Showing posts with label பொருளாதாரம். Show all posts
Showing posts with label பொருளாதாரம். Show all posts

Jul 16, 2016

பிரித்தானியாவில் நடந்த ஆடம்பரமான திருமணம்.

முதலாளித்துவ பொருளாதார ஒழுங்கில் வறுமையை ஒழிப்பதற்கு....ஒரு நாட்டின் அபிவிருத்தியின் அடைவுமட்டமாகவும் நாட்டின் மொத்த உற்பத்தியை அதிகரித்தல்(GDP) தீர்வாக ஊட்டப்படுகிறது.

பிரித்தானியாவில் நடந்த ஆடம்பரமான திருமணம்.


இரு செல்ல பிராணியான நாய்களுக்கு ஆயிரம் இரண்டாயிரம் ரூபா பெறுமதியில் அல்ல , 40 இலட்சத்துக்கும் (20,150 பவுண்ட்ஸ்) அதிகமான ரூபா செலவில் திருமணம் நடாத்தப்பட்டது. இதில் மலர் வலயம் மற்றும் அலங்காரம் போன்றவற்றிற்கு 8 இலட்சமும் ஆபரணங்களுக்காக இரண்டரை இலட்சமும் செலவிடப்பட்டது .

இதே பிரித்தானியாவில் தான் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் இருப்பதற்கு இல்லறம் இல்லாத நிலையிலும் இருபத்தைந்து இலட்சத்திற்கு அதிகமான சிறுவர்கள் பாதுகப்பற்ற வீட்டிலும் வசித்து வருகின்றனர்.

இது “மை கார் மை பெட்ரோல்” பொருளாதாரம்.யாரும் விமர்சிக்க முடியாது. ஆனால் கவனிக்க வேண்டிய விடயம் இன்று வறுமையை ஒழிப்பதற்காகவும் ஒரு நாட்டின் அபிவிருத்தியின் அடைவுமட்டமாகவும் நாட்டின் மொத்த உற்பத்தியை அதிகரித்தல் தீர்வாக ஊட்டப்படுகிறது.

இத்தீர்வு எத்தகை உண்மையானது!

பிரித்தானியாவில் மாத்திரம் வறியோர் செல்வந்தர்களுக்கான வருமான இடைவெளி முப்பது வருடங்களில் இரு மடங்காக அதிகரித்துள்ளது . ஆனால் அதேவேளை 2012 இல் உலகின் முதன் நூறு செல்வந்தர்களின் மொத்த சொத்தின் பெறுமதி 240 பில்லியனாக காணப்பட்டவை 2013 இல் 1.9 டிரில்லியனாக அதிகரித்தது.
தீர்வு என்ன? இதனால் தான் இஸ்லாத்தில் வருமான பங்கீடே முதன்மை பொருளாதார பிரச்சினையாக நோக்கப்படுகிறது. 


இதனை எவ்வாறு அடையலாம்? 
1.ஸகாத் 
2,வட்டியற்ற பொருளாதரம் 
3.வளங்கள் / சொத்துக்கள் உரிமை கொள்ளும் விதம். 

...........(தொடரும்)

From Mohamed Imran

Jul 3, 2016

உலக நிதி நெருக்கடிக்கு பிறகு கிரேக்கத்தை விட்டு வெளியேறிய அரை மில்லியன் மக்கள்

2008 ஆம் ஆண்டு உலக நிதி நெருக்கடி ஏற்பட்ட பிறகு சுமார் அரை மில்லியன் (5 லட்சம்) மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கிரேக்க வங்கி வெளியிட்ட தரவுகள் காட்டுகின்றன.

ஆரம்பத்தில் சிறிய எண்ணிக்கையில் தொடங்கிய , வெளியேறியோர் எண்ணிக்கை 2013 ஆம் ஆண்டு 100 ஆயிரத்திற்கு (ஒரு லட்சம்) மேலானோராக அதிகரித்து, தொடர்ந்த ஆண்டுகளில் மேலும் வளர்ச்சி கண்டது.

ஜெர்மனி, பிரிட்டன் மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகள் உள்பட வெளிநாடுகளில் நல்ல வாய்ப்புகளை பெற்று, பலரும் வெளியேறியுள்ளதாக நம்பப்படுகிறது.

கிரேக்கத்தின் வேலையில்லா திண்டாட்டம் ஏறக்குறைய 25 சதவீதமாக இருக்கிறது. இளைஞர்களின் மத்தியில் இந்த சதவீதம் இன்னும் அதிமாகும்.

செய்தி BBC

எமது சரியான பார்வை:

தனி மனிதனின் தேவையைக் கணக்கில் கொள்ளாமல், சமதர்மத்தை நிலைநிறுத்துவதுபற்றியும், மொத்த தேசிய உற்பத்தியை பெருக்குவது பற்றியும் மட்டுமே குடியேற்றநாடுகள் வலியுறுத்துகின்றன. இதன் தொடர்பாக, மேலை நாடுகள், பொருளாதாரத்தைப்பற்றி புத்தகங்கள் பலவற்றை பிரசுரித்து, தொழில் முன்னேற்றம் கண்ட தங்களுடன் சரிநிலையை அடைய, இஸ்லாமிய நாடுகள் தங்களுடைய பொருளாதாரக் கொள்கைகளையே பின்பற்ற வேண்டும் என்றும் எச்சரிக்கின்றன.

மொத்த தேசிய உற்பத்தியை பெருக்கி-அதன் அடிப்படையில் பொருளாதாரத்தை அமைக்கும் வழிமுறையும் சமதர்மக் கொள்கையும், சமூக நீதி திட்டமும், சமூகத்திற்கு எவ்வித பயனும்தராமல் உண்மை நிலையிலிருந்து விலகியே நிற்கின்றன. சமூக நீதி கொள்கையானது, முதலாளித்துவக்கொள்கைக்கு கைகொடுக்குமெயன்றி வேறொரு பயனும் அளிக்காது என்பதை சம கால வரலாறு கூறிநிற்கின்றது.

இஸ்லாமிய சட்டங்களை மாற்ற முடியாத காரணத்தினாலும், அவை மட்டுமே மனிதசமூகம் உயர வழி கோலும் என்பதாலும், முஸ்லீம்கள் நிலையற்ற அல்லது பிற நாட்டைச்சார்ந்த பொருளாதாரத்திட்டத்தை பின்பற்றுவது உபயோகமற்றதாகும்.

இஸ்லாமியர்களின்பொருளாதார அமைப்பு திருக்குர்ஆன் கூறும் ஷரியத் சட்டப்படியும், சுன்னாஹ் எனப்படும்நபிகளாரின்(ஸல்) வழிகாட்டுதலின் படியும், சஹாபாக்களின் ஒருங்கிணைந்த தீர்வின்படியும்(இஜ்மா-அஸ்-ஸஹாபா), கியாஸ்(ஒப்புநோக்குதல்) படியும் அமைக்கப்பட்டிருக்கவேண்டும்.

இந்த அடிப்படையில் பின்வரும் நான்கு கருத்துக்கள் அமைந்திருக்கின்றது.

1. ஒரு தனி நபருக்கு பூர்த்தி செய்யப்பட வேண்டிய தனிப்பட்ட தேவைகள் உண்டு எனஇஸ்லாம் கருதுகிறது.


2. ஒரு மனிதன் வாழ அடிப்படைத் தேவைகள் பூர்த்திசெய்யப்படவேண்டும் என இஸ்லாம்கருதுகிறது.


3. தொழில் சுதந்திரத்தையும், வேலையில் யாவரும் சமம் என்ற நிலையையும்,இறைவனின் வளங்களிலிருந்து பயனடைதலின் மூலம் பெற முடியும் என இஸ்லாம்கருதுகிறது.


4. உறவு முறைகளின் முக்கியத்துவத்தையும், மனிதர்களிடையே உள்ள தொடர்பையும்இஸ்லாம் இதற்காக நிர்வகிக்கிறது.


ஆகவே, மனிதன் உழைப்பதின் மூலமும், மனிதர்களிடையே உள்ள தொடர்பைஉறுதிப்படுத்துவதின் வாயிலாகவும், தனி நபரின் முக்கியத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளவும், அவனுடைய வாழக்கைத் தரத்தை உயர்த்தவும், அவனை முன்னேற்றமடையச்செய்யவும் இஸ்லாம் வழி சொல்கிறது.

எனவே உற்பத்தியைப் பெருக்குவதோ, சமதர்மக்கொள்கையோ, சமூக நீதி திட்டமோ-இவை அனைத்தும் இஸ்லாமிய பொருளாதாரக் கொள்கையாகாது. முஸ்லிம்உம்மாவிடையே, அல்லாஹ்வின் வளங்களை சமமாக பங்கிடுதலின் மூலமாக, ஒவ்வொருமனிதனின் அடிப்படைத் தேவைகளையும், அதிகப்படியான தேவைகளையும் பூர்த்தி செய்யமுடியும் என இஸ்லாமிய பொருளாதாரக் கொள்கை கூறுகிறது.


ஆப்பிள் சந்தை versus பங்குச்சந்தை


வாங்கிய ஐந்து ஆப்பிள்கள் இன்னும் கடைக்கு வந்து சேரவில்லை இதற்குல் ஐந்து பற்று சீட்டுக்களை தயாரித்து விநியோகம் செய்கிறார் வியாபாரி. ஒவ்வொன்றும் 50 ரூபா அளவில் இதனை 5 பேர் கொள்வனவு செய்கின்றனர்.

இப்போது என்ன நடக்கிறது என்று பார்ப்போம்
1.இவ் ஐந்து பேருக்கும் சொல்லப்படுகிறது இரண்டு மாதங்களில் இவை வந்தடைந்தவுடன் 80 ரூபா பெறுமதியில் விற்கப்படும் என்று!

2.இதனை அறிந்து சிலர் 65 ரூபாய்க்கு வாங்க விருப்பம் தெரிவிக்கவே ஐந்து பேரில் இருவர் உடனே விற்று விடுகின்றனர்.

3.தகவல் ஒன்று வெளிவருகிறது 2 மாதங்களில் ஆப்பிள் இற்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் என்றும் ஒரு ஆப்பிள் 120 ரூபா அளவில் விற்பனை செய்யப்படும் என்றும் உத்தேசிக்கப்படுகிரது. உடனே சிலர் 100 ரூபா கொடுத்து அனைத்து சிட்டுக்கலையும் வாங்கி கொண்டனர்.

4.இப்போது இன்னும் ஒரு தகவல் வெளிவருகின்றது ஆப்பிள் உண்ணுபவர்களின் எண்ணிக்கை இரண்டு மாதங்களில் இரட்டிப்பாகும் என்று ! இப்போது சிலர் 200ரூபா படி வாங்கி கொள்கின்றன்ர்.

இறுதியாக இப்போது ஆப்பிள் வந்தடைகிறது ஒரே ஒரு ஆப்பிள் மாத்திரமே உகந்ததாக உள்ளது மற்ற அனைத்தும் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதன் உண்மை பெறுமதி தற்போது 35 ரூபாயே எனக்கொள்வோம்.

200 ரூபாய் படி ஐந்து சிட்டுக்களையும் வாங்கியவர்களின் நிலை என்ன?

இந்த ஆப்பிள் சந்தையை போன்றதுதான் தற்போது உத்தேச அடிப்படையில் இயங்கும் பல நிதிச்சந்தைகள், இதில் பங்குச்சந்தையும் மிக முக்கியமானது!

அண்மையில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகிய செய்தி உலக பங்கு சந்தையில் ஒரே நாளில் ஏற்படுத்திய நட்டம் எவ்வளவு தெரியுமா? 12 00 000 000 000 டாலர்கள்.

இதற்கு முன்னரும் ஏற்பட்ட உலக நிதி நெருக்கடிக்கு இப்படி உத்தேச அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட bubbles ஏ காரணம்!

உத்தேச வியாபாரம் தொடர்பான இஸ்லாமிய பார்வை பின்வருமாறு

1.இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
”நபி(ஸல்) அவர்கள் பிறக்காத உயிரினத்தை விற்பதற்குத் தடை விதித்தார்கள். அறியாமைக் கால மக்கள் இத்தகைய வியாபாரம் செய்து வந்தனர்! ”இந்த ஒட்டகம் குட்டி போட்டு, அந்தக் குட்டிக்குப் பிறக்கும் குட்டியை நான் வாங்கிக் கொள்கிறேன்! (அல்லது விற்கிறேன்!)” என்று செய்யப்படும் வியாபாரமே இது!”

2. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
”ஒருவர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போது தாம் வியாபாரம் செய்வதற்காக எவரும் குறுக்கிடக் கூடாது; மேலும் விற்பனைப் பொருள்கள் சந்தைக்கு வந்து இறங்கு முன் வாங்காதீர்கள்.”
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

இந்த முதலாளித்துவ ஒழுங்கில் பெரும்பாலான வியாபாரம் உத்தேச அடிப்படை யிலே காணப்படுகிறது இது பற்றிய தெளிவு நம்மிடயே குறைவாகவே உள்ளது.

சிறிய முதலீட்டாளர்கலின் பணத்தை பண முதலைகள் உறிஞ்சுவதற்கான தளமாகவே இது இருக்கின்றது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!!

முதலாளித்துவத்தின் கோரமுகம்...? ஓர் ஆய்வுக் கண்ணோட்டம்!


"ஒரு நாட்டை வெற்றி கொண்டு அடிமை படுத்த இரண்டு வழிகள் உண்டு ஒன்று வாளினைக்கொண்டு மற்றையது கடனைக்கொண்டு” – ஜான் ஆடம்ஸ்.

ஆனால் கடந்த அரசாங்கத்தை விட தமது அரசு பல நாடுகளில் அதிலும் IMF போன்ற நிதி நிறுவனங்களின் இருந்து கடனை பெற்று கொண்டதை பாரிய வெற்றியாக மார்பு தட்டி கொள்கிறது இந்த நல்லாட்சி. 

அபிவிருத்திக்கு கடன் தேவை தானே என்று நினைக்கலாம் ஆனல் நான் சொல்லப்போகின்ற விடயம் எவ்வாறு இந்த அபிவிருத்திக் கடன் இந்தோனேசியாவை கடனில் மூழ்கடித்தது என்பதே!

இந்த விடயம் 1960களில் இருந்து ஆரம்பமாகின்றது. எண்ணெய் , தங்கம் , திறமையான மனித வளம் , என்பன இருந்தும் 70 மில்லியன் மக்கள் வறுமைக்கு தள்ளப்பட்டிருந்தனர் .வருமான இடைவெளி பாரிய அளவில் அதிகரித்தது அதாவது சாதரணமான ஊதியம் பார்க்கும் ஒருவர் அங்குள்ள செல்வந்தர் போல திருமணம் செய்ய வேண்டுமாயின் 400 வருடங்கள் ஊதியம் பார்க்க வேண்டும் “ரிசப்ஷன் கோல்” செலவை மாத்திரம் ஈடு செய்ய!

GAP,NIKE,ADIDAS போன்ற நிறுவனங்களின் ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்யும் ஊழியர்களான பெரும்பாலான பெண்கள் அதிக உஷ்ணம் உள்ள அதாவது 42 செல்சியத்திலும் அதிக வெப்பமான தொழிற்சாலையில் சில நேரங்களில் 24 மணித்தியாலங்களிற்கு அதிகமாக வேலை செய்து பெரும் ஊதியம் எவ்வளவு தெரியுமா? அவர்கள் உற்பத்தி செய்யும் பாதணி எட்டு பவுண்ட்ஸ் எனின் அவர்களுக்கு கிடைப்பது வெறும் நான்கு சதமே! ஆனால் கம்பனியின் இலாபமோ 138 கோடி அமெரிக்க டாலர்களை ஈட்டியது.

இது இவ்வாறு இருக்க அமெரிக்க மற்றும் பிரித்தானியா தங்களது வணிகத்திற்கு சிறந்த சந்தையாக இதனை கண்டது இதனால் இவர்கள் நலன் பேணும் ஊழல் மிக்க அரசை ஆட்சிக்கு அமர்த்தி IMF மற்றும் World Bank மூலம் வெளிநாட்டு உதவி என்ற பேரில் பல பில்லியன் அமரிக்க டாலர்களை கடனாக வழங்கி ஆட்சியாளனின் பையை நிறைத்தது.ஆனல் தங்களுக்கு எந்த நலனுமே கிடைக்காத இந்த பணத்திற்கு இன்றும் மக்கள் வரிச்சுமயை தாங்கி கொண்டுதான் இருகின்றனர் .ஜனநாயகம் பேசும் நாடுகள் இவர்களின் கடன் விலக்களிப்பை சிந்திப்பதே கிடையாது ஆனால் வங்கொரோத்து அடையும் வங்கிகளுக்கு பல டிரில்லியன் டாலர்களை உதவிக்கரமாக நீட்டுகிறது. இந்த ஜனநாயகத்தை வாங்க இந்தோனேசியாவிடம் வசதி இல்லை என்றே கூறவேண்டும்.

இந்த கடனை பெற்றுக்கொள்ள கட்டமைப்பு மாற்றம் என்ற பேரில் வறிய மக்களுக்கான சமூக செலவினை குறைத்தது. இது வறியோர்களை மேலும் வறியோராக்கியது எந்தளவுக்கு என்றால் மூன்று வேலை உணவை உண்ணும் சிலர் இரண்டு வேலை உணவைதான் பூர்த்திய செய்ய முடிந்தது ஆனால் இதனை தனது வணிகத்திற்கான வாய்ப்பாக குறைந்த ஊதியம் வழங்கி ஊழியர்களை வேலைக்கு அமர்த்தியது.

இதுமட்டுமா ஒரே நாளில் நிதி சந்தையினை ஊழல் செய்து ஒரு டாலர் 2500 ரூபியா இருந்தததை ஒரு டாலர் 10000 ரூபியா என்றளவுக்கு நாணய மதிப்பிறக்கம் செய்ததது இது உலகமயமாக்கலின் திறந்த நிதிச் சந்தை என்ற அடிப்படையில் செய்யப்பட்டது. இது மேற்கு கம்பனிகளின் ஏழை பணியாலர்களின் ஊதியத்தை ஒரே நாளில் 25% ஆள் குறைத்தது . இதன் தாக்கம் இன்றும் இந்தோனேசியாவில் -மேற்கு சுமாத்திராவில் மாத்திரம் 32000 சிறுவர்கள் போதிய சத்து இன்மை குறைபாட்டினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.அத்தோடு 1.3 மில்லியன் சிறுவர்கள் வறுமையின் காரணமாக பாடசாலைக்கு செல்ல முடியாத நிலை !

இவ்வாறு கடன் மூலம் அடிமைப்படுத்தப்பட்ட பல நாடுகள் இன்றும் நிமிர முடியாத நிலையிலேயே காணப்படுகிறது .


இலாபத்தை மாத்திரம் நலன் என்ற அடிப்படைடியில் கட்டப்பட்ட முதலாளித்துவ ஒழுங்கில் இது ஒன்றும் வியத்தகு விடயமல்ல தனது பை பல பில்லியன்களால் நிரம்ப வேண்டுமானால் இதற்காக பலர் பட்டணியில் கிடப்பது ஒன்றும் பெரிதல்ல என்ற இவர்களது கொள்கை எத்தகைய ஜாகிலியம்.

From Mohamed Imran

Nov 2, 2015

நானும் ஒரு பொருளாதார அடியாள் இறுதி பகுதி

 
மொத்த தேசிய உற்பத்தி (Gross National Product-GNP)

மொத்த தேசிய உற்பத்தி (Gross National Product-GNP) என்பது ஓர் ஆண்டில் ஒரு நாட்டினரால் உற்பத்தி செய்யப்பட்ட பணிகள் அல்லது பண்டங்களின் மொத்த இறுதி சந்தை மதிப்பாகும்.

 
மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product - GDP)

ஒரு நாட்டில் ஒராண்டுக்குள் உற்பத்தியான பொருள் மற்றும் சேவைகளின் மொத்த பண மதிப்பே அதன் ஜிடிபியாகும் (Gross Domestic Product - GDP).


நாம் அடிக்கடி தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்களில் கேள்விப்படும் இந்த இரண்டு வருத்தைகளும் மக்களை ஏமாற்றும் ஒரு கருவிகாக தான் பயன்படுத்தபடுகிறது.


இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் வருகிற 2017ம் ஆண்டில் 8 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி கணிப்பு வெளியிட்டுள்ளது. (ஏப்ரல் 14,2015 dailythanthi)


வாக்குமூலம் - "மொத்த தேசிய உற்பத்தி என்பது எப்படி ஏமாற்றும் தன்மை கொண்டது என்பது குறித்து நானும் க்ளேடினும் வெளிப்படையாக பேசிக் கொள்வோம். பெரும்பாலான மக்கள் வறுமையின் கோரப்பிடியில் சிக்கி இருந்தாலும், ஒரே ஒருவர் லாபமடைந்தாலும் கூட நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி வளர்சியடையக்கூடும். பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாவார்கள், ஏழைகள் மேலும் எழைகளாவார்கள். ஆனால் புள்ளி விவரங்கள் பொருளாதாரம் வளர்ச்சியடைந்ததாக காட்டும்".


வாக்குமூலம் - “ஒவ்வொரு பன்னாட்டு நிறுவனத்திலும், அது காலணிகளை உற்பத்தி செய்து வந்தாலும் சரி, விளையாட்டு பொருட்களைத் தயாரித்து வந்தாலும் சரி, கனரக இயந்திரங்களை உருவாக்கி வந்தாலும் சரி அவையனைத்தும் தங்களுக்கென்று பொருளாதார அடியாட்களைக் கொண்டுள்ளன. பொருளாதார அடியாட்களின் படை அணிவகுத்துச் செல்லத் தொடங்கி விட்டது. அது இந்த பூமி முழுவதும், மிக விரைவாகச் சுற்றி வளைத்து வருகிறது. வணிகர்கள் போல் உடையணிந்து மரியாதைக்குரியவர்கள் ஆகிவிட்டார்கள். நியூயார்க், சிகாகோ, சான் பிரான்சிஸ்கோ, இலண்டன், டோக்கியோவில் உள்ள நிறுவனங்களின் தலைமையகங்களிலிருந்து வரும் ஆண்களும், பெண்களும் ஒவ்வொரு கண்டத்திலும் ஊடுருவிப் பரவிவருகின்றார்கள். அவர்கள் ஊழல் அரசியல்வாதிகளை, நிறுவன அதிகாரவர்க்கத்தின் அடிமைகள் ஆக்குகிறார்கள். அவர்களைக் கொண்டு நாடு முழுவதற்கும் கடிவாளமிடுகிறார்கள். மனிதனின் இரத்தத்தையே உறிஞ்சி எடுக்கும் கடின உழைப்புத் தொழிற்சாலைகளுக்குத் தங்களைத் தாங்களே விற்று கொள்ளும்படி பாவப்பட்ட மக்களைத் தூண்டுகிறார்கள்."




உலகப்பேரரசு அது சுயநலமிக்கது. தனக்கு மட்டுமே சேவை புரியக்கூடியது. வணிகத்தை மட்டுமே, இலாபத்தை மட்டுமே அடிப்படையாகக்கொண்டது. தனக்கு முன்பிருந்த எல்லாப் பேரரசுகளையும் போலவே, இயற்கை வளங்களைக் கபளீகரம் செய்யவும், கண்ணில் காணும் அனைத்தையும் கைப்பற்றிக் கொள்ளவும் துடித்துக்கொண்டிருக்கிறது. அதன் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களின் காலடியில் மேலும், மேலும் அதிக செல்வத்தைக் கொட்ட தேவையான அத்தனை வழிமுறைகளையும் பயன்படுத்தக்கூடியது உலகப் பேரரசு.


இஸ்லாத்திற்கு எதிரான யுத்தம்:

அடுத்த நூற்றாண்டில் நடக்கப் போகும் உண்மையான யுத்தம் கம்யூனிஸ்டுகளுக்கும், முதலாளித்துவாதிகளுக்கும் இடையேயானதாக இருக்காது. கிறிஸ்துவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையேயானதாகத்தான் இருக்கும்.

                           ஆர்னால்டு டோய்ன் பீ (Toyn Bee)
                          (Civilization on Trial and world and west)

மேற்கு உலகம், குறிப்பாக அதற்குத் தலைமை வகிக்கும் அமெரிக்கா உலகம் முழுவதையும் அடக்கியாள உறுதிபூண்டுள்ளது. இதுவரை வரலாறு காணாத மாபெரும் பேரரசாகத் தன்னை மாற்றிக் கொள்ள முயன்று வருகிறது. இதனால் தான் அமெரிக்க மற்ற நாடுகளில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வருகிக்கிறது. அதற்கு முதலாளித்துவ கொள்கையை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறது. இந்த முதலாளித்துவ கொள்கைக்கு இன்று பெரும் எதிரகாக இருப்பது இஸ்லாம மட்டுமே. வளந்து வரும் இஸ்லாமும், இஸ்லாமிய தலைமைக்கான (கிலாஃபத்) கோஷம்களும் அவர்களின் பேரரசு பேரரசை களைத்துக் கொண்டு இருக்கிறது. அவர்களின் அச்சபடு அவர்களின் செயல்பாடுகளில் தெரிக்கிறது. முதலாளித்துவ சித்தாந்தம் 2008ம் ஏற்பட்ட பொருளாதார சரிவின் முலம் அது இன்னும் தன்னால் தலை துக்க முடியாமல் இருக்கிறது. இவர்கள் எத்தனை  பொருளாதார அடியாள்களை கொண்டு தனது பொருளாதாரத்தை மேம்படுத்துனாலும் சரியே. 
 
முதலாளித்துவ பொருளாதாரத்தின் தற்போதைய நிலையை உற்றுநோக்கிக் கொண்டிருப்பவர்கள் அது அழிவை சந்தித்துவிட்டது என்பதை அல்லது அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்வார்கள், அதை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காக முதலாளித்துவவாதிகள் மேற்கொண்டிருக்கும் முயற்சிகள் அனைத்தும் தற்காலிகமான நிவாரணத்தை மட்டுமே ஏற்படுத்தக்கூடும் ஏனெனில் முதலாளித்துவ பொருளாதாரம் நொருங்கிப் போனதற்கு காரணம் அது தவறான அடித்தளத்தின் மீது கட்டமைக்கப் பட்டிருக்கிறது என்பதுதான், மேலோட்டமான சீரமைப்புகளால் அதை ஒருபோதும் காப்பாற்றமுடியாது, முதலாளித்துவ பொருளாதாரத்தின் அடித்தளம் தவறானது.

தவறான பொருளாதாரக் கொள்கையின் விளைவாக அன்று கம்யூனிஸ அரசு வீழ்ந்தது போல தவறான பொருளாதாரக் கொள்கையின் விளைவாக இன்று முதலாளித்துவ அரசுகள் வீழ்ந்து கொண்டிருக்கின்றன.


தீர்வு:

எவ்வித சந்தேகமும் இல்லை. இந்தத் துயரங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் அழிவுகளுக்கும் ஒரே மாற்றுத் தீர்வு இஸ்லாம் மட்டுமே ஏனெனில் பொருளாதாரத்தில் அழிவுகளை ஏற்படுத்தும் காரணிகள் அனைத்தையும் இஸ்லாம் மட்டுமே தடை செய்திருக்கிறது. இஸ்லாமிய பொருளாதாரக் கொள்கை மட்டுமே சிறந்த ஒரே மாற்று வழியாக இருக்கிறது. இஸ்லாமிய பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்த இஸ்லாமிய தலைமை(கிலாஃபத்) வேண்டும். இஸ்லாமிய தலைமையில் உள்ள பொருளாதாரக் கொள்கையில் வெளிநாட்டவர் தலையீடு இருக்காது. ஆகையால் ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் இங்கு அவசியம் இருக்காது.

இஸ்லாம் மாத்திரமே விமோசணம்.
இன்ஷா அல்லாஹ்.


முற்றும்

நாசிக். S
DXB

Oct 30, 2015

நானும் ஒரு பொருளாதார அடியாள் பகுதி-1

“பொருளாதார அடியாட்கள் (Economic Hit Man) என்று அழைக்கப்படுவார் பல்லாயிரம் கோடி டாலர் மதிப்புள்ள மோசடிகளில் ஈடுபாடு வருபவர்கள். உலகிலுள்ள ஒவ்வொரு நாட்டையும் கொள்ளையிட்டு வருபவர்கள். இந்த கொள்ளையடிக்கும் பணிக்காக அவர்களுக்கு பெரும்பணம் ஊதியமாக அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் பொருளாதார நிபுணர்கள். உலக வங்கி (World Bank), சர்வதேச வளர்ச்சிக்கான அமரிக்க ஐக்கிய நாட்டு நிறுவனம் (US Agency for international Development USAID), மற்றும் இவற்றைப் போன்ற பன்னாட்டு நிதி “உதவி” அமைப்புகளில் குவிந்திருக்கும் பணத்தை மாபெரும் பன்னாட்டு நிறுவனங்களின் பணப்பெட்டிகளுக்கும், இப்பூமியின் இயற்கை வளங்களைத் தங்கள் பிடியில் வைத்திருக்கும் சில பணம் படைத்த குடும்பங்களின் சட்டைப் பைகளுக்கும் கொண்டு சேர்ப்பதுதான் இவர்களின் வேலை.

மோசடியான நிதி அறிக்கைகள், தேர்தல் முறைகேடுகள், லஞ்சம், மிரட்டிப்பணம் பறிப்பது, பாலியல், கொலை முதலியன இவர்களுடைய கருவிகள் ஆகும். பேராரசு எவ்வளவு பழமையானதோ அதேயளவுக்கு இவர்களது தந்திரங்களும் பழமையானவைதான். ஆனால் உலகமயமாக்கல் முழுவிச்சில் நடைபெற்றுவரும் இன்றைய உலகில் பொருளாதார அடியாட்களின் தந்திரங்கள் புதிய, பயங்கரமான பரிணாமங்களை எட்டியுள்ளன.

நானும் ஒரு பொருளாதார அடியாளாக இருந்தவன்தான்.

- ஜான் பெர்கின்ஸ் - 'ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்'

உங்களுக்கு உலகை வலம் வர விருப்பமிருந்தால், கரடு முரடான பயணங்களுக்கு நீங்கள் தயாராக இருந்தால், உலக நாடுகளின் இயக்கத்தை எக்ஸ்ரே' கண் கொண்டு காணத் துடித்தால், ஏகாதிபத்தியத்தின் புற முதுகைக் காண ஆவலிருந்தால் - இந்தக் கட்டுரை தொடருந்து வாசிங்கள்.



"நாட்டினை சீரமைப்பதற்கு கடன் கொடுக்கிறோம். அதன் மூலம் இந்த திட்டங்களை நிறைவேற்றினால் உங்கள் நாட்டின் பொருளாதாரம் இத்தனை சதவிகிதம் உயரும்.." என்று புள்ளிவிவரங்களின் மூலம் அதிகாரத்தில் இருப்பவர்களை சம்மதிக்கச் செய்வதே இந்த பொருளாதார அடியாட்களின் வேலை. அவ்வாறு சம்மதிக்காத அதிகாரிகளையும், அரசாங்கத்தையும் மற்றவர்களை கலகம் மற்றும் புரட்சி செய்ய தூண்டி விட்டு அந்த இடத்தில் தனக்கு சாதகமானவர்களை அமர்த்தி தான் நினைத்தை அமெரிக்கா அரசாங்கம் நிறைவேற்றிக் கொள்ளும். இந்த பொருளாதார அடியாட்கள் தனியார் நிறுவனங்களுக்காகவே பணிபுரிவார்கள். ஆனால் அந்த தனியார் நிறுவனங்கள் அரசாங்கத்தின் மறைமுக கூலிகள். ஒரு நாட்டியில் பொருளாதார அடியாட்கள் தோல்வியடைந்தால் சி.ஐ.ஏ ( C.I.A ) வால் இயக்கப்படும் இன்னொரு வகையான அடியாட்கள் “குள்ளநரி” களை கொண்டு அமெரிக்க செய்து முடிக்கும்.

ஈக்வடார், பனாமா, சவுதி அரேபியா, ஈரான், ஈராக், கொலம்பியா, வெனிசுலா என்று எண்ணெய் வள நாடுகளை கொள்ளை அடிக்க அமெரிக்கா செய்த குள்ளநரி வேலைகளைலும் அவர்களுக்கு ஒத்துழைக்காத பனாமாவின் ஜெனரல் டோரிஜோஸ், ஈக்வடாரின் பிரசிடெண்ட் ரோல்டோஸ் போன்றவர்கள் விமான விபத்தில் இறந்தார்கள். நிற்க. கொல்லபட்டார்கள். இது போன்ற வளைகுடா நாடுகளில் நடக்கும் போர்களும்,ஆட்சி மாற்றும்கலும் அமெரிக்காவின் எண்ணெய் அரசியல் பற்றிய புரியதலை ஏற்படுத்துகிறது.

நாசிக். S
DXB

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)