Showing posts with label Islamic Revival. Show all posts
Showing posts with label Islamic Revival. Show all posts

Oct 6, 2015

'ரியல் சிரியா ' நேற்று இன்று நாளை!!! ஒரு கவிதையிலே...(மறுபதிவு)

அச்சத்தில் எழுந்த அயோக்கிய நாடகம்
அது சிரியா மீதான தாகூத்திய கூட்டின்
அவசர கரிசனை ! - ஆட வழிதேடி விழிபிதுங்கி நின்றபோது
அடித்தான் பசர் அல் அசாத் 'கெமிகல் வெபன் 'அதுதான் அதி பயங்கர நாடக மேடை !

கொலைகாரக் கூத்துக்கு நியாய வடிவம் கொடுக்க NATO முதல் U N வீட்டோ வரை விதம் விதமாய் 'லைட் 'அடிக்க !ஒருபக்கம் ஒபாமாவின் ஓலமும் மறுபக்கம் 'புடினின் ' பிடிவாதமும் எனகாட்சிகள் எல்லாம் கலை கட்டின !

"மிசைல் விடுவோம்" என அமெரிக்க முதலை கண்ணீரோடு கூற "சவூதிக்கு அடிப்பேன் " என ரஷ்ய சைத்தான் 'புல்ஸ் டாப்' போட ! இராஜ தந்திரத் தொட்டிலில் விரல் சூப்பி ரசித்துக் கொண்டிருந்தான்
'அசாத்' எனும் காட்டேறிக் குழந்தை !

தொப்புள் கொடி உறவோடு ஈரான் சீராட்ட !
சுரண்டல் பங்கிற்காக சீனாவும் பாலூட்ட ! 
'டிப்லோமடிக்' பிரேம் வேர்க்கில் '
கேலிக்கூத்து அமர்க்களமானது !

ஓட்டிய ரீலில் மாற்றங்கள் வந்தன !
பிரிவுத் தாளத்தில் பருப்பு வேகாததால்
உண்மை உருவத்தை உலகம் பார்க்க 
'ஹிஸ்புஸ் சைத்தான்களும்' பூ மாலை கொடுக்க(அமெரிக்க ,ரஷ்ய )துருவங்களின் இணைவு இனிதே நடந்தது !ஜெனீவா மண்டபத்தில் 'ரிசப்சனும்' தொடர்ந்தது! 

சியோனிச கள்ளப்பிறப்பை கொஞ்சிய
அதே கைகளால் அசாத்தையும் அரவணைத்து தூக்கி அதர்மப் பந்தியில் சிரியப் படுகொலைகளை ஏதோ 'சிக்கன் டேவல் ' போல் ஆக்கிப்போட்டார்கள் 
அயோக்கியக் கும்பல்கள் !

உம்மத்தின் வளங்களை ஊதாரித் தனமாக்கிய நாதாரிப் பயல்கள் பெப்சிக்கு பெற்றோலை பொறுப்பின்றி கொடுத்து விட்டு !'வெஸ்டர்ன் டிபென்ஸில் ' வெட்டிப் பொழுது போக்கும் வெங்காய மன்னர்களும் 'கிலாபத்தின் ' அச்சத்தில் கிளி பிடித்துப் போக ! முஸ்லீம் அழிப்புக்கு முகவராகி 
பங்குப்பணம் போட்டு கோமாளி வேஷம் கட்டுகிறார்கள் !

'டிமோகிரசி' செட்டப்பில் வேலைகள் முடியுமென்ற 'தாகூத்திய' நப்பாசைக்கு ஆப்படித்து எழுந்துவரும் இஸ்லாமிய அலைகண்டு ஆடிப்போய் உள்ளது இந்த அசத்தியக் கூட்டணி ! - சத்தியம் நோக்கிய 
சாத்தியமான நகர்வுகளில் 'ரியல்' சிரியா 
தொடர் சீரியலாகி ஆணவக் 'குப்பாரை '
குலை நடுங்க வைக்குதடா ! அல்லாஹு அக்பர் ...! அல்லாஹு அக்பர் ...! அல்லாஹு அக்பர் ...!

May 28, 2014

இது காலமுள்ள காலம்வரை பேசப்படும் இஸ்லாமிய வீரத்தின் வார்த்தைகள்

எத்தனையோ சிறு சிறு கூட்டத்தினர் பெரும் பெரும் கூட்டத்தினரை அல்லாஹ்வின் உதவியோடு வெற்றி கொண்டிருக்கிறார்கள் .மேலும் நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்
" (சூரா அல் பகரா வசனம் 249)

ரமழான் வந்தவுடன் விசேடமாக அல்பத்ர் சமர்க்களம் அனேகமாக
எல்லா முஸ்லீம்களாலும் நினைவு கூறப்படும் .இந்த சமரைப் பற்றி பேசப்படும் சந்தர்ப்பங்களில் எல்லாம் "அதில் ஒரு களப் போராளியாய் நானும்
இருந்திருக்கக் கூடாதா என்ன கைசேதமே" என அதில் கலந்து கொள்ளாத
ஒவ்வொரு முஸ்லிமும் கவலைப்படும் அளவுக்கு அந்தப் போரின் இஸ்லாமிய தரப்பு பங்காளிகளுக்கு அல்லாஹ் (சுப ) ஒரு வாக்குறுதியை அளிக்கிறான் ;

அது சுவனம் நிச்சயிக்கப் பட்ட நன்மாராயமே ஆகும் . இந்தப் போர் தொடர்பில் பக்கம் பக்கமாக விபரிக்க பல விடயங்கள் இருந்தாலும் இஸ்லாமிய சித்தாந்தம் ஆழப்பதிந்த வடித்தெடுத்த சில நூறு மனிதர்கள் குறைசிக காபீர்களின் அதீத இராணுவ வலிமைக்கு முன் கேள்விக்குறியாக்கப்
பட்ட நிலையிலேயே இறைவன் வாக்களித்த இரு வெற்றிகளில் ஒன்றை தேர்வது முஸ்லீம்கள் முன் வைக்கப்படுகின்றது . அந்நிலையில் இஸ்லாமியப்படையணி எடுத்த ஆச்சரியமான முடிவுதான் எம்மை சிந்திக்க
வைக்கின்றது .
வெறும் 40 சண்டை செய்யத்தக்க நபர்களைக் கொண்ட அபூ சுப்யானின் வியாபாரக் கூட்டமா ? பூரண சமரணியாக வரும் அபூஜஹலின் 1000 இராணுவமா ? எடுத்த முடிவோ அதிர்ச்சியானது . சந்திக்கப்போவது குரைசி இராணுவத்தையே !? கிடுகலங்கிய முனாபிக்குகள் வெருண்டோட வழி தேடினர் 'கனீமத்' தேடி களம் வந்த பலருக்கு 'கபுரின்' வாசனை தொடை நடுங்கிகளாக்கி சிதறி ஓடவைத்தது. இப்போது எஞ்சியிருந்தது 'வஹி '
வடித்தெடுத்த வார்ப்புகள் மட்டுமே . வீரம் அவர்களிடம் இல்லை இல்லை வீரமே அவர்களாக ' வாழ்ந்தால் அல்லாஹ்வுக்கு மட்டுமே அடிமை என்ற
வாழ்வு அல்லது ஷஹீத் களாக சுவனத்தில் நுழைவு ' என ஹுப்புதுன்யாவை விரட்டி அடித்து நிமிர்ந்து நின்றார்கள் .அல்லாஹ்வின்
தூதரின் (ஸல்) அவசர ஆலோசனை ஒன்றின் பின் இஸ்லாமிய படையணியின் சுப்ரீம் கமாண்டர்கள் தரத்தில் இருந்த அபூபக்கர்
(ரலி ) ,உமர் (ரலி ) போன்றோர் அந்த சத்தியப் படையின் முன்
உரை நிகழ்த்தினார்கள் . இப்போது முஹாஜிர்களில் ஒருவரான
கமாண்டர் மிக்தாத் இப்னு அமர் (ரலி ) எழுந்து பேசினார்கள் . இதோ அவரது வார்த்தைகள் "அல்லாஹ்வின் தூதரே ! அல்லாஹ் உங்களுக்கு காட்டிய
வழியில் செல்லுங்கள் .நாங்கள் உங்களுடன் இருக்கின்றோம் .வல்லாஹி !

"மூஸாவே ! அவர்கள் அதில் இருக்கும் வரை ஒருக்காலும் நாங்கள் அதில்
செல்லவே மாட்டோம் . நீங்களும் உமது இறைவனும் (அங்கு )சென்று (அவர்களுடன் ) போர் புரியுங்கள் .நிச்சயமாக நாங்கள்
இங்கேயே உட்கார்ந்து (கவனித்துக் )கொண்டிருப்போம்".
(அல் குர் ஆன் அத்தியாயம் 5: வசனம் 24)

என்று பனூ இஸ்ரவேலர்கள் நபி மூஸா (அலை ) அவர்களிடம் கூறியது போல் நாங்கள் உங்களிடம் கூற மாட்டோம் . மாறாக நீங்களும்
உங்களது இறைவனும் போர் புரியுங்கள் . நாங்களும் உங்கள் இருவருடன்
சேர்ந்து போர் புரிவோம் .சத்தியத்தின் மீது உங்களை அனுப்பியவன் மீதாணையாக !
நீங்கள் எங்களை (மக்காவுக்கு அருகில்உள்ள )'பர்குல் கிமாது ' வரை அழைத்துச்சென்ராலும் உங்களுடன் மிகத்துணிவோடு வருவோம் "
என்று கூறி முடித்தார் . இந்த வீரஉரையைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல் )அவரைப் பாராட்டி அவருக்காகபிராத்தனை புரிந்தார்கள் .
இப்போது அன்சாரிகளின் முடிவு பற்றி அல்லாஹ்வின் தூதரின் ஆர்வம் திரும்பியது .காரணமும் இருந்தது அகபா உடன்படிக்கைப் பிரகாரம் மதீனாவுக்கு வெளியில்சென்று போராடுவது என்ற நிபந்தனை இல்லாதிருந்தது .அங்கிருந்து பதில்தந்தது கமாண்டர் ஸ அத் இப்னு மு ஆத்
(ரலி )யின் ரத்தினச் சுருக்கமான அந்தபதில் இது தான் .

" அல்லாஹ்வின் தூதரே !தங்கள் இல்லங்களில் இருந்து கொண்டு உங்களுக்கு உதவி புரிவது மட்டுமே கடமை என அன்சார்கள் நினைப்பார்கள் என்று நீங்கள்
அஞ்சுகிறீர்களா ?
அன்சார்கள் சார்பாக நான் பேசுகிறேன் ; அவர்களின் சார்பாக நான் பதில் தருகிறேன் ;நீங்கள் விரும்பிய இடத்துக்கு செல்லுங்கள் ;நீங்கள்
விரும்பியவர்களுடன் உறவு வைத்துக்கொள்ளுங்கள் ; விரும்பியவர்களோடு உறவை துண்டித்து விடுங்கள் ; நீங்கள்வேண்டியதை எங்களிடம்
இருந்து எடுத்துக் கொள்ளுங்கள் ;நீங்கள் விரும்பியதை எங்களுக்கு கொடுங்கள் ;

நீங்கள் எங்களிடம் இருந்து எடுத்துக்கொண்டது நீங்கள் எங்களுக்காக
விட்டு விடுவதை விடமேலானதாகும் எங்களின் செயல்கள்
உங்களின் கட்டளைக்கு இணங்கவே இருக்கும் ;வல்லாஹி நீங்கள்
எங்களை 'கிம்தான் ' பகுதியில் உள்ள 'பர்க் ' வரை அழைத்துச் சென்றாலும் நாங்கள் உங்களோடு வருவோம் . வல்லாஹி நீங்கள் எங்களை கடலுக்குள் அழைத்துச் சென்று மூழ்கினால் நாங்களும் மூழ்குவோம் "என்று ஸ அத் இப்னு மு ஆத் (ரலி ) கூறியதன் பின்னர் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மிகுந்த ஆனந்தம் அடைந்தவர்களாக வெற்றி பற்றிய சுப செய்தியை கூறினார்கள் (.அல்லாஹ்வின் எதிரிகள் வெட்டி வீழ்த்தப்படும் இடங்கள்
தமது கண்களுக்கு தெரிவதாக அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள் .)
வெறும் ஆட்கள் தொகையை காரணம் காட்டிய சரணடைவு அரசியலை எவ்வித இராஜ தந்திரப் பின்புலமும் அற்ற ,போர் செய்ய தடை செய்யப் பட்டிருந்த மக்கா வாழ்விலும் முஸ்லீம்கள் செய்திருக்க வில்லை . அரசியல் இராஜ தந்திரப் பின்புலம் மிக்க மதீனாவின்காலப்பகுதியிலும் முஸ்லீம்கள்
செய்திருக்க வில்லை .'குப்ர்' போட்ட 'செக்கியூலரிச'அதிகார ரோட்டில் 'தாகூத்தியகண்டிசனின் 'கீழ் 'ஜாஹிலீய லைசனோடு' இஸ்லாமிய வண்டியோட்ட நினைக்கும் மொடர்ன் இஸ்லாம் சிந்தனைத் தரம்
சுன்னா வழியல்ல என்பதை புரிந்து கொள்ள இஸ்லாத்தின் சீராவை சரியாக ஆராய வேண்டும் தவிர 'அபூஜாஹில்ஹலை ' திருப்திப்படுத்தி அல்ஹம்துலில்லாஹ் என இஸ்லாத்தை வாழவைக்கலாம் என்ற
பார்வையும் மிகத் தவறானது .அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவன் மிக்க
கிருபையுடையவன் .

Sep 8, 2013

உண்மையான மறுமலர்ச்சி

மறுமலர்ச்சி(Revival – النهضة) என்பது சமூகத்தில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் சிந்தனைகள்(thoughts),  உணர்வுகள்(sentiments) , ஆட்சியமைப்பு (system)ஆகியவற்றை மாற்றியமைத்தல் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் உண்மையான மறுமலர்ச்சி (النَّهضةِ الصحيحةِ) என்பது சமூகத்தில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கும் சிந்தனைகள், உணர்வுகள், செயலாக்க அமைப்பு ஆகியவற்றை இஸ்லாமிய அடிப்படையில் மாற்றியமைப்பது என்பதாகும்.
  மறுமலர்ச்சி என்பது அறிவாற்றலின் எழுச்சி(الاحتفال الفكرية -Intellectual elevation) என்றும் அழைக்கப்படுகிறது. பொருளாதார   முன்னேற்றத்தை மறுமலர்ச்சி என்று கொள்ளமுடியாது. குவைத்   நாட்டை ஐரோப்பிய நாடுகளான சுவீடன், ஹாலந்து, பெல்ஜியம் ஆகியவற்றோடு ஒப்பிடும்போது, பொருளாதாரத்தில் உயர்ந்து நிற்கிறது. இருந்தபோதிலும் இந்த ஐரோப்பிய நாடுகள் அடைந்த முன்னேற்றத்தை குவைத் இன்னும் அடையவில்லை. ஒழுக்க மாண்புகள் உயர்ந்து நிற்பதும்  மறுமலர்ச்சி என்று கொள்ளப்பட மாட்டாது. ஏனெனில் மதீனா மாநகரம் இன்று உலகில் உள்ள எந்த இடத்தைவிடவும் நற்பண்புகளில் உயர்ந்து  நிற்கிறது. இருந்தபோதும் இது முன்னேற்றம் என்று கொள்ளப்படமாட்டாது. ஆகவே மறுமலர்ச்சி என்பது அறிவாற்றலின் எழுச்சியாகும்.
சில சமயங்களில் மறுமலர்ச்சி (نهضة)  தவறான அடிப்படையில் ஏற்படுவதும் உண்டு.  அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ரஷ்யா போன்றவை முன்னேறிய நாடுகளாகும். எனினும் அவைகளின் முன்னேற்றம் மிகவும் பலவீனமானது. ஏனெனில் அந்த முன்னேற்றம் ஆன்மீக அடிப்படையில் ஏற்பட்டதல்ல. ஆகவே உண்மையான மறுமலர்ச்சி  இஸ்லாமிய சிந்தனையின் அடிப்படையில் மட்டுமே ஏற்படவேண்டும். ஏனென்றால் இஸ்லாம் மட்டுமே ஆன்மீகமும் அரசியலும் இணைந்த அகீதாவை ( عقيدة) கொண்டதாகும்.
மறுமலர்ச்சி (نهضة) ஏற்படவேண்டுமெனில்  மனிதன்,   வாழ்வு,   பிரபஞ்சம் ஆகியவற்றை பற்றிய முழுமையான சிந்தனையின்( الفكرةِ الكُلِّيَةِ – comprehensive thought) அடிப்படையில் ஏற்படும் ஓர்ஆட்சிமுறையை நாம் நிறுவவேண்டும். மாறாக அது மனித சட்டங்களின் அடிப்படையிலான செயலாக்க அமைப்பு(نظام-system) மற்றும் சட்டவரைவுகள்(legislation) ஆகியவற்றின் அடிப்படையில் இருக்கக்கூடாது. மனித  சட்டங்கள் மற்றும் அரசியல் சாசனங்களின் அடிப்படையில் நிறுவப்படும் அரசு  மறுமலர்ச்சிக்கு இட்டுச்செல்லாது. மாறாக அது  மறுமலர்ச்சியை திசைதிருப்பி மக்களை  கடுந்துயரிலும் ஆழ்த்திவிடும். அன்றாட வாழ்வியல் விவகாரங்களின் தீர்வுகள்..அதாவது;  ஆட்சிமுறை, சட்ட வரைவுகள் ஆகியவை இந்த சிந்தனையிலிருந்து வெளிவரும்.
ஐரோப்பாவின் மறுமலர்ச்சி (نهضة) என்பது  விடுதலை(liberty)மற்றும் சுதந்திரம்(freedom) ஆகியவற்றை  கருத்தில் கொண்டு வாழ்வியல் விவகாரங்களிருந்து மதத்தை பிரிப்பது – فَصْل الدينِ عنِ الحياةِ -என்ற மதச்சார்பின்மை( علمانية- secularism)சிந்தனையின் அடிப்படையில் ஏற்பட்ட தவறான மறுமலர்ச்சியாகும். ரஷ்யாவில் ஏற்பட்ட கம்யூனிஸ புரட்சியானது  இயற்பொருட்களின் பரிணாம வளர்ச்சி(materialistic evolution) பற்றிய கோட்பாட்டின்படி இயற்பொருட்கள்(matter -المادَّة ) பல்வேறு மாற்ற நிகழ்வுகளின் அடிப்படையில் வளர்ச்சியடைந்து ஒரு குறைவற்ற நிறைபொருளாக (utopian position)மாறும் என்ற இயற்பொருள்வாத)ஜடவாத(அடிப்படையில் ஏற்பட்டதாகும். ஆகவே ரஷ்யாவில் 1917-ல் இந்த சிந்தனையின் அடிப்படையில் ஜடவாதிகளான(المادي) கம்யூனிஸ்டுகள் ஓர் அரசை நிறுவி தவறான மறுமலர்ச்சியை ஏற்படுத்தினர்.
ஆனால் அரேபிய தீபகற்பத்தில் ஏற்பட்ட மறுமலர்ச்சியானது அல்லாஹ்سبحانه وتعالىவிடமிருந்து நபி صلى الله عليه وسلم அவர்கள்கொண்டு வந்த இஸ்லாமிய அகீதாவின் அடிப்படையில் ஏற்பட்டதாகும். நபி صلى الله عليه وسلمஅவர்கள் இந்த சிந்தனையின் அடிப்படையில் ஆட்சியையும் அதிகாரத்தையும் நிறுவி உண்மையான மறுமலர்ச்சியை(النَّهضةِ الصحيحةِ) ஏற்படுத்தினார்கள்.
மேற்கண்ட உதாரணங்களின் மூலம்  மறுமலர்ச்சி என்பது அடிப்படை சிந்தனையான(القاعدة الفكرية) அகீதாவின் அடிப்படையில் நிறுவப்படும்  ஓர்  ஆட்சிமுறையை கொண்டுதான் ஏற்படும் என்பதற்கு  தெளிவான சான்றுகளாகும்.
1924ஆம் ஆண்டு முஸ்தஃபா கமால் பாஷா இஸ்லாமிய அரசான கிலாஃபத்தை பிரிட்டனின் உதவிகொண்டு அழித்த பின்னர்  மனிதசட்ட வரைவுகளையும், ஆட்சிமுறையையும் கொண்டு ஏற்படுத்திய துருக்கிய தேசியவாத  அரசு துருக்கியில் எந்தவிதமான மறுமலர்ச்சியையும் கொண்டுவரவில்லை என்ற பேருண்மை, மனித சிந்தனையின் அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டங்களும் ஆட்சிமுறைகளும் உண்மையான மறுமலர்ச்சியை கொண்டுவராது என்பதையும்  நமக்கு தெளிவாக உணர்த்துகிறது.  இத்தகைய ஆட்சிமுறையில் துருக்கி எந்தவித மறுமலர்ச்சியையும் பெற்றுக்கொள்ளவில்லை. மாறாக பொருளாதாரம், சமூகம் மற்றும் சர்வதேச அந்தஸ்து ஆகிய அனைத்து துறைகளிலும் அது ஆழமாக பின்தங்கியது. மேற்கத்திய ஆட்சிமுறையும் சட்டங்களும் முஸ்லிம் நாடுகளில் பலவந்தமாக குஃப்ஃபார்களின் ஏஜெண்டுகளான முஸ்லிம் ஆட்சியாளர்களால் பலவந்தமாக அமல்படுத்தப்படுகின்றன. இதன் காரணமாக முஸ்லிம் உம்மா இழிநிலைக்கு ஆட்பட்டதோடு அவ்வளவு வளங்கள் இருந்தும் அனைத்திற்கும் கையேந்தும் நிலை ஏற்பட்டுவிட்டது.
   கம்யூனிச வீழ்ச்சிக்கு முன்னர் சோவியத் ரஷ்யாவை நாம் நோக்குவோமானால்,  தவறான சிந்தனையான இயற் பொருள்வாத)ஜடவாத( அடிப்படையில் ஆட்சி அமைக்கப்பெற்றாலும், அது  மக்களை ஒன்றிணைத்தது. மேலும் மகா வல்லரசு என்ற நிலையை அடையும்வரை அதன் மறுமலர்ச்சி பலவருடங்கள் நீடித்தது. கம்யூனிச சிந்தனையின் அடிப்படையில் லெனின் 1917ல் நிறுவிய இந்த  அரசு ஒரு மறுமலர்ச்சியை தோற்றுவித்தது. ஆனால் 1924ல் முஸ்தபா கமால் பாஷாவால்  மேற்கத்திய ஆட்சிமுறை சட்டங்களின் அடிப்படையில் நிறுவப்பட்ட அரசு தோல்வி கண்டது. 1952ல் எகிப்து நாட்டில் ஜமால் அப்துல் நாஸர்  மனித சட்ட வரைவுகள் கொண்ட ஆட்சிமுறையை நிறுவியதையும் உதாரணமாக குறிப்பிடலாம். ஆரம்பத்தில் மன்னராட்சிக்கு பதிலாக மக்களாட்சிமுறையை கொண்டுவந்து அதனடிப் படையில் விவசாய நிலங்களை விநியோகம் செய்தார். பிறகு பொதுவுடமை(اشتراكية – Socialism) தத்துவத்தின் அடிப்படையில் பல்வேறு விஷயங்களை அமல்படுத்தினார். ஆனால் மறுமலர்ச்சியை கொண்டு வருவதற்கு அவரால் இயலவில்லை.  மாறாக அறிவாற்றல்,    பொருளாதாரம் மற்றும் அரசியல் பகுப்பாய்வு ஆகிய விசயங்களில்  1952க்கு முன்பு எகிப்து இருந்த நிலையைவிட பின்தங்கவே நேரிட்டது.
எனினும் ஒரு  சிந்தனையின் மீது  அல்லது குறிப்பிட்ட கருத்தின் அடிப்படையில் அரசை நிறுவது என்பது வெறும் இராணுவ புரட்சி மூலமாகவோ அல்லது கிளர்ச்சியின் மூலமாகவோ அதிகாரத்தை கைப்பற்றுவது என்று பொருள் அல்ல. ஏனெனில் இது  மறுமலர்ச்சியை தோற்றுவிக்கவும் செய்யாது; ஒருபோதும்  வெற்றி பெறவும் முடியாது.  இதன்  பொருள் என்னவெனில், அடிப்படை  சிந்தனையான அகீதாவின் அடிப்படையில் நம்பிக்கை ஏற்படுத்துவது, அதுகுறித்த உறுதியான வெகுஜனகருத்தினை(Public opinion) உருவாக்குவது, மற்றும் வாழ்க்கை போராட்டத்தை இந்த கருத்தின்படியே நடத்தி செல்லுவது, பிறகு இந்த உறுதியான சிந்தனையின் அடிப்படையில் ஒர் அரசு  நிறுவப்படுவது என்பதாகும். ஆகவே ஒரே சிந்தனையின் அடிப்படையில் மக்களை ஒருங்கிணைப்பதும், இதன் அடிப்படையிலேயே   அதிகாரம் நிறுவப்படுவதும் நோக்கமாகும். அதிகாரத்தை கைப்பற்றுவது என்பது இங்கு உண்மையான நோக்கம் அல்ல. மாறாக அகீதாவின் அடிப்படையில்  ஒர்  அரசை நிறுவி மறுமலர்ச்சியை கொண்டு வருவதேயாகும்.  இதற்கு மிகச்சரியான உதாரணம்,   நபி صلى الله عليه وسلمஅவர்களுக்குஅல்லாஹ்سبحانه وتعالى விடமிருந்து வஹீ வந்தபோது, அவர்கள் மக்களை இஸ்லாமிய அகீதாவின் அடிப்படையில் அழைத்தார்கள். பிறகு அந்த அடிப்படையிலேயே வெகுஜனகருத்தையும்(Public opinion)  மக்களிடத்திலே ஏற்ப்படுத்தி அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ் கோத்திர தலைவர்களின் உதவியைப்(نصرة)பெற்று மதீனாவில் ஒர் அரசை நிறுவினார்கள். பிறகு அவர்கள் இவ்வாறு கூறினார்கள்.
       أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَشْهَدُوا أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ الله،… فَإِذَا فَعَلُوا، عَصَمُوا مِنِّي دِمَاءَهُمْ، وَأَمْوَالَهُمْ
   வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்  ஒருவனைத்தவிர வேறு யாரும் இல்லை. முஹம்மது   அல்லாஹ்வின் தூதர்   ஆவார்கள்  என்ற கலிமாவை மக்கள் ஏற்றுக்கொள்ளும் வரையில் அவர்களுடன் போர் செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்…. அவர்கள்  ஏற்றுக்கொண்டால் அவர்களுடைய உயிருக்கும் உடமைக்கும் என்னால் எந்தவித தீங்கும் ஏற்படாது.                                                                                                      (புஹாரி)
 இவ்வாறே அவர்கள்  இந்த கருத்தின் அடிப்படையிலேயே மக்களுக்கு அழைப்பு விடுத்தார்கள். பிறகு மதீனாவில் மறுமலர்ச்சி ஏற்பட்டது. பிறகு, அரேபிய தீபகற்பம் முழுவதிலும் ஏற்பட்டது. பிறகு இஸ்லாமிய நிலப்பரப்பு விரிவடைந்த காலமெல்லாம்  இஸ்லாத்தில் இணைந்து இஸ்லாமிய நெறிமுறைகளின்படி வாழ்ந்த மக்கள் சமுதாயம் அனைத்திலும் மறுமலர்ச்சி ஏற்பட்டது.
இன்று அனைத்து துறைகளிலும் முஸ்லிம் உம்மா  வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த பல வருடங்களாக அது தன்னை மறுசீரமைக்க முயன்று வருகிறது. முஸ்லிம் நாடுகளில்  இஸ்லாம் அல்லாத குஃப்ர் சட்டங்கள் மற்றும்   ஆட்சிமுறைகளின்படி  ஆட்சி  நடைபெறுகிறது. சில இடங்களில் இஸ்லாமிய ஆட்சிமுறையில் அரசு அமைக்கப்பட்டதாக     கூறப்பட்டாலும் சில இறைசட்டங்களோடு குஃப்ருடைய சட்டங்களும்  இணைக்கப்பட்ட  குஃப்ர் ஆட்சிமுறைதான்    நடைபெற்று  வருகிறது.
ஆகவே இஸ்லாமிய அகீதாவான லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர்  ரஸூலுல்லாஹ்– -لَا إِلَهَ إِلَّا اللهُ مُحَمَّد رَسُولُ اللهِ என்ற கலிமாவின் அடிப்படையில் அமைக்கப்படும் அரசே மறுமலர்ச்சியை ஏற்படுத்தமுடியும். இஸ்லாமிய ஆட்சிமுறை, இஸ்லாமிய சட்டங்கள் இவைகள் எல்லாவற்றுக்கும் உயிரோட்டமான لَا إِلَهَ إِلَّا اللهُ مُحَمَّد رَسُولُ اللهِ  என்ற கலிமாவின் உயிரோட்டம் இல்லையெனில் இவையாவும் உயிரற்ற உடல் போன்றதாகிவிடும்.
வெறுமனே சில சீர்திருத்த (reform) பணிகளை செய்வதால் ஒருபோதும் மறுமலர்ச்சி –(نهضة – revival)  ஏற்படாது. இமாம் அபூஹனீஃபா رحمه الله அவர்களுடைய மத்ஹபின் சட்டங்களை மட்டும் கொண்டு ஆட்சியை நிறுவினாலும் மறுமலர்ச்சி வந்துவிடாது. மாறாக لَا إِلَهَ إِلَّا اللهُ مُحَمَّد رَسُولُ اللهِ என்ற கலிமாவின் அடிப்படையில்தான் அரசு அமைக்கப்பட வேண்டும். பிறகு அல்லாஹ்سبحانه وتعالى அருளிய சட்டங்களைக் கொண்டு ஆட்சி செய்யவேண்டும். அதற்கு ஏற்றவாறு ஃபிக்ஹு  சட்டங்களை ஏற்புஅமலாக்கம்(تبني – adoption)செய்யவேண்டும். இவற்றை  அல்லாஹ்سبحانه وتعالى  வின் ஏவல்–விலக்கல் பற்றிய கட்டளைகளாக அமல்படுத்தப்பட வேண்டுமே தவிர அவைகளின் நன்மைகள் மற்றும் அவைகளின் உலகப் பயன்கள் பற்றிய கண்ணோட் டத்துடன்   அமல்படுத்தப்படக்கூடாது.
ஆகவே இன்று உம்மத்தில்  மறுமலர்ச்சி (نهضة)  ஏற்பட வேண்டுமெனில் அந்த சமூகம் கலிமாவின் அடிப்படையில் தமது   வாழ்வை சீரமைத்துக் கொண்டு, ஆட்சியையும் அதிகாரத்தையும் அந்த கலிமாவின் அடிப்படையில் நிறுவி, அனைத்து வாழ்வியல் விவகாரங்களையும் அந்த கலிமாவின்படி அதாவது அல்லாஹ்سبحانه وتعالىமுஸ்லிம்களுக்கு இந்த சட்டங்களை அருளி இருக்கிறான் என்ற ஒரே அடிப்படையில் செயல்பட்டால் மறுமலர்ச்சி நிச்சயமாக வரும். முஸ்லிம் உம்மா முன்பிருந்த உன்னதமான நிலையை நிச்சயமாக மீண்டும் அடையும்.                   
இன்ஷா அல்லாஹ்!

http://sindhanai.org

Aug 21, 2013

இஸ்லாம் எழுச்சிபெறுவதில் ஒரு முஸ்லிமின் வகிபங்கு...!


இஸ்லாத்தை வெறுமனே ஆத்மீகம் எனும் பெயரில் பள்ளிக்குள் முடக்கிவிடாது அது வாழ்வில் எழும் பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வை வழங்கும் வாழ்கைச் சித்தாந்தமாக முதலில் உணரவேண்டும்.

இஸ்லாம் எழுச்சி பெறுவதற்கு தேவையான அடிப்படைச் சிந்தனைகளை தெளிவாக விளங்கி மக்களுக்கு அறிவூட்டும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இன்று முதலாளித்துவத் தலைமைகளால் மத ஒதுக்கல் சிந்தனையை அடிப்படையாக கொண்டு தாராண்மைவாதக் கொள்கைகளை அமுல்படுத்தும் நிலையில், மக்கள் அதனால் அடையும் துன்பங்கள், அசௌகரியங்கள் என்பவற்றிலிருந்து மீளுவதற்கான வழிகாட்டலையும் தீர்வையும் இஸ்லாமே கொண்டுள்ளது என்ற சிந்தனையை விதைக்கும் பணியை மேற்கொள்ள தன்னை பக்குவப்படுத்திக் கொள்ளவேண்டும்.

இஸ்லாம் ஒரு மாற்றீடாக முன்வைக்கப்படுவதாலும், இஸ்லாம் எழுச்சிபெறுவதாலும் அதன் வளர்ச்சியை, எழுச்சியை தாமதிக்க மேலும் கட்டுப்படுத்த மேற்கினது முகவர்கள் மேற்கொள்ளும் சிந்தனை யுத்தத்தை விளங்கி உணர்ந்து இஸ்லாத்திற்கு எதிரான நச்சுக்கருத்துக்கள் விதைக்கப்படும் போது அதனை எதிர்கொள்வதற்கு தேவையான ஆளுமையை, பக்குவத்தை வளர்த்து உரிய தஃவா முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும்.

முஸ்லிம்களை நிரந்தரமாக பிரித்துவைத்துள்ள மேற்கினது அடிப்படைச் சிந்தனைகளான “மதஒதுக்கல் சிந்தனை”, “தேசியவாதச் சிந்தனை” மற்றும் “முதலாளிகளது நலன்களை சட்டமாக்கும் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட ஜனநாயக ஆட்சிமுறை” போன்ற சிந்தனைத் தெளிவைப் பெற்று அதுகுறித்து “மக்கள் மனப்பாங்கை” மாற்றி இஸ்லாத்திலும் அதன் ஆட்சிமுறையான கிலாபாவிலும் நம்பிக்கையூட்டும் தஃவா பணியை மேற்கொள்ள வேண்டும்.

இன்று முஸ்லிம் நாட்டுத் தலைமைகள் மேற்கினது அடிவருடிகளாக செயற்படும் போக்கையும், மேற்கினது கருவியாக ஐ.நா.சபை, நேட்டோ, சர்வதேச நாணயநிதியமும் வங்கியும், அரசசார்பற்ற நிறுவனங்களும் திருச்சபைகளும், மற்றும் மனித உரிமை அமைப்புக்களும் தொழிற்படுவதனை உணர்த்த வேண்டும்.

இது குறித்த தெளிவை அறிவைப்பெற்று உரிய சிந்தனைகளை சமூகத்தில் விதைத்து சிந்தனை மாற்றத்தின் பங்காளிகளாக மாறவேண்டும். அதுவே இஸ்லாம் எழுச்சி பெறவழிவகுக்கும் என்பதனை உணர்ந்து செயற்படவேண்டும்.

Aug 18, 2013

இஸ்லாமிய எழுச்சி மற்றும் மறுமலர்ச்சி

இஸ்லாமிய எழுச்சி மற்றும் மறுமலர்ச்சி முஸ்லிம் சமூகத்தில் ஏற்பட்டுள்ளது. 


ஆனால் இஸ்லாம் மீள நபி வழியில் அதன் ஓரே தலைமையின் கீழ் ஒழுங்குபடுத்தப்படுவதற்கு பல தடைக்கற்கள் உள்ளது. அவற்றில் சில...

1.தேசியவாதா எல்லைக்குள் முஸ்லிம்களது சிந்தனை இன்னும் வலுவாகவே உள்ளது.

2.மேற்கினது ஆட்சிமுறையான ஜனனாயகத்தில் இன்னும் முஸ்லிம்கள் நம்பிக்கை வைத்துள்ளமை.

3.தேசிய எல்லைக்குள் முஸ்லிம் இராணுவபலம் துண்டாடப்பட்டு உம்மத்தின் நலன்களில் பாரிய பங்களிப்பை வழங்காமல் இருப்பது.

4.மேற்கினது சிந்தனைத்தாக்கத்திற்கும் கலாச்சார படையெடுப்புக்கும் முஸ்லிம்கள் ஆட்பட்டிருப்பது.