Showing posts with label பாகிஸ்தான். Show all posts
Showing posts with label பாகிஸ்தான். Show all posts

Sep 7, 2016

10 லட்சத்திற்கும் மேலான பெல்லட் குண்டுகள் கஷ்மீர் மக்கள் மீ்து பிரியோகித்துள்ளது

கஷ்மீரில் 10 லட்சத்திற்கும் மேலான பெல்லட் குண்டுகளை மக்கள் மீ்து பிரியோகித்துள்ளதாக இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.
 
உலகெங்கிலும் இல்லாத அளவிற்கு ஆறு லட்சம் ராணுவ படையை இரக்கி இந்திய அரசு கஷ்மீரை ஆக்கிரமித்து வைத்துள்ளது. அது மட்டுமின்றி கஷ்மீர் மக்களின் மீது ஆயுதங்கள் பிரயோகிப்பதும் எப்போதையும் வீட கடந்த மாதங்களில் அதிகரித்துள்ளது (பாகிஸ்தான் செய்தி நிறுவனம் – தி நியூஸ்)
 
கடந்த 32 நாட்களில் 13 லட்சம் பெல்லட் குண்டுகளை சாலை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பிரயோகப்படுத்தியதாக இந்திய துணை ராணுவம் ஜம்மு-கஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் முன் ஒப்புக் கொண்டுள்ளது.
 
மேலும் அந்த அறிக்கையில் 8000 கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் 2000 பிளாஸ்டிக் பெல்லட் குண்டுகளும் பிரயோகித்துள்ளதாக  குறிப்பிடபட்டுள்ளது.
 
சாமானிய முஸ்லிம்கள் உலகெங்கிலும் பல நாடுகளில் கொடுங்கோல் ஆட்சியின் கீழ் பலபயங்கர இன்னல்களையும், அச்சுருத்தல்களையும் சந்தித்து வரிகின்றனர் எனினும் முஸ்லீம் நாடுகளின் ராணுவம் தங்களது இருப்பிடங்களைவிட்டு  நகருவதில்லை..
 
 
 
செய்தி பார்வை 20.08.16

Sep 6, 2016

தீவிரவாதத்திற்கு எதிரான பாகிஸ்தானின் நடவடிக்கைகள் பற்றி அமெரிக்கா குறை கூறியதால் பாகிஸ்தான் அதிர்ப்தி

தீவிரவாதத்திற்கு எதிரான பாகிஸ்தானின் நடவடிக்கைகள் பற்றி அமெரிக்கா குற்றம் சாட்டியதால் பாகிஸ்தான் அதிர்ப்தியில் ஆழ்ந்துள்ளது.
தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் ஆணைக்கு இணங்க செயல்படக்கூடிய அரசை நிலைபெரச்செய்வது குறித்த பாகிஸ்தானின் நடவடிக்கைகள் பற்றி அமெரிக்க பாராளுமன்றத்தில் எழுந்த குற்றச்சாட்டால் பாகிஸ்தான் அரசியல் வட்டாரத்தில் உள்ள அதிகாரிகள் அதிர்ப்தி அடைந்துள்ளனர்.
தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் பாகிஸ்தான் தனது அரசுக்கு எதிராக செயல்படுபவர்களை மற்றும் ஒடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொல்வதாகவும், மற்ற தீவிரவாத அமைப்புகளான ஹக்கானி குழு உட்பட பல குழுக்களுக்கு அது அடைக்கலம் அளிப்பதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. (செய்தி – வாய்ஸ் ஆப் அமெரிக்கா)
ஒபாமா அரசு, மாணிய அடிப்படையில் பாகிஸ்தானுக்கு விற்கவிருந்த F 16 போர் விமான ஒப்பந்தத்திற்கும் அமெரிக்க பாராளுமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
அண்மையில் அமெரிக்க பாராளுமன்றத்தில் “பாகிஸ்தான் நட்பு நாடா அல்லது எதிரி நாடா” என்ற தலைப்பில் நடந்த விவாதம் பாகிஸ்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களை அதிருப்த்தியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பேசுகையில், அமெரிக்காவின் ஆணைக்கு இணங்க செயல்படக்கூடிய ஆப்கனிஸ்தான் அரசுக்கு எதிராக இயங்கிவரும் ஹாக்கணி, தாலிபான் போன்ற குழுக்களுக்கு பாகிஸ்தான் உதவுகிறது. ஆகையால் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு அளித்துவரும் பொருளாதாரம் மற்றும் இராணுவ உதவிகளை முற்றிலுமாக நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கைகளை பதிவுசெய்தனர்.
ஆப்கனிஸ்தான் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கான முன்னாள் அமெரிக்க தூதரான ஸல்மே கலில்ஜாத் அமெரிக்கா, வட கொரியாவை கையாளுவதை போல் பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுத்து அதன் மூலம் ஆப்கனிஸ்தானில் தனக்கு சாதகமான நாடவடிக்கைகளை சாதித்துகொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.
எனினும் பாகிஸ்தானின் மூத்த அதிகாரிகள் அமெரிக்க பாராளுமன்றத்தில் எழுந்த பாகிஸ்தானுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை சிறிய பிரிவினரால் எழுப்பப்பட்ட அடிப்படை அற்ற குற்றச்சாட்டுகள் என்று கூறிவிட்டனர். (செய்தி – பிஸ்னஸ் ரேகார்டர்)
செய்தி கண்ணோட்டம்:
அமெரிக்காவின் குற்றச்சாட்டால் பாகிஸ்தான் ஆச்சரியபடவோ, அதிருப்தி அடையவோ ஒன்றும் இல்லை. அமெரிக்காவை பொறுத்தவரை, ஆசியாவில் தனது முதன்மை ஏஜென்டாக இந்தியாவை நிலைநிறுத்த பாகிஸ்தானை பணயமாகவே பயன்படுத்துகிறது. மேலும் பாக்கிஸ்தான் முஸ்லிம்கள் நாடு என்பதால் அங்கு எப்போது வேண்டுமானாலும் இஸ்லாமிய அரசான கிலாபா நிறுவப்பட வாய்ப்பு உள்ளது என்பதையும் கருத்தில் கொண்டவாறே அமெரிக்கா செயல்படுகிறது.
http://sindhanai.org/

செய்தி பார்வை 29.07.16

Jul 19, 2016

இன்றைய உலகில் எங்காவது இஸ்லாமிய ஆட்சி நடைபெறுகிறதா..??



இன்றைய உலகில் எங்காவது இஸ்லாமிய ஆட்சி நடைபெறுகிறதா, அதாவது சவூதி அரேபியா, ஈரான், பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தான் (தாலிபானிற்கு கீழ்) போன்ற நாடுகளில்?


ல்லை
, தற்போதய முஸ்லிம் நாடுகள் இஸ்லாமிய சட்டத்தின் சில பகுதிகளை மட்டுமே நடைமுறை படுத்தி வருகின்றன: அதிகப்படியாக அவை குடும்பவியல் சட்டங்களின் சில பகுதிகளை உபயோகித்து வருகின்றன, ஆனால் எந்தவொரு நாடும் முழுமையாக தன் சட்டங்களையும் கொள்கைகளையும் இஸ்லாமிய அடிப்படையில் பிரித்தியேகமாக அமைத்து கொள்ளவில்லை. பாகிஸ்தானில், இஸ்லாமிய சட்டத்தை குடும்ப பிரச்சினைகளை தீர்க்கவும் அல்லது இஸ்லாமிய உணர்வுகள் மீது தான் அக்கறை கொண்டுள்ளதாக அடையாள படுத்துவதற்காக மட்டுமே உபயோகித்து வருகிறது, ஹுதூத்(தண்டனை) சட்டத்திலும் இதே நிலை தான். இது தான் தகுதியற்ற ஊழலுற்ற அரசாங்கங்கள் மற்றும் அவைகளின் மேற்கத்திய எஜமானர்கள் மற்றும் ஊடகங்கள் இஸ்லாமிய சட்டம் செயலற்று இருப்பதாகவும் மேலும் அதனால் சமூகத்தை நிர்வகிக்க முடியாது என்று சித்தரிப்பதற்காக செயல்படுத்தும் திட்டமாகும்.3

பல லட்சக்கணக்கான திருக்குர்’ஆன் பிரதிகள் மற்றும் இஸ்லாமிய நூல்களை அன்பளிப்பாக வழங்கலாம் மற்றும் உலகெங்கும் பள்ளிவாயில்கள் நிர்மானிக்க அதிகப்படியான நிதிகளை சவூதி அரேபியா அன்பளிக்காக வழங்கலாம், எவ்வாறிருப்பினும் சில இஸ்லாமிய அடிப்படைகளை கொண்ட சட்டங்கள் மற்றும் சில மனிதனால் இயற்றப்பட்ட சட்டங்களையும் கொண்டு சவூதி அரேபியா ஒரு கலப்படமான சட்டங்களையே பின்பற்றி வருகின்றது. எனினும் இஸ்லாமிய கண்ணோட்டத்தை தக்கவைத்துக்கொள்ள அவைகளை அது சட்டங்கள் என குறிப்பிடுவதில்லை. இஸ்லாமிய சட்டங்களையும் மனிதன் இயற்றிய சட்டங்களையும் வேறுபடுத்தி காட்ட சவூதி பிரத்தியேகமாக குறிப்பிட்ட சில வார்த்தைகளை உபயோகிக்கின்றது. அரசியலமைப்பு சம்மந்தமான ஒரு அரபி நூலில் அதன் ஆசிரியர் இவ்வாறு குறிப்பிடுகிறார், “சவூதியில் விதி(ஆனூன்) மற்றும் சட்டம்(தஷ்ரீ’) போன்ற வார்த்தைகள் இஸ்லாமிய ஷரீஆவிலுருந்து எடுக்கப்பட்டவைகளை குறிப்பிடுவதற்காக மட்டும் பயன்படுத்தப்படுகிறது…4 மனிதனால் இயற்றப்பட்ட சட்டங்களை பொறுத்தவரை அதாவது அமைப்புகள் (அந்திமா) அல்லது வழிமுளைகள (த’லீமாத்) அல்லது பிரகடனங்கள் (அவாமிர்)……. இது தவிர ஒரு பரம்பரை முடியாட்சியான சவூதி அரேபியா மார்க்க நிறுவனங்களை முதலாளித்துவ மற்றும் மேற்கத்திய உலகிற்கு ஆதரவான திட்டங்களுக்கான எதிர்ப்புகளை கட்டுப்படுத்தும் ஒரு கருவியாக உபயோகித்து வருகிறது.

இதை போன்று தாலீபானும் இஸ்லாத்தின் சில அம்சங்களை நடைமுறை படுத்தி வந்தது. ஆப்கானிஸ்தானை தாலீபான்கள் ஆண்ட போது அவர்கள் ஒருபோதும் தாங்கள் இஸ்லாமிய அரசாங்க முறையான கிலாஃபத் முறையை பின்பற்றுகிறோம் என்று கூறியதில்லை, மாறாக தங்களை ஒரு அமீரகமாகவே அடையாள படுத்தியது அது வெளியுறவு கொள்கை அற்ற ஒரு சில சட்ட வறையறைகளை கொண்டு ஒரு எல்லைக்குள் மட்டுமே செயற்படும் ஒரு அரசியல் நிறுவனமாக தான் செயல்பட்டது. இஸ்லாமிய ஆட்சியமைப்பானது பொருளாதாரம், சமூகவியல், ஆட்சிமுறையாக இருக்கட்டும் மேலும் வெளியுறவு கொள்கை அமைத்து கொள்வது ஆகட்டும் இஸ்லாத்தின் அனைத்து சட்டங்களையும் நடைமுறை படுத்தக்கூடியதாக இருக்கும், கிலாஃபத்தானது ஒரு தனித்து விடுபடக்கூடிய நாடு கிடையாது.

ஈரானிய அரசியலமைப்பு பல அம்சங்கள் இஸ்லாத்தோடு ஒத்து போகக்கூடிய வகையில் இருக்கின்றன அதேபோல மற்றவைகள் இஸ்லாத்திற்கு நேர் எதிராக உள்ளது. ஈரானிய அரசியல் சாசனத்தின் விதி 6 இவ்வாறு கூறுகின்றது: “ஈரானின் இஸ்லாமிய குடியரசு, நாட்டின் விவகாரங்களை ஜனாதிபதி, இஸ்லாமிய கலந்தாய்வு சபை உறுப்பினர்கள், கவுன்சில் உறுப்பினர்கள் போன்றவர்களை தேர்தல்கள் நடத்தி தேர்த்தெடுப்பது உட்பட பொதுஜன கருத்தை அறிந்து அதன் அடிப்படையில் நாட்டின் விவகாரங்களை மேற்கொள்ள வேண்டும், அல்லது பொதுஜன வாக்கெடுப்பின் மூலம் அதன் சில விவகாரங்களில் அரசியல் சாசனத்தின் இதர விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளதை தழுவி மேற்கொள்ள வேண்டும்.” இஸ்லாமிய அமைப்பை கொண்ட அரசியலமைப்பு – அதாவது கிலாஃபத்தானது முழுமையாக இஸ்லாமிய ஆதாரங்களை அடிப்படையாக கொண்டதாகும். ஈரானின் விஷயத்தில் இது பொருந்தாது ஏனெனில் அது தனது அரசியலமைப்பில் ” நாட்டின் விவகாரங்களை தேர்தல்கள் மூலம் வெகுஜன கருத்தை அறிந்து அதன் அடிப்படையில் செயல்படுவதாக” அறிவிக்கிறது”. இஸ்லாத்தை பொறுத்தவரை நாட்டின் விவகாரங்கள் வெகுஜன கருத்தின் அடிப்படையில் அல்லாமல் ஷரீ’ஆவின் அடிப்படையில் மட்டுமே செயல்படுத்தப்படும்.

Sources: sindhanai.org

Jul 16, 2016

காஷ்மீாின் விடுதலை வேட்கையை கிலாஃபத்தே வெற்றி வரை நகா்த்தும்



முஸ்லிம்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ள காஃபிர் ஆக்கிரமிப்பாளர்கள் தங்களின் அத்துமீறலை எதிர்த்து நிற்கக் கூடிய அப்பாவி முஸ்லிம்கள் மீது படுமோசமான , கொடூர தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்ற விவகாரம் நாமெல்லோரும் அறிந்த ஒரு விஷயமே.

அவ்வகையில் குஃப்பார்களின் அத்துமீறலுக்கு ஆட்பட்டுள்ள எத்தனையோ நிலங்களில் இன்று பேசுபொருளாகியிருக்கும் பகுதியான காஷ்மீரும் ஒன்றாகும் ...!

ஹிந்துத்துவ இந்திய அரசானது தனது கூலிப் படையை இன்று அப்பாவி காஷ்மீர் மக்கள்மீது ஏவி விட்டுள்ளது . 

உலகிலேயே மிகப்பலம் பொருந்திய ஏழாவது இராணுவ கட்டமைப்பை கொண்டதும் , இராணுவ அளவைப் பொறுத்த வரையில் ஆறாவது பெரிய இராணுவத்தை கொண்டுள்ளதுமான பாகிஸ்தான் முஸ்லீம் இராணுவம் காஷ்மீர் மக்களுக்கு அருகிலிருந்தும் ஹிந்துத்துவ இந்திய இராணுவம் துணிச்சலாக காஷ்மீரில் வன்முறையை கட்டவிழ்த்துள்ளது .

தங்களது முஸ்லிம் சகோதர , சகோதரிகள் மிக அருகே கொல்லப்பட்டு வருகின்ற இவ்வேளையில் மிக சமீபத்திலுள்ள பாகிஸ்தான் இராணுவம் இந்த அநீதிக்கெதிராக அணிதிரள பாகிஸ்தானின் அரசியல் தலைமைகளும், இராணுவ உயர்பீடங்களும் அனுமதிக்காது என்ற அதீத நம்பிக்கை இந்த ஹிந்துத்துவ இராணுத்திற்கு உண்டு.

இதனால் தான் கண்மூடித்தனமான தாக்குதலை துணிந்து அதனால் முன்னெடுக்க முடிகிறது..!

பாரிய மனித உரிமை மீறலை காஷ்மீர் மக்கள் மீது ஷைத்தானிய இந்திய அரசு முன்னெடுத்து வருகிற நேரத்தில் ரஹீல் நவாஸ் தலைமை வகிக்கும் பாகிஸ்தானிலிருந்து சிறியளவிலான இராணுவ உதவி கூட கிட்டாத நிலையில் நம் உறவுகள் காபிர்களின் கோரப்பிடியில் சிக்கியுள்ளனர்.

முஸ்லிம்களின் நலனை கருத்திற்கொள்ளாத பாகிஸ்தான் அரசு இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான தன் இராணுவத்தை கோத்திரக்குழுக்கள் வாழும் பகுதிகளில் நியமித்து, சுமார் ஒரு மில்லியன் அளவிலான கோத்திர மக்களை ஆப்கானில் பலவந்தமாக முகாமக்களில் வைத்துள்ளது. இக்காரியத்தை அமெரிக்காவின் நலன் கருதியே செய்துள்ளது..!

பாகிஸ்தான் இராணுவப்பிரிவு தலைமை ஜெனெரல் ரஹீல் நாட்டிற்குள் தன்னை வீரமிக்க, உறுதியான ஒருவராக பாசாங்கு காட்டினாலும் , காஷ்மீரில் இந்திய இராணுவ அத்துமீறல் இடம்பெறும் இவ்வேளையில் தனது இயலாமையை மற்றும் புறக்கணிப்பையே வெளிப்படுத்துகின்றார்..!

ஜெனெரல் ரஹீல் உண்மையிலேயே வீரராய் இருந்திருந்தால் காஷ்மீர் அத்துமீறல் ஏற்பட்ட அடுத்த நிமிடம் தகுந்த பாடம் புகட்டி இருக்க முடியும். இப்படி நடந்திருப்பின் இந்திய இராணுவம் காஷ்மீரில் கைவைக்க நூற்றுக்குக்கு மேற்பட்ட தடவை யோசிக்கும் வகையிலான பெரும் பாடமாக அது ஆகியிருக்கும்.

அடிப்படையில் ரஹீல் நவாஸ் தன்னை வாஷிங்டனின் அடிமையாகவும், எஜமான்களின் சிறந்த கைக்கூலியாகவுமே காட்டிக் கொள்கிறார். அவர் பாகிஸ்தான் இராணுவத்தை கோத்திர முஸ்லிம்களுக்கெதிராக அமெரிக்காவின் யுத்த நலனிற்கேற்ப பணியமர்த்தியுள்ளார். இதனால் பாகிஸ்தான் இராணுவத்தின் எதிர்த்தாக்குதல் பற்றி இந்திய ராணுவத்திற்கு அறவே பயம் இல்லாத அளவுக்கு ஆகிவிட்டது ...!

அதுபோலவே காஷ்மீர் மக்களின் விடுதலையையும், சுபீட்சத்தையும் ஐநாவின் சட்டவிதிகள் ஒருபோதும் உறுதிப்படுத்தாது .

எனவே இந்த ஹிந்துத்துவ இராணுவ ஆக்கிரமிப்புக்கு முடிவுக்கட்டும் ஆற்றலானது,

(1)மக்களை இஸ்லாத்தைக் கொண்டு ஆட்சிபுரிந்து,

(2)ஹிந்துத்துவ அரசிற்கெதிராக ஜிஹாதை பிரகடனம் செய்து,

(3)காஷ்மீர் மக்களை குஃப்ரிய சக்திகளிடமிருந்து மீட்கக்கூடிய முஸ்லிம்களின் கேடயமான கலீஃபாவின் மூலமே உறுதிப்படுத்தமுடியும் ...!

காஷ்மீரில் ஆறு தசாப்தங்களையும் தாண்டித் தொடரும் மக்களின் விடுதலை வேட்கையை ஆயிரக்கணக்கான முஜாஹிதீன்களை கொன்றொழித்தும் அவா்களின் தலைமைகளை களையெடுத்தும் தணிக்க வக்கற்ற ஹிந்துத்துவ அரசு பலமும், பக்குவமும், வீரமுமிக்க கிலாஃபத்தின் இராணுவத்தை எவ்வாறு எதிா்கொள்ளும் என்பதை சற்று சிந்தித்துப்பாருங்கள்...!

ஆகவே முஸ்லிம்களாகிய நாம் உண்மையிலேயே குஃப்ரின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும் எமது உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்ட எண்ணினால், முஸ்லீம் உலகில் கிலாஃபாவை நிறுவும் பணியில் பங்காற்றுவோராக மாற்றம் பெறவேண்டும் .

ஒரு அரசினை எதிா்கொள்ள இன்னுமொரு அரசினாலேயே முடியும். காஷ்மீர் மக்களின் பிரச்சினைக்கு கிலாபாதான் நிரந்தரத் தீர்வு ...!

Source : Darul Aman.net

Jul 14, 2016

சிந்துவின் பாலஸ்தீன் காஸ்மீரா!?


ஷஹீத் புர்ஹான் முஸப்பர் வாணி என்ற அந்த இளைஞன் காஸ்மீரிகளின் இதயங்களில் எப்படி வாழ்கிறான் என்பதன் எடுத்துக்காட்டே அவனது ஜனாசா தொழுகையும், தற்போதய காஸ்மீரின் நிலவரமுமாகும்! சுமார் மூன்று இலட்சம் பேர் அவனுக்காக ஜனாசா தொழுதுள்ளனர்! மக்கள் திரளை சந்திக்க முடியாத Indian Slum Dog Army தனது வெறித்தனத்தை அங்கு கட்டவிழ்த்து விட்டுள்ளது!

வஞ்சக ஊடகங்கள் கூட காஸ்மீரின் ராபின் ஹூட் என அவனை தமது பாணியில் வர்ணிக்கின்றன! அவனது ஷஹாதத்தில் பெருமிதம் கொள்வதாக புர்ஹான் வாணியின் தந்தை கூறுகிறார்! சிந்துவின் பாலஸ்தீனாக காஸ்மீர் கொந்தளிக்கிறது!

இந்திபாதாவின் பாதச் சுவடுகள் காஸ்மீரை அலங்கரிக்கிறது! ஆம் பாசிச குப்பை மேட்டு நாய்களுக்கு கற்கள் போதுமானதே!

காஸ்மீர் விவகாரத்தில் தீர்வுக்கான ஒரு சிறுகுறிப்பு!


15 சிவிலியன்களுக்கு ஒரு ஜவான் என்ற வகையில் காஸ்மீரில் இந்திய இராணுவமும் CRPF உம் குவிக்கப்பட்டுள்ளது! உலகின் அதிக கெடுபிடிமிக்க இராணுவ வலயங்களில் காஸ்மீர் முக்கிய இடம் வகிக்கிறது! ஆனால் இவ்வளவு ஒடுக்கு முறைக்கு மத்தியிலும் போராட்டம் அடுத்த சந்ததிக்கு கடத்தப்பட்டுள்ளது!

தோட்டாக்களினால் காஸ்மீர் போராட்டத்தை ஒடுக்கமுடியும் என இந்தியா நினைத்தால் அதைவிட முட்டாள்தனம் வேறு இருக்க முடியாது! தன் சகோதரன் தன் கண்முன் இந்திய இராணுவத்தால் தாக்கப்படுவதைக் கண்டு 16வயதில் ஓடிய புர்ஹான் வாணி திரும்பி வரும்போது கையில் துப்பாக்கியுடன் வந்தான் என்பது ஒரு மிகைப்படுத்தப்பட்ட கதையல்ல! மாறாக இராணுவ ஒடுக்கு முறையின் எதிர்வினை!

அதேபோல முதலாளித்துவ ஜனநாயகம் காஸ்மீர் விவகாரத்தை சுமூகமாக தீர்க்கும் என காஸ்மீரிகள் நினைத்தால் அதைவிட அடி முட்டாள்தனம் வேறில்லை! ஜனநாயக போர்வையில் இந்திய அரசுடன் சமரச பேச்சு வார்த்தைக்கு சென்று பக்குவமாக காயடிக்கப்பட்ட JKLF அமைப்பு இதற்கு சிறந்த சான்று!

அச்சப்படுத்தத் தக்க ஒரு உயர்தர இராஜதந்திர அழுத்தம் மட்டுமே காஸ்மீர் விவகாரத்தில் இந்திய கெடுபிடியை இல்லாமல் செய்யும்! அது தேசிய எல்லைகளை கொண்ட முஸ்லீம் தேசங்களால் முடியவே முடியாதது! மாறாக முன்னறிவிக்கப்பட்ட கிலாபா சாம்ராஜியத்தால் மாத்திரமே அது சாத்தியமாகும்! அதுவரை பாலஸ்தீனத்துக்கு எது தீர்வோ அதுவே காஸ்மீரிகளுக்கும் தீர்வாகும்! வீதிகளில் கற்களும் ரிகர் அழுத்த விரலும் வலுவோடு இருந்தால் அல்ஹம்துலில்லாஹ் இந்திய பாசிசப் படைகள் காஸ்மீரில் நிம்மதியாக இருக்காது!

Abdur Raheem

Jun 22, 2016

இந்திய தளங்களைில் காலூன்ற முயலும் அமெரிக்க இராணுவம்....!! பகுதி - 02



இந்திய மூலோபாய பகுப்பாய்வாளர் சி. ராஜமோகன் இந்தியன் எக்ஸ்பிரஸில் பிரசுரித்த ஒரு கருத்துரையில், இந்து மேலாதிக்க பிஜேபி தலைமையிலான அரசாங்கம் “அமெரிக்காவுடன் வெளிப்படையாக சர்ச்சைக்குரிய உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திடும் தன்னம்பிக்கை" கொண்டிருப்பதற்காக அதை பாராட்டினார், அதேவேளையில் "அமெரிக்காவுடன் ஒரு நியாயமான ஒளிவுமறைவற்ற உடன்படிக்கையைக் 'கோட்பாட்டுரீதியில்' முடிவெடுக்க" இந்தியா "ஒரு தசாப்தத்திற்கும் அதிகமான காலம்" எடுத்ததற்காக அவர் வருத்தப்பட்டார்.

டைம்ஸ் ஆஃப் இந்தியாவைப் போலவே, மோகனும் இந்தியா தன்னைத்தானே இந்தியப் பெருங்கடல் சக்தியாக நிறுவிக் கொள்வதற்கான முக்கியத்துவம் மீது கவனத்தைக் குவித்திருந்தார்—இந்த நோக்கத்திற்கு, ஜோர்ஜ் டபிள்யு புஷ் மற்றும் ஒபாமா இருவரின் கீழ், வாஷிங்டன் மீண்டும் மீண்டும் அமெரிக்க ஆதரவை அறிவித்துள்ளது. இந்திய படைகளும் அமெரிக்க இராணுவத் தளங்களைப் பயன்படுத்துவதற்குப் பரஸ்பர உரிமைகளை வழங்கும் LEMOA உடன்படிக்கை, “இந்தியப் பெருங்கடல் மற்றும் அதற்கு அப்பாலும் புது டெல்லி அதன் பரந்து விரிந்த நலன்களைப் பாதுகாக்க வேண்டியிருக்கும் போது அத்தருணத்தில் துணைகண்டத்தின் கடல்களிலிருந்து வெகுதூரத்தில் செயல்பட வேண்டியிருந்தால், இந்திய இராணுவப் படைகளுக்கு, குறிப்பாக கடற்படைக்கு உதவியாக இருக்கும்" என்று மோகன் குறிப்பிட்டார். இந்த உடன்படிக்கை படிப்படியாக அமெரிக்கா-தலைமையிலான இராணுவ அணிக்குள் இந்தியா இணைவதில் போய் முடியுமென்று அவர் எச்சரிக்கிறார்.

பாதுகாப்பு மந்திரியாக அவரது நீண்ட பதவி காலத்தின் போது அந்தோணி இந்த தளவாட பரிவர்த்தனை ஒத்துழைப்பு உடன்படிக்கை மீது அமெரிக்காவுடன் நீண்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டவராவார், பின்னர் இறுதியில் அவற்றை புறக்கணித்தார், ஏனென்றால் அவரும் இராணுவ-பாதுகாப்பு ஸ்தாபகத்தின் முக்கிய பிரிவுகளும் அது இந்தியாவை வாஷிங்டனின் மூலோபாய நிகழ்ச்சிநிரலுக்குப் பின்னால் அணிதிரட்டுமென்ற தீர்மானித்திற்கு வந்தனர்.

அவ்விதத்தில் LEMOA இன் தாக்கங்களைக் குறித்தும், அதை பிரயோகித்து இந்தியாவை சீனாவிற்கு எதிரான அமெரிக்க-தலைமையிலான இராணுவ கூட்டணிக்குள் இழுக்கும் வாஷிங்டனின் திட்டங்கள் குறித்தும் அந்தோணிக்கு நன்கு பரிச்சயம் உண்டு. ஸ்ராலினிச சிபிஎம், ஏப்ரல் 13 இல் பிரசுரித்த ஒரு பொலிஸ்பீரோ அறிக்கையில் குறிப்பிடுகையில், “இந்திய கடற்படை மற்றும் விமானப்படை தளங்களின் அடிப்படை வசதிகளை அமெரிக்க இராணுவப் படைகள் பயன்படுத்த அனுமதிக்க ஒப்புக் கொண்டதன் மூலமாக மோடி அரசாங்கம் அமெரிக்காவுடன் இராணுவ கூட்டுறவை ஆழப்படுத்தும் அபாயகரமான படியை எடுத்துள்ளது,” என்று குறிப்பிட்டது.

“பாதுகாப்பு அமைச்சர் கூறுவதைப் போல கிடையாது, அமெரிக்க கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கான மீள்எரிபொருள் நிரப்புவதற்கும், பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு வசதிகளுக்கும் இந்திய மண்ணில் வழமையாக அமெரிக்க இராணுவப் படை சிப்பாய்களை நிலைநிறுத்த வேண்டியிருக்கும்,” என்பதையும் அது சேர்த்துக் கொண்டது. “தொலைதொடர்பு மற்றும் தகவல் பாதுகாப்பு புரிந்துணர்வு உடன்படிக்கை (CISMOA) மற்றும் அடிப்படை பரிவர்த்தனை மற்றும் கூட்டுறவு உடன்படிக்கை (BECA) ஆகிய ஏனைய இரண்டு உடன்படிக்கைகள்" பரிசீலனையில் இருப்பதாக இந்திய பாதுகாப்பு மந்திரி பாரிக்கர் குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டி, சிபிஎம் தொடர்ந்து குறிப்பிடுகையில், “இவை இந்திய ஆயுத படைகளின் கட்டளையகம் மற்றும் கட்டுப்பாட்டு உள்கட்டமைப்பை அமெரிக்க இராணுவப் படைகளுடன் ஒருங்கிணைக்கும்.

இவ்வாறு செய்வதன் மூலமாக, பிஜேபி அரசாங்கம் கோட்டைக் கடந்து செல்கிறது, இது சுதந்திரத்திற்குப் பின்னர் வேறெந்த அரசாங்கமும் செய்திராததது—இந்தியாவை முழுமையாக அமெரிக்காவின் முழு அளவிலான இராணுவக் கூட்டாளியாக மாற்றுகிறது,” என்றது. LEMOA ஐ எதிர்ப்பதில் காங்கிரஸ் கட்சியும் ஸ்ராலினிஸ்டுகளும், இந்திய உயரடுக்கினது பிரிவுகளின் கவலைகளுக்குக் குரல் கொடுக்கின்றனர். ஷிங்டனுடன் மிகவும் நெருக்கமான ஒரு மூலோபாய கூட்டணி இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் புவிசார் மூலோபாய நலன்களுக்குக் குழிபறிக்குமென இவர்கள் கருதுகிறார்கள்.

இவர்களது எதிர்ப்புக்கும் உண்மையான ஏகாதிபத்திய-எதிர்ப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. போருக்கும் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சூறையாடும் நடவடிக்கைகளுக்கும் ஆழ்ந்த எதிர்ப்பைக் கொண்டுள்ள தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற உழைப்பாளர்களிம் மீது எப்படி அரசியல் கட்டுப்பாட்டைப் பேணுவது என்பது உட்பட, முழுமையாக அவர்களது எதிர்ப்பு, இந்திய முதலாளித்துவ வர்க்க நலன்களை எவ்வாறு சிறப்பாக முன்னெடுப்பது என்பதை சுற்றியே சுழல்கிறது.

காங்கிரஸ் கட்சி மற்றும் ஸ்ராலினிசவாதிகள் இப்போது அமெரிக்காவின் "ஒரு முழுமையான இராணுவ கூட்டாளியாக" இந்தியா மாறி வருவதற்கு அவர்களின் எதிர்ப்பை தம்பட்டமடித்தாலும், அவை இரண்டுமே புது டெல்லி மற்றும் வாஷிங்டனுக்கு இடையிலான முன்பினும் விரிவான இராணுவ-பாதுகாப்பு உறவுகளை அபிவிருத்தி செய்வதில் ஒரு முன்னிலை பாத்திரம் வகித்துள்ளன. பத்தாண்டு கால காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) அரசாங்கத்தின் போது தான், இந்தியா அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஒரு “உலகளாவிய மூலோபாய பங்காண்மையை” முழுமைப்படுத்தியது, அத்துடன் புதிய இந்திய ஆயுத தளவாட ஒப்பந்தங்களுக்கு அமெரிக்கா மிக முக்கிய விற்பனையாளராக மாறியது.

ஸ்ராலினிச சிபிஎம் மற்றும் அதன் இடது முன்னணி, 2004 இல் ஐக்கிய முற்போக்கு கூட்டணியை உருவாக்க உதவியதுடன், முழுமையாக நான்காண்டுகளுக்கு அதன் நாடாளுமன்ற பெரும்பான்மைக்காக ஐ.மு.கூட்டணிக்கு ஆதரவு வழங்கியது. இதே காலகட்டத்தின் போது தான் காங்கிரஸ் இந்தோ-அமெரிக்க அணுஆயுதத்திற்கு அல்லாத அணுசக்தி உடன்படிக்கைக்குப் பேரம்பேசியது, இந்த உடன்படிக்கை அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் இந்திய முதலாளித்துவத்திற்கு இடையிலான கூட்டணி வளர்ச்சியைப் பலப்படுத்தியது.

ஐயத்திற்கிடமின்றி ஸ்ராலினிசவாதிகள் இப்போது, மோடி அரசாங்கத்திற்கு அதிகரித்து வரும் சமூக எதிர்ப்பை, இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் பாரம்பரிய கட்சியான காங்கிரஸ் கட்சிக்குப் பின்னால் திருப்பிவிடுவதன் மூலமாக அரசியல்ரீதியில் அதை ஒடுக்கும் அவர்களது முயற்சிகளை நியாயப்படுத்துவதற்காக, வாஷிங்டனுடன் இன்னும் நெருக்கமான இராணுவ-மூலோபாய உறவுகளுக்கு பிஜேபி அரசாங்கம் திரும்பியிருப்பதைப் பயன்படுத்திக் கொள்ள முயல்கிறார்கள். ஏற்கனவே ஸ்ராலினிஸ்டுகள் மேற்கு வங்க மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியுடன் ஒரு தேர்தல் கூட்டணி அமைத்துள்ளனர்.

மிக முக்கியமாக LEMOA உடன்படிக்கையை எதிர்ப்பதில் சிபிஎம் பொலிட்பீரோ அறிக்கை, இந்தியாவின் "தேசிய இறையாண்மையை" மற்றும் "மூலோபாய சுயஅதிகாரத்தை" மோடி அரசாங்கம் சமரசப்படுத்துவதாக குற்றஞ்சாட்டி, முற்றிலுமாக முதலாளித்துவ வர்க்கத்தின் தேசிய நலன்களது நிலைப்பாட்டிலிருந்து அந்த உடன்படிக்கையைக் கண்டிப்பதுடன், இந்த அடிப்படையிலேயே ஆளும் வர்க்கத்திற்குள் ஆதரவைத் திரட்ட முயல்கின்றனர். “சகல அரசியல் கட்சிகளும் மற்றும் தேசப்பற்றுமிக்க பிரஜைகளும்" “அமெரிக்காவுக்கு அடிபணிவதை எதிர்க்க" வேண்டும் என்று ஸ்ராலினிஸ்டுகள் அறிவிக்கின்றனர். காங்கிரஸ் மற்றும் ஸ்ராலினிசவாதிகளுக்கு அப்பாற்பட்டு, தமிழ்நாட்டில் உள்ள அஇஅதிமுக மற்றும் திமுக, ஆந்திர பிரதேசத்தில் உள்ள தெலுங்கு தேச கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் போன்ற மாநில அளவிலான மற்றும் இந்தியாவில் தேசியளவிலான ஏனைய சகல அரசியல் கட்சிகளும் LEMOA உடன்படிக்கையில் கையெழுத்திட்ட பிஜேபி அரசாங்கத்தின் திட்டங்களைக் குறித்து மவுனமாக உள்ளன.


இது ஆளும் வர்க்கத்தின் அனைத்து தரப்பும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் நெருக்கமான மூலோபாய உறவுகளை ஆதரிப்பதையும் மற்றும் இந்தியாவின் சொந்த வல்லரசாகும் அபிலாஷைகளை இன்னும் ஆக்ரோஷமாக வலியுறுத்துவதையும் சுட்டிக்காட்டுகிறது.

khaibarthalam.blogspot.ae

இந்திய தளங்களைில் காலூன்ற முயலும் அமெரிக்க இராணுவம்....!! பகுதி - 01

 
 
அமெரிக்க இராணுவம் மீள் எரிபொருள் நிரப்புவதற்கும், பழுது பார்ப்பதற்கும் மற்றும் நிறுத்தி வைப்பதற்கும் உரிய இடமாக இந்திய விமானத் தளங்களை மற்றும் துறைமுகங்களை வழமையாக பிரயோகிக்க அனுமதிப்பதற்கு புது டெல்லி கோட்பாட்டுரீதியில் உடன்படுகிறது என்ற கடந்த மாத அறிவிப்பை இந்திய உயரடுக்கு மனதார வரவேற்றுள்ளது.
 
 
அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் அஷ்டன் கார்ட்டரின் சமீபத்திய இந்திய விஜயத்தின் இறுதி நாளான ஏப்ரல் 12 அன்று ஒரு கூட்டு பத்திரிகையாளர் கூட்டத்தில், அவரும் அவரது இந்திய சமபலமான மனோகர் பாரிக்கரும் அறிவிக்கையில், புது டெல்லியும் மற்றும் வாஷிங்டனும் தளவாடங்கள் பரிவர்த்தனை புரிந்துணர்வு உடன்படிக்கையை (LEMOA) இறுதி செய்ய "கோட்பாட்டுரீதியில்" உடன்பட்டிருப்பதாக அறிவித்தனர்.
 
அத்தகைய ஒரு உடன்படிக்கை ஒரு தசாப்தமாக அல்லது அதற்கும் அதிகமான காலத்தில் அமெரிக்காவின் ஒரு பிரதான நோக்கமாக இருந்துள்ளது. இது சீனாவை மூலோபாயரீதியில் தனிமைப்படுத்த, சுற்றி வளைக்க மற்றும் அவசியமானால் அதற்கு எதிராக போர் தொடுக்க அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உந்துதலில் இந்தியாவை ஒரு "முன்னிலை" நாடாக ஆக்குவதை நோக்கிய ஒரு பிரதான படியாகும்.
 
மே 2014 இல் பதவிக்கு வந்ததில் இருந்து, இந்தியாவின் பாரதீய ஜனதா கட்சி (பிஜேபி) தலைமையிலான அரசாங்கம் முன்பினும் அதிகமாக முழுமையாக அமெரிக்காவின் சீன-விரோத "ஆசிய முன்னெடுப்புக்குள்" ஒருங்கிணைந்துள்ளது.
 
 "கடல் போக்குவரத்து பாதுகாப்புக்கும்" மற்றும் கிழக்கு ஆசியாவில் "சுதந்திர கடல் போக்குவரத்து" மற்றும் "விமான போக்குவரத்துக்கும்" சீனாவை ஒரு அச்சுறுத்தலாக சித்தரித்து, தென் சீனக் கடல் மீதான வாஷிங்டனின் ஆக்ரோஷமான தொனியையே பிரதம மந்திரி நரேந்திர மோடியும் அவரது அரசாங்கமும் மீண்டும் மீண்டும் கிளிப்பிள்ளையைப் போல கூறி வருகின்றனர். மோடி அரசாங்கம் அமெரிக்காவுடன் மற்றும் ஆசிய-பசிபிக், ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவில் அதன் பிரதான கூட்டாளிகளுடனான இருதரப்பு மற்றும் முத்தரப்பு இராணுவ பாதுகாப்பு உறவுகளையும் அதிகரித்துள்ளது. 
 
 இதில் வருடாந்தர இந்தோ-பசிபிக் கடற்படை பயிற்சியில் (மலபார் பயிற்சி) ஜப்பானை ஒரு பங்காளியாக ஆக்கியமை, மற்றும் இந்தோ-பசிபிக் "கடல் போக்குவரத்து பாதுகாப்பு பேச்சுவார்த்தையைத்" தொடங்கியமை ஆகியவையும் உள்ளடங்கும். இந்தியாவின் கிழக்கை நோக்கிய நடவடிக்கை (Act East) கொள்கையை (அதாவது தென்கிழக்கு ஆசியாவுடன் பொருளாதார மற்றும் இராணுவ-பாதுகாப்பு உறவுகளை அபிவிருத்தி செய்வதற்கான அதன் உந்துதலை) அமெரிக்காவின் "முன்னெடுப்பு" அல்லது "மீள்சமன்படுத்தலுடன்" ஒருங்கிணைக்கவும் மற்றும் இராணுவ தளவாட அமைப்புமுறைகளைக் கூட்டாக உற்பத்தி செய்வது மற்றும் கூட்டாக அபிவிருத்தி செய்வதற்கான வாஷிங்டனின் முன்வரலையும் பிஜேபி அரசாங்கம் ஆர்வத்துடன் ஏற்றுக் கொண்டுள்ளது.
 
இந்தியாவின் பெருநிறுவன ஊடகங்கள் மற்றும் எண்ணற்ற இராணுவ-மூலோபாய பகுப்பாய்வாளர்கள் அமெரிக்காவுடன் LEMOA உடன்படிக்கையை இறுதி செய்வதென்ற மோடி அரசாங்கத்தின் தீர்மானத்தைப் பாராட்டியுள்ளனர். அவர்கள், அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான ஒரு விரிவாக்கப்பட்ட இராணுவ-மூலோபாய பங்காண்மையானது பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு எதிராக இந்தியாவின் கரங்களைப் பலப்படுத்தும் என்றும் தெற்காசியா, இந்திய பெருங்கடல் மற்றும் அதற்கு அப்பாலும் அதன் வல்லரசாகும் அபிலாஷைகளைப் புது டெல்லி எட்டுவதற்கு உதவும் என்றும் வாதிடுகிறார்கள். அவர்கள் கூறியுள்ள ஒருசில ஆட்சேபணைகள், மத்தியக் கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் சட்டவிரோத போர்கள் நடத்துவதில் சர்வதேச சட்டத்தை அவமதிக்கும் அமெரிக்காவின் பொறுப்பற்ற நடவடிக்கைகளையோ அல்லது அணுஆயுத ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிரான அதன் பொறுப்பற்ற மூலோபாய நடவடிக்கைகளுடனோ சம்பந்தப்பட்டதில்லை.
 
 
அதற்கு மாறாக அவர்களது கவலை எல்லாம், தசாப்தகாலமாக பாகிஸ்தான் இராணுவத்துடனான அமெரிக்காவின் பங்காண்மையின் மீதுள்ளது, பாகிஸ்தான் விடயத்தில் உண்மையில் வாஷிங்டன் இந்தியாவின் "கரங்களைச் சுதந்திரமாக விடாது" என்பதற்காக அவர்கள் சீறுகிறார்கள். டைம்ஸ் ஆஃப் இந்தியா ஏப்ரல் 14 தலையங்கத்தில், “மூலோபாய மற்றும் இராணுவ விவகாரங்களில் அமெரிக்காவுடன் இன்னும் நெருக்கமாக ஈடுபடுவதற்கும் மற்றும் வேகத்தை அதிகரிப்பதற்கும் சரியாக முடிவெடுத்ததற்காக" மோடி அரசாங்கத்தைப் பாராட்டியது. “சமநிலைப்படுத்தும் நடவடிக்கை: அமெரிக்கா உடனான தளவாடங்களின் உடன்படிக்கை இந்தியாவின் மூலோபாய சுயஅதிகாரத்தை முடமாக்குவதைக் காட்டிலும் விரிவாக்குகிறது" என்று தலைப்பிடப்பட்ட அந்த தலையங்கம் ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் விமர்சனங்களுக்கு ஒரு தெளிவான மறுமொழியாக இருந்தது. மிக முக்கியமாக, தளிர்விட்டுவரும் இந்தோ-அமெரிக்க இராணுவ-மூலோபாய கூட்டணியின் உண்மையான இலக்காக சீனாவை அடையாளம் காண்பதில் டைம்ஸ் மிகவும் ஒளிவுமறைவின்றி இருந்தது.
 
அமெரிக்காவுடனான நெருக்கமான பங்காண்மையானது, "சீனா இந்திய பெருங்கடலில் ஒரு கடல்போக்குவரத்து சக்தியாக வளர்வதற்கு ஏற்கனவே முயற்சித்து வருகின்ற நேரத்தில், இந்தியாவிற்குத் தவிர்க்கவியலாத நிர்பந்தமாகும்" என்றது வாதிட்டது. “சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத்தில் 65 சதவீதம் இந்திய பெருங்கடல் வழியாக கடந்து செல்கின்றன. இப்பகுதியில், முக்கியமாக மலாக்கா ஜலசந்தியில், இந்தியா கடல் போக்குவரத்து மேலாதிக்கத்தைப் பேணுவது மத்திய காலத்திற்கு இந்தியாவின் மூலோபாய சுயஅதிகாரத்தைப் பேணுவதற்கு முக்கியமாகும்,” என்றது தொடர்ந்து குறிப்பிட்டது.
 
சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத்திற்கு இந்திய பெருங்கடல் மற்றும் மலாக்கா ஜலசந்தி முக்கியமானது என்ற குறிப்பானது, சீனாவுடனான ஒரு போர் நடவடிக்கையில் அல்லது போர் நெருக்கடி சமயத்தில் மலாக்கா ஜலசந்தி போன்ற முக்கிய இந்திய பெருங்கடலின் திணறடிக்கும் முனைகளைக் கைப்பற்றுவதன் மூலமாக சீனா மீது ஒரு பொருளாதார முற்றுகையைத் திணிப்பதற்கான வாஷிங்டனின் திட்டங்களுடன், இந்திய உயரடுக்கு, முழுமையாக இந்திய மக்களின் முதுகுக்குப் பின்னால், எந்தளவிற்கு அணி சேர்ந்துள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது.
 
 
khaibarthalam.blogspot.ae

Mar 21, 2016

நவீன வீட்டு மின்னனு உபகரணங்களை வேவு பார்ப்பதற்காக உபயோகிப்படுத்துவோம்!!!!

செய்தி பார்வை 14.02.16


தலைப்பு செய்திகள்:

நவீன வீட்டு மின்னனு உபகரணங்களை வேவு பார்ப்பதற்காக உபயோகப்படுத்துவோம் என்பதை அரசு இப்போது ஒப்புக்கொண்டுள்ளது.

ரஷ்யா சிரியாவில் உலக யுத்தம் நடைபெறுவதற்கான சூழ்நிலைகளை உண்டாக்கி வருகிறது

8 எஃப்-16 ரக விமானங்களை பாகிஸ்தானுக்கு விற்பனை செய்யப்போவதாக அரசவை  கூறியுள்ளது.


நவீன வீட்டு மின்னனு உபகரணங்களை வேவு பார்ப்பதற்காக உபயோகிப்படுத்துவோம் என்பதை அரசு இப்போது ஒப்புக்கொண்டுள்ளது.

தொழில்நுட்ப நிறுவனங்களால் மக்கள் அனுப்பும் செய்திகளை மேற்கொள்ளப்பட்டு வரும் குறியீட்டுச் சொற்களால் மறைப்பதின்(encryption) உபயோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் காரணத்தால் அமெரிக்க புலனாய்வு துறை  தனது கண்காணிக்கும் திறமையை இன்னும் இழந்துவிடவில்லை என்பதற்கான ஆதாரம் உங்களுக்கு வேண்டுமானால், தேசிய புலனாய்வு இயக்குனர், ஜேம்ஸ் கிளாப்பர் செவ்வாய் கிழமை அன்று அளித்த வாக்குமூலத்தை விட வேறு எதுவும் தேவையில்லை. ஒன்றுக்கு ஒன்று பிணையப்பட்டு செயல்படுத்த போகும் செயல்கள்  குறித்து கிளாப்பர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார் வெப்பநிலை காப்பான்(thermostats), புகைப்பட கருவி மற்றும் இதர சாதனங்கள் அதிகமாக இப்போது இனையத்துடன் பினையப்பட்டுள்ளது – இது புலனாய்வு நிறுவனங்களுக்கு தாங்கள் குறி வைத்திருக்கும் குறிப்பாக அனேகமாக பொது மக்களை வேவு பார்ப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த உபகரணங்களை வாங்கும் பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் இது பற்றி எதுவும் அறியாமல் இருக்கின்றார்கள் என்பது தான் மிகுவும் ஆபாயகரமானதாக இருக்கின்றது. “வரும் காலங்களில், புலனாய்வு துறை இதை (இணையதள விஷயங்களை) அடையாளத்திற்காகவும், வேவு பார்ப்பதற்காகவும், கண்காணிப்பதற்காகவும், இருப்பிடத்தை அறிந்து கொள்வதற்காகவும் அல்லது தொடர்புகளுடன் இணைப்பை ஏற்படுத்தி கொள்வதற்காகவும் மற்றும் அவர்களக்காக வேலை செய்யக்கூடியவர்ளை தேர்ந்தெடுப்பதற்காகவும் அல்லது பயன்படுத்துபவரின் தகவல்களை அறிந்து கொள்வதற்காகவும் உபயோப்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது.” என கிளாப்பர் அரசவையில் “அமெரிக்கவிற்கு எதிரான அச்சுறத்தல்களின் ஆய்வு”(assessment of threats) எனும் வருடாந்திர ஆய்வின் ஒரு பகுதியாக இதை அறிவித்தார். கிளாப்பர் உண்மையில் கூறுவது கடந்த வாரம் ஹார்வர்டின் பெர்கமான் சென்டர் வெளியிட்ட ஒரு மாபெரும் கருத்துக்கணிப்பை ஒத்துப்போவதாகவே உள்ளது. இது எஃப்.பி.ஐ யின் சமீபத்திய கோரிக்கையான நாங்கள் ” இருட்டில் இருக்கிறோம்” – குறியாட்டுச்சொற்களை மாற்றி அமைப்பதன் காரணமாக  சந்தேகத்திற்குரியவர்களை வேவு பார்க்கும் திறனை இழந்து வருகிறோம் – என்பது அதிகமாக ஊதி பெரிதாக்கப்பட்ட விஷயமாகவே இருக்கின்றது, குறிப்பாக ஏனெனில் விசாரணை நிறுவனங்களுக்கு வேவு பார்ப்பதற்கு பல தரப்பட்ட வழிகள் இருக்கின்றன. இது பல புலனாய்வு அறிஞர்களிடமிருந்து கருத்தை எதிரொலிக்க செய்திருக்கின்றது,  இவர்கள் தெளிவாக ஒரு விஷயத்தை எதிரொலிக்கின்றனர், அதாவது “இருட்டில் இருக்கின்றோம்” என்பதை விட நாம் இப்போது “உளவு பார்ப்பதின் பொற்காலத்தில் இருக்கின்றோம்”. தனியுரிமைக்காக வாதாடுபவர்கள் இணையதளத்தை அரசு தனக்கு சாதமாக பயன்படுத்துவதற்கு எந்த அளவு ஆற்றல் உடையது என்பதை பல வருடங்களாகவே அறிந்திருக்கின்றனர். சட்ட நிறுவனங்களும் இதை அறிந்து வைத்திருக்கின்றன, அவை இணையதள நிறுவனுங்களுக்கு விவரங்களை கேட்டு வரும் நீதிமன்ற ஆணைகளுக்கு இணங்க தாங்கள் கடத்தும் விவரங்கள் பொதுமக்களுக்கு தெரியாத அளவில் நடைபெற்று கொண்டிருக்கிறது. காவல்துறை கூகுல் நிறுவனத்தால் நடத்தப்படும் டிராப்கேம் (Dropcam) நிறுவனத்திடம் குழந்தைகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க பொதுமக்களின் வீடுகளில் உள்ள நிகழ்பதிவு கருவிகளில் உள்ள காணொளி பதிவுகளை கேட்டு வருகிறது. வேவு பார்த்து தகவல்களை சேகரிக்கும் நிறுவனமான ஃபிட்பிட்(Fitbit)டிடமிருந்து தகவல்களை பிரதிவாதிகளுக்கு எதிராக பலமுறை உபயோக படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த தனியுரிமைக்கான மீறல்களுக்கான சாத்தியக்கூறுகள் தற்போது பல கோடி கணக்கான வீடுகளை சென்று அடைந்துள்ளது: சாம்சங் நிறுவனம் கடந்த வருடம் வீடுகளில் நடைபெறும் உறையாடல்கள் அனைத்தையும் கேட்கும் தன்மை கொண்ட தொலைக்காட்சி பெட்டி ஒன்றை அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவித்தது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது, அது தனது பொருளின் அச்சு பிரதியில் பொதுமக்களை தங்களது அதிமுக்கிய விஷயங்களை இத்தொலைக்காட்சி பெட்டி முன்பு  வைத்து பேச வேண்டாம் என எச்சரித்துள்ளது. {Source: The Guardian}


மேற்கத்திய அரசாங்கங்கள் தங்களது நாகரிக்கதரதின் சரிவு ஏற்பட இருப்பதை நன்றாக அறிந்து வைத்திருக்கின்ற காரணத்தால் அதற்கு தனது சொந்த மக்களை வேவு பார்க்கும் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. இது மக்களின் நலனுக்கு எதிராக அவர்களின் நலன்களை பறித்து தங்களது சொந்த நலன்களை பாதுகாப்பதற்காக பெரும் பணக்காரர்களால் கடத்தப்பட்ட தாராளமய ஜனநாயக கொள்கைக்கு எதிராக கிளர்ச்சி செய்வதை தடுக்க எடுக்கப்பட்ட ஒரு நிர்பந்தமான முயற்சி தான் இது.

 
ரஷ்யா சிரியாவில் உலக யுத்தம் நடைபெறுவதற்கான சூழ்நிலைகளை உண்டாக்கி வருகிறது 


ரஷ்ய பிரதமர் டிமிட்ரி மெட்வடேவ்  அனைத்து சக்திகளும்  சிரியாவில் “இன்னொரு உலக யுத்தத்தை ஏற்படுத்துவதற்கு” பதிலாக ஒன்றாக அமர்ந்து பேச்சுவார்ச்சை நடத்தி நடைபெற்று வரும் போரை நிறுத்துவதற்கான வழிவகைகளை ஏற்படுத்த வேண்டும் என கூறினார். “அமெரிக்கர்களும் நமது அரபு கூட்டாளிகளும் அங்கு  நிரந்தரமான போர் நடைபெறுவதை விரும்புகின்றனரா என நன்கு சிந்திக்க வேண்டும்”. என்று ஜெர்மனியின் ஹேன்டுல்ஸ்பிளாட் (Handlesblatt) எனும் செய்தித்தாளுக்கு பேட்டியளிக்கையில் கூறினார். இவ்வகையான போரை உடனடியாக வெல்வது என்பது முடியாத காரியமாகும், குறிப்பாக எல்லோரும் எல்லோருக்கும் எதிராக சண்டையிட்டு கொண்டிருக்கும் அரபு உலகில் இது அறவே முடியாத காரியமாகும்.” என கூறினார். இன்னொரு புதிய உலக யுத்தத்தை கட்டவிழ்த்து விடுவதற்கு பதிலாக அனைத்து தரப்பினரையும் கட்டாயமாக பேச்சுவார்த்தை மேஜையில் உட்கார வைக்க வேண்டும்” என கூறினார். அமெரிக்காவும் ரஷ்யாவும் பிரச்சினையில் ஈடுபட்டிருக்கும் அனைத்து தரப்பினரிடமும் போர் திறுத்தத்தை கொண்டு வருவதற்காக அழுத்தம் தர வேண்டும். ரஷ்யா அலெப்போ நகரை சுற்றியுள்ள பகுதிகளில் பஷார் அல்-அசாதிற்கு ஆதரவான படைகள் முன்னேற்றம் அடைவதற்கு உதவும் விதமாக குண்டுகளை வீசி வருகிறது. அமெரிக்கா மற்றும் இதர மேற்கத்திய ஆகாயப்படைகளும் சிரியாவின் வட பகுதிகளில் வான் வழி தாக்குதல்களில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றன. [Source: Al Arabiyya]

மெட்வடேவ் நிச்சயமாக தவறாக புரிந்து வைத்துள்ளார்! சிரியாவில் மூன்றாம் உலக யுத்தம் சில வருடங்களுக்கு முன்னரே ஐ. நா பாதுகாப்பு அமைப்பின் ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் அசாதின் பிராந்திய அண்டை நாடுகள் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை கொண்ட எதிர்ப்பாளர்கள் மீது மறைமுக மற்றும் நேரடி ஆதரவு அளித்து தாக்குதல்கள் மேற்கொண்ட போதே தொடங்கிவிட்டது. இந்த யுத்தத்தில் பங்கு பெறும் இரு தரப்புகள் தெளிவாகிவிட்டது: ஒன்று மதசார்பற்ற அடிப்படைவாதவாதிகள் மற்றும் அதற்கு எதிராக இஸ்லாம்.


பாகிஸ்தானுக்கு 8 எஃப்-16 ரக போர் விமானங்களை விற்பனை செய்ய இருக்கிறோம், என அரசவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளியன்று ஒபாமா நிர்வாகம் பாகிஸ்தானுக்கு 8 எஃப்-16 ரக போர் விமானங்களை விற்பனை செய்ய இருப்பதாக அரசவைக்கு தெரிவித்தது. இந்த முன்மொழிதல் ஒப்பந்தம் முப்பது நாள் அறிவிப்பு காலத்தில் இருக்கும் அதன் பின்னர் இந்த ஒப்பந்தம் உறுதி செய்யப்படும். இந்த வாரத்திற்கு முன்னர், அமெரிக்க அரசுத்துறை அரசவைக்கு அது பாகிஸ்தானின் தாக்குதல் திறமையை மேம்படுத்த போவதாக அறிவித்திருந்தது, எஃப்-16 ரக போர் விமானம் சம்மந்தமான ஒப்பந்தங்கள் திறைமறைவாக நடைபெற்றிருக்க கூடும் என்பதற்கான சான்றாகும். மேலும் வியாழனன்று, அரசுத்துறை செய்தி தொடர்பாளர், மார்க் டோனர், ஒரு செய்தி குறிப்பில் அமெரிக்காவின் பாகிஸ்தானுக்கான ஆயுத விற்பனை என்பது தீவிரவாத்த்திற்கு எதிரகவும் மற்றும் அமெரிக்க வெறியுறவு கொள்கையின் நலன்களை பாதுகாப்பதற்கு பெரிதும் உதவும் என கூறினார். இந்த கருத்துக்களை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எஃப்-16 போர் விமானங்களை விற்பனை செய்யும் திட்டத்தை கைவிட ஒபாமா நிர்வாகத்திற்கு கோரிக்கை விடும் வண்ணமாக சில அமெரிக்க சட்ட வல்லுனர்கள் சில செயல்களையும் அமெரிக்க ஊடகங்கள் அதற்கான பரப்புறையை மோற்கொண்டனர். அரசவை இந்த முன்மொழியப்பட்ட விற்பனையை தாமதித்தாலும், நிர்வாகம் அமெரிக்காவின் அதிமுக்கிய விவகாரங்களின் நலனுக்காகவே என்று வலியுறுத்தி இந்த ஒப்பந்தத்தை எப்படியாவது நிறைவேற்றும் எண்ணம் கொண்டுள்ளது. அரசு நிர்வாக செய்தி வெளியீட்டின் போது ஒரு இந்திய ஊடகவியலாளர் செய்தி தொடர்பாளர் மார்க் டோனரிடம் ஒருவேளை குடியரசு கட்சியை சார்ந்த பாப் கார்க்கர் அமெரிக்க வெளயுறவு அதிகாரி ஜான் கெர்ரிக்கு செவ்வாய் அன்று பாகிஸ்தானுக்கு செய்ய உள்ள இந்த விற்பனையை நிறுத்தக்கூறி கடிதம் எழுதினால் என்ன செய்வீர்கள் என கேட்டதற்கு. “இது கொள்கை சம்பந்தமாக இருப்பதால் நடக்கவிருக்கும் ஆயுத விற்பனை  சம்பந்தமாகவோ அல்லது இடமாற்றம் செய்வது பற்றியோ அல்லது கேபிடல் ஹில்லுடன் நாங்கள் நடத்திய முதல் ஆலோசனை பற்றியோ எந்தவித அதிகாரப்பூர்வ அரசவை அறிவிப்பு வெளி வருவதற்கு முன் நாங்கள் எந்தவிதமான கருத்தும் கூற முடியாது,” என டோனர் பதிலளித்தார். ஆனால் அவர் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு உதவி அளித்து வருவது பற்றிய விரிவான விஷயங்களுக்கு பதிலளித்து பேசுகையில் இவ்வாறு கூறினார்: “அமெரிக்க வெளியுறவு கொள்கை நலன்களுக்காக நாங்கள் அரசவையுடன் இணைந்து எங்களின் கூட்டாளிகள் மற்றும் கூட்டணி நாடுகளுக்கு  பாதுகாப்பில் உதவும் வண்ணமாக அவர்களின் தாக்குதல் திறனை அதிகரித்து  பாதுகாப்பு பிரச்சினைகளை எதிர்கொள்வோம் என நம்புகிறோம்.”

இந்த விஷயத்தில் பெரும்பாலான பாகிஸ்தானியர்களின் கொழுந்து விட்டு எறியும் கேள்வி என்னவென்றால் பாகிஸ்தான் எஃப்-16ஐ பெறுமா என்பதல்ல ஆனால் அது எவ்வாறு உபயோகப்படுத்தப்படும் என்று தான். ஒரு வேளை பாகிஸ்தான் இந்த எஃப-16 கள பாகிஸ்தானின் எல்லை கட்டுப்பாட்டை மதிப்பிழக்க செய்யும் அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கு எதிராக உபயோக படுத்த போகிறதா அல்லது பழங்குடி பகுதியில் உள்ள முஸ்லிம்களின் உதிரப்போக்கை இன்னும் அதிகமான அளவில் ஏற்படுத்துவதற்காக உபயோக படுத்த போகிறதா?

Oct 28, 2015

பாகிஸ்தான், ஆப்கன் நிலநடுக்க பலி 300 ஆக அதிகரிப்பு

சேதமடைந்த தங்களது வீட்டை சுற்றிப் பார்க்கும் சிறுவர்கள். | படம்: ஏஎப்பி.  

சேதமடைந்த தங்களது வீட்டை சுற்றிப் பார்க்கும் சிறுவர்கள். | படம்: ஏஎப்பி.
 
வடக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் பாதிப்பால் ஆப்கன் மற்றும் பாகிஸ்தானில் பலியானோர் எண்ணிக்கை 300-ஐ தாண்டியுள்ளது.
 
ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைப்பகுதியில் திங்கள்கிழமை பிற்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.5 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம், இந்தியாவிலும் உணரப்பட்டது. டெல்லி, ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட பல பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது.
 
இதனால் பாகிஸ்தானின் ஸ்வாட், பெஷாவர், கசூர், கல்லார் கஹார், பைஜார் பகுதிகளில் கடுமையான சேதம் ஏற்பட்டது.
 
நிலநடுக்கத்துக்கு ஆப்கானிஸ்தானில் 90-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
 
இதேபோல பாகிஸ்தானின் லாகூர், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, பெஷாவர் உள்ளிட்ட பல நகரங்களிலும் 237 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
பாகிஸ்தான் தரப்பில் பலி மற்றும் காயமடைந்தவர்களின் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 
The Hindu

Oct 26, 2015

இந்திய – இஸ்ரேல் உறவு – ஒரு வரலாற்றுப் பார்வை

இந்தியா விடுதலைப் பெற்ற நேரத்தில் அரபு நாடுகளின் மையப் பகுதியில் பல்வேறு அரசியல் காரணங்களுக்காக பாலஸ்தீன மண்ணில் பலவந்தமாக திணிக்கப்பட்ட நாடு தான் இஸ்ரேல். சர்வதேச எதிர்ப்புகளையும் மீறி வல்லரசுகளின் இந்த அடாவடித்தனத்தை அந்த நேரத்தில் புதிதாக சுதந்திரக் காற்றை சுவாசித்த இந்தியா தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்தது. பல்லாயிரம் ஆண்டுகளாக அரபு நாடுகளோடு பாரம்பரிய தொடர்பு வைத்துள்ள இந்தியா பாலஸ்தீன மக்களுக்கு சொந்தமான நிலத்தை அபகரித்து யூதர்களுக்கென்று மத ரீதியாக உருவாக்கப்படுவதை கொள்கை ரீதியாக எதிர்த்தது.
 
தேசத் தந்தை காந்தியடிகள் யூதர்களோடு நெருங்கிய நட்பு வைத்திருந்தாலும் மத அடிப்படையில் ஒரு நாடு உருவாவதை கடுமையாக எதிர்த்தார். காரணம் அந்த நேரத்தில் மத அடிப்படையில் பாகிஸ்தான் உருவானது. அது மட்டுமல்லாமல் வேறொரு வேறொரு வலுவான காரணமும் இஸ்ரேல் உருவாக்கத்தை எதிர்ப்பதற்கு இந்தியாவிற்கு இருந்தது. இந்திய நாடு பிரிவினையின் போது முறையாக தீர்க்கப்படாமல் விடப்பட்ட கஷ்மீர் பிரச்சினை மிகப் பெரிய அளவில் வெடித்து சுதந்திரம் பெற்ற உடனேயே இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிக் கொண்டன. இதனால் கஷ்மீர் பிரச்சினையை ஐ.நா. சபைக்கு இந்தியா எடுத்துச் சென்றது.
 
கஷ்மீரில் பெரும்பான்மையான மக்கள் முஸ்லிம்கள் என்பதால், இதில் பாகிஸ்தான் சம்பந்தப்பட்டிருப்பதால், இஸ்ரேல் உருவாக்கத்திற்கு இந்தியா ஆதரவு தெரிவித்தால் அரபு நாடுகள் அனைத்தும் கஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு தரும் நிலை ஏற்பட்டாலும் ஏற்படலாம் என்று இந்திய அரசியல் வல்லுனர்கள் கருதியதால் இஸ்ரேல் உருவாக்கத்தை தொடக்கத்தில் இந்தியா எதிர்த்தது. ஆனால் தனிப்பட்ட முறையில் இஸ்ரேல் உருவாவதை இந்திய அரசியல் தலைவர்கள் பலர் மறைமுகமாக ஆதரவு தெரிவித்தனர். குறிப்பாக சங்பரிவார் அமைப்புகள், அந்த அமைப்போடு சிந்தாந்த ரீதியாக தொடர்புடைய காங்கிரஸ் தலைவர்கள் என்று பலரும் ஆதரித்தனர் வரவேற்றனர். இதன் வெளிப்பாடாகத்தான் 1950ல் இஸ்ரேலை ஒரு நாடாக இந்தியா அங்கீகரித்து பம்பாயில் இஸ்ரேல் நாட்டின் துணை துதரகம் அமைத்திட ஒப்புதல் அளித்தது.
 
ஜவஹர்லால் நேரு அவர்கள் 1954ல் வெளியிட்ட ஒரு அறிக்கையில்; “இஸ்ரேலின் உருவாக்கம் என்பது ஒரு சர்வதேச விதிமீறல் என்ற சட்ட முன்வடிவை ஒரு கட்சி என்ற முறையில் ஆதரிக்கமாட்டோம்” என்று பகிரங்கமாக கூறினார். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட கருத்து முரண்பாடால் இந்திய வெளியுறவுக்குறித்த தெளிவான கொள்கை வடிவமைக்கப்பட வேண்டும் என்ற வாதம் எழுந்தது. அதன் பிறகு உருவானது தான் முதலாளித்தும் வல்லரசு சாராத சுதந்திரமான அணி சேராக் கொள்கை. கட்சியிலும் நாட்டிலும் காங்கிரஸுக்கு ஏற்பட்ட பல்வேறு நெருக்கடியின் காரணமாக பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களின் உரிமைப் போராட்டதிற்கு இந்தியா பகிரங்க ஆதரவு தெரிவித்து வந்தாலும் இஸ்ரேலிய ஆட்சியாளர்களுடன் மறைமுகமான தொடர்புகளை வைத்திருந்தனர்.
 
இந்துத்துவா சிந்தனை கொண்டவர்கள் பகிரங்கமாகவே தொடர்பு வைத்து வந்தனர் என்பதும் வெளிப்படையாக தெரிந்த செய்தி தான். வல்லரசுகளுக்கு மத்தியில் பனிப்போர் நடைபெற்ற காலத்தில் சோவியத் ஆதரவு நிலையை எடுத்திருந்த இந்தியா தனது அண்டை நாடுளால் ஏற்பட்ட ஆபத்துகளிலிருந்து தற்காத்து கொள்ள சோவியத் ரஷ்யாவிட மிருந்து தனது இராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களை பெற்று வந்தது. இன்றைக்கும் இந்திய இராணுவத்தின் முப்படைகளிலும் ஏற்றக்குறைய 70 விழுக்காடு ஆயுதங்கள் சோவியத் ரஷ்யா தயாரிப்பு தான்.
 
சோவியத் யூனியன் வீழ்ச்சிக்கு பிறகு அந்நாட்டில் நவீன ஆயுதங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஒரு தேக்க நிலை ஏற்பட்டது. இந்த நேரத்தில் இந்தியாவின் அண்டை நாடுகளுடனான உறவுகள் சீர் கெட்டு போர் அபாயம் அதிகரித்தது. சோவியத் ரஷ்யா எந்த அளவிற்கு இந்தியாவிற்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்ததோ அதற்கு சற்றும் குறையாமல் பாகிஸ்தானுக்கும் சற்று கூடுதலாக சீனாவிற்கும் வழங்கியது. இது இந்தியாவிற்கு மிகப் பெரிய கவலையை ஏற்படுத்தியது. சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சியும் அதன் ஆயுதங்களுக்கு மாற்றாகவும் அதைவிட நவீன ஆயுதங்களை உற்பத்தி செய்யும் நாட்டின் உறவு இந்தியாவிற்கு தேவைப்பட்டது.
 
சோவியத் யூனியனோடு இருந்த நெருங்கிய நட்பின் காரணமாக அமெரிக்க உறவு பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மேற்கத்திய நாடுகளும் இந்தியாவிற்கு நவீன ஆயுதங்கள் கொடுப்பதற்குத் தயங்கிய நிலையில் அமெரிக்காவின் தயவால் பல நவீன ஆயுதங்களை வைத்துள்ள இஸ்ரேலின் பக்கம் இந்தியாவின் கவனம் திரும்பியது. ஏற்கனவே இஸ்ரேல் அரசுடன் இரகசிய உறவு வைத்திருந்த இந்தியாவிற்கு இது ஒரு சரியான வாய்ப்பாக அமைந்தது.
 
இஸ்ரேலும் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் தயவு கிடைப்பதின் மூலம் சர்வதேச அங்கீகாரத்தைப் பெறுவதோடு அரபு நாடுகளுடனான இந்திய உறவில் விரிசல் ஏற்படுத்த முடியும் என்று திட்டமிட்டது. சோவியத் யூனியனின் வீழ்ச்சி, இந்தியாவிற்கு பெருகி வரும் ஆபத்துகள் என அந்தச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டது இஸ்ரேல்.
 
அதன்பிறகு இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் ஏற்பட்ட பல்வேறு ஒப்பந்தங்களின் காரணமாக இன்றைய நிலையில் இந்தியாவிற்கு இராணுவ தளவாடங்கள் விற்பதில் உலகின் முதன்மை நாடாக உருவெடுத்துள்ளது. இதை துறை வாரியகப் பார்ப்போம்.
 
இரகசிய தொடர்பு:
 
1969-ல் “ரா” என்ற உளவு அமைப்பை தொடங்கிய அன்றைய பிரதமர் இந்திரா காந்தி ராமேஷ் வர் நாத் காவோ என்ற அதிகாரியை அதற்கு தலைவராக நியமித்தார். இஸ்ரேலின் உளவு அமைப்பான மொஸாத் உடன் இரகசிய உறவுகளை உருவாக்கிட காவோ விற்கு பிரதமர் இந்திரா உத்திரவிட்டார். “ரா”-மொஸாத் கூட்டணி சீனா, பாகிஸ்தான் வட கொரியா ஆகிய நாடுகளின் இராணுவ நடவடிக்கைகளை கண்காணித்து வந்தது. இரகசியமாக தொடர்ந்த இந்த “ரா” – மொஸாத் உறவு 1977ல் மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த நேரத்தில் பகிரங்கமாக வெளிப்பட்டது.
 
பாகிஸ்தான் அரசு கட்டா என்ற இடத்தில் பிரான்ஸ் நாட்டு உதவியுடன் அணு ஆயுதம் தயாரிக்கும் திட்டத்தை இரகசியமாக நிறைவேற்றி வந்தது. இதை அறிந்த அன்றைய அமெரிக்க ஜிம்மி கார்டர் அரசு பிரான்ஸ் உதவியை தடுத்துவிட்டது. ஆனாலும் பாகிஸ்தான் அரசு இதை இரகசியமாக வைத்திருந்தது. இந்தச் செய்தியை மோப்பம் பிடித்த மொஸாத் “ரா” காதில் போட அது நேராக மொரார்ஜி தேசாய் கவனத்திற்கு வர அவர் நேரிடையாக பாகிஸ்தான் அதிபர் ஜியா-வுல் ஹக்கிடம் “நீங்கள் கட்டா நகரில் என்ன செய்து கொண்டிருக்கிறீகள் என்று எனக்கு தெரியும். எங்களது “ரா” அதை எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது” என்று வெளிப்படையாக தெரிவித்ததற்கு பிறகு தான் “ரா” மொஸாத் உளவு அமைப்புகளின் கள்ளக் கூட்டு வெளி உலகிற்கு தெரிந்தது. ஆனால் அதற்கு பிறகு மொஸாத்தோடு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யும் உறவு ஏற்படுத்திக் கொண்டது வேறுகதை.
 
திருப்பு முனை:
 
Organaisation of Islamic Conference (OIC) என்ற இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு 1986ல் வெளியிட்ட ஒரு அறிவிப்பு இந்திய – இஸ்ரேல் உறவுகளில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது. ஐ.நா. சபையின் அறிக்கையின் அடிப்படையில் கஷ்மீரில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களையும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளையும் கண்டித்து ளிமிசி அறிக்கை வெளியிட்டது. இந்தியா இந்த மனித உரிமை மீறல்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ளிமிசி குற்றம் சுமத்தி இந்திய அரசுக்குக் கடிதம் எழுதியது. இந்தச் செய்தி இந்திய அரசிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொண்ட இந்தியா, இது பாகிஸ்தானின் தவறான பிரச்சாரத்தின் காரணமாக எழுதப்பட்டது என்று கருத்துக் கூறியது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மத்திய கிழக்கு தொடர்பான தனது அணுகு முறையில் மாற்றத்தை கொண்டு வந்தது இந்திய அரசு.
 
துதரக தொடர்பு:
 
சோவியத் யூனியன் வீழ்ச்சிக்கு பிறகு ஏற்பட்ட சூழ்நிலை மாற்றத்தின் காரணமாக 1992 ஜனவரியில் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு இஸ்ரேலோடு முழுமையான துதரக உறவை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து அடுத்து வந்த அரசுகள் இஸ்ரேலோடு பல்வேறு துறைகளில் பல உடன்படிக்கைகளை செய்துள்ளன.
 
இஸ்ரேல் பிரதமர் வருகை:
 
1997 ஆம் ஆண்டு இஸ்ரேல் பிரதர் ஐஸர் வைஸ்மென் இந்தியா வந்தார். அரசு முறை பயணமாக இந்தியா வந்த முதல் இஸ்ரேல் பிரதமர் இவர் தான். முதன் முறையாக ஆயுத ஒப்பந்தங்கள் போடப்பட்டன. பராக் – 1 என்ற நவீன ஏவுகணை வாங்குவதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டது. பாகிஸ்தானின் கப்பலில் இருந்து பாயும் ஹார்ப்பூன் என்ற ஏவுகணையை இடை மறித்து தாக்கும் வல்லமை பெற்றது இந்த பராக் – 1 ஏவுகணை. இந்திய – இஸ்ரேலின் இந்த ஒப்பந்தத்தை கண்டு கதி கலங்கிய பாகிஸ்தான் அமெரிக்காவிடமிருந்து றி3-சிமிமி ளிக்ஷீவீஷீஸீ என்ற போர் விமானத்தையும், மேம்படுத்தப்பட்ட ஹார்ப்பூன் ஏவுகணைகள் 27 ஐயும் வாங்க ஒப்பந்தம் செய்தது. இதனைத் தொடர்ந்து அன்றைய அணு விஞ்ஞானி அப்துல் கலாம் பலமுறை இஸ்ரேலிற்கு பயணம் செய்து புதிய தொழில் நுட்பங்கள் தெரிந்து வந்து உருவாக்கப்பட்ட பிருத்வி மற்றும் அக்னி ஏவுகணைகளை இந்தியா வெற்றிகரமாக சோதனையிட்டது.
 
கடற்படை:
 
தெற்கு ஆசிய பிராந்தியத்தில் இந்திய கடற்படைக்கு மேலும் வலுவூட்டி தங்களது நாட்டின் சரக்கு போக்குவரத்து மற்றும் கடல் வழி போக்கு வரத்தின் கட்டமைப்பை உறுதிபடுத்திட இந்திய கடற்படையோடு சேர்ந்து கூட்டுப் பயிற்சியில் இஸ்ரேலிய கடற்படை சுதந்திரமாக ஈடுபட்டு வருகிறது. காரணம், மத்திய தரைக் கடல் பகுதியில் அரபு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்கம் அதிகம் இருப்பதால் அங்கே, இஸ்ரேலால் சுதந்திரமாக செயல்பட முடியலவில்லை. சமீப காலமாக இந்திய பெருங்கடலில் அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் நீர் மூழ்கி கப்பல் மூலம் ஏவுகணைச் சோதனைகளை இஸ்ரேல் நடத்தி வருகிறது.
 
விமானப் படை:
 
1997 ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் 32 ஆளில்லா உளவு விமானங்கள் வாங்கப்பட்டன. றிலீணீறீநீஷீஸீ கிணிகீமிசி என்ற அதி நவீன ராடார்கள் வாங்கப்பட்டன. இவை பாகிஸ்தான் உடனான கார்கில் போரின் போது இந்திய இராணுவத்திற்கு பெரிதும் உதவியாய் இருந்தது. ரஷ்யாவின் மிக் 32 ரக விமானங்களை மேம்படுத்துவதற்கு தேவையான தொழில் நுட்பமும் பெறப்பட்டன. இந்திய வான் எல்லையிலிருந்தே பாகிஸ்தான், மற்றும் சீனாவின் 400 கிலோ மீட்டர் து£ரத்தில் இருக்கும் இடங்களை மிக துல்லியமாக கண்காணிக்கும் அதி நவீன கிகீகிசிஷி என்ற 6போர் விமானங்களை இந்தியா இஸ்ரேலிடமிருந்து பெற்றுள்ளது.
 
உளவு சாட்டிலைட்:
 
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ISRO உடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவின் சந்திராயன் விண்கலம் ஏவுவதில் உதவி செய்வது மேலும் இஸ்ரேலின் Tec SAR என்ற உளவு சாட்டிலைட்டை இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ISRO கடந்த 2008 ஜனவரி 22 அன்று விண்ணில் ஏவியது. இஸ்ரேலில் ராக்கெட் ஏவுதளம் இருந்தாலும் இந்தியாவிலிருந்து ஏவுவது பாதுகாப்பானதும் செலவு குறைவானதுமாக கருதப்படுகிறது. 2008ல் மும்பையில் நடைபெற்ற பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இஸ்ரேலின் தொழில்நுட்ப உதவியோடு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட RISAT – 2 அதி நவீன சாட்டிலைட்டை இந்தியா ஏவியது. இந்த சாட்டிலைட்டிலிருந்து இரவு நேரத்தில் கூட அடர்ந்த மேக மூட்டம் காணப்பட்டாலும் அவற்றையும் தாண்டி மிக துல்லியமாக படமெடுக்கும் ஆற்றல் வாய்ந்தது.
 
இந்துத்துவ தொடர்பு:
 
2007ல் உலக யூத – இந்து மத தலைவர்கள் சிந்திப்பு என்ற பெயரில் யூத – பிராமணர்கள் சந்திப்பு நடைபெற்றது. 2007 பிப் மாதம் புதுதில்லியில் நடைபெற்ற இச்சந்திப்பில் இஸ்ரேலின் தலைமை ராபி யோனா எட்ஸ்கர் மற்றும் பிராமண சாமியார் தயானந்த சரஸ்வதி ஆகியோர் தலைமையில் யூதர்களும் பிராமணர்களும் சந்தித்து. யூத மதம் மற்றும் பிராமணர்களின் ஆரிய மதம் தொடர்பான கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். விடுதலை பெற்ற இந்தியாவை அதிக நாட்கள் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி, தொடக்க காலத்தில் ஜவஹர்லால் நேரு வகுத்து தந்த வெளியுறவுக் கொள்கை மற்றும் முதலாளித்துமும் சோசலிசமும் கலந்த கலப்புப் பொருளாதாரக் கொள்கை ஆகியவற்றைப் பின்பற்றி வந்தது. பின்னர் அந்த வழிமுறைகளிலிருந்து மாறி சோசலிஸ ரஷ்யா சார்பு வெளியுறவுக் கொள்கைகையும் முதலாளித்துவப் பொருளாதாரக் கொள்கையையும் பின்பற்றி வந்தது.
 
பின்னர் 1992ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்கா சார்பு வெளியுறவுக் கொள்கையையும் உலக மயம், தனியார் மயம், தாராளமயம் ஆகிய பொருளாதாரக் கொள்கையையும் கண்மூடித்தனமாகப் பின்பற்றி வருகிறது. இதனால் காங்கிரஸ் கட்சியின் கொள்கையே இந்திய அரசின் கொள்கையாகவும் மாறிப்போய் விட்டது. இந்தியாவின் துவக்ககால கொள்கை நிலைப்பாடுகளால் உலகின் பல நாடுகளிடம் பாரம்பர்யமாகக் கொண்டிருந்த தொடர்புகளை வலுப்படுத்திக் கொண்டது இந்தியா. ஆனால் பிற்காலத்தில் அந்தக் கொள்கை நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டதால் உலக நாடுகளிடம் கொண்டிருந்த பாரம்பர்யத் தொடர்புகளை இழந்தது மட்டுமல்லாமல் சில எதிர்ப்புகளையும் சம்பாதித்துக் கொண்டுவிட்டது. அந்த எதிர்ப்புகளில் தீவிரவாதமும் அடங்கும். மேலும் துவக்க காலத்தில் அமெரிக்க, ஐரோப்பாவின் வெளியுறவுக் கொள்கைகளையும் இஸ்ரேலின் உருவாக்கத்தையும் கடுமையாக விமர்சித்து வந்த இந்தியா, பிற்காலத்தில் அவற்றோடு சமரசம் செய்து கொண்டது.
 
குறிப்பாக உலக சமுதாயத்தாலும் 180 கோடி முஸ்லிம்களாலும் கடுமையாக வெறுக்கப்படுகிற பயங்கரவாத இஸ்ரேலுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளது மிகப்பெரிய வரலாற்றுப் பிழை ஆகும். நாட்டின் வளர்ச்சி என்பது நாட்டு மக்களின் சமூக வாழ்க்கையை மேம்படுத்துவது என்பதை நோக்கமாகக் கொண்டுதான் கொள்கைகளும் திட்டங்களும் வகுக்கப்பட வேண்டுமே தவிர வளர்ச்சி என்ற பெயரில் கண்மூடித்தனமாக வல்லரசுகளுடன் ஒப்பந்தங்கள் செய்து கொள்வதால் உண்மையான வளர்ச்சி ஏற்படாது. நம் நாட்டின் பாரம்பரியத்தன்மைக்கும் மரபு சார்ந்த உறவுகளுக்கும் ஒவ்வாத சிந்தனை உள்ளவர்களோடு கூட்டு சேர்வது நாட்டுக்கு நல்லதல்ல…
 
இன்றைக்கும் இந்தியர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகளை அள்ளித்தந்து அதன் மூலமாக அதிக அளவிற்கான அந்நிய செலாவணியை ஈட்டித் தருவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த அரபு நாடுகள்தான் இந்தியாவின் பொருட்களை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளாகவும் திகழ்கின்றன. அத்தகைய அரபுநாடுகளின் அதிருப்தியையும் இந்தியாவில் வாழும் 20 கோடி முஸ்லிம்களின் வெறுப்பையும்தான் இந்தியஇஸ்ரேல் உறவு வெளிப்படுத்தி உள்ளது.


நன்றி
ஹந்தக் களம்