தும் மௌனத்தின் மூலமோ அல்லது கட்டுப்படுவதற்கு இணக்கம் காட்டுவதன் மூலமோ அல்லது வேறுவகையில் தங்கள் ஒப்புதலை வெளிப்படுத்துவதன் முலமோ இந்த பைஅத்திற்கு உரிய அனைத்து முஸ்லிம்களின் ஒப்புதல் பெற்றுக் கொள்ளப்படும், இதனடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட கலீ*பா அனைத்து முஸ்லிம்களுக்கும் கலீ*பாவாக ஆகிவிடுவார், மூள்றே மூன்று நபர்களால் நியமனம் செய்யப்பட்டாலும் அவர்தான் சட்டரீதியான கலீ*பாவாக இருப்பார் ஏனெனில் கலீ*பாவை நியமனம் செய்ததின் மூலம் முஸ்லிம்கள் மீதுள்ள கூட்டுக்கடமை(*பர்லுல் கி*பாயா) நிறைவேற்றப்பட்டு விடுகிறது, முஸ்லிம்கள் தங்கள் அபிப்ராயங்களையும் விருப்பங்களையும் தடையின்றி முழுமையாக தெரிவிப்பதற்குரிய வாய்ப்பு வசதிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் அவர்கள் வெளிப்படுத்தும் மௌனம் அல்லது அவர்கள் கட்டுப்படுவதற்கு காட்டும் இணக்கம் அல்லது அவர்கள் சம்மதத்தை சுட்டிக்காட்டும் பல்வேறு நிலைகள் ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களின் ஒப்புதல் உறுதிசெய்யப்படுகிறது, எனினும் முஸ்லிம்கள் அனைவரின் ஒப்புதலை பெறுவதை நிறைவேற்ற முடியதாபோது பெரும்பான்மை முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக விளங்கும் ஒரு குழுவினர் இணைந்து கலீ*பா நியமனத்தை முறையாக நிறைவேற்றலாம் இந்தக் குழுவில் இடம்பெற்ற நபர்களின் எண்ணிக்கை எவ்வாறு இருந்தபோதிலும் சரியே, அவ்வாறு இல்லை என்றால் பிறகு கிலா*பத்தை நிலைநாட்ட முடியாது, இத்தயை தருணங்களில் ஆட்சியமைப்பு விவகாரங்களில் செல்வாக்கு பெற்றவர்கள் பைஅத்தை நிறைவேற்றுவதன் மூலம் கலீ*பாவை நியமனம் செய்யலாம் என்று சில சட்டஅறிஞர்கள் தீôமானிக்கிறார்கள். ஏனெனில் கலீ*பா ஆவதற்கு தகுதிபெற்ற எந்த நபருக்கும் முஸ்லிம்களின் ஒப்புதலை பெறுவதற்கு ஆற்றல்பெற்றுள்ள செல்வாக்கு மிக்கவர்கள் ஒரு குழுவாக இணைந்து பைஅத் செய்வதன் மூலம் கிலா*பத்தை நிலைநாட்டலாம் என்று அவர்கள் கருதுகிறார்கள், ஆகவே இத்தகைய தருணங்களில் செல்வாக்கு மிக்க மனிதர்களின் பைஅத் கிலா*பத்தை நிலைநாட்டுவதில்லை அல்லது கிலா*பத்தை நிலைநிறுத்துவதற்கு செல்வாக்கு மிக்க முஸ்லிம்கள் பைஅத் செய்யவேண்டும் என்ற நிபந்தனையும் இல்லை. மாறாக செல்வாக்கு மிக்க மனிதர்கள் முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக இருப்பதால் அவர்கள் பைஅத்தை நிறைவேற்றுவதும் மற்ற முஸ்லிம்கள் இதை ஏற்றுக்கொள்ளும் வகையில் மௌனத்தை வெளிப்படுத்துவதும் அவர்களின் ஒப்புதலை சுட்டிக்காட்டும் ஆதாரங்களாக இருக்கின்றன, ஆகவே முஸ்லிம்களின் ஒப்புதலுடன் செய்யப்படும் பைஅத்தை சுட்டிக்காட்டும் ஒவ்வொரு ஆதாரமும் கிலா*பத் ஒப்பந்தம் முறையாக நிறைவேற்றப்பட்டு கலீ*பா நியமிக்கப்பட்டதை உறுதிப்படுத்துகிறது, மேலும் இந்த பைஅத்தின் மூலம் நியமிக்கப்பட்ட கலீ*பா சட்டரீதியாக நியமிக்கப்பட்டவர்தான்.

இதனடிப்படையில் முஸ்லிம்களுக்கு தங்கள் ஒப்புதலை தெரிவிப்பதற்கு முழுமையான வாய்ப்பு வசதிகள் செய்யப்பட்டிருக்கின்ற நிலையில் ஆட்சியமைப்பு விவகாரங்களில் செல்வாக்கு பெற்றுள்ள முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் பைஅத்தை நிறைவேற்றுதல் அல்லது முஸ்லிம் பிரதிநிதிகளில் பெரும்பான்மையினர் பைஅத்தை நிறைவேற்றுதல் அல்லது முஸ்லிம்களில் ஒருகுழுவினர் பைஅத்தை நிறைவேற்றும்போது மற்ற முஸ்லிம்கள் மௌனமாக இருந்து அதை ஏற்றுக்கொள்வதோடு தங்கள் கட்டுப்படுதலை நிறைவேற்றுவதற்கு துரிதம் காட்டுதல் அல்லது இதுபோன்ற எந்த முறைகளிலோ முஸ்லிம்களிடம் ஒப்புதலை பெற்றதற்குரிய ஆதாரங்கள் உறுதிப்பட்ட நிலையில் எந்த கூட்டத்தினரும் கலீ*பாவை நியமித்து கிலா*பத்தை நிலைநாட்டலாம் என்பதுதான் கிலா*பத்தை நிலைநிறுத்துவதற்குரிய ஷரியாவின் விதிமுறையாகும், இந்த கூட்டத்தினர் செல்வாக்கு பெற்ற மனிதர்களாக இருக்கவேண்டும் என்றோ அல்லது அவர்கள் நான்கு என்ற எண்ணிக்கையிலோ அல்லது நாநூறு என்ற எண்ணிக்கையிலோ இருக்கவேண்டும் என்றோ அல்லது அவர்கள் தலைநகரில் வசிப்பவர்களாக இருக்கவேண்டும் என்றோ அல்லது அவர்கள் மாகாணங்களில் வசிப்பவர்களாக இருக்கவேண்டும் என்றோ இறைசட்டம் (divine law - ஹுகும்ஷரியா) கூறவில்லை. மாறாக அனைத்து முஸ்லிம்களுக்கும் அவர்களின் அபிப்ராயங்களையும் விருப்பங்களையும் தடையின்றி வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு வசதிகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் ஒப்புதலை சுட்டிக்காட்டுகின்ற ஆதாரம் முறையாக வெளிப்படும் வகையில் பைஅத் நிறைவேற்றப்படவேண்டும் என்றுதான் இறைசட்டம் கூறுகிறது.

அனைத்து முஸ்லிம்கள் என்பதன் பொருள் இஸ்லாமிய அரசின் கட்டுப்பாட்டு எல்லையில் வாழுகின்ற முஸ்லிம்கள் அனைவரும் என்பதாகும், அதாவது. கிலா*பத் அரசு நிலைபெற்றிருக்கும் பட்சத்தில் அதன் குடிமக்களாக இருப்பவர்கள் என்றும். கிலா*பத் அரசு இல்லாத பட்சத்தில் அதை நிலைநாட்டுவதற்காக கிலா*பத் ஒப்பந்தத்தை நிறைவேற்றும் முஸ்லிம்கள் என்றும் பொருளாகும், இந்த பட்டியலில் அடங்காத உலகில் வாழும் இதர முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்களின் ஒப்புதலை பெறுவது அவசியமல்ல ஏனெனில் அவர்கள் இஸ்லாமிய அதிகார அமைப்பிலிருந்து விலகியபடி வாழ்ந்துகொண்டிருக்கும் மூ*மின்கள் ஆவார்கள் அல்லது தாருல்கு*ப்ரில் வாழ்ந்துகொண்டிருக்கும் மூ*மின்கள் ஆவார்கள், எனவே அவர்கள் தாருல்இஸ்லாத்தின் செயல்பாடுகளில் பங்குகொள்ள முடியாது என்பதால் ஒப்பந்த பைஅத்தில் பங்குகொள்வதற்கு அவர்களுக்கு உரிமை கிடையாது, ஆனால் அவர்கள் கட்டுப்படும் பைஅத்தில் கட்டாயம் பங்குகொள்ளவேண்டும் ஏனெனில் கட்டுப்படும் பைஅத்தை நிறைவேற்றாதவர்கள் இஸ்லாமிய அதிகார அமைப்புக்கு எதிராக கலகம் செய்கிறவர்கள் ஆவார்கள், தாருல்கு*ப்ரில் வாழ்கின்றவர்கள் உண்மையில் கிலா*பத்தை நிலைநாட்டாதவரையில் அல்லது கிலா*பத்தின் அதிகாரத்திற்குள் வராதவரையில் அவர்கள் இஸ்லாமிய அதிகார அமைப்பை பெறாதவர்களாகவே இருந்துவருவார்கள், ஆகவே சட்டரீதியாக கலீ*பாவை நியமனம் செய்வதன் மூலம் உண்மையாக இஸ்லாத்தின் அதிகாரத்தை நிலைநிறுத்தும் முஸ்லிம்களுக்குத்தான் ஒப்பந்த பைஅத்தை நிறைவேற்றும் உரிமை இருக்கிறது. மேலும் அவர்களின் ஒப்புதலை பெறுவதுதான் கிலா*பத் ஒப்பந்தத்தை சட்டரீதியாக நிறைவேற்றுவதற்கு அவசியமாக இருக்கிறது, இத்தகைய கருத்து அறிவுரீதியான ஆய்விலிருந்து பிறந்த விளக்கம் என்றோ அல்லது இதற்கு ஆதாரம் இல்லை என்றோ கூறுவது தவறாகும், இந்த விளக்கத்தைப் பொறுத்தவரை இறைசட்டத்தை பிரயோகப்படுத்தும் விஷயத்தைக் (مناط subject) குறித்த விளக்கமே தவிர இறைசட்டத்தைக் குறித்த விளக்கமல்ல, இறைசட்டத்தை பிரயோகப்படுத்தும் எதார்த்த உண்மைகளை (realities) ஆய்வுசெய்வதற்கு ஷரியா ஆதாரம் தேவையில்லை, உதாரணமாக. இறந்தவைகளின் மாமிசத்தை உண்பதற்கு ஷரியா தடைசெய்துள்ளது, இறந்தவைகளின் மாமிசம் எதுவென்று ஆய்வுசெய்து அறிந்துகொள்வது அந்த சட்டத்தை பிரயோகப் படுத்துவதற்குரிய விஷயத்தை (مناط-subject) ஆய்ந்தறிவதாகும், ஆகசே சட்டத்தை பிரயோகப்படுத்தும் விஷயம் (subject)அதற்குரிய இறைசட்டத்தோடு தொடர்புடையதாகும், ஆகவே விஷயம் என்பதும் அதனுடன் தொடர்புடைய இறைசட்டம் என்பதும் வெவ்வேறானவை, விஷயத்தை (subject) ஆய்வுசெய்வதற்கு அதன் எதார்த்தநிலையை (Reality) ஆய்வுசெய்யவேண்டும், பிறகுதான் அந்த விஷயத்திற்குரிய இறைசட்டம் எதுவென்று அறிந்துகொள்ள முடியும், ஆகவே விஷயத்தின் எதார்த்தநிலையை ஆய்வுசெய்வதற்கு ஷரியா உரையின் ஆதாரம் தேவையில்லை, உண்மைப் பொருட்களின் எதார்த்தநிலை அல்லது விஷயத்தின் எதார்த்தநிலை ஆகியவற்றை அறிந்துகொள்ள அறிவுரீதியாக ஆய்வுசெய்ய வேண்டுமே ஒழிய ஷரியா ஆதாரத்தின் அடிப்படையில் அல்ல, ஆகவே முஸ்லிம்கள் கலீ*பாவை நியமனம் செய்யவேண்டும் என்பது இறைசட்டமாகும். மேலும் இந்த நியமனம் முஸ்லிம்களின் ஒப்புதல் மூலமும் தேர்ந்தெடுத்தல் மூலமும் நிறைவேற்றப்படவேண்டும் என்பதும் இறைசட்டமாகும், இந்த சட்டங்களுக்கு அவை இறைசட்டங்கள்தான் என்று நிரூபிப்பதற்கு ஆதாரம் தேவையில்லை. ஆனால் எவர்களால் நியமனம் நிறைவேற்றப்படவேண்டுமோ அந்த முஸ்லிம்கள் யார்? அவர்களின் ஒப்புதலையும் விருப்பத்தையும் எவ்வாறு நிறைவேற்றுவது? இவைதான் மேற்கூறிய இறைசட்டங்களை பிரயோகப்படுத்துவதற்குரிய எதார்த்தவிஷயமாகும் (subject) அதாவது இவைதான் மேற்கூறிய இறைசட்டங்களை பிரயோகப்படுத்துவதற்குரிய மனாத் (مناط-subject) ஆகும், ஒரு குறிப்பிட்ட இறைசட்டத்தை அதற்குரிய மனாத்தின் மீது பிரயோகப்படுத்துவதுதான் அந்த இறைசட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்துவதாகும், ஆகவே இறைசட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றால் அதனோடு தொடர்புடைய மனாத்தை ஆய்வுசெய்வது அவசியமாகும்.

சட்டத்தின் விஷயமும் (manaat ul hukm - subject of the rule) சட்டத்தின் காரணமும் (illat ul hukm – reason of the rule)வெவ்வேறானவை. அவற்றை இணைத்துக் கூறுவது தவறாகும் ஏனெனில் இதற்கு ஆதாரம் இல்லை, இவ்விரண்டிற்கும் மத்தியில் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது, இல்லத் (reason -காரணம்-علة) என்பது சட்டத்திற்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அந்த சட்டம் வந்ததிற்குரிய காரணத்தை குறிப்பிடுகிறது, அதாவது இல்லத் என்பது சட்டத்தை வழங்கிய அல்லாஹ்(சுபு) அதை எதற்காக கொடுத்தான் என்பதற்குரிய நோக்கத்தை குறிப்பிடுகிறது, ஒரு இறைசட்டத்திற்கு இல்லத் இருக்கிறது என்பதற்கு ஷரியாஉரையில் அதை சுட்டிக்காட்டும் ஆதாரம் இருக்கவேண்டும், சட்டத்தின் இல்லத்தை அறிந்துகொள்வதன் மூலம் சட்டத்தை கொடுத்த அல்லாஹ்(சுபு) வின் நோக்கத்தை அறிந்துகொள்ள முடியும், ஆனால் மனாத் என்பது எந்த விஷயத்தின் மீது அந்த சட்டம் கொடுகப்பட்டிருக்கிறதோ அந்த விஷயம் மற்றும் அதன் எதார்த்தநிலை ஆகியவையாகும், ஆகவே ஒரு சட்டத்தை அது எந்த மனாத்தின் மீது கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதன் மீது பிரயோகப்படுத்துகிறோமே தவிர அந்த சட்டத்தின் ஆதாரத்துடனோ அல்லது அந்த சட்டத்தின் இல்லத்துடனோ பிரயோகப்படுத்துவதில்லை, எந்த விஷயத்தின் மீது சட்டம் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அல்லது எந்த பிரச்சினைக்காக சட்டம் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அது அந்த விஷயத்திற்கோ அல்லது பிரச்சினைக்கோ தீர்வு வழங்குவதற்காகத்தான் கொடுக்ப்பட்டிருக்கிறது, ஆகவே சட்டம் எப்போதும் அதன் மனாத்தின் மீது தொங்கிக் கொண்டிருக்கும். அதேவேளையில் சட்டம் அதன் இல்லத்தோடு சுழன்று கொண்டிருக்கும், சட்டத்தின் மனாத் என்பது சட்டத்திற்குரிய ஷரியா ஆதாரத்திலிருந்து வேறுபட்டது மேலும் சட்டத்தை உறுதிசெய்வது சட்டத்தின் இல்லத்தை உறுதிசெய்வதிலிருந்து வேறுபட்டது, ஷரியாஉரைகளில் பொதிந்துள்ள தர்க்க வாதங்களை சரியாக புரிந்துகொள்வது இல்லத்தை ஆய்ந்தறிதல் என்று குறிப்பிடப்படுகிறது. மேலும் இது ஷரியா ஆதாரங்களை புரிந்துகொள்வதாகுமே தவிர மனாத்தை புரிந்துகொள்வது ஆகாது ஏனெனில் மனாத் என்பது ஷரியா ஆதாரங்களிலிருந்து வேறுபட்டது. அது சட்டத்தை பிரயோகப்படுத்தும் எதார்த்தத்தையோ (reality -الواقع) அல்லது பிரச்சினையையோ(ல்ழ்ர்க்ஷப்ங்ம்-المسألة) அல்லது விஷயத்தையோ(subject-مناط) குறிப்பிடுகிறது.

உதாரணமாக. ஹமர் என்று அழைக்கப்படும் மதுபானம் ஹராமாகும், மதுபானத்தை அருந்துவதற்குரிய தடை அதன் இறைசட்டமாக இருக்கிறது, சிலவகை பானங்கள் அவை ஹராமானதா அல்லது இல்லையா என்பதை தீர்மானிப்பதற்காக அவை மதுபானமா அல்லது இல்லையா என்ற விசாரணையை மேற்கொள்வதுதான் மனாத்தை ஆய்வுசெய்வதாகும், அதாவது அந்த குறிப்பிட்ட பானத்தின் தன்மைதான் இங்கு மனாத் என்று அழைக்கப்படுகிறது, ஆகவே ஒரு பானத்தை அது ஹராமா அல்லது இல்லையா என்பதை உறுதிசெய்ய அதில் மது (alchohol) இருக்கிறதா அல்லது இல்லையா என்பதை ஆய்வுசெய்வது அவசியமாகும், இந்த இடத்தில் பானத்தின் உண்மைநிலையை ஆய்வுசெய்வது மனாத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகத்தான், மற்றொரு உதாரணம். உலூ(الوضوء) செய்வதற்கு அனுமதிக்கப்பட்ட தண்ணீர் முத்தலக் நீர்(unrestricted water) என்று இறைசட்டம் கூறுகிறது, உலூ செய்வதற்கு அனுமதிக்கப்பட்டதா அல்லது இல்லையா என்பதை அறிந்துகொள்வதற்கு தண்ணீர் கட்டுப்படுத்தப்படாமல் ஓடிக்கொண்டிருக்கிறதா அல்லது இல்லையா என்பதை ஆய்வுசெய்வதுதான் மனாத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுதல் என்பதாகும், ஆகவே தண்ணீர் தடையின்றி ஓடிக்கொண்டிருக்கிறதா அல்லது தேங்கிக்கிடக்கிறதா என்பதை தீர்மானிப்பதற்கு அதன் உண்மைநிலையை ஆய்வுசெய்வது அவசியமாகும், இவ்வாறு தண்ணீரின் எதார்த்தநிலையை ஆய்வுசெய்வதைத்தான் மனாத்தை உறுதிப்படுத்திக் கொள்வது என்று குறிப்பிடப்படுகிறது, ஹதûஸ வெளிப்படுத்தியவர் (பின்துவாரத்தின் வழியாக காற்று வெளியேறுதல்) தொழுகையை நிறைவேற்றுவதற்கு உலூ செய்யவேண்டும் என்று கூறும்போது அந்த மனிதர் ஹதûஸ வெளிப்படுத்தியவராக (முஹ்தஸ்) இருக்கிறாரா அல்லது இல்லையா என்பதை விசாரணை செய்வதுதான் மனாத்தை உறுதிப்படுத்துவதாகும், இன்னும் இவ்வாறு கூறிக்கொண்டே செல்லலாம், அல்முஆ*பகாத் (الموافقات) என்ற நூலில் அஷ்ஷாத்தபீ (الشاطبي) கூறியிருப்பதாவது: இந்த விஷயத்திலும் மற்றும் இதுபோன்றவற்றிலும் அவற்றின் மனாத்தை நாம் விளங்கிக் கொள்ளவேண்டியிருப்பதால் அவற்றின் எதார்த்தநிலைகளின் அடிப்படையில் ஷரியா ஆதாரங்களை எடுத்துக்கொள்ளவேண்டும், மனாத்தை ஆய்வுசெய்து உறுதிப்படுத்தும் செயலோடு இஜ்திஹாதை இணைக்கவேண்டும், அவ்வாறு செய்வதற்கு சட்டத்தை கொடுத்தவரின் (அல்லாஹ் -சுபு) நோக்கத்தைப்பற்றிய அறிவும் தேவையில்லை அரபிமொழிப் புலமையும் தேவையில்லை. ஏனெனில் இஜ்திஹாதை மேற்கொள்வதின் நோக்கம் சட்டத்தோடு தொடர்புடைய விஷயத்தை அதாவது மனாத்தை உள்ளபடியே அறிந்துகொள்வதுதான், ஆகவே மனாத் (விஷயம் -subject) என்னவென்று அறிந்துகொள்வதற்கு அறிவுத்திறன் தேவைப்படுகிறது. அது இல்லாமல் விஷயத்தை (மனாத்தை) தீர்மானமாக அறிந்துகொள்ள இயலாது, இதனடிப்படையில் முஜ்தஹிதாக உள்ளவர் அறிவுத்திறன் பெற்றவராக இருக்கவேண்டும். மேலும் குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் ஏற்படும் தேவையின் அடிப்படையில் இறைசட்டங்களை பிரயோகப்படுத்துவதற்கும் ஒரு முஜ்தஹித் அறிவுத்திறன் நிறைந்தவராக இருக்கவேண்டும்.

ஷரியா உரையில் பொதிந்துள்ள சட்டம் வந்ததற்குரிய காரணங்களை (நோக்கங்களை) ஆய்வுசெய்து அறிந்து கொள்வதுதான் இல்லத்தை(reason-காரணம்-علة) கண்டுபிடித்தல் என்று கூறப்படுகிறது, இது ஷரியா உரையை (شرعي النص) விளங்கிக்கொள்வதாகும். ஆகவே அது மனாத்திலிருந்து வேறுபட்டது, மனாத்தை உறுதிப்படுத்துதல் என்பது சட்டத்தை பிரயோகப்படுத்தும் விஷயத்தை அல்லது பிரச்சினையை அல்லது எதார்த்தத்தை கண்டுபிடித்தலாகும், இதனடிப்படையில் மனாத்தை ஆய்வுசெய்பவர் முஜ்தஹிதாகவோ அல்லது முஸ்லிமாகவோ இருக்கவேண்டும் என்ற அவசியம் கிடையாது. மாறாக அவர் அந்த விஷயத்தில் அறிவு பெற்றவராக இருக்கவேண்டும் என்பதுதான் அவசியமாகும், ஆகவே கலீ*பா நியமனத்தில் எத்தகைய முஸ்லிம்கள் பைஅத் செய்தால் அது அனைத்து முஸ்லிம்களின் அல்லது பெரும்பான்மை முஸ்லிம்களின் ஒப்புதலையும் ஏற்றுக்கொள்ளுதலையும் சுட்டிக்காட்டும் என்பதை ஆய்வுசெய்வது மனாத்தை ஆய்வுசெய்வதில் அடங்கும்.

இது முதல்நிலையைப் பொறுத்தவரை உள்ள விஷயமாகும், இரண்டாவது நிலையைப் பொறுத்தவரை. இன்றைய காலகட்டத்தில் நடந்துவரும் தேர்தல் முறையான இரகசிய ஓட்டுப்பதிவு. ஓட்டுச்சீட்டுகளையும் ஓட்டுப் பெட்டிகளையும் பயன்படுத்துதல் மற்றும் ஓட்டுக்களை எண்ணுதல் ஆகிய அனைத்தும் மக்களின் விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்வதை நடைமுறைப்படுத்துவதற்கு பிரயோகிப்படும் செயல்முறைகளாகவும் சாதனங்களாகவும் (styles and means - الأساليب والوسائل) இருக்கின்றன. அவை இறைசட்டத்தின் எல்லைக்குள்ளோ அல்லது அந்த சட்டத்தை பிரயோகிக்கும் விஷயத்திற்குள்ளோ (மனாத்) இடம்பெறாது, ஏனெனில் இந்த செயல்முறைகளும் சாதனங்களும் முஸ்லிம்களின் செயல்பாடுகளிலோ அல்லது இறைசட்டத்தை பிரயோகிக்கும் மனாத்துடனோ எந்தவிதத்திலும் நேரடியாக தொடர்புடையவை அல்ல, முஸ்லிம்களின் செயல்பாடுகளில் இந்த சாதனங்களை பயன்படுத்துவதற்கு எந்த தடையும் கிடையாது. ஏனெனில் இறைசட்டம் முஸ்லிம்களின் செயல்பாடுகளோடு தொடர்புடைய விஷயமாகும். அதாவது கிலா*பத் முஸ்லிம்களால் நிலைநாட்டப்டவேண்டும் என்ற விஷயத்தோடு தொடர்புடையதாகுதம், ஆகவே இந்த விவகாரத்திற்குரிய இறைசட்டத்தின் நோக்கத்தோடு இத்தகைய தேர்வுமுறைகளுக்கும் அவற்றில் பயன்படுத்தப்படும் சாதனங்களுக்கும் எத்தகைய தொடர்பும் கிடையாது, பொதுவான ஷரியா உரைகள்(النص عاماً) அனுமதித்துள்ள விஷயங்களாக அவைகளை எடுத்துக்கொள்ளவேண்டும். மேலும் அவைகளை தடைசெய்யும் குறிப்பிட்ட ஆதாரங்கள் (دليل خاص) எதுவும் கிடையாது என்ற அடிப்படையில் அவைகள் முபாஹ்( مباحة) ஆகும், எனவே முஸ்லிம்கள் எத்தகைய செயல்முறை பாணியையும் எடுத்துக்கொள்வதற்கு அனுமதியுண்டு, முஸ்லிம்களின் ஒப்புதலோடும் அவர்களின் விருப்பத்தோடும் கலீ*பாவை நியமனம் செய்யும் *பர்லான செயல்பாட்டை நிறைவேற்றுவதற்கு ஏதுவாக உள்ள எத்தகைய செயல்முறை பாணியையும் எந்தவகை சாதனங்களையும் அவைகள் தடைசெய்யப்பட்டதற்குரிய ஷரியா ஆதாரங்கள் எதுவும் இல்லாதவரை அவற்றை பயன்படுத்துவதற்கு முஸ்லிம்கள் அனுமதிக்கப்ட்டே இருக்கிறார்கள், செயல்முறைபாணி (
styles-الأساليب) என்பது மனதர்களின் செயலில் உள்ளது அதை இறைசட்டங்களின் அடிப்படையில் மட்டுமே நிறைவேற்றமுடியும் என்றும். அதன் சட்டங்களை சுட்டிக்காட்டக்கூடிய ஷரியா ஆதாரம் அதற்கு இருக்கவேண்டும் என்றும் கூறுவது சரியல்ல, ஏனெனில் இறைசட்டங்களின் அடிப்படையில் நிறைவேற்றப்படும் மனிதனின் செயல்பாடுகளுக்கு அவற்றின் சட்டங்களை சுட்டிக்காட்டும் ஆதாரம் இருப்பது அசலான செயல்பாடுகளுக்கும்(action of origin–الفعل أصلاً) தனிப்பட்ட ஆதாரமுள்ள கிளை செயல்பாடுகளுக்கும் மட்டுமே பொருந்தக்கூடியது, இதற்கு உதாரணம் தொழுகையாகும். அதைக் குறிப்பிடும் ஷரியா ஆதாரம் அதனை நிறைவேற்றுவதுடன் மட்டும் தொடர்புடையது. தொழுகையோடு தொடர்புடைய மற்ற செயல்பாடுகள் இதில் அடங்காது. ஏனெனில் உலூ செய்தல் போன்ற தொழுகையோடு தொடர்புடைய கிளைசெயல்பாடுகளுக்கு தனிப்பட்ட ஆதாரங்கள் இருக்கின்றன, ஆகவே நிறைவேற்றப்படும் ஒவ்வொரு செயல்பாடுகளுக்கும் இறைசட்டத்தைக் கொடுக்கக்கூடிய ஒரு ஆதாரம் இருக்கவேண்டும், ஆனால் ஒரு செயல்பாடு அதன் அசலான செயல்பாட்டின் கிளையாக இருக்கும்நிலையில் அந்த கிளை செயல்பாட்டிற்கு தனிப்பட்ட ஆதாரம் இல்லாவிட்டாலும் அதன் அசலான செயல்பாட்டிற்குரிய பொதுவான ஆதாரமே அதை நிறைவேற்றுவதற்கு போதுமானதாக இருக்கும், ஒரு செயல்பாடு கிளை செயல்பாடாக இருக்கும் நிலையில் அது தடை செய்யப்பட்டதற்கு உரிய தனிப்பட்ட ஆதாரம் இல்லாவிடில் பிறகு அதை மேற்கொள்வதை தடை செய்யமுடியாது, ஆகவே இன்றைய தேர்தல்முறைகளில் இடம்பெறும் கிளை செயல்பாடுகளுக்கு தனிப்பட்ட சட்டம் இருக்கவேண்டும் என்று கோருவது ஒரு கிளை செயல்பாட்டை அதன் அசலான செயல்பாட்டிலிருந்து வெளியே கொண்டுவந்து அதற்கு புதிய சட்டத்தை கொடுக்கவேண்டும் என்று கூறுவதற்கு ஒப்பாக இருக்கிறது, கலீ*பாவை தேர்வுசெய்யும் செயல்பாடுகளில் இடம்பெறும் அசலான செயல்பாடு என்பது முஸ்லிம்களின் ஒப்புதலோடும் விருப்பத்தோடும் கலீ*பாவை நியமனம் செய்யவேண்டும் என்பதாகும், ஆனால் ஓட்டுப்போடுதல். ஓட்டுச்சீட்டையும் ஓட்டுப்பெட்டியையும் பயன்படுத்துதல் மற்றும் ஓட்டுக்களை எண்ணுதல் போன்ற அசலான செயல்பாட்டிலிருந்து ஏற்படும் கிளை செயல்பாடுகள் அனைத்தும் அசலான செயல்பாட்டின் சட்டங்களுக்குள் அடங்கிவிடும், இந்த கிளை செயல்பாடுகளுக்கு தனிப்பட்ட எந்த ஆதாரமும் தேவையில்லை, இவைகளில் எதுவொன்றையும் அசலான செயல்பாட்டின் சட்டங்களுக்கு வெளியில் கொண்டுவருவது என்றால் அதாவது அவற்றை தடைசெய்வது என்றால் அதற்கு ஆதாரம் இருக்கவேண்டும், மனிதனின் செயல்பாடுகளில் பின்பற்றப்படும் செயல்முறைபாணிகள் (styles-الأساليب) அனைத்திற்கும் இது பொருந்தும், ஓட்டுச்சீட்டு. ஓட்டுப்பெட்டி போன்ற சாதனங்களைப் பொறுத்தவரை இவை அனைத்தும் பொருட்களுக்குரிய சட்டங்களில் அடங்குமே ஓழிய செயல்பாட்டிற்குரிய சட்டங்களில் அடங்காது, இந்த விவகாரத்தில் பின்வரும் ஷரியா விதிமுறையே பிரயோகிக்கப்படும்.

"தடை செய்யப்பட்டதற்கு உரிய ஆதாரம் இல்லாதவரை எல்லா பொருட்களும் அனுமதிக்கப்பட்டதுதான்"

அதாவது ஹராமாக்கப்பட்ட பொருட்களைத் தவிர மற்ற பொருட்கள் அனைத்தும் ஹலாலானவையே.

வழிமுறை (method-الطريقة) மற்றும் செயல்முறை பாணி (style-أسلوب) ஆகியவற்றுக்கு இடையிலுள்ள வேறுபாடு என்னவென்றால் வழிமுறை என்பது அசலான செயல்பாடுகளாகவோ அல்லது தனிப்பட்ட ஆதாரத்தைக் கொண்ட கிளை செயல்பாடுகளாகவோ இருக்கும். மாறாக செயல்முறை பாணி என்பது அசலான செயல்பாடுகளோடு இணைந்திருக்கும் துணை செயல்பாடுகளாகும். அவற்றிற்கு தனிப்பட்ட ஆதாரம் இருக்காது, ஆகவே அசலான செயல்பாடுகளுக்கு உரிய பொதுவான ஆதாரம் மட்டும் இருக்கும் நிலையில் அந்த அசலான செயல்பாடுகளோடு இணைந்திருக்கும் துணை செயல்பாடுகள் அனைத்தும் செயல்முறை பாணியில் அடங்கும் என்பதோடு அவற்றுக்கு தனிப்பட்ட ஆதாரம் எதுவும் ஷரியாவில் இருக்காது, ஆகவே வழிமுறை என்பது இறைசட்டமாக இருப்பதால் அது ஷரியா ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும். எனவே அதை கட்டாயமாக பின்பற்றி முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும், வழிமுறையின் சட்டம் இபாஹாவில் (அனுமதிக்கப்பட்டவற்றில்) இல்லாதவரை இறைசட்டங்களை பின்பற்றுவதில் முஸ்லிம்கள் தங்கள் விருப்பப்படி நடந்துகொள்ள முடியாது, ஷரியா ஆதாரம் இல்லாத செயல்முறை பாணியிலிருந்து இது வேறுபட்டது என்பதோடு இது அசலான செயல்பாட்டின் சட்டங்களில் அடங்கக்கூடியது, ஆகவே இதை பின்பற்றவேண்டியது கட்டாயமாகும், மாறாக செயல்முறை பாணிகள் அனைத்தும் முபாஹ் என்பதால் ஒரு குறிப்பிட்ட பாணியை அல்லாஹ்வின்தூதர்(ஸல்) பின்பற்றினாôகள் என்றபோதும் அதை முஸ்லிம்கள் பின்பற்றவேண்டிய கட்டாயம் இல்லை, ஆகவே முஸ்லிம்கள் தங்கள் செயல்பாடுகளை நிறைவேற்றுவதற்கு எத்தகைய செயல்முறை பாணிகளையும் எடுத்துக்கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர், மேலும் செயல்பாடுகளைப் பொறுத்தே செயல்முறைபாணி எத்தகையது என்று தீர்மானிக்கப்படுகிறது.

sources from warmcall.blogsot.com

May 12, 2011

கலீபாவை நியமனம் செய்யும் வழிமுறை : طريقة نصب الخليفة பகுதி 1

கலீபா ஒருவரை நியமனம் செய்யவேண்டும் என்பதை ஷரியா முஸ்லிம் உம்மாவுக்கு கட்டாய கடமையாக ஆக்கியிருப்பதால் அவரை எவ்வாறு நியமனம் செய்யவேண்டும் என்ற வழிமுறையை (طريقة – method) அது விளக்கமாகக் கூறியுள்ளது, அதுதான் பைஅத் (البيعـة ) என்ற வழிமுறையாகும். குர்ஆன் சுன்னா இஜ்மாஅஸ்ஸஹாபா ஆகியவற்றிலுள்ள ஆதாரங்களின் வாயிலாக அது நிரூபிக்கப்பட்டிருக்கிறது, ஆகவே கலீபாவின் நியமனம் பைஅத் கொடுப்பதின் மூலமாக மட்டுமே நிறைவேற்றப்படுகிறது, முஸ்லிம்கள் அல்லாஹ்வின்தூதருக்கு(ஸல்) பைஅத் கொடுத்தார்கள் என்ற ஆதாரத்திலிருந்தும். இமாமுக்கு பைஅத் கொடுக்கவேண்டும் என்று அல்லாஹ்வின்தூதர்(ஸல்) முஸ்லிம்களுக்கு கட்டளையிட்டுள்ள ஆதாரத்திலிருந்தும் பைஅத் செய்யவேண்டும் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது, அல்லாஹ்வின்தூதருக்கு(ஸல்) முஸ்லிம்கள் பைஅத் கொடுத்தது அவர்களின் நபித்தவத்திற்காக அல்ல மாறாக ஆட்சிஅதிகாரத்தை மேற்கொள்ளத்தான் முஸ்லிம்கள் அவர்களுக்கு(ஸல்) பைஅத் செய்தார்கள், ஏனெனில் அவர்கள் கொடுத்தது செயல்பாட்டின் மீதுள்ள பைஅத்தே தவிர நம்பிக்கையின் மீதுள்ள பைஅத் அல்ல, ஆகவே அல்லாஹ்வின்தூதருக்கு(ஸல்) கொடுக்கப்பட்ட பைஅத் அவர்கள்(ஸல்) ஆட்சியாளர் என்ற முறையில் உள்ளதே தவிர நபி என்பதற்காகவோ அல்லது ரஸல் என்பதற்காகவோ அல்ல, ஏனெனில் நபியையும் அவர் கொண்டுவந்த செய்தியையும் ஏற்றுக்கொள்வது நம்பிக்கையுடன் தொடர்புடைய விஷயமே தவிர பைஅத்துடன் தொடர்புடைய விஷயமல்ல, பைஅத்தைப் பற்றி குர்ஆனிலும் சுன்னாவிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا جَاءَكَ الْمُؤْمِنَاتُ يُبَايِعْنَكَ عَلَى أَنْ لَا يُشْرِكْنَ بِاللَّهِ شَيْئًا وَلَا يَسْرِقْنَ وَلَا يَزْنِينَ وَلَا يَقْتُلْنَ أَوْلَادَهُنَّ وَلَا يَأْتِينَ بِبُهْتَانٍ يَفْتَرِينَهُ بَيْنَ أَيْدِيهِنَّ وَأَرْجُلِهِنَّ وَلَا يَعْصِينَكَ فِي مَعْرُوفٍ فَبَايِعْهُنَّ وَاسْتَغْفِرْ لَهُنَّ اللَّهَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ

நபியே! மூமினான பெண்கள் உம்மிடம் வந்து அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாக்குவதில்லை என்றும் திருடுவதில்லை என்றும் விபச்சாரம் செய்வதில்லை என்றும் தங்கள் குழந்தைகளை கொலை செய்வதில்லை என்றும் தங்கள் கைகளுக்கும் தங்கள் கால்களுக்கும் இடையில் எதனை அவர்கள் கற்பனை செய்கிறார்களோ அத்தகைய அவதூறை இட்டுக்கட்டிக்கொண்டு வருவதில்லை என்றும் இன்னும் நன்மையான காரியத்தில் உமக்கு மாறு செய்வதில்லை என்றும் அவர்கள் உம்மிடம் பைஅத் செய்தால் அவர்களுடைய பைஅத்தை ஏற்றுக்கொள்வீராக, மேலும் அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுவீராக. நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும் கிருபை உடையவனாகவும் இருக்கிறான், (ற்ம்வ் அல் மும்தஹினா 60 : 12)

إِنَّ الَّذِينَ يُبَايِعُونَكَ إِنَّمَا يُبَايِعُونَ اللَّهَ يَدُ اللَّهِ فَوْقَ أَيْدِيهِمْ

உம்மிடம் பைஅத் செய்தவர்களெல்லாம் அல்லாஹ்விடம் பைஅத் செய்தவர்கள் ஆவார்கள். அவர்களின் கைகள் மீது அல்லாஹ்வின் கை இருக்கிறது…… (அல்பதஹ் 48 : 10)

உபாதா இப்ன் அஸ்ஸôமித் (ரலி) அறிவித்து புஹாரியில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.

على السمع والطاعة في المنشط والمكره، وأن لا ننازع الأمر أهله وأن نقوم أو نقول بالحق حيثما كنّا لا نخاف في الله لومة لائمrبايعنا رسول الله

"நாங்கள் விரும்புகின்றவற்றிலும் வெறுக்கிள்றவற்றிலும் செவிமடுப்போம் என்றும் கட்டுப்பட்டு நடப்போம் என்றும் அதிகாரம் கொடுக்கப்ட்டவர்களுடன் சர்ச்சை செய்யமாட்டோம் என்றும் பழிப்போரின் பழிப்புக்கு அஞ்சாமல் எந்நிலையிலும் சத்தியத்தில் உறுதியாக இருப்போம் என்றும் அல்லாஹ்வின்தூதருக்கு நாங்கள் பைஅத் செய்தோம்."

அபூஉகைல் அறிவித்து புஹாரியில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.

هو صغير فمسح رأسه ودعا لهr فقالت يا رسول الله بايعه، فقال النبي r وذهبت به أمه زينب ابنة حميد إلى رسول الله rفقد حدث أبو عقيل زهرة بن معبد عن جده عبد الله بن هشام وكان قد أدرك النبي

"அபூஉகைல் ஸஹ்ரா இப்ன் மபத் தனது பாட்டனார் அப்துல்லாஹ் இப்ன் ஹிஷாமிடமிருந்து அறிவிப்பதாவது. அப்துல்லாஹ் இப்ன் ஹிஷாம் இறைத்தூதரிடம் வந்தார். அவருடன் அவர் தாயாரும் ஹமீதின் புதல்வியுமான ûஸனபும் வந்தார். அல்லாஹ்வின்தூதரே(ஸல்) இவரிடம் (அப்துல்லாஹ் இப்ன் ஹிஷாம்) பைஅத் பெற்றுக்கொள்வீர்களாக என்று அவர் கூறினார், அதற்கு இறைத்தூதர்(ஸல்), அவர் சிறுவராக இருக்கிறார் என்று கூறி (பைஅத் பெற்றுக்கொள்ள மறுத்து) விட்டு அவரின் தலையை தடவிக்கொடுத்தவாறு அவருக்காக துஆ செய்தார்கள்."

அபூஹுரைரா(ரலி) அறிவித்து புஹாரியில் இடம்பெற்றுள்ள ஹதீஸில் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியிருப்பதாவது.

ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم: رجل على فضل ماء بالطريق يمنع منه ابن السبيل، ورجل بايع إماماً لا يبايعه إلاّ لدنياه إن أعطاه ما يريد وفى له وإلا لم يف له، ورجل يبايع رجلاً بسلعة بعد العصر فحلف بالله لقد أعطي بها كذا وكذا فصدقه فأخذها ولم يُعط بها

"மூன்று விதமான மனிதர்களுடன் அல்லாஹ் மறுமையில் பேசவுமாட்டான் அவர்களை தூய்மைப் படுத்தவுமாட்டான். அவர்களுக்கு கடுமையான தண்டனை உண்டு, (அவர்கள் யாரெனில்) நடைபாதையின் பக்கமாக உள்ள அதிகமான தண்ணீரைப் (பயன்படுத்த இயலாதவாறு) வழிப்போக்கருக்கு தடுத்து வைத்துள்ள மனிதர். உலக நலனை நாடியவராக இமாமுக்கு பைஅத் செய்யும் மனிதர். அவர் நாடியது கொடுக்கப்பட்டால் அதை (பைஅத்தை) நிறைவேற்றுவார் இல்லையெனில் நிறைவேற்றமாட்டார். ஒரு மனிதருக்கு பொருளை வியாபாரம் செய்யும் மனிதர். அதை (எவருக்கும்) விற்காதபோதும் இன்னார் இன்னாருக்கு அதை விற்றதாக மாலைநேரத்தில் அல்லாஹ்வின்மீது சத்தியம் செய்வார். உண்மை என்று எண்ணி அவரும் அதை வாங்கிச்செல்வார்"

இந்த மூன்று ஹதீஸ் அறிவிப்பிலிருந்து கலீபாவை நியமனம் செய்வதற்குரிய வழிமுறை பைஅத் செய்வதுதான் என்பது தெளிவாக விளங்குகிறது, உபாதா(ரலி) அறிவித்துள்ள ஹதீஸில் தான் அல்லாஹ்வின்தூதரின்(ஸல்) சொல்லை கேட்டுநடப்பதாகவும் அவர்களுக்கு கட்டுப்படுவதாகவும் பைஅத் கொடுத்ததாக கூறியுள்ளார், இந்த பைஅத் ஆட்சியாளர் ஒருவருக்கு கொடுக்கும் பைஅத்தாகும், அப்துல்லாஹ் இப்ன் ஹிஷாம் அறிவித்துள்ள ஹதீஸில் தான் சிறுவராக இருந்ததால் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) அவரது பைஅத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறியுள்ளார், இந்த பைஅத் ஆட்சியாளர் ஒருவருக்கு கொடுக்கப்படும் பைஅத்தாகும், அபூஹுரைரா(ரலி) அறிவித்துள்ள ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது இமாமுக்கு கொடுக்கப்பட்ட பைஅத் என்பது தெளிவாக கூறப்பட்டிருக்கிறது, இமாம் என்பதற்கு இந்த ஹதீஸில் விளக்கம் கூறப்படாவிட்டாலும் மற்ற ஹதீஸ்களில் அதற்கு விளக்கம் கூறப்பட்டுள்ளது.

அப்துல்லாஹ் இப்ன் உமர் (ரலி) அறிவித்து முஸ்லிமில் இடம்பெற்றுள்ள ஹதீஸில் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியிருப்பதாவது.

من بايع إماماً فأعطاه صفقة يده وثمرة قلبه فليطعه إن استطاع، فإن جاء آخر ينازعه فاضربوا عنق الآخر

"'எவரேனும் ஒருவர் தமது கரத்தால் கைலாகு(முஸபா) கொடுப்பதன் மூலமும் தமது இதயத்தால் நன்நம்பிக்கை கொள்வதன் மூலமும் ஒரு இமாமுக்கு பைஅத் செய்தால் பிறகு அவர் இயன்றவரை அவருக்கு கட்டுப்பட்டு நடக்கட்டும், இந்நிலையில் மற்றாருவர் வந்து (அதிகாரத்தில்) அவரிடம் சர்ச்சை செய்தால் அவரது கழுத்தை வெட்டுங்கள்"

அபூஸயீது அல்குத்ரி (ரலி) அறிவித்து முஸ்லிமில் இடம்பெற்றுள்ள ஹதீஸில் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியிருப்பதாவது.

إذا بويع لخليفتين فاقتلوا الآخر منهما

"இரண்டு கலீபாக்களுக்கு பைஅத் பெறப்பட்டால் இரண்டாவது நபரை கொன்றுவிடுங்கள்"

அபூஹிஸôம்(ரலி) அறிவித்து முஸ்லிமில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் கூறப்பபட்டிருப்பதாவது.

நான் ஐந்துவருடங்கள் அபூஹுரைராவுடன் பிரயாணம் செய்திருக்கிறேன். அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியதாக அவர் அறிவித்துள்ளதை செவியுற்றிருக்கிறேன்.

அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறினார்கள்.

كانت بنو إسرائيل تسوسهم الأنبياء، كلما هلك نبي خلفه نبي، وأنه لا نبي بعدي، وستكون خلفاء فتكثر، قالوا: فما تأمرنا ؟ قال: فوا ببيعة الأول فالأول،

"பனூஇஸ்ராயீல் மக்களை நபிமார்கள் ஆட்சி செய்தார்கள். ஒருநபி இறந்தபோது மற்றொரு நபி அவரிடத்திற்கு அனுப்பட்டார், நிச்சயமாக. எனக்குப் பிறகு நபிமார்கள் வரமாட்டார்கள் ஆனால் கலீபாக்கள் வருவார்கள் அவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள், (அதுகுறித்து) எங்களுக்கு என்ன கட்டளையிடுகிறீர்கள் என்று ஸஹாபாக்கள் வினவினார்கள், அவர்கள் அனைவருக்கும் ஒருவருக்குப்பின் ஒருவராக பைஅத் கொடுங்கள்"

ஆகவே குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஆகியவற்றில் இடம்பெற்றுள்ள உரைகள் கலீபாவை நியமனம் செய்யும் வழிமுறை பைஅத் செய்வதுதான் என்பதை தெளிவாகக் கூறுகின்றன, ஸஹாபாக்கள் அனைவரும் இதை விளங்கிக்கொண்டு பின்பற்றி வந்தார்கள், ஆகவே அபூபக்கருக்கு(ரலி) பனூஸôயிதாவின் புறநகர் பகுதியில் தனிப்பட்ட பைஅத்தும் பிறகு மதீனாவின் மஸ்ஜிதில் பொதுவான பைஅத்தும் நிûவேற்றப்பட்டது, அலீ இப்ன் அபூதாலிப்(ரலி) போன்றவர்கள் மஸ்ஜிதில் பைஅத் செய்யாவிட்டாலும் பிறகு தனிப்பட்டமுறையில் பைஅத்தை நிறைவேற்றினார்கள், மேலும் உமர்(ரலி) உஸ்மான்(ரலி) மற்றும் அலீ(ரலி) ஆகியோரும் பைஅத் பெற்ற பின்னரே கலீபாவாக பொறுப்பேற்றுக் கொண்டார்கள், ஆகவே முஸ்லிம்கள் கலீபாவை நியமனம் செய்வதற்குரிய ஒரே வழிமுறை பைஅத் செய்வதுதான் என்பது திட்டவட்டமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

பைஅத்தை நிறைவேற்றுவது குறித்த நடைமுறை செயல்பாடுகள் பற்றிய விளக்கத்தைப் பொறுத்தவரை. அல்லாஹ்வின்தூதரின்(ஸல்) மரணத்திற்கு பின்னர் வந்த நேர்வழி காட்டப்பட்ட கலீபாக்களான உமர்(ரலி) உஸ்மான்(ரலி) மற்றும் அலீ(ரலி) ஆகியோர் நியமனத்தில் அவை தெளிவாகவும் விளக்கமாகவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன, இந்த நடைமுறையை அனைத்து ஸஹாபாக்களும் ஏற்றுக்கொண்டு உறுதிப்படுத்தி இருக்கிறார்கள், இந்த நடைமுறைகள் ஷரியாவிற்கு முரண்பாடாக இருந்திருக்கும் பட்சத்தில் நிச்சயமாக அவர்கள் அனைவரும் அவற்றை மறுத்திருப்பார்கள் ஏனெனில் இது முஸ்லிம்களின் ஒட்டுமொத்த நலனோடும் இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைப்படுத்துவதோடும் தொடர்புடைய மிகமுக்கியமான விஷயமாகும், இந்த கலீபாக்கள் நியமனம் செய்யபட்ட நிகழ்வுகளை ஆய்வுசெய்யும் பட்சத்தில் அல்லாஹ்வின்தூதரின்(ஸல்) மரணத்திற்கு பின்னர் முதல் கலீபா நியமனம் செய்யப்பட்டபோது நிகழ்ந்த நடப்புகளை வைத்து இதற்குரிய வழிமுறையை அறிந்துகொள்ளலாம்,

அல்லாஹ்வின்தூதரின்(ஸல்) மரணத்திற்கு பின்னர் முஸ்லிம்கள் பனூஸôயிதாவின் புறநகர் பகுதியில் சந்தித்து விவாதித்துக் கொண்டிருந்தார்கள், ஸது. அபூஉபாதா(ரலி). உமர்(ரலி) மற்றும் அபூபக்கர்(ரலி) ஆகியோர் மட்டுமே கலீபா பதவிக்கு முன்மொழியப் பட்டிருந்தார்கள், இந்த விவாதத்தின் முடிவில் முஸ்லிம்கள் அபூபக்கருக்கு (ரலி) பைஅத் கொடுத்தார்கள், மறுநாள் முஸ்லிம்கள் அனைவரும் மஸ்ஜிதிற்கு அழைக்கப் பட்டார்கள். அவர்கள் அனைவரும் அபூபக்கருக்கு (ரலி) பைஅத் கொடுத்தார்கள், இந்த பைஅத்தின் முடிவில் அபூபக்கர்(ரலி) முஸ்லிம்களுக்கு கலீபாவாக நியமிக்கப்பட்டார், அபூபக்கர்(ரலி) தனது நோயின் காரணமாக மரணத்தை உணர்ந்தபோது அவர் முஸ்லிம்களை அழைத்து யார் அடுத்த கலீபாவாக வரவேண்டும் என்பது பற்றி ஆலோசனை கலந்தார், இந்த ஆலோசனையின் மூலமாக உமர்(ரலி) மற்றும் அலீ(ரலி) ஆகியோரை மட்டுமே முஸ்லிம்கள் விரும்புகிறார்கள் என்பதை அறிந்துகொண்டார் மேலும் இந்த ஆலோசனையை அபூபக்கர்(ரலி) தொடர்ந்து மூன்று மாதங்கள் மேற்கொண்டார், ஆலோசனை கலப்பதை அவர் முழுமையாக முடித்த பின்னர் முஸ்லிம்களில் பெரும்பான்மையானவர்கள் விரும்புவதை அறிந்துகொண்டு தனக்குப் பின்னர் உமர்(ரலி) கலீபாவாக வரவேண்டும் என்று அறிவிப்பு செய்தார், அபூபக்கர்(ரலி) மரணம் அடைந்தவுடன் முஸ்லிம்கள் மஸ்ஜிதிற்கு வந்து உமருக்கு(ரலி) பைஅத் செய்தார்கள், முஸ்லிம்கள் பைஅத் நிறைவேற்றப்பட்டவுடன் அவர் கலீபாவாக நியமிக்கப்பட்டார், அபூபக்கர்(ரலி) முஸ்லிம்களிடம் ஆலோசனை கலந்ததாலோ அல்லது ஆலோசனை முடிவை அறிவித்ததாலோ உமர்(ரலி) கலீபாவாக ஆகவில்லை மாறாக முஸ்லிம்கள் பைஅத் செய்து கிலாபத் ஒப்பந்தத்தை நிறைவேற்றியதாலேயே அவர் கலீபாவாக நியமிக்கப்பட்டார், அதுபோலவே உமர் (ரலி) கத்தியால் குத்தப்பட்டபோது அவருக்கு அடுத்தபடியாக வரக்கூடிய கலீபாவை நியமனம் செய்யும்படி அவரிடம் முஸ்லிம்கள் வேண்டினார்கள் ஆனால் அதற்கு உமர்(ரலி) மறுத்துவிட்ôர், அவர்கள் தொடர்ந்து வற்புறுத்தவே ஸஹாபாக்களில் சிறந்தவர்களாக இருந்த ஆறு நபர்களை அவர் முன்மொழிந்தார், அவரது மரணத்திற்குப் பின்னர் அந்த அறுவர் குழு தங்களுக்குள் ஆலோசனை செய்து அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்பை (ரலி) முகவராக ஆக்கியது, அவர் முஸ்லிம்களின் கருத்துக்களை அறிந்துகொள்வதற்காக அவர்களுடன் ஆலோசனை செய்தார், பின்னர் அவர் பெரும்பான்மையான முஸ்லிம்களின் ஆதரவைப் பெற்ற உஸ்மானை(ரலி) கலீ*பாவாக முன்மொழிந்து பைஅத் செய்தார். பிறகு முஸ்லிம்கள் உஸ்மானுக்கு(ரலி) பைஅத் செய்தார்கள் அவர் கலீபாவாக நியமனம் செய்யப்பட்டார், பிறகு வந்த காலகட்டத்தில் உஸ்மான்(ரலி) கொலை செய்யப்பட்டார், அலீ இப்ன் அபூதாலிப்(ரலி) போட்டியின்றி தேர்ந்தெடுக்ப்பட்டார், அவருக்கு மதீனாவிலும் கூபாவிலும் இருந்த பெரும்பான்மையான முஸ்லிம்கள் பைஅத் செய்தார்கள் அவர் கலீபாவாக நியமனம் செய்யப்பட்டார்.

இந்த நிகழ்வுகளிலிருந்து கிலாபத்திற்கு உரிய பைஅத்தை நிறைவேற்றும் நடைமுறை செயல்பாடு அறிந்துகொள்ளப்படுகிது, யார் கலீபாவாக வரவேண்டும் என்பது பற்றி முஸ்லிம்களிடம் ஆலோசனை நடத்துவதுதான் அந்த நடைமுறை செயல்பாடாகும், இவ்வாறு ஆலோசனை மேற்கொள்வதன் விளைவாக கலீபா பொறுப்பிற்கு வருவதற்கு குறிப்பிட்ட சிலர் மீது கருத்து உடண்பாடு ஏற்பட்டவுடன் அவர்களின் பெயர்கள் முஸ்லிம்கள் மத்தியில் அறிவிப்பு செய்யப்படும், அவர்களில் பெரும்பான்மையான முஸ்லிம்களின் ஆதரவு யாருக்கு இருக்கிறதோ அவருடைய பெயர் அறிவிக்கப்படும், பின்னர் முஸ்லிம்கள் அவர் மீது பைஅத்தை நிறைவேற்றவேண்டும், மேலும் கலீபா பதவிக்கு போட்டியிட்ட மற்றவர்களும் அவர் மீது பைஅத்தை நிறைவேற்றவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுவார்கள், பைஅத் நிறைவேற்றப்பட்ட பின்னர் அவர் கலீபாவாக நியமனம் செய்யப்படுவார்,

(ஸல்) மரணத்திற்குப் பின்னர் பனூஸôயிதா மைதானத்தில் கலீபாவாக வருவதற்கு தகுதி பெற்றவர்கள் என்று கருதப்பட்ட ஸது(ரலி). அபூஉபைதா(ரலி). அபூபக்கர்(ரலி) மற்றும் உமர்(ரலி) ஆகியோருக்கு மத்தியில் விவாதம் நடைபெற்றது, பின்னர் அபூபக்கருக்கு(ரலி) மீதமுள்ள மூவரும் பைஅத் செய்தது கலீபா பதவிக்கு அவரை தேர்வு செய்ததற்கு ஒப்பான நடவடிக்கையாக இருக்கிறது, ஆனால் அனைவரும் அவருக்கு பைஅத் செய்யும்வரை இந்த தேர்வு முஸ்லிம்களை எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தவில்லை, எனவே முஸ்லிம்களின் பைஅத் மூலமாகவே அபூபக்கர்(ரலி) கலீபாவாக ஆக்கப்பட்டார், அவர் இறக்கும் தருவாயில் கலீபா நியமனம் பற்றி முஸ்லிம்களிடம் ஆலோசனை மேற்கொண்டார், உம்ர்(ரலி) மற்றும் அலீ(ரலி) ஆகியோரில் உமருக்கு(ரலி) முஸ்லிம்கள் மத்தியில் அதிக ஆதரவு இருப்பதை அறிந்துகொண்ட அபூபக்கர்(ரலி) உமரின்(ரலி) பெயரை அறிவித்தார், பிறகு முஸ்லிம்கள் அபூபக்கரின்(ரலி) தேர்வை அங்கீகரித்து உமருக்கு(ரலி) பைஅத் செய்து அவரை கலீபாவாக ஏற்றுக் கொண்டார்கள், உமர்(ரலி) இறக்கும் தருவாயில் முஸ்லிம்களின் ஆதவை பெற்றுள்ள ஆறு நபர்களை கலீபா பதவிக்கு முன்மொழிய முன்வந்தார், முஸ்லிம்களின் ஆதரவு பற்றிய கருத்துக்களை அவர்களிடம் கலந்தாலோசனை செய்தபின்னர் அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்ப்(ரலி) உஸ்மான்(ரலி) பெயரை அறிவித்தார், முஸ்லிம்கள் அவருக்கு பைஅத் கொடுத்தபின்னர் அவர் கலீபாவாக ஆக்கப்பட்டார், உஸ்மான்(ரலி) கொலை செய்யப்பட்டபோது அலீ(ரலி) க்கு இணையான போட்டியாளர் எவரும் இல்லாதநிலையில் முஸ்லிம்கள் அவரை ஏகமானதாக தேர்வுசெய்து அவருக்கு பைஅத் கொடுத்து கலீபா பதவியில் அமர்த்தினார்கள்.

இவ்வாறுதான் கலீபாவை நியமனம் செய்யும் பைஅத் என்ற வழிமுறை நிறைவேற்றப்படுகிறது, முதலில் தகுதியுள்ள நபர்களை அறிந்துகொள்வதற்காக விவாதம் நடத்தப்படுகிறது. பின்னர் அவர்களில் முஸ்லிம்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றவர் தேர்வு செய்யப்படுகிறார். பின்னர் தேர்வு செய்யப்பட்ட நபருக்கு முஸ்லிம்கள் பைஅத்தை நிறைவேற்றுகிறார்கள். பின்னர் அவர் கலீபாவாக நியமிக்கப்படுகிறார், அபூபக்கர்(ரலி) கலீபாவாக நியமிக்கப்பட்ட போது இந்த விஷயம் தெளிவாக தெரிந்தாலும் உஸ்மான்(ரலி) கலீபாவாக நியமிக்கப்பட்டபோது இதை திட்டவட்டமாகவும் தெளிவாகவும் விளக்கமாகவும் அறிந்துகொள்ள முடிகிறது.

அல்மெஸ்வர் இப்ன் மஹ்ரமா(ரலி) விடமிருந்து ஹமீது இப்ன் அப்துர்ரஹ்மான் அறிவித்து. அவரிடமிருந்து அல் ஸýஹ்ரீ அறிவித்துள்ள ஹதீஸ் புஹாரியில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது.

'"உமர்(ரலி) நியமித்த அறுவர் குழுவில் இடம்பெற்றிருந்த ஸஹாபாக்கள் ஒன்றிணைந்து தங்களுக்குள் ஆலோசனை கலந்தார்கள், அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்ப்(ரலி) அவர்களிடம். "இந்த விவகாரத்தில் நான் உங்களுடன் போட்டியிடப்போவதில்லை. ஆனால் நீங்கள் சம்மதிக்கும் பட்சத்தில் உங்களிலிருந்து ஒருவரை நான் தேர்வுசெய்ய தயாராக உள்ளளேன் என்று கூறினார், ஆகவே அவர்கள் இந்த பொறுப்புக்கு அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்பை(ரலி) நியமித்தார்கள், இந்த விஷயத்தை முஸ்லிம்கள் அறிந்தபோது அவர்கள் அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்பை(ரலி) சுற்றி குவிந்து விட்டார்கள், கலீபா பொறுப்புக்கு போட்டியிடும் மற்ற ஐந்து நபர்களிடம் விவாதிப்பதற்கோ அல்லது ஆதரவாக நிற்பதற்கோ ஒருவரையும் நான் காணவில்லை, அந்த இரவு முழுவதும் முஸ்லிம்கள் அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்புடன்(ரலி) ஆலோசனை கலந்தார்கள், காலையில் நாங்கள் எழுந்தபோது உஸ்மான்(ரலி) மீது கிலாபத் தேர்வு முடிவு செய்யப்பட்டு விட்டதால் நாங்கள் அவருக்கு பைஅத் செய்தோம்"

மேலும் மெஸ்வர்(ரலி) அறிவிப்பதாவது

'"அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்ப்(ரலி) எனது வீட்டின் கதவை தட்டினார் ( நாங்கள் இருவரும் கலந்தாலோசனை செய்தோம்) இரவின் ஒரு பகுதிவரை நான் விழித்திருந்தேன்(பின்னர் உறங்கிவிட்டேன்) "நீர் உறங்குவதை நான் காண்கிறேன் அல்லாஹ்வின் மீது ஆணையாக இன்றிரவு எனது கண்கள் உறக்கத்தை காணவில்லை, ஸýபைர்(ரலி) மற்றும் ஸது(ரலி) ஆகிய இருவரையும் அழைத்துவர ஏற்பாடு செய்வீராக என்று அப்துர்ரஹ்மான்(ரலி) கூறினார், நான் அவர்களை அவரிடம் அழைத்துவந்தேன், அவர்களிடம் அவர் ஆலோசனை கலந்தார், பிறகு அவர் என்னை அழைத்து "அலீயை எனக்காக அழைத்துவருவீராகஃ என்று கூறினார், நான் அலீயை அழைத்துவந்த பின்னர் இரவு மறையும் வரை அவருடன் சப்தமின்றி மெதுவாக உரையாடினார், பிறகு சில எதிர்பார்ப்புடன் அலீ(ரலி) அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார், அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்ப்(ரலி) அலீ விஷயத்தில் ஒருவித அச்சம் கொண்டிருந்தார், பிறகு அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்ப்(ரலி) "உஸ்மானை எனக்காக அழைத்துவருவீராக என்று கூறினார், நான் உஸ்மானை அழைத்துவந்த பின்னர் பஜ்ர் தொழகைக்காக முஅத்தினின் அழைப்பு கேட்கும்வரை அவருடன் சப்தமின்றி மெதுவாக உரையாடினார், பிறகு அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார், அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்ப்(ரலி) பஜர் தொழுகைக்கு இமாமத் செய்து முடித்த பின்னர் அந்த அறுவர்குழு மின்பர் அருகில் கூடியது, முஹாஜிர்கள் மற்றும் அன்ஸôர்களிலுள்ள முஸ்லிம்கள் அனைவருக்கும் அவர் அழைப்பு விடுத்திருந்தார் மேலும் அந்த ஆண்டு உமருடன்(ரலி) ஹஜ் யாத்திரை மேற்கொண்ட இராணுவ தலைவர்களுக்கும் அவர் அழைப்பு விடுத்திருந்தார், அவர்கள் அனைவரும் மஸ்ஜிதில் கூடியபோது ஷஹாதத்தை ஓதியவாறு அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்ப்(ரலி) கூறினார். "ஓ அலீயேõ நான் மக்களின் விவகாரத்தை ஆய்வுசெய்தேன். அவர்கள் உஸ்மானுக்கு இணையாக எவரையும் காணவில்லை, (إني نظرت في أمر الناس فلم أرهم يعدلون بعثمان) ஆகவே உம்மை நீர் சங்கடத்தில் ஆழ்த்திக் கொள்ளவேண்டாம் என்று கூறிவிட்டு உஸ்மானை நோக்கி. "நான் அல்லாஹ்வின் மீதும் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) மீதும் அவர்களுக்குப் பின்னர் வந்த இரண்டு கலீ*பாக்கள் வழிமுறையின் மீதும் உமக்கு பைஅத் செய்கிறேன் என்று கூறினார், ஆகவே அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்ப்(ரலி) முஹாஜிர்கள் அன்ஸôர்கள் மற்றும் இராணுவத்தலைவர்கள் மற்றுமுள்ள முஸ்லிம்கள் அனைவரும் அவருக்கு பைஅத் செய்தார்கள். ஆகவே முஸ்லிம்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க கிலாபத்திற்கு உரிய போட்டியாளர் பட்டியலை உமர்(ரலி) ஆறுநபர்களுக்குள் கட்டுப்படுத்தினார், கிலாபத்தின் போட்டியிலிருந்து அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்ப்(ரலி) தன்னை விடுவித்துக் கொண்ட பின்னர் யார் கலீபாவாக வரவேண்டும் என்பது தொடர்பான முஸ்லிம்களின் கருத்தை அறிந்துகொண்டார், பின்னர் அவர் முஸ்லிம்களுடன் கலந்தாலோசனை மேற்கொண்டு அவர்கள் விரும்பும் நபரின் பெயரை அறிவித்தார், இந்த அறிவிப்புக்குப் பின்னர் உஸ்மானுக்கு(ரலி) பைஅத் செய்யப்பட்டு அந்த பைஅத்தின் மூலமாக அவர் கலீபாவாக நியமிக்கப்பட்டார், ஆகவே கிலாபத்திற்கு முன்மொழியப்படும் போட்டியாளர்களின் பட்டியல் பெரும்பான்மையான முஸ்லிம்களின் ஆதரவை பெற்றுள்ள குறிப்பிட்ட பிரதிநிதிகளுடன் மட்டும் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் கலீபாவை நியமனம் செய்வது தொடர்பான ஹுகும்ஷரியாவாகும், இவ்வாறு பட்டியல் முடிவான பின்னர் அவர்களுடைய பெயர்கள் முஸ்லிம்களுக்கு அறிவிக்கப்பட்டு அவர்களில் ஒருவரை அனைத்து முஸ்லிம்களுக்கும் உரிய கலீபாவாக தேர்வுசெய்யும்படி கேட்டுக்கொள்ளப்படும், பெரும்பான்மையான முஸ்லிம்கள் எவரை தேர்வுசெய்துள்ளார்கள் என்பதை முறையாக அறிந்துகொண்ட பின்னர் அனைத்து முஸ்லிம்களிடமிருந்தும் அவருக்காக பைஅத் பெற்றுக்கொள்ளப்படும் மக்கள் அனைவரும் அவரை தேர்வுசெய்வதில் பங்கேற்றாலும் அல்லது பங்கேற்காவிட்டாலும் சரியே.

இதுதான் கலீபாவை நியமனம் செய்வதற்குரிய வழிமுறையாகும் ஏனெனில். கிலாபத்திற்கு போட்டியிடுபவர்களின் பட்டியலை உமர்(ரலி) ஆறுநபர்களுக்குள் கட்டுப்படுத்தியபோது ஏற்பட்ட இஜ்மாஅஸ்ஸஹாபா. அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்ப்(ரலி) யார் கலீபாவாக வரவேண்டும் என்பது குறித்த முஸ்லிம்களின் அபிப்ராயத்தை திரட்டியபோது ஏற்பட்ட இஜ்மாஅஸ்ஸஹாபா. "நான் மக்களின் விவகாரத்தை ஆய்வுசெய்தேன். அவர்கள் உஸ்மானுக்கு இணையாக எவரையும் காணவில்லை (إني نظرت في أمر الناس فلم أرهم يعدلون بعثمان) என்று கூறியபின்னர் முஸ்லிம்கள் உஸ்மானை தேர்வுசெய்துள்ளார்கள் என்று அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்ப்(ரலி) தெளிவாக அறிவித்து மக்களை பைஅத் செய்யும்படி கேட்டுக்கொண்டபோது ஏற்பட்ட இஜ்மாஅஸ்ஸஹாபா. இவை அனைத்தும் கலீபாவின் நியமனம் குறித்த ஹுகும்ஷரியாவை தெளிவுபடுத்துகின்றன.

இந்த விஷயத்தில் இன்னும் இரண்டு விவகாரங்களை விளக்கவேண்டியிருக்கிறது, முதலாவதாக. கலீபாவை நியமனம் செய்யும் முஸ்லிம்கள் யார்? அவர்கள் ஆட்சியமைப்பு விவகாரங்களில் செல்வாக்கு பெற்றுள்ள முஸ்லிம்களா? அல்லது குறிபிட்ட எண்ணிக்கையுள்ள சில முஸ்லிம்களா? அல்லது அனைத்து முஸ்லிம்களுமா? இரண்டாவதாக. இந்த நூற்றாண்டின் நவீன தேர்தல்முறைகளிலுள்ள ஓட்டுப்பதிவு, ஓட்டுச்சீட்டை பயன்படுத்துதல் மற்றும் ஓட்டு எண்ணிக்கை ஆகிய செயல்முறைகள் இஸ்லாத்துடன் ஒத்துப்போகக்கூடியதா? அவற்றை இஸ்லாம் அனுமதிக்கிறதா அல்லது இல்லையா?

முதலாவது விவாகாரத்தைப் பொறுத்தவரை அல்லாஹ்(சுபு) ஆட்சிஅதிகாரத்தை முஸ்லிம் உம்மாவிற்கு வழங்கியதன் மூலம் கலீபாவை நியமனம் செய்வதை முஸ்லிம்களின் கடமையாகவும் உரிமையாகவும் ஆக்கியிருக்கிறான், மேலும் அவன்(சுபு) இதை முஸ்லிம்களிலுள்ள மற்ற கூட்டத்தினரை விலக்கிவிடும் வகையில் ஒரு குறிப்பிட்ட கூட்டத்தினருக்கோ அல்லது மற்ற ஜமாஅத்தை விலக்கிவிடும் வகையில் ஒரு குறிப்பிட்ட ஜமாஅத்திற்கோ உரிமையாக்கி வைக்கவில்லை ஏனெனில் பைஅத் கொடுப்பது அனைத்து முஸ்லிம்களின் மீதுள்ள கட்டாய கடமையாக இருக்கிறது.

அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறினார்கள்.

ومن مات وليس في عنقه بيعة مات ميتة جاهلية'

"எவர் தனது கழுத்தில் பைஅத் இல்லாத நிலையில் மரணம் அடைகிறாரோ அவர் ஜாஹிலியத்தில் மரணம் அடைந்தவர் ஆவார்"

இது முஸ்லிம்கள் அனைவருக்குமுள்ள பொதுவான கட்டளையாகும் , ஆகவே செல்வாக்கு பெற்ற முஸ்லிம்கள் மட்டும் கலீபாவை நியமனம் செய்வதற்கு ஏகபோக உரிமை பெற்றிருக்கவுமில்லை மற்ற முஸ்லிம்களின் பங்களிப்பை அவர்கள் புறக்கணிக்கவும் முடியாது, எந்வொரு நபருக்கும் இதில் ஏகபோக உரிமை கிடையாது, மாறாக விதிவிலக்கின்றி இந்த உரிமை அனைத்து முஸ்லிம்களுக்கும் சொந்தமானதாகும், இந்த உரிமையில் முஸ்லிம்களிலுள்ள தீயவர்களுக்கும் (பாஜிர்) நயவஞ்சகர்களுக்கும் (முனாபிகீன்) அவர்கள் புத்திசுவாதீனமுள்ள வயதுவந்தவர்களாக இருக்கும் பட்சத்தில் உரிமையுண்டு. ஏனெனில் இந்த விவகாரத்தில் ஷரியா உரை வயதுக்கு வராத சிறுவர்களின் பைஅத்தை மறுப்பதைத் தவிர்த்து மற்ற முஸ்லிம்கள் அனைவருக்கும் பொதுவான முறையில் வந்திருக்கிறதே தவிர எவரையும் இதிலிருந்து கட்டுப்படுத்தும் வகையில் வரவில்லை, ஆகவே ஷரியாஉரையின் அர்த்தத்தை பொதுவான முறையில்தான் எடுத்துக் கொள்ளமுடியும்.

எனினும் இந்த உரிமையை எல்லா முஸ்லிம்களும் பிரயோகித்தே தீரவேண்டும் என்பது நிபந்தனையல்ல, மேலும் பைஅத் செய்வது கட்டாய கடமை என்றபோதும் அது பர்லுல் கிபாயாவாக (கூட்டுக்கடமை) இருக்கிறது என்ற அடிப்படையில் முஸ்லிம்களில் ஒரு கூட்டத்தினர் இதை நிறைவேற்றும் பட்சத்தில் மற்ற முஸ்லிம்கள் மீதுள்ள கடமை நீங்கிவிடுகிறது, ஆனால் கலீபாவை தேர்வுசெய்யும் விஷயத்தில் அனைத்து முஸ்லிம்களின் உரிமையும் நிலைநாட்டப்படும் விதத்தில் அவர்களின் அபிப்ராயம் அறிந்து கொள்ளப்பட வேண்டும். அவர்கள் இந்த உரிமையை செயல்படுத்த முன்வந்தாலும் முன்வராவிட்டாலும் சரியே, வேறுவகையில் கூறுவதென்றால் கலீபாவை தேர்வுசெய்யும் தேர்தலில் அனைத்து முஸ்லிம்களும் பங்குகொள்ளும் விதத்தில் ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும். அவர்கள் அனைவரும் இதில் பங்குகொள்ள ஆர்வம் காட்டினாலும் காட்டாவிட்டாலும் சரியே, அல்லாஹ்(சுபு) முஸ்லிம்கள் மீது விதித்துள்ள கடமையை நிறைவேற்றி பாவத்திலிருந்து மீளும் வகையில் கிலாபத்தை நிலைநிறுத்தும் கடமையை நிறைவேற்றுவதற்கு முஸ்லிம்க் அனைவருக்கும் வாய்ப்பு வசதிகள் அமைத்து தரப்படவேண்டும் என்பதுதான் நிபந்தனையே தவிர இந்தக் கடமையை நிறைவேற்றும் பணியில் அனைத்து முஸ்லிம்களும் ஈடுபட்டே ஆகவேண்டும் என்பது நிபந்தனையல்ல, இதுஏனெனில் முஸ்லிம்களின் ஒப்புதலின் மீது கிலாபத் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை அல்லாஹ்(சுபு) கட்டாயமாக ஆக்கியிருக்கிறானே தவிர அவர்கள் அனைவரும் இதில் ஈடுபட்டே ஆகவேண்டும் என்பதை கட்டாயம் ஆக்கவில்லை, இந்த விவகாரத்தில் இரண்டு முடிவுகள் எய்தப்படுகின்றன, ஒன்று. கிலாபத்தை நிலைநாட்டுவதில் அனைத்து முஸ்லிம்களின் ஒப்புதலை பெறும் நிலை, மற்றொன்று. அனைத்து முஸ்லிம்களின் ஒப்புதலை பெறமுடியாத நிலை, எனினும் இந்த இரண்டு நிலைகளிலும் முஸ்லிம்கள் அனைவரும் கலீபாவின் நியமனத்தில் பங்குகொள்வதற்கு ஏற்ப வாய்ப்பு வசதிகள் செய்யப்பட்டிருக்கவேண்டும் என்பதுதான் கட்டாயமாகும்.

தொடரும்

warmcall.blogspot.com

ஒருவர் இடத்திற்கு மற்றொருவரை நியமனம் செய்தல் அல்லது ஒப்பந்தம் செய்தல் - استخلاف أو العهد


ஒருவருக்கு பதிலாக மற்றொருவரை நியமனம் செய்வது மூலமாகவோ அல்லது வாரிசுரிமை மூலமாகவோ கிலாபத்திற்குரிய ஒப்பந்தம் நிறைவேறற்றப்படமாட்டாது, ஏனெனில் கிலாபத் ஒப்பந்தம் என்பது முஸ்லிம்களுக்கும் கலீபாவாக தேர்வு செய்யப்படுபவருக்கும் மத்தியில் ஏற்படும் ஒப்பந்தமாகும், மேலும் முஸ்லிம்கள் பைஅத் கொடுப்பதும் கலீபாவாக தேர்வு செய்யப்பட்ட நபர் பைஅத்தை ஏற்றுக்கொள்வதும் ஒப்பந்தத்தின் ஷரத்தாக இருக்கிறது, ஒருவருக்கு பதிலாக மற்றொருவரை நியமனம் செய்யும் முறையோ அல்லது வாரிசுரிமை அடிப்படையில் நியமனம் செய்யும் முறையோ கிலாபத்தின் ஒப்பந்தத்தை நிறைவேற்றாது, ஆகவே இத்தகைய முறைகளை நிறைவேற்றுவதன் மூலமாக கிலாபத்தை நிலைநாட்ட முடியாது, இதனடிப்படையில் கலீபாவாக பதவியில் அமர்ந்திருக்கும் ஒருவர் தனக்கு அடுத்தபடியாக பதவி வகிப்பதற்கு ஒருவரை கலீபாவாக நியமித்தால் அது சட்டரீதியான கிலாபத் ஒப்பந்தமாக ஏற்றக்கொள்ப்பட மாட்டாது. ஏனெனில் அவருக்கு அந்த உரிமை கிடையாது, அவ்வாறு பதவிக்கு வந்த ஒருவரை சட்டரீதியான கலீபாவாக ஏற்றுக்கொள்ளவும் முடியாது, கிலாபத் என்பது முஸ்லிம்கள் அனைவருக்கும் உரிமையுள்ள விவகாரமே ஒழிய கலீபாவாக இருக்கும் நபருக்கு உரிமையுள்ள விகவாரம் அல்ல, மேலும் முஸ்லிம்கள் தாங்கள் விரும்பும் நபர்மீது அந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கு உரிமை பெற்றிருக்கிறார்கள், ஆகவே கலீபா பதவியில் இருப்பவர் அடுத்த கலீபாவை நியமனம் செய்வது அல்லது ஒரு குறிப்பிட்ட நபர் கலீபாவாக வருவதற்கு பரிந்துரை செய்வது ஆகிய செயல்பாடுகளை மேற்கொள்வது சட்டரீதியாக செல்லுபடியாகாது ஏனெனில் அவர் தனக்கு உரிமையில்லாத விஷயத்தில் வரம்பு மீறி செயல்படுகிறார், ஆகவே நடப்பு காலத்தில் கலீபாவாக இருக்கும் ஒருவர் அவரது மகனையோ அல்லது உறவினர்களில் ஒருவரையோ அல்லது தான் விரும்பும் நபரையோ அவருக்குப் பின்னர் பதவி வகிப்பதற்கு நியமனம் செய்யவும் முடியாது அல்லது பரிந்துரை செய்யவும் முடியாது அவர்மீது கிலாபத் ஒப்பந்தத்தை நிறைவேற்றவும் முடியாது ஏனெனில் இந்த ஒப்பந்தத்தை பெற்றுள்ள ஒருவர் அதனை மற்றொருவர் மீது நிறைவேற்றிக் கொள்ள முடியாது. அவ்வாறு செய்தால் அது சட்டத்திற்கு முரண்பாடான முறையற்ற ஒப்பந்தமாகும்.


அபூபக்கர்(ரலி) உமரை(ரலி) நியமனம் செய்தார். உமர்(ரலி) கலீபா பதவிக்கு (தேர்வுசெய்ய) ஸஹாபாக்களிலிருந்து ஆறு நபர்களை நியமித்தார். ஸஹாபாக்கள் அனைவரும் இந்த செயல்பாட்டிற்கு ஆட்சேபனை தெரிவிக்காமல் ஏற்றுக் கொண்டார்கள் என்பதால் இது இஜ்மா அஸ்ஸஹாபாவாக இருக்கிறது என்பதுபோன்ற அறிவிப்புகளின் அடிப்படையில் கலீபாவாக இருக்கும் ஒருவர் தனக்குப் பின்னர் தனது பதவிக்கு ஒருவரை நியமனம் செய்வது சட்டரீதியானது என்று கூறமுடியாது. ஏனெனில் அபூபக்கர்(ரலி) உமரை(ரலி) கலீபா பதவிக்கு நியமனம் செய்யவில்லை. மாறாக அவர் கலீபாவாக யார் வரவேண்டும் என்று முஸ்லிம்களிடம் ஆலோசனை மேற்கொண்டார், இதனடிப்படையில் அவர் அலீ(ரலி) மற்றும் உமர்(ரலி) ஆகியோரை பதவிக்கு முன்மொழிந்தார், பின்னர் அபூபக்கர்(ரலி) வாழ்ந்த மூன்று மாத காலகட்டத்தில் பெரும்பான்மையான முஸ்லிம்கள் உமரை(ரலி) தேர்வு செய்தார்கள், அபூபக்கரின்(ரலி) மரணத்திற்குப் பின்னர் முஸ்லிம்கள் உமருக்கு(ரலி) பைஅத் செய்தார்கள், இவ்வாறாகத்தான் உமர்(ரலி) மீது கிலாபத் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது, பைஅத் பெறுவதற்கு முன்பாக உமர்(ரலி) கலீபாவாகவும் இல்லை கிலாபத் ஒப்பந்தம் அவர்மீது நிறைவேற்றப்படவும் இல்லை, அபூபக்கர்(ரலி) செய்த தேர்வின் அடிப்படையிலோ அல்லது முஸ்லிம்கள் அவரை தேர்வு செய்ததின் அடிப்படையிலோ உமர்(ரலி) கலீபாவாக நியமிக்கப்படவில்லை. மாறாக மதீனாவில் வாழ்ந்த ஸஹாபாக்கள் பைஅத் செய்து அவர் மீது கிலாபத் ஒப்பந்தத்தை நிறைவேற்றியதால் மட்டுமே அவர் கலீபாவாக ஆனார், உமர் (ரலி) ஆறு நபர்களை கலீபா பதவிக்கு தெரிவு செய்த விவகாரத்தைப் பொறுத்தவரை. முஸ்லிம்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அவர் அந்த ஆறு நபர்களை முன்மொழிந்தார், பின்னர் அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்ப் (ரலி) இந்த அறுவரில் எவருக்கு கலீபாவாக வருவதற்கு முஸ்லிம்களின் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறது என்பதை அறிந்துகொள்வதற்கு அவர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார், அபூபக்கர்(ரலி) மற்றும் உமர்(ரலி) ஆகியோர் வழிமுறையை பின்பற்றும் பட்சத்தில் அலீ(ரலி) கலீபாவாக வருவதற்கு தாங்கள் ஆதரவு தெரிவிப்பதாகவும் அதற்கு அவர் இசையவில்லை எனும் பட்சத்தில் உஸ்மான்(ரலி) கலீபாவாக வரவேண்டும் என்றும் முஸ்லிம்கள் கோரிக்கை வைத்தார்கள், அபூபக்கர்(ரலி) மற்றும் உமர்(ரலி) ஆகியோர் வழிமுறையை பின்பற்றுவதற்கு அலீ(ரலி) மறுத்துவிட்டதைத் தொடர்ந்து அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்ப்(ரலி) உஸ்மானுக்கு(ரலி) பைஅத் செய்தார். அûத்தொடர்ந்து முஸ்லிம்கள் அவருக்கு பைஅத் செய்தார்கள், ஆகவே முஸ்லிம்கள் செய்த பைஅத்தின் அடிப்படையில் உஸ்மானுக்கு(ரலி) கிலாபத் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது, உமர்(ரலி) அவரை முன்மொழிந்தார் என்பதற்காகவோ அல்லது மக்கள் அவரை தேர்வு செய்தார்கள் என்பதற்காகவோ அவர் மீது கிலாபத் ஒப்பந்தம் நிறைவேற்றப்படவில்லை, முஸ்லிம்கள் அவருக்கு பைஅத் கொடுத்திருக்கவில்லை எனும் பட்சத்தில் அவர் மீது கிலாபத் ஒப்பந்தம் ஒருபோதும் நிறைவேற்றப்பட்டிருக்காது, ஆகவே கலீபாவாக நியமனம் செய்யப்படும் ஒருவர் முஸ்லிம்களின் பைஅத்தை பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும், மேலும் இந்த ஒப்பந்தம் ஒருவருக்குப்பின் அவர் இடத்துக்கு மற்றொருவரை நியமிப்பதன் மூலமாகவோ அல்லது வாரிசுரிமை அடிப்படையிலோ ஒருபோதும் நிறைவேற்றப்படமாட்டாது ஏனெனில் பைஅத் என்பது கிலாபத்திற்குரிய ஒப்பந்தமாக இருப்பதால் ஒப்பந்தம் தொடர்பான ஷரியாவின் சட்டங்கள் கட்டாயமாக அதில் பின்பற்றப் படவேண்டும்.

warmcall.blogspot.com

May 11, 2011

கிலாபத்தின் ஒருமைத்துவம் : وحدة الخلافة

உலக முஸ்லிம்கள் மத்தியில் ஒரு கலீபாவிற்கு மேல் இருப்பதற்கு அனுமதியில்லை.

அப்துல்லாஹ் இப்ன் அம்ர்இப்ன்ஆஸ் அறிவித்து முஸ்லிமில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.

அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.

ومن بايع إماماً فأعطاه صفقة يده وثمرة قلبه فليطعه إن استطاع، فإن جاء آخر ينازعه فاضربوا عنق الآخر

"எவரேனும் ஒருவர் தமது கரத்தால் கைலாகு(முஸபா) கொடுப்பதன் மூலமும் தமது இதயத்தால் நன்நம்பிக்கை கொள்வதன் மூலமும் ஒரு இமாமுக்கு பைஅத் செய்தால் பிறகு அவர் இயன்றவரை கட்டுப்பட்டு நடக்கட்டும், இந்நிலையில் மற்றாருவர் வந்து (அதிகாரத்தில்) அவரிடம் சர்ச்சை செய்தால் அவரது கழுத்தை வெட்டுங்கள்."


அபூஸயீது அல்லகுத்ரி(ரலி) அறிவித்து முஸ்லிமில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.

அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறினார்கள்.

إذا بويع لخليفتين فاقتلوا الآخر منهما

"இரண்டு கலீபாக்களுக்கு பைஅத் பெறப்பட்டால் இரண்டாவது நபரை கொன்றுவிடுங்கள்"

அரபஜா அறிவித்து முஸ்லிமில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது. அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.

من أتاكم وأمركم جميع على رجل واحد يريد أن يشق عصاكم أو يفرق جماعتكم فاقتلوه

"ஒரு மனிதரின் தலைமையில் (கலீபாவின்கீழ்) நீங்கள் ஒன்றுபட்டிருக்கும்போது உங்கள் பலத்தை குறைப்பதற்காகவோ அல்லது உங்கள் ஒற்றுமையை குலைப்பதற்காகவோ (கலீபாவிற்கு போட்டியாக) வேறொருவர் வந்தால் அவரை கொன்றுவிடுங்கள்"

அபூஹாஸிம் அறிவித்து முஸ்லிமில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.

அபூஹுரைராவுடன் நான் ஐந்து வருடங்கள் பிரயாணம் மேற்கொண்டிருக்கிறறேன் அப்போது அவர் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியதாக அறிவித்துள்ளதை செவியுற்றிருக்கிறேன்.

كانت بنو إسرائيل تسوسهم الأنبياء كلما هلك نبي خلفه نبي وإنه لا نبي بعدي وستكون خلفاء فتكثر، قالوا فما تأمرنا قال: فوا، ببيعة الأول فالأول وأعطوهم حقهم فإن الله سائلهم عما استرعاهم

"பனூஇஸ்ராயீல் மக்களை நபிமார்கள் ஆட்சி செய்தார்கள். ஒருநபி இறந்தபோது மற்றொரு நபி அவரிடத்திற்கு அனுப்பட்டார், நிச்சயமாக. எனக்குப் பிறகு நபிமார்கள் வரமாட்டார்கள் ஆனால் கலீபாக்கள் வருவார்கள் அவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள், "(அதுகுறித்து) எங்களுக்கு என்ன கட்டளையிடுகிறீர்கள் என்று ஸஹாபாக்கள் வினவினார்கள், அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒன்றன்பின் ஒன்றாக பைஅத் கொடுங்கள் அவர்களின் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு நடந்துகொள்ளுங்கள், நிச்சயமாக அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது (பொறுப்பு) பற்றி அல்லாஹ் அவர்களிடம் விசாரிப்பான்."

ஒரே சமயத்தில் வெவ்வேறு இருநாடுகளில் கிலாபத் நிறுவப்பட்டால் அவற்றில் எதுவொன்றும் செல்லுபடி ஆகாது ஏனெனில் முஸ்லிம்கள் ஒரே சமயத்தில் இரண்டு கலீபாக்களை பெற்றிருப்பதற்கு அனுமதியில்லை, முதலில் பெறப்பட்ட பைஅத் சட்டரீதியானது என்று கூறுவது சரியல்ல ஏனெனில் கிலாபத்தை நிலைநாட்டுவது அவசியமானதே தவிர அதற்காக முறையற்ற போட்டியை ஏற்படுத்துவதற்கு அனுமதியில்லை, ஆகவே இரண்டு கலீபாக்கள் நிலைநிறுத்தப்படும் பட்சத்தில் விவகாரம் மறுபடியும் முஸ்லிம்களிடம் கொண்டு செல்லப்பட்டு முறையாக ஒரு கலீபாவை நிலைநிறுத்தவேண்டும், இவ்வாறு நிகழும்போது இருவருக்கிடையில் ஓட்டெடுப்பு நடத்தி ஒருவரை தேர்வுசெய்யவேண்டும் என்று கூறுவது தவறானது ஏனெனில் கிலாபத் என்பது ஒப்பந்தமாகும் எனவே ஓட்டெடுப்பை எவ்விதத்திலும் ஒப்பந்தமாக கொள்ளமுடியாது, அவர்கள் அனைவருக்கும் ஒருவருக்குப்பின் ஒருவராக பைஅத் கொடுங்கள் என்ற அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூற்றை இங்கு ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது ஏனெனில் இது ஏற்கனவே கிலாபத் நிலைநாட்ப்பட்டுள்ள நிலையில் கலீபாவிற்கு பைஅத் கொடுப்பது தொடர்பான அறிவிப்பாகும், ஏற்கனவே கிலாபத் நிறுவப்பட்டுள்ள நிலையில் முந்தைய கலீபாவிற்கு பதிலாக மற்றொரு கலீபாவை தோர்வுசெய்யும்போது இரு கலீபாக்கள் பைஅத் பெற்றால் முதல் நபரின் பைஅத் ஏற்றுக் கொள்ளப்பட்டு கிலாபத் ஒப்பந்தம் அவர்மீது நிறைவேற்றப்படும். இரண்டாவது நபர் பெற்ற பைஅத் செல்லுபடி ஆகாது, ஆனால் நாம் இங்கு விவாதித்துக் கொண்டிருக்கும் விவகாரம் அதுவல்ல. ஏற்கனவே கிலாபத் நிறுவப்படாமல் இருக்கும்நிலையில் ஒரே சமயத்தில் வெவ்வேறு இரண்டு இடங்களில் செல்வாக்கு பெற்ற முஸ்லிம்களால் பைஅத் செய்யப்பட்டு இருநபர்களுக்கு கிலாபத் ஒப்பந்தம் சட்டரீதியாக நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையாகும், இத்தகைய தருணத்தில் இரண்டு ஒப்பந்தங்களுமே ரத்து செய்யப்பட்டு விவகாரம் மறுபடியும் முஸ்லிம்களிடம் கொண்டுவரப்படவேண்டும், முஸ்லிம்கள் இவர்கள் இருவரில் ஒருவருக்கு புதிதாக பைஅத் கொடுத்து ஒப்பந்தம் செய்வர்களேயானால் அது புதிய ஒப்பந்தமாக கருதி சட்டரீதியானதாக ஏற்றுக்கொள்ளப்படும், ஆனால் அது பழய ஒப்பந்தத்தை புதுப்பித்ததாக கருதப்படமாட்டாது, அவ்வாறு இல்லாமல் இவ்விரு நபர்களையும் விடுத்து வேறொரு நபருக்கு கிலாபத் ஒப்பந்தத்தை முஸ்லிம்கள் நிறைவேற்றும் பட்சத்தில் அதுவும் சட்டரீதியானதே, ஆகவே இந்த விவகாரம் முஸ்லிம்களின் உரிமையை பிரயோகித்து தீôக்கப்படுமே ஒழிய கலீபா பதிவிக்கு போட்டியிடும் நபர்களின் தகுதியையோ அல்லது செல்வாக்கையோ அல்லது உரிமையையோ அடிப்படையாக வைத்து தீர்க்கப்படாது, அதேபோல ஏற்கனவே கிலாபத் நிறுவப்படாதநிலையில் ஒரு பிரதேசத்தில் ஒரே சமயத்தில் இரண்டு கலீபாக்கள் தேர்வுசெய்யப்படும் பட்சத்தில் ஒருவருக்கு செல்வாக்கு பெற்றுள்ள முஸ்லிம்களின் பெரும்பான்மை ஆதரவு இருந்து மற்றவருக்கு செல்வாக்கு பெற்ற முஸ்லிம்களின் சிறுபான்மை ஆதரவு மட்டும் இருக்குமாயின் அப்போது பெரும்பான்மை ஆதரவு பெற்ற நபருக்கே கிலாபத் ஒப்பந்தம் நிறைவேற்றப்படும். அவர் முதலாவதாக அல்லது இரண்டாவதாக அல்லது மூன்றாவதாக தேர்வு செய்யபட்டிருப்பினும் சரியே, ஏனெனில் ஆட்சியமைப்பு விவகாரங்களில் செல்வாக்கு பெற்ற முஸ்லிம்களில் பெரும்பான்மையானவர்கள் தேர்வுசெய்யும் நபரே கலீபாவாக கருதப்படுவார், கலீபா பதவிக்கு போட்டியிட்ட மற்ற நபர்கள் கிலாபத்தின் ஒற்றுமையை நிலைநிறுத்தும் பொருட்டு கலீபாவாக நியமனம் செய்யப்பட்டவருக்,கு பைஅத் கொடுக்கவேண்டும், அவர்கள் அதற்கு மறுக்கும் பட்சத்தில் முஸ்லிம்கள் அனைவரும் அவர்களுக்கு எதிராக போர்செய்யவேண்டும் ஏனெனில் பெரும்பான்மையான முஸ்லிம்கள் ஒப்பந்தம் செய்வது மூலமாகத்தான் கிலாபத் ஒப்பந்தம் நிறைவேற்றப்படும், இவ்வாறு கலீபாவாக நியமனம் செய்யப்படும் ஒருவருக்கு முஸ்லிம்கள் அனைவரும் கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்பதோடு இதன்பின்னர் மற்றொரு நபரை கலீபாவாக தேர்வுசெய்ய முயற்சித்தால் அது ஹராமாகும்.

எனினும் ஆட்சியமைப்பு (ruling system – nidaamul hukm) விவகாரங்களில் நிலவும் உண்மைநிலைகளை கவனிக்கும் போது ஆட்சியமைப்பு விவகாரங்களில் செல்வாக்கு பெற்றுள்ள முஸ்லிம்கள் வழக்கமாக தலைநகரங்களில்தான் வாழ்ந்து வருகிறார்கள் ஏனெனில் அங்குதான் ஆட்சியமைப்பு விவகாரங்களின் உச்சகட்டமான செயல்பாடுகள் நடந்துவருகின்றன, தலைநகரில் ஒருவர் கலீபாவாக தேர்வு செய்யபட்ட நிலையில் மாகாணங்களின் பகுதிகளில் வாழ்கின்ற முஸ்லிம்கள் மற்றொருவரை கலீபாவாக தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் தலைநகரத்தில் கலீபாவாக தேர்வு செய்யப்பட்டவர் முதலில் பைஅத்தை பெற்றுவிட்டால் பிறகு தலைநகரில் பைஅத் பெற்ற நபர்தான் கலீபா பதவிக்கு ஒப்பந்தம் செய்யப்படுவார் ஏனெனில் தலைநகரில் உள்ளவர்கள் பைஅத் செய்வது செல்வாக்கு பெற்ற முஸ்லிம்களின் பெரும்பான்மையான ஆதரவு இருப்பதை சுட்டிக்காட்டுகிறது, ஆனால் மாகாணங்களில் ஒருவர் கலீபாவாக முதலில் தேர்வு செய்யப்பட்டு செல்வாக்கு பெற்ற முஸ்லிம்களிடம் பைஅத் பெரும் பட்சத்தில் அவருக்கே கிலாபத் ஒப்பந்தத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் ஏனெனில் இதுபோன்ற தருணங்களில் மாகாணங்களில் உள்ள முஸ்லிம்கள் பைஅத் செய்வதில் முன்னிலை பெற்றுவிடுவதால் தலைநகரில் செல்வாக்கு பெற்ற முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டும் நிலை பலவீனம் அடைந்துவிடுகிறது, எவ்வாறு இருந்தபோதிலும் முஸ்லிம்கள் அனைவருக்கும் ஒரே சமயத்தில் ஒரு கலீபாவிற்கு மேல் இருப்பதற்கு அனுமதியில்லை.

warmcall.blogspot.com

கிலாபா பதவியை அடைவதற்கு தேடுதல் மேற்கொள்ளுதல் : طلب الخلافة

கிலாபா பொறுப்பை அடைந்துகொள்ள முயற்சி மேற்கொள்வதற்கும் அதற்காக விவாதத்தில் ஈடுபடுவதற்கும் அனைத்து முஸ்லிம்களும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள், இவ்வாறு செய்வது மஹ்ரூவான செயலல்ல ஏனெனில் இதற்கு மேற்கொள்ளும் போட்டியை தடைசெய்யும் எந்த அறிவிப்புகளும் கிடையாது, அல்லாஹ்வின்தூதரின்(ஸல்) உடல் அடக்கம் செய்யப்படாமல் வைகக்ப்பட்டிருக்கும் நிலையில் பனூஸôயிதாவின் புறநகர் பகுதியில் கலீபா பொறுப்பை பெற்றுக்கொள்வதற்காக முஸ்லிம்கள் தங்களிடையே தர்க்கம் செய்துகொண்டிருந்தார்கள் என்பது திட்டவட்டமான அறிவிப்புகள் மூலம் அறிவிக்கப்பட்டிருக்கின்றன, மேலும் உமர்(ரலி) மரணத்திற்குப் பின்னர் உயர்ந்த அந்தஸ்த்து பெற்ற ஸஹாபாக்களில் உள்ளவர்களான ஆலோசனை குழுவைச் சார்ந்த ஆறு நபர்கள் மற்ற ஸஹாபாக்கள் முன்னிலையில் கலீபா பதவிக்காக தங்களிடையே தர்க்கம் செய்துகொண்டிருந்தார்கள் என்பதும் இதற்கு எந்தவொரு ஸஹாபாவும் ஆட்சேபனை தெரிவிக்காமல் அவர்களுடன் இணக்கமாக இருந்தார்கள் என்பதும் திட்டவட்டமான முறையிலும் உறுதியான வித்திலும் அறிவிக்கப்பட்டிருக்கிறது, ஸஹாபாக்களின் இந்த இஜ்மா கிலாபத்திற்காக தர்க்கம் புரிந்துகொள்வதும் அதை அடைந்து கொள்வதற்காக போட்டியிட்டுக் கொள்வதும் அனுமதிக்கபட்டது என்பதை சுட்டிக்காட்டுகிறது, தலைமைக்குரிய பதவியை வலியுறுத்திக் கேட்டுப்பெற்றுக் கொள்வதற்கு தடைசெய்யும் ஹதீûஸப் பொறுத்தவரை அது அபூதர் கிfபாரி (ரலி) போன்ற தலைமைத்துவத்திற்கு திறன்பெறாத நபர்களுக்கு குறிப்பாக கூறப்பட்டதே தவிர பொதுவான அறிவிப்பு அல்ல, அதற்கு தகுதியானவர்கள் அதைக் கேட்டு பெற்றுக்கொள்வதற்கு அனுமதியுண்டு, அம்ர் இப்ன் ஆஸ்(ரலி) தனக்கு தலைமைப் பதவியை (இமாரத்) கோரியபோது அல்லாஹவின்தூதர்(ஸல்) அவரை மாகாண ஆளுநராக (வாலி) நியமனம் செய்தார்கள்.

sources from warmcall.blogspot.com

May 10, 2011

கலீபாவிற்கு உரிய நிபந்தனைகள் : شروط الخليفة

கலீபாவாக தேர்வுசெய்ய்ப்படும் நபருக்கு கீழ்கண்ட ஏழு தகுதிகள் இருக்கவேண்டும். இந்த ஏழு தகுதிகளும் அடிப்படை தகுதிகளாகும். இவற்றில் ஒன்று இல்லாவிட்டாலும் அவர் கலீபாவாக ஆகமுடியாது.

1. அவர் முஸ்லிமாக இருக்கவேண்டும், முஸ்லிமல்லாத ஒருவரை கிலாபத்தின் தலைமை பொறுப்புக்கு ஒருபோதும் நியமனம் செய்யமுடியாது ஏனெனில் அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.

وَلَنْ يَجْعَلَ اللَّهُ لِلْكَافِرِينَ عَلَى الْمُؤْمِنِينَ سَبِيلًا

மூமின்கள் மீது (ஆதிக்கம் செலுத்துவதற்கு) அல்லாஹ் காபிர்களுக்கு எந்த வழியையும் ஆக்கமாட்டான். (4:141)

ஆட்சிஅதிகாரம் என்பது ஆட்சிபுரியப்படும் மக்கள் மீது ஆட்சியாளர்கள் பிரயோகிக்கும் பலமான ஆயுதமாகும், இந்த வசனத்தில் இடம்பெற்றுள்ள லன் என்ற வார்த்தை காபிர்கள் ஆட்சிஅதிகாரத்தை கையில் வைத்திருப்பதற்கு இருக்கும் திட்டவட்டமான நிரந்தர தடையை குறிக்கின்ற கரீனாவாக (Indicator)(قرينة) இருக்கிறது, காபிர்களுக்கு தடைசெய்யப்பட்டுள்ள இத்தகைய ஆட்சிப்பொறுப்பு கலீபா பதவிக்கும் மட்டுமல்ல அது மற்ற எல்லாவகையான ஆட்சிஅதிகாரத்திற்கும் பொருந்தக்கூடியது.

2. கலீபா பதவிக்கு வருபவர் ஆணாக இருக்கவேண்டும், ஆகவே எந்த சூழலிலும் பெண்கள் கலீபா பதவிக்கு வரமுடியாது. ஏனெனில் சட்டரீதியாக அது செல்லுபடியாகாது.

அபூபக்கரா (ரலி) அறிவித்து புஹாரியில் இடம்பெற்றுள்ள ஸஹீஹ் ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.

"ஒட்டகப்போர் நடந்தபோது நான் முஸ்லிம்களுடன் இணைந்து போர் செய்ய சென்ற அந்த நாட்களில் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியதை கேட்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது, பாரஸீக நாட்டு மக்கள் கிஸ்ராவின் புதல்வியை பட்டத்து ராணியாக முடிசூட்டிவிட்டார்கள் என்ற செய்தி வந்தபோது அல்லாஹ்வின்தூதர்(ஸல்) பின்வருமாறு கூறினார்கள்.


لن يفلح قوم ولو أمرهم امرأة

"பெண் ஒருவர் ஆட்சியாளராக இருக்கும் பட்சத்தில் அந்த சமூகம் ஒரு போதும் வெற்றி பெறாது"

பெண்கள் ஆட்சிப்பொறுப்பு வகிப்பதற்கு அனுமதியில்லை என்பதை இந்த ஹதீஸ் குறிப்பிடுகிறது, இதன் சொற்றொடர் ஒரு கோரிக்கையின் (طلب-command) வடிவத்தில் இருக்கின்ற காரணத்தால் பெண்களை ஆட்சிப் பொறுப்புக்கு நியமிப்பதற்கு இதில் கடும் கண்டனம் அடங்கியிருப்பதோடு அதற்குரிய திட்டவட்டமான தடையையும் இது குறிக்கிறது, ஹதீஸின் சொற்றொடரில் பெண்கள் ஆட்சியாளராக நியமிக்கப்படுவதற்கு உறுதியாக தடைவிதிக்கும் கரீனா இடம் பெற்றிருப்பதால் பெண்களை ஆட்சிஅதிகாரத்திற்கு நியமனம் செய்வது ஹராமாகும், ஆகவே பெண்கள் ஆட்சிப்பொறுப்புக்கு வருவதை தடைசெய்யும் பொதுவான ஆதாரம் இந்த ஹதீஸில் இருப்பதால் இந்தத்தடை கிலாபா பொறுப்புக்கும் மற்ற அனைத்து வகையான ஆட்சிப்பொறுப்புக்கும் பொருந்தக்கூடியதே.

3. கலீபா பதவிக்கு வருபவர் வயதுவந்தவராக இருக்கவேண்டும், கிலாபத்தின் தலைமை பொறுப்பு வகிக்கும் நபர் சிறுவராக இருப்பதற்கு அனுமதியில்லை.

அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியதாக அலீ இப்ன் அபூதாலிப் (ரலி) அறிவித்திருப்பதாவது.

رفع القلم عن ثلاثة عن النائم حتى يستيقظ وعن الصبي حتى يكبر وعن المبتلى حتى يعقل

"மூன்று வகையினர் மீது (அல்லாஹ்வின்) எழுதுகோல் உயர்த்தப்பட்டுவிடுகிறது : உறக்கத்தில் இருப்பவர் விழித்தெழும்வரை. சிறுவறாக இருப்பவர் பருவவயதை அடையும்வரை. புத்திசுவாதீனம் இல்லாதவர் அறிவாற்றல் பெறும்வரை"

ஆகவே எவர் மீது அல்லாஹ்(சுபு) வின் எழுதுகோல் உயர்த்தப்பட்டுவிட்டதோ அவர் தன்னுடைய விவகாரங்களை தானே நடத்திச் செல்லமுடியாது. எனவே அவர் சட்டப்படி பொறுப்புள்ளவராக (முகல்லfப்) ஆகமுடியாது, இதனடிப்படையில் அவர் கலீபா பதவிக்கோ அல்லது வேறெந்த ஆட்சிப்பொறுப்புக்கோ சட்டரீதியாக வரமுடியாது. தனது சொந்த விவகாரங்களை நடத்திச் செல்வதற்கு சட்டரீதியான உரிமை அவருக்கு கிடையாது எனும்போது மற்றவர்கள் விவகாரங்களை கவனித்துக்கொள்ளும் பொறுப்பை அவர் எவ்வாறு ஏற்கமுடியும்?

அப்துல்லாஹ் இப்ன் ஹிஷாம் என்ற சிறுவரின் பைஅத்தை ஏற்றுக்கொள்ள அல்லாஹ்வின்தூதர்(ஸல்) மறுத்துவிட்டார்கள் என்ற ஹதீஸ் அறிவிப்பு சிறுவர்கள் ஆட்சிப்பொறுப்புக்கு வரமுடியாது என்பதற்கு மற்றொரு ஆதாரமாக இருக்கிறது. ஏனெனில் பைஅத் கொடுப்பதற்கு தகுதியில்லாத ஒருவர் கலீபாவாக நியமனம் பெறுவதற்கு பைஅத் பெறமுடியாது.

4. அவர் புத்திசுவாதீனம் உள்ளவராக இருக்கவேண்டும், புத்திசுவாதீனம் இல்லாத ஒருவரை கலீபாவாக நியமிப்பதற்கு அனுமதியில்லை

... وعن المبتلى حتى يعقل

ஏனெனில் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) எழுதுகோல் உயர்த்தப்பட்டவர்களில் புத்திசுவாதீனம் இல்லாதவர்களையும் குறிப்பிட்டிருக்கிறார்கள், இவர்கள் தங்கள் சொந்த விவகாரங்களை நடத்திச்செல்வதற்கு ஆற்றல் பெறாதவர்கள் என்ற அடிப்படையில் அல்லாஹ்(சுபு) வின் கட்டளைகளை நடைமுறைப்படுத்தும் பொறுப்பிலுள்ள கலீபா பதவியை வகிக்கமுடியாது.

5. அவர் நீதிசெலுத்தும் மனிதராக இருக்கவேண்டும், கலீபா பொறுப்புக்கு வருபவர் பாவியாக (fபாஸிக்) இருக்க முடியாது. கலீபா பதவிக்கு வருவதற்கும் அதில் தொடர்ச்சியாக இருப்பதற்கும் நீதிசெலுத்தும் பண்பு இருக்கவேண்டும் என்பது கட்டாய நிபந்தனையாகும். ஏனெனில் அல்லாஹ்(சுபு) சாட்சியம் அளிப்பவர்கள் நீதிசெலுத்துபவர்களாக இருக்கவேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறான்,

وَأَشْهِدُوا ذَوَيْ عَدْلٍ مِنْكُمْ

உங்களிலுள்ள நிதிசெலுத்துபவர்கள் சாட்சியம் அளிக்கட்டும்…… 
(அத்தலாக் 65 : 2)

ஆகவே சாட்சி பகர்வதற்கு நீதிசெலுத்தும் பண்பு இருக்கவேண்டும் என்பது நிபந்தனையாக இருக்கும்போது கலீபாவாக நியமனம் செய்யப்படுபவர் நீதிசெலுத்தும் பண்பை பெற்றிருக்கவேண்டும் என்பது மிக அவசியமாகும்.

6 அவர் சுதந்திர மனிதராக இருக்கவேண்டும், அடிமையாக இருக்கும் மனிதர் தன்னுடைய எஜமானருக்கு உரிய சொத்தாக இருக்கிறார். ஆகவே அவர் தன்னுடைய விவகாரங்களை தன் விருப்பப்படி நடத்திச் செல்வதற்கு உரிமையோ அல்லது அதிகாரமோ பெற்றவர் அல்ல. எனவே அவருக்கு மற்றவர்களின் விவகாரங்களை நடத்திச் செல்வதற்கு அதிகாரம் கிடையாது, இதனடிப்டையில் அடிமையாக இருக்கும் ஒருவர் மக்களை ஆட்சிசெய்யும் அதிகாரத்தை வகிக்கமுடியாது.

7. அவர் திறன் பெற்றவராக இருக்கவேண்டும், பைஅத் பெறும்போது உறுதியளிக்கப்பட்ட கிலாபத்தின் நிபந்தனைகளை நிலைநிறுத்தும் பணியில் ஏற்படும் கஷ்டத்தை தாங்கிக்கொள்ளும் ஆற்றல் பெற்றவராக அவர் இருக்கவேண்டும். கிலாபத்தை நிலைநிறுத்தும் பணியில் ஏற்படும் கஷ்டத்தை தாங்கிக்கொள்ள முடியாத பலவீனராக அவர் இருக்கக்கூடாது.
கலீபா பதவிக்கு நியமனம் செய்யப்படும் ஒருவர் நிறைவேற்றவேண்டிய நிபந்தனைகள் அல்லது பெற்றிருக்கவேண்டிய தகுதிகள் இவைகள்தான். வையல்லாது கூறப்படும் தகுதிகள் உறுதியான இஸ்லாமிய ஆதாரங்களின் அடிப்படையில் இருக்குமாயின் அவைகள் முன்னுரிமை கொடுக்கும் தகுதிகளாக இருக்குமே தவிர அடிப்படை தகுதிகளாக இருக்காது, இது ஏனெனில் கிலாபத் ஒப்பந்தத்திற்கு கட்டாயம் இருக்கவேண்டும் என்று கூறப்படும் தகுதிகள் திட்டவட்டமான கோருதலை (طلباً جازماً - decisive command)சுட்டிக்காட்டுகின்ற கரீனாவை பெற்றுள்ள உறுதியான இஸ்லாமிய ஆதாரங்களாக இருக்க வேண்டும்.இத்தகைய முறையில் கூறப்படாத ஆதாரங்கள் முன்னுரிமை தகுதிகளை குறிப்பிடுவதாகவே கருதப்படும்.
மேற்குறிப்பிட்ட இந்த ஏழு தகுதிகளைத் தவிர்த்து திட்டவட்டமான ஆதாரங்களின் அடிப்படையில் வேறெந்த தகுதிகளும் அறிவிப்புகளில் இடம் பெறவில்லை. ஆகவே இந்த ஏழு தகுதிகள் மட்டுமே கலீபாவாக நியமனம் செய்யப்படுபவருக்கு கட்டாயம் இருக்கவேண்டிய தகுதிகளாகும். உறுதியான ஆதாரத்தின் அடிப்படையில் கூறப்படும் மற்ற தகுதிகள் முன்னுரிமை பெறுவதற்குரிய தகுதிகளாகும், ஆகவே கிலாபத் ஒப்பந்தத்திற்கு தேர்வுசெய்யப்படுபவர் முஜ்தஹிதாக இருக்கவேண்டும் என்ற நிபந்தனையில்லை. ஏனெனில் இதற்கு திட்டவட்டமான ஆதாரம் இல்லை என்பதோடு கலீபாவின் கடமை ஆட்சிபுரிவதே அல்லாமல் இஜ்திஹாது மேற்கொள்வதல்ல. ஏனெனில் அவர் ஒரு முஜ்தஹிதிடம் ஹுகுமை அறிந்துகொண்டு அதனடிப்படையில் இறைசட்டங்களை ஏற்றுஅமல்படுத்தமுடியும். ஆகவே அவர் ஒரு முஜ்தஹிதாக இருக்கவேண்டிய அவசியமில்லை. எனினும் அவர் ஒரு முஜ்தஹிதாக இருக்கும்பட்சத்தில் அது முன்னுரிமை பெறும் தகுதியாக இருக்கும். மேலும் கலீபாவாக தேர்வுசெய்யப்படுபவர் வீரதீரம் மிக்க மனிதராக இருக்கவேண்டும் என்பதோ அல்லது உம்மத்துடைய விவகாரங்களை நடத்திச்செல்வதற்கும் அதன் நலன்களை பேணிப்பாதுகாப்பதற்கும் அசாதாரன அறிவாற்றல் பெற்றவராக இருக்கவேண்டும் என்பதோ நிபந்தனையல்ல. இதுஏனெனில் இந்த விவகாரத்தில் ஸஹீஹான ஹதீஸ் அறிவிப்புகள் எதுவும் இல்லை என்பதால் கலீபா ஒப்பந்தத்திற்குரிய ஹுகும்ஷரியாவில் இந்த நிபந்தனைகள் இடம்பெறாது. எனினும் கலீபாவாக தேர்வுசெய்யப்படுபவர் வீரதீரம் உள்ளவராகவும் மிகுந்த அறிவாற்றல் பெற்றவராகவும் இருப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மேலும் கலீபாவாக வருபவர் குறைஷ் கோத்திரத்தில் உள்ளவராக இருக்கவேண்டும் என்பது நிபந்தனையில்லை.

முஆவியா அறிவித்து புஹாரியில் இடம்பெற்றுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.

அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியதை நான் செவியுற்றேன்.

إن هذا الأمر في قريش لا يعاديهم أحد إلاّ كبه الله على وجهه ما أقاموا الدين


"நிச்சயமாக இந்த விவகாரம்(ஆட்சி) குறைஷியர்களிடம் இருக்கிறது, அவர்கள் தீனை நிலைநாட்டும்போது எவரேனும் அவர்களுடன் சர்ச்சை செய்வாராயின் அவர்களை அல்லாஹ் நரகநெருப்பில் முகம் குப்புற வீழ்த்திவிடுவான்"

இப்ன்உமர்(ரலி) அறிவித்து புஹாரியில் இடம்பெற்றுள்ள மற்றொரு ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.

அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறினார்கள்.

لا يزال هذا الأمر في قريش ما بقي منهم اثنان

"குறைஷியர்கள் இருவர் இருக்கும்வரையில் இந்தவிவகாரம் (ஆட்சி) அவர்களை விட்டும் நீங்காது"

இந்த ஹதீஸ்களும் குறைஷியர்கள் கலீபாவாக இருப்பதுபற்றி அறிவிக்கும் மற்ற ஹதீஸ்களும் கலீபாவாக வருபவர்கள் குறைஷியர்களாக இருக்கவேண்டும் என்ற கோருதலை (طلباً-command) சுட்டிக்காட்டினாலும் திட்டவட்டமான கட்டளை என்பதற்குரிய கரீனாவை பெற்றிருக்கவில்லை என்பதால் அவை தகவல் அளிக்கும் வகையில் உள்ள செய்தியாகும். இந்த தகவல் அளிக்கும் சொற்றொடர் திட்டவட்டமான கரீனாவை பெற்றிருக்கவில்லை. ஆகவே இந்த ஹதீஸ் கலீபாவாக வருபவர் குறைஷியராக இருப்பதற்கு உரிய பரிந்துரையை சுட்டிக்காட்டுகிறதே தவிர கட்டாயம் என்று அறிவிக்கவில்லை. இதனடிப்படையில் இது ஒரு முன்னுரிமை அளிக்கும் நிபந்தனையாக இருக்கிறதே தவிர ஒப்பந்தத்திற்குரிய கட்டாய நிபந்தனையாக இல்லை. எவரேனும் அவர்களுடன் சர்ச்சை செய்வாராயின் அவர்களை அல்லாஹ் நரகநெருப்பில் முகம் குப்புற வீழ்த்திவிடுவான் என்ற அல்லாஹ்வின் தூதரின்(ஸல்) வார்த்தையைப் பொறுத்தவரை குறைஷியருடன் பகைமை பாராட்டுவது தடைசெய்யப்பட்டிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறதே தவிர ஆட்சிபுரியும் உரிமை குறைஷியர்களுக்கு மட்டும் உரியது என்று கூறவில்லை. மேலும் உஸþல் பிக்ஹ் சொல் இலக்கணத்தின் அடிப்படையிலும் ஆட்சிபுரிதல் குறைஷியர்களுக்கு உரியது என்ற அர்த்தத்தை இந்த ஹதீஸ் அறிவிப்பிலிருந்து எடுக்கமுடியாது.

ஆகவே இந்த ஹதீஸ் அறிவிப்புகள் ஆட்சிபுரிதல் குறைஷியர்களுக்கு உரியது என்றோ அல்லது குறைஷியர்களிடம் மட்டுமே அது இருக்கவேண்டும் என்றோ அல்லது மற்றவர்கள் கலீபா பொறுப்புக்கு வருவது சட்டத்திற்குப் புறம்பானது என்றோ குறிப்பிடவில்லை. மாறாக, ஆட்சிபுரிதல் குறைஷயர்களிடம் இருக்கிறது என்றும் அதற்கு அவர்கள் முன்னுரிமை பெற்றவர்கள் என்றும் அதேசமயத்தில் அது மற்றவர்களிடம் இருப்பதும் சட்டரீதியானதே என்ற அர்த்தத்தைதான் கொடுக்கின்றன. இவ்வாறாக குறைஷியர்களைப் பற்றிய இந்த ஹதீஸ் அறிவிப்பு மற்றவர்கள் கலீபாவாகவோ அல்லது வேறெந்த ஆட்சியாளர்களாகவோ வருவதை தடுக்கவில்லை. இதனடிப்படையில் இது குறைஷியர்களுக்கு ஆட்சிபுரிதலில் முன்னுரிமை கொடுக்கக்கூடிய நிபந்தனையாக இருக்கிறதே தவிர ஒப்பந்தத்திற்குரிய கட்டாய நிபந்தனையாக இல்லை.

மேலும் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) குறைஷியர்களில் இல்லாத அப்துல்லாஹ் இப்ன் ரவாஹா(ரலி). ஸைது இப்ன் ஹாரிதா(ரலி) மற்றும் உஸாமா இப்ன் ஸைது(ரலி) ஆகியோரை அமீராக நியமனம் செய்திருக்கிறார்கள், ஆகவே குறைஷியர் அல்லாதவர்களுக்கு அல்லாஹ்வின்தூதர்(ஸல்) இமாரத்தை கொடுத்திருக்கிறார்கள். மேற்கண்ட ஹதீஸில் இடம்பெற்றுள்ள இந்தவிவகாரம் என்ற சொல் அதிகாரம் – authority என்று பொருள்படுமே தவிர கிலாபத் என்ற அர்த்தத்தை மட்டும் குறிக்காது. எனவே அல்லாஹ்வின்தூதர்(ஸல்) குறைஷியர் அல்லாதவர்களை ஆட்சிபொறுப்பில் நியமித்துள்ளார்கள் என்ற உண்மையின் அடிப்படையில் குறைஷியர் அல்லாத மற்றவர்கள் ஆட்சிபுரியும் அதிகாரத்தை அடைந்துகொள்வதற்கு தடையேதும் இல்லை என்பதற்கு இது ஆதாரமாக இருக்கிறது.ஆகவே இந்த ஹதீஸ் கிலாபத்திற்கு தகுதியுடைய சில மக்களை சுட்டிக்காட்டி அவர்கள் முன்னுரிமை பெற்றவர்கள் என்பதைக் குறிப்பிடுகிறது.

அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியதாக புஹாரியில் இடம்பெற்றுள்ள ஹதீஸில் அறிவிக்கப்பட்டிருப்பதாவது.

اسمعوا وأطيعوا وإن استعمل عليكم عبد حبشي كأن رأسه زبيبة

"உலர்ந்த திராட்சையைப் போன்ற தலையை உடைய ஹபஷாவின்(அபிஸீனியா) அடிமை (அமீராக இருந்து) உங்கள்மீது ஒரு செயலை ஏவினாலும் அவருக்கு செவிமடுங்கள் கட்டுப்படுங்கள்"

அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியதாக அபூதர்(ரலி) அறிவித்து முஸ்லிமில் இடம்பெற்றுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.

أن أسمع وأطيع وإن كان عبداً مُجدَّع الأطراف أوصاني خليلي

தட்டையான மூக்கும் தடித்த உதடுகளும் கெண்ட அடிமை (அமீராக இருந்ததார்) என்றாலும் அவருக்கு செவிமடுக்கவேண்டும் என்றும் கட்டுப்படவேண்டும் என்றும் எனது தோழர் (இறைத்தூதர்-ஸல்) எனக்கு உபதேசம் செய்தார்கள்"

அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியதாக மற்றொரு அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது.

إن أُمّر عليكم عبد مُجدَّع أسود يقودكم بكتاب الله فاسمعوا له وأطيعوا

"தட்டையான மூக்குடைய கருப்பு அடிமை உங்களுக்கு அமீராக இருந்தாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தின்படி உங்களை வழிநடத்தினால் அவருக்கு செவிமடுங்கள் கட்டுப்படுங்கள்"

இந்த ஹதீஸ்களின் அறிவிப்புகள் குறைஷியர்களோடு மட்டுமோ அல்லது அரபுகளோடு மட்டுமோ கிலாபத்தை கட்டுப்படுத்தவில்லை என்ற அடிப்படையில் மற்றவர்கள் அதை ஏற்பதற்கு எந்தவிதமான தடையுமில்லை.

மேலும் கலீபாவாக வருபவர் ஹாஷிமீ (Hashimite- ஹாஷிம் குடும்பத்தைச் சார்ந்தவர்) அல்லது அலவீ (Alawite –அலீ (ரலி) யின் குடும்பத்தைச் சார்ந்தவர்) ஆகிய வம்சாவழியை சார்ந்தவர்களாக இருக்கவேண்டும் என்பதும் நிபந்தனையல்ல. ஏனெனில் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) பனூஹாஷிம். பனூஅலீ ஆகியவர்களில் இல்லாதவர்களுக்கு ஆட்சிப்பொறுப்பை கொடுத்துள்ளார்கள் என்ற திட்டவட்டமான அறிவிப்புகள் உள்ளன. மேலும் தபூக் படையெடுப்பிற்கு மதீனாவை விட்டு அவர்கள்(ஸல்) சென்றபோது முஹம்மது இப்ன் மஸ்லமாவை(ரலி) மதீனாவின் ஆட்சியாளராக நியமனம் செய்துள்ளார்கள். இவர் ஹாஷிமீயாகவோ அல்லது அலவீயாகவோ இல்லை. மேலும் முஆத் இப்ன் ஜபல்(ரலி) அம்ர் இப்ன்ஆஸ்(ரலி) ஆகியோர்களை எமன் பிரதேசத்திற்கு ஆட்சியாளர்களாக அல்லாஹ்வின்தூதர்(ஸல்) நியமனம் செய்துள்ளார்கள். இவர்கள் எவரும் ஹாஷிமீயாகவோ அல்லது அலவீயாகவோ இல்லை. மேலும் அபூபக்கர்(ரலி), உமர்(ரலி), உஸ்மான்(ரலி) ஆகியோருக்கு முஸ்லிம்கள் கிலாபத்திற்குரிய பைஅத் செய்தார்கள் என்றும் இவர்கள் ஒவ்வொருவரும் பனூஹாஷிமாக இல்லாதபோதும் அலீ(ரலி) இவர்களுக்கு பைஅத் செய்தார் என்றும் திட்டவட்டமான அறிவிப்புகள் கூறுகின்றன. இவர்கள் கிலாபத் பொறுப்பை ஏற்றபோது அனைத்து ஸஹாபாக்களும் ஒருமித்து பைஅத் செய்தார்கள் என்றும் ஒருவர்கூட இவர்கள் பனூஹாஷிமாக அல்லது பனூஅலீயாக இல்லை என்பதற்காக பைஅத் செய்வதற்கு மறுக்கவில்லை என்றும் உறுதியான அறிவிப்புகள் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே பனூஹாஷிமாக (ஹாஷிமீ) அல்லது பனூஅலீயாக (அலவீ) இல்லாதவர்களும் கலீபாவாக வருவதற்கு அனுமதி உண்டு என்ற இந்த ஆதாரம் இஜ்மாஅஸ்ஸஹாபாவில் உள்ளதாகும். இந்த இஜ்மாவில் பனூஹாஷிமான அலீ (ரலி), இப்ன்அப்பாஸ் (ரலி) மற்றும் இதர ஹாஷிம் குடும்பத்தார்களும் இடம் பெற்றிருக்கிறார்கள். அலீ(ரலி) யின் குடும்ப அந்தஸ்த்து பற்றியும் அல்லாஹ்வின்தூதரின்(ஸல்) குடும்ப அந்தஸ்த்து பற்றியும் கூறும் ஹதீஸ் அறிவிப்புகளைப் பொறுத்தவரை அவை அவர்களுக்கு இருக்கும் முன்னுரிமைத் தகுதிகளை சுட்டிக்காட்டுகின்றனவே ஒழிய கிலாபத்தை அவர்களுக்கு மட்டுமே ஒப்பந்தம் செய்யவேண்டும் என்ற எந்த நிபந்தகையையும் அவைகள் சுட்டிக்காட்டவில்லை.

இந்த விளக்கங்களின் அடிப்படையில் கலீபாவின் நியமனத்திற்கு மேற்கூறப்பட்ட ஏழு நிபந்தனைகள் மட்டுமே கட்டாயமானவை என்பதும் வேறுநிபந்தனைகள் இருப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதும் மற்ற நிபந்தனைகள் யாவும் முன்னுரிமை பெறும் நிபநதனைகளாக மட்டுமே இருப்பவை என்பதும் தெளிவாக விளங்குகிறது. சட்டரீதியாக ஒரு கலீபா ஒப்பந்தம் செய்யப்படுவதற்கு இந்த ஏழு ஒப்பந்த நிபந்தனைகள் மட்டுமே நிறைவேற்றப்படவேண்டும் என்பதுதான் அவசியமாகும். இவையல்லாத மற்ற தகுதிகள் பற்றிய அறிவிப்புகள் கிலாபத்திற்குரிய சிறந்த நபரை தேர்வுசெய்வதற்கு முஸ்லிம்களுக்கு வழிகாட்டும் அறிவிப்புகளாகும். மற்ற தகுதிகளை ஒருவர் பெறாதபோதும் ஒப்பந்தத்திற்குரிய தகுதிகளை மட்டும் பெற்றிருக்கும் நிலையில் முஸ்லிம்கள் அவரை கலீபாவாக தேர்வுசெய்யும் பட்சத்தில் அவர் சட்டரீதியாக தேர்வு செய்யப்பட்டவர்தான் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

sources from warmcall.blogspot.com

May 9, 2011

கலீபாவிற்கான பைஅத் – البيعـة

பைஅத் செய்வது முஸ்லிம்கள் மீதுள்ள கட்டாய கடமையாகும் (வாஜிப்) மேலும் இது ஆண் பெண் ஆகிய அனைத்து முஸ்லிம்கள் மீதுள்ள உரிமையாகும், பைஅத் செய்வது வாஜிப் என்பதற்கு குர்ஆன் வசனங்களும் நிறைய ஹதீஸ்களும் ஆதாரமாக இருக்கின்றன.

அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.

لَقَدْ رَضِيَ اللَّهُ عَنِ الْمُؤْمِنِينَ إِذْ يُبَايِعُونَكَ

மூமின்கள் உம்மிடம் பைஅத் செய்தபோது நிச்சயமாக அல்லாஹ் அவர்களை பொருந்திக்கொண்டான்,. ( அல்பதஹ் 48 :18 )

إِنَّ الَّذِينَ يُبَايِعُونَكَ إِنَّمَا يُبَايِعُونَ اللَّهَ يَدُ اللَّهِ فَوْقَ أَيْدِيهِمْ

உம்மிடம் பைஅத் செய்தவர்களெல்லாம் அல்லாஹ்விடம் பைஅத் செய்தவர்கள் ஆவார்கள். அவர்களின் கைகள் மீது அல்லாஹ்வின் கை இருக்கிறது (அல்பதஹ் 48 : 10)

يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا جَاءَكَ الْمُؤْمِنَاتُ يُبَايِعْنَكَ

நபியே. மூமினான பெண்கள் உம்மிடம் பைஅத் செய்யவரும்போது… ( அல்மும்தஹினா 60 : 12)

ஹதீஸ் ஆதாரங்கள்:

இப்ன்உமர்(ரலி) அறிவித்துள்ள ஹதீஸில் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறினார்கள்,

ومن مات وليس في عنقه بيعة مات ميتة جاهلية

எவர் தனது கழுத்தில் பைஅத் இல்லாத நிலையில் மரணம் அடைகிறாரோ அவர் ஜாஹிலியத்தில் மரணம் அடைந்தவர் ஆவார்.

பைஅத் செய்வது முஸ்லிம்கள் மீதுள்ள உரிமை என்பதைப் பொறுத்தவரை பைஅத் செய்யும் முறையே அதனை சுட்டிக்காட்டுகிறது. ஏனெனில் முஸ்லிம்கள்தான் கலீபாவிற்கு பைஅத் கொடுக்கவேண்டுமே தவிர கலீபா முஸ்லிம்களுக்கு பைஅத் கொடுக்கக்கூடாது, அல்லாஹ்வின்தூதருக்கு(ஸல்) முஸ்லிம்கள் பைஅத் கொடுத்த செய்தி ஹதீஸ் வாயிலாக உறுதிசெய்யப்பட்டிருக்கிறது,.


உபாதா இப்ன் அஸ்ஸôமித்(ரலி) அறிவித்து புஹாரியில் இடம்பெற்றுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.

بايعنا رسول الله  على السمع والطاعة في المنشط والمكره وأن لا ننازع الأمر أهله وأن نقوم أو نقول بالحق حيثما كنا لا نخاف في الله لومة لائم

நாங்கள் விரும்புகின்றவற்றிலும் வெறுக்கிள்றவற்றிலும் செவிமடுப்போம் என்றும் கட்டுப்பட்டு நடப்போம் என்றும் அதிகாரம் கொடுக்கப்ட்டவர்களுடன் சர்ச்சை செய்யமாட்டோம் என்றும் பழிப்போரின் பழிப்புக்கு அஞ்சாமல் எந்நிலையிலும் சத்தியத்தில் உறுதியாக இருப்போம் என்றும் அல்லாஹ்வின்தூதருக்கு பைஅத் செய்தோம்.



உம்முஅத்தீயா(ரலி) அறிவிப்பை ஹப்ஸôவின் வழியாக அய்யூப் அறிவித்து புஹாரியில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் அறிவிக்கப்பட்டிருப்பதாவது.

بايعنا النبي  فقرأ عليّ أن لا يشركن بالله شيئاً ونهانا عن النياحة فقبضت امرأة منّا يدها فقالت فلانة أسعدتني وأنا أريد أن اجزيها فلم يقل شيئاً فذهبت ثم رجعت

"'நாங்கள் அல்லாஹவின்தூதருக்கு பைஅத் செய்தோம், பின்னர் அல்லாஹ்வுக்கு நாங்கள் எதனையும் இணைவைக்கக்கூடாது என்றும் ஒப்பாரி வைத்து அழுவதிலிருந்து நீங்கிக்கொள்ளவேண்டும் என்றும் அவர்கள் ஓதிக்காட்டியபோது எங்களிலுள்ள ஒரு பெண் தன்னுடைய கையை விலக்கிக்கொண்டு. "ஒரு பெண் என்னை மகிழ்ச்சி அடையச்செய்திருக்கிறாள் அவளுக்கு நான் பிரதிஉபகாரம் செய்யவேண்டும்" என்று கூறினார், அதற்கு அல்லாஹ்வின்தூதர் எதுவும் பதில் கூறவில்லை. எனவே அவர் சென்றுவிட்டு பின்னர் திரும்பிவந்தார்."

அபூஹுரைரா(ரலி) அறிவித்து புஹாரியில் இடம்பெற்றுள்ள ஹதீஸில் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியிருப்பதாவது.

ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم: رجل على فضل ماء بالطريق يمنع منه ابن السبيل، ورجل بايع إماماً لا يبايعه إلاّ لدنياه إن أعطاه ما يريد وفى له وإلا لم يف له، ورجل يبايع رجلاً بسلعة بعد العصر فحلف بالله لقد أعطي بها كذا وكذا فصدقه فأخذها ولم يُعط بها

மூன்று விதமான மனிதர்களுடன் அல்லாஹ் மறுமையில் பேசவுமாட்டான் அவர்களை தூய்மைப் படுத்தவுமாட்டான். அவர்களுக்கு கடுமையான தண்டனை உண்டு, (அவர்கள் யாரெனில்) நடைபாதையின் பக்கமாக உள்ள அதிகமான தண்ணீரைப் (பயன்படுத்த இயலாதவாறு) வழிப்போக்கருக்கு தடுத்து வைத்துள்ள மனிதர். உலகநலனை நாடியவராக இமாமுக்கு பைஅத் செய்யும் மனிதர். அவர் நாடியது கொடுக்கப்பட்டால் அதை (பைஅத்தை) நிறைவேற்றுவார் இல்லையெனில் நிறைவேற்றமாட்டார். ஒரு மனிதருக்கு பொருளை வியாபாரம் செய்யும் மனிதர். அதை (எவருக்கும்) விற்காதபோதும் இன்னார் இன்னாருக்கு அதை விற்றதாக மாலைநேரத்தில் அல்லாஹ்வின்மீது சத்தியம் செய்வார். அதை உண்மை என்று எண்ணி அவரும் அதை வாங்கிச்செல்வார்."


அப்துல்லாஹ் இப்ன்உமர்(ரலி) அறிவித்து புஹாரியில் இடம்பெற்றுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.

كنا إذا بايعنا رسول الله على السمع والطاعة يقول لنا فيما استطعت

அல்லாஹ்வின்தூதருக்கு செவிமடுப்பதாகவும் கட்டுப்படுவதாகவும் நாங்கள் பைஅத் செய்தபோது. "இயன்றவற்றில்" என்று எங்களிடம் கூறுவார்கள்," ஜரீர் இப்ன் அப்துல்லாஹ்(ரலி) அறிவித்து புஹாரியில் இடம்பெற்றுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.

بايعت النبي على السمع والطاعة فلقنني فيما استطعت والنصح لكل مسلم


அல்லாஹ்வின்தூதருக்கு செவிமடுப்பதாகவும் கட்டுப்படுவதாகவும் நான் பைஅத் செய்தபோது இயன்றவற்றில் (அவ்வாறு செய்யவேண்டும்) என்றும் ஒவ்வொரு முஸ்லிமிற்கும் உபதேசம் செய்யவேண்டும் என்றும் என்னிடம் அறிவுறுத்தினார்கள்.

ஜுனாது இப்ன் அபூஉமைய்யா (ரலி) அறிவித்து புஹாரியில் இடம்பெற்றுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.


دخلنا على عبادة بن الصامت وهو مريض قلنا أصلحك الله حدث بحديث ينفعك الله به سمعته من النبي  قال: دعانا النبي  فبايعناه. فقال فيما أخذ علينا أن بايعنا على السمع والطاعة في منشطنا ومكرهنا وعسرنا ويسرنا وأَثَرَةً علينا وأن لا ننازع الأمر أهله قال إلاّ أن تروا كفراً بواحاً عندكم من الله فيه برهان


உபாதா இப்ன் அஸ்ஸôமித் நோயுற்று இருக்கும் நிலையில் நாங்கள் அவரது வீட்டிற்கு சென்றோம், அல்லாஹ் உம்மை ஸôலிஹான மனிதராக ஆக்குவானாக. இறைத்தூதரிடம்(ஸல்) நீர் கேட்டு பயன் பெற்றதைப்போல் நாங்களும் பயன் பெறும் வண்ணம் அவர்களிடம் நீர் செவியுற்ற செய்திகளை எங்களுக்கும் அறிவிப்பீராக என்று கூறினோம், அவர் கூறியதாவது. "இறைத்தூதர்(ஸல்) எங்களை (பைஅத் செய்ய) அழைத்தார்கள் நாங்கள் அவர்களிடம் பைஅத் செய்தோம்," மேலும் அவர் கூறியதாவது. "நாங்கள் விரும்புகின்றவற்றிலும் வெறுக்கிள்றவற்றிலும் இன்பமான நிலையிலும் துன்பமான நிலையிலும் எங்கள் சுயநலன்களிலும் (அவர்களுக்கு) நாங்கள் செவிமடுக்க வேண்டும் என்றும் கட்டுப்பட வேண்டும் என்றும். அல்லாஹ்விடமிருந்து வந்துள்ள உறுதியான ஆதாரத்தின் அடிப்படையில் தெளிவான குரை கண்டால் ஒழிய அதிகாரம் கொடுக்கப் பட்டவர்களுடன் நாங்கள் சர்ச்சை செய்யக்கூடாது என்றும் எங்களிடம் பைஅத் பெற்றார்கள்."
ஆகவே கலீபாவிற்கு பைஅத் கொடுக்கும் அதிகாரம் முஸ்லிம்கள் கைகளில் இருப்பதோடு அது அவர்களின் உரிமையாகவும் இருக்கிறது, அவர்கள் பைஅத் கொடுப்பதன் மூலமாக மட்டுமே கலீ*பாவின் நியமனம் நிறைவேற்றப்பட்டு கிலா*பத் நிலைநாட்டப்படுகிறது, கைலாகு (கை குலுக்குதல்) செய்வதன் மூலமாகவோ அல்லது எழுதிக்கொடுப்பதன் மூலமாகவோ ஆணோ பெண்ணோ எந்த வேறுபாடுமின்றி ஒப்பந்த பைஅத்தை நிறைவேற்றலாம், ஆண்கள் செய்வதைப்போலவே பெண்கள் பைஅத் செய்யும்போது கலீபாவுடன் கைகுலுக்கலாம்.

ஆயிஷா(ரலி) விடமிருந்து உர்வா அறிவித்து புஹாரியில் இடம்பெற்றுள்ள ஸஹீஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.

"'அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாக்கக்கூடாது என்ற வசனத்தை ஓதிக்காட்டி அல்லாஹ்வின்துதர்(ஸல்) பெண்களிடம் பைஅத் பெறுவார்கள். அவர்களுக்கு உரிமை இல்லாத பெண்ணின் கையை ஒருபோதும் அவர்கள் தீண்டியதில்லை"


இந்த அறிவிப்பில் ஆயிஷா(ரலி) தான் அறிந்தவரை உள்ள விஷயத்தைப்பற்றி குறிப்பிட்டுள்ளார், அவர் அறிந்தவரை அல்லாஹ்வின்தூதர்(ஸல்) எந்த பெண்ணின் கையையும் (பைஅத் பெறும்போது) தீண்டியதில்லை, ஆனால் வேறுசில ஹதீஸ் அறிவிப்புகளில் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கையை பிடித்தவாறு பெண்கள் பைஅத் செய்தார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது, உம்மு அத்தீயா(ரலி) அறிவித்துள்ள ஹதீஸில் எங்களில் ஒரு பெண் தனது கையை விலக்கிக் கொண்டார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது, அந்தப்பெண் பைஅத் செய்தபோது அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கையை பிடித்திருந்தார் என்பதையும் அவர்கள்(ஸல்) ஒப்பாரி வைத்து அழக்கூடாது என்று கட்டளையிட்டபோது பைஅத்திலிருந்து தனது கையை விலக்கிக்கொண்டார் என்பதையும் இது சுட்டிக் காட்டுகிறது, மேலும் எங்களில் ஒரு பெண் தனது கையை விலக்கிக் கொண்டார் என்ற சொற்றொடர் மற்ற பெண்கள் பைஅத்திலிருந்து தங்கள் கைகளை விலக்கிக்கொள்ளவில்லை என்பதையும் அவர்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) கையைப் பிடித்து பைஅத் செய்தார்கள் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது, இந்த ஹதீஸின் அறிவிப்பில் இடம்பெற்றுள்ள வார்த்தைகளும் அதன் அர்த்தங்களும் ஆண்களும் பெண்களும் பைஅத் செய்யும்போது கலீபாவுடன் கைகுலுக்குவது கூடும் என்று குறிப்பிடுகிறது, ஆகவே ஆண்களும் பெண்களும் கைகுலுக்குவது மூலமோ அல்லது எழுதிக்கொடுப்பது மூலமோ பைஅத்தை நிறைவேற்றலாம்.

அப்துல்லாஹ் இப்ன் தினார்(ரலி) அறிவித்துள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.

شهدت ابن عمر حيث اجتمع الناس على عبد الملك قال: كتب إني اقر بالسمع والطاعة لعبد الله عبد الملك أمير المؤمنين على سنة الله وسنة رسوله ما استطعت

அப்துல்மாலிக் இப்ன் மர்வானின் பக்கமாக மக்கள் கூடியிருந்தபோது. அல்லாஹ்வின் வேதத்தின்படியும் அவனுடைய தூதரின் சுன்னாவின்படியும் அமீருல் மூமினீன் அல்லாஹ்வின் அடிமை அப்துல்மாலிக்கிற்கு செவிமடுப்பதாகவும் கட்டுப்படுவதாகவும் நான் அறிவிப்பு செய்கிறேன் என்று இப்ன்உமர் எழுதிக்கொடுத்ததை நான் பார்த்தேன்"


எனினும் வயதுவந்தவர்கள் மட்டும்தான் பைஅத் செய்யமுடியும். சிறுவர்களோ அல்லது புத்திசுவாதீனம் இல்லாதவர்களோ பைஅத் செய்யமுடியாது, ஆகவே ஒரு முகல்லப் (புத்திசுவாதீனமுள்ள வயதுவந்தவர்) மட்டுமே பைஅத் செய்யமுடியும்.

அபூஉகைல் அறிவித்துள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.

فقد حدث أبو عقيل زهرة بن معبد عن جده عبد الله بن هشام وكان قد أدرك النبي  وذهبت به أمه زينب ابنة حميد إلى رسول الله  فقالت يا رسول الله بايعه، فقال النبي  هو صغير فمسح رأسه ودعا له

அபூஉகைல் ஸஹ்ரா இப்ன் மபத் தனது பாட்டனார் அப்துல்லாஹ் இப்ன் ஹிஷாமிடமிருந்து அறிவிப்பதாவது. அப்துல்லாஹ் இப்ன் ஹிஷாம் இறைத்தூதரிடம் வந்தார். அவருடன் அவர் தாயாரும் ஹமீதின் புதல்வியுமான ûஸனபும் வந்தார், அவர் கூறினார். "அல்லாஹ்வின்தூதரே (ஸல்) இவரிடம் (அப்துல்லாஹ் இப்ன் ஹிஷாம்) பைஅத் பெற்றுக்கொள்வீர்களாகõ" அதற்கு இறைத்தூதர்(ஸல்). அவர் சிறுவராக இருக்கிறார் என்று கூறி (பைஅத் பெற்றுக்கொள்ள மறுத்து) விட்டு அவரின் தலையை தடவிக்கொடுத்தவாறு அவருக்காக துஆ செய்தார்கள்"


பைஅத் கொடுக்கும்போது கூறவேண்டிய வார்த்தைகளைப் பொறுத்தவரை குறிப்பிட்ட வார்த்தைகளை மட்டுமே கூறவேண்டும் என்ற எந்த நிபந்தனையும் இல்லை, ஆனால் அல்லாஹ்வின் வேதத்தின்படியும் அவனது தூதரின்(ஸல்) சுன்னாவின்படியும் கலீபா செயல்பாடுகளை மேற்கொள்ளவேண்டும் என்ற அர்த்தத்தைக் குறிக்கும் வார்த்தைகள் முதலில் இடம்பெறவேண்டும், இரண்டாவதாக இன்பத்திலும் துன்பத்திலும் விரும்புகின்றவற்றிலும் வெறுக்கின்றவற்றிலும் கலீபாவுக்கு கட்டுப்படுவது குறித்த உறுதிமொழி அதில் இடம்பெறவேண்டும், முஸ்லிம்கள் பைஅத்தை நிறைவேற்றுவது மூலம் கிலாபத் ஒப்பந்தம் ஒரு கலீபாவின் மீது நிலைநிறுத்தபட்டுவிட்டது எனில் பிறகு பைஅத் செய்தவர்கள் கழுத்தில் அது ஒரு பொறுப்பாக நிலைபெற்றிருக்கும். அவர் அதிலிருந்து தன்னை விலக்கிக் கொள்ளமுடியாது ஏனெனில் கிலாபத் ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை அது நிலைத்திருக்கும்வரை கலீபாவின் மீதுள்ள உரிமையாக அது இருக்கிறது, ஒருமுறை முஸ்லிம்கள் அதை அவருக்கு அளித்துவிட்டால் பிறகு அவர்கள் அவருக்கு கட்டுப்பட்டே நடந்தாகவேண்டும், அதிலிருந்து எவரேனும் விலகிக்கொள்ள நாடுவாரானால் அதற்கு ஒருபோதும் அனுமதியில்லை, அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.

إِنَّ الَّذِينَ يُبَايِعُونَكَ إِنَّمَا يُبَايِعُونَ اللَّهَ يَدُ اللَّهِ فَوْقَ أَيْدِيهِمْ فَمَنْ نَكَثَ فَإِنَّمَا يَنْكُثُ عَلَى نَفْسِهِ وَمَنْ أَوْفَى بِمَا عَاهَدَ عَلَيْهُ اللَّهَ فَسَيُؤْتِيهِ أَجْرًا عَظِيمًا

உம்மிடம் பைஅத் செய்தவர்களெல்லாம் அல்லாஹ்விடம் பைஅத் செய்தவர்கள் ஆவார்கள். அவர்களின் கைகள் மீது அல்லாஹ்வின் கை இருக்கிறது. ஆகவே எவர் அதை முறித்துவிடுகிறாரோ அவர் தனக்கு எதிராகவே (அதை) முறித்துவிடுகிறார் இன்னும் எவர் அல்லாஹ்விடம் செய்த உடண்படிக்கையை நிறைவேற்றுகிறாரோ அவருக்கு மகத்தான கூலி உண்டு ( அல்பதஹ் : 10)


ஜாபிர் இப்ன் அப்துல்லாஹ் (ரலி) அறிவித்து புஹாரியில் இடம்பெற்றுள்ள ஸஹீ ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.

أقلني بيعتي " فأبى. ثم جاء فقال " أقلني بيعتي " فأبى، فخرج. فقال رسول اللهயிالمدينة كالكير تنفي خبثها وينصع طيبها

ஒரு நாடோடி அரபி அல்லாஹ்வின்தூதரிடம் (ஸல்) இஸ்லாத்திற்காக பைஅத் செய்தார். பின்னர் அவர் நோயுற்றபோது அல்லாஹ்வின்தூதரிடம் (ஸல்) வந்து கூறினார்.

"'எனது பைஅத்திலிருந்து நான் விலகிக்கொள்ளலாமா? என்று வினவினார். அதற்கு அவர்கள்(ஸல்) மறுத்துவிடவே அங்கிருந்து சென்றுவிட்டார், பிறகு அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறினார்கள்.


"'இந்நகரம் உருக்கு உலை போன்றது அது தன்னிடமுள்ள அசுத்தங்களை விலக்கிவிட்டு தூய்மையானவற்றை பாதுகாக்கிறது

இப்ன்உமர்(ரலி) தன்னிடம் கூறியதாக அல்லாஹ்வின்தூதர்(ஸல்) அறிவித்திருப்பதாவது.


من خلع يداً من طاعة لقي الله يوم القيامة لا حجة له

எவரேனும் ஒருவர் அல்லாஹ்விற்கு கட்டுப்படுவதிலிருந்து தனது கரத்தை விலக்கிக் கொண்டால் அவர் மறுமைநாளில் தன்னிடம் எந்தவிதமான ஆதாரமும் இல்லாத நிலையில் அல்லாஹ்வை சந்திப்பார்


கலீபாவிற்கு செய்த பைஅத்தை முறிப்பது அல்லாஹ்(சுபு) வுக்கு கட்டுப்படுவதிலிருந்து கையை விலக்கிக் கொள்வதற்கு ஒப்பாகும், இது முஸ்லிம்கள் ஒருவரை கலீபாவாக ஏற்றுக்கொண்டு அவருக்கு பைஅத் செய்வதைப் பொறுத்தவரை உள்ள நிபந்தனையாகும். அது கிலாபத்திற்குரிய ஒப்பந்த பைஅத்தாக (contract of khilafat) இருந்தாலும் அல்லது கட்டுப்படும் பைஅத்தாக (contract of obedience) இருந்தாலும் சரியே, ஆனால் ஒருவர் ஆரம்பத்தில் ஒருவரை கலீபாவாக ஏற்றுக்கொண்டு பைஅத் செய்துவிட்ட நிலையில் மற்ற முஸ்லிம்கள் அவருக்கு பைஅத் செய்து கலீபாவாக ஏற்றுக்கொள்ளவில்லை எனும் பட்சத்தில் அவர் தன்னுடைய பைஅத்தை அவரிடமிருந்து விலக்கிக்கொள்வதற்கு அனுமதியுண்டு, ஆகவே இந்த ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது கலீபாவிற்கு செய்யப்பட்டு பைஅத்தைப் குறித்துதானே தவிர முஸ்லிம்கள் கலீபாவாக ஏற்றுக்கொள்ளாத நபருக்கு கொடுத்த பைஅத் குறித்தல்ல.

SOURCES FROM WARMCALL.BLOGSPOT.COM

கலீபாவை நியமனம் செய்வதற்கு முஸ்லிம்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள காலக்கெடு

கலீபாவை நிலைநிறுத்துவதற்கு முஸ்லிம்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள காலக்கெடு இரண்டு இரவுகளாகும், ஆகவே தனது கழுத்தில் பைஅத் இல்லாதநிலையில் இரண்டு இரவுகளுக்கு மேலாக இருப்பதற்கு எந்த முஸ்லிமிற்கும் அனுமதியில்லை, முந்தைய கலீபா இறந்த பின்னரோ அல்லது பதவிநீக்கம் செய்யப்பட்ட பின்னரோ அந்த நொடியிலிருந்து புதிய கலீபா ஒருவரை நியமனம் செய்வது பர்லு என்பதால்தான் இரண்டு இரவுகள் அதிகப்பட்சமான காலக்கெடுவாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது, ஆகவே கலீபாவை நியமனம் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கும்போது இரண்டு இரவுகள் தாமதம் ஏற்படுவதற்கு அனுமதி இருக்கிறது, இரண்டு இரவுகளுக்குப் பின்னரும் முஸ்லிம்கள் கலீபாவை நிலைநிறுத்தவில்லை என்றால் பிறகு நிலைமை ஆய்வுசெய்யப்படும், முஸ்லிம்கள் கலீபாவை நியமனம் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தும் சூழலின் சாதகமின்மை காரணமாக அவர்களால் தாமதம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை என்றால் பிறகு அவர்கள் மீதுள்ள பாவம் நீங்கிவிடும் ஏனெனில் அவர்கள் கடமையை நிறைவேற்றுவதில் முனைப்பாக இருந்தும் சூழலின் நிர்பந்தம் காரணமாக தாமதத்தை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.

அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறினார்கள்.

"'தவறுதலின் காரணமாகவோ அல்லது ஞாபக மறதியின் காரணமாகவோ அல்லது நிர்பந்தத்தின் காரணமாகவோ என் உம்மத்தின் மீது ஏற்படும் பாவம் நீக்கப்பட்டு விடுகிறது"

இப்னு அப்பாஸ் (ரழி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் இப்னு மாஜா, பைஹக்கி மற்றும் சில கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் கடமையை நிறைவேற்றும் பணியில் அவர்கள் ஈடுபடவில்லை என்றால் பிறகு கலீபாவின் நியமனம் நிறைவேற்றப்படும் வரை அவர்கள் அனைவரும் பாவத்தில் இருந்துகொண்டிருப்பார்கள், கலீபாவை நியமனம் செய்வதை நிறைவேற்றும் தருணத்தில் அவர்களை விட்டு பர்லு நீங்கியபோதும் அதை (குறிப்பிட்ட காலத்திற்கு) நிறைவேற்றாமல் விட்டுவிட்ட பாவம் அவர்கள் மீது இருந்துகொண்டிருக்கும், ஒரு பர்லை நிறைவேற்றாமல் விட்டுவிடுவதன் மூலம் ஒரு முஸ்லிம் அல்லாஹ்(சுபு) வின் கட்டளைக்கு கீழ்படியாமல் இருப்பதால் எவ்வாறு கேள்விகணக்கிற்கு உட்பட்டாகவேண்டுமோ அவ்வாறே கலீபாவை நியமனம் செய்யும் பர்லை நிறைவேற்றாமல் விட்டுவிட்ட முஸ்லிம்கள் அனைவரும் அவர்களின் கீழ்படியாத குற்றத்திற்காக அல்லாஹ்(சுபு) வின் கேள்வி கணக்கிற்கு நிச்சயமாக உட்பட்டே ஆகவேண்டும்,

கலீபாவை நியமனம் செய்யும் கடமையை நிறைவேற்றுவதற்கு கொடுக்கப்பட்டுள்ள காலக்கெடு இரண்டு இரவுகள் என்பதைப் பொறுத்தவரை அது இஜ்மாஅஸ்ஸஹாபாவாக இருக்கிறது, அல்லாஹ்வின்தூதரின்(ஸல்) மரண செய்தியை பெற்றுக்கொண்டவுடன் ஸஹாபாக்கள் அனைவரும் பனூஸôயிதாவின் புறநகர் பகுதியில் சந்தித்து அல்லாஹ்வின் தூதரின்(ஸல்) இடத்திற்கு ஒருவரை நியமனம் செய்வதற்காக விவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள், அவர்கள் தொடர்ந்து இந்த விவகாரத்தை புறநகர் பகுதியிலிருந்தவாறு விவாதித்து முடித்த பின்னர் இரண்டாவது நாளில் பைஅத் கொடுப்பதற்காக மக்களை மஸ்ஜிதில் கூடச்செய்தார்கள், இதற்குள் இரண்டு இரவுப்பொழுதும் மூன்று பகல்பொழுதும் கழிந்துவிட்டன, பின்னர் மக்கள் அபூபக்கருக்கு (ரலி) பைஅத் செய்து அவரை கலீ*பாவாக நியமனம் செய்தார்கள்.

இரண்டாவது கலீபா உமர்(ரலி) கத்தியால் குத்தப்பட்ட பின்னர் தனக்கு மரணம் நிகழ்வது நிச்சயம் என்பதை உணர்ந்தபோது புதிய கலீபாவை தேர்வு செய்யும் பொறுப்பை ஆலோசனைக்குழுவிடம் (people of shurah) ஒப்படைத்து மூன்று நாட்கள் அவகாசம் கொடுத்தார், கலீபா நியமனத்தில் மூன்று நாட்களுக்குள் கருத்து உடண்பாடு ஏற்படவில்லை என்றால் மூன்றாவது நாள் முடிவில் கருத்து வேற்றுமைக்கு காரணமானவர்கள் கொல்லப்படவேண்டும் என்று பரிந்துரை செய்தார், இதற்காக உமர்(ரலி) ஆயுதம் தரித்த ஐம்பது முஸ்லிம் வீரர்களை நியமித்திருந்தார், இந்த ஆலோசனைக்குழுவில் இடம் பெற்றிருந்த ஸஹாபாக்களில் உஸ்மான் இப்ன் அப்பான்(ரலி) , அலீ இப்ன் அபூதாலிப் (ரலி), அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்ப் (ரலி) ,ஸது இப்ன் அபீவக்காஸ் (ரலி), ஜுபைர் (ரலி) மற்றும் தல்ஹா (ரலி) ஆகியோர் சுவனத்திற்கு நன்மராயம் கூறப்பட்ட பத்து ஸஹாபாக்களில் உள்ளவர்கள் ஆவார்கள், மூன்று நாட்களுக்குள் உடண்பாடு ஏற்படவில்லை என்றால் அவர்கள் அனைவரும் கொல்லப்படவேயண்டும் என்ற உமரின்(ரலி) கட்டளை அனைத்து ஸஹாபாக்கள் முன்னிலையில்தான் அறிவிக்கப்பட்டது. இவ்வாறு இருந்தபோதும் எவரும் இதற்கு மறுப்பு தெரிவித்ததாகவோ அல்லது ஆட்சேபனை தெரிவித்ததாகவோ எந்த அறிவிப்பும் இல்லை, எனவே இரண்டு இரவுகள் மற்றும் மூன்று பகல்பொழுது ஆகிய காலக்கெடுவுக்கு மேலாக முஸ்லிம்கள் கலீ*பா இன்றி இருப்பதற்கு அனுமதியில்லை என்பது இஜ்மாஅஸ்ஸஹாபாவாக இருக்கிறது, மேலும் குர்ஆன் மற்றும் சுன்னாவைப் போன்று இஜ்மாஅஸ்ஸஹாபாவும் ஷரியாவின் சட்டரீதியான ஆதாரமாக (legitmate shari’a daleel) கருதப்படுகிறது.


Sources warmcall.blogspot.com

May 8, 2011

கிலாபத் ஒப்பந்தம் – انعقاد الخلافة

கிலாபத் என்பது சுயவிருப்பத்துடன் தேர்வுசெய்யும் ஒரு ஒப்பந்தமாகும் ஏனெனில் அது அதிகாரத்தில் உள்ளவருக்கு கட்டுப்படுவதாக கொடுக்கப்படும் வாக்குறுதியாக இருக்கிறது, ஆகவே பைஅத் பெறுகின்ற நபர் கிலாபத் பொறுப்பை ஏற்றுக்கொள்ள தெரிவிக்கும் சம்மதமும் பைஅத் கொடுப்பவர் குறிப்பிட்ட நபர் கலீபாவாக நியமிக்கப்படுவதற்கு தெரிவிக்கும் சம்மதமும் முக்கியமான நிபந்தனைகளாகும், இதனடிப்படையில் ஒருவர் கலீபா பொறுப்பை ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் அல்லது தயக்கம் காட்டினாலும் அவரை வற்புறுத்தலுக்கு உள்ளாக்கக்கூடாது, அதற்கு மாற்றாக வேறொரு நபரை தேர்வுசெய்யவேண்டும், மேலும் மக்களிடம் நிர்பந்தமான முறையில் பைஅத் பெறுவதற்கும் அனுமதியில்லை ஏனெனில் இத்தகைய விதத்தில் பைஅத் பெற்றால் அது சட்டரீதியாக செல்லுபடி ஆகாது, மற்ற ஒப்பந்தங்களுக்கு உரிய ஷரத்து போலவே கிலாபத் என்பதும் சுயசம்மதத்துடன் எந்தவிதமான வற்புறுத்தலோ அல்லது நிர்பந்தமோ இன்றி தேர்வுசெய்யும் ஒப்பந்தமாகும், எனினும் பைஅத் கொடுப்பதற்கு தகுதி உள்ளவர்கள் பைஅத்தை நிறைவேற்றிவிட்டால் அது சட்டரீதியானது என்பதால் தேர்வுசெய்யப்பட்டவர் அதிகாரத்திற்கு வந்துவிடுவார். அவருக்கு கட்டுப்படுவது மக்கள் அனைவரின் மீதுள்ள கட்டாய கடமையாகும், அதிகாரத்திற்கு வந்தபின்னர் அவருக்கு கொடுக்கப்படும் பைஅத் கட்டுப்படும் பைஅத்தாக இருக்குமே ஒழிய கிலா*பத்திற்குரிய ஒப்பந்த பைஅத்தாக இருக்காது, இந்நிலையில் அதிகாரத்தில் இருக்கும் நபர் மற்ற மக்களிடம் நிர்பந்தமாக பைஅத் பெறுவதற்கு அனுமதியுண்டு ஏனெனில் அது கீழ்படியும் பைஅத்தாக இருப்பதோடு வாஜிபாகவும் இருக்கிறது, கீழ்படியும் பைஅத் கிலா*பத்திற்குரிய ஒப்பந்த பைஅத் அல்ல. எனவே அதை வற்புறுத்தி பெறுவது சட்டத்திற்குப் புறம்பானது என்ற வாதம் தவறானது, இதனடிப்படையில் ஆரம்பநிலையில் பெறப்படும் பைஅத் ஒப்பந்த பைஅத்தாக இருப்பதால் சுயவிருப்பத்தின் அடிப்படையில் சம்மதம் தெரிவித்தால் அன்றி அது சட்டரீதியானதாக இருக்காது, ஆனால் கலீபாவிற்கு ஒப்பந்த பைஅத் கொடுக்கவேண்டியவர்கள் பைஅத் கொடுத்து முடித்துவிட்டால் பிறகு மற்ற முஸ்லிம்களின் பைஅத் அதிகாரத்தில் உள்ளவருக்கு கட்டுப்படும் பைஅத்தாகும், அல்லாஹ்(சுபு) வின் கட்டளையை நிறைவேற்றுவதற்கு மக்களை நிர்பந்தம் செய்வதற்கு அனுமதியுண்டு என்ற அடிப்படையில் நிர்பந்தமாக கட்டுப்படும் பைஅத்தை பெற்றுக்கொள்வதற்கு அனுமதியுண்டு, நீதித்துறையில் நீதிபதியாக இருக்கும் ஒருவரை நியமனம் செய்வதற்கு ஒருவர் பொறுப்பாக இருப்பது போலவே. இமாரத்தில் அமீராக பொறுப்பு வகிப்பவரை ஒருவர் நியமனம் செய்வதுபோலவே கிலாபத் என்பது ஒரு ஒப்பந்தமாக இருப்பதால் அந்த ஒப்பந்தத்தை சட்டரீதியானதுதான் என்று முடிவுசெய்ய எவரேனும் பொறுப்பாக இருக்கவேண்டும், ஆகவே கிலாபத் ஆட்சிமுறையில் கலீபா பதவிக்கு வரும் நபரை எவரேனும் நியமனம் செய்யாமல் அவர் கலீபாவாக ஆகமுடியாது,.

இதன்முடிவாக. முஸ்லிம்கள் ஒருவரை கலீபா பதவிக்கு நியமனம் செய்யாமல் ஒருவரும் கலீபாவாக ஆகமுடியாது. மேலும் அவர் சட்டரீதியான ஒப்பந்தத்தை பெற்றுக்கொள்ளாமல் கலீபாவின் அதிகாரத்தை அடைந்துகொள்ள முடியாது, இந்த ஒப்பந்தத்தை இரண்டு தரப்பினர்தான் நிறைவேற்றமுடியும், முதல்தரப்பில் உள்ளவர் கலீபாவாக பொறுப்பு வகிப்பதற்கு முன்மொழியப்பட்ட நபராவார். இரண்டாவது தரப்பில் உள்ளவர்கள் அவரை கலீபாவாக ஏற்றுக்கொள்வதற்கு சம்மதம் தெரிவிக்கும் முஸ்லிம்களாவார்கள், ஆகவே கிலாபத் ஒப்பந்தத்தை நிறைவுசெய்வதற்கு முஸ்லிம்களின் பைஅத் அவசியமானது(வாஜிப்) , இதனடிப்படையில் ஒருவர் வன்முறையான விதத்தில் அதிகாரத்தை கைப்பற்றிக்கொண்டு தன்னை முஸ்லிம்களின் கலீபா என்று அவராகவே அறிவிப்பு செய்துகொண்டாலும் அவர் கலீபாவாக ஆகமுடியாது ஏனெனில் கிலாபத்திற்குரிய ஒப்பந்தத்தை முஸ்லிம்கள் ஒருமித்து அவருக்கு அளிக்கவில்லை, இந்நிலையில் முஸ்லிம்களிடமிருந்து நிர்பந்மமான முறையில் பைஅத் பெற்றால் அந்த பைஅத்தின் அடிப்படையில் அவரை கலீபாவாக கருதமுடியாது ஏனெனில் நிர்பந்தமாக பெற்ற பைஅத் சட்டரீதியாக செல்லுபடி ஆகாது, கிலாபத் என்பது சுயசம்மதத்துடன் தேர்வுùய்யும் முறையாக இருப்பதாலும். அதை வன்முறையில் நிறைவேற்றிக்கொள்ள முடியாது என்பதாலும். சுயவிருப்பத்தின் பேரில் தேர்வுசெய்து பைஅத் கொடுத்தால் மட்டுமே நியமனம் செய்யமுடியும் என்ற காரணத்தாலும் இத்தகைய முறையில் பெறும் பைஅத்தைக் கொண்டு கலீபாவை ஒருமித்து நியமனம் செய்யமுடியாது, எனினும் நிர்பந்தமான முறையில் அதிகாரத்தை கைப்பற்றிய ஒருவர் அதன்பின்னர் முஸ்லிம்களின் நம்பிக்கையை தனக்கு ஆதரவாக திருப்புவதன் மூலம் அவர்கள் பைஅத் கொடுப்பதற்கு சுயவிருப்பத்தின் பேரில் சம்மதம் தெரிவித்தால். அஹ்காம் ஷரியாவை நடைமுறைப்படுத்துவதற்கு முஸ்லிம்கள் அவருக்கு பைஅத் கொடுக்கவேண்டும் என்ற அடிப்டையில் அவர்களிடமிருந்து முறையாக பைஅத் பெற்றுக்கொள்ளும் பட்சத்தில் ஆரம்பத்தில் அவர் முறையற்ற விதத்தில் அதிகாரத்தை கைப்பற்றியிருந்தாலும் பைஅத் பெற்ற அந்த வினாடி முதலே அவர் கலீபா பொறுப்புக்கு வந்துவிடுவார், ஆகவே பைஅத் பெறுவதற்கு முயற்சிப்பவர் ஆட்சிஅதிகாரத்தில் இருந்தாலும் இல்லை என்றாலும் கலீபாவாக வருபவருக்கு சுயவிருப்பத்தின் பேரில் தேர்வுசெய்து மக்கள் பைஅத் கொடுக்கவேண்டும் என்பது நிபந்தனையாகும்.

எத்தகைய மனிதர்களின் பைஅத்தைக் கொண்டு கலீபா நியமனம் செய்யப்படுகிறார் என்பதைப் பொறுத்தவரை: நேர்வழிகாட்டப்பட்ட கலீபாக்களின் காலத்தில் நிகழ்ந்த சம்பவங்களையும் ஸஹாபாக்கள் ஒருமித்து முடிவுசெய்த விஷயங்களையும் ஆய்வுசெய்வதன் மூலம் இதற்குரிய விதிமுறைகளை கொண்டுவரலாம், அபூபக்கர்(ரலி) காலத்தைப் பொறுத்தவரை மதினா நகரத்தில் வாழ்ந்த அஹ்லே அல்ஹல் வல் அக்த் (Ahle al-hal wal aqd) என்றழைக்கப்படும் செல்வாக்கு பெற்ற முஸ்லிம்களிடம் மட்டும் பைஅத் பெறுவது போதுமானதாக இருந்தது. மக்காவில் வாழ்ந்த முஸ்லிம்களிடமோ அல்லது அரபிய தீபகற்பத்தின் மற்ற பகுதிகளில் வாழ்ந்த மற்ற முஸ்லிம்களிடமோ பைஅத் பெறத்தேவையில்லை என்ற நிலை இருந்துவந்தது, உண்மையில் இதுபற்றி அவர்களிடம் எந்தவிதமான அபிப்ராயமும் கேட்கப்படவில்லை, உமர்(ரலி) காலத்திலும் இதேமுறைதான் பின்பற்றப்பட்டது, உஸ்மான் (ரலி) பைஅத் பெற்றதைப் பொறுத்தவரை அபூபக்கர்(ரலி) உமர்(ரலி) ஆகியோர் காலத்தில் மதினாவின் செல்வாக்கு பெற்ற முஸ்லிகளிடத்தில் மட்டும் அபிப்ராயம் கேட்டதுபோல் அல்லாமல் உஸ்மானை(ரலி) தேர்வு செய்தபோது அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்ப் (ரலி) மதினாவிலுள்ள அனைத்து முஸ்லிம்களிடத்திலும் அபிப்ராயம் கேட்டார், அலீ (ரலி) கலீபாவாக தேர்வுசெய்யப்பட்டபோது மதினாவிலும் கூபாவிலும் வாழ்ந்த பெரும்பான்மை முஸ்லிம்களிடத்தில் பைஅத் பெறப்பட்டது, கலீபா பதவிக்கு அவர் ஏகமானதாக தேர்வுசெயய்யப்பட்டார். அவருடன் கருத்து வேறுபாடு கொண்டவர்களும் அவருடன் போர்செய்தவர்களும் அவர் பெற்ற பைஅத் சட்டரீதியானது என்று கருதினார்கள், ஏனெனில் அவர்கள் வேறொருவருக்கும் பைஅத் கொடுக்கவுமில்லை அவர் பெற்ற பைஅத்திற்கு ஆட்சேபனை தெரிவிக்கவுமில்லை மாறாக. உஸ்மானின்(ரலி) இரத்தத்திற்கு பழிதீர்க்கவேண்டும் என்றே கோரினார்கள், அலீ(ரலி)க்கு எதிராக கலகம் செய்தவர்களைப் பொறுத்தவரை பழிதீர்க்கவேண்டிய ஒரு விஷயத்திற்காக கலீபாவின் மீது குற்றம் சுமத்தினார்கள், அவர்களுக்கு அதுபற்றி விளக்கிக்கூறவேண்டிய நிலையிலும் அவர்களுடன் போர்செய்யவேண்டிய நிலையிலும் கலீபா இருந்துவந்தார், ஆனால் கலகம் செய்த கூட்டத்தினர் வேறொரு கிலாபத்தையும் நிறுவ முயற்சிக்கவில்லை.

கிலாபத்தின் மற்ற மாகாணங்களை விட்டுவிட்டு தலைநகரான மதினாவில் வாழ்ந்த முஸ்லிம்களிடம் மட்டும் பைஅத் பெற்ற சம்பவங்கள் ஸஹாபாக்கள் அனைவர் முன்னிலையிலும் நிகழந்தது, மதினாவிலுள்ள பெரும்பான்மை முஸ்லிம்களிடம் மட்டும் பைஅத் பெற்ற இந்தமுறையில் அவர்களில் ஒருவர்கூட கருத்துவேறுபாடு கொண்டதாகவோ அல்லது மறுப்பு தெரிவித்ததாகவோ அல்லது ஆட்சேபனை எழுப்பியதாகவோ எந்தவொரு அறிவிப்புகளும் இல்லை, ஆகவே ஆட்சியமைப்பு விவகாரங்களில்(Ruling Affairs) செல்வாக்கு பெற்றவர்களாகவும் உம்மத்திலுள்ள முஸ்லிம்களின் அபிப்ராயத்தை முகமை செய்யக்கூடிய(Representation) அந்தஸ்த்தில் உள்ளவர்களாகவும் விளங்கும் முஸ்லிம்கள் இணைந்து கலீ*பாவை நிலைநிறுத்தலாம் என்பது இஜ்மாஅஸ்ஸஹாபாவாக இருக்கிறது, இதுஏனெனில் அக்காலகட்டத்தில் செல்வாக்குபெற்ற முஸ்லிம்களும் மதினாவின் பெரும்பான்மை முஸ்லிம்களும் உம்மத்திலுள்ள மக்களின் அபிப்ராயங்களை முகமை செய்யக்கூடியவர்களாக இருந்துவந்தார்கள், அவர்கள் இஸ்லாமிய அரசின் அனைத்து பிரதேசங்களின் சார்பாக ஆட்சியமைப்பு விவகாரங்களில் உம்மத்தின் அபிப்ராயத்தை எடுததுக்கூறக்கூடிய அந்தஸ்த்தில் இருந்துவந்தார்கள்.

இதனடிப்படையில் நேர்வழிகாட்டப்பட்ட கலீபாக்கள் காலத்தில் உள்ளதுபோல் ஒருவருக்குப்பின் மற்றொருவர் கலீபாவாக தேர்வுசெய்யப்படும்போது முஸ்லிம் உம்மத்தின் பிரதிநிதிகளாக அந்தஸ்த்து பெற்றிருப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் பைஅத் செய்துவிட்டால் பிறகு கலீபாவை நியமனம் செய்துவிடலாம், ஆகவே இத்தகையவர்களின் பைஅத் கிலாபத்திற்குரிய ஒப்பந்த பைஅத்தாக இருக்கிறது. மற்றவர்களின் பைஅத்தைப் பொறுத்தவரை அது கீழ்படியும் பைஅத்தாகவே இருக்கும். அதாவது அது கலீபாவிற்கு கட்டுப்படும் பைஅத்தாக இருக்குமே தவிர கிலாபத்தை நிலைநிறுத்தும் ஒப்பந்த பைஅத்தாக இருக்காது.

ஒரு கலீபா இறந்த பின்னரோ அல்லது பதவிநீக்கம் செய்யப்பட்ட பின்னரோ அவர் பொறுப்புக்கு மற்றொருவரை நியமனம் செய்வது தொடர்பாக உள்ள நிலையாக இது இருக்கிறது, ஆனால் ஹிஜ்ரி 1343 (1924 கி,பி,) ல் இஸ்த்தான்புல் கிலாபா அகற்றப்பட்ட பின்னர் இன்றைய நாள்வரை உள்ள நிலைபோல் கலீபாவே இல்லை என்ற நிலை ஏற்படும்போது இஸ்லாத்தின் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் அதன் செய்தியை தவா மூலம் உலகம் முழுவதற்கும் எடுத்துச்செல்வதற்கும் முஸ்லிம்களின் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் பாதுகாப்பு வழங்குவதற்கும் ஒரு கலீபாவை நியமனம் செய்வது முஸ்லிம்கள் மீதுள்ள கட்டாய கடமையாக இருக்கிறது, ஒரு கலீ*பாவை நியமனம் செய்வதன்மூலம் கிலாபத்தை நிர்மாணிப்பதற்கு இஸ்லாமிய உலகத்திலுள்ள ஒவ்வொரு பிரதேசங்களும் தகுதி உடையவையாகவே இருக்கின்றன, அவ்வாறு ஒரு கலீபா நிலைநிறுத்தப்படும்போது அந்த பிரதேசத்திலுள்ள முஸ்லிம்கள் ஒப்பந்த பைஅத்தை அவர்மீது நிறைவேற்றிய பின்னர் மற்ற பிரதேசங்களிலுள்ள முஸ்லிம்கள் அவருக்கு கீழ்படியும் பைஅத் அளிப்பது அவர்கள் மீதுள்ள கட்டாய கடமையாகும், கிலாபத் நிறுவப்பட்ட பிரதேசம் எகிப்து. துருக்கி. இந்தோனீசியா போன்ற பெரிய பிரதேசங்களாக இருந்தாலும் அல்லது அல்பேனியா. காமரூன். லெபனான் போன்ற சிறிய பிரதேசங்களாக இருந்தாலும் கீழ்கண்ட நான்கு நிபந்தனைகள் நிறைவேற்றப்படவேண்டும் என்பதுதான் அளவுகோலாகும்.

1, அந்தப்பிரதேசம் சுயநிர்ணய அதிகாரத்தை பெற்றதாகவும் முஸ்லிம்களுக்கு மட்டும் உரியதாகவும் இருக்கவேண்டும் அதாவது அது அந்நிய அரசுகளின் ஆதிக்கத்தில் இல்லாத முஸ்லிம் நாடாக இருக்கவேண்டும், காபிர்களின் தலையீடோ அல்லது அவர்களின் ஆதிக்கமோ அதில் கொஞ்சமும் இருக்கக்கூடாது.

2, இஸ்லாமிய அரசு என்ற அந்தஸ்த்தில் அதன் பாதுகாப்பு அதிகாரம் மற்றும் பாதுகாவல் பொறுப்பு ஆகியவை முஸ்லிம்களின் கையில் மட்டும் இருக்கவேண்டும், அதில் காபிர்களின் தலையீடோ அல்லது பங்களிப்போ அல்லது ஆதிக்கமோ அறவே இருக்கக்கூடாது.

3, இஸ்லாத்தை முழுமையாகவும் அடிப்படையாகவும் நிறைவாகவும் நடைமுறைப்படுத்தும் செயல்பாட்டை அந்த அரசு உடனே துவக்கிவிடவேண்டும். மேலும் இஸ்லாத்தின் தவாவை உலகம் முழுவதற்கும் எடுத்துச்செல்லும் பணியையும் உடனே துவக்கிவிடவேண்டும்,

4, தேர்ந்தெடுக்கப்பட்ட கலீபா உபரியான நிபந்தனைகளை நிறைவேற்றாவிட்டாலும் கிலாபத் ஒப்பந்தத்திற்குரிய அடிப்படை நிபந்தனைகளை நிறைவேற்றவேண்டும் ஏனெனில் கிலாபா ஒப்பந்தத்திற்குரிய நிபந்தனைகளை நிறைவேற்றுவது கட்டாயமாகும்.


ஆகவே இந்த நான்கு நிபந்தனைகளையும் அந்த அரசு நிறைவேற்றிவிடும் பட்சத்தில் அந்த பிரதேசத்திலுள்ள முஸ்லிம்களிடம் பைஅத் பெற்றுக்கொள்வதன் மூலம் மட்டுமே கிலாபத்தை நிலைநாட்டிவிடலாம், ஒட்டுமொத்த இஸ்லாமிய உம்மத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் செல்வாக்குபெற்ற முஸ்லிம்களில் பெரும்பான்மையானவர்கள் பைஅத் செய்யாதபோதும் ஒரு பிரதேசத்தில் கலீபாவாக தேர்வுசெய்யப்பட்டு அங்குள்ள முஸ்லிம்களிடம் பைஅத் பெற்ற நபர்மீது கிலாபத்தின் அதிகாரம் நிலைநிறுத்தப்படும் ஏனெனில் கிலாபத்தை நிலைநாட்டுவது பர்லுல் கிபாயாவாக (கூட்டுக்கடமையாக) இருப்பதால் எந்த கூட்டத்தினர் இந்த கடமையை முறையாக நிறைவேற்றினாலும் அது விதிக்கப்பட்ட பர்லை முழுமையாக நிறைவேற்றியதற்கு சமமாகும், ஏனெனில் கிலாபத் ஏற்கனவே நிலைபெற்றிருக்கும் நிலையில் முந்தைய கலீபா மரணமடைந்த பின்னரோ அல்லது பதவிநீக்கம் செய்யப்பட்ட பின்னரோ புதிய கலீபாவை நியமனம் செய்யும்போது மட்டும்தான் உம்மத்திலுள்ள செல்வாக்குமிக்க முஸ்லிம்களில் பெரும்பான்மையானவர்கள் பைஅத் செய்யவேண்டும் என்பது நிபந்தனையாகும், ஆனால் கிலாபத் ஏற்கனவே இல்லாத நிலையில் அதை நிலைநாட்டுவது கட்டாய கடûமை என்றும் அதை மூன்று நாட்களுக்குள் நிலைநாட்ட வேண்டும் என்றும் ஷரியா நிபந்தனை விதித்திருந்தும் முஸ்லிம்கள் அதை நிறைவேற்றாமல் விட்டுவிட்ட நிலையில் கலீபா ஒப்பந்த்திற்கு உரிய தகுதிகளை பெற்றிருக்கும் நபருக்கு அங்குள்ள முஸ்லிம்கள் பைஅத் செய்து அவர் மீது கிலாபத் அதிகாரத்தை நிலைநிறுத்துவது ஷரியாவிற்கு உடண்பாடான முறையில் நிறைவேற்றப்பட்ட செயல்பாடுதான் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை, முஸ்லிம்கள் அனைவரும் இணைந்து ஷரியா விதித்துள்ள இந்த கடமையை நிறைவேற்றாமல் விட்டுவிட்ட காரணத்தால் அவர்கள் விரும்பும் நபரை கலீபாவாக தேர்வு செய்யும் உரிமையை அவர்கள் இழந்து விடுகிறாôகள்.

ஆகவே சிலமனிதர்கள் ஒன்றுகூடி இந்த கடமையை நிறைவேற்றும் பட்சத்தில் கிலாபத்தை நிலைநாட்டுவதற்கு அது போதுமானதாக இருக்கும், மேலும் ஒருமுறை அந்த பிரதேசத்தில் கிலாபத் நிறுவப்பட்டு பைஅத் மூலம் ஒரு கலீபாவிற்கு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுவிட்டால் அதன்மீது அனைத்து முஸ்லிம்களும் ஒன்றிணைந்து அந்த கலீபாவிற்கு கட்டுப்படும் பைஅத் செய்வது கடமையாகும். இல்லையெனில் அல்லாஹ்(சுபு) வுக்கு முன்னிலையில் அவர்கள் பாவம் செய்தவர்கள் ஆவார்கள், தேர்வுசெய்யப்பட்ட கலீபா அவர்களை பைஅத் செய்ய அழைக்கவேண்டும் அதற்கு அவர்கள் மறுக்கும் பட்சத்தில் அவர்கள் கலகம் செய்தவர்களாக கருதப்பட்டு கலீபாவின் அதிகாரத்திற்கு அவர்கள் கட்டுப்படும்வரை அவர்களுடன் போர்செய்யவேண்டும், ஒரு பிரதேசத்தில் சட்டரீதியான கிலாபத் ஒப்பந்தத்தின் மூலம் ஒரு கலீபா தேர்வுசெய்யப்பட்ட பின்னர் அந்த பிரதேசத்திலோ அல்லது வேறொரு பிரதேசத்திலோ மற்றொரு கலீபா தேர்வு செய்யப்பட்டால் முதலில் தேர்வுசெய்யப்பட்டவர்தான் சட்டரீதியான கலீபா என்பதால் இரண்டாவதாக தேர்வுசெய்யப்பட்டவர் சட்டரீதியான கலீபாவின் அதிகாரத்திற்கு கீழ்படியும்வரை முஸ்லிம்கள் ஒன்றிணைந்து அவருடன் போர்செய்யவேண்டும்.

அப்துல்லாஹ் இப்ன் அம்ர் அல்ஆஸ் அறிவித்து முஸ்லிமில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியிருப்பதாவது.

ومن بايع إماماً فأعطاه صفقة يده وثمرة قلبه فليطعه إن استطاع، فإن جاء آخر ينازعه فاضربوا عنق الآخر

'எவரேனும் ஒருவர் தமது கரத்தால் கைலாகு(முஸபா) கொடுப்பதன் மூலமும் தமது இதயத்தால் நன்நம்பிக்கை கொள்வதன் மூலமும் ஒரு இமாமுக்கு பைஅத் செய்தால் அவர் இயன்றவரை அவருக்கு கட்டுப்பட்டு நடக்கட்டும், இந்நிலையில் மற்றாருவர் வந்து (அதிகாரத்தில்) அவரிடம் சர்ச்சை செய்தால் அவரது கழுத்தை வெட்டுங்கள்"


மேலும் கலீபா என்பவர் இஸ்லாத்தின் அடிப்படையில் முஸ்லிம்களை ஒன்றிணைக்கக்கூடியவராக இருக்கிறார். ஆகவே கலீபா ஒருவர் நிலைநிறுத்தப்படும்போது முஸ்லிம் உம்மத்தும் நிலைநிறுத்தப்படுகிறது, இந்நிலையில் முஸ்லிம் ஜமாஅத்துடன் இணைந்திருப்பது ஒரு முஸ்லிம் மீதுள்ள கட்டாய கடமையாகவும் ஜமாஅத்தை விட்டு பிரிந்து செல்லுதல் ஹராமாகவும் இருக்கிறது.

இப்ன் அப்பாஸ்(ரலி) அறிவித்து முஸ்லிமில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸீல் அறிவிக்கப்பட்டிருப்பதாவது.

அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறினார்கள்.

من رأى من أميره شيئاً فليصبر عليه، فإنه من فارق الجماعة شبراً فمات إلاّ مات ميتة جاهلية

'எவரேனும் தமது அமீரிடம் (தான் விரும்பாதவற்றை) காணுவாரேயானால் அப்போது அவர் பொறுமையாக இருக்கட்டும் ஏனெனில் அறிந்துகொள்ளுங்கள். எவரேனும் ஒருவர் ஒருமுழம் அளவு ஜமாஅத்திடமிருந்து பிரிந்து சென்றநிலையில் மரணம் அடைவாரேயானால் நிச்சயமாக அவர் ஜாஹிலியாவில் மரணம் அடைந்தவர் ஆவார்."

இப்ன் அப்பாஸ்(ரலி) அறிவித்துள்ள மற்றொரு ஹதீஸீல் அறிவிக்கப்பட்டிருப்பதாவது.

அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறினார்கள்.

من كره من أميره شيئاً فليصبر عليه، فإنه ليس أحد من الناس خرج من السلطان شبراً فمات عليه إلا مات ميتة جاهلية

'எவரேனும் தமது அமீரிடம் அவர் விரும்பாதவற்றை காணுவாரேயானால் அப்போது அவர் பொறுமையாக இருக்கட்டும் ஏனெனில் அறிந்துகொள்ளுங்கள். எவரேனும் ஒருவர் இஸ்லாத்தின் அதிகாரத்திலிருந்து (சுல்தான்) ஒருமுழம் அளவு விலகிய நிலையில் மரணம் அடைவாரேயானால் நிச்சயமாக அவர் ஜாஹிலியா மரணத்தில் மரணம் அடைந்தவர் ஆவார்."


இந்த இரண்டு ஹதீஸ்களும் முஸ்லிம்களின் ஜமாஅத்தையும் இஸ்லாத்தின் அதிகார அமைப்பான கிலாபத்தையும் பற்றிப்பிடித்துக் கொள்ளவேண்டும் என்ற கட்டளையை சுட்டிக்காட்டுகின்றன.

பைஅத் கொடுக்கும் விஷயத்தில் முஸ்லிமல்லாதவர்களுக்கு எந்தவிதமான உரிமையும் கிடையாது என்பதோடு அது அவர்கள் மீதுள்ள கடமையாகவுமில்லை, ஏனெனில் அது இஸ்லாத்தின் மீது செய்யப்படும் பைஅத்தாகவும் அல்லாஹ்(சுபு)வின் வேதத்தின் மீதும் அவனுடைய தூதரின்(ஸல்) சுன்னாவின் மீதும் செய்யப்படும் பைஅத்தாகவும் இருக்கிறது, இதற்கு இஸ்லாத்தின் மீதும் அல்லாஹ்(சுபு)வின் வேதத்தின் மீதும் அவனுடைய தூதரின்(ஸல்) சுன்னா மீதும் ஈமான் கொண்டிருக்கவேண்டும் என்பது கட்டாயமாகும், ஆகவே முஸ்லிமல்லாத ஒருவர் ஆட்சியமைப்பில் பங்கு கொள்வதற்கோ அல்லது ஆட்சியாளர்களை தேர்வுசெய்வதற்கோ அனுமதி கிடையாது. ஏனெனில் முஸ்லிம்கள் மீது அவர்களுக்கு எந்தவிதமான அதிகாரமும் கிடையாது என்பதன் அடிப்படையில் பைஅத் கொடுக்கும் விஷயத்தில் அவர்களுக்கு எந்தவிதமான பங்களிப்பும் இல்லை.

SOURCES FROM WARMCALL.BLOGSPOT.COM