Showing posts with label செர்பியா. Show all posts
Showing posts with label செர்பியா. Show all posts

Sep 17, 2015

ஹங்கேரியில் காவல்துறையினர் - குடியேறிகள் மோதல்

செர்பியாவிலிருந்து ஹங்கேரிக்குள் நுழைய முயற்சி செய்து வரும் குடியேறிகளுக்கும் ஹங்கேரி காவல்துறையினருக்கும் இடையில் மோதல் வெடித்துள்ளது.



ஹங்கேரிக்குள் நுழைய முயலும் குடியேறிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்படுகின்றன.

குடியேறிகள் மீது காவல்துறையினர் கண்ணீர்புகைக் குண்டுகளை வீசுவதோடு, தண்ணீரை பீய்ச்சியடித்தும் கூட்டத்தை கலைக்க முற்பட்டுவருகின்றனர்.

காவலர்கள் மீது கற்களை வீசியெறியும் குடியேறிகள், பாதையைத் திறந்துவிடும்படி கோஷமிட்டுவருகின்றனர்.

எல்லையில் மூன்று கவச வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதோடு, கலவர தடுப்பு காவல்துறையினரும் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.




செர்பியாவிலிருந்து ஹங்கேரிக்குள் நுழைய முயலும் குடியேறிகளைத் தடுத்து நிறுத்தும் ஹங்கேரிய காவல்துறையினர்.

ஹங்கேரி எல்லையில் போடப்பட்டிருக்கும் முட்கம்பி தடுப்புகளைத் தாண்டி ஒரு குடியேறிகளின் குழு அந்நாட்டிற்குள் புகுந்துவிட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹங்கேரியில் இன்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் புதிய விதிகளின்படி செர்பியாவிலிருந்து ஹங்கேரிக்குள் நுழைய விரும்பும் குடியேறிகள், தடுப்புகள் போடப்பட்ட பாதைகள் வழியாகத்தான் நுழைய வேண்டும்.

இந்தப் பாதை வழியாக வருபவர்கள் மீது சில மணி நேரங்களில் விசாரித்து முடிவெடுக்கப்படும் என ஹங்கேரி அரசு தெரிவித்துள்ளது.



BBC News

Sep 16, 2015

குடியேறிகள் விவகாரம்: ஹங்கேரியில் நெருக்கடி நிலை அறிவிப்பு

செர்பிய எல்லையை ஒட்டி அமைந்துள்ள தென் மாவட்டங்களில் ஹங்கேரி நெருக்கடி நிலையை   அறிவித்துள்ளது.
 
 
 
தடுப்பை மீறி நுழைய முயன்ற 60 பேரை கைதுசெய்திருப்பதாக ஹங்கேரி காவல்துறை தெரிவித்துள்ளது.
 

செர்பியா வழியாக குடியேறிகள் பெரிய அளவில் தங்களது எல்லைக்குள் நுழைவதைத் தடுக்கும் நோக்கில் ஹங்கேரி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்தத் தடுப்புகளை மீறி உள்ள வர முயன்ற அறுபது பேரை கைதுசெய்திருப்பதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இருநூறுக்கும் மேற்பட்ட குடியேறிகள், இரு நாட்டு எல்லையில் அமர்ந்து போராட்டம் நடத்திவருவதாக அங்கிருக்கும் பிபிசியின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

செர்பியாவின் ஹோர்கோ பகுதியில் அமர்ந்திருக்கும் அவர்கள், தங்களை உள்ளே அனுமதிக்கும்படி கோஷங்களை எழுப்பிவருகின்றனர்.

தாங்களை எல்லை கடக்க அனுமதிக்கும்வரை சாப்பிடவோ, தண்ணீர் அருந்தவோ போவதில்லை என அவர்கள் கூறியுள்ளனர்.

 
BBC News