Showing posts with label எமது போராட்டம் எது?. Show all posts
Showing posts with label எமது போராட்டம் எது?. Show all posts

Jul 19, 2014

வீரத்தின் வார்த்தைகள் புரியாதா !? (காலத்தின் தேவை கருதிய மீள் பதிவு )


"என்னை சிறை பிடித்ததும் சித்திரவதை செய்ததும் அல்லாஹ்வின் நாட்டம் தான் என்றால் நான் சஞ்சலப்படவில்லை ; என்னை சிறை பிடித்ததும் சித்திரவதை செய்ததும் 'ஜாஹிலியத் 'என்றால் நான் இந்த அல்லாஹ்வின் எதிரிகளிடம் மண்டியிடப்போவதுமில்லை ;
கல்வித்துறையை முழுமையாக இஸ்லாமிய மயமாக்கிடும் இலட்சிய இஸ்லாமிய ஆட்சியின் கீழ் மட்டுமே நான் அமைச்சர் பதவிகளை பற்றி சிந்தித்திட முடியும் ."
இந்த வார்த்தைகளின் சொந்தக்காரன் யார் தெரியுமா ? வேறு யாருமல்ல இஹ்வான்களின் மூத்த பிதாக்களில் ஒருவரான சையத் குத்ப் (ரஹ்) அவர்கள்தான் !
ஆயிரம் துண்டுப் பிரசூரங்களும் , நூறு பேச்சு மேடைகளும் சாதிக்காததை ஒரு துப்பாக்கித் தோட்டா சாத்தித்துவிடும் எனும் கருத்துடைய லெனினிய வாதிகளின் எகிப்திய எஜென்ட்டான காட்டேரி நாசருக்கும் வலித்தது இந்த இடம் தான் .
அவரது பேச்சும் ,பேனா முனையும் அணு ஆயுதங்களை விட'கிரெம்ளின்'தொடங்கி 'வைட்ஹவுஸ்' வரை இஸ்லாத்திற்கு முன்னால் சவாலுக்கு அழைத்தது.இந்த கோதாவில் காட்டேரிநாசர் கூட்டத்தை முஸ்லிம் உம்மாவின் கோமாளித்தனமான கோடாரிக்காம்பாக இனம் காட்டினார் சையத் குத்ப் (ரஹ்) . அதனால் இவருக்கு சிறை ,சித்திரவதை ,எனத்தொடர்ந்து தூக்கிலிடும் வரை ஓயவில்லை அந்த நயவஞ்சக பிறவிகள் .
அநியாயக்கார ஆட்சியாளர் முன் சத்தியத்தை முழங்கினார் இதுதான் அவரது ஒரே குற்றம் ;ஆதாரத்துக்கு இழுத்து வந்தது அவர் சிறையில் இறுதியாக எழுதிய நூல் 'மைல் கற்கள் ' பன்னிரண்டு அத்தியாயங்கள் கொண்ட இந்நூலின் இறுதி அத்தியாயம் 'இதுதான் பாதை இதுதான் பயணம் ' எனும் தலைப்பு.
அதில் 'சூரா அல் புரூஜ் ' குறிப்பிடும் அந்த விசுவாசிகள் பற்றிய செய்தி ! நீரில் நீராடவே அச்சப்படும் எம்மைப் போன்றவர்களுக்கு
அநியாயக்கார ஆட்சியாளனுக்கு முன்னால் சத்தியத்தோடு வாழ்வு அல்லது வீர சுவனம் எனும் முடிவில் நெருப்பில் நீராட துணிந்த ஒரு சமூகத்தின் வரலாற்றை காலத்தால் எரிக்க முடியாமல் அல்லாஹ்(சுப்) 'வஹி' யாக்கிய தூய வரலாறு . பாதை தெளிவு பயணிக்க யார் தயார் ? கேள்வி கேட்டு 'ப்ரோபிட் பேசில் ' பிரிண்ட் போடும் பிறவியுமல்ல சையத் குத்ப் (ரஹ்) ;சொன்னார் செய்தார்.
இவர் 'குப்ரியத்தின்' ஏஜெண்டுகளால் மட்டும் எதிர்க்கப்படவில்லை மாற்றமாக இஸ்லாத்தை பூசு பொருள் அரசியலாக பாவிக்கும் மனிதர்களும் ,சூழ்நிலைவாத மாயம் பிடித்தவர்களும் இவரை விமர்சன மேடையில் தரம் குறைக்கப்பார்க்கிரார்கள் !
பரவாயில்லை நாளை 'குத்சை'முஸ்லீம்களின் இரத்தச் சகதியாக்கி சியோனிச சாம்ராஜிய எல்லைக்குள் மதீனாவையும் உள்ளடக்கி இஸ்ரேல் எனும் கள்ளப்பிறப்பு உரிமை கோரும்போது விட்டுக்கொடுப்போடு சமரசம் செய்யுமா ? சமர் செய்யுமா ?என்பது கேட்கவேண்டிய கேள்விதான் !ஏனெனில் சியோனிச ஆலோசனையில் கிறிஸ்தவர்கள் ஆயுதம் தர எமக்கான கபுருகளை நாமே தோண்டுவதுதான் காலத்தின் தேவையாக எம்மால் உணரப்பட்டுள்ளது

Mar 19, 2014

நிர்ப்பந்தத்துக்கும் சரணடைவு அழைப்புக்கும் மத்தியில் எனது போராட்டங்கள் !!

அவ நம்பிக்கை ஆக்கப்பட்டுள்ளது நம்பிக்கை !
சமத்துவம் சகவாழ்வு என்ற போர்வையில் நான் 
சடத்துவ வெப்பத்தில் குடித்தனம் நடத்த அழைக்கப் படுகிறேன் !
இஸ்லாத்தின் இலட்சியங்களை ஏட்டுச் சுரக்காய் ஆக்கிவிட்டு 
அலட்சிய அதிகாரத்துக்குள் அடிமைப்படுவதில் சத்தியம் உள்ளதாம் !
உளரும்' உலமாத்' தனங்களில் 'பிக்ஹுல் அகல்லியாத் ' எனும் 
தன்மான விற்பனை நிலையத்தின் இலவச விளம்பரங்கள் 
வெளியிடப் படுகின்றன !கோழையாக வாழ்வதில் கொள்கை சிறக்குமாம் !

காலங்கள் மாறிய  கேவலக் காட்சிகள் மாறுமுன்பே 
ஒரு பான்மை தந்த ஓயாத வஞ்சனைகள் ஆறும் முன்பே 
மகா பான்மை மறுபடியும் பெற்றோலை ஊற்றியது !
மாபாவிகள் மத வாத தீயை பற்ற வைத்தனர் ! அதற்காக 
மாநபி பாதையை ஒழித்து வைத்து இங்கு நாம் 
புத்தனுக்கு பிடித்ததாய் வஹியை 'ரீ வேர்சன் ' செய்வதா !?
புத்தி ஜீவிகள் அப்படித்தான் சொல்கிறார்கள் !!

என்னை எரித்து அந்த அழிவு வெப்பத்தில் 
எதிரிகள் அரசியல் குளிர் காய எத்தனிக்கிறார்கள் !
பற்றுவது நான் பற்று மிக்க இலட்சிய நெருப்பாய் சுடர்விட்டு 
சுட்டெரிப்பேன் அசத்திய அசுத்தங்களை என்ற வரலாற்று வரிகளை 
தெளிவோடு சொல்லி நிற்கிறேன் ! 
அசிங்கமான நிர்ப்பந்த நியாயங்களோடு நான் 
சிங்கத்திடம் சுஜூது செய்ய அழைக்கும் 
அபூர்வ தாயிகளிடம் சொல்ல விரும்புவது ஒன்றுதான் .
எந்நிலையிலும் நான் ஒரு முஸ்லிம் !!!

http://khandaqkalam.blogspot.ae/2014/02/blog-post_22.html#more

Mar 14, 2014

முஸ்லீம் உம்மவே காலத்தின் தேவை எது !?



"சிந்தனா ரீதியான ரித்தத் நடக்கின்றது ஆனால் அபூபக்கரை (ரலி ) காணவில்லை "
- அபுல் ஹசன் அலி நத்வி (ரஹ் )

முஸ்லிம் உம்மத்தின் சிந்தனை வீழ்ச்சியின் உச்ச விளைவையும் ,இத்தகு அதி பயங்கர ஆபத்தை எதிர்கொள்ளக் கூடிய வெற்றிகரமான ஒரு பொறிமுறை பற்றியும் ரத்தினச் சுருக்கமாக மேலே தந்த வார்த்தைகள் விளக்கி நிற்கின்றன . இன்றைய முஸ்லிம் உம்மத்தின் அவலகரமான வாழ்வும் ,அடிமைத்துவ அரசியல் மனப்பாங்கும் ஒரு இலட்சியவாத சமூகத்தை ஒரு கோழைத்தனமான வடிவில் காட்டி நிற்கின்றது .அத்தோடு இந்த முஸ்லீம் உம்மத்தின் ஒரே தெரிவான இஸ்லாம் எனும் வாழ்வியல் சாதாரண மதச் சடங்கு வடிவில் பேணப்பட அதற்குள்ளும் முரண்பாடுகள் !! இந்த பற்றி எரியும் உள்வீட்டுச் சண்டையில் எண்ணை ஊற்றி அத்தகு பிரிவினையை தமது ஆதிக்க அரசியலுக்கு சாதகமாக பயன் படுத்துகிறான் குப்ரிய எதிரி !

('POOR MAN'S WORDS HAVE LITTLE WEIGHT')ஏழை சொல் அம்பலம் ஏறாது .என்பது ஒரு பிரசித்தமான பழமொழி .வெளித் தெரியக்கூடிய ஆதிக்கத் திறனும் ,அதன்மூலம் வளத்தையும் ,பலத்தையும் பிரயோகிக்கும் சக்தி இல்லாத நிலையில் ஒரு நல்ல விடயத்தையும் உலகம் கணக்கில் எடுக்காது .என்ற அனுபவ பூர்வமான உண்மையை சுவைத்து சொல்லப்பட்டது தான் இந்தப் பழமொழி . அல்லாஹ்வின் தூதரின் (ஸல் ) சீறா இத்தகு பாடத்தை கற்றுக்கொள்ள சிறந்த உதாரணமாகும் . அதாவது அகீதா பலம் ,சகோதரத்துவ பலம் , இராணுவ வலிமை என்ற மூன்று அடிப்படைகளை முதல் இட்டே இஸ்லாத்தின் வரலாறு கட்டமைக்கப் பட்டது எனும் பேருண்மையை இங்கு பாடமாக பெற முடியும் .

இன்று இஸ்லாம் ஒரு சிறந்த வெற்றிகரமான பிரயோக உதாரணத்தை காட்டிச் சென்றது என்று கூறினால் முஸ்லிமுக்கே அதில் சந்தேகம் இருக்கின்றது . சிலர் அதை வெளிப்படையாகவே பேசியும் விடுகிறார்கள் .அதாவது காலத்தின் தேவை என்ற முன்னுரிமைப் பிரகாரம் காலம் இடம் என்பன இஸ்லாத்தின் அகீதா முதல் இபாதா வரை மாற்றத்தை வேண்டி நிற்கும் என்று கூறுகிறார்கள் . அதாவது மாறும் உலகில் நிலையானது இஸ்லாம் என்று சிந்திக்காமல் ,மாறும் உலகம் இஸ்லாத்தையும் மாற்றும் சக்தி வாய்ந்தது என்று கூறி விடுகிறார்கள் ! இத்தகு மனோ பாவத்துக்கான ஒரே காரணம் முஸ்லீம்களாகிய நாம் இஸ்லாம் அல்லாத நாகரீக கலாச்சார அதிகார அரசியலுக்கு கீழ் வாழ்ந்து கொண்டிருப்பதே ஆகும் .

இன்னும் இந்த ஆபத்தான வாழ்வுமுறையின் கீழ் யார் எதை சொன்னாலும் அந்த விடயம் பற்றி தீர்க்கமான தேடலும் பார்வையும் இல்லாமல் ஏற்றுக்கொள்வது ,அல்லது விடயத்தை கண்டும் காணாமல் விடுவது எனும் மனப்போக்கிற்கு கொண்டு வந்து விட்டுள்ளது . முஸ்லீம் உம்மத்தின் மத்தியில் இஸ்லாத்தின் பெயரிலும் சூழ்நிலையின் பெயரிலும் யாரும் எவ்வாறான கருத்தையும் முன்வைக்கலாம் அதை ஏற்றுக் கொள்வதும் தவிர்ந்து கொள்வதும் ஒவ்வொரு முஸ்லிமினதும் தனிப்பட்ட உரிமை ! இத்தகு கருத்துச் சுதந்திரத்தை யார் கற்றுத் தந்தது!? அல்லாஹ்வின் தூதரா (ஸல் ) அல்லது இன்று உலகை ஆளும் குப்ரிய சித்தாந்தமா !? அகீதாவை அசைக்கும் கருத்துகளையும் யாரும் சொல்லி விட்டு போகலாம் !? அதற்காக நீயும் மேடை போட்டு வேண்டுமானால் பேசலாம் ! இத்தகு மனோபாவம் முஸ்லீம் உம்மத்தை எங்கே இட்டுச் செல்லும் !? இதில் நடப்பது என்ன ?யாருக்கு இலாபம் !?

பலவீனமான அகீதா , சிதைந்த சகோதரத்துவம் , பாதுகாப்பற்ற பலவீனமான கள நிலவரம் , இந்த உம்மத்தின் இன்றைய உருவம் இதுதான் !!! இதற்குள் நான் சரி நீ பிழை எனும் இயக்க வாதம் ! அது எங்கே கொண்டு சென்றுள்ளது !? இப்லீசை பிடித்து 'மிம்பர்' ஏற்றியாவது தமது நிலைபாட்டை சரிகாட்டி நிற்கும் 'லாஜிக் ' தவ்வா !? அதற்குள் அடிதடி ! தீர்ப்புக் கேட்க தாகூதிய நீதிமன்றம் !? இது அல்லாஹ்வின் தூதரின் (ஸல் ) எந்த (உஸ்வதுள் ஹசனா) அழகிய முன்மாதிரியில் இருக்கின்றது !? நிச்சயமாக இதுதான் பன்றியோடு சேர்ந்த கன்றும் மலம் தின்னும் எனும் கேவலமான அரசியல் ஆகும் .

இன்னும் அகீதா ,சகோதரத்துவம் , பாதுகாப்பு எனும் இஸ்லாமிய அரசியல் வடிவத்தை சிந்திப்பது , அப்படி சிந்தித்து செயட்படுபவர்களோடு கைகோர்ப்பது , இத்தகு வாழ்வுக்காக போராடுவது , இத்தகு போராட்டத்தில் மட்டுமே சுகம் காண்பது ;இதுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) காட்டித் தந்தது . சஹாபாக்கள் செய்து காட்டியது . அல்லாஹ்வின் தூதரின் (ஸல் ) மரணத்தின் பின் இந்த முஸ்லீம் உம்மத் சிந்தித்த முதலாவது இடமே தமது ஒரே தலைமையும் ,அதற்கு கட்டுப்படுவதும் எனும் அதிகார அரசியலே.

இதுதான் சகாத் கொடுக்க மாட்டோம் என மிரண்டு பிடித்த கூட்டத்தை ,பணிய வைத்தது , அகீதாவை அசைத்த பொய் நபித்துவ வாதத்தை துடைத் தெரிந்தது . அன்றைய வல்லரசுகளையே பணியவும் ,கட்டுப்படவும் வைத்தது .என்று இந்த ஓர் தலைமை வரலாற்றை தொலைத் தோமோ அன்றில் இருந்தே அவலமான கேவலமான வாழ்வு இன்றுவரை எம்மை பின் தொடர்கிறது என்பதை முஸ்லிம்களாகிய நாம் மறந்து விடக்கூடாது . எனவே நாம் சிந்திக்க வேண்டிய ஒரே திசை எமது சகோதரத்துவமும் எமக்கான ஒரே தலைமையும் பற்றியது மட்டுமே .

http://khandaqkalam.blogspot.ae/2014/01/blog-post.html#more

Sep 2, 2013

முஸ்லீம்களாகிய நாம் எமது போராட்டத்தை எங்கிருந்து தொடங்குவது !?




ரசூல் (ஸல் ) அவர்களது உம்மத்தைப் பொறுத்த வரையில் அந்த மக்கா காலப்பகுதி முதல் இன்றுவரை இஸ்லாத்தை தெளிவோடும் விரும்பியும் ஏற்ற நிலையிலோ அல்லது இன்றுபோல் புரியாமல் ஏற்றுக்கொண்ட நிலையிலோ ஒரு தனிப்பெரும் சித்தாந்தம் இஸ்லாம் என்ற வகையில் பின்வரும் அடிப்படைப் பிரச்சினைகளைத்தான் எதிர் கொள்கிறார்கள் .

1. தமது இஸ்லாமிய சித்தாந்தத்தை சுமந்தவர்களாக வாழ்ந்திடும்
உரிமை.

2.தமது இஸ்லாமிய சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்ட வாழ்வியல் அடையாளங்களை வெளிப்படுத்தும் சுதந்திரம் .

3. தமது இஸ்லாமிய சித்தாந்த கட்டளைகளையும் , வழிமுறைகளையும் பின்பற்றும் ,பிரயோகிக்கும் உரிமை ,மற்றும் பிரச்சாரப் படுத்தும் உரிமை
.


4.தமது இஸ்லாமிய சித்தாந்த அடிப்படையான வாழ்வியலை பாது காத்தல் எனும் அடிப்படையில் அரசியல் இராஜதந்திரக் கேடயமான கிலாபா அரசை ,(இஸ்லாத்தை ஏற்காதோர் விரும்பியோ விரும்பாத நிலையிலோ) ஏற்படுத்தல் .


பெரு நிலங்கள் முதல் , சிதறிவாழும் நிலங்கள் வரை முஸ்லீம் உம்மா எதிர் நோக்கும் பிரச்சினைகள் மேலே தந்த நான்கு காரணிகளுடனும் சம்பந்தப் பட்டு வருவதை எவராலும் மறுக்க முடியாது .மேலும் இந்த நான்கு காரணிகளும் ஒன்றிலிருந்து ஒன்றை பிரிக்க முடியாத ஆத்மார்த்தப் பிணைப்பைக் கொண்டிருபதையும் நிதானமாக அவதானித்தால் உணர முடியும் .

இஸ்லாத்தின் எதிரிகளின் துல்லியமான திட்டமிடல் இந்தக் காரணிகளில் நான்காவதை அதாவது அரசியல் இராஜதந்திரக் கேடயத்தை உடைத்தல் என்பதில் இருந்துதான் தமது வெற்றிகரமான மேலாதிக்கத்தை முஸ்லீம் உம்ம்மத்தின் மீது பதித்தனர் .

இதன் விளைவு காஸா முதல் காஷ்மீர் வரை ,எகிப்து முதல் எரிட்ரியா வரை , சிரியா முதல் சிறீலங்கா வரை , அமெரிக்கா முதல் அசர்பைஜான் வரை வடிவங்களில் வேறுபட்ட அழுத்தங்கள் , கொடுமைகள் ,நிர்ப்பந்தங்கள் ,அழிப்புகள் மூலம் முஸ்லீம் உம்மத் மீது தொடர்கின்றது .

குப்ரிய மேலாதிக்க எதிரியின் பிரதான நிபந்தனையே இஸ்லாத்தில் இல்லாத ,இஸ்லாம் தடுத்த தீர்வுகளில் ,வாழ்வியலில் இருந்து முஸ்லீம் சிந்திக்க வேண்டும் என்பதே ஆகும் . இதற்கு அரசியல் ,இராணுவ ,பொருளாதார வலிமையை பயன் படுத்துவது என்பதே எதிரியின் முடிவு
.

இந்தப் போராட்டத்தை பொறுத்த வரை எதிரி முஸ்லீம்களை பொது நோக்கிலேயே பார்க்கிறான் ! இங்கு அவனுக்கு அரபி ,அஜமி என்பதோ , 'மத்ஹபு களோ' இயக்க வாதங்களோ ஒரு பொருட்டல்ல .அது அமெரிக்காவாக ,இஸ்ரேல் , ரஷ்யா , பிரான்ஸ் , சீனா ,ஈரான் ,அல்லது (தம்மை 'ஹரத்தின்' காவலர்களாக காட்டிக்கொண்டு தமது பரம்பரை சுல்தான் ,ஷேக் பட்டத்தை தக்கவைக்க 200 பில்லியன் டொலர்களை ஜெனரல் சீசி க்கு கொடுத்து எகிப்தில் முஸ்லீம்களை கொல்லும் ஹராத்தை செய்யும் )அரபு மன்னர்களாக இருக்கட்டும் , ஒரே முடிவில் தான் இருக்கிறார்கள் .

தாகூத்களின் அதிகாரம் முஸ்லீம் உம்மத்தின் உருவத்தை இஸ்லாத்தில் இருந்து பார்க்கும் போதுதான் விடயங்கள் கைமீறிப் போகின்றன . இப்போது முஸ்லீம்கள் தம்மைப்பற்றி சிந்திக்க வேண்டும் .அந்த சிந்தனை சரியாக இருந்தால் . மேலே சொன்ன நான்காவது விடயத்தில் இருந்து அதாவது ....

4.தமது இஸ்லாமிய சித்தாந்த அடிப்படையான வாழ்வியலை பாது காத்தல் எனும் அடிப்படையில் அரசியல் இராஜதந்திரக் கேடயமான கிலாபா அரசை ,(இஸ்லாத்தை ஏற்காதோர் விரும்பியோ விரும்பாத நிலையிலோ) ஏற்படுத்தல் . என்பதில் இருந்து தமது போராட்டத்தை தொடங்குவார்கள் . அதுதான் பாதுகாப்பானதும் ஸுன்னா காட்டிய வழிமுறையுமாகும் .

Aug 30, 2013

எகிப்திய மக்கள் சிரிய மக்கள் புரட்சியில் இருந்து பாடம் பெறவேண்டும்!


1. சிரிய மக்கள் மேற்கினது வழிமுறையிலான எந்த ஆட்சிமுறையும் வேண்டாம் என்று கோருகிறார்கள்! அதே போன்று எகிப்தியர்கள் இஸ்லாத்தை அமுல்படுத்த முற்பட்டு அல்ஜீரியாவிலும் பலஸ்தீனிலும் இருமுறை தோல்விகண்ட மேற்கினது கருவியாகிய ஜனநாயகம் எனும் கருவியை தூக்கி வீசவேண்டும். அதற்கான கோஷத்தை கைவிடவேண்டும்.

2.அசாத்தும் அவனது குப்ரிய ஆட்சியும் இல்லாமல் போகவேண்டும் என்று சிரிய மக்கள் கோருகிறார்கள்! அதேபோன்று “சிசி” யும் அவனது அடிவருடிகளும் இல்லாமல் போகவேண்டும் என்பதற்கு எகிப்தியர்கள் போராடவேண்டும்.

3.அல்லாஹ் அருளியபடி ஷரீஆவின் அடிப்படையில் தங்களது வாழ்வியல் விவகாரங்கள் ஒழுங்கு படுத்தப்பட தேவையான கிலாபா ராஷிதா வேண்டும் என்றும் சிரிய மக்கள் கோருகிறார்கள்! அதுவே எகிப்திய மக்களது மூலமந்திரமாக வீரவசனமாக மாறவேண்டும்.

ஷாமில் இத்தகைய கோஷங்களுடன் தங்கள் உயிர்களை துச்சமாக கருதி சிரிய மக்கள் போராடுகிறார்கள்.

ஆனால் எகிப்தில் இன்று முன்னெடுக்கப்படும் சாத்வீக வழிமுறையில் இவற்றை சாதிப்பது எந்தளவுக்கு சாத்தியம்? இத்தகைய சாத்வீகவழிப்போராட்டம் எமது வீர வரலாற்றில் எத்தகைய பங்கை செய்துள்ளது என்பதனை சிந்தித்து ஆக்கபூர்வமாக சிந்தித்து ஹக்கை நிலைநாட்ட எகிப்திய போராடவேண்டும்.

ஜனநாயக வழிமுறையில் இஸ்லாத்தை அமுல்படுத்தும் போக்கையும் கோரிக்கையையும் கைவிடவேண்டும். அதுவே இஸ்லாத்திற்கு பலம் சேர்கும். முஸ்லிம் உம்மத்தை பாதுகாக்கும்.

Jan 29, 2013

எமது போராட்டம் எது? ( நாம் சந்தித்த வரலாறும் அனுபவிக்கும் வரலாறும் )

எமது போராட்டம் எது? ( நாம் சந்தித்த வரலாறும் அனுபவிக்கும் வரலாறும் )

ஹிஜ்ரி 656 ஆம் ஆண்டு சபர் மாதம் பிறை 4 அன்று மங்கோலியர்கள் (தாத்தாரியர் ) பக்தாத்தில் இருந்த இஸ்லாமிய கிலாபத்துக்கு எதிராக படை எடுத்தனர் .ஒரு இலட்சத்துக்கும் அதிகமான 
முஸ்லீம்களை படுகொலை செய்தனர் பக்தாதை பிணக்காடாக மாற்றினர் . முஸ்லீம்களின் அறிவுப் பொக்கிசமான நூல் நிலையத்தை சின்னா பின்னமாக்கினர் . அந்த 'பைத்துல் ஹிக்மா ' விலுள்ள நூல்களை 'யூப்பிரடீஸ் ' நதியில் வீசியபோது அந்த நதியே சில மாதங்கள் கருப்பாக ஓடியதாக வரலாறு கண்ணீரோடு சொல்கிறது . இந்த வெறியாட்டத்தின் பின் கூட இஸ்லாத்தை துடைத்தெறிய முடியவில்லை .

முஜ்தஹித்களின் பிரச்சார தொடர் முயற்சிகளும் , முஜாஹித்களின் தொடர் சமரும் மீண்டும் இஸ்லாத்தின் மறுமலர்ச்சிக்காக தொடர்ந்தது .தடுக்க முடியாது எனக்கருதிய தாத்தாரிய வாட்பலம் 'ஜைன் ஜலூத்தில் ' ஒரு ரமலானில் முஸ்லீம்களால் தவிடு பொடியாக்கப் பட்டது .

அதே நேரம் சிந்தனா தரத்தில் தாத்தாரியர் இஸ்லாத்தினால் கவரவும் பட்டார்கள் .காலம் மலர்ந்தது மீண்டும் கிலாபாவின் கீழ் இஸ்லாமிய உம்மத் அணிதிரண்டது .

ஹிஜ்ரி 1342 ரஜப் 28 (1924 மார்ச் 3) அதேபோல முதலாளித்துவமும் கிலாபா அரசு மீது தமது காலனித்துவ ஆதிக்க ஆட்சியை நிறுவியது . ஆனால் இம்முறை வன்முறை இராணுவத்தை மறைத்து சிந்தனை இராணுவத்தை முன் அனுப்பியது . இப்போது தேசிய சிறைகளில் இந்த முஸ்லீம் உம்மத்தை சிறைவைத்து , ஏறத்தாள ஒரு நூற்றாண்டை நெருங்கிய நிலையில் தம் இஷ்டம் போல் எதிரிகள் முஸ்லீம் உம்மத்தின் மீது அத்துமீறினார்கள் ,(கம்பியூநிசமும் தமது சிந்தனை, இராணுவத்தோடு இதில் பங்களிப்பு செய்தது )

இப்போதும் முஜ்தஹித்களின் தொடர் முயற்சிகளும் , முஜாஹித்களின் தொடர் சமரும் மீண்டும் இஸ்லாத்தின் மறுமலர்ச்சிக்காக தொடர்ந்தது . இந்த எதிர் தாக்குதலை சந்திக்க வன்முறை இராணுவத்தை முதலாளித்துவ தாகூத்கள் நேரடியாகவும் , மறைமுகமாகவும் அனுப்பினார்கள் . அத்தோடு ஜனநாயகம் எனும் சிந்தனைக் கிருமி யுத்தத்தையும் மேட்கொண்டார்கள் .(அந்தக்கிருமியின் சிறப்பான பணி என்னவென்றால் ஒவ்வொரு முஸ்லிமின் முன்னும் தன்னை இஸ்லாமாக காட்டும் .
இந்த ஆபத்தான கிருமி யுத்தம் இந்த உம்மத்தின் அதிகமானோரை 'சமரசம் 'எனும் தொற்று நோயோடு
அலைய விட்டது .) இருந்தும் மறுமலர்ச்சிக்கான சரியான போராட்டமும் தொடர்கின்றது .

( இன்னும் தொடரும் ....)

பெரும்பான்மையின் 'அம்மாதான் ' ரியல் அம்மா !? சிறுபான்மையின் 'அம்மாவோ ' வெறும் சும்மா !? (திமோகிரசி பேசில் கருத்துச் சுதந்திரம் ஒரு குறும் பார்வை)


கருத்துச் சுதந்திரம் அதன் வீச்செல்லை என்ன ? இந்த வினாவிற்கு விடைதேடினால் சிலநேரம் பதிவுகளுக்கு பக்கங்கள் போதாமல் போகலாம் ! எப்போதும் தாமும் குழம்பி அடுத்தவர்களையும் குழப்புவதே இன்று ஆதிக்கத்தில் இருக்கும் மேற்கின் சிந்தனை வாதத்தின் பிழைப்பாக போய் விட்டது. மனிதன் சட்டம் இயற்றினால் நிகழும் தவிர்க்க முடியாத நோய் இதுதான் .
இவர்களது வரைவிலக்கணங்கள் யாவும் பொதுவாகவே 'கொள்கை' எனும் 'சிலபஸ்ஸில் '
ஏற்றி 'விதி' எனும் முடிவிற்கு வரும் வரை சமூகத்தின் முன் குறைப் பிரசவங்களாக அவைகளை ஏறத்தாள பரீட்சாத்தமாக வெளியிட்டு தம்மை காலத்தின் பிடியில் ('அவசரக் குடுக்கை ' நிலையில்) தாம் வகுத்தது தமக்கே வினையாக வரும்போது சீர்திருத்தம் எனும் பெயரில் அதன் அடிப்படையே மாறும் நிலையானாலும் புதிய கொள்கை வகுப்பதே இவர்களது அன்றாடப் பணியாகும் .
அப்படிப் பார்த்தால் இவர்களது கொள்கை வடிவம் அத்திவாரத்தில் இருந்து கூரை முகடுவரை " இருக்கும் ஆனால் இருக்காது " , "நடக்கும் ஆனால் நடக்காது " , அந்தவகையில் சமூகத்தில் அதைப் பின்பற்றுபவனின் நிலை !? " சுகம் வரும் ஆனால் ஆள் தப்பாது "! என்பதேயாகும் .
(லிபர்ட்டி ) விடுதலை என்ற வார்த்தையின் கீழே வரையறுக்கப் பட்ட முதலாளித்துவத்தின் (கருத்துச் சுதந்திரம் உட்பட) எல்லா சுதந்திரமும் ஜனநாயகம் எனும் மாயா ஜாலத்தின் கீழ் பின்வருமாறு பொதுவாக குறிப்பிடப்படும் . " ஒருவன் தனது கைத்தடியை விரும்பியவாறு சுழட்டிச் செல்லலாம் ஆனால் அடுத்தவனின் மூக்கு நுனிவரைதான் " என்று அந்த எல்லையை கூறி நிற்கும் .
ஆனால் (ரைட் இஸ் மைட் )' பலமுள்ளவன் சரியானவன்' எனும் யாப்பில் இல்லாத இரகசிய விதி ,முன்னால் நிற்கும் மூக்கை அடிக்கடி இடம் மாற்றச் சொல்லும் !? தேவைப்பட்டால் தனது கைத்தடியை முன்னால் இருக்கும் மூக்கின் உள் விட்டு ஆட்டி ஜனநாயக விரோதி என்ற 'சுவரில்லா சித்திரத்தை வரைந்து ' புறந்தள்ளும் !? தனக்கு மட்டும் அம்மா அடுத்தவனின் அம்மா சும்மா !? என்பது தான் இன்றைய ஜனநாயக 'பொலிடிகல் டிப்லோமடிக்' !?
இந்த விதியை (நம்பாமல்) நம்பி இஸ்லாத்திற்கு எதிரான குப்பார்களின் சதிகளுக்கெதிராக அந்த( எல்லை தெரியாத ) பக்கச்சார்பு கருத்துச் சுதந்திரத்தை நம்பி போராடுவதில் எந்தப் பயனும் இருக்காது . இன்று எமக்கு சாதகம் போல் இருக்கும் ஆனால் நாளை எமது எதிரியின் சாதகத்தால் எமது உணர்வுகள் ஏறி மிதிக்கப் பட சட்ட மூலம் கொண்டு வரப்படலாம் . அதுவும் ஜனநாயக இயங்கு விதியில் எம்மை சமரசம் செய்யக் கேட்கும் .
நேற்று தலைப்பாகையை கேட்டது நாளை தலையை கூட கேட்கலாம் ! முண்டமாக வாழ்ந்தாலும் நானும் ஜனநாயக வாதி எனும் வார்த்தைகள் எமது சமூகத்தில் இருந்து ஒலிப்பது கேட்கின்றது . உங்களுக்கும் கேட்கிறதா !!??