Showing posts with label ஜப்பான். Show all posts
Showing posts with label ஜப்பான். Show all posts

Jun 16, 2016

ஜப்பான் நோக்கிய அமெரிக்க வருகை....!!

 
பராக் ஒபாமா, கடந்த மாத இறுதியில், ஜப்பானின் ஹிரோஷிமா நகருக்கு விஜயம் செய்யும் பதவியிலிருக்கும் முதல் அமெரிக்க ஜனாதிபதியாக ஆக இருக்கிறார். அமெரிக்க இராணுவத்தால் ஆகஸ்ட் 6, 1945 இல் ஹிரோஷிமா மீதும், அதற்கு மூன்று நாட்கள் கழித்து மற்றொரு ஜப்பானிய நகரமான நாகசாகி மீதும் அணுகுண்டு வீசி அழித்தமை, 20ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய போர் குற்றங்களின் ஒன்றாக இருக்கின்றது. 

சுமார் 200,000 பேர் கொல்லப்படுவதற்குக் காரணமான அந்த இரண்டு பாதுகாப்பற்ற ஜப்பானிய நகரங்களைச் சாம்பலாக்கியமை, இராணுவரீதியில் தேவையற்ற ஓர் நடவடிக்கை என்பதை, 71 ஆண்டுகளுக்குப் பின்னர், அமெரிக்கா இறுதியில் ஏற்றுக்கொள்ள தயாராகி விட்டதோ என்று ஒருவர் நினைக்கலாம். அதுபோன்ற எதுவும் நடக்காது. "இரண்டாம் உலக போரின் முடிவில் அணுகுண்டு பயன்படுத்திய முடிவை" ஒபாமா "மீண்டும் கருத்துக்கூற மாட்டார்,” என்று வெள்ளை மாளிகை அறிவித்தது. எனவே எந்தவிதமான மன்னிப்புக்கோரலும் இருக்காது.

ஜப்பானின் படையெடுப்பையும் மற்றும் அடுத்து நிகழவிருந்த அமெரிக்கர்களின் உயிரிழப்பையும் தடுப்பதற்கு, ஹிரோஷிமா மற்றும் நாகசாகியை அழிப்பதே ஒரேயொரு மாற்றீடாக இருந்தது என்று அறிவித்து, ஜப்பான் மீது அணுஆயுத தாக்குதல்கள் நடத்தியமை சரியானதே என்று அமெரிக்க அரசாங்கம் தசாப்தங்களாக வலியுறுத்தி வந்துள்ளது.

அந்த குண்டுவீச்சுக்களின் சட்டபூர்வத்தன்மை மீது கேள்வி எழுப்புவதற்கான ஒவ்வொரு முயற்சியும், வெறித்தனமான மற்றும் நேர்மையற்ற பிரச்சாரத்தைச் சந்தித்துள்ளன, அதாவது அத்தகைய பிரச்சாரம் 1995 இல் அந்த குண்டுவீச்சு நடவடிக்கையின் 50 வது நினைவாண்டை நினைவுகூற ஸ்மித்சோனியன் அமைப்பினது (Smithsonian Institution) கண்காட்சியை இரத்து செய்யக் கூட நிர்பந்தித்தது. இத்தகைய குற்ற-ஒப்புதல்கள் சம்பந்தமாக நோட்ர் டேம் பல்கலைக்கழகத்தின் மதகுருவான Miscamble இன் ஒரு கருத்துரை வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் பிரசுரிக்கப்பட்டது. அதில் Miscamble பின்வருமாறு அறிவிக்கிறார், “அணுகுண்டு வீச்சுக்கு மன்னிப்புக் கோர அங்கே எந்த காரணமும் இல்லை,” ஏனென்றால் "[ஜனாதிபதி ஹேரி எஸ்.] ட்ரூமன் அமெரிக்கர்களின் கோரமான உயிரிழப்புகளைக் குறைக்கவும் மற்றும் பசிபிக் போரை சாத்தியமானளவிற்கு விரைவாக வெற்றிகொள்ள உதவுவதற்காகவும் தான், இராணுவரீதியிலும் மற்றும் தொழில்துறை ரீதியிலும் இரண்டு விதத்தில் பிரதான இலக்குகளாக இருந்த ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது குண்டுவீச அனுமதியளித்தார் அது ஒருசில ஜப்பானியர்களின் உயிரிழப்புகளை ஏற்படுத்தியது,” என்றார். 

இதே உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில், நியூ யோர்க் டைம்ஸ் இவ்வாரம், "ஜப்பானின் பிரதான தீவான ஹோன்சூ (Honshu) மீதான படையெடுப்பில் இழந்திருக்கக்கூடிய பத்தாயிரக் கணக்கான அமெரிக்கர்களது உயிர்களைக் காப்பாற்றுவதற்காகவே குண்டுவீசும் அம்முடிவு" எடுக்கப்பட்டதாக வலியுறுத்துவோர்களை மேற்கோளிட்டது. இத்தகைய கூற்றுகளில் சிறிதும் நம்பகத்தன்மை கிடையாது.

இவை, அத்தாக்குதல்களுக்கு முன்னதாக, வாஷிங்டன் மற்றும் அமெரிக்க இராணுவ உயர் கட்டளையகத்தில் நடந்த விவாதங்களது உண்மையான உள்ளடக்கத்துடன் சம்பந்தமின்றி உள்ளன. 1945 இன் ஆரம்பத்தில், அமெரிக்கா மொத்த ஜப்பான் மீதும் வான்வழி மேலாதிக்கம் கொண்டிருந்ததுடன், ஜப்பானிய பெருநிலத்தின் வான் எல்லைக்குள் பல்வேறு தீவுகளைக் கைப்பற்றி இருந்தது. ஏறத்தாழ அதே நேரத்தில், குறிப்பிட்ட இராணுவ இலக்குகளைத் துல்லியமாக குண்டுவீசி தாக்குவதிலிருந்து, அமெரிக்கா, இறுதியில் சுமார் 100,000 பேர் கொல்லப்பட்ட டோக்கியோ மீதான மார்ச் 9-10 குண்டுவீச்சும் உள்ளடங்கலாக 67 ஜப்பானிய நகரங்களை தரைமட்டமாக்கிய கொடூரமான பரந்த குண்டுவீச்சு நடவடிக்கைகளுக்கு மாறியது. அமெரிக்க மூலோபாய விமானப்படை கட்டளையகத்தின் தலைவர் தளபதி கர்டிஸ் லெமேவிடம் (Curtis Lemay) 1945 இல் இன்னும் எத்தனை காலம் போர் தொடருமென வினவிய போது, அவர், “நாங்கள் ஒன்றுகூடி அது குறித்து சிறிது சிந்தித்தோம், செப்டம்பர் 1 வாக்கில் பெரும்பாலான இலக்குகளைச் தாக்கியழித்திருப்போம் என்பதற்கான அறிகிறிகள் காணப்பட்டன, அந்த இலக்குகளைக் காலியாக்கியப் பின்னர், போர் தொடர்ந்து கொண்டிருப்பதை நாம் பார்க்க முடியாது,” என்றார்.

ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீதான குண்டுவீச்சுக்கான காரணங்கள் மீது, அமெரிக்க உயர் கட்டளையகத்திற்கு உள்ளேயே சவால் விடுக்கப்பட்டன. ஒரு ஜோடி ஜப்பானிய நகரங்களைச் சாம்பலாக்கியமை மிகக் குறைந்த இராணுவ முக்கியத்துவமே கொண்டிருந்தது என்று அது வலியுறுத்தியது. படைத்துறைசாரா மக்கள் மீது குண்டு வீசுவதென்ற ஜனாதிபதி ட்ரூமெனின் உள்நோக்கத்தை தெரிய வந்ததன் மீது தளபதி ட்வைட் டி. ஈசன்ஹோவர் கூறுகையில், அவர் “மன அழுத்தத்தை” உணர்ந்ததாக தெரிவித்தார். “ஜப்பான் ஏற்கனவே தோற்றுப்போயிருந்தது என்ற எனது நம்பிக்கையின் அடிப்படையில் அந்த குண்டுகளை வீசுவது முற்றிலும் அவசியமற்றது என்று கருதினேன், இரண்டாவதாக ஏனென்றால் அமெரிக்கர்களைக் காப்பாற்றும் ஒரு நடவடிக்கையாக, இனியும் கட்டாயமாக அவசியம் பயன்படுத்த தேவையற்ற ஒரு ஆயுதத்தைப் பயன்படுத்தி உலக கருத்தை அதிர்ச்சிக்குள்ளாக்குவதை எமது நாடு தவிர்க்க வேண்டுமென நான் விரும்பினேன், இவை எனது ஆழ்ந்த அதிருப்திகளாக இருந்தன,” என்று தெரிவித்தார். 

  
ஏனைய உயர்மட்ட இராணுவ அதிகாரிகளும் அடுத்தடுத்து அதேபோன்ற அறிக்கைகளை வெளியிட்டனர். அமெரிக்க பசிபிக் கடற்படையின் தலைமை தளபதி செஸ்டெர் டபிள்யூ நிமிட்ஸ் கூறுகையில், அப்போருக்குப் பின்னர் "முழுமையாக ஓர் இராணுவ கண்ணோட்டத்தில் பார்த்தால், ஜப்பானைத் தோற்கடிப்பதில் அணுகுண்டு எந்த தீர்க்கமான பங்கும் வகிக்கவில்லை,” என்றார். ஜனாதிபதி ட்ரூமெனின் முப்படைத் தளபதி அட்மிரல் வில்லியன் டி லீஹி, “ஜப்பானுக்கு எதிரான எங்களின் போரில் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி எந்தவிதத்திலும் முக்கியமானரீதியில் உதவியாக இருக்கவில்லை,” என்பதை ஒப்புக் கொண்டார். ஏப்ரல் 12, 1945 இல் ஜனாதிபதி பிரான்ங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் இன் மரணம், ஹேரி எஸ். ட்ரூமெனை ஜனாதிபதியாக கொண்டு வந்தது. இந்த மட்டுப்பட்ட இன்னும் சொல்லப்போனால் அறிவில்லாத அம்மனிதர், மிசோரி ஜனநாயக கட்சி அரசியல் எந்திரத்தை நடத்தி வந்தவரும், குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட மற்றும் சூதாட்டத்திற்கு அடிமையானவருடன் அவர் கொண்டிருந்த தொடர்புகள் காரணமாக, "பெண்டெர்காஸ்டின் செனட்டராக" (The Senator from Pendergast) கூறப்பட்டார். 

  அணுஆயுதங்களை பயன்படுத்துவதற்கான தார்மீக உள்நோக்கங்களை ட்ரூமென் முற்றிலுமாக புறக்கணித்திருந்தார். அவரது ஆலோசகர்களில் ஒருவர் பின்னர் நினைவுகூர்கையில், ஹிரோஷிமா மீது குண்டுவீசியதைக் குறித்து ட்ரூமெனுக்கு தெரிய வந்த போது, அவர் "அதனால் வியக்கத்தக்களவில் உற்சாகமடைந்தார், நான் அவரை சந்தித்த போது மீண்டும் மீண்டும் அதை குறித்து என்னுடன் உரையாடினார்,” என்றார். அந்த குண்டை பயன்படுத்த ட்ரூமென் முடிவெடுப்பதற்கு முன்னரே, ஜப்பானிய அரசாங்கம் பல மாதங்களாக அவர்கள் சரணடைய விரும்புவதாக பலமாக சமிக்ஞை காட்டி, அவர்களது பேரரசை மட்டும் வைத்திருக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இதற்குள் அந்த பேரரசை அதனிடமே ஒப்படைக்கும் எண்ணத்திற்கு வெள்ளை மாளிகை வந்திருந்தது, ஆனால் இந்த உண்மையை ஜப்பானுக்கு தெரிவிப்பதா வேண்டாமா என்பதில் பிளவுபட்டிருந்தது.

இறுதியில் ஜனாதிபதி ட்ரூமென் முதலில் குண்டுவீசவும், பின்னர் ஜப்பானிய அரசாங்கத்திற்கு நிபந்தனைகளை தெரிவிக்கவும் முடிவெடுத்தார். அப்படியானால், உலகின் கண்ணுக்கு முன்னால், எந்தவித இராணுவ நியாயப்படுத்தலும் இல்லாமல், என்றென்றைக்கும் அதை இழிவாக முத்திரை குத்தும் ஒரு நடவடிக்கையை அமெரிக்க அரசாங்கம் ஏன் நடத்தியது? போர் முடிவுக்கு வந்திருந்த நிலையில், அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியத்திற்கு இடையிலான மோதல் தீவிரமடைந்திருந்தது. யால்டா உடன்படிக்கையின் நிபந்தனைகளுக்கு இணங்க, சோவியத் ஒன்றியம் அந்த உடன்படிக்கையில் அதற்கு வழங்கப்பட்ட பிராந்தியங்கள் மீது உரிமைகோரி, ஜப்பான் மீது படையெடுக்க இருந்தது மற்றும் போரின் போது அது ஏற்றிருந்த இழப்புகளுடன் ஒப்பிடுகையில் போருக்குப் பிந்தைய ஐரோப்பாவில் ஓரளவிற்கு பாரிய பாத்திரம் வகிக்க விரும்பியது. சமீபத்தில் இரண்டு வரலாற்றாளர்கள் முன்வைத்ததைப் போல, அணுகுண்டை பயன்படுத்தியமை, “அமெரிக்காவின் முதல் பனிப்போர் நடவடிக்கையாகும்.” 

ஜேர்மனியை சோவியத் ஜெயித்திருந்தாலும், அமெரிக்கர்களே உலகின் எஜமானர்கள் என்பதற்கு ஒரு தெளிவான சமிக்ஞையை அது சோவியத்திற்குக் கொடுக்க விரும்பியது. ஒட்டுமொத்த மனிதயினத்திற்கும் அச்சுறுத்தும் மற்றும் கட்டளையிடும் வகையில், ஹிரோஷிமா மற்றும் நாகசாகி அழிக்கப்பட்டமை, உலகின் சவாலுக்கிடமற்ற ஏகாதிபத்திய மேலாதிக்க சக்தியாக அமெரிக்கா நுழைந்ததை அறிவித்தது. ஜனநாயகம் என்ற மெல்லிய மறைப்பின் பின்னால், அமெரிக்கா அதன் சொந்த நலன்களைப் பேணுவதற்கும் விரிவாக்குவதற்கும், குற்றத்தின் அளவைக் குறித்தோ அல்லது எத்தனை மக்கள் கொல்லப்படுவார்கள் என்பதைக் குறித்தோ கவலைப்படாமல், என்ன அவசியமானாலும் அதை செய்யும் என்பதற்கு சமிக்ஞை காட்டியது.

ஹிரோஷிமா குண்டுவீச்சுக்குப் பிந்தைய ஏழு தசாப்தங்களுக்கும் அதிகமான காலத்தில், அமெரிக்க ஆளும் வர்க்கம் அதன் நலன்களைப் பாதுகாக்க இராணுவ பலத்தைப் பிரயோகிப்பதற்கான அதன் தீர்மானத்தை அதிகரித்து மட்டுமே உள்ளது. ஒபாமா 7 கூட்டங்களில் பங்கெடுக்கும் பாகமாக ஹிரோஷிமாவிற்கு செல்வார், அங்கே அவர் சீனாவிற்கு எதிராக ஜப்பான் உடனான அமெரிக்காவின் கூட்டணியைப் பலப்படுத்த முயற்சிப்பார் மற்றும் பிரதம மந்திரி ஷின்ஜோ அபே இன் அந்நாட்டை மீள்-இராணுவமயமாக்குதலுக்கு ஒத்துழைப்பளிப்பார். 

  ஏனைய ஒவ்வொரு நாடுகளிடமிருந்தும் வெள்ளை மாளிகை "அணுஆயுத பரவல் தடுப்பு உடன்படிக்கையைக்" கோரினாலும், அது அமெரிக்க அணு ஆயுத கிடங்குகளை நவீனமயப்படுத்த ட்ரில்லியன் கணக்கான டாலர்களைச் செலவிட்டு வருகிறது, அத்துடன் அணுஆயுதமேந்திய அரசுகளுக்கு இடையே போர் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் சீனா மற்றும் ரஷ்யாவிற்கு எதிராக தொடர்ச்சியான ஆத்திரமூட்டல்களில் ஈடுபட்டு வருகிறது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கடந்த கால குற்றங்களுக்கு மன்னிப்புக் கோருவதற்காக ஒபாமா ஹிரோஷிமாவிற்கு செல்லவில்லை, மாறாக புதிய குற்றங்களுக்குத் தயாரிப்பு செய்வதற்காக செல்கிறார். ஹிரோஷிமாவிற்குப் பின்னர் கொரியா மற்றும் வியட்நாமில்—மற்றும் கடந்த கால் நூற்றாண்டுக்கும் அதிகமான காலத்தில் மத்தியக் கிழக்கு எங்கிலும்—மில்லியன் கணக்கானவர்கள் கொல்லப்படுவதற்கு பொறுப்பான அமெரிக்கா, இன்றும் அதையே தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகின்ற போது, அது பாரிய படுகொலைக்கு மன்னிப்பு கோரும் என்று ஒருவர் எப்படி எதிர்பார்க்க முடியும்?

Sources From Khaibar Thalam


Oct 28, 2015

தெற்கு சீன கடற்பகுதியில் அமெரிக்க போர்க் கப்பல் நிறுத்தம்



சர்ச்சைக்குரிய தீவு அருகே அமெரிக்க கடற்படை போர் கப்பல். | படம்: ராய்ட்டர்ஸ்.


தெற்கு சீன கடற்பகுதியில் உள்ள சீனாவின் செயற்கை தீவு அருகே அமெரிக்காவின் போர்க் கப்பல் நிறுத்தப்பட்டிருப்பதை பெய்ஜிங் மாகாணம் உறுதி செய்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி கூறும்போது, "செவ்வாய்க்கிழமை காலை யு.எஸ்.எஸ் லாசன் போர் கப்பல் ஸ்பார்ட்லி தீவு அருகே 12 நாட்டிகல் மைல் தூரத்தில் ரோந்து சென்றது. அந்தப் பகுதி சீனாவுக்கு உட்பட்ட பகுதி அல்ல. அது சீனாவால் அறிவிக்கப்பட்ட செயற்கை தீவு தான். அதிபர் ஒபாமாவின் ஒப்புதலின் பேரில் இந்த ரோந்துப் பணி நடைபெற்றது" என்றார்.

இதனிடையே அமெரிக்காவின் பதிலை சீன தரப்பு கண்டித்துள்ளது. சீன வெளியுறவுத் துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "அமெரிக்கா எதையும் செய்யும் முன் 2 முறை யோசிப்பது நல்லது." என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தென் சீனக் கடல் பகுதியில் புதிதாகப் பெரும் தீவு ஒன்றை சீனா உருவாக்கி வருகிறது. விமான தளம் அமைக்கும் விதத்தில் இந்த தீவு உருவாக்கப்படுகிறதாக அமெரிக்கா ஏற்கெனவே தகவல் வெளியிட்டது.

தென் சீன கடலில் இருக்கும் குறிப்பிட்ட தீவால் ஜப்பான் - சீனா இடையே மோதல் நிலவிவருவதால் சர்ச்சைக்குரிய தீவாக இது அறியப்படுவது குறிப்பிடத்தக்கது.



The Hindu Tamil

Sep 12, 2015

முதல் உலகப்போர் பற்றிய ஒரு சுருக்கமான வரலாறு

 
 
 முதல் உலகப்போர் 1914ம் ஆண்டு முதல் 1918ம் ஆண்டு வரை நடைபெற்றது. விமானங்களும், போர்க்கப்பல்களும், நீர்மூழ்கிக்கப்பல்களும் முதன் முதலாக இந்தப் போரில்தான் பயன்படுத்தப்பட்டன. ஆஸ்திரியா நாட்டுப் பட்டத்து இளவரசரான பிரான்சிஸ் பெர்டினாத்தும், அவருடைய மனைவியும் காரில் சென்ற போது (1914 ஜுன் 28ந்தேதி) சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சுட்டவன், செர்பியா நாட்டைச்சேர்ந்தவன். இதன் காரணமாக, செர்பியா மீது ஆஸ்திரியா படையெடுத்தது. நாடு பிடிக்கும் ஆசையில் இருந்த ஜெர்மனி, ஆஸ்திரியாவுக்கு ஆதரவாகப் போரில் குதித்தது. ஹங்கேரி, உதுமானிய கிலாபத் , பல்கேரியா ஆகிய நாடுகளும் ஜெர்மனியுடன் சேர்ந்து கொண்டன. செர்பியாவுக்கு ஆதரவாக பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா,அமெரிக்கா,இத்தாலி, ஜப்பான், சீனா, ஆகியவை போரில் ஈடுபட்டன.

 
 

1914 ஆகஸ்ட் 4ந்தேதி முதலாம் உலகப்போர் மூண்டது. ஆரம்பத்தில் அமெரிக்கா நடுநிலை வகித்தது. ஆயினும் பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு உதவி செய்தது. அதனால் ஆத்திரம் அடைந்த ஜெர்மனி, அமெரிக்கக் கப்பல்கள் மீது குண்டு வீசியது. கப்பல்கள் கடலில் மூழ்கின. இதன் காரணமாக, ஜெர்மனிக்கு எதிராக அமெரிக்கா போரில் குதித்தது.
இரு தரப்பினருக்கும் இடையே தரையிலும், கடலிலும் பயங்கரப் போர்கள் நடந்தன. நீர் மூழ்கிக் கப்பல்களையும், போர் விமானங்களையும் ஜெர்மனி அதிக அளவில் பயன்படுத்தி, நேச நாடுகளுக்கு கடும் சேதத்தை உண்டாக்கியது. நேச நாடுகள் டாங்கிப் படைகளை அதிகமாகப் பயன்படுத்தின.

போர் நடந்து கொண்டிருந்த போதே, ரஷியாவில், புரட்சி மூண்டு, லெனின் தலைமையில் உலகின் முதலாவது கம்யூனிச அரசு உதயமாகியது. 1917ம் ஆண்டின் பிற்பகுதியில் ஜெர்மனியுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டு போரில் இருந்து விலகிக் கொண்டது. இந்தப் போரில், ஜெர்மனி படைகள் விஷ வாயுவை பயன்படுத்தின.

போர்க்களத்திற்கு வரும் ஜெர்மனி வீரர்கள் முகமூடி அணிந்திருப்பார்கள். அவர்களுக்குப் பின்னால் குதிரை வண்டிகளில் விஷப் புகை நிரப்பப்பட்ட சிலிண்டர்கள் வரும்.

எதிரிப்படைகளை நெருங்கியதும், சிலிண்டர்களின் வாய் உடைக்கப்படும். அவற்றிலிருந்து விஷ வாயு வெளியேறும். அதைச் சுவாசிக்கும் எதிரிப்படையினர் மயங்கி விழுந்து மரணம் அடைவார்கள்.
போரில் விஷப்புகையைப் பயன்படுத்தக்கூடாது என்று எல்லா நாடுகளும் ஒப்புக் கொண்டிருந்தன. ஆனால் அதை மீறி ஜெர்மனி விஷப் புகையை பயன்படுத்தியது. ஆரம்பத்தில் ஜெர்மனிக்கு வெற்றிகள் கிடைத்தன. முடிவில், பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளின் படைகளும் ஜெர்மனியை நோக்கி விரைந்தன.

இதன் காரணமாக ஜெர்மனி மக்கள் பீதி அடைந்து மன்னர் கெய்சருக்கு எதிராக கலகத்தில் ஈடுபட்டனர். மக்களை அடக்க, ராணுவத்தை கெய்சர் ஏவினார். உலகப்போரில் ஈடுபட்டிருந்த ஜெர்மனி படைகள், சொந்த மக்களைச் சுட்டுக் கொல்லும் நிலை ஏற்பட்டது. நேச நாடுகளின் படைகள், ஜெர்மனி தலைநகரான பெர்லின் நகருக்குள் 1918 நவம்பர் 11-ந்தேதி நுழைந்தன.

இந்தப் பெரும் படைகளின் தாக்குதலை, ஜெர்மனி படைகளால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. சிறிது நேரத்தில் ஜெர்மனி சரண் அடைந்தது. ஜெர்மனி மன்னர் கெய்சர் முடிதுறந்தார். ஆட்சியை மக்கள் பிரதிநிதிகளிடம் ஒப்படைத்துவிட்டு, நாட்டை விட்டு வெளியேறினார். சேதம் 1,561 நாட்கள் நடைபெற்ற இந்தப் போரில் 2 கோடிப்பேர் மாண்டனர்.

யுத்தம் முடிந்த பிறகு உலகம் முழுவதும் பரவிய விஷக் காய்ச்சலால் 2 கோடி மக்கள் உயிர் இழந்தார்கள். 40 லட்சம் கோடி டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் நாசம் அடைந்தன. போரில் ஈடுபட்ட நாடுகள் இடையே 1919 ஜுன் 28ந் தேதி ஒரு உடன்படிக்கை ஏற்பட்டது. அதன்படி படை திரட்டும் உரிமையை ஜெர்மனி இழந்தது.

போரில் பங்கு கொண்ட நேச நாடுகளுக்கு ஜெர்மனி நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்றும் முடிவாயிற்று. ஜெர்மனியின் வளமான பகுதிகள் சிலவற்றை பிரான்ஸ் கைப்பற்றிக் கொண்டது. இப் போரினால், 20 ஆம் நூற்றாண்டின் எஞ்சிய காலம் முழுதும், அரசியலிலும், பண்ணுறவாண்மை தொடர்பிலும் பெரும் விளைவுகள் ஏற்பட்டன. போரின் விளைவு காரணமாக, ஆஸ்திரோ-ஹங்கேரியப் பேரரசு, ரஷ்யப் பேரரசு, உதுமானிய கிலாபத் என்பன சிதைவுற்றுத் துண்டுகள் ஆகின.சிதறியது ஆஸ்திரியா நாடு, பல்வேறு இன மக்களைக் கொண்ட நாடாகும். போருக்குப்பிறகு, ஆஸ்திரியா நாடு துண்டு துண்டாகச் சிதறியது.

யூகோஸ்லேவியா, போலந்து, செக்கசு லோவக்கியா ஆகிய புதிய நாடுகள் உதயமாயின.

மீண்டும் இதுபோன்ற உலக யுத்தம் மூளக்கூடாது என்று உலக நாடுகள் கருதின. அதற்காக "சர்வதேச சங்கம்" ஒன்று நிறுவப்பட்டது. இதில் பல நாடுகள் சேர்ந்தன.

ஆனால் சங்கத்தை அமைக்கப் பெரும் முயற்சி எடுத்துக் கொண்ட அமெரிக்கா அச்சங்கத்தில் கடைசிவரை சேரவில்லை.
 
செருமானியப் பேரரசு வீழ்த்தப்பட்டது. அது பெருமளவிலான நிலப்பகுதிகளை இழந்தது. இவ் விளைவுகள் காரணமாக ஐரோப்பாவிலும், மையக் கிழக்கிலும் நாடுகளின் எல்லைகள் மாற்றம் அடைந்தன. பழைய முடியாட்சிகளின் இடத்தில் பல பொதுவுடமை அரசுகளும், குடியரசுகளும் உருவாயின. போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களும், புதிதாக உருவான நாடுகளின் உறுதியற்ற தன்மைகளும், 20 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஒரு உலகப் போர் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களாக அமைந்தன.

இன்ஷா அல்லாஹ் மீண்டும் வேற ஒரு வரலாற்று பதிவில் சந்திப்போம்.

 
நன்றி விக்கிபீடியா

Sep 6, 2015

ஹிரோஷிமா மக்களை ஏமாற்றிய அமெரிக்கா

அணுகுண்டு வீச்சின் விளைவாக ஹிரோஷிமா நகருக்கு மேலே எழுகின்ற காளான் மேகமூட்டம் (இடது); நாகசாக்கி நகருக்கு மேலே எழுகின்ற காளான் மேகமூட்டம் (வலது)


ஏப்ரல் 30, 1945. ஜெர்மனிக்குள் நுழைந்த ரஷ்யப் படைகள் பெர்லின் நகரை சுற்றி வளைத்துவிட, அங்கே பங்கரில் பதுங்கியிருந்த ஹிட்லர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்கிறார். இதையடுத்து ஹிட்லரின் படைகள் நேரடியாக போரை நிறுத்திவிட்டாலும் ஆங்காங்கே சிறிய அளவில் அமெரிக்கக் கூட்டணி, சோவியத் யூனியன் படைகளுடன் மோதிக் கொண்டிருந்தன. மே 8, 1945. இந் நிலையில் ஜெர்மனியின் முப்படையினரும் மே 8ம் தேதி அமெரிக்க- பிரான்ஸ் அதிகாரிகள் முன்னிலையில் சோவியத் யூனியனிடம் சரணடையும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இத்தோடு ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.

ஆனால், அமெரிக்க கூட்டுப் படையினரிடம் ஜப்பான் சரணடைய மறுக்கவே இரண்டாம் உலகப் போர் பசிபிக் பிராந்தியத்தில் தொடர்ந்தது. இதையடுத்து ஜூலை 26ம் தேதி ஜப்பானுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா ஆகியவை ஒரு இறுதி எச்சரிக்கை விடுத்தன. உடனடியாக சரணடையாவிட்டால் ஜப்பான் மீது அழிவு மிகுந்த தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்தது Potsdam Declaration எனப்படும் அந்த எச்சரிக்கை. இதை ஜப்பான் நிராகரித்துவிட்டது. முன்னதாக 1941ம் ஆண்டில் டிசம்பர் 7ம் தேதி ஹவாய் தீவில் உள்ள தனது பியர்ல் ஹார்பரில் நூற்றுக்கணக்கான போர் விமானங்களைக் கொண்டு ஜப்பான் தாக்குதல் நடத்தி ஆயிரக்கணக்கான அமெரிக்க வீரர்களைக் கொன்றதோடு, நூற்றுக்கணக்கான போர்க் கப்பல்களையும் மூழ்கடித்ததற்கு பதிலடி தருவதில் ஆவேசமாக இருந்தது அமெரிக்கா.

(பியர்ல் ஹார்பர் மீது ஜப்பான் ஏன் தாக்குதலை நடத்தி அமெரிக்க கப்பற்படையின் பசிபிக் பிரிவையே நீருக்குள் மூழ்கடிக்க வேண்டும்… இந்தப் பகுதியில் முகாமிட்டிருந்த அமெரிக்கக் கடற்படை, ஜப்பானின் கடல் வழி வர்த்தகத்தை முடக்கலாம் என்ற சந்தேகம் தான்) ஜப்பான் மீது உலகம் இதுவரை பார்த்திராத அளவுக்கு ஒரு தாக்குதலை நடத்த அன்றே திட்டமிட்டது. Manhattan Project என்ற பெயரிலான இந்தத் திட்டம் மூலம் தான் உலகிலேயே முதன்முதலாக அணுகுண்டுகள் தயாரிக்கப்பட்டன. இதில் கனடாவும் இங்கிலாந்தும் அமெரிக்காவுக்கு முழு அளவில் உதவின. விஞ்ஞானிகள், ராணுவ வீரர்கள், உளவுப் பிரிவினர், ஆயுத நிபுணர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் என ஆயிரக்கணக்கானோர் இந்தத் திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டனர். அமெரிக்க ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் லெஸ்லி குரோவ்ஸ் அணு விஞ்ஞானி ராபர்ட் ஓபன்ஹெய்மர் ஆகியோர் தலைமையில் மிக ரகசியமாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. நியூமெக்சிகோ பாலைவனத்தில் முதல் அணுகுண்டு சோதனை வெற்றிகரமாக நடக்க, அணுகுண்டை ஏந்திச் செல்ல வசதியாக போயிங் B-29 Superfortress போர் விமானங்களை மாற்றி வடிவமைக்கும வேலையும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

போர் விமானங்களை வைத்து பல மாதங்கள் ஹிரோஷிமா மக்களை ஏமாற்றிய அமெரிக்கா

ஆகஸ்ட் 6, 1945. அமெரிக்காவின் மியாமி நகரில் 57 வயதான எனோலா கே தன் வீட்டு வேலைகளில் மூழ்கியிருக்க, அவரது பெயர் சூட்டப்பட்ட ஒரு B-29 Superfortress போர் விமானம் லிட்டில் பாய் என்ற அணுகுண்டை ஏந்தியபடி டினியன் என்ற பசிபிக் தீவில் இருந்து அதிவேகத்தில் கிளம்புகிறது. ADVERTISEMENT அந்த விமானத்தை இயக்கிக் கொண்டிருந்தது ஏனோலா கேவின் மகனான பைலட் பால் டிபிட்ஸ். இவரது தலைமையிலான டீம் தான் ஹிரோஷிமாவில் முதல் அணுகுண்டைப் போட்டது. விமானத்துக்கு தனது தாயாரின் பெயரை சூட்டியது இவர் தான். யுரேனியம் கன்-டைப் அடிப்படையிலான இந்த லிட்டில் பாய் அணுகுண்டு 10 அடி நீளம் கொண்டது. 5 டன் எடை கொண்ட இந்த குண்டு 20,000 டன் டி.என்டி வெடிப்புக்கு சமமானது.

இந்த வேலைகள் எல்லாம் முடிந்த நிலையில்…. ஆகஸ்ட் 6, 1945. அமெரிக்காவின் மியாமி நகரில் 57 வயதான எனோலா கே தன் வீட்டு வேலைகளில் மூழ்கியிருக்க, அவரது பெயர் சூட்டப்பட்ட ஒரு B-29 Superfortress போர் விமானம் லிட்டில் பாய் என்ற அணுகுண்டை ஏந்தியபடி டினியன் என்ற பசிபிக் தீவில் இருந்து அதிவேகத்தில் கிளம்புகிறது. அந்த விமானத்தை இயக்கிக் கொண்டிருந்தது ஏனோலா கேவின் மகனான பைலட் பால் டிபிட்ஸ். இவரது தலைமையிலான டீம் தான் ஹிரோஷிமாவில் முதல் அணுகுண்டைப் போட்டது. விமானத்துக்கு தனது தாயாரின் பெயரை சூட்டியது இவர் தான். யுரேனியம் கன்-டைப் அடிப்படையிலான இந்த லிட்டில் பாய் அணுகுண்டு 10 அடி நீளம் கொண்டது. 5 டன் எடை கொண்ட இந்த குண்டு 20,000 டன் டி.என்டி வெடிப்புக்கு சமமானது.

6 மணி நேர பயணத்துக்குப் பின் காலை 6.30 மணிக்கு மேகக் கூட்டங்களில் மாறி மாறி நுழைந்து, வெளியேறி என ஜப்பானை நெருங்கியது எனேலோ கே. ஹிரோஷிமாவை நெருங்க நெருங்க விமானத்தின் பறக்கும் உயரமும் 31,000 அடிக்கு உயர்த்தப்பட்டது. ஆகஸ்ட் மாதம் ஹிரோஷிமாவில் கோடை காலம். மேகக் கூட்டங்கள் குறைவான இந்த மாதம் தான் அணுகுண்டின் தாக்கத்தை பல மடங்கு அதிகரிக்க உதவும் என்பதால் இந்த நாளை தேர்வு செய்திருந்தனர் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள். ஹிரோஷிமாவை எனோலா கே விமானம் நெருங்கும் வேளையில், அமெரிக்காவின் வானிலை ஆய்வு விமானமான Straight Flush அங்கே தலையைக் காட்டியது.

வானிலை சரியாக இருப்பதாக தகவல் தர வேகமாக முன்னேறியது எனோலா கே. முன்னதாக 1945ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்தே அமெரிக்காவின் B-29 போர் விமானங்கள் ஹிரோஷிமா மீது பறப்பதும், அப்போது ஆரஞ்சு வண்ணத்திலான ‘pumpkins’ எனப்படும் சாதாரண ரக வெடிகுண்டுகளைப் போட்டுவிட்டுப் பறப்பதும் வழக்கமாக இருந்தது. இதனால் இந்த B-29 ரக அமெரிக்க விமானங்கள் தங்கள் நகருக்கு மேலே பறப்பதையும, ‘pumpkins’ குண்டுகள் விழுவதையும் ஹிரோஷிமா மக்கள் சாதாரணமாக எடுத்துக் கொண்ட காலம் வந்திருந்தது. நகர் முழுவதும் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்தாலும் கூட B-29 போர் விமானங்கள் தங்கள் தலைக்கு மேலே பறந்தால், மக்கள் பங்கர்களுக்குள் ஓடி ஒளிவதை பெரும்பாலும் கைவிட்டுவிட்டிருந்தனர். இதைத் தான் அமெரிக்காவும் எதிர்பார்த்தது. இதனால் தான் B-29 போர் விமானங்களை வைத்து பல மாதங்கள் ஹிரோஷிமா மக்களுக்கு விளையாட்டு காட்டி ஏமாற்றி வந்தது.
காலை 7.30 மணி. ஹிரோஷிமாவில் விழும் வழக்கமான அமெரிக்க போர் விமான குண்டுகளால் ஏற்படும் சேதங்களைத் தடுக்க தடுப்புகளை உருவாக்கும் வேலையில் ஜப்பானிய குழந்தைகளும் ஈடுபடுவது வழக்கம். பள்ளிக்குச் செல்லும் முன் வழக்கம்போல இந்தப் பணியில் பங்கேற்க 12 வயதான சுமார் 8,000 பிஞ்சுகள் ஹிரோஷிமாவின் மையப் பகுதியில் உள்ள Aioi Bridge பாலம் அருகே கூடுகின்றனர். 7.50 மணி எல்லோரும் தயாராகுங்கள். அணுகுண்டு வீச்சின் ஒளி கண்ணைப் பறிக்கும். இதனால் அந்த சிறப்பு கண்ணாடிகளை அணிந்து கொள்ளுங்கள். ஒளி அடங்கும் வரை யாரும் அதைக் கழற்றக் கூடாது. கதிர்வீச்சிலிருந்து தப்ப உதவும் உடைகளையும் அணியுங்கள் என உத்தரவிடுகிறார் பைலட் டிபிட்ஸ்.

8.12 ஜெர்மனியில் 60 முறை விமானம் மூலம் குண்டுகளை வீசி அனுபவம் வாய்ந்த மேஜர் தாமஸ் ப்ரீபீ தான் லிட்டில் பாய் குண்டை ஹிரோஷிமா மீது போட வேண்டும். தனது டார்கெட்டான Aioi Bridge பாலத்தை நோக்கி தனது பார்வையைத் திருப்புகிறார். விமானம் மணிக்கு 420 கி.மீ. வேகத்தில் பறந்து கொண்டிருக்க, இன்னும் 3 நிமிடம் தான் பாக்கி என அறிவிக்கிறார் பைலட். அணுகுண்டை செயல்பட வைத்த தாமஸ் 3 நிமிடங்கள் 43 நொடி என டைமரை செட் செய்கிறார்.

8.15 மணி எனோலா கே விமானத்தின் பாம் கதவுகள் திறக்க, லிட்டில் பாய் அணுகுண்டு கீழே பாய, 43 வினாடிகளை கவுண்ட் டவுன் செய்ய ஆரம்பிக்கிறது எனோலா கே விமானக் குழு. 31,000 அடிக்குக் கீழே ஏதும் அறியாத பச்சிளம் குழந்தைகள், முதியோர், பள்ளிச் சிறார்கள் என பல தரப்பட்ட மக்களும் தங்கள் அன்றாட வாழ்வில்… சரியாக தரையிலிருந்து 1,890 அடியை எனோலா கே எட்ட, 43 வினாடிகள் முடிய… இதுவரை உலகம் பார்த்திராத ஒரு மாபெரும் ஒளிப் பிழம்பு. இதுவரை கேட்டிராத ஒரு மாபெரும் ஒலி. அந்த குண்டு வெடித்த மையப் பகுதியில் இருந்து சுமார் 5 கி.மீ. சுற்றளவில் இருந்த மனிதர்கள், விலங்குகள் அனைத்தும் பஸ்பமாகிவிட, கட்டிடங்கள் சிதறி விட ஒன்றுமே மிச்சமில்லை.
அடுத்த சில வினாடிகளில் அணுகுண்டின் ஒளி மறைய, ஹிரோஷிமாவை ஆக்கிரமிக்கிறது கடும் இருளும் புகை மூட்டமும். மயான அமைதி. அதே நேரத்தில் குண்டுபோட்ட எனோலா கே விமானம் கதிர்வீச்சிலிருந்து தப்ப உயரத்தை அதிகரித்தபடியே, எதிர் திசையில் பறக்க அவர்களையும் விரட்டுகிறது அணுகுண்டு வெடிப்பின் அதிர்வலைகள். ADVERTISEMENT கீழே குண்டு வெடித்த இடத்திலிருந்து அதன் அதிர்வலைகள் எல்லா பக்கமும் பரவியபடி, வழியில் இருந்த உயிர்கள், கட்டிடங்களை நிர்மூலமாக்க, துணை விமானியான லூயிஸ், நாம் என்ன காரியம் செய்துள்ளோம். கீழே என்ன நடக்கிறது. எத்தனை பேரை கொன்று கொண்டிருக்கிறோம் என தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் அலற, விமானத்தில் இருந்த அனைவரிடத்திலும் அதே கேள்விகள். இப்படி ஒரு சேதமா என தாங்களே வெறித்தபடி வேகமாக அமெரிக்கா நோக்கி திரும்புகிறது எனோலா கே.

இந்த தாக்குதலில் உடனடியாக பஸ்பமானவர்கள் சுமார் 1 லட்சம் பேர். கதிர்வீச்சால் உடல் எரிந்து, தோல் எரிந்து போய், உடல் திசுக்கள், உறுப்புகள் பாதிக்கப்பட்டு அடுத்த நாட்களில், வாரங்களில், மாதங்களில் பலியானவர்கள் மேலும் 1 லட்சம் பேர். குண்டுவெடித்ததில் ஏற்பட்ட பயங்கரமான அதிர்வலையில் பல பேரின் கண்கள் அவர்களின் கண் குழிகளில் இருந்து வெளியேறி தொங்கியது தான் மகா கொடூரம்.

அடுத்த 10 நாளில் நாசமானது நாகசாகி…!

10 மணி. நாம் அமெரிக்காவில் தரையிறங்கும்போது ஜப்பான் சரணடைந்திருக்கும் என பேசியபடியே எனோலா கே விமானக் குழுவினர் பறந்து கொண்டிருக்க, ஜப்பான் சரணடைய மறுக்கிறது. இதையடுத்து அடுத்த 10 நாளில் நாகசாகி நகரிலும் இன்னொரு அணுகுண்டைப் போடுகிறது அமெரிக்கா. அடுத்த இரு வாரங்களில் செப்டம்பர் 2ம் தேதி அமெரிக்காவிடம் சரணடைகிறது ஜப்பான். ஹிரோஷிமாவில் முதல் அணுகுண்டு போடப்பட்டு இன்றுடன் 70 ஆண்டுகள் முடிகின்றன.
ஹிரோஷிமாவில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில் பேசிய ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே, ”உலகிலேயே அணுகுண்டு தாக்குதலுக்கு உள்ளான ஒரே நாடு நாம் தான். இதனால் உலகத்தில் அணுகுண்டே இல்லாத நிலையை உருவாக்க வேண்டிய முழுப் பொறுப்பும் உள்ள நாடும் நாம் தான்”. ”என் வாழ்விலேய நான் செய்த மிகப் பெரிய தவறு, அணுகுண்டு தயாரிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்டுக்கு எழுதப்பட்ட கடிதத்தில் கையெழுத்து போட்டது தான். ஜெர்மன் அணுகுண்டு தயாரித்துவிடும் என்ற சந்தேகத்தில் தான் நான் இதைச் செய்து விட்டேன்…” இப்படி மனம் வருந்தியது ஜப்பான் மீது அணுகுண்டு வீசப்பட்டதால் வேதனை அடைந்த அணுகுண்டு உருவாக காரணமான விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்.

ஜெர்மனி தோற்கடிக்கப்பட்ட நிலையில், ஜப்பானும் கிட்டத்தட்ட தோல்வி அடையும் நிலையில் தான் இருந்தது. இந் நிலையில் அணுகுண்டு போட்டுத்தான் அமெரிக்கா ஜப்பானை அடக்கியிருக்க முடியும் என்ற சூழல் அப்போது இல்லை. ஆனாலும் அணுகுண்டை வீசியது அமெரிக்கா. ரூஸ்வெல்ட், ஹாரி ட்ரூமென் ஆகியோர் காலத்தில் கடற்படை தளபதியாக இருந்த அட்மிரல் வில்லியம் லே, ”போரில் ஈடுபடாத குழந்தைகளையும் பெண்களையும் பஸ்மாக்கித் தான் வெற்றி பெற முடியும் என்றால், அந்த வெற்றி எனக்குத் தேவையில்லை”  கூறியதும் குறிப்பிடத்தக்கது.

அணுகுண்டுகளின் பெயர்கள்

ஹிரோஷிமா நகரத்தின் மீது வீசப்பட்ட அணுகுண்டிற்கு அமெரிக்கா வைத்த குறிப்பெயர் ”சின்னப் பையன்” (little boy) என்பதாகும். மூன்று நாட்கள் கழித்து நாகசாகி நகரத்தின் மீது வீசப்பட்ட அணுகுண்டிற்கு ”கொழுத்த மனிதன்” (Fat man) என்ற குறுப்பெயர் சூட்டினர்.

அணுகுண்டு வீச்சின் பின்புலம்


பசிபிக் போர்

சப்பானுக்கு எதிரான விளம்பரம் - நேச நாடுகள் போரின் முதல் கட்டத்தில் தங்களுக்கு ஏற்பட்ட தோல்விகளை வலியுறுத்தின.

1945இல் நேச நாடுகளுக்கும் சப்பான் பேரரசுக்கும் இடையே நிகழ்ந்த போர் நான்காம் ஆண்டை எட்டியது. இரண்டாம் உலகப் போர் முடிவதற்கான அறிகுறிகளும் இருந்தபாடில்லை. மாறாக, சண்டையின் மும்முரம் அதிகரித்துக்கொண்டே போனது. இரண்டாம் உலகப் போரின் போது ஐக்கிய அமெரிக்க போர்வீரர்கள் 1.25 மில்லியன் பேர் இராணுவத் தளத்தில் இறந்தார்கள்; அவர்களுள் ஏறத்தாழ 1 மில்லியன் பேர் சூன் 1944க்கும் சூன் 1945க்கும் இடைப்பட்ட 12 மாதங்களில் இறந்தார்கள் என்பதிலிருந்து சண்டையின் மும்முரம் தெளிவாகிறது.

1944 திசம்பர் மாதத்தில் மட்டுமே செருமானிய துருப்புகள் "ஆர்டேன் தாக்குதல்" என்று அழைக்கப்படுகின்ற பல்ஜ் சண்டையில் 88,000 அமெரிக்க போர்வீரர்களைக் கொன்றுகுவித்தன. ஒரே மாதத்தில் மிக அதிகமான போர்வீரர் இறந்தது அச்சண்டையில்தான்.

அதே காலக்கட்டத்தில், பசிபிக் முனையில் நடந்த போரில் நேச நாடுகளின் படைகள் மரியானா தீவைகளையும் பலாவுதீவையும் கைப்பற்றிவிட்டு,பிலிப்பீன்சுக்குச் சென்று, அதன்பின் போர்னியோவைத் தாக்கின. சப்பானின் படைகளை விட்டுவைக்கும் கொள்கை கைவிடப்பட்டது. தம் போர்வீரர்களை சண்டை நிகழ்ந்த பிற பகுதிகளுக்குக் கொண்டுபோவதற்காக, பூகேய்ன்வில், நியூ கினி, பிலிப்பீன்சு ஆகிய முனைகளில் சண்டையைத் தொடர்ந்துகொண்டிருந்த சப்பானின் படைகளைக் குறைக்கும் நோக்குடன் நேச நாடுகள் தாக்குதல்கள் நிகழ்த்தின. 1945 ஏப்ரல் மாதத்தில் அமெரிக்க படைகள் ஓக்கினாவாவில் களமிறங்கி சூன் மாதம் வரையிலும் கடுமையான சண்டையில் ஈடுபட்டன. அக்கட்டத்தில் சப்பானிய படைகளில் பிலிப்பீன்சில் ஐந்துக்கு ஒன்று என்றிருந்த சாவு விகிதம் ஓக்கினாவாவில்இரண்டுக்கு ஒன்று என்று கணிசமாகக் குறைந்தது. 

சப்பானை ஆக்கிரமிக்க நிகழ்ந்த தயாரிப்பு

ஐக்கிய அமெரிக்காவின் போர் விளம்பரம் சப்பான் ஆக்கிரமிக்கப்படப் போவதை மக்களுக்கு அறிவிக்கிறது. "சாம் மாமா" (Uncle Sam) சட்டைக்கையைச் சுருட்டி, திருகிகைக் கையிலெடுத்து சப்பானியரைத் தாக்க அணியமாகிறார்.

1945, மே 8ஆம் நாள் நாசி செருமனி சரணடைந்தது. அதற்கு முன்னரே, பசிபிக் மாக்கடல் பகுதியில் மிகப் பெரிய அளவில் போர் நிகழ்த்துவதற்கும், சப்பான் நாட்டை ஆக்கிரமிப்பதற்கும் நேச நாடுகள் திட்டம் தீட்டி, தயாரிப்புகளைத் தொடங்கிவிட்டிருந்தன. "வீழ்ச்சி நடவடிக்கை" (Operation Downfall) என்று பெயரிடப்பட்ட அந்தப் போர்த்திட்டம் இரு பகுதிகளாக அமைந்தது: 1) "ஒலிம்பிக் நடவடிக்கை"; 2) "மகுட நடவடிக்கை".

"ஒலிம்பிக் நடவடிக்கை" 1945 அக்டோபர் மாதம் தொடங்குவதாகவும், அதன்படி ஐக்கிய அமெரிக்காவின் 6வது படைப்பிரிவு பகுதிபகுதியாகக் களமிறங்கி, சப்பானின் நான்கு பெரிய தீவுகளில் தெற்கே அமைந்த கியூஷூ என்னும் தீவின் தென்புறமாக மூன்றில் ஒரு பகுதியை ஆக்கிரமிப்பதாகவும் திட்டமிடப்பட்டிருந்தது. அந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, 1946 மார்ச் மாதம் "மகுட நடவடிக்கை" தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி, ஐக்கிய அமெரிக்காவின் முதல் படைப்பிரிவு, எட்டாம் படைப்பிரிவு, பத்தாம் படைப்பிரிவு ஆகியவை சப்பானின் நான்கு முக்கிய தீவுகளில் மிகப்பெரியதாகிய ஹொன்ஷூ தீவில் தலைநகராகிய டோக்கியோவின் அருகில் அமைந்த கான்டோ வெளி (Kantō Plain) என்னும் பகுதியை ஆக்கிரமிப்பதாகத் திட்டம் போடப்பட்டிருந்தது. ஆக்கிரமிப்புக்கான நாளைக் குறித்தபோது, "ஒலிம்பிக் நடவடிக்கை" தன் குறிக்கோளை எய்துவதற்கும், அந்த நடவடிக்கையில் ஈடுபட்ட போர்ப்படைகளை ஐரோப்பாவிலிருந்து சப்பானுக்குக் கொண்டுவருவதற்கும், சப்பான் பகுதியில் பனிபெய்கின்ற குளிர்காலம் கடப்பதற்கும் போதிய ஐந்து மாத கால இடைவெளி இடப்பட்டிருந்தது.

நேச நாடுகள் தன்னை ஆக்கிரமிக்க திட்டம் தீட்டியதை சப்பான் எளிதில் அறிந்துகொண்டது. அதன் நில அமைப்பு அதற்கு சாதகமாய் இருந்தது. நேச நாடுகளின் ஆக்கிரமிப்புத் திட்டத்தை சப்பான் துல்லியமாக முன்னறிந்து, அந்த ஆக்கிரமிப்பை எதிர்கொள்ள திட்டம் வகுத்தது. சப்பானின் போர்த்திட்டத்திற்கு "கெத்சுகோ நடவடிக்கை" (Operation Ketsugō) என்று பெயர். அதன்படி, சப்பானியர் கியூஷூ தீவைப் பாதுகாக்கும்படி தம் போர்ப்படையின் மிகப்பெரும் பகுதியைத் தயாராக அங்கு நிறுத்தினர். இதனால் தொடர் பாதுகாப்புக்கு அழைக்கக் கூடுமான படைப்பிரிவு சிறிதளவே எஞ்சியது.



நன்றி யாழ் தமிழ் ரேடியோ மற்றும் விக்கி தமிழ்