Showing posts with label தேசியவாதச் சிந்தனை. Show all posts
Showing posts with label தேசியவாதச் சிந்தனை. Show all posts

Dec 1, 2015

தேசிய கீதம் பாடும்போது எழுந்து நிற்காத தேசப்பற்றும் முஸ்லிம்களும்....

முஸ்லிம்களை தேச பற்று இல்லாதவர்களாய் சித்தரித்து அன்னியர்களாய் சித்தரிக்கும் காட்சிகளை பார்த்து வருகிறோம்....

அதற்கான பதில்:

முஸ்லிம்கள் தேசியவாதிகள் அல்லர்....

பல தேசங்களை ஒன்றாக்க பிறந்தவர்கள்....

800 ஆண்டுகள் இந்தியாவை ஆண்டவர்கள்...

ஆக்கிரமித்த பிரிட்டனிடமிருந்து கடன் வாங்கி

எல்லை பிரித்து இந்திய தேசியம் என்று கூறினால் அதை

ஏற்று கொள்ளாதவர்கள்....

மொரொகோவிலிருந்து இந்தோனெசியா வரை....

கன்னியாகுமரியிலிருந்து கிரீமியா வரை....

தேசங்களை இணைக்க காத்திருப்பவர்கள்...

அவர்களுக்கு இஸ்லாம் தந்த அடையாளத்தை தவிர

வேறொரு அடையாளம் இல்லை...

முதலாளித்துவ ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்து

இந்தியா முதல் சவுதி வரை அனைத்து நாடுகளையும்

விடுவிக்க உழைப்பவர்கள்....

ஏகாதிபத்தியவாதிகளின் தேசியவாதம் எங்களிடம்

செல்லாது....

நாங்கள் முஸ்லிம்கள் தேசியவாதிகள் அல்ல....

நபி (ஸல்) கூறினார்கள்" (இன மத மொழி) வெறியின் அடிப்படையில் மக்களை அழைப்பவன் நம்மை சார்ந்தவன் அல்லன். அதற்காக போராடுபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன். அதற்காக உயிரை விடுபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன்". (நூல்:அபுதாவூத்)

Jun 6, 2014

தேசம் ,தேசியம் முஸ்லீம்களை எந்த நிலையில் வைத்துள்ளது !?




பேரம் பேசுதலுக்கான சூழ்நிலை நியாயங்களை உருவாக்குவது ,
அந்த உருவாக்கத்தின் ஊடாக யதார்த்தம் மறந்த ஒரு வாழ்வியலில் எதிர்
தரப்பை சிக்கவைப்பது என்பதுதான் முதலாளித்துவ சிந்தனா வாதத்தின்
அடிப்படை அரசியல் சிந்தனை . இன்னோர் வகையில் இதை தெளிவுபடுத்த
ஒரு சிறந்த உதாரணம் 'இஸ்ரேல் ' ஆகும் .


ஒரு அநியாயமான ஆக்கிரமிப்பாக 'முஸ்லீம் உம்மா' தேசியம் எனும்
சூழ்நிலை நியாயங்களை சரிகான வைக்கப் பட்டதன் ஊடாக இந்த 'இஸ்ரேலையும்' ஒரு (விரும்பத் தகாத) தேசமாக தானும்
அங்கீகரிக்க வைக்கப் பட்டது . அரசியல் நுணுக்கமான இந்த கருத்தியல் பேரம்
பேசல் முரண் பாடான ஒரு உணர்வலைகளை கொண்ட
ஒரு சமரசமாகும் இஸ்ரேல் ஒரு தேசமாகி அங்கும் 'மஸ்ஜித்கள் ' ! அந்த அரசியலை அங்கீகரித்த முஸ்லீம்கள் ! என ஒரு தேசிய சூழ்நிலை ஒரு புறம் , இன்னொரு புறம் தேசம் எனும் 'இறைமைக்குள் ' இஸ்ரேலை வைத்து கண்டிக்கவும் ,தண்டிக்கவும் துடிக்கும் இன்றைய முஸ்லீம் உலகு !
நகைப்புக்கு இடமான இந்த நாடக அரசியலில் ஏமாளி + கோமாளிப்பாத்திரத்தில் தன்னை அறியாமல் முஸ்லீம் நடிக்க வைக்கப் படுகிறான் . அரபி ,அஜமி காரணம் கூறி உதுமானிய
கிலாபத்தில் இருந்து உடைத்தெடுத்து அரேபியம் மன்னரிசமாக
மாறிய போது அவர்களுக்கு கூஜா தூக்கும் ' முல்லாக்கள் + சீடர்களுக்கு அரசியல் என்பது (அந்தப்புர சமாச்சாரங்களை மட்டுமே கொண்ட)
வெறும் பராக் ,பராக் என மாறித்தான் போனது ! கிலாபா பற்றி பேசுவோர்
'சைத்தான்களாக ' இவர்களால் சித்தரிக்க வைக்கப் பட்டார்கள் . 'யகூதியோடு'
நட்புறவாடி , நசாராவோடு கூட்டுக் குடும்பம் நடத்தும் 'கிங்குகள் '
நிணைக்கும் , விரும்பும் 'ரேஞ்சுக்குள்' வஹிக்கு விளக்கம்
கொடுக்கும் புரோகிதக் கும்பலாக பலர் 'புறமோசன் ' பெற்றார்கள் .
(இவர்களுக்கு இஸ்ரேலின் முஸ்லீம்கள் மீதான நரவேட்டையை விட , சவூதி மன்னன் அகற்றிய நான்கு முசல்லாக்கள் விடயம்'
வெரி இம்போர்ட் ' மத்ஹபு வாதத்தை உடைத்தானாம் சவூதி மன்னன் !!) 'சாபிரா , சாதிலா முதல் பாலஸ்தீனில் இன்று வரை தினம் தினம் கொல்லப்படும் , துன்புறுத்தப் படும் , அவமானப் படுத்தப்
படும் முஸ்லீம்கள் விடயத்தில் நிவாரணப் பிச்சையை விட அதிகமாக என்ன
கொடுத்தார்கள் இந்த 'மல்டி மில்லியன் கிங்குகள் '!!


முதல் கிப்லா எக்கேடு கெடட்டும் ! எமது சமஸ்தானம் ,தேசியம் டெவலப்'
செய்யப்பட வேண்டும் என்ற சிந்தனையிலேயே 'கஆபாவை ' தினம்
தினம் உடைக்கிறார்கள் இந்த மன்னரிச சுயநலவாதிகள் ! எவ்வாறு என்றால் முஸ்லீம்களை அவமானப் படுத்துபவர்களோடு (யகூதி ,நசாராவோடு ) பகிரங்க கூட்டாளிகளாக இவர்களே இருக்கிறார்கள் . தேசம் ,தேசியம் என்ற மனப்பாங்கு முஸ்லீம்களை எங்கே கொண்டு வைத்துள்ளது !
சிந்திக்க வேண்டிய விடயம்தான் .

May 31, 2014

'VALLEY OF THE WOLVES : PALESTINE ...' ஒரு விமர்சனப் பார்வை .


நியாயத்தை நியாயமாக சொல்வதில் தான் அநியாயம் வார்த்தை அளவிலாவது அழிக்கப்படுகின்றது.பாலஸ்தீனத்தின் விவகாரங்களில் தமக்கொரு நியாயத்தோடு சூழவுள்ள தேசியங்கள் தீர்வு காண புறப்படுவது , அதன் உண்மையான தீர்வு தொடர்பில் ஒரு தடையாகவே ஆகி விடும் . தேசியம் என்பதுதான் எமக்கு முன்னுள்ள முதல் தர 'ஜாஹிலீயத் '.

இந்த தேசிய வரைவிலக்கணத்தை மனதில் சுமந்தவர்களாக எடுக்கப் படும் எந்த முயற்சிக்கும் அந்த 'ஜாஹிலீயத்' கண்டிப்பான எல்லைகளை இட்டிருக்கும் . 'ஓநாய்களின் பள்ளத் தாக்கு பாலஸ்தீனம் ' என்ற துருக்கிய திரைப்படம் சுவையான திருப்பங்கள் , ஆக்கிரோசமான சண்டைக் காட்சிகள் , பாலஸ்தீனர்களின் யதார்த்த வாழ்வு என்பவற்றை பிரதிபலித்தாலும் இஸ்ரேல் , பாலஸ்தீன் என்ற இரண்டு தேசியங்களை அங்கீகரிக்கும் மனோ பாவத்தோடு தான் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது .

அந்த வகையில் 'ஓமர் முக்தார் ' என்ற உண்மையை சுற்றி லிபிய தேசிய வாதம் தத்ரூபமாக பிண்ணப்பட்டது போல் , இங்கும் துருக்கிய துறைமுகம் ஊடாக 'காசா ' துறைமுகம்
நோக்கி நிவாரண உதவிக்காக தன்னார்வ தொண்டர்களை ஏற்றி வந்த கப்பல், யகூதிய கமாண்டோக்களால் தாக்கப் பட்டு திருப்பி அனுப்பப் பட்ட உண்மையை சுற்றியே கதையின் அடிப்படைக் கரு பிண்ணப்பட்டுள்ளது . (அதாவது இத்தாக்குதலை நடாத்திய இராணுவ அதிகாரி கொல்லப் படுவதில் துருக்கி திருப்தியடைகின்றது . இதுவும்' எய்தவன் இருக்க அம்பை நோதல் ' எனும் தத்துவத்தையே நடைமுறை படுத்துகின்றது ).

அப்படியானால் மேற்படி சம்பவம் நடந்திரா விட்டால் ,(திரைக் கதைப்படிகூட) துருக்கிய கமாண்டோக்களின் 'வெஸ்ட் பேங்க் ' நுழைவே நிகழ்ந்திருக்காதா ? அல்லது தனது அரசியல் ,இராணுவ தோல்வியை மறைக்க U .S ஹொலிவூட் பாணியில் துருக்கியும் சினிமாக் கலையால் மக்களை விலை பேசியுள்ளதா ? அப்படியானால் பாலஸ்தீனில் உள்ளார்ந்த யகூதிய அநியாயங்களுக்கு இந்த தேசிய வாத அரசியல் கொள்கையில் தீர்வில்லை என்பதை ஒப்புக் கொண்டுள்ளார்களா ?

எது எப்படியோ இஸ்லாத்தின் தீர்வை புறம் தள்ளிய மனோபாவத்தை தமது கலைப் படைப்புகளிலும் முஸ்லீம்களை மயக்கும் விதத்தில் காட்சிப்படுத்த ஒரு பழுத்த அனுபவம் தேவை .அந்த வகையில் அற்புதமான் ஹொலிவூட் + பெண்டகன் பொலிடிகல் ஸ்டைல் துருக்கிக்கு கை கொடுத்துள்ளது .

http://www.youtube.com/watch?v=HNPDIKEAOks
http://www.youtube.com/watch?v=HNPDIKEAOks

Apr 7, 2014

ஜனநாயகம் அதன் முகமூடி கிழியட்டும் !


 
 
தமது வாழ்வியலுக்கான வழிமுறைகளை பெரும்பான்மை எனும் பிரமாண்டமான மக்கள் தொகையின் உருவத்தில் சட்டங்களையும் , யாப்புகளையும் மக்களே உருவாக்கி (அல்லது கிடைப்பதை அங்கீகரித்து) அதே பிரமாண்டமான வாக்குத் தெரிவின் அடிப்படையில் மக்களே தீர்மானிக்கும் அதிகாரிகளிடம் அவர்கள் தீர்மானித்த சட்டங்களையும் , யாப்புகளையும் தம்மை நோக்கியே பிரயோகிக்கும் அதிகாரத்தை கொடுப்பதே ஜனநாயகமாகும் .

இதை கூர்ந்து அவதானியுங்கள் ஒரு உண்மை புலப்படும் . அதுதான் இங்கு கடவுள் வடிவத்தில் பெரும்பான்மை மக்கள் அமர்ந்திருக்க அவர்களின் வரத்தின் மூலம் அவர்களுக்கே பணிவிடை செய்ய பூசாரிகளாக அரசு இயங்க வேண்டும் என்பதே அந்த கோட்பாட்டுச் சுருக்கமாகும் .அதாவது இந்த ஜனநாயக அரசியல் பொறியின் மூல மந்திரமே மக்களின் விருப்பு எனும் மேற்போக்கான கருத்தியலை கொண்டதல்ல மாற்றமாக சட்டங்களை,யாப்புக்களை ஆக்கும் உரிமையும், அங்கீகரிக்கும் உரிமையும் கொண்ட 'சுப்பர் பவர் ' மக்களிடமே உள்ளது என்பதாகும் .

இந்த கருத்தியலின் ஆழ்ந்த முடிவானது ஒவ்வொரு தனி மனிதனும் குட்டிக் கடவுள்கள். ஆனால் அவர்களின் ஆதிக்க திறன் தம்மோடு கூட்டுச் சேர்க்கின்ற பெரும்பான்மை விகிதா சாரத்தின் அடிப்படையிலேயே என்பதிலேயாகும் . சரி இப்போது நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய இன்னொரு விடயம் இருக்கின்றது . அது அல் குர் ஆனிய பரிபாசையில் ' தாகூத் ' எனும் சொற்பதம் விளக்குவது என்ன ? என்பது பற்றியதாகும் .

'தாகூத் ' எனும் அரபுச் சொல்லுக்கு வரம்பு மீறுதல் என்பது பொருளாகும் 'வஹியின் ' மொழி மரபில் இஸ்லாத்தின் கட்டுப்பாட்டில் தன்னை இணைக்காமல் ,அதற்கு கட்டுப் படாமல் தான்தோன்றித் தனமாக மற்றவர்கள் மீது அதிகாரம் செலுத்தும் ஒவ்வொருவரையும் குறிக்கும் .


இன்னும் சற்று இது பற்றி விரிவாக சொன்னால் ;
1. இச்சைகளின் பால் இட்டுச் செல்லும் மனம் .
2.பொய்மையின் பக்கம் அழைப்புக் கொடுக்கும் அழைப்பாளன் .
3.அல்லாஹ்வின் (சுப ) சட்டங்களுக்கு எதிராக , அல்லது மாற்றமாக (சாணாக்கியம் ,காலத்தின் தேவை போன்ற நியாயங்களை காட்டிய நிலையிலோ ,அல்லது அல்லாமலோ ) வேறு சட்டங்களை ,யாப்புகளை பிரயோகிக்க நிணைக்கும் தனி மனிதன் ,சமூகம் ,அல்லது இயக்கம் ஆகிய அனைத்துமே இந்த தாகூத் எனும் பதத்தில் உள்ளடங்கி விடும் .

இதனடிப்படையில் இன்று ஒவ்வொரு முஸ்லிமும் தம்மை மறு பரிசீலனை செய்ய வேண்டிய தேவை இருக்கின்றது . இந்த 'தாகூதியத்தின் ' பின்னால் அணி திறலும் தவறை முஸ்லீம்கள் கைவிட வேண்டும்.

http://khandaqkalam.blogspot.ae/2014/03/blog-post_9323.html

Mar 26, 2014

இஸ்லாமிய இயக்கங்கள் எங்கே செல்கின்றன !!?


சம்பிரதாய பூர்வமான சில ஏற்பாடுகளோடு சூழலின் ஆதிக்க அதிகாரத்தை அங்கீகரித்த ஒரு வாழ்வின் மீது முஸ்லீம் உம்மத் இன்று பழக்கப்பட்டுள்ளது . அதாவது முஸ்லீம் உம்மாவின் தெளிவான இஸ்லாத்தின் அடிப்படையிலான அரசியல் பார்வை முற்றாக கைவிடப்பட்டு குப்ரோடு ஒன்றிய வாழ்வுக்கான அரசியல் களம் இஸ்லாமிய இயக்கங்களால் முன் மொழியப்படும் அளவுக்கு சூழ்நிலை மோசமாகியுள்ளது .
இப்போது நடைமுறை ரீதியாக குப்ரின் விருப்பு வெறுப்புகளை ,ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டு தக்கன பிழைத்தல் வாழ்வை நோக்கி இஸ்லாத்தின் பெயரோடு முஸ்லீம் உம்மத்தை அழைப்பது மட்டும்தான் 'தவ்வா ' என்பதாக மூத்த 'தாயிகள் 'வெளிப்படையாக பேசி நிற்கின்றனர் .இந்த சரணடைவு பாதை தான் காலத்தின் தேவையாக காட்சிப் படுத்தப்பட்டுள்ளது .
இங்கு 'ஹராத்தோடு' கலந்த விடயங்கள் 'ஹலால் 'என்ற பெயரில் மிகச் சுலபமாக ஜீரணிக்கப்படும்! சில பாரிய ஹராம்களின் பாரதூரங்கள் ஏதோ சிறு பாவம் போல சித்தரிக்கப்படுவதும் இன்று அன்றாட நிகழ்வு . மிக அண்மையில் ஒரு பொலிஸ்மா அதிபர் ஒரு பிரசித்தமான இயக்கத்தின் 'இஜ்திமாவிட்கு' சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார் . அவர் அங்கு பௌத்த சிந்தனையை சிறப்பாக 'பிரித்' ஓதி! பேசிவிட்டு விட்டு போயுள்ளார் ! கேட்டால் மத நல்லிணக்கம் என அதற்கு ஒரு நியாயம் சொல்கிறார்கள் !!!இதை 'சிர்க்கோடு ' நல்லிணக்கம் என அழகாக மொழி பெயர்க்கலாமே!!!
இன்னொரு பிரசித்தமான இயக்கம் ஜெனீவாவுக்கு எதிராக ,இலங்கை அரசுக்கு ஆதரவாக பகிரங்கப் போராட்டத்தில் இன்றைய தினம் இறங்கியுள்ளார்கள் !! இலங்கையில் முஸ்லீம்களுக்கு எதிராக நிகழ்ந்த எத்தனையோ அநீதிகளுக்கு முன் பெயரளவு பெறுமானத்தோடு அடக்கி வாசித்த அரசியலை . ஜெனீவாவுக்கு எதிராக முடுக்கி விட்டிருப்பது யாரை திருப்திப் படுத்தவாம் !? இதை சரியாக புரிந்து கொண்டால் 'பிர் அவ்னுக்கு' பிடில் வாசிக்கும் இவர்களது அரசியல் தரம் புரிந்து போகும் .
தவ்ஹீதை கப்ரு வணக்கத்தில் கண்டு பிடித்த இவர்களுக்கு ,தமது தூய அகீதாவுக்கு மண்ணள்ளிப் போடும் இத்தகு மடத்தனம் புரியாதது அதிசயமே 

Mar 14, 2014

முதலாளித்துவம் ஒரு சுயநலவாதம் !





இன்று உலகை ஆள்வது முதலாளித்துவம் அது சிலரின் நலனில் பலரின் வாழ்கையினை பனையம் வைத்து பயணம் செய்யும் ஒரு சுயநல அரசியல். அது இன்று தனக்கான மாற்று அரசியல் இல்லாதநிலையில் தனிப்பெரும் சக்தியாக தன்னை நிலைநாட்டி வாழ்ந்து கொண்டு இருக்கின்றது .

இயல்பிலேயே சுயநலப்பார்வை உள்ள மனித குலமும் அதன் தாக்கத்தினால் அது அழைக்கும் இலக்கு நோக்கியே பயணிக்கின்றது. உலகின் ஒவ்வொரு பொருளிலும் விடையத்திலும் அதன் தாக்கத்தை நாம் காண முடியும் . குடும்ப உறவுகள் ,சமூகஉறவுகள் ,சர்வதேசஉறவுகள், கல்வி , தொழில் ,நட்பு ,இப்படிஎல்லா விடயங்களும் அதன் கட்டுப்பாட்டில்தான் என்றால் அது மிகையான கருத்து அல்ல .

ஆனால் இந்த முதலாளித்துவம் காலனி ஆதிக்கமாய் பல நூற்றாண்டுகள் உலகை ஆண்டு தமது மூல தேசம் நோக்கி ஆளும் தேச வளங்களையும் மனித உழைப்பையும் சுரண்டி சென்ற போது அதற்கு எதிராக சுதந்திரப்போராட்டத்தை மேற்கொண்ட மனித குலம் இன்று மௌனமாகவோ அல்லது மட்டுப்படுத்தப்பட்ட அளவிலே தான் தமது எதிர் கருத்தை,போராட்டத்தை முன்வைக்கின்றது.காரணம் முதலாளித்துவ சித்தாந்தத்தை தனது வாழ்க்கை வழி முறையாக ஏற்றுக்கொண்டுவிட்டு அதனால் வரும் விளைவு களுக்கு எதிராக மட்டுமே தமது எதிர்ப்பை காட்டுகின்றது ! அதுவும் அந்த சித்தாந்தத்தின் இன்னொரு தீர்வின் ஊடாகவே அந்த எதிர்ப்பும் காட்டப்படுகின்றது .

தமது காலனி ஆதிக்கத்தை விட்டு முதலாளித்துவம் மற்றைய நாடுகளுக்கு உண்மையில் சுதந்திரம் கொடுத்தது என்பது ஒரு வேடிக்கையான கருத்து !! இங்கு நடந்தது என்னவென்றல் ஒரு பறந்த நவ காலனித்துவ சாம்ராஜ்யம் உருவாக்கப்பட்டது தான் !! இங்கு அவர்கள் வைத்திருந்த நேரடி மனித அடிமைத்துவம் உரிமை சீட்டு எழுதப்பட்ட அடிமைத்துவமாக மாற்றப்பட்டது மட்டும்தான்!!! உண்மையில் மனிதர்களாகிய நாம் ஏமாற்றப்பட்டுளோம் ! ஏமாற்றப்படுகின்றோம்!! இனியும் மிகச்சரியாக சிந்திக்காதவரை ஏமாற்றப்படுவோம் !!

http://khandaqkalam.blogspot.ae/2014/02/blog-post_24.html

Oct 16, 2013

இஸ்லாத்தின் பார்வையில் மக்களாட்சி!


முதலாளித்துவக்கொள்கையின் ஆட்சிமுறையில் அனைத்து ஆட்சி அதிகாரமும் மக்கட்கேயாகும். எனவே மக்களே தமக்காக சட்டமியற்றுபவர் ஆவர். அவர்களே தாம் விரும்பிய சட்டத்தை நடைமுறைபடுத்தும் அதிகாரம் பெற்றவர்கள்.

மக்களாட்சிமுறையில் ஆள்வது இறைநம்பிக்கையற்ற முறையில் ஆள்வதாகும்.

மக்களாட்சி முறைக்காக அழைப்பு விடுப்பது குஃப்ர் முறைக்காக அழைப்பு விடுப்பதாகும். இஸ்லாத்தில் இது முற்றிலும் தடுக்கப்பட்டதாகும்.

மக்களாட்சிமுறை இஸ்லாமிய சட்டதிட்டங்கட்கு அப்பாற்பட்டதாகும். ஏனெனில் ஒரு முஸ்லிம் நடைமுறைபடுத்தவேண்டிய சட்டம் அல்லாஹ்விடமிருந்தே வருவதாகும்.

ஒரு முஸ்லிம் அல்லாஹ்வின் அடிமை. ஆதலால் அல்லாஹ்(சுபு) அமைத்த பாதை வழி நடப்பதும், அவன் அனுமதிக்காதவற்றினின்று விலகியிருப்பதும் கடமையாகும்.

அனைத்து ஆட்சி அதிகாரமும் அல்லாஹ்(சுபு)விடமே இருப்பதால் முஸ்லிம் உம்மா தனது விருப்பப்படி நடக்க இயலாது. ஷாPஆவிடமே அனைத்து அதிகாரமும் இருப்பதால் அதன் வழி மட்டுமே செல்ல இயலும்.

சட்டமியற்றுபவன் அல்லாஹ் மட்டுமே. அதனால் முஸ்லிம் உம்மா தானாக சட்டமியற்ற இயலாது.

முஸ்லிம் உம்மா அல்லாஹ்(சுபு) விலக்கியவற்றை (உதாரணம்:வட்டிப்பணம்) நடைமுறைப்படுத்த இசையுமானால் அச்சட்டத்திற்கு எவ்வித அங்கீகாரமும் இஸ்லாத்தில் இல்லை.

அடிப்படையில் அது ஷாPஆவிற்கு எதிரானது. அதனை எதிர்த்து போராடுவது கடமையாகும்.

ஆனாலும் மக்களை ஆட்சி புரியவும், ஷாPஆவை நடைமுறைபடுத்தவும் அதிகாரம் படைத்த ஆட்சியாளரை தமக்காக தேர்ந்தெடுக்கும் உரிமை முஸ்லிம் உம்மாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

அந்த ஆட்சியாளர் சத்தியப்பிரமாணம் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

எனவே ஆட்சியாளர் என்பது அல்லாஹ்வின் சட்டமனைத்தையும் நடைமுறைபடுத்துபவரே!

ஏனெனில் சட்டமனைத்தும் அல்லாஹ்விடமிருந்தே அருளப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களாட்சி முறை இஸ்லாமிய முறை அல்ல.

மேலும் அது இஸ்லாத்திற்கு எதிரான ஒரு கோட்பாடாகும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இது குறித்து அல்குர்ஆன் இவ்வாறு கடுமையாக கண்டிக்கிறது!

"ஆகவே அல்லாஹ் அருளியவற்றைக் கொண்டு அவர்கள் மத்தியில் ஆட்சி செய்வீராக மேலும் உம்மிடம் சத்தியம் வந்தபின்னர் அவர்களின் மனோ இச்சைகளைப் நீர் பின்பற்ற வேண்டாம்." (அல்குர்ஆன் 5:48)

"அல்லாஹ் அருளியவற்றைக் கொண்டு அவர்களிடையே ஆட்சி செய்வீராக. மேலும் அல்லாஹ் உமக்கு அருளிய சிலவற்றில் அவர்கள் உம்மைக் குழப்பத்தில் ஆழ்த்திவிடக் கூடும் என்பதால் நீர் எச்சரிக்கையுடன் இருப்பீராக" (அல்குர்ஆன் 5:49)

"எவர்கள் அல்லாஹ் அருளியவற்றைக் கொண்டு ஆட்சி செய்யவில்லையோ அவர்கள் காபிர்களாவார்கள்" (அல்குர்ஆன் 5:44)

எனவே அல்லாஹ் அருளியவற்றைக் கொண்டு ஆட்சி செய்யத்தேவையான ஆட்சிமுறையாகிய கிலாபா ஆட்சிமுறைபற்றி அதீத கவனம் செலுத்தவேண்டியது இன்றைய முஸ்லிம் உம்மத்தின் மிகப்பாரிய பணியாகும்.

இதற்குத் தேவையான நுஸறாவை எமது முஸ்லிம் இராணுவத்திடம் கோரவேண்டும்.

மேற்கினது ஆட்சியமைப்பாகிய ஜனநாயக வழிமுறையில் இஸ்லாத்தை பகுதியாக அமுல்படுத்த முற்படும் போக்கை கைவிடவேண்டும்.

தேசியவாதச் சிந்தனையை களைந்து உம்மத் எனும் சிந்தனையை வலுப்படுத்த வேண்டும்.

மீண்டும் நபி வழியில் இஸ்லாமிய அரசாகிய கிலாபாவை நிறுவ பாடுபடவேண்டும். அதற்காக உழைப்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் வாஜிபாகும்

Oct 9, 2013

ஜனநாயகம் பற்றி முஸ்லீம்கள் சிந்திக்க வேண்டிய பக்கங்கள். (காலத்தின் தேவை கருதிய மீள் பதிவு)



ஆட்சியாளர்களை தேர்ந்த்தேடுக்கும் உரிமை ,தட்டிக் கேட்கும் உரிமை ,போன்ற சில மாயைப் பண்புகளை அது சுமந்திருப்பதால் "ஜனநாயகம்" (Democracy ) சத்தியமாகிவிடாது!! அதன் தோற்றம் ,நோக்கம் என்பன இஸ்லாத்தின் அரசியலான மக்களுக்கு நன்மை செய்தல் என்ற விடையத்தை அடிப்படையாககொண்டதுமல்ல. .மாறாக 'குப்ரிய'ஆளும் வர்க்கத்தின் ஒரு எமாற்றுக்கருவி ; அதை இஸ்லாத்திற்குள் எடுக்கும் தேவை ஏன்?

ஆன்மீக வாழ்வையும் ,உலக வாழ்வையும் பிரிப்பது ! எனும் அடிப்படையில் கிறிஸ்தவ உலகம் இந்த ஜனநாயகத்தை தனது கட்டாயத்தேவையாக பயன் படுத்தியது . பண்டைய கிரேக்கரின் பின் மத்திய ஐரோப்பாவின் மதகுரு சர்வாதிகாரத்தை எதிர்த்து கடவுளுக்குரியதை கடவுளுக்கும் ,அரசருக்குறியதை அரசருக்கும். எனும் விதியின் கீழ் மதச்சார்பின்மை கோட்பாட்டை நோக்கியதாக திசை மாற்றியது . ஜனநாயகத்தின் நவீன பயண்பாடு இவ்வாறுதான் ஆரம்பிக்கின்றது.

முஸ்லிம் சமூகம் இதன்பக்கம் வழிகாட்டப்படும் நோக்கத்தை சரியாக புரிந்துகொள்ள வேண்டும் . இஸ்லாத்த்தினில் பிரத்தியோகமானதும் நிலையானதுமான ஒரு அரசியல் வழிகாட்டல் இல்லையா ?!! 'வஹி' இந்தவிடையத்தில் குறைபாடு செய்துவிட்டதா ?!! அல்லாஹ் (சுபு ) எம்மை பாதுகாக்க வேண்டும் .


அல்லாஹ் வெளிப்படுத்தியதை கொண்டு எவர் தீர்ப்பு செய்யவில்லையோ
அவர்கள் நிராகரிப்பாளர்கள் ! (TMQ 5:44)


அல்லாஹ் வெளிப்படுத்தியதை கொண்டு எவர் தீர்ப்பு செய்யவில்லையோ
அவர்கள் அநியாயக்காரர்கள் ! (TMQ 5:45)


அல்லாஹ் வெளிப்படுத்தியதை கொண்டு எவர் தீர்ப்பு செய்யவில்லையோ
அவர்கள் பாவிகள் ! (TMQ 5:47)


(நபியே !)"நிச்சயமாக அல்லாஹ்விற்கே வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி
உரித்தானதென்பதை நீர் அறியவில்லையா? ... (TMQ 5:40)


போன்ற அல்குர் ஆன் வசனங்களும் இன்னும் பல ஏராளமான அல்குர் ஆன் வசனங்களும் தெளிவாக இருக்க முஸ்லிம்' உம்மாவை ' தவறான ஒரு படு பாவத்தை நோக்கி இந்த ஜனநாயகம் இட்டுச்செல்கின்றது என்பது ஒரு வெளிப்படையுண்மை.

இந்த ஜனநாயகத்தை பயன்படுத்தி இஸ்லாத்தை மறுமலர்ச்சி அடையவைக்கமுடியும் எனும் வாதமே நகைப்புக்கிடமானது ! ஏனெனில் இதனோடு இணைவு என்பதே முதலாளித்துவத்தை தலுவச்சொல்லும் 'கலிமா ' ஆகும் . ஏனெனில் அது தனக்கென பிரத்தியோகமான ஓர் அரசியல் ,பொருளாதார, சமூகவியல் வழிமுறைகளை கொண்டது .

அதனூடாக பயணிக்க நிணைப்பவர்களுக்கு தனது சிந்தனைகளோடும் , வழிமுறைகளோடும் முரண்படாத வரை ஒரு செயல் சுதந்திரத்தை தாராளமாக அள்ளிவழங்கும் அமெரிக்காவின் வாசிங்க்டன் முதல் இஸ்ரேலின் டெல்அவிவ் வரை இதில் தடையே இருக்காது ! அதன் கொள்கை சார் சுயரூபத்தை புலப்படுத்துமிடம் எது என்றால் , அவர்கள் தனிமனித சுதந்திரமாக கருதுமிடங்களில் இஸ்லாம் தனது சட்டங்களை சொல்லவரும்போதுதான் தனது கொடூர முகத்தை காட்டத் தொடங்கும் .மதச் சார்பின்மை என்ற தனது அடிப்படையை பாதுகாக்க சர்வாதிகாரத்தையும் சர்வ சாதாரணமாக பயன் படுத்தும் .

இன ,மத, குல, நிற ,வர்க்க, பிரிவுகளை மறைமுகமாகவோ ,வெளிப்படையாகவோ அங்கீகரித்து அது மனித உரிமையாகவும் ,தனி மனித சுதந்திரமாகவும் வரையறுக்கும் ! தேச, தேசிய எல்லைகளை இயல்பாக்கி கீழ்த்தரமான இன, மத, சாதி மோதல்களை தூண்டிவிடும் .இதுதான் ஜனநாயகத்தின் சுயரூபம் !!!! மேலே தந்த சுருக்கமான ஜனநாயகத்தின் விளைவுப்பொருட்கள் எந்த அடிப்படையில் இஸ்லாத்தோடு ஒத்துப்போகும் ! சற்று இது பற்றி சிந்திப்போமா?

http://khandaqkalam.blogspot.ae/2013/10/blog-post_9.html?spref=fb

Oct 1, 2013

தேசியவாதம்!


தேசியவாதம் என்பது மனிதர்களுக்குள் காணப்படுகின்ற ஆதிக்க உணர்வின் வெளிப்பாடு ஆகும்.

தேசியவாதம் மனிதாபிமானமற்றதும் இனவாதத்திற்கு வழி கோலுவதும் தரக்குறைவான சிந்தனையின் வெளிப்பாடுமாகும். இஸ்லாத்திற்கு முரணான ஒரு கருத்து ஆகும். 

இரண்டாம் உலக மகாயுத்த காலங்களின்போது முதன் முறையாக அரபுத் தேசியவாதம் தலை தூக்கியது.

இன்று எமது உம்மத்தின் மீட்சிக்குத் தடையாக உள்ள மிகக் கெட்ட பிணைப்பு இதுவாகும்!

உம்மத்தை பிரித்துள்ள பிணைப்பாகும்!

பிரித்தாளும் தந்திரத்தை கொண்ட மேற்கு மற்றும் அமெரிக்காவின் மிகவும் பலம்வாய்ந்த கருவியாகும்!

இன்று நாம் உடைத்தெறிய வேண்டிய ஒரு சிந்தனை!

நாளைய இஸ்லாமிய உலக ஒழுங்கு உருவாவதற்கான தடைக்கல்லாகும். உம்மத் எனும் சிந்தனையும் சகோதரத்ததுவ பிணைப்பும் வலுவுறும் போதே இந்த கீழ்த்தரமான சிந்தனை தகர்க்கப்பட முடியும்!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“பிரிவினைவாதம் கெடுதியானது. அதை விட்டு விடுங்கள். பிரிவினை கோருபவன் அதற்காகப் போராடுபவன் அதற்காக உயிர் கொடுப்பவன் எவனும் எம்மைச்சார்ந்தவர்களல்ல.”

எனவே மக்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்துகின்ற தேசியவாதம் என்பது மிகவும் பின்னடைவானதும் இஸ்லாத்திற்கு முரணானதுமான ஒரு வாழ்க்கைப்பிணைப்பு ஆகும்.



by Mohideen Ahamed Lebbe

Aug 23, 2013

என் கேள்விக்கென்ன பதில் !?




இது ஜனநாயகத்தின் கோவிலாம் !குட்டிக் கடவுள்கள் அடிக்கடி இங்கே கூத்தாட்டமும் வைத்துக் கொள்ளும் ! இது அவசியம் போல் காட்டப் படும் குட்டிச் சுவர் .இதில் சந்தனம் நுழைந்தாலும் சாக்கடையை பெரும்பாலும் சுமக்க வேண்டும் .கொள்கைக் 'கன்று' களாய் இங்கு சென்றவர்கள் கூட மலம் உண்ணும் பக்குவத்தில் மாற்றப் படுவர் ! மக்களால் ,மக்களுக்கு மக்களுக்காக எனும் மதிமயக்கும் தந்திரத்தால் வேலிபோட்ட இந்த மாக்களின் பண்ணையில் காளை மாடுகளும் அடிக்கடி வார்த்தை ஜாலங்களால் கன்று போட்டு பால் கொடுக்கும் !



பேட்டை ரவுடிகளும் இதனுள் பொழுது போக்க போலிஸ் பந்தோபஸ்து கொடுக்கும் ! நடிக ,நடிகைகள் நிஜத்திலும் இங்கிருந்து நடிக்கலாம் ! இனவாத ,நிறவாத ,மதவாத ,சாதிவாத பேய்கள் தம் இரத்தம் குடிக்கும் கசாப்புத் தீர்மானங்களை எடுப்பது அதிகமாக இங்குதான் ! பெரும்பான்மை சாட்டில் சிறுபான்மை உரிமைகள் புதைகுழி இடப்படுவதும் இங்குதான் ! 


பகல் கொள்ளைக்காரன் சமூக சேவகனாக பதவிப் பிரமாணம் பெறுவதும் இங்குதான் ! இதனுள் நுழைய பரம ஏழையிடம் பிச்சை கேட்டுப் பல் இளிப்பான் பரம்பரைப் பணக்காரன் ! பிச்சைக்காரன் இங்கு சென்று கோடீ ஸ் வரன் ஆகலாம் ! பதில் தெரிந்தால் சொல்லவும் . இது எந்த இடம் !?

Aug 19, 2013

உம்மத் எனும் சிந்தனை


இன்று உம்மத் எனும் சிந்தனைக்கு தடைக்கற்களாக இருப்பது தேசியவாதச் சிந்தனை. இதன் விளைவாக இன்று முஸ்லிம் உம்மத்தினது இராணுவ பலம் துண்டாடப்பட்டுள்ளதுடன் மேற்கின ஏஜன்ட்களாக முஸ்லிம் ஆட்சியாளர்கள் இருப்பதால் இன்று முஸ்லிம் இராணுவம் முஸ்லிம்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்ற துர்பாக்கி நிலைக்கு உம்மத்தை இட்டுச் சென்றுள்ளது. இது எதிரிகளுக்கு மேலும் பலம்சேர்த்துள்ளது.

அத்துடன் தேசியவாதச் சிந்தனையின் காரணமாகவே முஸ்லிம் உம்மத்தினது வளங்கள் மேற்கினால் சுரண்டப்படுவதுடன் அது மேற்கினது முஸ்லிம் ஆட்சியாளர்களால் துஸ்பிரயோம் செய்யப்படுகிறது. இதனால்தான் சோமாலியா மற்றும் எதியோப்பியாவில் பட்டினியால் வாட சவூதி போன்ற அரபிய நாடுகள் செல்வச் செழிப்பில் இருப்பதனை காணலாம்.

முழு உலகிற்கும் தேவையான எரிபொருள், கேஸ் ,தங்கம், இரும்பு போன்றவை பெரும்பாலும் முஸ்லிம்நாடுகளில் காணப்பட்ட போதிலும் தேசியவாதச் சிந்தனையின் காரணமாக இவ்வளங்கள் அத்தேசத்தின் சொத்தாக கணிக்கப்படுவதால் அதில் முஸ்லிம் உம்மத்திற்கு பங்கில்லாமல் இருப்பதனை நாம் காணலாம்.

அதேவேளை இன்று ஈமான் அடிப்படையில் முழு உலகில்வாழும் முஸ்லிம்களும் சகோதரத்துவ பிணைப்பால் இணைக்கப்பட்டிருந்தும் அவர்கள் தேசியவாதச் சிந்தனைக்கு ஆட்பட்டிருப்பதால் இன்று முஸ்லிம் நாடுகளில் ஏற்படும் மேற்கினது படையெடுப்பினால் அல்லலுறும் போதும் இந்த தேசியவாதப்பிணைப்பு இந்த சகோதரத்துவப் பிணைப்பை நலிவடையச் செய்துள்ளது. அத்துடன் தேசியவாதம் மனிதாபிமானமற்றதும் இனவாதத்திற்கு வழி கோலுவதும் தரக்குறைவான சிந்தனையின் வெளிப்பாடுமாகும். இஸ்லாத்திற்கு முரணான ஒரு கருத்து ஆகும்.

ஆகவே இத்தகைய இழிநிலையில் இருந்து உம்மத்தை விடுவிக்க முஸ்லிம்களது பலம் ஓங்கிட தேசியவாதச் சிந்தனையை களைந்து உம்மத் எனும் சிந்தனையை விதைத்திடுவோம். அதுவே இஸ்லாம் உலகில் மீள ஆட்சி நிலைக்குவருவதற்கும் முஸ்லிம்கள் கண்ணியம் மற்றும் பாதுகாப்பு உறுதிசெய்யப்படுவதற்கும் வழிவகுக்கும்.