Showing posts with label இஸ்ரேல். Show all posts
Showing posts with label இஸ்ரேல். Show all posts

Jul 17, 2016

கசப்பான சில உண்மைகள்!


அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை எதிர்க்கவேண்டும் என்ற துருக்கியின் அந்த நினைப்பு வரவேற்கத் தக்கது. ஆனால் அதுதான் ஒரு முஸ்லிம் எதிர்பார்க்கும் இஸ்லாமிய அரசியலின் ரூபம் என நினைத்தால் அதுவும் ஒரு தவறான நிலைப்பாடு! இஸ்லாத்தின் அரசியல் என்பது முற்றாக வஹிவழியில் தன் அதிகாரக்கட்டமைப்பையும் அதனடி உடனடியாக சிவில் நிர்வாகம் இஸ்லாத்தின் ஏவல் விலக்கள்களை அடிப்படையாக கொண்டு அமுலாக்கப் படுவதாகும்.

இதனடி அந்த நிலத்தின் பொருளாதாரக் கொள்கை , கல்வி கலாச்சாரக் கொள்கை, வெளியுறவுக் கொள்கை போன்ற சகல துறைகளும் ‪#‎வஹியின்‬ கட்டளைக்கு ஏற்ப பிரகடனப்படுத்தப்பட்டு அமுல் நடாத்தப்படுவதாகும்; அதுவரை அந்த நிலம் முஸ்லீம்களை அதிகமாக கொண்டும் ஒரு முஸ்லிமை கொண்டும் ஆளப்பட்டாலும் அது ‪#‎தாருல்‬ குப்ர் என்ற அந்தஸ்த்தை விட்டும் மாறிவிடாது!


முன்னால் சோவியத் யூனியனின் உடைவிற்கு பிறகும் அமெரிக்காவை அதன் பாலிசியை எதிர்க்கும் பல அதிகார வலயங்களை எம்மால் இனங்காட்ட முடியும். கியூபா, வடகொரியா, பிரேசில், கொலம்பியா, வெனிசுலா.... இப்படி இந்த லிஸ்ட் நீண்டது! ஒருவகையில் முஸ்லீம் உலகுக்கான சாதக அரசியலாக இதை கருத முடியுமே தவிர இஸ்லாமிய அரசியலின் வடிவமாக இதை கருத முடியாது! மேலும் அமெரிக்காவுக்கு உள்ளேயே அமெரிக்க எதிர்ப்பாளர்களை ஏராளமாக காணலாம்.

ஒரு நிலம் முதலாளித்துவ, கம்யூனிச அரசியல் பொருளாதார சமூக கல்வி கலாச்சார நிலைப்பாட்டிலிருந்து முற்றாக விடுபட்டு அந்நிலத்தின் இராணுவம், மக்கள் நிபந்தனையற்ற முறையில் இஸ்லாத்தை அமுலாக்கம் செய்ய உடன்படும் நிலையிலேயே அது #தாருல் இஸ்லாமாக மாறுகிறது. அங்கு பெரும்பான்மை மக்கள் முஸ்லீம்களாக இல்லாதிருப்பினும் சரியே! இத்தகு கோட்பாட்டு உண்மையை கருத்தில் கொண்டே நாம் துருக்கியை மட்டுமல்ல முஸ்லிம் உலகின் சகல அதிகார நிலங்களையும் நோக்க வேண்டியுள்ளது! கசப்பாக இருந்தாலும் இதுதான் உண்மை.

இப்போது அமெரிக்க எதிர்ப்பு முகத்தை எர்தூகான் அரசு காட்டினாலும் கமால் பாட்சாவின் துரோக அரசியலை கைவிட்டு அதன் மேல் காறி உமிழ்ந்துவிட்டு அந்த எதிர்ப்பை காட்டவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. முஸ்லீம் உலகின் மனோபாவத்தை தன் பக்கம் ஈர்க்கும் ஒருவகை மொஸ்மரிச பாலிசியை அவர் கையால்வதாகவே கருத முடிகிறது! இந்தப் பதிவின் மீது ஏகப்பட்ட முரண் விமர்சனங்கள் வரும் என்பதை நான் அறிவேன். அதற்கெல்லாம் பதில் சொல்லப் போவதில்லை காலம் இன்ஷா அல்லாஹ் பல உண்மைகளை புரியவைக்கும்.

Jul 3, 2016

காசாவில் தொடர் தாக்குதல்களில் ஈடுபட்ட இஸ்ரேலிய போர் விமானங்கள்

இஸ்ரேலிய போர் விமானங்கள் அதிகாலையில் காசா நகர் மீது தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

ஹமாஸ் இயக்கத்திற்கு தொடர்புடைய நான்கு இலக்குகளைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ராணுவம் கூறியுள்ளது.

ஹமாஸின் கட்டுப்பாட்டில் தற்போது காசா நிலப்பரப்பு உள்ளது.இந்த தாக்குதலில் இருவர் காயம் அடைந்திருப்பதாக பாலஸ்தீன வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, காசா பகுதியிலிருந்து ஏவப்பட்ட ராக்கெட் ஒன்று, இஸ்ரேலில் உள்ள காலியான மழலையர் பள்ளிக் கட்டிடத்தைத் தாக்கியது குறிப்பிடத்தக்கது.

செய்தி BBC

Jun 24, 2016

மலாலாவுக்காக கண்ணீர் வடித்த அந்த பெண்ணுரிமை வாதிகள் எங்கே!




இது கதையல்ல!

அந்த பூமியில் இவள் பிறந்த போது சியோனிசத் தோட்டாக்கள் தாம் தாலாட்டுப்பாடின! 

எஞ்சிய இடிபாடுகளுக்குள் இருந்த உடைந்த பராலைகளில் கட்டப்பட்ட கிழிந்த துணியினால் ஆன தொட்டிலில் சுதந்திரக் காற்றை தேடி இவள் ஆழமாக மூச்சுவிட்டபோது...! 

அதில் கலந்திருந்த கந்தக வாசம் பிறப்புரிமை ஆனது! வெடிகுண்டுகளை தடாவிய வாறுதான் தவழ்ந்தாள்! 

யூத துப்பாக்கிகளின் குறிகளை கண்டவாறுதான் எழுந்தாள்! 


வீரத்தையும் தன்னம் பிக்கையையும் தவிர! பெரிதாக எதுவும் பாலஸ்தீன முஸ்லீம் களிடம் இல்லை! 

அதற்கு இவள் விதிவிலக்கல்ஒரு யூதக் கயவனின் வல்லுறவையும் எதிர்வு கூறிய வாரே பாலஸ்தீனில் ஒவ்வொரு பெண்ணும் பூப்பெய்துகிறாள்! 

இந்த வருடம் மட்டும் 1823 பெண்கள் பாலியல் வல்லுறவுக் குட்படுத்தி படுகொலை செய்யப் பட்டுள்ளார்கள்! 

1000 பெண்கள் வரை சிறையிடப் பட்டுள்ளார்கள்! காரணம் ஒன்றே ஒன்றுதான்.... அவர்கள் முஸ்லீம்அவளது வயதும் வெறும் 14 மட்டுமே!

 அந்த கொடுமை மிக்க பாலஸ்தீன நிலத்தின் வரலாற்றுச் சுமையை சுமந்த வாரே கல்வி கற்பதற்காக புத்தகங்களை சுமந்தவள்! 

யூத இராணுவம் சந்தேகத்தின் பெயரில் அவளை கைது செய்தது! கொடூரமாக தம் சந்தேகத்தை பாலியல் வக்கிரம் மூலம் தீர்த்து படுகொலை செய்தன அந்த யூத நாய்கள்!

 பின்னர் ஒரு குப்பையை போல அவளை வீதியோரத்தில் வீசி எறிந்திருந்தனர்! 

எந்த மீடியா இதை பேசியது!? மலாலாவுக்காக கண்ணீர் வடித்த அந்த பெண்ணுரிமை வாதிகள் எங்கே! 

பொஸ்னியாவில் ,ஈராக்கில், காஸ்மீரில், ஆப்கானில் எல்லாம் இப்படித்தானே நடந்தது! நடக்கிறது! 

முஸ்லீம் என்றவுடன் ஏளனப் பார்வை பார்க்கும் குப்ரிய வர்க்கம், இஸ்லாத்திற் கென்றவுடன் கூட்டுச் சேர்ந்து கருவறுக்க தயங்குவதில்லை! 

முஸ்லீம் உம்மத் கிலாபா எனும் உலகலாவிய இஸ்லாத்தின் கேடயத்தின் கீழ் வராதவரை இத்தகு அக்கிரமங்கள் ஓயப் போவதில்லை. ஒரு பெண் உதவி கேட்டு அழைத்ததன் முடிவாகவே முஹம்மது பின் காசிமின் தலமையில் முழு சிந்துப் பகுதியையும் கட்டுப் பாட்டில் கொண்டுவர உமையா கிலாபத்தினால் படைநடாத்தப் பட்டது என்ற பேருண்மையை நாம் புரிந்திடல் கட்டாயமாகும்.

இஸ்ரேல்_உருவாக்கப்பட்ட_வரலாறு‬ தொடர்‬:-05

துருக்கி தேசியவாதமும் அரபு தேசியவாதத்துக்கும் இடையிலான மோதல்
பலஸ்தீன் பகுதியை கைப்பற்ற துருக்கி இஸ்லாமிய கிலாபத்தை வேரோடு கவிழ்க்கின்ற சூழ்ச்சு ஆரம்பமாகியது.
இந்த சூழ்ச்சியிலும் மேற்குலக அரசியல்வாதிகளோடு ஆரம்பத்தில் இருந்தே யூத சிந்தனைகளும் இணைந்தே செயற்பட்டுக்கொண்டிருந்தன.

இஸ்லாமிய சகோதரத்துவத்தை அடிப்படையாக கொண்டு ஆட்சி அமையாமல் துருக்கி இனநலனையும் துருக்கி தேசியவாதத்தையும் அடிப்படையாக கொண்ட ஆட்சி அமைய வேண்டும் என்ற சிந்தனை துருக்கியர்களிடையே பரப்பப்பட்டு இயக்கமாக திட்டமிட்டு வளர்க்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் உண்மையில் துருக்கியர்கள் அரபுக்கள் குருதுக்கள் என பல பிரதேச முஸ்லிம்கள் இஸ்லாமிய ஆட்சிக்குள் அடங்கியிருந்தார்கள். இப்படிப்பட்ட ஓர் ஆட்சியை துருக்கி இன ஆட்சியாக உருமாற்றுவதன் பொருள் என்னவெனில் துருக்கியர்கள் அல்லாத ஏனையோரின் உதவியும் ஒத்துழைப்பும் அடியோடு விலகிவிட வேண்டும் என்பதே!!

மறுபுறம் அரபிகளிடையே அரபு தேசியவாதம் நீரூற்றி வளர்க்கப்பட்டது. துருக்கியர்களுக்கு அடிமைகளாக இருக்கும் நிலை மாறி சுதந்திர அரபிகளாக மாற வேண்டும் என்ற சிந்தனை வேரூன்றி வளர்க்கப்பட்டது.

அரபுகளிடையே இத்தகைய அரபு தேசியவாதத்தை ஊன்றியவர்களில் பெரும்பாலானோர் கிறித்தவ அரபுக்களாக இருந்தார்கள். ‪#‎பைரூத்_பல்கலைக்கழகம்‬ அவர்களுடைய தலமைத்தளமாக இருந்தது. இந்த அமெரிக்க பல்கலைக்கழகம் தேசியவாதத்தை பரப்புகின்ற மையத்தளமாக இருந்தது.

இவ்வாறாக துருக்கியர்களிடையேயும் அரபுக்களிடையேயும் ஒரே நேரத்தில் வேறுபட்ட இரு தேசியவாத கருத்துக்கள் வேரூன்றி வளர்க்கப்பட்டன. அவை மென்மேலும் வளர்ந்து செழிப்பதற்கான வாய்ப்புகள் தொடர்ந்தும் அமுல்படுத்திக்கொடுக்கப்பட்டன.

1914 ‪#‎1ம்_உலகப்போர்‬ தொடங்கியபோது நிலமை எந்தளவு மோசமானதாக மாறிக்காணப்பட்டது என்றால் அனைத்து உம்மத்தும் ஓரணியில் தோள்கொடுத்து போரிடுவதற்கு பதிலாக அரபிக்கள் பிரித்தானியா சார் அணியாகவும் துருக்கி ஜேர்மன் சார் அணியாகவும் ரத்தவெறிபிடித்த காட்டேறிகளாக சக முஸ்லிம் சகோதரனின் இரத்தத்தை குடித்தே தீரவேண்டும் என்ற அளவுக்கு பகைமை முற்றிப்போய் எதிர் எதிர் அணியில் நின்று போரிட்டனர்.

‪#‎இன்சாஅல்லாஹ்‬......
‪#‎தொடரும்‬.......

‪#‎புகைப்படம்‬:- அமெரிக்க பைரூத் பல்கலைக்கழகம் - சவூதி அரேபியா


சிந்தனை கலஞ்சியம்

Jun 18, 2016

இஸ்ரேல்_உருவாக்கப்பட்ட_வரலாறு‬ தொடர்‬:-04

யூதர்களின் திட்டங்கள் - இஸ்ரேல்_உருவாகிய_வரலாறு - தொடர்: 04

எப்படிப்பட்ட திட்டங்களை தீட்டி யூதர்கள் பலஸ்தீன் பகுதியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள் என இனி பார்க்கலாம்.

முதலில் அவர்கள் ஓர் இயக்கத்தை தொடங்கினார்கள். உலகெங்கிலும் உள்ள யூதர்கள் பலஸ்தீனை நோக்கி இடம்பெயர வேண்டும் அங்கு சொத்துக்களை வாங்க வேண்டும் என்பது தான் அவ்வியக்கத்தின் குறிக்கோள் பிரச்சாரமாக இருந்தது.

இதன்படி 1880ம் ஆண்டு முதல் புலம்பெயர்வு தொடங்கியது. ஐரோப்பாவில் வசித்துவந்த யூதர்கள் ஒருவர் பின் ஒருவராக பலஸ்தீனில் குடியேறினார்கள்.

அதன் பின் புகழ்பெற்ற யூத தலைவனான #தியோடர்_ஹெர்சல் 1897ம்ஆண்டு #ஜியோனிஸ்ட்_மூவ்மென்ட் எனப்படும் யூத இயக்கத்தை துவங்கினான். (Zionist organization -ZO) பலஸ்தீனை கைப்பற்றுவது மற்றும் ஹைஹலுஸ் ஸுலைமானியை மீண்டும் கட்டுவது என்பனவற்றையே அவ்வியக்க குறிக்கோளாக அறிவித்தான். இதற்காக யூதர்கள் கோடிக்கணக்கில் செல்வங்களை வழங்கினர்.

Zionist movement இன் முதல் மாநாடு வட சுவிஸ்லாந்தின் பெஸ்லே நகரில் நடைபெற்றது. அப்போது தியோடர் தன்னுடைய டயரியில் பின்வருமாரு எழுதினான். " பெஸ்லேயில் யூத தேசத்தை நான் கண்டுகொண்டேன் என்பதை நான் அறிவித்தால் உலகமே என்னை பைத்தியக்காரன் என்று சொல்லும். ஐந்து அல்லது ஐம்பது அண்டுகளில் இந்த பேருண்மையை உலகம் உணர்ந்து கொள்ளும். "

1901ம் ஆண்டு தியோடர் இஸ்லாமிய கலீபாவான #சுல்தான்_அப்துல்_ஹமீது_கான் இடம் தன்னுடைய தூதரை அனுப்பி வைத்தான்.
"பலஸ்தீன் பகுதியை யூத தேசமாக அறிவித்துவிட வேண்டும். அதற்கு பதிலாக துருக்கிய அரசின் கடன்களை நாங்கள் கொடுத்துவிடுகிறோம்".
இதுதான் அவன் கொடுத்தனுப்பிய செய்தி

இதை கலீபா ஏற்றுக்கொள்ளவில்லை. காரித்துப்பி நிராகரித்துவிட்டார். " நான் உயிரோடு இருக்கும் வரை துருக்கி கிலாபத் நிலைத்திருக்கும் வரை பலஸ்தீனை யூதர்களிடம் ஒப்படைப்பது நடைபெறாது.உங்களது அனைத்து செல்வங்களின் மீதும் காரி உமிழ்கிறேன்" என கூறிவிட்டார்.

தியோடர் கலீபாவிடம் பேசுவதற்காக அனுப்பிய யூத தூதுவனின் பெயர் #கர்ரா_ஸவ்_ஆவ்பந்தி ஆகும்.

அதாவது இஸ்லாமிய கலீபாவிடம் நேருக்கு நேர் பலஸ்தீன் மண்ணுக்கு விலை பேரம்பேசும் அளவுக்கு யூதர்களின் பலம் கூடியிருந்தது.

பேரத்தை மறுத்த கலீபாவை நோக்கி யூத தூதுவன் "நாங்கள் சொல்வதை நீங்கள் நிறைவேற்றவில்லை என்றால் மோசமான விளைவுகளை சந்திக்கவேண்டி வரும்" என எச்சரிக்கை செய்யும் அளவு அவன் துணிச்சல் பெற்றிருந்தான்.

கிலாபத் இருக்கும் வரை பலஸ்தீன் பற்றிய தங்கள் கனவு பலிக்காது என தெரிந்த யூதர்கள் கிலாபத்தை உடைக்கும் பணிகளில் இறங்கினார்கள்.

பிரீமேசன்,தோனாமா,மற்றும் மேற்கத்தைய கல்வியை கற்று துருக்கிய தேசியவாதத்துக்கு பலியான இளைஞர்களும் யூதர்களின் சதியில் பங்குபற்றினர்.

(இங்கு தோனாமா எனப்படுவோர் முஸ்லிம்களாக வெளியில் நடித்த யூதப்பற்றாளர்கள்)

இவர்கள் யூத இராணுவத்தின் உதவியையும் பெற்றார்கள்.

கடைசியாக இஸ்லாமிய கிலாபத் வீழ்த்தப்பட்டது. சுல்தான் அப்துல் ஹமீது கான் பதவியிலிருந்து விலக்கப்பட்டார். இதன்போது வரலாற்றிலே_மிக_மிக_கேவலமான_சம்பவம் முஸ்லிம் உம்மத்தால் நிகழ்த்தப்பட்டது. இதை உன்னிப்பாக அவதானிக்க வேண்டும்.

அதாவது

1908ம் ஆண்டு கலீபா அப்துல் ஹமீதிடம் "நீங்கள் பதவியிலிருந்து நீக்கப்படுகிறீர்கள்" எனும் செய்தியை சுமந்தவாரு மூன்று நபர்கள் சென்றார்கள். அதில் இருவர் துருக்கியர். மூன்றாம் நபர் யார் தெரியுமா???

நாம் ஏற்கனவே பார்த்த #ஹர்ரா_ஸவ்_ஆவ்பந்தி அவனே தான். பலஸ்தீனை பேரம்பேச சென்று கலீபா காரி உமிழ்ந்து அனுப்பினாரே அவனேதான்.

முஸ்லிம்கள் செய்த ரோஷம்கெட்ட கேவலமான பணி இது. கலீபாவை நீக்கியும் விட்டு அந்த செய்தியை யாரிடம் கொடுத்து அனுப்பினார்கள் என்று பார்த்தீர்களா???

எந்த யூதனை காரி உமிழ்ந்து கலீபா விரட்டினாரோ அவனிடம் "நீ வெளியே போகலாம்" என்ற செய்தியை கொடுத்தனுப்பினார்கள் இந்த மானம்கெட்ட உம்மத்.

நான் காரித்துப்பியவனே என்னை வெளியே போ என்று சொல்லும் போது கலீபாவின் மனம் எப்பாடுபட்டிருக்கும் என கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்.

இன்சா அல்லாஹ்...
தொடரும் ....


சிந்தனை கலஞ்சியம்


 #புகைப்படம்:- கலீபா கிலாபத்தை விட்டு வெளியேறும் காட்சி



 

Jun 17, 2016

இஸ்ரேல்_உருவாக்கப்பட்ட_வரலாறு‬ தொடர்‬:-03

யூதர்களின் நன்றி கெட்டத்தனம்
ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் அதாவது கி.பி.70ம் ஆண்டிலேயே ஹைஹலுஸ் ஸுலைமானி உருத்தெரியாமல் அழிக்கப்பட்டுவிட்டது. இதை நாம் கடந்த பதிவுகளில் பார்த்தோம்.
ஆனால் இஸ்லாத்தின் மீள்வருகைக்கு பின் உமர் ரழி அவர்களின் ஆட்சிக்காலத்திலே பைத்துல் முகத்திஸ் வெற்றிகொள்ளப்படுகிறது. அப்போது அங்கே யூதர்களின் எந்தொரு வழிபாட்டுத்தலமும் இல்லை. மாறாக ஒருசில கட்டிட சிதலங்களே அங்காங்கு காணப்பட்டன.
எனவே மஸ்ஜிதுல் அக்ஸாவையும் பொன்னிற கூரை கொண்ட கூவ்வதுஸ் ஸக்ராவையும் எங்கள் வழிபாட்டுத்தலங்களை அழித்துவிட்டே முஸ்லிம்கள் கைப்பற்றினார்கள் என யூதர்கள் போலிக்குற்றச்சாட்டு சுமத்த முடியாது.
இவை வரலாற்றை படிக்கும் ஒவ்வொருவரும் அறிந்துகொள்ளும் உண்மைகளாகும்.
இனி ஐரோப்பாவில் யூதர்கள் எப்படி நடாத்தப்பட்டார்கள் என பார்ப்போம்
 
ஐரோப்பியர்களுக்கு யூதர்கள் சபிக்கப்பட்ட ஓர் இனமாகவே கருதப்பட்டார்கள்.
இங்கிலாந்து மன்னர் ‪#‎முதலாம்_எட்வர்ட்‬ 1290ல் ஒரு அரசாணையை வெளியிட்டார். அதில் யூதர்கள் அனைவரும் இங்கிலாந்தின் எல்லையை விட்டே வெளியேறிவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. கிறித்தவ பாதிரிகளும் நாடுமுழுவதும் சுற்றித்திரிந்து யூதர்களுக்கு எதிராக மக்களை திரட்டும் பணியை செவ்வனே செய்தார்கள்.
பிரான்ஸ்ஸில் ‪#‎மன்னர்_பிலிப்ஸ்‬ 1302ல் யூதர்கள் அனைவரும் பிரான்ஸை விட்டே போய்விடவேண்டும் என ஆணை பிறப்பித்தார்.
அதேபோன்று
1498ம் ஆண்டு ‪#‎12ம்லூயிஸ்_மன்னர்‬ யூதர்கள் ஒன்று நாடுதுறக்க வேண்டும் அல்லது கிறித்தவத்துக்கு மாற வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார்.
ஜேர்மனிலும் ரஸ்யாவிலும் மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளிலும் யூதர்கள் சொல்லொனா துயரங்களுக்கு ஆளானார்கள். அவர்கள் மீது சமூக பொருளாதார அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன.
ஒரு சில நாடுகள் யூதர்கள் எவரையும் விட்டுவைக்காது நாட்டைவிட்டே வெளியேற்றும் பணியை செய்தன. இன்னும் சில நாடுகளோ குறிப்பிட்ட சில நிலப்பரப்பை ஒதுக்கி அவ்விடங்களில் மட்டுமே யூதர்கள் வாழ வேண்டும் என்றும் வேறு இடங்களுக்கு செல்லலாகாது என்றும் தடை விதித்தன. அப்பகுதிகளை சுற்றியும் பெரும் அரண்களை போன்று சுவர்கள் எழுப்பப்பட்டன. இப்பகுதிகள் "‪#‎ஹெட்டோ‬" என அழைக்கப்படுகின்றன.
இனி யூதர்கள் தொடர்பாக முஸ்லிம்களின் நிலைப்பாட்டை பார்க்கலாம்
 
உஸ்மானிய கிலாபத்தின் கலீபாவான ‪#‎2ம்_பயாஸீத்‬ 1493ல் ஒரு அரசாணையை வெளியிட்டார். அதாவது தன்னுடைய ஆட்சி எல்லைக்குள் வசிக்கின்ற யூதர்களோடு மக்கள் நன்முறையில் நடந்துகொள்ளவேண்டும் என்பதே அந்த அரசாணை.
இவ்வாறு யூதர்கள் கடந்த 13நூற்றாண்டுகளாக (அதாவது 1924 கிலாபத் வீழ்ச்சியடையும் வரை )யூதர்கள் ஓர் இடத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்தார்கள் என்றால் அது முஸ்லிம்களின் இஸ்லாமிய கிலாபத் ஆட்சியின் கீழ் தான் என்பது யூதர்களும் மறுக்க இயலாத உண்மையாகும்.
ஸ்பெயின்(உந்துலிஸ்) நாட்டில் முஸ்லிம்களின் ஆட்சியின் கீழ் வாழ்ந்த காலம் தான் எங்களுடைய வரலாற்றில் பொற்காலம் என யூத வரலாற்று ஆசிரியர்களே கூறியுள்ளார்கள்.
அழுகைக்கதவு என்ற ஒன்றை யூதர்கள் தம்முடைய மதத்தின் புனித பொருளாக கருதிவருகின்றார்கள். இந்த கதவு கூட முஸ்லிம்களின் கருணையால் தான் யூதர்களுக்கு கிடைத்தது. அதாவது இக்கதவு மண்ணுள் புதையுண்டு அடையாளம் தெரியாத அளவுக்கு காணாது போயிருந்தது. முற்புதர்களும் குப்பைகூளங்களும் அதை மூடிவிட்டிருந்தன. கி.பி. 16ம் நூற்றாண்டில் சுல்தான் சலீம் உஸ்மானி ஆட்சிக்காலத்தில் அக்கதவு கண்டுபிடிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு யூதர்கள் அதை தரிசிக்கவும் ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டது. (ஆதாரம்:- News from Israel bulletine july1987, the government of isrel Bombay)
ஆனால் இந்த நன்றிகெட்ட இனம் இன்று என்ன செய்கிறது???
இன்சா அல்லாஹ்....
தொடரும்.....

இஸ்ரேல்_உருவாக்கப்பட்ட_வரலாறு‬ தொடர்‬:-02

பைத்துல் முகத்திஸ் வளாகத்தில் யூதர்கள் எவரும் நுழைய கூடாது என ரோமானியர்கள் தடைவிதித்திருந்தனர். இவ்வாறாக பலஸ்தீனில் ஒரு யூதர்கள் கூட இல்லை என்ற நிலை காணப்பட்டது.
மேற்கூறப்பட்ட வரலாற்றிலிருந்து பின்வரும் முடிவுகளை நாம் எடுக்கலாம்
1. பலஸ்தீன் எங்களது பூர்வீக நிலம் என யூதர்கள் கூறுவது முற்றிலும் பொய்
2. இனப்படுகொலை செய்து அங்கு வசித்துவந்த பூர்வீக குடிகளை அழித்துவிட்டே அவர்கள் அங்கு குடியேறினர்.
3. வட பலஸ்தீன் பகுதியில் அதிகபட்சம் ஐந்து நூற்றாண்டுகளே வாழ்ந்தனர்.
4. தென்பலஸ்தீனில் அதிகமாக எட்டு நூற்றாண்டுகளே யூதர்கள் வாழ்ந்தார்கள்
5. அரபுக்கள் வட பலஸ்தீன் பகுதியில் 25 நூற்றாண்டுகளும் தென் பலஸ்தீன் பகுதியில் 20 நூற்றாண்டுகளும் வசித்து வந்தனர்.
உண்மை நிலை இவ்வாறு இருக்க இன்று யூதர்கள் என்ன கூறுகிறார்கள்??
பலஸ்தீன் எங்களது மூதாதையர் வாயிலாக எங்களுக்கு கிடைத்த பூமியாகும். இறைவன் எங்களுக்கு வாக்களித்த பூமியாகும். எங்களுக்கு வாக்களிக்கப்பட்ட பூமியை எப்படியாவது வலுக்கட்டாயமாக அடைந்தே தீருவோம். அதாவது அங்கே யார் வாழ்ந்தாலும் அவர்களை இனத்தோடு அழித்துவிட்டு அப்பிரதேசத்தை அடைந்தே தீருவோம். அதற்கான உரிமை எங்களிடம் இருக்கின்றது. என கூறுகின்றனர்.
இரண்டாயிரம் ஆண்டுகளாக யூதர்கள் ஒரு பிரார்த்தனையை செய்து வருகின்றார்கள். ""பைத்துல் முகத்திஸ் எங்களது கைகளில் வந்து சேர வேண்டும் அங்கே கைஹலுஸ் ஸுலைமானை நாங்கள் நிறுவ வேண்டும் "" என்பதே அந்த பிரார்த்தனை.
அதுமட்டுமல்ல யூதர்களின் வீடுகளில் நடைபெருகின்ற சடங்குகளில் தவறாமல் ஒரு நாடகம் சித்தரிக்கப்பட்டு நடிக்கப்படுகிறது. எகிப்திலிருந்து நாம் எவ்வாறு வெளியாகினோம். பலஸ்தீன் பகுதியில் எவ்வாறு குடியேறினோம். பபிலோனியர்கள் எவ்வாறு துரத்தியடித்தனர். பலஸ்தீன் பிரதேசத்தில் எவ்வாறு சின்னாபின்னப்படுத்தப்பட்டோம். என்பன எல்லாம் அந்நாடகத்தில் சித்தரிக்கப்படுகின்றன.
இவ்வாறு ஒவ்வொரு யூத குழந்தையின் மனதிலும் யூத தேசம் உன்னுடையது அதை அடைவதே உன் வாழ்வின் இலட்சியம் அங்கு கைஹலுஸ் ஸுலைமானை நிறுவுவதே உன் இலக்கு எனும் நச்சுக்கருத்து விதைக்கப்படுகின்றது.
கி.பி.12ம் நூற்றாண்டு புகழ் பெற்ற யூத தத்துவ ஞானியான "மூசா இப்னு மைமூனிடஸ்" தன்னுடைய யூத நூலான " The code of jews law" எனும் நூலில் தெளிவாக எழுதியுள்ளதாவது:- " பைத்துல் முகத்திஸ் வளாகத்தில் கைஹலுஸ் ஸுலைமானியை நிறுவுவது யூதனாக பிறந்த ஒவ்வொரு நபரினதும் வாழ்க்கை குறிக்கோளாகும்."
இதற்காகவே Free Mason Movement அமைப்பினை உருவாக்கி உலகலாவிய ரீதியில் கைஹலுஸ் ஸுலைமானை நிறுவுவது தொடர்பான கருத்தலைகளை வளர்த்து வருகின்றனர்.
இந்த தகவல்களின் அடிப்படையில் இன்று அடிக்கடி பைத்துல் முகத்திஸ் வளாகத்தில் தீப்பற்றி எரிவதும் அங்காங்கே தீப்பற்றி எரிவதும் அவ்வளாகத்தை இலக்காக கொண்டு பல தாக்குதல்கள் நடைபெறுவதும் இவர்களின் திட்டத்தின் செயற்பாடுகளே.
ஆக யூதர்கள் அவர்களது முயற்சியில் வெற்றி பெறவே முயற்சி செய்வார்கள்.
இன்சா அல்லாஹ்.....
தொடரும் .......

இஸ்ரேல்_உருவாக்கப்பட்ட_வரலாறு‬ தொடர்‬:-01

பைத்துல் முகத்தஸைப்பற்றியும் பலஸ்தீனைப்பற்றியும் முதலில் நாம் ஒரு விடயத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
கி.மு.13ம் நூற்றாண்டில் தான் அங்கு முதன்முதலில் யூதர்கள் குடியேறினார்கள். தொடர்ந்து அங்கு இரண்டு நூற்றாண்டுகளாக போரிட்டே அங்கு வாழ்ந்து வந்தனர். பலங்காலந்தொட்டு அவர்கள் அங்கு வசித்துவரவில்லை. அவர்கள் அப்பகுதியின் பூர்வீக குடிகளும் அல்லர். அங்கு வசித்து வந்த பூர்வீக குடிகள் பற்றி பைபிளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வாழ்ந்துவந்த ‪#‎செவ்விந்தியர்களை‬, அவுஸ்திரேலியாவில் வாழ்ந்துவந்த ‪#‎அபோரிஜின்களை‬ எப்படி வெள்ளையினம் முற்றாக அழித்து குடியேறினார்களோ அதேபோன்று தான் யூதர்கள் பலஸ்தீன் பகுதியில் வசித்துவந்த பூர்வீக குடிகளை அழித்து அங்கே குடியேறினர்.
அதன் பின்பு யூதர்களின் கலகத்தை அடக்க ஆசிரியர்கள் கி.மு.8ம் நூற்றாண்டு வட பலஸ்தீன் பகுதி நோக்கி படையெடுத்து யூதர்களை முற்றாக அழித்து அப்பகுதியை விட்டு விரட்டியடித்துவிட்டு அண்மித்த பகுதிகளில் வசித்துவந்த அரபினத்தவர்களை குடியமர்த்திவிட்டு சென்றனர்.
அதன்பின்பு கி.மு.6ம் நூற்றாண்டில் பாபிலோனிய சக்கரவர்த்தி பஃக்து நஸர் தென்பலஸ்தீனை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து அங்கு வசித்துவந்த யூதர்களை முற்றாக வெளியேற்றினார். அத்துடன் பைத்துல் முகத்திஸையும் சின்னாபின்னமாக்கி சுவடே இல்லா அளவுக்கு அழித்தார்.
கி.மு.10ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஹைஹலுஸ் ஸுலைமானி எனப்படும் Temple of Solomon ஐயும் முற்றாக சுவடே இல்லாத அளவுக்கு அழித்தார்.
பல ஆண்டுகளாக நாடோடிகளாக சுற்றித்திரிந்த யூதர்கள் ஈரானிய பேரரசின் ஆட்சிக்காலத்தில் மறுபடியும் பலஸ்தீன் மண்ணில் குடியேறினர். அப்போது பைத்துல் முகத்திஸ் வளாகத்தில் மறுபடியும் ஹைஹலுஸ் ஸுலைமானை நிறுவினர்.
ஆனால் இந்த குடியேற்றம் மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாக நீடிக்கவில்லை. கி.பி.70ம்ஆண்டளவில் யூதர்கள் ரோம பேரரசை எதிர்த்து கலகம் செய்தார்கள். இந்த கலகத்தை அடக்கும் முயற்சியில் அப்பிரதேசமும் Temple of Solomonஉம் சின்னாபின்னப்படுத்தப்பட்டன. அதன்பின்பும் கி.பி.135ம் ஆண்டில் மறுபடியும் ஏற்பட்ட கலகத்தை அடக்கும் முயற்சியில் யூதர்கள் ரோம படையினால் பலஸ்தீன் பகுதியிலிருந்தே விரட்டியடிக்கப்பட்டனர். இதன் போது இப்பகுதியில் அரபினத்தவர்கள் மறுபடி குடியேற்றப்பட்டனர்.
இன்சா அல்லாஹ்...
தொடரும் ....
(இவ்வாக்கம் சையத் அபுல் அஃலா மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்களின் "யஹூதியொ உன் கா மன்ஷூபாஹ்" என்ற மூல நூலின் தமிழாக்கத்தின் பகுதிகளாக வெளிவருகிறது.)

Apr 6, 2016

அமெரிக்கா-சிரியா இடையே உள்ள உறவின் ரகசியங்கள்

 
உதுமானிய கிலாபா முதல் உலக யுத்தத்தில் தோல்வி அடைந்திருந்த நிலை மற்றும்  1916ல் பிரான்ஸ் இங்கிலாந்து இடையே ஏற்பட்ட சைக்ஸ் பீகாட் ஒப்பந்தம் மூலம், இன்று சிரியா என நம்மால்  அறியப்படும் பகுதியை பிரான்ஸ் ஆக்கிரமித்தது. ஒருவருக்கு சிரியாவில் அமெரிக்காவின் ஆதிக்கம் எந்த அளவிற்கு இருக்கின்றது என்றும் அசாத் அரசிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான உறவை பற்றி புரிந்து கொள்ள, அவர் இக்கால சிரியா உருவான வரலாற்றை தெரிந்து கொள்வது அவசியமாகும். கீழ்வரும் 10 கால வரிசையிலான முக்கிய புள்ளிகள் அதாவது சிரியாவின் மீதான மேற்கத்திய காலனியாதிக்கம் முதல் இன்றைய நிலை வரையிலான நிகழ்வுகள் இந்நாட்டில் அமெரிக்காவின் ஈடுபாட்டை குறிப்பிட்டு காட்டுகிறது.
1. அமெரிக்கா மற்றும் சி்.ஐ.ஏ 1949 முதல் சிரியாவில் நடத்திய ராணுவ புரட்சிகள்:
 
அமெரிக்கா டமாஸ்கஸில் உள்ள அதன் தூதரகம்  மற்றும் சி்.ஐ.ஏ வாயிலாக முதன் முதலில் 1949 ல் ராணுவ புரட்சியை நடத்தியது, என மைல்ஸ் கோப்லேண்ட் எனும் எழுத்தாளர் தனது “The game of Nations” எனும் நூலில் விவரித்துள்ளார். இதன் மூலம் மத்திய கிழக்கின் மீதான சர்வதேச போராட்டம் புது வரவான  அமெரிக்காவிற்கும் இந்த பிராந்தியத்தில் ஏற்கனவே ஆதிக்கம் செலுத்தி வந்து இரண்டாம் உலக யுத்தத்தில் பேரழிவை சந்தித்து வெளியேறிய ஐரோப்பாவிற்கும் (பிரஞ்சு மற்றும் பிரிட்டன்) இடையே தொடங்கியது. அமெரிக்க தூதரகமும் சி.ஐ.ஏ வும் தொடர்ந்து பல அடுத்தடுத்த ராணுவ புரட்சிகளை சிரியாவில் 50 மற்றும் 60 களில் ஐரோப்பிய எதிரிகளுக்கு எதிராக நடத்தியது, இந்த காலம் திறத்தன்மை அற்ற நிலையில் இருந்தது இந்நிலைமை 20 ஆண்டுகள் நீடித்தது.
2. இஸ்ரேலை பாதுகாக்க 1967ம் ஆண்டு நடந்த போரில் ஹாஃபிஸின் பின் வாங்கல்: 
 
முன்னால் அதிபர் அமீன் அல்-ஹாஃபிஸ், 2001 ம்ஆண்டு ஜூலை 2ம் தேதி அல்-ஜசீராவுக்கு அளித்த பேட்டியில் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ஹாஃபிஸ் அல்-அசாத், அந்த போரின் ஆரம்பத்தில் கோலன் ஹைட்ஸில் உள்ள சிரியாவின் ராணுவத்தினரை பின் வாங்குமாறு கண்டிப்பான உத்தரவு ஒன்றை அவர்களுக்கு அனுப்பினார் இது சிரியா தோல்வி அடையாத நிலையிலும் இஸ்ரேலிய ராணுவத்துடன் எவ்வித தாக்குதலை துவக்காத நேரத்தில் நடைபெற்றது. இச்செயல் இந்த இடத்தை இஸ்ரேல் ஆக்கிரமிக்கும் நிலைக்கு இட்டு சென்றது.[1] இச்செயலை செய்ததன் காரணமாக இஸ்ரேலின் வடக்கு எல்லையை பாதுகாப்பதற்கான அமெரிக்காவின் நம்பிக்கையை அசாத் பெற்றார், அதை அவர் 30 வருடங்களாக தொடர்ந்து செவ்வனே செய்து வருகிறார்.
3. அமெரிக்கா சிரியாவை ஐ.நா தீர்மானம் 242 மூலம் 1967 ல் ஆதரித்தது:
 
கோலன் ஹைட்ஸ் எனும் இடத்தை ஆக்கிரமித்த இஸ்ரேலுக்கு எதிராக ஆறு நாள் போர் என அறியப்பட்ட 1967 போருக்கு பின் நிறைவேற்ற பட்ட ஐ.நா தீர்மானம் 242, சிரியாவுக்கு இது நாள் வரை அந்த இடத்தின் மீதான அதன் உரிமையை திரும்ப பெற்றுத்தந்தது.[2] அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தையும் இந்த இடத்தின் மீதான சிரியாவின் உரிமையையும் ஆதரித்தது. ஏதோவொரு நேரத்தில் வெளிப்படும் வெத்துவாக்காகவும் அல்லது இந்த கடல்வழி முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் இஸ்ரேலின் நிலைபாட்டிற்கு முற்றிலும் மாறுபட்டு இருந்தது,
4. 1973ம் ஆண்டின் போருக்கு பின் அமெரிக்க – சிரியாவுடனான உறவை பலப்படுத்தல்:
 
1973 ல் திடீரென நடைபெற்ற இஸ்ரேலுக்கு எதிரான போரை தொடர்ந்து, அமெரிக்கா சிரியாவை கண்டித்திருக்க வேண்டும் மற்றும் அதன் மீது தடைகள் விதித்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாற்றமாக, 1974ல், அசாதுடனான உறவை வலுப்படுத்த அதிபர் நிக்சன் டமாஸ்கஸிற்கு விஜயம் புரிந்தார்.
5. 1976ம் ஆண்டு முதல் சிரியா மேற்கொண்ட லெபனான் மீதான ஆக்கிரமிப்பை அங்கீகரித்தல்:
 
லெபனானில் நடைபெற்ற உள்நாட்டு போரின் தொடக்கத்தில் சிரியா லெபனான் மீது ராணுவ படையெடுப்பு நடத்தியது. இது குறித்து அமெரிக்காவின் மௌனம் என்பது ஹாஃபிஸ் அல்-அசாதின் இந்த ஆக்கிரமிப்பை தொடங்கியதற்கான “பச்சை விளக்கு” காட்டப்பட்டது போல் இருந்தது இந்த ஆக்கிரமிப்பு 2005 வரை நீடித்து இருந்தது. இந்த ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி பிரஞ்சு தீர்மானம் கொண்டு வத்ததன் மூலம் சிரியாவை வெளியேற்றியது. அமெரிக்காவின் ஈடுபாடு குறித்து ஒரு அரசியல் ஆய்வாளர் இவ்வாறு கூறினார்: “[அமெரிக்கா] லெபனானில் சிரியாவின் ஆதிக்கம் நீடித்திருக்க விரும்பியது.” [3]
6. சிரியா மற்றும் அமெரிக்காவுடனான ஒத்துழைப்பை 1989ல் நடைபெற்ற தாயிஃப் ஒப்பந்தம் மூலம் நிறைவேற்றுதல்:
 
தாயிஃப் ஒப்பந்தம் சவூதி அரேபியாவில் பல லெபனானிய குழுக்களுக்கு இடையே 1989 உள்நாட்டு போரை நிறுத்துவதற்காக போடப்பட்டது. இதன் மத்தியஸ்த்தராக பிரான்ஸ், சவூதி அரேபியா, எகிப்து தவிர சிரியாவுடன் அமெரிக்கா செயல்பட்டது அது “சர்வதேச ஆதரவை லெபனான் மீது சிரியாவின் – பாதுகாப்பு பொறுப்பை நிலைநிறுத்த உதவியது. [4]
7. அமெரிக்காவின் 1991 ல் ஈராக் மீதான படையெடுப்பில் சிரியா பங்கு கொள்ளுதல்:
 
(ஆபரேஷன் டெசர்ட் ஸ்டார்ம்) என்னும் ஈராக் மீதான போரில் அமெரிக்காவிற்கு சிரியா ஆதரவு அளித்ததோடு மட்டுமல்லாமல் 14,500 படை வீரர்களை அமெரிக்க படையெடுப்புக்கு உதவுவதற்காக ஈராகிற்கு அனுப்பி வைத்தது. [5]
8. அமெரிக்கா 1990 களில் சிரியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தராக செயல்படுதல்:
 
சிரியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அமெரிக்கா மத்தியஸ்ராக செயல்பட ஹாஃபிஸ் அல்-அசாத் ஒப்புக்கொண்டார். ராணுவ தலைமை அதிகாரி Lt. Gen. ஹிக்மத் அல்-ஷிஹாபி, தலைமையில் ஒரு குழு அமெரிக்காவுக்கு சென்று அமைதி பேச்சுவார்த்தை சம்பந்தமாக கருத்துரையாடினர். ரஷ்யா டுடே எனும் தொலைக்காட்சிக்கான பேட்டி ஒன்றில் சிரியாவின் முன்னால் பாதுகாப்பு அமைச்சரும் அசாத் அரசின் ஒரு தூணாக இருந்த முஸ்தபா த்லாஸ், அல்-ஷஹாபி ஒரு அமெரிக்காவின் சி்.ஐ.ஏ ஏஜன்ட் என குறிப்பிட்டார். [6]
9. சி.ஐ.ஏ மற்றும் சிரியாவுக்கு இடையே 2001 முதல் கைதிகளை சித்திரவதை செய்வது தொடர்பான உளவுத்துறை உடன்பாடு:
 
சி.ஐ.ஏ விற்கும் சிரிய அரசுக்கும் இடையேயான உறவு மிக நெருக்கமானதாகும், அதாவது சிரியாவை பொருக்கி நாடு என அறிவிக்கப்பட்ட காலத்தில் கூட, சிரிய அரசு அதன் அழுக்கடைந்த சேவையை சி.ஐ.ஏ விற்கு ஆற்றி வந்தது. அந்த அரசு உலக புகழ்பெற்ற தனது உளவுத்துறையை சி.ஐ.ஏவிற்காக கைதிகள் மற்றும் போர் கைதிகளிடமிருந்து விவரங்களை சேகரிக்க உபயோகித்தது. இதற்கு உதாரணமாக  கனடாவை சார்ந்த மாஹெர் அரார் என்பவரது நிகழ்வு சர்வதச செய்திகளில் வலம்வந்தது. [7]
10. 2011 முதல் நடைபெரும் சிரிய புரட்சியில் அரசுக்கு ஆதரவு அளித்து வரும் அமெரிக்கா: 
 
அசாத் அரசு சிரிய மக்களின் மீது 5 வருடங்களாக நடத்திவரும் தினசரி படுகொலைகளை கண்டு வாய் மூடி மவுனமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் தங்களை பாதுகாத்து கொள்ளவும் அசாதை வெளியேற்றவும் போராளிகளுக்கு தேவைப்படும் ஆயுதங்களை கொடுக்காமல் தடுத்து வருகிறது.
சிரியாவின் நவீன கால வரலாற்றில் அமெரிக்கா தொடக்கத்தில் அதன் கைப்பாவைகளை அதிகாரத்திற்கு கொண்டு வர ராணுவ புரட்சிகள் மூலம் முயற்சித்து வந்தது தெளிவாக தெரிகிறது. அமெரிக்கா சிரியாவுக்கு எதிரான வார்த்தைகளை பொது இடங்களில் உபயோகித்தாலும், அதன் கைகூலி ஹாஃபிஸ் அல்-அசாத் 1970 ல் ஆட்சிக்கு வந்ததும் சிரியாவில் தனது முழு கட்டுப்பாட்டை நிலைநிறுத்தியது. அல்-அசாத் வந்தது முதல் சிரியா அமெரிக்காவின் பிரதிநிதி நாடாக அப்பிராந்தியத்தில் அதன் நலன்களுக்கு சேவை செய்யவும் இஸ்ரேலிய வட எல்லைகளை பாதுகாக்கும் செயலை செய்து வருகிறது, ஆனால் வெளியே அரபு பகுதியல் நான் தான் அதை எதிர்ப்பதில் முன்னோடி என கூறி வருகிறது.
[1] http://www.aljazeera.net/programs/pages/fa527ac3-2308–4892-945e-7978486e3ac5 (ara­bic)
[2] http://en.wikipedia.org/wiki/Resolution_242 
[3] http://www.meforum.org/research/lsg.php
[4] http://www.gmu.edu/programs/icar/ijps/vol14_2/SALAMEY%20-%2014n2%20IJPS.pdf
[5] http://en.wikipedia.org/wiki/Coalition_of_the_Gulf_War
[6] http://arabic.rt.com/prg/telecast/23261/ (ara­bic)
[7] http://en.wikipedia.org/wiki/Maher_Arar

Nov 15, 2015

மீண்டும் ஒருமுறை பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரயீல் போரை கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது!

நமது பொறுப்பு என்ன?
 
 
 

அல்லாஹ்(சுபு) கூறுகிறான்,
 
 நிச்சயமாக நாம் நம்முடைய தூதருக்கும் நம்பிக்கை கொண்டவர்களுக்கும் இவ்வுலக வாழ்க்கையிலும் உதவி செய்வோம் சாட்சிகள் வந்து கூறும் (மறுமை) நாளிலும் உதவி செய்வோம்! (அல்மூஃமின் : 51)

 
 அல்லாஹ்வின்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்,
 
உண்ணுதல் நிமித்தம் மக்கள் ஒன்றுகூடுவது போலவே (பல்வேறு) சமுதாயத்து மக்கள் உங்களுக்கு எதிராக வெகுவிரைவில் ஒன்றுகூடுவார்கள்!  ‘அந்நாட்களில் நாங்கள் குறைவான எண்ணிக்கையில் இருப்பதின் காரணமாகவா?’ என்று வினவப்பட்டது. ‘இல்லை! அந்நாட்களில் நீங்கள் அதிகமான எண்ணிக்கையில் இருப்பீர்கள்! எனினும் கடல் நுரையை போன்று (பலவீனமாக) இருப்பீர்கள்! அல்லாஹ்(சுபு) உங்களை பற்றிய அச்சத்தை உங்கள் எதிரிகளிடமிருந்து அகற்றிவிட்டு உங்கள் இதயங்களில் வஹ்னை போட்டு விடுவான்!’ என்று கூறினார்கள். ‘அல்லாஹ்வின்தூதர்(ஸல்) அவர்களே! வஹ்ன் என்றால் என்ன?’ என்று வினவப்பட்டது. ‘உலக வாழ்க்கையின் மீதுள்ள (ஆழமான) விருப்பம் மற்றும் மரணத்தின் மீதுள்ள (கடுமையான) வெறுப்பு!’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்  (நூல் : அஹ்மது, அபூதாவூது)
 
பாலஸ்தீன முஸ்லிம்களுக்கு எதிராக பல வாரங்கள் நிகழ்த்தப்பட்டுவரும் போரில் இஸ்ரேலிய படைகள் ஆண்களையும் பெண்களையும் முதியவர்களையும் இளைஞர்களையும் குழந்தை களையும் எத்தகைய வேறுபாடுகளுமின்றி பட்டப்பகலில் கொன்று குவித்துவருகிறது! கடந்த அரை நூற்றாண்டிற்கு மேலாக புனித மண்ணை ஆக்கிரமித்துள்ள நிலையில் முஸ்லிம்களை மிருகத்தனமான கொடுமைகளுக்கு உள்ளாக்குவதில் இஸ்ரேலிய அரசு எந்த வாய்ப்பையும் விட்டுவைக்கவில்லை!
 
முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவங்கள் ஒன்றபின் ஒன்றாக நிகழ்ந்துகொண்டிருக்கின்றன! குறிப்பாக பாலஸ்தீன மக்களின் நிலை குறித்து ரசூலுல்லாஹ்வின் இந்த சமுதாயம் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்துள்ளது!
 
 பாலஸ்தீனம் என்றால் என்ன? இஸ்லாத்தில் அதற்கு என்ன முக்கியத்துவம் அளிக்கப் பட்டுள்ளது?
பாலஸ்தீனம் என்பது முஸ்லிம்களின் முதல் கிப்லாவாகவும் நபி(ஸல்) அவர்கள் மிஃராஜ் எனும் வின்வெளி பயணத்திற்கு உயர்ந்துசென்ற புனித பூமியாகவும் திகழ்கிறது!
 
 அல்லாஹ்(சுபு) கூறுகிறான்,
(அல்லாஹ்) மிகவும் பரிசுத்தமானவன்! அவன் (முஹம்மது ஸல் எனும்) தனது அடியாரை (கஃபா எனும்) மஸ்ஜிதுல் ஹரமிலிருந்து (தொலைதூரத்திலுள்ள பைத்துல் முகத்தஸ் எனும்) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓர்இரவில் அழைத்துச்சென்றான்! நம்முடைய அத்தாட்சிகளை அவருக்கு காண்பிக்கும் பொருட்டு அதனை சூழவுள்ள பகுதிகளை நாம் செழிபுற்று அபிவிருத்தி அடையச்செய்துள்ளோம். நிச்சயமாக அவன் நன்கு செவியுறு பவனாகவும் (அடியார்களை) உற்று நோக்குபவனாகவும் இருக்கிறான்  (அல்இஸ்ரா : 1)                                                  

 
அன்றியும் பாலஸ்தீன பூமி முஸ்லிம்களின் மூன்றாது புனித ஸ்தலமாகவும் விளங்குகிறது!

 
 நபி(ஸல்) அவர்கள் கூறியதை செவியுற்றதாக அபூஹுரைரா(ரளி) அறிவித்திருப்பதாவது,
மூன்று மஸ்ஜிதுகளை தவிர்த்து வேறெதற்கும் (புனித)பயணம் மேற்கொள்ள வேண்டாம்! அவையாவன : எனது மஸ்ஜித் (மஸ்ஜித் அந்நபவி); மஸ்ஜிதுல் ஹரம் (கஃபா); மற்றும் மஸ்ஜிதுல் அக்ஸா (பைத்துல் முகத்தஸ்) ஆகியவையாகும் (நூல் : முஸ்லிம் # 007 ஹதீஸ் எண் #  3218)
 
முஸ்லிம்களின் இத்தகைய புனித பூமியில்தான் இஸ்ரேலிய படைகள் அட்டூழியம் புரிந்து வருகின்றன! மிருகங்கள் புரிந்திடாத கொடிய செயல்களை யூதவெறியர்கள் நிகழ்த்தி வருகிறார்கள். பள்ளிக்கு செல்லும் இளம் சிறுமிகளை கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை! கல்விகற்க செல்லும் அவர்களை சோதணையிடுதல் என்ற சாக்கில் இடைமறித்து இஸ்ரேலிய இராணுவம் இழிவுபடுத்துவதோடு பகிரங்கமாக சுட்டிக்கொல்கிறது. இது போன்ற எண்ணற்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்துவருகின்றன!

 
முஹம்மது(ஸல்) அவர்களின் சமுதாயத்தின் அங்கமாக இருப்பவர்கள் என்ற முறையில் நமது சகோர சகோரிகளுக்கு எதிராக இழைக்கப்படும் இந்த வன்கொடுமை குறித்து கவலை கொள்ள வேண்டியதும் அதற்கு எதிராக குரல் கொடுக்கவேண்டியதும் அதை முடிவுக்கு கொண்டுவர வேண்டியதும் நம்மீது கட்டாயக்கடமையாக இருக்கிறது.

 
 நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்,
ஒருவருக்கொருவர் பேணவேண்டிய நேசத்திலும் இரக்கத்திலும் கருணையிலும் மூஃமின்கள் (மனித) உடலுக்கு ஒப்பாக இருக்கிறார்கள்!‎காலில் ஒருகாயம் ஏற்பட்டால் முழு உடலும் காய்ச்சலுக்கு உட்பட்டு உறக்கமின்மை ஏற்படுகிறது (நூல் : முஸ்லிம்)

 
இக்காலகட்டத்தின் குறிப்பிட்ட வரலாற்று பாங்கின் பின்னணியில் தோன்றியுள்ள முஸ்லிம் உலகத்தின் இன்றைய தலைவர்கள் அப்பாவி முஸ்லிம் மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற தங்கள் கடமையை பற்றிய எத்தகைய தார்மீக உணர்வையும் பெற்றிருக்கவில்லை! போஸ்னியா, மியான்மர், சிரியா மற்றும் இதர முஸ்லிம் நாடுகளில் இதுதான் எதார்த்த நிலையாக இருக்கிறது. முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிராக மேற்கத்திய அரசுகள் கட்டவிழ்த்துவிடும் அக்கிரம செயல்களை தடுப்பதற்குரிய அரசியல் துணிவு இல்லாத அவர்களின் நிலை மேற்கத்தியர்களுக்கு அவர்கள் அடிமைப்பட்டுள்ளதை பறைசாற்றுகிறது! சர்வதேச முஸ்லிம்களை பொறுத்த சிந்தனைகளிலும் உணர்வுகளிலும் அவர்கள் ஆழமாக பிளவுபட்டிருக்கிறார்கள் என்பதையும் முஸ்லிம் நிலப்பரப்புகளை ஆட்சிசெய்து கொண்டிருக்கும் கொடுங்கோலர்களுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கு அவர்களுக்கு துணிவில்லை என்பதையும் அது பறைசாற்றுகிறது!

 
 முஸ்லிம் சகோதர சகோதரிகளே!
முஸ்லிம் உலகம் ஆபத்தான பெருந்துயரத்தில் வீழ்ந்துகிடக்கும் இவ்வேளையில் உங்கள் இல்லங்களில் அமர்ந்துகொண்டு தொலைக்காட்சிகளை பார்த்து முஸ்லிம்களின் நிலை குறித்து வருந்திக்கொண்டிருப்பதில் எத்தகைய பயனும் விளையப்போவதில்லை! மாறாக, நாம் எந்த நிலப்பரப்பில் இருந்தபோதும் ஒன்றிணைந்து இந்த பாதகமான நிலையை மாற்றுவதற்கு வழிவகை காணவேண்டும்!

 
ஒரு தலைமைக்கும் மனித இனம் முழுமைக்கும் நீதி வழங்குவதற்கு திறன்பெற்ற ஓர் அரசியல் கட்டமைப்பிற்கும் கீழ் முஸ்லிம்கள் ஓரணியில் ஒன்றுபடுவது மட்டுமே இதற்குரிய தீர்வாகும். மேற்கத்தியர்களின் அத்துமீறல்களுக்கும், நமது சகோதர சகோதரிகளுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கும், மாண்புமிக்க இஸ்லாமிய மண்ணில் காலனியாதிக்கவாதிகள் ஏற்படுத்தியுள்ள ஆக்கிரமிப்புகளுக்கும், நமது வாழ்க்கை முறையில் அவர்கள் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளுக்கும், நமது அனைத்து பிரச்சினைகளுக்கும் இதுமட்டுமே ஒரே தீர்வாக இருக்கும்! நமது கரங்களை ஒன்றிணைத்து இஸ்லாமிய அரசியல் கட்டமைப்பு என்ற கிலாஃபா ராஷிதாவை மீண்டும் மறுநிர்மாணம் செய்வதற்கு அழைப்புவிடுப்பது மட்டுமே முஸ்லிம்களின் இந்த அவலநிலையை போக்குவதற்குரிய ஒரே வழியாக இருக்கிறது! கிலாஃபா அரசால் மட்டுமே முஸ்லிம்கள் இரத்தம் சிந்துவதையும் திட்டமிட்ட தாக்குதலுக்கு உள்ளாவதையும் தடுத்துநிறுத்த இயலும்!

 
 நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்,
இமாம் என்பவர் கேடயமாவார்! (முஸ்லிம்களாகிய நீங்கள்) அவருக்கு பின்நின்று போரிடுகிறீர்கள், அவரை கொண்டே பாதுகாப்பு அடைகிறீர்கள் (நூல் : முஸ்லிம்)

 
சுதந்திரமாகவும் நீதமாகவும் மேற்கத்திய ஆதிக்கத்தின் அடிமைத்தளைக்கு உட்படாமலும் செயலாற்றுவதற்கு திறன் பெற்றுள்ள கிலாஃபா ராஷிதாவின் தலைவரான கலீஃபாவின் இராணுவம் முஸ்லிம்களின் இரத்தம் ஓட்டப்படும் நிலையில் செயலற்று நின்றிருக்காது!‎‎‎‎‎ கலீஃபா உஸ்மானின்(ரளி) ஆட்சிக்காலத்தில் இவ்வாறுதான் நிகழ்ந்தது. பைசாந்திய (ரோமானிய) சஸானிய (பாரசீக) வல்லரசுகளின் அடிமைத்தளையில் சிக்குண்டு பெரும் கொடுமைகளுக்கு உட்பட்டிருந்த வடஆப்பிரிக்க நிலப்பரப்புகளை விடுவிப்பதற்கு முஸ்லிம் உலகத்தின் மாபெரும் வளங்கள் அனைத்தையும் ஒன்றுதிரட்டி உஸ்மான்(ரளி) போரிட்டார்! முஸ்லிம் உலகத்தில் கிலாஃபா ராஷிதாவை மீண்டும் நிர்மாணிக்க வேண்டும், அது ஒட்டுமொத்த உலகத்திலும் அடக்குமுறைகளுக்கும் வன்கொடுமைகளுக்கும் உட்பட்டிருக்கும் முஸ்லிம்கள் அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்கும் சரணாலயமாக விளங்கும்!

 
இதை சாத்தியமாக்க வேண்டுமெனில் நம்மை பாதிக்கும் விவகாரங்கள் பற்றிய அறிவை நாம் அதிகரித்துக்கொள்ள வேண்டும், நம்மைச்சுற்றி நிகழும் சம்பவங்கள் பற்றிய விழிப்புணர்வை பெற்றுக்கொள்ளவேண்டும், இஸ்லாத்தின் எதிரிகள் முன்வைக்கும் தர்க்க வாதங்கள் பற்றியும் அவற்றிற்குரிய மறுப்புரைகள் பற்றியும் தெளிவாக அறிந்திருக்க வேண்டும். தீனுடைய அனைத்து விஷயங்களின் கருத்தாக்கங்கள் மற்றும் அவற்றை நடைமுறையில் பின்பற்றுவது குறித்த தெளிவான விளங்கிக்கொள்ளுதல் ஆகியவற்றை நாம் பெற்றிருக்க வேண்டும்.

 
இந்த நோக்கத்தை நிறைவுசெய்வதற்குரிய திறன்கள் அனைத்தையும் நாம் பிரயோகிக்க வேண்டும். இதன்பொருட்டு வன்முறையற்ற ஆர்பாட்டங்களை மேற்கொள்ளவேண்டும், முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் சம்பவங்கள் குறித்து ஊடகங்களுக்கு விபரமாக எழுதவேண்டும், நமது குரல்களை பதிவுசெய்வதற்கு சமூக ஊடகங்களை பயன்படுத்த வேண்டும். இஸ்லாத்தை இழிவுபடுத்தும் அவர்களுடைய தீய செயல்பாடுகளை தடுக்கும் வண்ணம் அரசுகளின் மீது நாம் அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டும்! இஸ்லாத்தின் தூதுவர்கள் என்ற முறையில் நாம் நமது நிலை குறித்த விழிப்புணர்வை பெற்றிருக்க வேண்டும்! ஷரீஆ சட்டங்களுக்கு முரண்படாத வகையில் நாம் நமது செயல்பாடுகளை வன்முறையற்ற வகையில் அமைத்துக்கொள்ளவேண்டும்.

 
எல்லாவற்றிற்கும் மேலாக நாம் அல்லாஹ்(சுபு)விடம் துஆ மேற்கொள்ளவேண்டும், அவனுடைய நேசத்திற்குரிய தூதர்(ஸல்) அவர்களின் சமுதாயத்தின் மீது கருணையையும் சாந்தியையும் நல்கவேண்டும் என்று எல்லாம்வல்ல அல்லாஹ்(சுபு)விடம் பிரார்த்திக்க வேண்டும். இந்த உலகவாழ்க்கையில் இஸ்லாமிய தீனை நிலைநிறுத்துவதற்கு அவன் முஸ்லிம் உம்மாவிற்கு பலத்தையும் கண்ணியத்தையும் அளிப்பானாக!

 
இந்த பிரச்சாரம் குறித்து மேலும் அறிந்துகொள்வதற்கும் முஸ்லிம்களுக்கு எதிராக கொடுங்கோண்மை மிக்க இஸ்ரேலிய யூதவெறியர்கள் மேற்கொண்டுவரும் அடக்கு முறைகளுக்கு எதிராக உங்கள் குரல்களை பதிவுசெய்வதற்கும் கீழ்க்கண்ட இணையதளத்தை தொடர்பு கொள்ளவும்,


 
Facebook  : https://www.facebook.com/vaomuslims
Twitter : https://twitter.com/vaomuslims
உங்கள் கருத்துக்களை மின்னஞ்கல் மூலம் பதிவுசெய்யவும்‎‎ ‎‎‎‎‎  – mif.sindhanai@gmail.com

Nov 10, 2015

அமெரிக்கா தொடங்கி வைத்த வழக்கம்

74] நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன்
 
 
 
1967 - இஸ்ரேலிய அரேபிய யுத்தத்தின் விளைவுகளுள் மிக மிக முக்கியமானது, பாலஸ்தீனிய அரேபியர்களின் மனமாற்றம்.
 
ஒரு வரியில் சொல்லுவதென்றால், அரபு அரசாங்கங்கள் எதையுமே இனி நம்பக்கூடாது என்று பாலஸ்தீன் மக்கள் தீர்மானமே செய்தார்கள்.
 
அத்தனைபேருமே கையாலாகாதவர்கள் என்று பகிரங்கமாகவே அவர்கள்குற்றம் சாட்டினார்கள்.
 
நேற்று முளைத்த தேசம் இஸ்ரேல். மூன்று அரபு தேசங்கள் இணைந்து போர் புரிந்தும் வெல்லமுடியவில்லை என்றால், அப்புறம் இந்த அரசாங்கங்களை நம்பி என்ன புண்ணியம்?
 
ஆகவே, ஏதாவது ஒரு மாற்று வழி யோசித்தே தீரவேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள்.மக்களுடைய இந்தச் சிந்தனைப் போக்கின் விளைவுதான், பாலஸ்தீனில் ஏராளமான விடுதலை இயக்கங்கள் தோன்றுவதற்குக் காரணமாயின. அத்தனை இயக்கங்களையும் ஒருங்கிணைத்து, சரியான திட்டம் வகுத்து, கவனம் குவித்து, இஸ்ரேலுக்கெதிரான முழுநீள யுத்தத்தை வழி நடத்தும் பொறுப்பு, பி.எல்.ஓ.வின் தலையில் விழுவதற்குக்காரணமானது.
 
அப்படியொரு மாபெரும் இயக்கத்தைக் கட்டிக்காக்கும் பொறுப்பில் இருப்பவர், மிகப்பெரிய ராஜதந்திரியாகவும் மாவீரராகவும் மனிதாபிமானியாகவும் இருக்க வேண்டுமென்றுதான் யாசர் அராஃபத்தை அந்தப் பொறுப்புக்குக் கொண்டுவந்தார்கள்.
 
அதுவரை குவைத்தில் இருந்தபடி அல் ஃபத்தாவை வழிநடத்திக்கொண்டிருந்த அராஃபத். அரபு தேசங்களில் இருந்த எந்த ஒரு போராளி இயக்கத்துக்கும் அதுவரை பரிச்சயமில்லாமல் இருந்த 'கெரில்லா' தாக்குதல் முறையில் தன்னிகரற்ற திறமை கொண்டிருந்த அராஃபத்.1969-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி கெய்ரோவில் கூடிய பாலஸ்தீன் தேசிய காங்கிரஸின் சிறப்புக் கூட்டத்தில், யாசர் அராஃபாத் முறைப்படி பி.எல்.ஓ.வின் தலைவராகத்தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
அவர் அந்தப் பொறுப்புக்கு வந்தபோது பி.எல்.ஓ.வில் உறுப்பினராக இருந்த விடுதலை இயக்கங்கள் இவை:
 
1. Fatah, 2. western Sector, 3. Force 17, 4. Popular Front for the Liberation of Palestine PFLP, 5. Democratic Front for the Liberation of Palestine DFLP), 6. Hawatmah Faction; 7.Abd Rabbu Faction; 8. Popular Front for Liberation of Palestine (General Command), 9. Palestine Liberation Front, (PLF) 10. Abu Abbas Faction, 11. Tal'at Yaqub Faction, 12.AlSaiqa Organization, 13. Arab Liberation Front (ALF), 14. Palestinian Arab Liberation Front , 15. Palestinian Democratic Union (Fida), 16. Palestine Islamic Jihad Movement, 17.Palestinian People's Party [Hizb Al Sha'ab], 18. Palestinian Popular Struggle Front.
 
இவற்றுள் ஃபத்தா மட்டும் அராஃபத்தின் சொந்த இயக்கம்.
 
மற்ற அனைத்தும் தோழமை இயக்கங்கள். இத்தனை இயக்கங்களையும் கட்டிக்காப்பதுடன் மட்டுமல்லாமல் சரியான, முறைப்படுத்தப்பட்ட போர்ப்பயிற்சி அளிப்பது, இஸ்ரேலை அச்சுறுத்துவது மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் கவனம் கவர வழி செய்வது என்று அராஃபத்துக்கு இருந்த பொறுப்புகள் கொஞ்சநஞ்சமல்ல.
 
வெற்றிகரமாக அவரால் அதனைச் செய்ய முடிந்ததற்கு மிகப்பெரிய காரணம், முன்பே பார்த்ததுபோல, அரசுகள் மீது மக்கள் இழந்துவிட்டிருந்த நம்பிக்கை. அந்த நம்பிக்கை அப்படியே அப்போது விடுதலை இயக்கங்களின்பக்கம் சாயத் தொடங்கியது.
 
இன்னும் புரியும்படி சொல்லுவதென்றால், பாலஸ்தீன் மக்கள், ஆளும் வர்க்கத்துக்கும் தமக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று நினைத்தார்கள். அதே சமயம், இந்தப் போராளி இயக்கங்கள்தான் தமக்கு விடுதலை பெற்றுத் தரப்போகிறவர்கள் என்றும் கருதினார்கள்.
 
இந்த இடத்தில் ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும்.போராளி இயக்கங்கள் பொதுவாக, தீவிரவாத, பயங்கரவாத இயக்கங்களாகச் சித்திரிக்கப்படுவது சர்வதேச மரபு. இதை ஆரம்பித்து வைத்தது அமெரிக்கா.
 
அமெரிக்க அரசுக்குத் தலைவலி தரக்கூடிய எந்த ஓர் அமைப்பையும், பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பதுதான் அத்தேசத்தின் வழக்கம்.
 
அமெரிக்கா தொடங்கி வைத்த இந்த வழக்கத்தை முதலில் இங்கிலாந்தும் பிறகு ஐரோப்பிய யூனியனில் உள்ள அத்தனை தேசங்களும் அப்படியே எவ்வித மாறுதலும் செய்யாமல் ஏற்றுக்கொண்டுவிட்டன.
 
சர்வதேச அளவில் எந்த ஒரு தேசத்தில் விடுதலைக் குரல் கேட்கிறதோ, அந்தக் குரலுக்கு உரியவர்களைத் தீவிரவாதிகள் என்று உடனே சொல்லிவிடும் வழக்கம், அப்போது ஆரம்பித்ததுதான்.
 
உண்மையில் விடுதலை இயக்கங்களுக்கும் தீவிரவாத இயக்கங்களுக்கும் ஏராளமான வித்தியாசங்கள் உண்டு. அரசாங்கங்கள் கைவிட்டு, அரபு லீக்கும் கைவிட்டு, ஐ.நா.சபையும் கைவிட்டபிறகு, இழந்த தங்கள் நிலத்தைத் திரும்பப்பெற பாலஸ்தீன் மக்களுக்கு ஆயுதப் போராட்டத்தைத் தவிர வேறு வழியில்லை என்றானது வரலாறு.
 
அவர்களைப் போராளிகள் என்று சொல்லாமல் தீவிரவாதிகள் என்று வருணிப்பது எப்படிச் சரியாகும்?ஆனால் இந்தப் போராளி இயக்கங்கள் சமயத்தில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவதுண்டு என்பதும், மறுக்கமுடியாத உண்மையே ஆகும்.
 
உதாரணமாக, யாசர் அராஃபத் தலைமைப் பொறுப்புக்கு வந்த ஐந்தாம் ஆண்டு, அதாவது 1974-ம் வருடம் பி.எல்.ஓ.வின் ஒரு குழுவினர் இஸ்ரேலில் உள்ள மா'லாட் என்கிற இடத்தில் ஓர் ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் புகுந்து, கையெறி குண்டுகளை வீசி 21 குழந்தைகளை ஈவிரக்கமில்லாமல் கொன்று வீசினார்கள். இது சந்தேகத்துக்கு இடமில்லாமல் தீவிரவாதம்.
 
இன்னும் சொல்லப்போனால் கொலைவெறியாட்டம். இஸ்ரேலிய அரசுக்கு எதிரான யுத்தத்துக்கும் அந்த அப்பாவிக் குழந்தைகளுக்கும் என்ன சம்பந்தம்? யூதர்களில் சிறுவர், பெரியவர் என்று பாராமல் அனைவரையும் கொன்று குவிக்க உத்தரவிட்ட ஆரியக் கிறிஸ்துவரான ஹிட்லருக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டது இஸ்ரேல்.
 
நியாயப்படுத்தவே முடியாத இத்தகைய செயல்களால்தான் போராளி இயக்கங்களுக்கு சர்வதேச ஆதரவோ, அனுதாபமோ பெரும்பாலும் கிடைக்காமல் போகிறது.போராளி இயக்கங்களின் நோக்கத்தில், செயல்பாடுகளில் ஏற்படும் இத்தகைய சறுக்கல்களால்தான் அவர்கள்மீது விழவேண்டிய நியாயமான கவனம், விழாமல் போகிறது.
 
அராஃபத் பொறுப்புக்கு வந்த ஆரம்ப வருடங்களில் மிகக் கவனமாக இஸ்ரேலிய ராணுவம், காவல்துறை போன்ற இலக்குகளின் மீது மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டது. இது,இஸ்ரேலுக்குள்ளாக. இஸ்ரேலுக்கு வெளியிலும் பல்வேறு தேசங்களில் பி.எல்.ஓ.வின் போராளிகள் கவன ஈர்ப்புக்காக ஏராளமான தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட ஆரம்பித்தார்கள்.
 
ஆனால் மிகக் கவனமாக அத்தனை தாக்குதல்களுமே, யூத இலக்குகளின் மீது மட்டுமே இருக்கும்படி பார்த்துக்கொண்டார்கள்.உலகம் முழுக்க பி.எல்.ஓ., பி.எல்.ஓ., என்று பேசிக்கொண்டிருந்த காலம் அது. யார், என்ன என்கிற விவரம் கூடத் தெரியாமல், அராஃபத்தைப் பற்றிப் பேசினார்கள்.அணுகுண்டுகள் வைத்திருக்கும் இயக்கம் என்றெல்லாம் கதை பரப்பினார்கள். உண்மையில், நாட்டுவெடி குண்டுகளுக்கு அப்பால் பி.எல்.ஓ.வினரிடம் அப்போது வேறெந்த ஆயுதமும் கிடையாது.வாங்குவதற்குப் பணம் கிடையாது முதலில். பி.எல்.ஓ.வின் பிரசாரப் பிரிவினர் அரபு தேசங்களெங்கும் கால்நடையாகப் பயணம் மேற்கொண்டு துண்டேந்தி வசூல் செய்தே இயக்கத்தை வழி நடத்திக்கொண்டிருந்தனர்.
 
சவுதி அரேபியா போன்ற மிகச் சில தேசங்களின் அரசுகள் மட்டும் மறைமுகமாக பி.எல்.ஓ.வுக்கு நிதியுதவி செய்திருப்பதாகத் தெரிகிறது.1973-ம் ஆண்டுவரை பி.எல்.ஓ.வுக்கு மிகப்பெரிய அளவில் நிதிப்பிரச்னை இருந்திருக்கிறது. இது சந்தேகத்துக்கு இடமில்லாத உண்மை.ஒரு பக்கம் பி.எல்.ஓ.வில் இருந்த இயக்கங்கள், மிகத் தீவிரமாக இஸ்ரேலை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த அதே காலகட்டத்தில், பாலஸ்தீனில் வேறு சில புதிய இயக்கங்களும் தோன்றத் தொடங்கின.'இஸ்ரேல் என்கிற திடீர் தேசத்தை வேரோடு ஒழித்துவிட்டு, அகண்ட பாலஸ்தீனை மறுபடியும் ஸ்தாபிப்பதற்காக நாங்கள் திட்டம் தீட்டுகிறோம். இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை.ஆயுதங்கள் மூலம் அச்சமூட்டுவோம். இன விருத்திமூலம்கலவரமூட்டுவோம். யூதர்களைத் தூங்கவிடமாட்டோம். ஜெருசலேம் உள்பட, இஸ்ரேல் எங்களிடமிருந்து அபகரித்த அத்தனையையும் திரும்பப் பெறாமல் ஓயமாட்டோம்' என்கிற யாசர் அராஃபத்தின் அன்றைய பிரகடனம் ஒரு வேத மந்திரம் போல, அத்தனைபேரின் செவிகளிலும் விழுந்து சிந்தனையைக் கிளறிவிட்டதன் விளைவே இது.
 
இப்படித் தோன்றிய இயக்கங்களில் சில திசைமாறிப் போயின என்றாலும், பெரும்பாலான இயக்கங்கள் பி.எல்.ஓ.வில் சேராவிட்டாலும் பாலஸ்தீன் விடுதலை இயக்கங்களுக்குத் தம்மாலான உதவிகளைச் செய்யத் தயங்கவில்லை.குறிப்பாக, ஆயுதங்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு எடுத்துச் செல்வது அன்றைக்கு பி.எல்.ஓ.வினரின் மிகப்பெரிய பிரச்னையாக இருந்தது.குறிப்பாக அரபு தேசங்களுக்கு வெளியே அவர்கள் திட்டமிட்ட ஒவ்வொரு கவன ஈர்ப்புச் செயலுக்கும் தேவையான ஆயுதங்களைக் கடத்தியோ, உருவாக்கியோ, வாங்கியோ தரும் பணியைச் செய்ய இத்தகைய இயக்கங்கள் மிகவும் உதவி செய்தன.
 
அப்படி 1967 யுத்தத்துக்குப் பிறகு உதித்த பாலஸ்தீன் இயக்கங்களுள் ஒன்றுதான் ஹமாஸ்.'இஸ்ரேல் அரபுப் பிரச்னை என்பது அரசியல் சார்ந்ததல்ல.
 
அது இஸ்லாத்துக்கும் யூதமதத்துக்குமான பல நூற்றாண்டு காலப் பிரச்னையின் நீட்சி. நடப்பது அரசியல் யுத்தமல்ல. அது இரு மதங்களின் மோதல் மட்டுமே' என்கிற பிரகடனத்துடன் உருவான இயக்கம் இது.
 
பிரச்னையை முற்றிலும் அரசியல் சார்ந்து மட்டுமே பார்க்கக்கூடியவராக அராஃபத் இருந்த நிலையில், ஹமாஸின் இந்த திடீர் பிரவேசம் உரிய கவன ஈர்ப்பைப் பெற்றதே தவிர, ஹமாஸால் இதன் காரணம் பற்றியே பி.எல்.ஓ.வில் இணைய முடியாமலும் போனது.
 
அது அவர்களுக்கு ஒரு பிரச்னையாகவே இல்லை என்பதையும் சொல்ல வேண்டும். ஏனெனில் என்னென்ன பிரகடனங்கள் செய்துகொண்டாலும், எல்லோருக்கும் நோக்கம் ஒன்றுதான். குறிக்கோள் ஒன்றுதான். கனவும் நினைவும் ஒன்றுதான்.அது இஸ்ரேலை ஒழிப்பது. யூதர்களைப் பூண்டோடு அடித்துத் துரத்துவது.இழந்த தங்கள் நிலங்களை மீண்டும் அடைந்து, பாலஸ்தீனுக்குப் புத்துயிர் அளிப்பது.ஆகவே, பி.எல்.ஓ.வுக்குள் இல்லாமலேயே ஹமாஸ் பாலஸ்தீன் விடுதலைக்காகத் தன்னாலான பணிகளைச் செய்ய ஆரம்பித்தது.தொடர்ந்தும் தீவிரமாகவும் இஸ்ரேலிய ராணுவத்தை, காவல்துறையை, அரசு இயந்திரத்தை ஆயுதப் போராட்டம் மூலம் அச்சுறுத்தி வருவதுதான், சரியான ஆரம்பமாக இருக்கும் என்பதில் இவர்கள் யாருக்குமே கருத்து வேறுபாடு இல்லை.
 
தேவைப்பட்டால் ஆயுதப் போராட்டத்துக்காக அவர்கள் வகுத்து வைத்திருந்த வழிமுறைகளில் சில மாறுதல்கள், கூடுதல், குறைவுகள் செய்துகொள்ளலாமே தவிர, போராட்டத்தை வேறு எந்த விதமாகவும் தொடருவதற்கான வாய்ப்பில்லை என்றுதான் அத்தனை பேருமே கருதினார்கள்.பி.எல்.ஓ.வின் தலைவராகப் பொறுப்பேற்றிருந்த யாசர் அராஃபத்துக்கு அந்தத் தொடக்க காலத்திலேயே வெஸ்ட் பேங்க் பகுதியில் மிகப்பெரிய செல்வாக்கு இருந்தது.
 
அறிவிக்கப்படாததொரு மகாராஜாவாகத்தான், அவரை மக்கள் அங்கே கருதினார்கள்.அதே போல, காஸா பகுதியில் தோன்றி, வேர்விட்டு, வளர்ந்து, நிலைபெற்ற ஹமாஸுக்கு அங்கே பி.எல்.ஓ.வைக்காட்டிலும் செல்வாக்கு அதிகம். இந்த வெஸ்ட் பேங்க் என்று சொல்லப்படும் ஜோர்டன் நதியின் மேற்குக் கரை மற்றும் காஸா பகுதிகளை இணைத்துத்தான், சுதந்திர பாலஸ்தீனை உருவாக்க வேண்டும் என்று இன்றுவரை பேசிவருகிறார்கள்.
 
நமக்குப் புரியும் விதத்தில் சொல்லுவதென்றால், இந்தியா - பாகிஸ்தான் சுதந்திரத்தின் போது எப்படி மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் (இன்றைய பங்களாதேஷ்) என்று இரு வேறு துண்டுகளை இணைத்து ஒரே தேசத்தை உருவாக்கினார்களோ, அதுபோல.இந்தமாதிரி நிலப்பரப்பு ரீதியில் பெரிய இடைவெளிகளுக்கு அப்பால் ஒரே தேசத்தின் வேறொரு பகுதி இருக்கும் இடங்களிலெல்லாம், எப்போதுமே பிரச்னைதான். காஸா விஷயத்தில் என்ன பிரச்னை என்பதைப் பிறகு பார்க்கலாம்.