Showing posts with label துருக்கி. Show all posts
Showing posts with label துருக்கி. Show all posts

Aug 8, 2016

துருக்கி அரசை கவிழ்க்க நடந்த ராணுவ சதிப்புரட்சியின் அரசியல்


ஜூலை 17 ஞாயிறு அன்று ராணுவ சதிப்புரட்சியானது அதிகாரப்பூர்வமாக துருக்கி நேரப்படி மாலை 4.30 மணிக்கு முடிவுற்றது என துருக்கி ராணுவப்படை ஒரு செய்தி வெளியிட்டது. இந்த ராணுவ சதிப்புரட்சியை செயலிழக்க செய்ய உதவி புரிந்த மக்களின் ஒத்துழைப்பிற்கு இந்த செய்தி குறிப்பின் மூலம் நன்றியையும் தெரிவித்தது. 

ரெசெப் தாய்யிப் எர்துகான் அரசை கவிழ்க்கும் முயற்சியில் இஸ்தான்புல் மற்றும் அங்காரா நகரங்களில் ராணுவ பீரங்கிகள் மற்றும் ராணுவ விமானங்கள் சீறி பாய்ந்ததை பார்த்து பெருவாரியான உலகம் ஆச்சரியத்தில் ஆழ்ந்தது. தங்களின் தரப்பிலிருந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த ராணுவ சதிப்புரட்சியை மேற்கொண்டவர்கள் முக்கிய நகரங்களில் படையெடுப்பு நடத்தி அதை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயன்றனர். 

ஆனால் எர்துகான் கைப்பேசி மூலம் தனது ஆதரவாளர்களை நோக்கி தெருக்களில் இறங்கி நாட்டை மீட்டெடுங்கள் என்று செய்தி அனுப்பிய உடன் பெருங்கூட்டத்தினர் வீதிகளில் பொங்கி எழுந்ததால் இந்த புரட்சியாளர்களை தடுத்து நிறுத்த முடிந்தது எர்துகான் அதிலிருந்து போர் புரியும் வண்ணமாக வெளிவந்து ராணுவ சதிப்புரட்சியாளர்களை நோக்கி தெளிவாக குறிப்பிட்டார் “இவ்விஷயத்திற்காக அவர்கள் பெரும் விலை கொடுக்கப்போகிறார்கள்” [1] என்று நேரடியாக ஒரு பெரும் தேடுதல் வேட்டை நடத்த தொடங்கியது, 34 ஜெனரல்கள் மற்றும் இன்சிர்லிக் விமானத்தளத்தின் கமான்டர் உட்பட பல்வேறுபட்ட நிலையிலுள்ள 6000 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டனர், 
ஆனால் இதன் களையெடுப்பு இதைவிட மிக ஆழமானது: 

 இந்த ராணுவ புரட்சியை தொடர்ந்து 2,745 துருக்கிய நீதிபதிகள் தங்களது கடமைநிலருந்து நீக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுளனர்.[2] இந்த ராணுவ புரட்சி தோல்வி அடைந்த உடன் எர்துகான் அவரது ஆதரவாளர்களை கொண்ட ஒரு பெரும் கூட்டத்தாருக்கு தனது செயற்திட்டம் மற்றும் நடைபெற்று கொண்டிருக்கும் போக்கு குறித்து விளக்குகையில் இவ்வாறு கூறினார்: “இந்த புரட்சி நமக்கு இறைவனிடமிருந்து வந்த அன்பளிப்பாகும் ஏனெனில் இது நமது ராணுவத்தை தூய்மையாக்க காரணமாக விளங்கும். [3]

1923 ல் துருக்கிய குடியரசு உண்டான போது ராணுவ அதிகாரியான முஸ்தஃபா கமால் உண்மையான ஆட்சியாளராக செயல்பட்டார் அவர் கிலாஃபத்தை நிர்மூலமாக்கிய பின்னர் ராணுவ படையிலிருந்த இஸ்லாமிய ஆதரவாளர்களை அப்புறப்படுத்த தொடங்கினார். முஸ்தஃபா கமாலின் காலத்தில் துருக்கிய ராணுவம் தனது துப்பாக்கிகளை ஐரோப்பிய எதிரிகளை நோக்கி இருந்த நிலையை மாற்றி சொந்த மக்களை நோக்கி திருப்பியது, அவர்களை அவர் அடிப்படைவாதிகளாக நாட்டின் மதசார்பின்மையை எதிர்ப்பவர்களாக கருதினார்.

ராணுவத்தினரை மதசார்பின்மையை முன்னெடுத்து செல்பவர்களாக ஆக்குவதே அவரது நோக்கமாகும். அவரது மரணத்திற்கு பின்னர், ராணுவம் அரசாங்கம், நீதித்துறை மற்றும் ஊடகத்துறையிலுள்ள இதர மதசார்பின்மை வாதிகள் எந்த விலை கொடுத்தேனும் மதசார்மையை பாதுகாப்பது தங்களது தலையாய பொறுப்பாக கருதினர். மிக குறிப்பாக ராணுவம் மதசார்பற்ற துருக்கியின் பாதுகாவலராக தன்னை கருதியது. 

மதசார்பின்மை அல்லது ராணுவத்தின் அதிகாரத்திற்கு அச்சுறுத்தல் எழுந்த அச்சமயங்களில் உதாரணமாக 1960, 1971 மற்றும் 1980 களில் அவர்கள் ராணுவ சதிப்புரட்சி மேற்கொண்டு அதிகாரத்தை தங்கள் வசம் எடுத்து கொண்டனர். 1997 ல் ராணுவம் அரசிடம் ஒரு நீண்ட கோரிக்கை வைத்தது அந்த கோரிக்கைகளை ஏற்று கொள்வதை தவிர அரசிற்கு வேறு வழி இல்லாமல் இருந்தது. அதன் பிரதம மந்திரி, நெக்மெட்டின் எர்பாகன், பல்கலைகழகங்களில் ஹிஜாப் அணிய தடை விதிப்பதற்கு சம்மதித்தார் பின்னர் அது தளர்த்தப்பட்டது, அவரது கட்சி 1998ல் முடக்கப்பட்டது, மேலும் எர்பாகன் அரசியலில் ஈடுபடவதிலிருந்து ஐந்தாண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது. துருக்கி அரசியல் நிலப்பரப்பில் ராணுவம் ஆதிக்கம் செலுத்தி வந்தது மேலும் அது உருவாகிய மதசார்பின்மை அடித்தளத்திற்கும் நாட்டில் அது கொண்டிருக்கும் அதிகப்படியான நிலைக்கும் எந்தவொரு அச்சுறுத்தல் ஏற்படாதவாறு பார்த்து கொள்கிறது.

1998ல் தடைக்கு உள்ளாக்கப்பட்ட போதும், எர்பாகனின் வெல்ஃபேர் கட்சியின் முன்னால் உறுப்பினர்கள் ஏ.கே.பி கட்சியை உருவாக்கினர் அதன் பின்னர் 2002 பொது தேர்தலில் இஸ்தான்புல்லின் முன்னால் மேயரான ரெசெப் தாய்யிப் எர்துகான் தலைமை ஏற்று பெறும் வெற்றிக்கு இட்டு சென்றார். 

21ம் நூற்றாண்டில் நடந்த அனைத்து தேர்தல்களிலும் ஏ.கே.பி பெரும்பான்மை வாக்கு பெற்று வெற்றி பெற்றது இதனை தொடர்ந்து எர்துகானிற்கு ராணுவம் துருக்கியில் வழக்கமாக கொண்டிருக்கும் பங்கை எதிர்க்கும் தைரியத்தை அளித்தது. (2015 ஜூன் மாதம் நடந்த தேர்தலில் பெரும்பான்மை பெறுவதில் ஏற்பட்ட இழப்பு 2015 நவம்பர் மாதம் நடந்த இடைத்தேர்தலில் ஏ.கே.பி மீண்டும் வெற்றி பெற்றது). 

பனிப்போரில் துருக்கி ஈடுபட்டிருந்த போதும், அதன் ராணுவம் பிரித்தானியருடன் நெருங்கிய உறவை மேற்கொண்டு வந்தது மேலும் ஐரோப்பிய கண்டத்துடன் நெருங்கிய உறவை மேற்கொண்டு அது எதிர்காலத்தில் தன்னை ஒரு ஐரோப்பிய நாடாக அடையாளம் காண விரும்பியது, ஆனால் எர்துகான் அமெரிக்காவுடன் உறவை மேற்கொள்ள ஆரம்பித்தார் அது ‘Shared Vision Document’ என்ற பெயரில் துருக்கி மற்றும் அமெரிக்க அரசுகளுக்கு இடையே அப்துல்லாஹ் குல் மற்றும் கான்டொலீசா ரைஸ் ஆகிய இருவரும் 2006 ல் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் மூலம் உச்ச நிலையை அடைந்தது. 

இந்த ஒப்பந்தம் ஒரு பரந்த உலகளாவிய, பிராந்திய, பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளை உள்ளடக்கிய விஷயங்களில் அமெரிக்காவும் துருக்கியும் ஒத்துழைப்பு நல்கும் விதத்தில் அமைந்தது. [4] எர்துகானின் ஆட்சி காலத்தில் அவர் அமெரிக்கா மற்றும் துருக்கி இடையேயான உறவை பலப்படுத்தினார் அது ஈராக்கை நிலைபெற செய்வதாக இருப்பினும், குர்திஸ்தான் பிராந்திய அரசுக்கு (KRG) நிதியுதவி அளிப்பதாக இருப்பினும், இரண்டு நாடுகள் அமைத்து தீர்வு காண்பது எனும் அடிப்படையில் பாலஸ்தீன குழுக்களை பேச்சுவார்த்தைக்கு உட்படுத்துவதாகினும் மற்றும் சிரிய எதிர்ப்பு படைகளில் ஊடுருவது போன்று எர்துகான் அமெரிக்காவின் திட்டங்களுக்கு அடிமட்ட அளவிற்கு உதவி புரிந்துள்ளார். 

ஏ.கே.பி யின் ஒரு குழு ஒன்று கூடுதலில் அமெரிக்காவுடனான தனது செயலை சுட்டிக்காட்டினார்: “உலகெங்கும் உள்ள நாடுகளில் இன்று அமெரிக்கா கொண்டிருக்கும் விருப்பங்களில் துருக்கியும் அதன் பெரும்பாலான விஷயங்களில் விருப்பம் கொண்டுள்ளது. நாம் அப்கானிஸ்தானிலிருந்து ஈராக், பாலஸ்தீனம் மற்றும் பால்கன் நாடுகள் போன்று பரந்த விஷயங்களில் பொதுவான பார்வையை கொண்டுள்ளோம். ஆனால் மிக முக்கியமாக ஒரு வலுவான ஒத்துழைப்பில் நாம் இருக்கின்றோம். மிஸ்டர் ஒபாமா இங்கு வருகை தந்த போது கூறியது போன்று நாம் ஒரு மாதிரி பங்கு கொள்ளும் படி நிலையில் நுழைந்திருக்கிறோம் மேலும் நாம் அதற்கு ஏற்றவாறு செயல்பட்டு கொண்டிருக்கிறோம். இதில் சில விஷயங்கள் நாம் வெளியே கூறும் வண்ணமும் சில விஷயங்கள் வெளியே பகிர்ந்து கொள்ள முடியாததாகவும் இருக்கின்றது.

துருக்கி மற்றும் அமெரிக்க உறவை துண்டாட நினைப்பவர்கள் இந்த உறவின் பல்முனை தரம் மற்றும் ஆழத்தை உதாசீன படுத்துகிறார்கள்.” எர்துகானின் தேர்தல் வெற்றி மற்றும் பிரித்தானிய வட்ட பாதையிலிருந்து துருக்கியை நீக்குவதற்கான துணிவான நகர்த்தல்கள் ராணுவத்தை கவலைக்குள்ளாக்கியது ஏனெனில் அவர்கள் அதுவரை எப்போதும் ஒரு ராணுவத்தை சாராத ஒரு ஆட்சியாளர் இவ்வளவு பொது ஜன ஆதரவை பெற்றிருந்த நிலையை எதிர் கொண்டதில்லை. குர்திய பிரச்சனையை தீர்த்து வைப்பதற்காக எர்துகான் தொடங்கிய பேச்சுவார்த்தைகளுக்கு பின்னடைவு ஏற்படுத்தும் வகையில் குர்திய பகுதிகளில் ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ள ராணுவம் முன்வந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக துருக்கியின் அதிகார பலத்தை மாற்றும் முயற்சியில் எர்துகான் ஈடுபட்டார். அவர் அரசில் தலையிடும் உச்ச ராணுவ மன்றத்தின் சட்ட அதிகாரத்தை சுருக்கலானார். இந்த மன்றத்தின் அமைப்பில் ராணுவத்தினர் அல்லாதவரும் பங்கு பெறும் வகையில் எரதுகான் மாற்றி அமைத்தார். உச்ச ராணுவ மன்றம் ராணுவ தளபதி, அமைச்சரவையின் சில உறுப்பினர்கள் மற்றும் குடியரசின் ஜனாதிபதி – இவரே ராணுவ தளபதியும் ஆவார் போன்றவர்களை உள்ளடக்கியதாக உள்ளது. 

இந்த மன்றம் ஒரு பாதுகாப்பு மன்றம் என்பதிலிருந்து வெறுமெனே அலோசனை மன்றமாக மாறியது. அதன் வருடாந்திர கூட்டம் பணி உயர்வு, பணி நியமனம், பணி காலத்தை நீன்டிப்பது மற்றும் ராணுவ வீரர்களை ஒழுங்கு நடவடிக்கை காரணமாக பணி நீக்கம் செய்வது போன்றவற்றிற்காக ஒப்புதல் பெறுவதற்காக வேண்டி சமர்பிக்க படுகிறது. மூத்த படைத்தளபதிகளை ஓய்வில் அனுப்பவும் மற்றும் சிறையில் அடைக்கவும் 2007ல் அரசை ராணுவத்தை கொண்டு வெளியேற்றும் ’எர்கெனெகான்’ எனும் சூழ்ச்சியை எர்துகான் பயன் படுத்தி கொண்டார். 

அதேபோல் 2010ல் ’Sledgehammer’ எனும் சூழ்ச்சியை பணியிலிருக்கும் மூத்த ராணுவ அதிகாரிகளை ஒய்வு பெற்ற அதிகாரிகளுடன் சேர்த்து வழக்குகளில் சிக்க வைக்க உபயோகப்படுத்தப்பட்டது. துருக்கி வரலாற்றில் முதன் முறையாக ராணுவ அதிகாரிகள் தண்டிக்கப்படுவது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும் மேலும் இது நாட்டில் ராணுவத்தின் பிடி பெருமளவில் தளர்ந்திருப்பதை காட்டுகிறது. இறுதியில் இரு விசாரணைகளிலும் அனைத்து பிரதிவாதிகளும் விடுவிக்கப்பட்டனர் இருப்பினும் அதற்கு சேதம் ஏற்படுத்தியாகிவிட்டது. 

எர்துகான் வெற்றிகரமாக ராணுவத்திலுள்ள மதசார்பின்மை அடிப்படைகளை நலிவடைய செய்து தனக்கு விசுவாசமாக உள்ளவர்களை உயர் பதவிகளில் அமர்த்தினார். ஆனால் சமீபத்திய நிகழ்வுகள் அதாவது 2015 நவம்பர் மாதத்தில் விமானப்படை தன்னிச்சையாக சிரியாவில் ரஷ்ய போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது, ராணுவத்தின் விசுவாசம் எர்துகான் நம்பிக்கை கொள்ள முடியாத வேறு எங்கோ இருப்பதை உணர்த்துகிறது. இது சிரயாவில் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் துருக்கி உள்ளிட்ட அனைவரும் ஒரே குறிக்கோளை கொண்டிருக்கும் வேலையில் நடந்தேரியுள்ளது.

ஆகஸ்து மாதம் 1ம் தேதி உச்ச ராணுவ மன்றத்தின் வருடாந்திர ஒன்று கூடல் நடக்க வேண்டியுள்ளது இதனூடே இராணுவத்தின் ஒரு பிரிவினருக்கும் எர்துகானுக்கும் இடையே பதற்றம் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு அதிக அளவில் இருப்பதை காண முடிகிறது. இதன் காரணமாக மூத்த ராணுவ வீரர்கள் உட்பட பல அதிகாரிகள் தங்களின் பணிக்காலம் விரைவில் முடித்து வைக்கக்கூடும் என்ற காரணத்தால் எர்துகானை எதிர்கொள்ள தன்னிச்சையாக இந்த ராணுவ புரட்சியை மேற்கொண்டுள்ளனர்.

கேனி டோருன் எனும் ஏ.கே.பி எம.பி கூறுகையில், இந்த குழுவினர் மீது தேச துரோகம் மற்றும் ஸ்லெட்ஜ் ஹேமர் வழக்குகளின் தொடர்ச்சியாக விசாரணை தொடங்கப்பட்டது. ராணுவ புரட்சி மேற்கொள்வதற்கு சற்று முன்னர் தான் குற்றவாளிகள் பிராசிக்யூடர்களால் அழைக்கப்பட்டு நீதிமன்றத்தால் கைது செய்யப்படுவதாக இருந்தது,“ என டோருன் அல் ஜசீராவிடம் கூறனார்.[6] “அவர்கள் இந்த முன்னேற்றத்தை அறிந்த காரணத்தால் வழக்கமாக இது போன்ற ராணுவ புரட்சியை நடத்தும் நேரத்திற்கு மாற்றமாக இரவு 10 மணிக்கு மேற்கொண்டுள்ளார்கள் என நம்புகிறோம். அவர்கள் திட்டமிட்டதை போன்று அதை காலை பொழுதி்ல் செயல்படுத்தி இருப்பார்களேயானால் அவர்கள் பெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருந்திருக்கும்”. ராணுவத்திற்குள் ராணுவ புரட்சி மேற்கொள்ள திட்டமிடும் நபர்களை கடந்த பல மாதங்களாக துருக்கி அதிகாரிகள் கண்காணித்து வந்தனர் என மற்றுமொரு ஏ.கே.பி அதிகாரி குறிப்பிட்டார். “தாங்கள் புலனாய்வுக்கு உட்பட்டு இருக்கிறோம் என உணர்ந்ததன் காரணமாகவே இந்த குழு ஒரு அவசரத்தில் செயல்பட்டதாகவே கருதுகிறோம்.”[7]

விமானப்படை, ராணுவ புலனாய்வுத்துறை மற்றும் தளவாடப்படையில் உள்ள சிறு குழு ஈடுபட்டது. இந்த ராணுவ சதிப்புரட்சியை ஒரு சிறு குழுவினரே மேற்கொண்டுள்ளனர் இதில் ராணுவ தளபதியின் பங்கு சற்றும் இல்லாமல் இருந்தது, ராணுவ தளபதி சூழ்ச்சியாளர்களால் சிறை பிடிக்கப்பட்டார் மற்றும் சிலர் ஊடகத்தின் வாயிலாக தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். ராணுவ தலைமையிடத்தில் இருந்து ஆதரவு கிடைக்காதது தான் இந்த ராணுவ சதிப்பரட்சி தோற்று போனதற்கான முக்கிய காரணமாகும்.

இந்த தோல்வியுற்ற ராணுவ சதிப்புரட்சி குறிப்பாக இந்த ராணுவ சதிப்புரட்சியில் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக மக்கள் திரண்டு வந்தது எர்துகானை மேலும் வலுவடைய செய்துள்ளது, இப்போது எர்துகான் ஒரு ஆழமான சுத்தகரிப்பை செய்ய போகிறார் இது நம்பகத்தன்மையை இழந்த தங்களது விசுவாசத்தை வேறு இடத்தில் கொண்டிருக்கும் ராணுவ வீரர்களை பலவீனப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. 

இந்த குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஐரோப்பிய தலைவர்கள் மற்றும் ஊடகங்கள் இந்த தோல்வியுற்ற ராணுவ புரட்சியை காரணம் காட்டி எர்துகான் சர்வாதிகார போக்குடையவராக மாறி வருகிறார் என குற்றம் சாட்டி கண்டனம் தெரிவித்து வருவதை காண முடிகிறது. அவரை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போதும், ஐரோப்பா தங்களுடைய நிலையை எர்துகான் மற்றும் அவருடைய செயல்களை நோக்கியே கவனம் செலுத்தி வருகின்றது. இதற்கு இன்னொரு பக்கம் அமெரிக்காவுடைய நிலையானது இந்த ராணுவ சதிப்புரட்சிக்கு எதிராக கண்டனம் தெரிவித்தும் சட்டத்தின் விதிகளை மதிக்குமாறு கோரிக்கை விடும் வண்ணம் இருந்தது, இது கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற எர்துகானுக்கு ஆதரவான நிலையாகும்.

Reference: http://www.revolutionobserver.com/2016/07/the-politics-of-turkeys-coup.html


[1] http://www.nytimes.com/live/turkey-coup-erdogan/erdogan-they-will-pay-a-heavy-price-for-their-treason-to-turkey/

[2] http://in.reuters.com/article/turkey-security-judges-idINKCN0ZW0OZ

[3] https://www.rt.com/news/351630-erdogan-turkish-military-relationships/

[4] http://www.hurriyetdailynews.com/turkey-us-invest-hopes-in-shared-vision-document.aspx?pageID=438&n=turkey-us-invest-hopes-in-shared-vision-document-2006–07-07

[5] AK Party Group Meet­ing, Jus­tice and Devel­op­ment Party web­site, June 29 2010,http://www.akparti.org.tr/english/haberler/ak-party-group-meeting-june-29–2010/25721

[6] http://www.aljazeera.com/news/2016/07/turkish-putschists-acted-early-fear-arrests-160718131344577.html

[7] http://www.aljazeera.com/news/2016/07/turkish-putschists-acted-early-fear-arrests-160718131344577.html
http://sindhanai.org/

இன்றைய துருக்கியில் நடைபெறும் ஆட்சி கிலாஃபத் கிடையாதா?


இன்றைய துருக்கியானது இஸ்லாமிய கட்சியால் ஆளப்பட்டு வருகிறது என்று பெரும்பாலான மக்கள் கருதுகின்றனர். அது தன்னகத்தே நிச்சயமாக ஒரு இஸ்லாமியரை அதிபராகவும் இன்னொரு இஸ்லாமியரை பிரதம அமைச்சராகவும் கொண்டுள்ளது. 

இதன் காரணத்தால் இந்த துருக்கிய மாதிரி அரசாங்கம் பொருமளவில் பிரபல்யம் அடைந்துள்ளது மற்றும் மக்களது பார்வையையும் ஈர்த்துள்ளது. இந்த மாதிரியை கொண்ட அரசாங்கமானது அதாவது சில இஸ்லாமிய சட்டங்கள் மதசார்பின்மையோடு கலந்திருப்பதை விரும்பும் பல மேற்கத்திய அரசியல்வாதிகள் மற்றும் மதசார்பின்மை வாதிகளின் பாராட்டுதல்களை பெற்றுள்ளது ஏனெனில் அவர்கள் தாங்கள் இது மாதிரியான அரசாங்கத்துடன் எளிதில் உறவு கொள்ள முடியும் என்பதோடு இது போன்ற நிலையை ஏனைய முஸ்லிம் உலகில் பார்க்க விரும்புகின்றனர். 

முஸ்லிம் உலகில் பெரும்பாலோர் துருக்கி என்பது கிலாஃபத்தின் ஆட்சி முறையை கொண்டதாகவே அறிந்து வைத்திருக்கின்றனர் – இந்த கிலாஃபத்தானது ஒரு போர் குழுவை உலகின் சக்ரவர்த்திகளாக மாற்றியது. தாங்கள் இஸ்லாமிய ஆட்சி முறை படி ஆட்சி செய்கிறோம் என்ற ஏ.கே.பி கட்சியின் கூற்றினை ஆராய்ந்து பார்க்கையில் அதன் திட்டங்களில் இஸ்லாம் எவ்வகையிலும் பங்கு பெற்றிருக்கவில்லை என்றும் அது பொது மக்களிடம் அளித்து வரும் வெறும் வாய்ஜாலமே அன்றி வேறெதுவும் இல்லை. பொருளாதாரம் மற்றும் வெளியுறவு கொள்கைகள் ஏ.கே.பியின் பிரதான அடையாளங்கள் ஆகும் இரண்டுமே இஸ்லாம் அல்லாத பிற அடிப்படைகளை கொண்டு செயல்படுவதாக உள்ளது.

ஏ.கே.பி விற்கு ஆதரவு திரட்டுவதற்காக எர்துகான் சில பெரு வியாபாரிகள் பயன் பெரும் வகையில் துருக்கிக்கு உள்ளே பணம் கொண்டு வரும் வகையில் பொருளாதார கொள்கைகளை வகுத்துள்ளார். இஸ்லாம் இதை தடுத்துள்ளது மற்றும் அது சில பெரு முதலைகளிடம் சொத்துக்கள் சேரும் வகையிலான மேற்கத்திய மாதிரியிலான பொருளாதார விநியோக முறையிலிருந்து விலகி செல்லும். அதே போன்று துருக்கியின் வெளியுறவு கொள்கையில் இஸ்லாம் எந்த வகையிலும் பங்கு பெறவில்லை. இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக எர்துகானின் துருக்கி் அரசாங்கம் இஸ்ரேலுடனான உறவை தொடர்ந்து நீடித்து வருவது இதை இஸ்லாம் முற்றிலுமாக தடுக்கின்றது. ஏ.கே.பி தன்னுடைய வெளியுறவு கொள்கையில் இஸ்லாமை எந்த விதத்திலும் உபயோகிக்கவில்லை. இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் ஆட்சியாளர்களை ஒன்று திரட்டுவதற்கு பதிலாக (சலாஹுதீன் அய்யூபி செய்தது போன்று) அல்லது அல் குத்ஸை ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கவும் இல்லை இதை செய்யும் ஆற்றல் துருக்கிக்கு இருந்த போதும், எர்துகான் வாய் சவடால் விடும் ஒரு குறுகிய சந்தர்ப்பவாத கொள்கையை இஸ்லாமிய வார்த்தைகள் பூசி தொடர்ந்து பேசி வருகிறார். துருக்கி ஒரு இஸ்லாமிய மாதிரி அரசாங்கத்தை பிரதிநிதித்துவ படுத்தவில்லை, அது உண்மையில் மேற்குலக நாடுகளை போன்று மதசார்பின்மை மற்றும் தேச நலன் அடிப்படையை கொண்டதாகும்.

http://sindhanai.org/

Jul 27, 2016

துருக்கிய சதிப்புரட்சி - இவர் சொல்வது உண்மையானால்...?

- உஸ்தாத் சஈத் ரித்வான் !


தற்போது அஷ்ஷாமினுடைய நிலத்தில் நடந்தேறி வருகின்ற நிகழ்வுகள் சர்வதேச சக்திகளினதும், பிராந்திய சக்திகளினதும் அதிமுக்கிய கவனத்தை ஈர்த்துள்ள விடங்களாகும். ஏனெனில் அஷ்ஷாமிலே தொடருகின்ற போராட்டம் முதலில் முஸ்லிம்களுக்கும், இரண்டாவது ஐரோப்பாவுக்கும். மூன்றாவது அமெரிக்காவுக்கும், பின்பு ஏனைய தரப்பினர்களுக்கும் வாழ்வா சாவா போராட்டம் எனக்கருதும் அளவிற்கு கனதியானதாகும். அந்தப் போராட்டத்தின் முடிவிலே வெற்றியோடும், இலாபத்தோடும் திரும்புபவரே தோன்றவிருக்கும் அடுத்த யுகத்தின் அதிபதியாக வெளியேறுவதுடன், அதிலே தோற்கடிக்கப்படுவர் சர்வதேச அரங்கில் மதிப்பிழந்த செல்லாக்காசாகி விடும் சூழல் தோன்றிவிடும்.


சிரியாவில் புரட்சி வெடித்த சந்தர்ப்பத்திலிருந்து இன்றுவரை ஏனைய சர்வதேச சக்திகள் சிரிய விவகாரத்தில் மூக்கை நுழைப்பதை தடுப்பதற்காக அமெரிக்கா கடுமையான பிரயத்தனத்தை எடுத்து வருகிறது. இதுவரை காலமும் எவரேனும் அதற்குள் தலையிட்டு இருப்பார்களேயானால் அது அமெரிக்காவின் அனுமதியுடனோ அல்லது கடைசியாக ரஸ்யா தலையிட்டதைப்போல அமெரிக்காவில் வேண்டுதலின் பேரிலோதான் அவை இடம்பெறுகின்றன.


பேச்சுவார்த்தைகள் போன்ற அரசியல் வழிமுறைகளினூடாக, அல்லது ஈவிரக்கமற்ற காட்டுமிராண்டிப் படுகொலைகளினூடாக சிரியப் புரட்சியில் பாரிய அலுத்தத்தை பிரயோகித்து அமெரிக்கா வழங்குகின்ற தீர்வுக்கு இணங்கச் செய்யும் அமெரிக்காவின் அனைத்து முயற்சிகளும் படு தோல்வியில் முடிந்துள்ளன.


சிரியப்புரட்சி அனைத்து பிரதான தரப்புக்களையும் கதிகலங்கும் ஓர் சந்தியில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. குறிப்பாக யாருடைய கையில் களத்தின் கயிறுகள் இருக்கின்றனவோ அந்த அமெரிக்காவையே அது விழிபிதுங்கச் செய்துள்ளது.


பாவித்த அனைத்து துரும்புகளும் கை கொடுக்காத நிலையில் இந்த நெருக்கடி நிலையிலிருந்து வெறியேறும் பாதையாக துருக்கியை பயன்படுத்த அமெரிக்கா கண்ணமிட்டுக் கொண்டிருந்தது. அதன்படி அதனது நாசத்திட்டத்தை தனது முக்கிய முகவரான அர்துகானின் கரங்களால் அமூல்படுத்த அது காத்துக் கொண்டிருக்கிறது. இஸ்லாமிய பிரபல்யத்தை தன்னகப்படுத்தியிருக்கும் அர்துகானுக்கு சிரியாவுக்குள் இயங்கும் சில குழுக்களிடையே காணப்படும் ஏற்பு நிலையை அது பயன்படுத்த நினைத்திருக்கிறது. குறிப்பாக சிரியாவுக்குள் ஈரானிய வகிபாகம் ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு விடயமாக தோற்றம் பெற்றுள்ள நிலையிலும், சிரியாவுக்குள் ரஸ்ய - ஈரானிய கூட்டணி முயற்சி இனி பலிக்க போவதில்லை என்ற நிலை உருவாகியிருக்கின்ற நிலையிலும் அமெரிக்காவின் கவனம் துருக்கி மீது குவிந்துள்ளமை தவிர்க்கப்பட முடியாததே.


எனவே அது வரவிருக்கின்ற அரங்கிற்கு ஏற்றவாறு அனைத்தையும் தயார்படுத்த களத்திற்குள் குதித்துள்ளது. அவற்றில் முக்கியமானவை,


1. எதிர்கால சிரியா இஸ்ரேலுடன் விரோதத்தைப் பேண மாட்டாது என்பதற்கான உத்தரவாத்தை வழங்குவதற்காக துருக்கியின் சியோனிச யூதர்களுடனான உறவை சுமூகப்படுத்துவது.



2. “அஷ்ஷாமின் கொடுங்கோலன் பஷாரின் முழுமையான வெளியேற்றமே சிரியாவின் தீர்வுக்கான நிபந்தனை” என இதுவரை காலமும் பேரளவுக்காவது முன்வைத்து வந்த அர்துகானின் உறவை பஷாருடன் சுமூகப்படுத்தி பலப்படுத்துவது.



3 சிரியாவில் துருக்கியின் தலையீட்டால் ஈரானுக்கும் அதன் நலன்களுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பான புரிந்துணர்வை ஏற்படுத்தி ஈரானுடனான உறவை மேம்மடுத்துவது.



4. துருக்கியின் தலையீட்டால் ஈராக்கின் உள்ளரங்கில்; ஏற்படக்கூடிய பாதிப்பை விளக்கி ஈராக்குடனான உறவை மேம்படுத்துவது.



5. திட்டத்தின் அனைத்து கட்டங்களிலும் அதனுடன் ஒருங்கிணைப்புடன் செயற்படவும், ஐரோப்பியத் தலையீட்டை தொடர்ந்து தள்ளி வைத்துக் கொள்வதற்கும் ரஸ்யாவுடனான உறவை சுமூகப்படுத்துவது



6. அண்மையில் இஸ்ரேலுடன் சமூகமான நல்லுறவை ஏற்படுத்திய கேவலமான செயலினால் அர்துகானின் பிரபல்யம் துருக்கிக்குள் சரிவடைந்து செல்வதை தடுத்து நிறுத்துவது. துருக்கிய இராணுவத்திற்குள் அர்துகானுக்கு எதிராக உருவாகி வரும் எதிர் சக்திகளின் விவகாரத்தை தீர்;த்து வைப்பது...


தமது அரசியல் தீர்மானப் பொறிமுறைக்கு வெளியே இடம்பெற்றதாக அர்துகானே ஏற்றுக்கொண்ட சம்பவமான ரஸ்ய தாக்குதல் விமானத்தை துருக்கிய விமானப்படை சுட்டு வீழ்த்திய சம்பவம் இந்த எதிர் சக்திகளின் வளர்ச்சியை தெளிவாகக் காட்டியது துருக்கிய நிகழ்வுகளை அவதானிப்போர் அறிந்த விடயமே.


7. சிரியக் களத்துக்குள் அர்துகான் முழுமையான நுழைவதாக இருந்தால் உள்நாட்டுக்குள் அவரை புறமுகுகில் குத்துகின்ற எந்தவொரு உறைவாளையும்; விட்டு வைக்க முடியாத நிலை உருவாகும். இத்தகைய உறைவாட்கள் இராணுவத்துக்குள் அவரை எதிர்க்கின்ற அணிகளில் பிரதிபலிக்கத் தொடங்கியிருந்ததால் அவற்றை முற்றாக அகற்றுவது.



மேலும் முக்கிய சில அவதானங்கள்...


முறியடிக்கப்பட்ட சதிப்புரட்சி, மக்கள் ஆதரவைத் திரட்டக்கூடிய விதத்தில் மக்களை விழித்து ஆற்றப்பட்ட எத்தகைய உரையையும் தாங்கி வராமலும், அர்துகானுக்கு எதிராக மக்களை தூண்டிவிடக்கூடிய விதத்தில் அவரது கொள்கைகளை அம்பலப்படுத்தாமலும், இன்னும் சொல்லப்போனால் சதியினை மேற்கொண்டவர்களின் இலக்குகளை சுட்டிக்காட்டக்கூடிய அல்லது சதிப்புரட்சியால் நாட்டிற்கு ஏற்படக்கூடிய நலனை சுட்டிக்காட்டக்கூடிய எத்தகைய சைக்கினையைக் கொண்டிராத வெறுமையாக ஒன்றாகவே காட்சியளிக்கிறது.


அதற்கும் மேலாக சதிப்புரட்சியின் இரு மருங்கிலுள்ளவர்களும் ஒரே திசையை பின்பற்றுபவர்கள். அர்துகானும், அவரது எதிராளிகளான பத்ஹ}ல்லாஹ் குலனும் அமெரிக்காவை பின்பற்றுவர்கள்!


மேலும் சதிப்புரட்சியினால் இராணுவத்துக்குள் தமக்கு இருக்கின்ற செல்வாக்கிற்கு என்னவாகும் என்பது பற்றி பிரித்தானியர்கள் வெளிப்படுத்திய ஆதங்கத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது சதிப்புரட்சி தொடர்பாக பேசிய அமெரிக்க பேச்சாளர்களின் பேச்சுக்களில் சஞ்சலமற்ற நிலை தெரிகிறது.


மேலும்...

இந்த சதிப்புரட்சி அர்துகானினதும், அவரது அரசாங்கத்தினதும் பிரபல்யத்தை அதிகரிக்கும்.
மேலும் இராணுவத்தின் மீதான அவரது இறுங்குப்பிடியை உறுதிப்படுத்தும்.
அத்துடன் அவரது அரசியல் எதிராளிகளை மென்மேலும் பலகீனப்படுத்தும்.


இவை அனைத்தும் அர்துகானுக்கு கைகூடி வருமானால், சிரியாவில் அமெரிக்காவுக்காக சேவகம் செய்யும் துருக்கியின் வகிபாகம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பதற்கான வலிமையை அது அர்துகானுக்கு வழங்கும்.

முடிவாக,



சிரியா மீது துருக்கி செய்ய இருக்கின்ற தலையீடு சிரியப்புரட்சி தொடர்பான அமெரிக்காவின் அதிமுக்கியமானதும் ஆபத்தானதுமான செயற்திட்டங்களில் ஒன்றாகவே இருக்கப் போகிறது.


இந்தப் புரட்சிக்கு பலியாகிய துருக்கிய இராணுவம் அமெரிக்காவின் பலிக்கடாக்களாகியிருக்கின்ற அதேவேளை அரங்கேற்றப்பட்ட துருக்கிய சதிப்புரட்சியானது கொடியதொரு எதிர்காலத்திட்டத்திற்காக, காணப்படும் நிலைமைகளை கட்டுப்படுத்தவும், ஒழுங்கமைக்கவும் மேற்கொள்ளப்பட்ட ஒரு நிகழ்வாகவே தெரிகிறது. மாறாக அது ஏற்கனவே நடந்துகொண்டிருந்த முரண்பாடுகளின் ஒரு பகுதியாக தென்படவில்லை.


எனவே நிகழ்வுகள் எதை நோக்கி? எந்தளவு தூரத்திற்கு? எவ்வளவு காலத்திற்கு? நீளப்போகிறது என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

Source : Darulaman.net

Jul 23, 2016

துருக்கிய சதிப்புரட்சியை அரங்கேற்றியது பத்ஹுல்லாஹ் குலனா? தைய்யிப் அர்துகானா? அல்லது மூன்றாவது சக்தியா?




 பல முஸ்லிம்களின் உயிரைக் குடித்த மக்களின் இயல்பு வாழ்வில் வீணான குழப்பத்தை ஏற்படுத்திய அண்மைய துருக்கிய இராணுவ புரட்சி முயற்சியை முஸ்லிம்கள் வன்மையாகக் கண்டிக்க வேண்டும். புரட்சியின் வீரர்களாக மேற்குலக கைக்கூலி ஜெனரல்களால் களத்தில் இறக்கி விடப்பட்டு இன்று குற்றவாளிகளாக களங்கப்படுத்தப்பட்டிருக்கும் இராணுவச் சிப்பாய்களுக்காகவும் ஒரு கணம் எமது ஆழ்ந்த அனுதாபத்தை வெளிப்படுத்த வேண்டும். ஏனெனில் அவர்களும் எடுப்பார் கைப்பிள்ளைகள் போன்று மேற்குலக அடிவருடிகளின் காய் நகர்த்தல்களுக்காக அடிக்கடி பலிக்காடாவாக்கப்படும் எமது உம்மத்தின் இளைஞர்களே!

கமாலிச, பிரத்தானிய விசுவாச அணிகளுக்கும், தற்போது இராணுவத்திற்குள் மிகப்பெரும்பான்மை செல்வாக்கிலுள்ள அமெரிக்க சார்பு – அர்துகான் அணிகளுக்கும் இடையான முறுகல் நிலை தொடர்ந்து இருந்து வருவது நாம் அறித்ததே. அதேபோல இன்று பத்ஹுல்லாஹ் குலன் சார்பினரே சதிப்புரட்சியின் சூத்திரதாரிகள் என அர்துகான் அணியினரால் அரசியல் நோக்கத்துடன் பரப்புரை செய்யப்படும் விடயம் அனேகமாக யதார்த்ததுடன் முரண்பட்டாலும், அமெரிக்க முகவரான பத்ஹ}ல்லாஹ் குலனின் ஆதரவு இராணுவ உளவுத்துறைக்குள்ளும், பொலிஸ்துறைக்குள்ளும், நீதித்துறைக்குள்ளும் கணிசமான அளவில் காணப்படுவதும் மறுப்பதற்கில்லை. இதற்கிடையே சிரியாவில், அமெரிக்காவும், ரஸ்யாவும், துருக்கியும் ஒரே இலக்குடன் ஒருக்கிணைக்கப்பட்டு செயற்பட்டுக் கொண்டிருக்கும் நி;லையில் நவம்பர் 2015 இல், சிரியா மீது தாக்குதல் நடாத்திய ரஸ்ய தாக்குதல் விமானம் ஒன்றை துருக்கிய விமானப்படை தன்னிச்சையாக சுட்டு வீழ்த்திய சம்பவத்தை நாம் அறிந்திருப்போம். அதிபர் அர்துகானினதும், அவருக்கு விசுவாசமான இராணுவ உயர் தலைமையினதும் அனுமதியில்லாமல் இடம்பெற்ற இதுபோன்ற நிகழ்வுகள் இராணுவத்திற்குள் அர்துகானுக்கு பதிலாக வேறேங்கோ தமது விசுவாசத்தை வைத்திருக்கும் சக்திகளும் இயங்கிக் கொண்டிருப்பதையும் காட்டி நிற்கின்றன.

 இந்தப் பின்னணியில் எதிர்வரும் ஓகஸ்ட் 1ஆம் திகதி அதியுயர் இராணுவ சபையில் வருடாந்தக் கூட்டம் இடம்பெற இருந்த சூழலில் அர்துகானுக்கும், இராணுவத்துக்குள் சில அணிகளுக்கும் இடையேயான முறுகல் நிலை வலுவடைந்து இருந்தது. இதன் விளைவாக இராணுவத்தின் உயர் அதிகாரிகள் உட்பட பல இராணுவ அதிகாரிகள் தமது பதவியை கட்டாயமாக கைவிட வேண்டிய அல்லது சிக்கலான விசாரணைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை தோன்றியிருந்தது. அதற்கு அஞ்சிய இராணுவ அதிகாரிகளின் அவசரத் தீர்மானமே இந்த சதிப்புரட்சி முயற்சியாக இருக்கலாம் என ஊகிக்க முடிகிறது.

அர்துகானின் நீதிக்கும், அபிவிருத்திக்குமான கட்சி (AKP) யைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் கானி டொரனும் இதுபோன்ற ஒரு கருத்தை அல்ஜெஸீராவுக்கு தெரிவித்திருந்தார்,

“ தற்போது சதிப்புரட்சி முயற்சியில் ஈடுபட்டவர்கள் சதிப்புரட்சி முயற்சி மேற்கொள்ளப்படுவதற்கு சற்று முன்னர் சதிப்புரட்சியினூடாக ஆட்சியைக் கைப்பற்ற நினைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரால் வழக்கறிஞர்களால் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் கைது செய்யப்பட இருந்தவர்கள்...” இதே கருத்தை இன்னுமொரு AKP அதிகாரி,


“ கடந்த சில மாதங்களாக இராணுவத்திற்குள் சதி புரட்சியொன்றை நடத்த முயற்சிக்கிறார்கள் என்ற சந்தேகத்தின் பேரிலுள்ளவர்களை துருக்கிய அதிகாரிகள் அவதானித்து வந்தார்கள், எங்களுடைய கணிப்பின்படி சதி முயற்சியில் ஈடுபட்ட இந்தக்குழு, தாம் விசாரணைக்கு உட்படுத்தப்படப்போகிறோம் என்பதை உணர்ந்ததன் விளைவால் தோன்றிய பதற்றத்தாலேயே இவ்வாறு செயற்பட்டிருக்கிறது.” என்று தெரிவித்திருந்தார்.


இராணுவத்தின் அதியுயர் பீடத்தினதும், அதன் சிரேஷ்ட தலைமையினதும் ஆசிர்வாதம் இல்லாத நிலையிலும், சமூக மட்டத்தில் மக்கள் ஆதரவும், ஆணையும் தமக்கு சாதகமாக இருக்க முடியாத சூழலில் எடுக்கப்பட்ட இந்தத் தீர்மானம் அரசியல் முதிர்ச்சியற்றது. எனினும் காலணித்துவ அரசுகளின் போலியான நம்பிக்கையூட்டல்கள் சதிப்புரட்சியில் ஈடுபட்டவர்களின் கண்களை மறைத்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. எனவே காலணித்துவ சக்திகளுக்கு விலைபோய் தமது சொந்த மக்களுக்கு எதிராகவே துப்பாக்கியை நீட்டும் குறைப்பிரவசப் புரட்சிகள் இவ்வாறு தோல்வியிலேயே முடியும் என்பது வியப்புக்குரியது அல்ல. இதேபோல காலணித்துவ சக்திகளின் தூண்டுதலின் பேரில் பல சதிப்புரட்சி முயற்சிகள் நவீன துருக்கிக்குள் இதற்கு முன்னரும் இடம்பெற்றிக்கின்றமை நாம் அறிந்த விடயமே.


துருக்கிய அரசு குற்றம் சாட்டுவதைபோல இந்த சதிப்புரட்சி முயற்சி துருக்கிய அரசுக்கு சமாந்தரமான கட்டமைப்பு என மிகைப்படுத்தி அழைக்கப்படும் குலன் இயக்கத்தின் (இது கிஷ்மத் இயக்கம் எனவும் அழைக்கபடுவதுண்டு) வேலையாக இருக்க சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாகும். 1999 இலிருந்து அமெரிக்கா, பென்சில்வேனியாவில் அடைக்களம் புகுந்திருக்கும் பத்ஹுல்லாஹ் குலனின் தலைமையில் இயங்கும் இந்த இயக்கத்தின் ஆளுமையை விட இந்த புரட்சி முன்னெடுப்பு பாரியது என்பதே அதற்கான காரணமாகும்.


“பென்சில்வேனியாவிலுள்ள ஒரு வீட்டிலிருந்து துருக்கியை இயக்க முடியாது” என்று கடந்த சனிக்கிழமை பத்ஹுல்லாஹ் குலனை புரட்சியுடன் தொடர்புபடுத்திச் சாடிய அர்துகான், அமெரிக்கா அவரை தம்மிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.


மேலும் துருக்கிய பிரதமர் பின்னலி யில்டிரிம் குலனுக்கு ஆதரவளிக்கும் எந்தவொரு நாட்டையும், துருக்கியுடன் போர் பிரகடனம் செய்த நாடாகவே துருக்கி கருதும் என்றும் எச்சரித்திருந்தார்.

எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்களை பத்ஹுல்லாஹ் குல்லன் திட்டவட்டமாக நிராகரித்து “கடந்த ஐந்து தசாப்த்தங்களாக பல இராணுவப்புரட்சிகளால் பாதிக்கப்பட்டவனாக இருக்கின்ற என்னை இந்த புரட்சி முன்னெடுப்புடன் தொடர்புபடுத்தி குற்றம் சுமத்துவது என்னை விசேடமாக கேவலப்படுத்தும் ஒரு செயலாகும். நான் அதனை திட்டவட்டமாக நிராகரிக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார். அத்துடன் இந்த சதிப்புரட்சி சிவில் சக்திகளின் சுதந்திரத்தை முடக்கவும், நீதித்துறையையும், இராணுவத்தையும் தனக்கு சார்பாக ஒடுக்கவும், அர்துகான் கனவு காணுகின்ற நிறைவேற்று ஜனாதிபதி முறைக்கான நியாயாதிக்கத்தை உருவாக்கவும் அர்துகானே ஏற்பாடு செய்த நாடகமென பழியை அர்துகான் பக்கமே திருப்பியிருந்தார். அமெரிக்காவும் சதிப்புரட்சியின் பின்னணி எதுவும் தெரியாததுபோல நீழிக்கண்ணீர் வடித்த வண்ணம் குலனுக்கு இந்த சதிவேலையில் சம்பந்தம் இருக்கும் பட்சத்தில் அதற்கான ஆதாரத்தை முன்வைக்குமாறு துருக்கியிடம் கேட்டிருந்தது. ஒரு வாதத்திற்கு குலனுக்கு இச்சதியுடன் சம்பந்தம் இருந்தாலும் கூட குலனும் ஒரு அமெரிக்க முகவர் என்ற அடிப்படையில் அது அமெரிக்காவுக்கு தெரியாதிருக்க எந்தச் சாத்தியமும் இல்லை என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்.

பத்ஹுல்லாஹ் குலன் குற்றம் சாட்டுவதைப்போல அர்துகானே அமெரிக்க ஒத்துழைப்புடன் இந்த சதி நாடகத்தை நடாத்தியிருப்பதற்கான சாத்தியப்படுகளும் இல்லாமல் இல்லை.

காலணித்துவ சக்திகளின் தீய அரசியல் நோக்கங்களுக்காக துருக்கியில் அண்மைக்காலமாக திட்டமிட்ட ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய குண்டு வெடிப்புச் சம்பவங்களும், அதனை அடிப்படையாக வைத்து இன்று பிரான்ஸிலும், ஏனைய மேற்குலக நாடுகளிலும் செய்யப்படுவதைப்போல “தீவிரவாதத்திற்கு எதிராக(அரசியல் இஸ்லாத்திற்கு) முழு உலகுமே அணி திரள வேண்டும”; என்ற பிரச்சாரத்தை முன்வைத்து தமது மதச்சார்பற்ற மிதவாதப்போக்கை தூக்கிப்பிடித்து, பிராந்தியத்தில் தீவிரவாத்திற்கு எதிரான போராட்டத்தில் தாம் முன்னணி வீரர்கள் என்பதை நிறுவ நினைக்கும் துருக்கிய அரசின் பரப்புரைகளும் இனிவரும் காலங்களில் துருக்கிய அரசியலின் திசையையும், அது பிராந்தியத்தில் வகிக்க இருக்கும் வகிபாகத்தையும் துல்லியமாகக் காட்டி வந்தன.

மேலும் அரைத் தசாப்பதங்களையும் தாண்டி தொடர்கின்ற சிரிய மக்கள் புரட்சியில் அமெரிக்க நலன்களை பாதுகாப்பதற்கு பஷாருக்கு பின் தனக்கு விசுவாசமான ஒரு முகவரை இன்று வரை இனம்காண முடியாது பதறிப்போயிருக்கும் அமெரிக்கா, தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் செய்து பார்த்து விட்டது. சவூதி, ஜோர்தான், ஈரான், துருக்கி என அனைவரும் அமெரிக்காவுக்காக முண்டியடித்து முயன்று பார்த்தாகி விட்டது. ரஸ்யாவும் அமெரிக்காவுக்கு ஊழியம் செய்ய மூக்கை நுழைத்தும் பார்த்து விட்டது. எனினும் அல்லாஹ்(சுபு) புரட்சியின் தூய்மையை காலணித்துவ சதிவலையில் அகப்படாது இன்று வரை பாதுகாத்து வருகிறான். இந்த நிலையில் இனிவரும் காலங்களில் சிரிய புரட்சியின் திசையும், அதனால் விரியும் அரசியல் களமும் முற்றுமுழுதாக தனது கட்டுப்பாட்டுக்குள் தங்குவதற்கு துருக்கியின் வகிபாகமும் அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியமாகும். இன்னும் சொல்லப்போனால் ஏனையோர்களுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது துருக்கிக்கு சிரிய புரட்சியாளர்களுக்குள்ளும், முஜாஹிதீன்களுக்குள்ளும் ஆதரவைத் திரட்டும் ஆற்றல் அதிகமாகவே உள்ளதால் அதன் பகிவாகம் எதிர்காலத்தில் மிகவும் அதிகமாகவே இருக்கப் போகிறது.

எனவே அமெரிக்கா சொல்கின்ற திசையில் துருக்கி இயங்குவதற்கு வழிவிடுவதற்கு அர்துகானுக்கு இரு முக்கிய சவால்கள் உள்ளன. முதலாவது, உள்நாட்டுக்குள் கணிசமான ஆதரவை அவர் தன்வசப்படுத்த வேண்டும். அது துருக்கியின் அரசியலைப் பொருத்த மட்டில் துருக்கிய இராணுவத்தின் பூரண ஆதரவு இல்லாது சாத்தியமேயில்லை. எனவே அந்த ஆதரவுக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய எதனையும் அர்துகான் விட்டு வைக்க முடியாது. மேலும் மக்கள் ஆதரவை தன் பக்கம் வளைத்து வைத்திருப்பதற்கு அரசியல் களத்தில் தனது எதிர் சக்திகளை நசுக்க வேண்டிய தேவை அவருக்கு இருக்கின்றது. அதற்கு என்றோ ஒருநாள் தானும் துருக்கிய அதிபர் கதிரையில் அமரலாம் என நீண்ட காலமாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் பத்ஹ}ல்லாஹ் குலனின் கட்டமைப்பின் செல்வாக்கை நாட்டில் தரைமட்டமாக்குவது அர்துகானுக்கு மிகவும் அவசியமாகும். அதனையே இந்த சதிபுரட்சியுடன் பத்ஹுல்லாஹ் குலனை வலிந்து முடிச்சுப்போடுவதன் மூலமாக அர்துகான் செய்து வருவதையும் நாம் காண்கிறோம்.

இரண்டாவது பிராந்தியத்திலும், அண்டை நாடுகளிலும் அர்துகானின் இயக்கத்திற்கு பாரிய தடைகள் எதுவும் இருக்கக் கூடாது. அந்த வகையில் அமெரிக்கா சைக்கினை செய்தால் ஈரானோ, ஈராக்கோ, சவூதியோ அதற்கு தடையாக இருக்கப்போவதில்லை. எனினும் இஸ்ரேலுடனான உறவை மாத்திரம் மீள் புதுப்பித்துக் கொள்வது இந்தக்கட்டத்தில் தவிர்க்க முடியாதது. அர்துகானின் ஆட்சிக்காலங்களில் அர்துகான் அரசுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே சிற்சில சர்ச்சைகள் தவிர்க்க முடியாது தோன்றினாலும் கூட பொதுவாகப் பார்த்தால் தேசிய நலன் கருதிய பரஸ்பர நல்லுறவே அவர்களிடையே இருந்து வந்துள்ளது. எனினும் இம்முறை சிரிய புரட்சினால் உருவாகியிருக்கும் அமெரிக்க நலன் சார்ந்த களவேலையை, துருக்கி இடைஞ்சல்கள் எதுவுமில்லாது செய்வதற்கு இஸ்ரேலுடனான உறவு மீள் சீரமைக்கப்பட்டு மென்மேலும் உறுதிப்படுத்தப்படுவதன் தேவை உள்ளது. அதன் வெளிப்பாடுதான் இஸ்ரேலுடனான நல்லுறவை புதுப்பொலிவுடன் புதுப்பித்து அதனை வெளிப்படையாகவே அறிவித்து, அமெரிக்க நலன்களுக்காக அவர்களுடன் பிராந்தியக் கூட்டாளிகளாக இயங்கும் முடிவினை அர்துகான் அண்மையில் எடுத்திருந்தார். அவரின் சியோனிஸத்தினுடனான உறவு உள்நாட்டிலும், பிராந்தியத்திலும் அவர் மீதான ஆதரவை கேள்விக்குறியாக்கியிருந்தது.

அமெரிக்க காலணித்துவ நலனையும், பிராந்தியத்தில் துருக்கியின் இராஜ தந்திர வெற்றியையும், அர்துகானின் அரசியல் எதிர்காலத்தையும் தீர்மானிக்கக் கூடிய ஒரு முக்கியமான சந்தியில்தான் இந்த சதி முயற்சி அரங்கேற்றப்பட்டுள்ளது என்பதால் அர்துகான் மீதும் சந்தேகம் எழுவதில் தவறில்லை. இராணுவ கட்டமைப்புக்குள் கொந்தளித்துக்கொண்டிருந்த அணி முரண்பாடுகளும், சிரியா உட்பட பிராந்தியத்தில் காணப்படும் களநிலை மாற்றங்களால் இராணுவத்திற்குள் அரசியற் தலைமையை மீறி இயங்க நினைக்கும் போக்கின் வளர்ச்சியும், இராணுவ கட்டமைப்புக்குள் களையெடுப்பு ஒன்றிற்கான அல்லது இராணுவ உயர் நிலைகளில் அதிபர் அர்துகான் சார்பான மேலதிக சுத்தப்படுத்தல் ஒன்றின் அவசியத்திற்கான காலநிலையை தோற்றுவித்திருந்த நிலையிலேயே இந்த சதி முயற்சி நடந்தேரியிருப்பதையும், சதிப்புரட்சி முறியடிப்புடன் அர்துகான் இராணுவ உயர் பீடங்கள் உட்பட, நீதித்துறை உட்பட சிவில் சேவை அதிகாரிகளில் ஆயிரக்கணக்கானோர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்துவரும் பின்னணியையும் வைத்துப்பார்த்தால் குலன் சொன்னதில் உண்மையேதும் இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இங்கே முஸ்லிம்கள் சில முக்கிய விடயங்களை கருத்திற் கொள்ள வேண்டும். இராணுவ புரட்சி ஒன்றின் ஊடாக அல்லது மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமைகளின் புரட்சிகர தீர்மானம் ஒன்றின் ஊடாக நடைமுறையில் இருக்கின்ற ஆட்சியை மாற்ற நினைக்கும் முயற்சி அடிப்படையில் தவறானது அல்ல. அல்லது ஜனநாயம் என்ற தீய குப்ரிய அரசியல் வழிமுறையினூடாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சடவாத ஆட்சியை பலத்தை பயன்படுத்தி மாற்ற நினைப்பதும் தவறானது அல்ல. அதேபோல தொடர்ந்து தமது சுயநல அரசியலுக்காக காலணித்துவ சக்திகளின் கால்களில் மண்டியிட்டு தமது தீனையும், நாட்டையும், மக்களின் வாழ்வையும் அற்ப கிரயத்திற்கு விற்றுவரும் தலைமைகளுக்கு எதிராக முதுகெழும்புள்ள வீரர்களாக எழுந்து நிற்பதிலும் தவறில்லை. அந்தவகையில் அர்துகானின் அரசை தூக்கி எறிய யாரேனும் முயன்றிருந்தால் அதனை நாம் வரவேற்க வேண்டும். எனினும் இன்று துருக்கியில் நடந்து முடிந்திருப்பது அர்துகானின் காலணித்துவ நலன் பேணுகின்ற ஒரு குப்ரிய சடவாத அரசைக் கவிழ்த்து “துருக்கியின் சடவாத அரசியலமைப்பையும், சுதந்திரத்தையும் பாதுகாக்கப் போகிறோம்” என்ற போலி வாக்குறுதியுடன் இடம்பெற்ற இன்னுமொரு காலணித்துவ சடவாத முன்னெடுப்பு. எனவே இந்த இழி இலக்கிற்காக எமது உம்மத்தின் தூய இரத்தம் சிந்தப்படுவது எவ்வகையிலும் அனுமதிக்கப்பட முடியாதது. 1924ஆம் ஆண்டில் கிலாஃபத்திற்கு எதிராக சதிப்புரட்சியை மேற்கொண்ட முஸ்தபா கமாலின் காலத்திலிருந்து இன்று வரை துருக்கியில் இடம்பெறுவது இத்தகைய இழிப்புரட்சிகள்தான். எனவே அவை எல்லாவற்றையும் ஒட்டு மொத்தமாக நாம் எதிர்த்தாக வேண்டும்.

மாறாக அல்லாஹ்(சுபு)வும், அவனது தூதர்(ஸல்) அவர்களும் விரும்பக்கூடிய தூயதொரு இஸ்லாமிய புரட்சியே துருக்கி போன்ற உயர்ந்த வரலாற்று தேசத்திற்கு பொருத்தமானது. காலணித்துவ தலையீடுகளை வேரடி மண்ணோடு பிடுங்கியெறிந்து ஷரீஆவை முழுமையாக நிலைநாட்டும் தன்மானம் உள்ள ஓர் தலைமையே அதற்கு தேவையானது. எவ்வாறு முஹம்மத்(ஸல்) அவர்களின் மதீனத்துப் புரட்சிக்கு அவ்ஸ், ஹஸ்ரஜ் கோத்திரத்தலைமைகள் தமது கழுத்தை பணயம் வைத்து ஆதரவு தந்தனரோ அதேபோன்றதொரு இஸ்லாமிய புரட்சிக்கு ஆதரவு தருவதே துருக்கிய இராணுவம் போன்றதொரு புகழ்பெற்ற முஸ்லிம் இராணுவத்திற்கு தகுதியானது.

மக்கள் ஆணைக்கு முன்னால் பீரேங்கிகள் ஒரு பொருட்டே இல்லை என சதிப்புரட்சியை முறியடிக்க வீதிக்கிறங்கிய துருக்கிய முஸ்லிம்கள் ஜனநாயகத்தையோ, சடவாதத்தையோ பாதுகாக்கவல்ல களத்தில் வந்து நின்றனர்;. மாறாக மஸ்ஜித்களிலே அதான் ஒலி முழங்கி நாட்டைக் காக்க புறப்பட்டு வாருங்கள் என அர்துகான் அழைப்பு விடுத்ததும் அவர்கள் “யா அல்லாஹ்! யா அல்லாஹ்! அல்லாஹஹு அக்பர்” எனக் கோஷமிட்டபடி வெற்று மார்புடன் டாங்கிகளுக்கு முன்வந்து நின்றது காலணித்துவ சதிகளுக்கு எதிராக இஸ்லாத்தை பாதுகாக்கிறோம் என்ற நம்பிக்கையிலேயே என்பதை நாம் யாரும் மறந்துவிடக்கூடாது. அர்துகானையும் AKP கட்சியையும் இஸ்லாத்தின் காலர்களாக நினைப்பது குருட்டுத்தனமானது என்றாலும் மக்களின் நோக்கம் உயரியது, அவர்களது குறிக்கோள் தெய்வீகமானது.

எனவே துருக்கிய இராணுவத் தளபதிகளும், வீரமிக்க துருக்கிய பொதுமக்களும் எவ்வாறு சதிப்புரட்சிக்கு எதிராக துணிகரமாக செயற்பட்டார்களோ அதைவிட பல மடங்கு தூய்மையுடனும், தியாகத்துடனும் அல்லாஹ்(சுபு)வின் ஷரீயத்தை தமது மண்ணில் நிலைநாட்டும் புரட்சிக்கு வித்திட வேண்டும். அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஏனைய காலணித்துவ சக்திகளின் பிடியிலிருந்து தமது இராணுவத்தையும், நாட்டையும் பாதுகாக்க களத்தில் குதிக்க வேண்டும். அவர்களின் கைக்கூலிகளாக இயங்கும் கட்சிகளையும், தலைமைகளையும் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் தூக்கியெறிய துணிச்சலாக முடிவெடுக்க வேண்டும். 'துருக்கிய தேசம்' என்ற குறுகிய குப்ரிய தேசிய சிந்தனையிலிருந்து விடுபட்டு 'ஓர் உம்மத்' என்ற அகீதா வழியமைந்த கோட்பாட்டில் நின்று அஷ்ஷாமையும், முழு முஸ்லிம் உலகையும் விடுதலை செய்யப்; புறப்பட வேண்டும்.

அப்போது இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் பாதுகாக்கிறோம் என்ற நம்பிக்கையில் வீதிக்கிறக்கிய முஸ்லிம்கள் இரு நாட்கள் கழித்து இவை போன்ற செய்திகளை வாசிக்க மாட்டார்கள்.

அப்போது சதிப்புரட்சியை அடக்கிய சூடு தணிய முன்னரே எமது தலைமைகள் எம்மை ஏலமிடும் இவைபோன்ற அவலமும், அவமானமும் எமக்கு ஏற்படாது.

வெள்ளியன்று சதிப்புரட்சி முயற்சிக்கப்படுகிறது...

ஞாயிறன்று...


“இன்சேர்லிக் இராணுவ விமானத்தளத்திலிருந்து அமெரிக்க யுத்த விமானங்கள் சிரியாவுக்குள்ளும், ஈராக்குக்குள்ளும் தாக்குதல் நடாத்தும் அனுமதியை அர்துகானின் அரசு மீள வழங்கியுள்ளது.”

(17-07-2016 பென்டகன் அறிவிக்கிறது)


இருநாள் கழித்து செவ்வாய் அன்று...


“செவ்வாய்க்கிழமை ISIL போராளிகள் என நினைத்து தவறுதலாக நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் அமெரிக்க விமானத்தாக்குதலில் சிறுவர்கள் உட்பட சுமார் 60 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்...”

...தோற்கடிக்கப்பட்ட சதிப்புரட்சியுடன் மூடப்பட்ட இன்சேர்லிக் இராணுவ விமானத்தளம் மீளத்திறக்கப்பட்ட பின்னர் முதற் தடவையாக பறந்த விமானங்களைக் கொண்டே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது... (19-07-2016 டெலிகிராஃப் செய்தி வெளியிடுகிறது)



அர்துகானின் துருக்கி எங்கு பயணிக்கிறது புரிகிறதா?


Sources
http://darulaman.net/

Jul 17, 2016

மதிப்பிற்குறிய தையுப் எர்தூகான் அவர்களுக்கு!



உங்களது விவேகமான முயற்சி மூலம் ஒரு மோசமான விளைவை தரத்தக்க சதிமுயற்சி முறியடிக்கப் பட்டது! அல்ஹம்துலில்லாஹ். உங்கள் வார்த்தைகளுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளித்த மக்கள் மீண்டும் அதே மதிப்பை தருவார்கள் என்பதில் எமக்கு எவ்வித சந்தேகமுமில்லை.

நீங்கள் ஹிக்மத் என்ற பெயரில் உறவாடிய அல்லாஹ்வின் எதிரிகளே உங்களை கழுத்தறுக்க துணிந்தார்கள் என்பதை தாங்கள் எம்மைவிட நன்றாக அறிவீர்கள். ஆனாலும் துருக்கியின் வெளியுறவுக் கொள்கையின் சகல ஒப்பந்தங்களும் உடன் பாடுகளும் அந்த துரோகிகளுக்கு சாதகமாகவே இன்னும் இருப்பதையும் எம்மை விட நீங்கள் நன்றாக அறிவீர்கள்!


தம்மோடு நட்புறவு பாராட்டிய யூதக் கோத்திரங்களே வஞ்சம் செய்ய துணிந்தபோது அல்லாஹ்வின் தூதரது(ஸல்) முதல் அரசியல் நடவடிக்கை அவர்களுடனான ஒப்பந்தங்களை துண்டித்தது தான்! ஆனால் தாங்கள் இது விடயத்திலும் உங்கள் பாணியில் ஹிக்மத் வர்சனை பின்பற்றி படிப்படியாக முறிப்பதாக கூறுவீர்கள் என்றே எதிர்பார்க்கிறேன். அல்லது (உருப்படியான ஒரு ஜெனரேட்டர் பிளான்ட் கூட இருக்காத )துருக்கியில் உள்ள!!!! ஒரு அமெரிக்கன் மிலிட்டரி பேசுக்கு பவர்கட் செய்து! எம்மனதை குளிரப் பண்ணியது போல காத்திரமான சில பல வேலைகளை செய்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்!

நீங்கள் உடன்பாடு ரீதியாக உறவு வைத்திருக்கும் அந்த இஸ்லாத்தின் எதிரிகள் நட்புறவோடிருந்து திடீரென வஞ்சத்தில் குதித்தவர்கள் அல்ல! மாறாக காலம் காலமாக துரோகத்தை வழிமுறையாக கொண்டவர்கள்! இதெல்லாம் நாம் சொல்லித்தான் தாங்கள் தெரிய வேண்டியதில்லை! இதற்குப் பிறகும் அவர்கள் எந்த விதத்திலும் நம்பிக்கைக்கு உரித்தானவர்கள் அல்ல! மேலும் இவர்களே முஸ்லீம் நிலங்களில் இரத்த ஆற்றை ஓடவிட்டவர்கள்! இடுகாடாய் மாற்றியவர்கள், மாற்றிக் கொண்டிருப்பவர்கள்! இப்படிப் பட்டவர்களோடு நீங்கள் ஸிலோ மோசனில் ஒப்பந்தங்களை முறிக்கும் போது அவர்கள் வேகமாக எம்மில் பலருக்கு கபன் அணிவிக்கும் பணியை முடிப்பார்கள்!

அதைவிட ஒரு முக்கியமான விடயம் நீங்கள் செக்கியூலரி சத்தையும் தேசிய ஜனநாயகத்தையும் நம்பியுள்ளதே அந்த குள்ள நரிகள் முஸ்லீம் உம்மத்தை ஆடுகளாக்கி தேவைக்கு ஏற்ப பலியெடுக்க போட்ட திட்டம் என்பதை மறந்து விடாதீர்கள்! அதற்கு உடந்தையாக இருந்த முஸ்தபா கமால் அத்தாதுர்க் என்ற நயவஞ்சக துரோகியை மதிப்பித்தவாறே துருக்கியின் ஆட்சிக்கதிரையில் அமர்ந்துள்ளீர்கள் என்பதை நாம் நினைவூட்ட கடமைப் பட்டுள்ளோம்! அந்தவகையில் ஒரு அடிப்படை சதியின் நிழலில்தான் தாங்கள் அமர்ந்துள்ளீர்கள் என்பதை தங்களால் மறுக்க முடியாது!

இப்போது கூட ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை நாம் கேட்பது ஒன்றே ஒன்றுதான்; அது சதிப்புரட்சியை தடுக்க மக்களை அழைத்த அதே வார்த்தைகளை கொண்டு செக்கியூலரிச ஜனநாயகம் எனும் கமால் பாட்சாவின் ரூலிங் சிஸ்டத்துக்கு எதிராக குரல் கொடுத்து அவ்விடத்தில் இஸ்லாத்தை பிரதியீடு செய்ய மக்களை அழையுங்கள் என்பதே! உங்கள் வார்த்தைகளை நம்பி அதற்கு மக்கள் செவிசாய்க்க மறுத்தால் ஏதோ மிகப்பெரிய தவறு நிகழ்கிறது என்பதை உங்களாலும் எம்மாலும் புரிய முடியும்! இந்த சரியான சந்தர்ப்பத்தை தவறவிட்டால் எப்போதுதான் இவைகளை செய்யப் பேகிறீர்கள்!?

இவண்
முஸ்லிம் உம்மத்தில் ஒருவன்.

கசப்பான சில உண்மைகள்!


அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை எதிர்க்கவேண்டும் என்ற துருக்கியின் அந்த நினைப்பு வரவேற்கத் தக்கது. ஆனால் அதுதான் ஒரு முஸ்லிம் எதிர்பார்க்கும் இஸ்லாமிய அரசியலின் ரூபம் என நினைத்தால் அதுவும் ஒரு தவறான நிலைப்பாடு! இஸ்லாத்தின் அரசியல் என்பது முற்றாக வஹிவழியில் தன் அதிகாரக்கட்டமைப்பையும் அதனடி உடனடியாக சிவில் நிர்வாகம் இஸ்லாத்தின் ஏவல் விலக்கள்களை அடிப்படையாக கொண்டு அமுலாக்கப் படுவதாகும்.

இதனடி அந்த நிலத்தின் பொருளாதாரக் கொள்கை , கல்வி கலாச்சாரக் கொள்கை, வெளியுறவுக் கொள்கை போன்ற சகல துறைகளும் ‪#‎வஹியின்‬ கட்டளைக்கு ஏற்ப பிரகடனப்படுத்தப்பட்டு அமுல் நடாத்தப்படுவதாகும்; அதுவரை அந்த நிலம் முஸ்லீம்களை அதிகமாக கொண்டும் ஒரு முஸ்லிமை கொண்டும் ஆளப்பட்டாலும் அது ‪#‎தாருல்‬ குப்ர் என்ற அந்தஸ்த்தை விட்டும் மாறிவிடாது!


முன்னால் சோவியத் யூனியனின் உடைவிற்கு பிறகும் அமெரிக்காவை அதன் பாலிசியை எதிர்க்கும் பல அதிகார வலயங்களை எம்மால் இனங்காட்ட முடியும். கியூபா, வடகொரியா, பிரேசில், கொலம்பியா, வெனிசுலா.... இப்படி இந்த லிஸ்ட் நீண்டது! ஒருவகையில் முஸ்லீம் உலகுக்கான சாதக அரசியலாக இதை கருத முடியுமே தவிர இஸ்லாமிய அரசியலின் வடிவமாக இதை கருத முடியாது! மேலும் அமெரிக்காவுக்கு உள்ளேயே அமெரிக்க எதிர்ப்பாளர்களை ஏராளமாக காணலாம்.

ஒரு நிலம் முதலாளித்துவ, கம்யூனிச அரசியல் பொருளாதார சமூக கல்வி கலாச்சார நிலைப்பாட்டிலிருந்து முற்றாக விடுபட்டு அந்நிலத்தின் இராணுவம், மக்கள் நிபந்தனையற்ற முறையில் இஸ்லாத்தை அமுலாக்கம் செய்ய உடன்படும் நிலையிலேயே அது #தாருல் இஸ்லாமாக மாறுகிறது. அங்கு பெரும்பான்மை மக்கள் முஸ்லீம்களாக இல்லாதிருப்பினும் சரியே! இத்தகு கோட்பாட்டு உண்மையை கருத்தில் கொண்டே நாம் துருக்கியை மட்டுமல்ல முஸ்லிம் உலகின் சகல அதிகார நிலங்களையும் நோக்க வேண்டியுள்ளது! கசப்பாக இருந்தாலும் இதுதான் உண்மை.

இப்போது அமெரிக்க எதிர்ப்பு முகத்தை எர்தூகான் அரசு காட்டினாலும் கமால் பாட்சாவின் துரோக அரசியலை கைவிட்டு அதன் மேல் காறி உமிழ்ந்துவிட்டு அந்த எதிர்ப்பை காட்டவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. முஸ்லீம் உலகின் மனோபாவத்தை தன் பக்கம் ஈர்க்கும் ஒருவகை மொஸ்மரிச பாலிசியை அவர் கையால்வதாகவே கருத முடிகிறது! இந்தப் பதிவின் மீது ஏகப்பட்ட முரண் விமர்சனங்கள் வரும் என்பதை நான் அறிவேன். அதற்கெல்லாம் பதில் சொல்லப் போவதில்லை காலம் இன்ஷா அல்லாஹ் பல உண்மைகளை புரியவைக்கும்.

Jul 16, 2016

துருக்கியில் இராணுவச் சதிப்புரட்சி தோல்வி...!!!!


துருக்கியில் இராணுவச் சதிப்புரட்சி தோல்விகண்டிருப்பதும், அர்துகானின் அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டிருப்பதும் உண்மையிலேயே ஒரு மகிழ்ச்சியான விடயம். இதற்கான காரணம் ஒன்றே ஒன்றுதான்: வரவிருந்த மாற்றீடு மிக மோசமானது! முஸ்தபா கமாலை “நபியாக” ஏற்றுக்கொண்ட அதிதீவிர மதஒதுக்கல் கொள்கையை “தீனாக” ஏற்றுக்கொண்ட இராணுவ ஆட்சியாளர்கள் ஒரு சாபக்கேடே! அவர்களை எந்த முஸ்லிமாலும் ஏற்றுக்கொள்ள முடியாது!

அர்துகானை உள்ளதில் நல்லதாக ஒரு கூட்டம் ஏற்றுக்கொண்டிருக்கின்றது. அதேவேளை, இன்னொரு கூட்டமோ அர்துகானிற்கு அப்பால் ஒரு நல்லது இல்லவே இல்லை என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றது. இந்த இரண்டாம் நிலைப்பாடு ஆரோக்கியம் இல்லாத ஒரு நிலைப்பாடு; அது அர்துகான் என்ற மனிதனின் அரசியல் செயற்பாடுகள் தொடர்பாக முன்வைக்கப்படும் நியாயமான விமர்சனங்களைக்கூட பரிசீலனை செய்யவும் ஏற்கவும் மறுக்கின்ற ஒரு நிலைப்பாடு.

பொதுவாக இஸ்லாமிய அரசியல் குழுக்களுக்கு மத்தியில் தங்கள் இலக்குகள் தொடர்பாக கருத்துவேறுபாடுகள் எதுவுமில்லை. (இஸ்லாமிய ஆட்சியினை நிறுவுவதே அனைவரதும் இலக்கு.) இலக்குகளை அடைவது தொடர்பான வழிமுறைகள் தொடர்பாகவே அநேக முரண்பாடுகள் காணப்படுகின்றன.

சுருக்கமாகச் சொன்னால், பாராளுமன்ற ஜனாநாயக முறையினூடாக ஒரு இஸ்லாமிய ஆட்சியினை நிறுவுவது சாத்தியம் என்று நம்புகின்றார் அர்துகான். எனவே இவ்வாறன வழிமுறையில் நம்பிக்கை கொண்டோர் பொதுமக்களின் அமோக ஆதரவைத் தம் பக்கம் வைத்திருப்பதிலேயே கூடிய கவனம் செலுத்துகின்றார்கள்.

இந்த வழிமுறையை (எனவே அர்துகான் போன்றோரை) விமர்சிப்போரின் நிலைப்பாடு பின்வருமாறு காணப்படுகின்றது:

உண்மையான ஆட்சிமாற்றம் இராணுவத்தின் ஆதரவைப் பெறுவதிலேயே தங்கியுள்ளது; அது வெறுமனே மக்களின் ஆதரவைத் திரட்டுவதில் அல்ல.

இதற்கு உதாரணமாக தென்னமெரிக்காவில் இடம்பெற்ற அத்தனை இராணுவப்புரட்சிகளையும் பட்டியல் இடுகின்றார்கள் இவர்கள். அதுமட்டுமல்லாது, அல்ஜீரியா, பாலஸ்தீன், அண்மையில் எகிப்து போன்ற முஸ்லிம் நாடுகளிலும் கூட இராணுவத்தின் ஆதரவு தங்கள் பக்கம் இல்லாததால் தேர்தல்களில் அமோக வெற்றியீட்டிய இஸ்லாமியக் கட்சிகள் எவ்வாறு அதிகாரத்தைப் பிடிக்கமுடியாமல் போயின என்பதையும், பின்னர் எவ்வாறு இராணுவங்களால் துவம்சம் செய்யப்பட்டன என்பதையும் இவர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.

இந்தக் கருத்துமுரண்பாட்டின் தொடர்ச்சியையே “அர்துகான் எவ்வாறு இராணுவப் புரட்சியிலிருந்து தப்பித்துக்கொண்டார்?” என்ற கேள்விக்கான விடையிலும் அவதானிக்க முடிகின்றது.

பொதுமக்களே இந்தப் புரட்சியைத் தோற்கடித்தனர் என்கின்றனர் அர்துகானிய சிந்தனையாளர்கள். இல்லை! இராணுவத்தில் ஒரு பகுதியே இந்தப் புரட்சியைத் தோற்கடித்தனர் என்கின்றனர் அவரின் அரசியல் போராட்ட வழிமுறையை விமர்சிப்போர்.

இதில் எந்த நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது? பொதுவாக இராணுவங்கள் “ரோபோக்கள்” போன்றவவை. அவற்றிடம் மனிதாபிமானச் சிந்தனைகள் இருப்பதில்லை. சுடுவது, கொல்லுவது, எரிப்பது அவர்களின் தொழில். சீனாவின் தினமன் சதுக்கத்திலும் எகிப்தின் அந்-நஹ்தா சதுக்கத்திலும் இதை நம்மால் காணமுடிந்தது.

துருக்கியில் முயற்சிக்கப்பட்ட இராணுவப் புரட்சியை எதிர்த்து மக்கள் வெள்ளமாக வீதிக்கு இறங்கியது உண்மை. ஆனால், புரட்சிசெய்த இராணுவத்தினரின் யுத்ததாங்கிகளை நிறுத்தியது மக்கள் அல்ல! அது துருக்கிய இராணுவத்தினரின் மற்றொரு பகுதியினரே! புரட்சிக்காரர்களுக்கு இராணுவத்திற்குள் பரவலான ஆதரவு இருக்கவில்லை. எனவே அர்துகானிற்கு ஆதரவான இராணுவப் பகுதியினர் தங்களின் F16 க்கொண்டு பயமுறுத்தியும், தாக்கியும் புரட்சிக்காரர்களைப் பணியவைத்தார்கள்.

இந்த இராணுவப் புரட்சியின் போது துருக்கிய இராணுவத்தின் பெரும் பகுதியினர் அர்துகானுக்கு ஆதரவாக செயற்பட்டது உண்மை. ஆனால், இஸ்ரேலுடனான ஒரு யுத்தமோ அல்லது சிரியாவில் ஒரு மனிதாபிமானத் தலையீடோ என்று வருகின்றபோது இந்த இராணுவம் அர்துகானுக்கு எந்த அளவிற்கு ஆதரவு வழங்கும் என்பதில் பெரும் சந்தேகம் இருக்கின்றது. அர்துகான் ஏற்கனவே இஸ்ரேலுடனான சுமுக நிலையைப் பேணிவருவதற்கு அதுவே காரணமாக இருக்கலாம்.


From Mohamed Faizal

Mar 23, 2016

துருக்கி, சிரிய அகதிகளை துரும்பாக வீசி சூதாடி வருகிறது


       

 
 
கடந்த மார்ச் 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஐரோப்பிய ஒன்றியமானது, தான் துருக்கியுடன் ஓர் முக்கிய உடன்பாட்டிற்கு வந்ததாக அறிவித்தது. அந்த உடன்பாடு துருக்கியூடாக சிரிய அகதிகள் மற்றும் ஏனைய அகதிகள் ஐரோப்பாவிற்குள் நுழைவதை துருக்கி கட்டுப்படுத்த வேண்டும் என்பது பற்றியது. அகதிகள் பிரச்சனை உச்சகட்டத்தை எட்டிய வேளையில் பிரஸல்ஸிலே இடம்பெற்ற மாநாட்டிலே துருக்கிய பிரதமர் அஹ்மத் தாவுதுக்லு, தாம், துருக்கியூடாக அகதிகள் ஐரோப்பாவுக்குள் நுழைவதை கட்டுபடுத்த வேண்டுமானால், அல்லது ஏற்கனவே துருக்கியை விட்டு கடலினூடாக கிரேக்கத்திற்கு வெளியேறிய அகதிகளை துருக்கிக்குள் மீள அனுமதிக்க வேண்டுமானால் தமக்கு 6 பில்லியன் யூரோக்கள் தரவேண்டும் என்றும், தமது பிரஜைகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் விசாவின்றி பயணிப்பது அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், துருக்கியை ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைத்துக் கொள்ளும் பேச்சுக்கள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்திருந்தார். அதேநேரத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தமது நாட்டுக்குள் அகதிகள் நுழைவதைத் தடுப்பதற்காக தனது எல்லைகளை மென்மேலும் இறுக்கமாக மூடிவந்தன. சிரியா, ஆப்கான், ஈராக் மற்றும் ஏனைய சில முஸ்லிம் நாட்டிகளிலிருந்து யுத்தத்தின் கோரப்படியிலிருந்து தப்பிப்பதற்காக வெளியேறிய முஸ்லிம் ஆண்கள், பெண்கள், குழந்தைகள என சுமார் 14,000 அகதிகள் மூடப்பட்டிருக்கும் மஸடோனிய எல்லையில் கடுமையான குளிரிலும், மழையிலும் போதுமான உணவோ, மருத்துவ வசதியோ, சுகாதார வசதியோ இன்றி வாடுகின்றனர். “எல்லைகளற்ற வைத்தியர்கள்” என்ற தொண்டு நிறுவனம் ஐரோப்பிய தலைவர்களைப் பார்த்து அவர்கள் “யதார்த்த உலகில் இல்லை” என்று விமர்சித்துள்ளது.
 
சில பிரதிபலிப்புக்கள்:
 
தற்போது பிரஸல்ஸ், உலகிலுள்ள மிகவுமே பலகீனமான, நாதியற்ற மக்களின் உரிமைகளை வணிகம் செய்யும் ஒரு கேவலமான சந்தையாக மாறிவருகிறது. ஐரோப்பிய நாடுகள் தமது குறுகிய அரசியல் மற்றும் தேசிய நலன்களை பாதுகாத்துக்கொள்வதற்காக தாமே முன்னின்று உருவாக்கிய சர்வதேச மற்றும் ஐரோப்பிய பட்டயங்களை உதறித்தள்ளி வருகின்றனர். தாம் வளர்த்துவந்த மகோன்னத சட்டங்களாக பீற்றிக்கொள்ளும் தமது மனித உரிமைச் சட்டங்களிலேயே அவர்கள் தடக்கி விழுந்து வருகின்றனர்.
 
அகதி அந்தஸ்த்தை கோரும் மக்களை கூட்டாக மூன்றாவது நாட்டுக்கு பலவந்தமாக வெளியேற்றுவது சர்வதேச மற்றும் ஐரோப்பிய சட்டத்தின் படி தடைசெய்யப்பட்டதாகும். ஏனெனில் அது 1951ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டினதும், மனித உரிமைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் மாநாட்டினதும், ஏனைய சர்வதேச ஒப்பந்தங்களின் தீர்மானங்களினதும் அத்துமீறலாகும். இவ்வாறு பலவந்தமாக வெளியேற்ற நினைப்பது பற்றி கருத்துத் தெரிவித்த ஐ. நா சபையின் அகதிகளுக்கான உயர் ஆளுநர், “சிரிய அகதிகளை நாடுகடத்துவது அவர்களின் பாதுகாப்பை கடுமையாக கேள்விக்குள்ளாக்குவதுடன், அவர்களை மீண்டும் யுத்த வலயத்திற்குள் தள்ளும் நிலையை உருவாக்கும்” என்பதாக எச்சரிக்கிறார். ஐரோப்பாவின் அதிகரித்து வரும் இந்த நிலைப்பாட்டை விமர்சிக்கின்ற “த காடியன்” பத்திரிகையின் ஒரு கட்டுரையாளர் “ ஐரோப்பா பணம் கொடுக்க தயாராக இருக்கிறது. ஆனால் ஒரு விடயத்திலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறது. அதுதான் அகதிகளை தமது எல்லைக்கு வெளியே வைத்திருப்பது” என எழுதுகிறார். ஆரம்பம் தொட்டே அகதிகளை தனது நாட்டுக்குள் பெருமளவில் வரவேற்ற ஜேர்மனிய ஆளுநர் அன்ஜெலா மேர்க்கலின் நிலைப்பாட்டால் உள்நாட்டுக்குள்ளும், ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளும் அவரது ஆதரவு பெருமளவில் சரிந்து வருவதை நாம் அவதானிக்கிறோம்.
 
இந்த சூழலில் சிரிய அகதிகள் பிரச்சனை தொட்பாக ஒரு முஸ்லிம் நாடான துருக்கி அடுத்தடுத்து எடுக்கின்ற நிலைப்பாடுகள் எம்மை வாந்தி எடுக்கச் செய்கின்றன. முதலாளித்துவ, தேசியவாத துருக்கிய அரசாங்கம் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள அகதிகளின் அவலத்தை ஐரோப்பாவில் தான் அடைய நினைக்கும் அரசியல் இலக்குகளுக்காக சூதாடும் சீட்டாகப் பயன்படுத்தும் கேவலத்தைச் கனகச்சிதமாகச் செய்து வருகிறது. கிரேக்கத்திலும், ஐரோப்பிய நாடுகளின் எல்லைகளிலும் பச்சிளம் பாலகர்களுடன், ஆண்களும், பெண்களும் தம்மை கடும் குளிரிலிருந்து காத்துக்கொள்ள எதுவுமின்றி உரைந்து போகும் காட்சிகளைக் கண்டபோதோ, காற்றிலும், மழையிலும் அடிபட்டு உண்ண உணவின்றியும், ஒதுங்க இடமின்றியும் நின்ற காட்சிகளை பார்த்தபோதோ அல்லது அந்த நாடுகளின் எல்லைப்பாதுகாப்பு படைகளினால் மனிதநேயமற்ற முறையில் அவர்கள் நடத்தப்பட்ட போதோ, அல்லது சுமார் நாலாயிரத்துக்கு மேற்பட்ட முஸ்லிம்கள் மத்தியதரைக்கடலிலே மூழ்கி மரணித்தபோதோ, அவர்களை தமது நாட்டுக்குள் வைத்திருப்போம், பாதுகாப்போம், வாழ்க்கை கொடுப்போம் என்று எண்ணாத துருக்கிய அரசு, இன்று இந்த அகதிகளை தமது நாட்டுக்குள் வைத்திருக்க ஐரோப்பிய ஒன்றியத்திடம் கெட்டித்தனமாக பிச்சை கேட்கும் காட்சி முஸ்லிம் உம்மத்திற்கே இழிவைப் பெற்றுத் தருகிறது. ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமின் சகோதரன் என்ற  சகோதர வாஞ்சையுடன் அல்லது ஒடுக்குமுறையிலிருந்து தப்பிப்பிழைத்து வருகின்ற மக்களை அரவணைத்து அடைக்களம் கொடுப்பது மார்க்கக் கடமை என்ற சிந்தையுடன் ஒரு நொடிப்பொழுதும் சிந்திக்காது, இந்த முஸ்லிம்களின் அவலத்தை தமது அருவருப்பான அரசியல் அறுவடைக்காக பாவித்து வருவதின் ஊடாக, தானும் ஒரு சாதாரண கீழ்த்தர முதலாளித்துவ தேசமே என்பதை துருக்கி மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது.
 
மேலும் இந்த சிரிய அகதிகள் பிரச்சனை, மேற்குலகும், துருக்கியும், ஏனைய பல முஸ்லிம் அரசுகளும் நடைமுறைப்படுத்தும் ஜனநாயகத்தினதும், மதஒதுக்கல் கொள்கையினதும், முதலாளித்துவத்தினதும், தேசியவாதத்தினதும் கோரமான முகத்தை உலகுக்கு தோலுரித்து காட்டியிருக்கிறது. அதேபோல இந்த முறைமையின் கீழ் மனித உரிமையை நிலைநாட்டப்போகிறோம் என்ற நியாயத்தைக் கூறி ஏனைய நாடுகளின் மீது  குண்டு வீசி, ஆக்கிரமித்து, காலணித்துவம் செய்யும் அரசுகள், தமது வாக்கு வங்கிகளில் அரசியல் பிரபல்யத்தை வளர்த்துக் கொள்வதற்காக அடக்குமுறைக்குள்ளான பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளை பிடிங்கி எறிவதையும் நாம் அவதானிக்கிறோம். இந்த முறைமைகள் கொள்கையை விட ஜனரஞ்சகத்தை தூக்கிப்பிடிப்பதை காண்கிறோம். இந்த முறைமைகள் மனிதர்களிடமிருந்து மனிதத்தையும், மனிதாபிமானத்தையும், அகற்றி, மனித அவலங்களைக் கண்டு கசியாத கண்களையும், அழுகுரல்களைக் கேட்டு கலங்காத உள்ளத்தையும் விதைத்திருப்பதை கவலையுடன் நோக்குகிறோம்.
 
அகதிகளாக்கப்பட்டு பொருத்தமான அடைக்களத்தை பெற்றுக்கொள்ள முடியாது, ஒரு நாட்டிலிருந்து இன்னுமொரு நாட்டுக்கும், பின் மீண்டும் அந்த நாட்டிலிருந்து பிரிதொரு நாட்டுக்கும் விரட்டப்பட்டு, பல நாடுகளின் எல்லைகளில் வாரக்கணக்காக, மாதக்கணக்காக பல்லாயிரக்கணக்கான மக்களை பரிதவிக்க விடும்  “தேசிய அரசுகள்” என்ற சிந்தனை நடைமுறைக்கு உதவாதது என்பதையும், அது நவீன காலப் பிரச்சனைகளை எதிர்கொள்ள சக்தியற்றது என்பதையும் இந்த அகதிகள் பிரச்சனை நிரூபித்துள்ளது.  சொல்லொண்ணா துயரங்களை சந்தித்து வரும் இந்த அகதிகளை உலகம் கையாளும் விதம் இன்றைய உலக ஒழுங்கின் கேவலமான தராதரத்தை படம்பிடித்துக் காட்டுகிறது. மனித விழுமியங்களுக்கும், அவர்களின் கண்ணியத்திற்கும் ஒரு சதத்தின் பெறுமதியைக் கூட வழங்க நினைக்காத, சடவாத முதலாளித்துவ முறைமைகளால் ஆதிக்கம் பெற்ற இன்றைய உலக ஒழுங்கு இந்த அகதிகள் பிரச்சனையையோ அல்லது இதுபோன்ற உலகம் எதிர்நோக்குகின்ற பல்வேறு அரசியல், பொருளாதார, சமூகப் பிரச்சனைகளையோ தீர்ப்பதற்கு தகுதியற்றது என்பதை உலகம் தற்போது புரிந்து வருகிறது. எனவே ஒடுக்கபட்;ட, நாதியற்ற, பல்வேறு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுயநலமும், போட்டியும் நிறைந்த இன்றைய உலக ஒழுங்கின் கீழ் கட்டுண்டிருக்கும் எந்தவொரு தேசமும் முறையாக உதவப்போவதில்லை.
 
எனவே உலகம் உடனடியாக இன்னுமொரு உலக ஒழுங்கை வேண்டி நிற்கிறது. அந்த உலக ஒழுங்கு மனித அவலங்களை, சடவாத பொருளியல் இலாபங்களை அடிப்படையாகக் கொண்டோ, குறுகிய தேசிய நலன்களைக் கொண்டோ கையாளாத, மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்டு அதிலே எவ்விதத்திலும் சமரசம் செய்யாத ஒரு உலக ஒழுங்காக தோற்றம் பெற வேண்டும். அத்தகைய ஒரு உலக ஒழுங்கை நோக்கி உலகம் நகருவதற்கு, நீதியையும், மனித நேயத்தையும் எந்தகைய விலையைக் கொடுத்தாயினும் உலகில் நிலைநாட்டக்கூடிய நேர்வழிபெற்ற கிலாஃபா ஒன்றினால் மாத்திரமே வழிகாட்ட முடியும். அந்த கிலாஃபா அரசு, உலகிலுள்ள ஏனைய தேசங்களுக்கு மனிதர்களை மனிதர்களாக நோக்குகின்ற, அவர்களின் அவலங்களைக் கண்டு தூய்மையாக அக்கறை கொள்கின்ற, நவீன கால சவால்களை தீர்க்கமான அறிவுடனும், நேர்மையான அணுகுமுறையுடனும் எதிர்கொண்டு தீர்த்து வைக்கின்ற பாதையில் வழி காட்டும்.
 
பக்கச்சார்புக்கும், அநீதிக்கும் அப்பாற்பட்டவனான, முழு மனித குலத்தினதும் நலனை நன்கறிந்தவனான அல்லாஹ்(சுபு)வின் சட்டதிட்டங்களின் அடிப்படையில் ஆட்சி செய்யும் கிலாஃபா அரசால் மாத்திரமே மனிதகுலத்தை உய்விக்க முடியும். வரலாற்றில் மனிதநேயத்திற்கும், பெரும்தன்மைக்கும், உதவிக்கரம் நீட்டுவதற்கும் தனக்கென தனியான தடம்பதித்த, முஸ்லிம்கள், முஸ்லிம் அல்லாதவர்கள் என்ற பாகுபாடு இல்லாது, அல்லல்பட்ட, அவலப்பட்ட மக்களுக்காக தனது எல்லைகளைத் திறந்து அடைக்களம் கொடுத்த பெருமைக்குரிய வரலாற்றை உடைய கிலாஃபா அரசின் மீள் வருகையே இன்றைய உடனடித் தேவையாகும்.  அத்தகைய ஒரு அரசு உலகில் தோற்றம் பெறும் போது ஏன் இறைவன் அவனது இறுதித்தூதரை அகிலங்களுக்கெல்லாம் அருட்கொடை என்று அழைத்தான் என்பதை உலகம் வெகுவிரைவில் உணர்ந்து கொள்ளும்! இன்ஷா அல்லாஹ்!
 
(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை. (அல் அன்பியா:107)

Mar 15, 2016

செய்தி பார்வை 10.02.16

தலைப்பு செய்திகள்:
 
 
 - நயவஞ்சக மெர்கல் மற்றும் செல்லப்பிராணி எர்துகான்.
 

- சிரியாவில் நடைபெறும் இனச்சுத்திகரிப்பு.
 

- அலெப்போவின் மீது படையெடுப்புக்கான நேரம் நெருங்கிவிட்டது
.

 நயவஞ்சக மெர்கல் மற்றும் செல்லப்பிராணி எர்துகான்.
 

 2016 பிப்ரவரி 8ம் நாள் திங்கட்கிழமை அன்று துருக்கி மற்றும் ஜெர்மனி நாடுகளின் அதிகாரிகள் “சட்டத்திற்கு புறம்பாக குடியேறுபவர்களை” கட்டுப்படுத்த போவதாக அங்காராவில் அறிவித்தார்கள். இந்த அறிவிப்பு ஜெர்மனியின் அதிபர் ஏஞ்சலா மெர்கலின் துருக்கி பயணத்தை தொடர்ந்து விடப்பட்டது. ரஷ்யா சிரியாவின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வருவது என்னை ஆச்சரியப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் என்னை திகிலடைய வைத்துள்ளது என மெர்கல் குறிப்பிட்டார், இந்த சமீபத்திய அலெப்போவின் மீதான தாக்குதல் நடவடிக்கை 35,000 புதிய அகதிகளை துருக்கியின் எல்லைக்கு கொண்டு வந்திருக்கிறது. இந்த வெடிகுண்டு தாக்குதல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள அகதிகளின் படையெடுப்பு அதிகரித்தல் ஆகியவற்றை தொடர்பு படுத்தும் அதே வேளையில் ஜெர்மனி சிரியாவில் நிலைகொண்டு அதன் மீது வெடிகுண்டுகளை வீசி அங்குள்ள மக்களை விரட்டியடித்து இன்னும் அதிகமான அகதிகளை உருவாக்கி வரும் அதன் நேச நாடுகளின் விமானங்களை காப்பாற்றி வருகிறது. நிச்சயமாக அறிவார்ந்த செயல் என்னவாக இருக்கும் என்றால் ஐக்கிய ஐரோப்பிய நாடுகளை நோக்கி மிக ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் அகதிகளை உருவாக்காமல் தடுக்க அந்நாட்டின் மீது வெடிகுண்டு தாக்குதல்களை தடுத்தாலே போதுமானது. எர்துகானும் பழிக்கு உள்ளாவதிலிருந்து தப்பித்தவர் கிடையாது ஏனெனில் அவர் அமெரிக்கா சிரியாவின் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க விமானங்களை துருக்கி விமானத்தளத்திலிருந்து இயக்க அனுமதி அளித்தவர். துருக்கி பில்லியன் கணக்கில் அகதிகளுக்கு தஞ்சம் கொடுப்பதற்காக செலவு செய்யலாம் ஆனால் இந்த சிரியாவின் பிரச்சினையை தனது இராணுவத்தை அனுப்புவதன் மூலம் ஓரிரு வாரங்களில் தீர்த்து வைத்துவிட முடியும். துருக்கி தனது அனைத்து வெளியுறவு கொள்கைகளில் வெறுமனே மேற்கத்திய தீர்வுகளுக்கு ஆதரவு தெரிவித்து அதற்கு உதவும் நிலைப்பாட்டையே கொண்டுள்ளது, அது தன்னிச்சையாக தான் எடுக்கவிருக்கும் தீர்வுகளை நடைமுறை படுத்துவதற்கும் அதனை செயலாற்றுவமற்குமான ஆற்றல் அதிகாகவே இருந்தபோதிலும்  அது என்றும் அதற்கென ஒரு தன்னிச்சையான தீர்வுகளை உருவாக்குவதில்லை.
 

 சிரியாவில் நடைபெறும் இனச்சுத்திகரிப்பு.
 

சிரியாவில் கைதிகளை ‘அடியோடு அழிக்கும்’ வேலை நடந்து வருவதாக ஐ.நா வின் குறிப்பிட்டிருக்கிறது. பல்லாயிரக்கணக்கான சிறைக்கைதிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும், மரணம் ஏற்படும் அளவு அடித்துள்ளதாகவும் அல்லது சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு போரில் சிக்கி மரணிக்கும் விதமாக அவர்களை  கண்டு கொள்ளாமல் அங்கேயே விட்டு விட்டதாகவும் சர்வதேச விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள், இவ்வகையான செயல்கள் சர்வதேச சட்டப்படி “இனச் சுத்தகரிப்பு” என்னும் வகையை கொண்டது. அதிபர் பஷார் அல்-அசாதின் அரசால் கொல்லப்பட்ட சிறைக்கைதிகளை பற்றிய 25 பக்கங்களை கொண்ட அறிக்கையை ஐ.நா வின் அங்கீகாரம் பெற்ற விசாரணை குழு சமர்ப்பித்தது. இந்த அறிக்கை 2011 மார்ச் முதல் 2015 நவம்பர் வரை எடுக்கப்பட்ட 621 நேர்காணல்களிலிருந்து தொகுக்கப்பட்டதாகும். “அதிகமான அளவில் நடைப்பெற்ற சிறைக்கைதிகளின் மரணங்களை காணும்போது  மனிதநேயத்திற்கு எதிரான இனச்சுத்தகரிப்பு செய்யும் இந்த அளவிற்கான குற்ற செயல்களை செய்த்தற்கு சிரிய அரசாங்கமே முழு பொறுப்பு,” என இந்த விசாரணை குழுவின் தலைவர் பால் பின்ஹெய்ரோ, கூறினார். மேலும் அவர் ” இப்போது உயிரோடிருக்கும் ஒவ்வொரு சிறைக்கைதியும் நினைத்து பார்க்க முடியாத அளவு சித்தரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றனர்.” என கூறினார்.
 


அலெப்போவின் மீது படையெடுப்பபுக்கான காலம் கணிந்துவிட்டது.
 

சிரியாவின் மிகப்பெரிய மற்றும் வர்த்தக நகரம் இப்போது பஷார் அல்-அசாதின் அரசு முழு அளவிலான படையெடுப்பு நடத்த ஆயத்தமாகி வருவதால் பெரும் பிரளயத்தில் சிக்கி உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் இந்த அரசின் முற்றுகை நடத்த இருப்பதன் காரணமாக தங்களது உணவு மற்றும் இதர வாழ்வாதார தேவைகள் கிடைக்காமல் போக்க்கூடிய அபாயமான நிலையில் உள்ளனர். சில மாதங்களுக்கு முன்னர் தான் தமஸ்கஸின் அரசு அலவிகளின் கோட்டையான லதாகியாவில் போராளிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து பின்வாங்கும் நிலையிலிருந்தது. ஆனால் தக்க சமயத்தில் நடத்தப்பட்ட ரஷ்யாவின் தாக்குதலால் அல்-அசாத் அரசு கவிழ்ந்து விடாமல் பாதுகாக்கப்பட்டது. ரஷ்யாவின் தாக்குதல் தொடக்கத்தில் பின்னடைவை சந்தித்தாலும், பின்னர் அது அசாத் அரசுக்கு பலன்களை தர தொடங்கியுள்ளது. இந்த வாரம், ரஷ்ய வான்வழி தாக்குதல் அல்-அசாத் மற்றும் அவருடைய ராணுவப்படைகள் போராளிகள் வசம் இருந்த துருக்கி எல்லையையும் அலெப்போவையும் இணைக்கும் “அஜாஜ் (Azaz corrider) சாலையை நெருக்க உதவியது. அரசின் படைகள் ஷி’ஆ வீரர்களுடன் கூட்டு சேர்ந்து  இந்நகரை தெற்கு, மேற்கு மற்றும் வடக்கிலிருந்து இந்தகரை நோக்கி நகர்ந்து வருவதால் இந்நகரை சுற்றிவளைக்கும் வாய்ப்புகள் இவர்களுக்கு பிரகாசமாக உள்ளது. போராளிகள் வசம் இருக்கும் இப்பகுதி வீழ்ந்து விட்டால் இது அசாதிற்கு ஒரு மிகப்பெரிய வெற்றியாக அமையும் மற்றும் போராளிகளுக்கு இது 2011 ல் இந்த கிளர்ச்சி ஏற்பட்ட காலம் முதல் இதுவரை அது சந்தித்ததில் மிக மோசமான பின்னடைவாக அமையக்கூடும்.