Showing posts with label பொதுவனவை. Show all posts
Showing posts with label பொதுவனவை. Show all posts

Nov 9, 2018

ஈடிணையற்ற இறைவா!

(மூலம்: ஆயத்துல் குர்ஸி /அல் குர்ஆன்: 2:255)
அல்லாஹ்!
ஊனுருகி, உடல் குறுகி,
உயிரொடுங்கி, உளம் நடுங்கி,
வணங்கிட ஒருவன்...
அவனைத் தவிர யாருமில்லை !

உயிர்த்திருக்கும் அவன்
என்றும் நிலைத்திருப்பவன்;
உணர்வுகளில் நித்தம்
மிகைத்திருப்பவன்!

சிறு துயிலோ
மடியோ
மதியழிக்கும் மயக்கமோ;
சுணக்கமோ
சுயமிழக்கும் சோம்பலோ
அவனை அணுகா!

வானங்களில், பூமியினில்
வளி மண்டல நிரப்பிடத்தில்
விண்வெளியில், வெற்றிடத்தில்
சிந்தைக்கு எட்டாத
அண்ட சராசரத்தில்
உள்ளவை யாவும்
உரியன அவனுக்கே!

அவன் ...
ஆட்சி அதிகாரத்தில்
அகிலம் காக்கும் ஆளுமையில்
படைப்பதில், பரிபாலிப்பதில்
விதிப்பதில், கொடுப்பதில்
காப்பதில், கற்பிப்பதில்
அவன் அனுமதியின்றி
பரிந்துரை செய்வோர்
பாருலகில், வேறுலகில் யாருளரோ?

ஒவ்வோர் உயிரும்
உருவாகு முன்னரும்
உயிர் வாழ்ந்த பின்னரும்
இரண்டின்
இடைப்பட்ட
எல்லா அசைவிலும்
யாவையுமறிந்த
ஞானமிக்கவன்

கணித்தறிந்துவிட முடியாத
அவன் தன்
அளப்பரிய ஞானத்திலிருந்து
அணுவளவேனும் யாரும்
அவன் நாட்டமின்றி
அறிந்திடல் இயலாது!

எப்பரிமாணம் கொண்டும்
எடுத்தியம்பிட இயலாத
எல்லைகளுள் அடங்காத
இறையாசனம்
வானங்களுக்கும் பூமிக்குமாய்
வியாபித்திருப்பதாகும்!

வானங்களும் பூமியும்
அவ்விரண்டினையும்
இன்னும்
எவருக்கும் எட்டாத
ஏகாந்த இருப்புகளையும்
எடுத்தாள்வது
எம்மிறையாம் அவனுக்கு
யாதொரு பொருட்டுமில்லை
எந்தவொரு சிரமமுமில்லை

அவன் ...
கற்பனைகளுக்கோ
காட்சிகளுக்கோ எட்டா
உயர்ந்தவன்;
கணக்கீடுகளுக்குள்ளோ குறிப்பேடுகளுக்குள்ளோ அடங்காப்
புகழுக்குரிய அவன்...
மாண்பு மிக்கவன்!

-சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

Jul 5, 2016

எனது இனிய ஈதுல் பித்ர் நல்வாழ்த்துக்கள்

அன்பானவர்களே, அஸ்ஸலாமு அலைக்கும். (வரஹ்)


அல்லாஹ்விற்காக பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து அல்லாஹ்வை வணங்கி, நல்லமல்கள் செய்து புனித ரமலான் நோன்பை முடித்திருக்கும் நமது அனைவருக்கும் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை நமது இணையதளம் தெரிவித்துக் கொள்கிறது.



நோன்பு எனக்குரியது. அதற்கு கூலியை நானே கொடுப்பேன் என்று அல்லாஹ் கூறியமைந்ததற்கேற்ப அல்லாஹ்வின் கூலியை எதிர்பார்த்து இருக்கும் நல்லடியார்களே! உங்கள் அனைவருக்கும் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.


வல்ல இறைவன் நம் அனைவர்களுக்கும் ஈருலக பாக்கியங்களைத் தந்தருள்வானாக! ஆமீன்.

அனைவருக்கும் இனிய ஈதுல் பித்ர் நல்வாழ்த்துக்கள்.


Admin

அபு நுஸைபா 
Islamic Uprising.blogspot


Jun 19, 2016

சோமாலிய சிறுமிக்காக கண்ணீர் வடிக்கும் மேற்குலக ஓநாய்கள் - சினிமா விமர்சனம்

சினிமா எனும் கலை ஒரு வகையில் அரசியல் பிரச்சாரம் தான். ஹாலிவூட் திரைப்படங்கள், மேற்கத்திய அரசியலை உலகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய உதவுகின்றன. தற்போது திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் Eye in the Sky  எனும் திரைப்படம், அமெரிக்காவின் ட்ரோன் யுத்தத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கின்றது.

தென்னாபிரிக்க டைரக்டர் Gavin Hood இந்தத் திரைப்படத்தை எடுத்துள்ளார். அவரும் அதில் ஒரு பாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படம் தென்னாபிரிக்காவில் படமாக்கப் பட்டாலும், ஒரு பிரிட்டிஷ் தயாரிப்பாக இருக்கலாம். 

எது எப்படி இருப்பினும், இந்தத்  திரைப்படத்தின் நோக்கம் அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதல்களுக்கு பிரிட்டன் வக்காலத்து வாங்குவதாக உள்ளது.

இது தான் கதைச் சுருக்கம்: 

கென்யாவில் அல்ஷஹாப் இயக்கத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் கதை நடக்கிறது. (அது சோமாலியாவாகவும் இருக்கலாம்) அங்கே ஒரு அமெரிக்க பிரஜையும், இரண்டு பிரிட்டிஷ் பிரஜைகளும் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டுகின்றனர். அதில் ஒருவர் மதம் மாறிய வெள்ளையின ஆங்கிலேய பெண்மணி, மற்றய இருவரும் சோமாலிய பூர்வீகம் கொண்ட இளைஞர்கள்.

கென்யா இராணுவத்துடன் கூட்டுச் சேர்ந்து இயங்கும், பிரிட்டிஷ் படையினர், அவர்களை ட்ரோன் மூலம் தாக்கியழிக்க திட்டமிடுகின்றனர். சோமாலிய உளவாளிகளை வைத்து தகவல் திரட்டுகின்றனர். கமெரா பொருத்திய இயந்திரப் பறவைகளை பறக்க விட்டு மறைவிடங்களை கண்காணிக்கின்றனர்.

எதிர்பாராத விதமாக, சதித்திட்டம் தீட்டும் தீவிரவாத குழுவினர் தங்கியிருக்கும் வீட்டுக்கு அருகில் ஒரு சிறுமி இருக்கிறாள். அந்த வீட்டின் மதிலருகில், தெருவில் கடை போட்டு, பாண் (பிரெட்) விற்றுக் கொண்டிருக்கிறாள்.

ட்ரோன் தாக்குதலுக்கு தயாராகும் பிரிட்டிஷ் படை அதிகாரிகள், தமது நாட்டு அமைச்சர்கள் மட்டுமல்லாது, அமெரிக்க அமைச்சர்களையும் தொடர்பு கொண்டு அனுமதி கோருகின்றனர். "அமெரிக்க பிரஜையாக இருந்தாலும் அல்ஷஹாப் இயக்கத்தில் சேர்ந்து விட்டால் எங்கள் எதிரி..." என்று அமெரிக்க அமைச்சர் கூறுகின்றார்.

சோமாலிய உளவாளி இயக்கிக் கொண்டிருக்கும் சின்னஞ்சிறிய இயந்திர வண்டு ஒன்றில் வீடியோக் கமெரா பொருத்தப் பட்டுள்ளது. அதன் வீடியோவில் இருந்து, அல்ஷஹாப் உறுப்பினர்கள் அந்த வீட்டிற்குள் தற்கொலைத் தாக்குதலுக்கு திட்டமிடுவது தெரிய வருகின்றது. பிரிட்டிஷ் படை அதிகாரிகள், அதைக் காட்டி ட்ரோன் தாக்குதலை நியாயப் படுத்துகின்றனர்.

"தற்கொலைக் குண்டுதாரி வெளியே போனால் ஏராளமான பொது மக்களை கொல்லப் போகிறான். அதைத் தடுத்து நிறுத்தும் முயற்சியாக, ட்ரோன் தாக்குதலில் ஒரு சிறுமி கொல்லப் பட்டாலும் பரவாயில்லை" என்கின்றனர். அப்படி இருந்தும் பிரிட்டிஷ் அமைச்சர் அனுமதி தர மறுக்கிறார். "அல்ஷஹாப் தாக்குதலில் ஏராளமான  பொதுமக்கள் கொல்லப்  பட்டால், அது எமக்கு பிரச்சார  வெற்றி. அதே  நேரம், எமது ட்ரோன் தாக்குதலில் சிறுமி கொல்லப் பட்டால், அது அல்ஷஹாப் பிரச்சாரத்திற்கு கிடைத்த வெற்றி" என்று வினோதமான காரணம் ஒன்றைக்  கூறுகின்றார்.

கடைசியில் எப்படியோ, அமைச்சர்கள் அனைவரையும் ஒத்துக் கொள்ள வைத்து, மேலதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தாலும்,  ட்ரோன் விமானத்தை இயக்கிக் கொண்டிருக்கும் படைவீரர்கள் குண்டு வீசத் தயங்குகின்றனர். அதற்குக் காரணம் "அந்த இடத்தில் இருக்கும் அப்பாவி சிறுமியும் கொல்லப் பட்டு விடுவாள்"!

இதற்கிடையே, அவர்களது உத்தரவின் படி சிறுமியிடம் செல்லும் சோமாலிய உளவாளி, அவளிடம் இருந்த பாண் எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு அனுப்பப் பார்க்கிறான். ஆனால், தற்செயலாக அந்த இடத்திற்கு வரும் அல்ஷஹாப் போராளிகள், அவன் "கென்யா இராணுவத்திற்கு காட்டிக் கொடுப்பவன்" என்பதை கண்டுபிடித்து விடுகின்றனர். அதனால் சிறுமியை காப்பாற்றும் திட்டம் பாழாகின்றது.

இருப்பினும், குண்டு வீச்சின் தாக்குதல் திறனை குறைக்கலாம் என திட்டமிடுகின்றனர். இதற்கு மேலும் பொறுமையாக இருக்க முடியாது என்ற நிலையில், அல்ஷஹாப் சதிகாரர்கள் இருக்கும் வீட்டின் மீது ட்ரோன் குண்டு வீசுகின்றது. அந்தத் தாக்குதலில் படுகாயமுற்ற சிறுமி, மருத்துவமனையில் இறக்கிறாள். வெற்றிகரமான தாக்குதலை நடத்தி முடித்தாலும், சம்பந்தப் பட்ட எல்லோரும் தாக்குதலில் பலியான சிறுமிக்காக அழுகிறார்கள்! அத்துடன் படம் முடிகின்றது.

படம் முழுவதும் ஒரு சிறுமியின் உயிரைக் காப்பாற்றுவதற்காக, அரசுத் தலைவர்களும், இராணுவத் தளபதிகளும் மனம் இரங்குவது நம்பும் படியாக இல்லை. ட்ரோன் தாக்குதல்களில் குழந்தைகள் கொல்லப் பட்ட செய்திகளை கேள்விப் பட்டவர்களுக்கு, அது வெறும் பாசாங்கு. சினிமா எமக்குக் காட்டுவது உண்மையான கண்ணீர் அல்ல, அது நீலிக் கண்ணீர். ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத கதை இது தான்.

அது சினிமாப் படம். நிஜ வாழ்வில் உலகம் எப்படி இருக்கின்றது? அமெரிக்க படையினர், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சோமாலியா, யேமன் போன்ற பல நாடுகளில் இன்று வரைக்கும் ட்ரோன் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சினிமாவில் வருவது போலில்லாமல், பல தாக்குதல்கள் இரவு நேரத்தில் நடக்கின்றன. இருட்டுக்குள் துல்லியமாகப் பார்க்கும் கமெரா பொருத்தப் பட்டாலும், ஆயுதபாணிகளுக்கும், பொது மக்களுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை.

பெரும்பாலும் ஆயுதபாணி இயக்கங்களின் முக்கிய தலைவர்களை குறி வைத்துக் கொல்வதற்கு ட்ரோன்கள் பயன்படுகின்றன. எல்லா நேரத்திலும் உளவுத் தகவல்கள் சரியாக அமைந்து விடுவதில்லை. எல்லா நேரத்திலும் குண்டுகள் ஆயுதபாணிகளை மட்டும் கொல்வதில்லை. பொது மக்களின் வீடுகள் மீதும் குண்டுகள் போடப் பட்டுள்ளன. தெருவில் சென்ற பொதுமக்களும் கொல்லப் பட்டுள்ளனர். அதில் பிள்ளைகளும் அடங்குவார்கள். 

பொது மக்களின் இழப்புகளை ஏற்றுக் கொள்ளும் அமெரிக்க அரசு, ஒப்பீட்டளவில் மிகக் குறைவு என்று சொல்கின்றது. ஆனால், ட்ரோன் தாக்குதல் நடத்திய படையினர் தாம் அப்பாவிப் பொது மக்களை, அதிலும் குழந்தைகளையும் கொன்ற குற்றவுணர்ச்சி காரணமாக வருந்துகின்றனர். ஆனால், எல்லோரும் அப்படியான மனோபாவத்துடன் இருப்பதில்லை. 

"பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டி விட்டோம்" என்று குதூகலிப்பவர்கள் தான் அதிகம். குறிப்பாக, அரச மட்டத்தில் யாரும் வருந்துவதில்லை. பொதுமக்கள், குழந்தைகள் கொல்லப் பட்டதாக தகவல் வந்தாலும், தாங்கள் பயங்கரவாதிகளை மட்டுமே கொன்றோம் என்று சாதிப்பார்கள். சினிமாவில் காட்டுவது மாதிரி அவர்கள் யாரும் மனச்சாட்சியுடன் நடப்பதில்லை. பொதுமக்களின் உயிரிழப்புகள் குறித்து என்றைக்குமே கவலைப் பட்டதில்லை. 
 
 
Khaibar Thalam

Mar 23, 2016

பால் சமத்துவ போராட்டங்கள் வெறும் பித்தலாட்டமே தவிர வேறில்லை!

   
 
சில தினங்களுக்கு முன் உலகெங்கிலும் சர்வதேச மகளிர் தினம் அனுஷ்டிக்கப்பட்டதை நாம் அறிவோம். ஐக்கிய நாடுகள் சபை “சமத்துவத்திற்காக உறுதிமொழி பூணுவோம்” என்ற கருப்பொருளில் இவ்வருடத்திற்கான சர்வதேச மகளிர் தினத்தை கடந்த மார்ச் 8ம் திகதி ஏற்பாடு செய்திருந்தது. அந்த நிகழ்ச்சியில், நடைமுறை ரீதியிலான காத்திரமான  செயற்பாடுகளின் மூலமாக சமூக மட்டத்தில் பால் சமத்துவத்தை உறுதிப்படுத்தும் செயற்பாடுகளை அதிகரிக்கும்படி தனது ஆதரவாளர்களை அது வேண்டி நின்றது. இந்நிகழ்வு, ஐ. நா வின் “2030 இல் 50:50 உலகம்: பால் சமத்துவத்திற்காக களமிறங்குவோம்” என்ற சர்வதேச வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாகும். இந்த வேலைத்திட்டம் பிரதானமாக பால் சமத்துவத்திற்கான கொள்கைகளை தத்தமது நாடுகளில் அமூல்படுத்துவதற்கான சர்வதேச அரசுகளின் அர்ப்பணிப்பை புதுப்பித்துக் கொள்வதை நோக்கமாகக் கொண்டது.
 
இவ்வாறு உயர்ந்த இலக்குகளும், நோக்கங்களும் கொண்டு இயங்குவதாகத் தென்படும் இந்த பால் சமத்துவ நிகழ்ச்சி நிரலின் உண்மை நிலை என்ன என்பதை நாம் உணர்ந்திருத்தல் அவசியமாகும். இந்த பால் சமத்துவம் என்ற கோரிக்கை மேற்குலக சடவாத வாழ்வொழுங்கின் அடக்குமுறையால் ஒடுக்கப்பட்ட பெண்ணினத்தை உய்விக்கும் மருந்தாக நம்பப்பட்டு, பின்னர் பெண்ணுரிமைப் போராட்டத்தின் போதைப் பொருளாக மாறிப்போன ஒரு மேற்குலக கோட்பாடு என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.  ஆண்களுக்கு நிகரான சமத்துவத்தை, சமூக வகிபாகத்தை பெண்களும் பெற்றுக்கொள்வதன் ஊடாக பெண் சமூகத்தின் கண்ணியமும், வாழ்க்கைத் தரமும் மேன்மை பெறும் என்ற போலியான ஒரு கற்பனையில் பலனற்ற போராட்டங்களில் பெண்களை பல சதாப்தங்களாக அலையவிட்ட பெருமைதான் இந்த கோட்பாட்டிற்கு இருக்கிறது.
 
ஓர் நூற்றாண்டு காலத்தைத் தாண்டுகின்ற, மேற்குலகிலும், உலகம் பூராகவும் இடம்பெறுகின்ற பால் சமத்துவத்திற்கான போராட்டங்களினால் அல்லது சர்வதேச பட்டயங்கள் பலவற்றில், பால் சமத்துவம் வலியுறுத்தப்பட்டிருப்பதினால், அல்லது மேற்கிலிருந்து கிழக்கு வரை உலகின் பல்வேறு தேசங்களில் அரசியலமைப்புக்களின் ஊடான உத்தரவாதங்கள் அதற்காக வழங்கப்பட்டிருப்பதினால், உலகில் மில்லியன் கணக்கான பெண்கள் வன்முறையாலும், துஸ்பிரயோகங்களினாலும், வறுமையாலும், கல்வியின்மையாலும், சுகாதார வசதியின்மையாலும்  கொடுங்கோல் ஆட்சியாளர்களாலும் வாடி வதங்குவதை தடுத்து நிறுத்த முடியவில்லை. சர்வதேச மற்றும் தேசிய சட்டங்களில் வலியுறுத்தப்பட்டுள்ள பால் சமத்துவத்தைக் கொண்டு உலகில் ஒவ்வொரு 3 பெண்களிலும் 1 பெண் வன்முறையால் பாதிக்கப்படுவதையோ அல்லது அமெரிக்காவில் மாத்திரம் ஒவ்வொரு நாளும் 3 பெண்கள் தனது துணைவரினால் அல்லது முன்னாள் துணைவரினால் கொடூரமாகக் கொல்லப்படுவதையோ அல்லது ஐரோப்பாவில் ஒவ்வொரு 10 பெண்களில் 1 பெண் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுவதையோ கட்டுப்படுத்த முடியவில்லை.
 
மேற்குலக காலணித்துவ யுத்தங்களினால் ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் பல இலட்சம் முஸ்லிம் பெண்கள் காவு கொள்ளப்பட்ட வேளையில் அல்லது சிரியாவில் இலட்சக்கணக்கான சகோதரிகள் கொடுங்கோலன் பஷாரால்  பலியாக்கப்பட்டு வரும் வேளையில் இந்த பால் சமத்துவ ஏற்பாடுகளினால் பலன் ஏதும் கிட்டவில்லை. மேலும் இந்த முரண்பாடுகளினால் அகதிகளாக்கப்பட்ட மில்லியன் கணக்கான பெண்களுக்கு அடைக்களத்தை அவை வழங்கவில்லை.  அவற்றால் மத்திய ஆப்பிரிக்க பெண்களையோ, மியன்மார் பெண்களையோ மனிதப்படுகொலையிலிருந்து காக்க முடியவில்லை. அல்லது அவர்கள் இந்த நரவெறியாட்டத்திலிருந்து தப்பிக்கும் முயற்சியில் நடுக்கடலில் மூழ்கி தத்தளித்தபோது உதவிக்கரத்தை அவை நீட்டவில்லை. கத்தியால் குத்த வருகிறார்கள் என்று சாட்டுச் சொல்லி, பலஸ்தீன யுவதிகளை காவலரண்களில் அருகே வைத்து யூத சியோனிச சிப்பாய்கள் ஒவ்வொருவராய் சுட்டு வீழ்த்தியபோது கவசமாக அவை முன்வந்து நிற்கவில்லை. மத்திய ஆசியா கொடுங்கோல் அரசுகளும்;, சீனாவின் கம்யூனிச அரசும் முஸ்லிம் பெண்களின் இஸ்லாமிய ஆடைகளை களைந்து, அவர்களை பலவந்தமாக கருத்தடை செய்து அல்லது கருக்களைப்பு செய்து வரும்போது அவர்களை மீட்டெடுக்க இவற்றால் முடியவில்லை. இன்னும் சொல்லப்போனால் உலகெங்கும் உணவு, குடிநீர், சுகாதார வசதி, வைத்திய வசதி மற்றும் கல்வி வாய்ப்பின்றி தவிக்கும் சுமார் 700 மில்லியன் பெண்களுக்கும், பாடசாலைக்குச் செல்ல முடியாத நிலையிலுள்ள சுமார் 85 மில்லியன் சிறுமிகளின் வாழ்வுக்கு ஒளிர்வூட்டவும் இந்த பால் சமத்துவ வியூகங்களால் முடியவில்லை.
 
எனவே பால் சமத்துவத்திற்கான போராட்டங்களினாலோ, வேலைத்திட்டங்களினாலோ அவலங்களுக்கு உள்ளாக்கப்படும் சாதாரணப் பெண்களின் வாழ்வில் எத்தகைய மாற்றங்களும் ஏற்படவில்லை என்பதே உண்மையாகும். இதற்கு பிரதான காரணம் உண்மையில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கான முக்கிய காரணமாக பால் சமத்துவமின்மை என்ற பிழையான எடுகோளின் அடிப்படையில் அப்பிரச்சனைகள் அணுகப்படுவதாகும். ஆணுக்கு நிகர் பெண் என்ற வாதம் யதார்த்தத்திற்கு முரணானதும், அவரவருக்குரிய சரியான வகிபாகத்தை வழங்க மறுப்பதுமாகும். உண்மையில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கான அடிப்படைக் காரணம் இன்று உலகில் நடைமுறையிலுள்ள முதலாளித்துவ, தாராண்மைவாத, தேசியவாத கோட்பாடுகளும், அவற்றின் மீது கட்டமைக்கப்பட்ட மனிதன் வகுத்த அரசுகளும், வாழ்வொழுங்குகளுமாகும் என்பதை பால் சமந்துவ போராளிகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
 
தாராண்மைவாத சுதந்திரத்தின் பெயரால் பெண்களை இலாப நோக்கத்திற்காக மோகப்பொருளாகவும், காம களியாட்ட கருவியாகவும் பயன்படுத்தும் முதலாளித்துவ அரசுகள் எவ்வாறு பெண்களின் கண்ணியம் காக்கப்போகிறது? ஏழையை விட செல்வந்தனை கட்டி அரவணைத்துப் பாதுகாக்கும் முதலாளித்துவ முறைமையின் கீழ் எவ்வாறு பெண்களின் பொருளாதார உரிமைகள் வழங்கப்படப்போகிறது? பயங்கரவாதம் என்ற முகத்திரையை பயன்படுத்தி எத்தகைய அரசியல் மாற்றுக் கருத்துக்களையும் அடக்கியாளும் சர்வாதிகார அரசுகளின் கீழ் வாழ்ந்து வரும் பெண்களுக்கு பால் சமத்துவப்போராட்டங்கள் எவ்வாறு அரசியல் வலுவூட்டல் செய்யப்போகிறது?
 
எனவே உண்மையில் முஸ்லிம் நாடுகளிலுள்ள பெண்களின் வாழ்வு மேன்பட வேண்டுமானால் அதற்கு ஒரு பொறிமுறையுள்ள அடிப்படை மாற்றம் அவசியமாகும். அதற்கு தனது பெண்களின் கண்ணியம் காப்பதை தனது முழு முதற்கடமையாகக் கொள்ளக்கூடிய கிலாஃபா ராஸிதா நபி(ஸல்) வழிமுறையில் முஸ்லிம் உலகில் நிலைநாட்டப்பட வேண்டும். இந்த கிலாஃபா முறைமை பெண்களில் உரிமைகளை தூய்மையாகக் காத்த, அதன் கீழ் வாழ்ந்த ஒவ்வொரு குடிமகனினதும் வாழ்வாதாரத்தை தனது நீதியான பொருளாதார ஒழுங்கினூடாக உறுதிப்படுத்திய புகழ்பெற்ற வரலாறைக் கொண்டது. எனவே யார் யாரெல்லாம் பெண்களின் நல்வாழ்வை இலக்காகக் கொண்டு இயங்குகிறார்களோ, பெண்களுக்கு எதிரான அநீதிகளுக்கு ஒரு முடிவு கிட்ட வேண்டும் என்று உண்மையாகவே விருப்புகிறார்களோ அவர்கள் அனைவரும் மீண்டும் இப்புவியில் கிலாஃபா ராஷிதாவை நிலைநாட்டுவதற்கு ஒத்துழைப்பதே ஒரே வழியாகும். மாறாக பால் சமந்துவம் என்ற இந்த பித்தலாட்டத்தில் தமது காலத்தை கழிப்பது இறுதியில் பெருத்த ஏமாற்றத்தையே தரும் என்பதே நிதர்சனமாகும்

Sep 10, 2015

மக்கள் வரிப்பணத்தில் நடத்தப்படும் உல்லாச திருவிழாக்கள் தான்..!!!

 
சென்னையில் இன்று சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு தமிழக முதலமைச்சர் தலைமையில் துவங்கியது.
 
உலகத்திலுள்ள பெரும் பெரும் தொழிலதிபர்கள், தொழில் ஜாம்பவான்கள், பெரும் தனவந்தர்கள் ஆகியோரை அழைத்து  எங்கள் ஊருக்கு வந்து உங்கள் தொழிலை ஆரம்பியுங்கள். அதற்கான முதலீட்டை இங்கே போடுங்கள். உங்கள் வியாபாரம் செழித்தோங்க அரசு இயந்திரங்கள் துணை நின்று உதவிகள் செய்யும்  என்று அவர் களுக்கு ஆர்வமூட்டி அழைப்பது தான் இந்த மாநாட்டின் நோக்கம்.
 
தொழிலதிபர்கள் முன் வந்தால் பல பல கோடி ரூபாய்கள் இங்கே முதலீடு செய்யப்படும். இந்த வருமானத்தை கொண்டு அரசாங்கத்திற்கு பல அனுகூலங்கள் இருக்கின்றன. (கொல்லைப்புற அரசியல் வருமானங்கள் அது தனி) வேலை வாய்ப்புகள் உருவாகும். ஆனால் இதிலும் அரசியல்வாதிகள், அதிகாரிகளின் தலையீடுகள் இருக்கும்.
 
இரண்டு நாள் மாநாட்டிற்காக மக்களின் வரிப்பணம் பல கோடி ரூபாய்கள் வாரி இறைக்கப்படுகிறது.
 
மாநாட்டில் பங்கேற்க வரும் முதலீட்டாளர்களை மனங்குளிர வைக்க இரண்டு நாட்களும் உயர்தர சொகுசு ஏற்பாடுகள் செய்து தரப்படுகிறது. இவர்களை வரவேற்க விமான நிலையம் அலங்கரிக்கப்படுகிறது. விமானத்திலிருந்து இறங்கியவுடன் சிவப்பு கம்பள வரவேற்பு. வீதிகள் தோறும் இசை நடன நங்கைகளின் நாட்டியங்கள், நட்சத்திர ஓட்டல்களில் இரண்டு நாட்கள் தங்கும் வசதி. போக்குவரத்திற்கு சொகுசு வாகனங்கள். மாலை மற்றும் இரவு நேரங்களில் ஹைடெக் கேளிக்கைகள் போன்றவை விரிவாக ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளன. இவர்கள் மட்டுமா இதை அனுபவிக்கப் போகிறார்கள்? இவர்களுடன் சேர்ந்து அமைச்சர்கள், உயர் மட்ட ஆளுங்கட்சியினர், அதிகாரிகள் என்று பலருக்கும் மக்கள் வரிப்பணத்தில் கொண்டாட்டம் தான். இப்படி இந்த இரண்டு நாட்களும் தமிழக அரசுக்கு வரக்கூடிய பில் தொகை சில கோடிகளை தாண்டும்.
 
சரி! இத்தனை செலவுகளும் மக்கள் நலப்பணிக்காக அரசு வருவாய்க்கும், வேலை வாய்ப்புகளுக்கும் தானே என்று நாம் நினைத்தால், வழக்கம் போல்  நாம்தாம் இளிச்சவாயர்கள்.
 
ஒரு நாட்டில் தொழில்
துவங்குவதற்கு மில்லியன் பில்லியன் என்று பணத்தை கொட்டும் வெளிநாட்டு பண முதலைகள் இவர்களுடைய இரண்டு நாள் குளிப்பாட்டுதலில் மயங்கி பணத்தை கொட்ட இவர்கள் என்ன கேனயன்களா?
 
முதலீடு செய்யும் முன் அந்த நாட்டின் மற்றும் மாநிலத்தின் அனைத்து சாதக பாதகங்களையும் (RISK) அலசி ஆராய்வார்கள்.
 
மின்சார வசதி, சாலை கட்டமைப்பு, தொழிலாளிகளின் அன்றாட கூலி விகிதம், தினசரி வேலை நேரம், வேலை திறன், பணவிகித மதிப்பு, லஞ்ச ஊழல் விகிதாச்சாரம் எல்லாவற்றுக்கும் மேலாக அரசியல் போக்கு, அண்டை நாடுகளுடன் அணுகுமுறை, ஆட்சியாளர்கள் மற்றும் அரசின் ஸ்திரத்தன்மை இப்படி பட்டியல் நீளும்
 
சர்வதேச முதலீட்டாளர்களின் தற்போதைய மிக முக்கியமான சர்வேயிங் என்னவென்றால் முதலீடு செய்யும் நாட்டின் ஆட்சியாளர்கள் மற்றும் அரசு இயந்திரங்கள் அந்த நாட்டில் மத ரீதியாக, சாதிரீதியாக,மொழி ரீதியாக பொருளாதார ரீதியாக, அகதிகளாக, வெளிநாடுகளிலிருந்து பிழைக்க வந்தவர்கள் ரீதியாக உள்ள சிறுபான்மையினரின் குறைந்தபட்ச நம்பிக்கையை பெற்று  செயல்படுகிறதா? என்பதுதான்.
 
காரணம் இந்த அடிப்படையில் உள்ள சிறுபான்மையினர்களின் நம்பிக்கையை ஒரு அரசு இழந்துவிட்டால், அவர்கள் ஒரு பாதுகாப்பற்ற நிலையையும், அச்சுறுத்தலையும் உணர்ந்தால் அங்கே அடிக்கடி உரிமை போராட்டங்கள், பந்த்கள், கிளர்ச்சிகள், புரட்சிகள் என்று வெடிக்கும். தொழில் வளர்ச்சியை பாதிக்கும். முதலீடு செய்ய முன்வர மாட்டார்கள்.
 
இதற்கு உதாரணமாக தற்போதைய லிபியாவையும், நம் அண்டை நாடான இலங்கையையும் எடுத்துக் கொள்ளலாம்.
 
லிபியாவின் கடாபி இருந்தவரை நாட்டை இரும்பு பிடிக்குள் வைத்திருந்தார். உலகத்திலேயே வெளிநாட்டு கடன் வாங்காத ஒரே நாடு லிபியாதான். வெளிநாட்டவர் அதிகமாக முதலீடு செய்த நாடுகளில் ஒன்றாக லிபியா இருந்தது. தற்போதைய நிலை என்ன? மில்லியன் பில்லியன் கணக்கான அத்தனை மூதலீடுகளும் dead investment ஆக முடங்கி விட்டது. இதேபோல் தான் இலங்கையின் நிலையும் இருந்தது. இன்னும் மீண்டு வர முடியவில்லை.
 
இதை நாம் விளங்கிக் கொள்வதற்கு சர்வதேச முதலீட்டாளர்கள் அதிகம் குவியும் உலகத்தின் டாப் 20 நாடுகளின் பட்டியலை எடுத்துப் பாருங்கள். யதார்த்தம் புரியும்.
 
1. ஹாங்காங் 2. சிங்கப்பூர்  3. டென்மார்க்  4.கனடா  5.யுனைடெட் கிங்டம் 6. நெதர்லாந்து  7. பின்லாந்து  8. ஸ்விட்சர்லாந்து  9. ஆஸ்திரேலியா  10. அயர்லாந்து  11. எஸ்டோனியா  12.லக்ஸ்ஸம்பர்க்  13.ஸ்வீடன்  14. பெல்ஜியம்  15. ஐஸ்லாந்து  16.நார்வே  17.ஆஸ்திரியா  18. சிலி  19.சைப்ரஸ்  20.மலேசியா
 
நமக்கு மிகவும் பரிச்சயமான சிங்கப்பூர், மலேசியாவை எடுத்துக் கொள்ளுங்கள். மதரீதியாக மொழிரீதியாக  அங்கே உள்ள சிறுபான்மை மக்களுக்கு அனைத்து உரிமைகளும் பாரபட்சமில்லாமல் தரப்படுகிறது. அரசியலிலும், அரசு அதிகார மையங்களிலும் சிறுபான்மையினர்  கோலோச்சுகிறார்கள். சிறுபான்மை என்ற அச்சுறுத்தல் இல்லாமல் பாதுகாப்பு உணர்வை பெற்று வாழ்கிறார்கள்.
 
அங்கே அதிகமான சர்வதேச முதலீட்டாளர்கள் படையெடுப்பதற்கு காரணம் இதுதான்.
 
இந்த நிலை இங்கே ஏற்படாத வரை இது போன்ற மாநாடுகளும் அழைப்புகளும் வீண் விரயமே.
 
இப்போது நாம் கேட்கலாம், மாநாட்டின் முதல் நாளிலேயே தமிழக அரசு நிர்ணயித்த இலக்கான முதலீடு ஒரு லட்சம் கோடியை தாண்டி விட்டது என்று முதல்வர் அறிவித்திருக்கிறாரே என்று கேட்கலாம்.
 
இது ஒரு ஏமாற்று என்பதை இது போன்று முதல்வர்கள் சொன்ன அறிவிப்பையும், இதோ இந்த நாட்டிலிருந்து முதலீடு செய்ய வந்திருக்கிறார்கள். இதோ அந்த நாட்டிலிருந்து முதலீடு செய்ய வந்திருக்கிறார்கள் என்றெல்லாம் முதல்வர்கள் வெளிநாட்டு முகங்களுடன் கோட்டையில் கை குலுக்கி போஸ் கொடுத்த பழைய புகைப்படங்களை எல்லாம் தூசி தட்டி எடுத்துப் பாருங்கள்.
 
முதலீடு ஒரு லட்சம் கோடியை தாண்டிவிட்டது என்று முதல்வர் சொன்னவுடன் வந்திருந்த முதலீட்டாளர்கள் மாநாட்டு மேடையில் பணத்தை கொடுத்து ரசீது பெற்றுக் கொண்டார்கள் என்று அப்பாவியாக நினைத்துக் கொள்ளக் கூடாது.
 
இவ்வளவு முதலீடு செய்கிறோம் என்று ஒப்பந்தத்திற்கான ஒப்புதலும், முதல் கட்ட ஆயத்த பணிகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கும். அதை வைத்து முதல்வர்கள் அறிவிப்பு செய்வார்கள். அதன் பிறகு உண்மையான முதலீடு வருவதற்கு நாம் மேலே குறிப்பிட்ட நிறைய நடைமுறைகள் இருக்கின்றன.
 
சிறீபெரும்புதூரில் ஆரம்பிப்பதாக ஒப்பந்தம் போட்ட நோக்கியா கம்பெனி, சோனி கம்பெனி, ஹுண்டாய் கம்பெனியின் இன்னொரு பிரிவு இவையெல்லாம் எங்கே என்று கேளுங்கள்.
 
பல கோடி ரூபாய் முதலீடு செய்து தொழில் தொடங்குவதற்கான அடிப்படை கட்டமைப்பு ஏற்படுத்தப்படாத வரை இது போன்ற மாநாடுகள் மக்கள் வரிப்பணத்தில் நடத்தப்படும் உல்லாச திருவிழாக்கள் தான். சர்வதேச முதலீட்டாளர்களுக்கு சற்றே ரிலாக்ஸ் செய்துக்கொள்ள ஒரு கேளிக்கை சுற்றுலா. ஒரு வேளை கஞ்சிக்கு வழியில்லாத நம் வரிப்பணத்தில். அவ்வளவுதான்.
 
 
 

May 31, 2014

'VALLEY OF THE WOLVES : PALESTINE ...' ஒரு விமர்சனப் பார்வை .


நியாயத்தை நியாயமாக சொல்வதில் தான் அநியாயம் வார்த்தை அளவிலாவது அழிக்கப்படுகின்றது.பாலஸ்தீனத்தின் விவகாரங்களில் தமக்கொரு நியாயத்தோடு சூழவுள்ள தேசியங்கள் தீர்வு காண புறப்படுவது , அதன் உண்மையான தீர்வு தொடர்பில் ஒரு தடையாகவே ஆகி விடும் . தேசியம் என்பதுதான் எமக்கு முன்னுள்ள முதல் தர 'ஜாஹிலீயத் '.

இந்த தேசிய வரைவிலக்கணத்தை மனதில் சுமந்தவர்களாக எடுக்கப் படும் எந்த முயற்சிக்கும் அந்த 'ஜாஹிலீயத்' கண்டிப்பான எல்லைகளை இட்டிருக்கும் . 'ஓநாய்களின் பள்ளத் தாக்கு பாலஸ்தீனம் ' என்ற துருக்கிய திரைப்படம் சுவையான திருப்பங்கள் , ஆக்கிரோசமான சண்டைக் காட்சிகள் , பாலஸ்தீனர்களின் யதார்த்த வாழ்வு என்பவற்றை பிரதிபலித்தாலும் இஸ்ரேல் , பாலஸ்தீன் என்ற இரண்டு தேசியங்களை அங்கீகரிக்கும் மனோ பாவத்தோடு தான் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது .

அந்த வகையில் 'ஓமர் முக்தார் ' என்ற உண்மையை சுற்றி லிபிய தேசிய வாதம் தத்ரூபமாக பிண்ணப்பட்டது போல் , இங்கும் துருக்கிய துறைமுகம் ஊடாக 'காசா ' துறைமுகம்
நோக்கி நிவாரண உதவிக்காக தன்னார்வ தொண்டர்களை ஏற்றி வந்த கப்பல், யகூதிய கமாண்டோக்களால் தாக்கப் பட்டு திருப்பி அனுப்பப் பட்ட உண்மையை சுற்றியே கதையின் அடிப்படைக் கரு பிண்ணப்பட்டுள்ளது . (அதாவது இத்தாக்குதலை நடாத்திய இராணுவ அதிகாரி கொல்லப் படுவதில் துருக்கி திருப்தியடைகின்றது . இதுவும்' எய்தவன் இருக்க அம்பை நோதல் ' எனும் தத்துவத்தையே நடைமுறை படுத்துகின்றது ).

அப்படியானால் மேற்படி சம்பவம் நடந்திரா விட்டால் ,(திரைக் கதைப்படிகூட) துருக்கிய கமாண்டோக்களின் 'வெஸ்ட் பேங்க் ' நுழைவே நிகழ்ந்திருக்காதா ? அல்லது தனது அரசியல் ,இராணுவ தோல்வியை மறைக்க U .S ஹொலிவூட் பாணியில் துருக்கியும் சினிமாக் கலையால் மக்களை விலை பேசியுள்ளதா ? அப்படியானால் பாலஸ்தீனில் உள்ளார்ந்த யகூதிய அநியாயங்களுக்கு இந்த தேசிய வாத அரசியல் கொள்கையில் தீர்வில்லை என்பதை ஒப்புக் கொண்டுள்ளார்களா ?

எது எப்படியோ இஸ்லாத்தின் தீர்வை புறம் தள்ளிய மனோபாவத்தை தமது கலைப் படைப்புகளிலும் முஸ்லீம்களை மயக்கும் விதத்தில் காட்சிப்படுத்த ஒரு பழுத்த அனுபவம் தேவை .அந்த வகையில் அற்புதமான் ஹொலிவூட் + பெண்டகன் பொலிடிகல் ஸ்டைல் துருக்கிக்கு கை கொடுத்துள்ளது .

http://www.youtube.com/watch?v=HNPDIKEAOks
http://www.youtube.com/watch?v=HNPDIKEAOks

Mar 24, 2014

அருவருப்பானது இந்த அயல் நாட்டின் இறக்குமதி .



இனத் துவேச துரோக வரிகளில்
எனக்கும உன் அடக்கு முறை
அடிமை சாசனம் தயார்தான்
என்பது நான் அறிந்ததே !

சிறுபான்மை நசுக்களை அவசியமாக்கி
பெரும்பான்மை சுகம் காட்டுவதில்தான் - உன்
ஜனநாயக பெயர் தாங்கி வாக்கு வங்கிகளுக்கு
கொளுத்த இலாபம் என்பது அறிந்த வரலாறே !

காலம் காலமான இந்த சதிகளில்
நேற்று 'எல்லாளன்' தெரியாத அரசியலை
'துட்டகைமுனுவின்' வரலாற்றில்
அநீதமாய் ஊடுருவி கற்றுக் கொடுத்தீர்கள் !

விளைவு மகாவலியை விட
இங்கு ஒரு இரத்த ஆறு
முப்பது வருடங்கள் பேய்த்தனமாக ஓடியதே !
இன்னுமா தாகம் தீரவில்லை !

அச்சுறுத்தும் உன் கோஷங்களுக்கு அஞ்சி
அடிமைப் பட்டையை நெற்றியில் இட்டு
நீ கேட்கும் விலையில் தன்மானத்தை விற்க
தரங்கெட்ட பிண்டமல்ல - நான் முஸ்லிம் .

உன் நிகழ்கால நகர்வுகளில் போதி மரத்திலும்
அந்த இந்துத்துவா அல்லவா பளிச்சிடுகிறது !
அதே சீருடை காவி அழிப்புப் பனி ஒரே பாணி
அருவருப்பானது இந்த அயல் நாட்டின் இறக்குமதி .

http://khandaqkalam.blogspot.ae/2012/12/blog-post_7.html#more

Mar 20, 2014

உங்கள் பொன்னான வாக்குகள்!



இதோ வரப்போகிறது அதோ வரப்போகிறது என்று ஆவலுடன் (?) எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் வந்துவிட்டது!
செந்தமிழ் நாட்டுக்கே புதுக்களை வந்துவிட்டது! அலங்கார விளக்குகள்! ஆளுயர சுவரொட்டிகள்! செவிப்பரையைக் கிழிக்கும் ஒலிபெருக்கிகள்!
மின்னல் வேக சுற்றுப் பயணங்கள்! மனதை மயக்கும் வாக்குறுதிகள்! இத்தனையும் தாங்கிக் கொள்ள தமிழகம் தயாராகிவிட்டது!எதற்காக இத்தனை ஆர்ப்பாட்டங்கள்!
வெள்ளையும் கறுப்புமாக ஏது இவ்வளவு பணம்? தேர்தல் முடிந்த பிறகு என்ன தான் நடந்து விடப்போகிறது என்பதைப்பற்றியெல்லாம் அக்கரை காட்டாத தமிழ்ப் பெருங்குடி மக்கள்!
யாரைத் தேர்ந்தெடுத்தாலும் லஞ்ச லாவண்யங்கள் ஒழிந்து விடப்போகிறதா? வறுமைக்கோட்டை தாண்டிவிடப்போகிறதா தமிழ்ச் சமுதாயம்?
ஒழுக்கமும் கட்டுப்பாடும் ஏற்ப்பட்டுவிடப்போகிறதா? குற்றங்கள் குறையப் போகின்றனவா?
ஏறிவரும் விலைவாசி இறங்கிவிடத்தான் போகின்றதா?
இதில் எதுவுமே ஏற்பட போவதும் இல்லை!
அவர்கள் வாங்கிய லஞ்சத்தை, வாரிச்சுருட்டிய வரிப்பணத்தை இவர்கள் வாங்கப் போகிறார்கள். ஏற்படப் போவது ஆட்சி மாற்றம் அல்ல. ஆள் மாற்றம் மட்டுமே.
பதவி பித்துப்பிடித்து அலையக் கூடிய எவரைத் தேர்ந்தெடுத்தாலும் தீமைக்குத் துணை நிற்பதைத் தவிர வேறு எதுவுமில்லை.
இறைவனைப் பூரணமாக நம்பி அவனை அஞ்சக் கூடிய உண்மை முஸ்லிம் என்னதான் செய்வது?
இதோ அல்லாஹ் சொல்கிறான்.
”யார் தீமையை பரிந்துறை செய்கிறானோ, அந்த தீமையில் அவனுக்கும் ஒரு பங்கு உண்டு. யார் நன்மைக்கு பரிந்துறை செய்கிறானோ அதில் அவனுக்கும் பங்கு உண்டு. அல்லாஹ் எல்லாவற்றையும் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறான்.” (அல் குர்ஆன் 4:85)
நல்ல காரியத்திலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவி செய்யுங்கள்! தீமையிலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் துணை நிற்கவேண்டாம். (அல் குர்ஆன் 5:2)
வட்டியும், மதுவும், சூதும், லஞ்சமும், ஊழலும், ஒழுக்ககேடுகளும், குற்றங்களும் எவராலும் ஒழியப்போவது இல்லை. இறைவன் தீய காரியங்கள் என்று அறிவித்துள்ள இந்தக் குற்றங்களைச் செய்யத்தகுதியானவர்கள் யார் என்பதைத் தீர்மானிப்பதால் என்ன வந்துவிடப்போகிறது?
அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டிய நிலையைத் தவிர வேறு எதுவும் ஏற்படப்போவதில்லை.
நன்றி: பி.ஜே., அல் ஜன்னத், நுழைவாயில், ஜனவரி 1989
thanks.thalaimaithuvam.blogspot.in

Mar 14, 2014

தாகூத்தோடு 'கொம்ப்ரமைஸ் ' போடத் துடிக்கும் இஸ்லாமிய தாயி !!! (ஒரு பேஸ் புக் சூட்டில் இருந்து ...)



( இந்திய குப்ரிய ஜாஹிலீய அரசில் இட ஒதுக்கீடு வேண்டி போராடும் P .J 1980 களில் அவர் பேசிய சியாசா தொடர்பான விளக்கத்தை மறந்து போயுள்ளார் !?ஹாகீமியத்தை அடகு வைத்து ஏகத்துவம் பேசும் இந்த தாயியின் பின்னால் அடுத்தவர்களை கபுறு முட்டிகள் என்றும் , சியாக்கள் என்றும் கூறும் ஒரு தவறான கூட்டமும் பின் தொடர்கிறது , தாகூத்திய சலுகையின் கீழ் சமரசம் தான் இவர்கள் காட்டும் இகாமதுத் தீனா !!? அப்படியானால் இவர்களை எப்படி அழைப்பது !? பாவம் என்னதான் ஜாஹில் முட்டிகளாக இருந்தாலும் நம்ம சகோதரர்கள் .)

சென்னைப் போராட்டத்தில் பீ.ஜே.யின் உரையின் சாரம்:

தேர்தல் விதிகளுக்கு முன்பே இடஒதுக்கீடு அதிகரிப்பு குறித்த அறிவிப்பை அ.தி.மு.க. முதல்வர் வெளியிட வேண்டும்.

அப்படி வெளியிட்டால் நோட்டும் சீட்டும் கேட்காமல் ஆதரவு அளிப்பதுடன் முஸ்லிம் வாக்குகளை உங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும் வேலையையும் செய்வோம்.

அறிவிப்பு வெளியிடாவிட்டால் அ.தி.மு.க.வுக்கு எதிரான "கடுமையான நிலைப்பாடு" எடுப்போம்!

பிப்.23 ஆம்தேதி வரைதான் உங்களுக்கு கெடு!

நாங்கள் நன்றியுள்ள சமுதாயம் என்பதை மறக்க வேண்டாம்....!

................................................................................................................................

இது இஸ்லாத்தின் போராட்டத்தில் இருந்து ....!!!

சரணடைந்து விடு உயிர்வாழும் சுதந்திரம் அளிக்கப்படுவாய்...!

தனது பூமியில் தறிகெட்டுத் திரிந்த மனித மனங்களை தனது வேதத்தின் மூலம் ஒருங்கிணைத்து தனது அதிகாரத்தின் கீழ் பிணைக்க அல்லாஹ் தனது இறுதித் தூதரை 1400 ஆண்டுகளுக்கு முன்னாள் அனுப்பினான்.

இம்மாபெரும் பொருப்பைச் சுமந்து கொண்டு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் 13 ஆண்டுகளில் அரசையும் அல்லாஹ்வின் 'இறையாண்மையையும்' நிறுவி அடுத்த 8 ஆண்டுகளில் தீபகற்பத்தை அதற்குள் உள்ளடக்கி, 7000 ஆண்டுகள் பாரம்பர்யம் கொண்ட ரோமப் பேரரசின் 'இறையாண்மையையும்' 5000 ஆண்டுகள் பாரம்பர்யம் கொண்ட பாரசீகப் பேரரசின் 'இறையாண்மையையும்' வாள்முனையில் இப்படி நிறுத்தினார்கள்:-

" بسم الله الرحمن الرحيم , من محمد رسول الله، إلى كسرى عظيم فارس، سلام على من اتبع الهدى، وآمن بالله ورسوله، وشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأن محمدًا عبده ورسوله، أدعوك بدعوة الإسلام، فإني رسول الله إلى الناس كافة لينقذ من كان حيا ويحق القول على الكافرين، أسلم تسلم، فإن أبيت فعليك إثم المجوس.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால்.

(இது) அல்லாஹ்வின் தூதர் முஹம்மதிடமிருந்து பாரசீகப் 'பேரரசர்' கிஸ்ராவுக்கு (அனுப்பப்படும் எச்சரிக்கை கடிதம்)
அல்லாஹ்வையும் அவனது தூதரையும் ஈமான் கொண்டு, அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லையென்றும் அவனுக்கு நிகர் ஏதும் இல்லையென்றும் முஹம்மது அவனது தூதராகவும் அடியாராகவும் இருக்கிறார் என்றும் சாட்சியமளிப்போருக்கும் நேர்வழியைப் பின் தொடருவோருக்கும் சலாம் (உண்டாகட்டும்.)

இஸ்லாத்தின் அழைப்பின் மூலம் உனக்கு அழைப்பு விடுக்கிறேன். (இஸ்லாத்தை ஏற்று ) உயிர்ப்புடன் உள்ளோர் மற்றும் (அதை) நிராகரிப்போர் மீது (அவர்கள் தொடர்பான கட்டளைகள் அடங்கிய அல்லாஹ்வின்) சொல்லை உண்மைப்படுத்தவும் அமல்படுத்தவும் முழுமனித குலத்துக்கும் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதர் நான். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்; ஈடேற்றம் பெறுவாய்..! அதற்கு நீ மறுத்தால் 'மஜூஸி'களின் பாவம் உன்னைச் சேரும்...!

இதை வேறுவிதமாகவும் மொழி பெயர்க்கலாம். அதுவே சரியானது என்று நினைக்கிறேன். இதோ இப்படி:-

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால்... 

(இது) அல்லாஹ்வின் தூதர் முஹம்மதிடமிருந்து பாரசீகப் 'பேரரசர்' கிஸ்ராவுக்கு (அனுப்பப்படும் எச்சரிக்கை கடிதம்)
அல்லாஹ்வையும் அவனது தூதரையும் ஈமான் கொண்டு, அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லையென்றும் அவனுக்கு நிகர் ஏதும் இல்லையென்றும் முஹம்மது அவனது தூதராகவும் அடியாராகவும் இருக்கிறார் என்றும் சாட்சியமளிப்போருக்கும் நேர்வழியைப் பின் தொடருவோருக்கும்தான்

"*சுதந்திரம்"*...!

இஸ்லாத்தின் அழைப்பின் மூலம் உனக்கு அழைப்பு விடுக்கிறேன். (இஸ்லாத்தை ஏற்று ) உயிர்ப்புடன் உள்ளோர் மற்றும் (அதை) நிராகரிப்போர் மீது (அவர்கள் தொடர்பான கட்டளைகள் அடங்கிய அல்லாஹ்வின்) சொல்லை உண்மைப்படுத்தவும் அமல்படுத்தவும் முழுமனித குலத்துக்கும் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதர் நான்.

"* சரணடைந்து விடு; சுதந்திரம் அளிக்கப்படுவாய்"*

நீ மறுத்தால் மஜூஸிகள் (புரியும் சட்ட விரோதக்) குற்றங்கள் உன்மீது சுமத்தப்பட்டு (தண்டிக்கப்படு) வாய்.

5000 ஆண்டுகள் பாரம்பர்யம் கொண்ட பாரசீக வல்லரசை எத்தனை 'கம்பீரத்தோடு' அணுகி நமக்கு வழிகாட்டி இருக்கிறார்கள் என்று பாருங்கள்!

அதன் பின்னர் அவரின் தோழர்கள் அதே பாரசீக வல்லரசை இப்படி அணுகினார்கள்:-

أرسل سعد بن أبي وقاص إلى يزدجر ملك الفرس برسالة بأمر من عمر فقالوا له : "أيُّها الملك؛ إنَّ الله رحمنا، فأرسل إلينا رسولاً يدلنا على الخير، ويأمرنا به.. ثم أمرنا أن نبدأ بمن يلينا من الأمم فندعوهم إلى الإنصاف، ونحن ندعوكم إلى ديننا، فإن أبيتم؛ فالجزية، فإن أبتم، فالقتال بيننا وبينكم

பாரசீக அரசன் 'யஸ்தஜிருக்கு' உமர் (ரழி) அவர்களின் கட்டளைக்கிணங்க ஸஃது பின் அபீ வக்காஸ் (ரழி) அவர்கள் ஒரு கடிதம் அனுப்பினார்கள்; அதில் அவர்கள் 'யஸ்தஜிருக்கு' இப்படிச் சொல்லி இருந்தார்கள்:-

அரசே! அல்லாஹ் எங்களுக்கு ஒரு தூதரை அனுப்பி நல்லதை அறிவித்து நல்லதை ஏவி 'ரஹ்மத்' புரிந்தான். பின்னர் எங்களை அடுத்து வாழ்ந்து கொண்டிருக்கும் சமுதாயங்களுக்கு (அதை முன்னெடுத்துச் செல்லத்) தொடங்குமாறு கட்டளையிட்டான். ஆகையால் நாம் அவர்களை'' நியாயத்தின்''பக்கம் அழைக்கிறோம். உங்களையும் எமது 'தீனின்' பக்கம் அழைக்கிறோம். நீங்கள் வர மறுத்தால் ஜிஸ்யா - கப்பம்; அதற்கும் மறுத்தால் உமக்கும் எமக்கும் இடையில் யுத்தம்தான்...!

சுப்ஹானல்லாஹ்.... எத்தனை கம்பீரம்...?

இன்று நாம் கேட்கிறோம்....

எங்கள் கிலாஃபத் அரசை ஒழித்துக் கட்டி, அந்த அரசு மீண்டும் எப்போதுமே துளிர்த்து விடாத அளவுக்கு

'உலக முதலாளித்துவச் சித்தாந்தத்தின் அடிப்படையிலான' அமெரிக்க ஒற்றைத் துருவ உலக ஒழுங்கில் அடிமைச் சேவகம் புரியும் மத்திய மா நில அரசுகளே!

உனக்கு "கீழ் வேலை" செய்ய எனக்கு வாய்ப்பு கொடு...!

உங்கள் நெஞ்சம் வெடிக்கவில்லையா...?

இந்த முழக்கத்தைக் கேட்டு....!

http://khandaqkalam.blogspot.ae/2014/01/blog-post_29.html#more

Oct 21, 2013

“லஷ்கர்-ஏ-தொய்பா” - பற்றிய அமெரிக்க இந்திய எச்சரிக்கைகளின் அடிப்படைகள் என்ன?




by: Salahudeen Iyoobi

“லஷ்கர் ஏ-தொய்பா“. இந்த உருது மொழியின் தமிழ் மூலம் என்ன தெரியுமா?, “இறைவனின் இராணுவம்”. இந்திய கட்டுபாட்டில் உள்ள ஜம்மு காஷ்மீரை இராணுவ மற்றும் அங்குள்ள மக்கள் வலுவை கொண்டு பிரித்து ஆஸாத் காஷ்மீருடன் இணைத்து அதனை பாகிஸ்தானிடம் தாரை வார்க்கும் புரொக்ஜெட்டின் பெயர் என்றும் சொல்லலாம். காஷ்மீரின் பள்ளத்தாக்கு கிராமமான சிட்டிசிங்புரா தாக்குதலில் ஆரம்பித்து இந்திய நாடாளுமன்றம் மீதான தாக்குதல் வரை அது தன்னை தெளிவாகவே இந்தியாவிற்கு அடையாளப்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் 12 காஷ்மீரிய இளைஞர்களை பயிற்றுவித்ததில் ஆரம்பமான அதன் இராணுவ பலம் இன்று “ஆசியாவின் ஹிஸ்புல்லாஹ்” என குறிப்பிடும் அளவிற்கு வளர்ந்துள்ளது. ஏனைய காஷ்மீரிய விடுதலை அமைப்புக்கள் போலல்லாது இது நீண்டகால திட்டமிடல்களுடனும் இஸ்லாமிய சாம்ராஜ்ய கனவுகளுடனும் தன்னை வளர்த்துக்கொண்டுள்ளது. ஆப்கானில் உள்ள தலிபான்களுடனும் அல்-காயிதாவுடனும் நேரடி உறவுகளை கொண்ட அமைப்பு.

இங்கே நாம் லஷ்கரின் வராலாறு பற்றியோ அதன் காஷ்மீரிய செயற்பாடுகள் பற்றியோ குறிப்பிடுவதல்ல நோக்கம். லஷ்கரிற்கு இரண்டு கொள்கைள் உள்ளன.

காஷ்மீரை இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்திடம் இருந்து கைப்பற்றி ஆஸாத் காஷ்மீருடன் இணைந்த காஷ்மீர் மாநிலத்தை (தனி நாட்டையல்ல) உருவாக்கி அதனை பாகிஸ்தானின் ஐந்தாவது மாகாணமாக இணைப்பது. (இதற்கு பாகிஸ்தானிய ஐ.எஸ்.ஐ.யின் பரிபூரண உதவிகள் இவர்களிற்கு உண்டு)

உலகில் குறிப்பாக ஆசியா கண்டத்தில் உள்ள முஸ்லிம் உம்மாவிற்கு எதிராக நடக்கும் அநியாயங்களையும் தாக்குதல்களையும் தடுத்து நிறுத்துவதும் அதற்கான பதில் நடவடிக்கைகளை உருவாக்குவதும். (இதற்கு அல்-காயிதா போன்ற பல இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களின் பரிபூரண உதவிகள் இவர்களிற்கு உண்டு)இவர்களது இரண்டாவது கோட்பாடே அமெரிக்கா, மேற்குலகு, முஸ்லிம்களை நசுக்க விரும்பும் தேசங்கள் போன்றவற்றிற்கு பிரச்சனைக்குரிய விடயமாக உள்ளது.

லஷ்கர்-ஏ-தொய்பா தனது எல்லைகளிற்கு அப்பால் உள்ள தேசங்களில் முஸ்லிம் ஆயுத போராட்ட அமைப்புக்களை உருவாக்குவதில் பல வெற்றிகளை கண்டுள்ளது. அங்குள்ள இளைஞர்களிற்கு பயிற்ச்சியளித்தல், அவர்களிற்கான நேரடி களப்பயிற்ச்சிகளிற்கான பிரயாணங்களை ஒழுங்கு செய்தல், அவர்களது நேரடி களப்பயிற்ச்சிகள் முடிந்த பின்னர் அவர்களை அவர்களது தாயகத்திற்கு கொண்டு வந்து சேர்த்தல், அவர்களிற்கான ஆயுத விநியோகங்களிற்கான ஒழுங்குகளை செய்தல் போன்ற ஒரு போராட்டத்தின் பல மிக முக்கியமான தயாரிப்புக்களை செய்து கொடுக்கும் ஸ்பொன்சராக செயற்படுகிறது.

தஜிக்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ரோகீங்கியா, தாய்லாந்து, மிண்டானோ, ஷின்ஷியாங், டுபாய் என அது தனது செயற்களங்களை விரிவாக்கி வருகிறது. பம்பாய், குஜாராத், மற்றும் கேரள மாநிலம் போன்றவற்றிலும் அவர்களின் நிழல் செயற்பாடுகள் உள்ளன.

நேரடியாக போராளிகளிற்கிடையிலான தொடர்பாடல்கள், உறவுகள், இணைந்த செயற்பாடுகள் என்பவற்றிற்கும் அப்பால் சர்வதேச முஸ்லிம் வர்த்தக மாபியாக்களுடனும் இவர்களிற்கு தொடர்புகள் உள்ளன. இந்த நெட்வோர்க் தடுத்து நிறுத்த முடியாத சிவில் பிரச்சனைகாகவே இன்றும் உள்ளது.

இலங்கையில் லஷ்கர்-ஏ-தொய்பா செயற்படுகிறது என முதலில் அமெரிக்கா சொன்னது. பின்னர் இந்தியா சொன்னது. இப்போது இலங்கை அது பற்றி கருத்து வெளியிட்டுள்ளது. இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இதன் செயற்பாடுகள் உள்ளன என்பது எக்ஸ்ட்ரா மெசேஜ். இந்த தகவலின் உண்மைகள் பற்றிய அடிப்படைகள் ஆராயப்படல் வேண்டும்.

விஞ்ஞான தகவல் தொழில் நுட்ப தொழிற்பாட்டின் மகோன்னத வளற்ச்சியின் அடிப்படையில் பார்த்தால் உலகம் ஒரு கிராமமாகி விட்டது என்கிறார்கள். அது பொருளாதாரம், வர்த்தகம், சமூக கலாச்சார உறவுகள், விஞ்ஞான பரிமாற்றங்கள் என்ற எல்லைகளிற்கு மட்டும் பொருந்தும் என்பது போல் அவர்கள் கருத்துக்கள் உள்ளன. இதே தகவல் தொழில் நுட்ப மற்றும் தொடர்பாடல் வளற்ச்சி என்பது இராணுவம், தீவிரவா அமைப்புக்கள், பயங்கரவாத இயக்கங்கள், மதஅடிப்படைவாத மையங்கள், விடுதலை போராட்ட அமைப்புக்கள், சுதந்திர போராளிகளின் குழுக்கள், புரட்சியாளர்கள் தளங்கள், பாசிஸ சக்திகள், நவ நாசிஸ்ட்கள் என எல்லோருக்குமே பொருந்தும்.

இதனடிப்படையில் யாருக்கும் உலகில் எந்த மூளையிலும் இரகசிய தொடர்புகள் செயற்பாடுகள் இருக்கலாம். அதை மறுப்பதற்கில்லை. அதே வேளை இலங்கையின் கிழக்கு பிரதேசத்தில் லஷ்கர் என்பது அடிப்படைகள் அற்ற ஊகம் என்பதற்கான வாய்ப்புக்களே நிறைய உள்ளன.

தமிழ் நாட்டில் பி.ஜே.பி.யின் செயற்களத்தின் வாசல்கள் திறக்கப்பட்ட நிலையில் தமிழ் நாட்டு முஸ்லிம்களிற்கான சமூக பாதுகாப்பு என்பதற்கான களத்தின் வாயில்களும் திறக்கப்படவேயிருக்கின்றன. அதன் திறப்பு லஷ்கராக இருக்க வாய்ப்புக்கள் நிறையவேயுள்ளன. விடயம் என்னவென்றால் லஷ்கர்-ஏ-தொய்பாவிற்கு தமிழ் நாட்டில் இயங்கு தளமமைத்து செயற்படுவது சற்று சிரமமானது. தமிழ் நாட்டு முஸ்லிம்களிற்கு போராட்டவியல் என்றால் என்ன என்றே தெரியாது.

அந்த நிலையில் லஷ்கரின் செயற்பாடுகள் அவர்களை மக்கள் மத்தியில் அந்நியப்படுத்தி விடும். இந்திய உளவமைப்பான றோ இலகுவாகவே இவர்களை மோப்பம் பிடித்தும் விடும். புலிப்பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கிலங்கை முஸ்லிகள் தங்கள் உயிர்வாழ்தல் என்ற இருப்பிற்கான போராட்டவியலில் நிறையவே பரீட்சையமானவர்கள். தமிழ் நாட்டு களத்திற்கான தளமாக கிழக்கிலங்கையை லஷ்கர் இலக்கு வைக்கிறதா என்ற கேள்வி இதிலிருந்தே பிறக்கிறது. இது இந்திய நியாயம் சார் அச்சங்கள்..

அமெரிக்கா இலங்கையில் லஷ்கர் பற்றி பிரஸ்தாபிப்பது பற்றி நோக்கின்,.. அல்-காயிதா போன்ற சர்வதேச வலைப்பின்னல் கொண்ட ஜிஹாதிய அமைப்புக்களுடன் தொடர்புடைய எந்த அமைப்பையும் அமெரிக்கா ஏற்றுகொள்ளாது. இதில் இன்னொரு விடயமும் இருக்கிறது. தெற்காசியாவில் கிறிஸ்தவ தேசம் கிடையாது. பிலப்பைன்ஸ், கிழக்கு திமோரை தவிர. தமிழ் ஈழம் என்ற தேசத்தை உருவாக்கி அதனை கிறிஸ்தவ தேசமாக மாற்றும் பிராந்திய கனவுகளிற்கு கிழக்கிலங்கை முஸ்லிம்களின் இடையூறான இருப்பை இல்லாமல் பண்ணும் வில்லங்கமான திட்டமாகவும் இது இருக்கலாம்.

பொது பல சேனா போன்ற பௌத்த அடிப்படைவாத மதவாத அமைப்புக்களின் நெருக்கடிகள் இலங்கை அரசிற்கு உள்ளன. பௌத்த மதவாத சக்திகளை சரிநிகர்சமானமாக முகங்கொள்ளும் இஸ்லாமிய அமைப்புக்களை லஷ்கர் என்ற முத்திரையை குத்துவதன் ஊடாக ஊற்றி மூடிவிடாலம். அதற்கு கிழக்கிலங்கை லஷ்கர் பூச்சாண்டி பெரிதும் உதவும்.

பொது பல சேனாவின் அடாவடித்தனங்களிற்கு எதிராக நடாத்தப்பட்ட ஹர்த்தால் தெற்கிலங்கையில் தோற்றுப்போன போது அது கிழக்கிலங்கையில் வெற்றியளித்தமை இனவாத சக்திகளிற்கு கிழக்கு முஸ்லிம்களை முடக்க வேண்டும் என்ற தேவையை ஏற்படுத்தியிருந்தது. லஷ்கர் சாயம் பூசுவதன் ஊடாக அதை இலகுவாக அவர்கள் நிறைவேற்றி விடலாம் அவ்வளவுதான் .

சர்வதேச அரசியலில் இதுவெல்லாம் சகஜமப்பா என்ற கவுண்டமணி ஸ்டைலில் இந்த மேட்டரை முடித்து கொள்கிறோம்.

source :- கைபர் தளம்

Oct 6, 2013

சீதனம் ஏற்படுத்தும் சீரழிவுகள் !!!!

1.பெண்பிள்ளையை பெற்றெடுத்த பெற்றோர்கள் சுமையான கருதும் திருமணமும் சீரழியும் முஸ்லிம் குடும்பங்களும்!

2.ஆயுள் முழுவதும் ஹறாம் ஹலால் பார்காது பொருளீட்டியும் குமரைக் கரைசேர்கவில்லையே என ஏங்கித் தவிக்கும் பெற்றோர்கள்!

3.ஆத்மீக வலுவுட்டி வளர்த்தும் பயன்தான் என்ன எனக் குமுறுகின்ற ஆத்மீகவாதிகள்!

4.பெற்றோர்கள் சொத்துக்களைத் தேடியும் ஊரவன் கொள்ளையடிக்கான் எனத் துடிக்கும் மகன்மார்கள்!

5.இம்மை மறுமைக்கு ஈடேற்றம் சேர்க்கவில்லையே என அங்கலாய்கும் பெற்றோர்கள்! தொழுகையில்லை நோன்பு இல்லை ஹஜ்ஜூ செய்ய முடியவில்லை இவ்வாறு ஏக்கங்கள் ... மறணப்படுக்கைவரை நீண்டுசெல்லும் துர்பாக்கிய நிலை!

இத்தனைக்கும் வழிவகுத்தது இஸ்லாமிய வழிமுறைக்கப்பால் வளக்காறு மற்றும் சம்பிரதாயம் எனும் பெயரில் நடக்கும் கொடுமை!

இதனை இல்லாதொழிக்க வழிஎன்ன?

தனிமனிதன் சுயமாக முடிவெடுத்து முன்வந்து இஸ்லாம் கூறுகின்றபடி தனது இல்லற வாழ்வை தொடங்க முற்படும் இளைஞனுக்கு பெற்றோர் கொடுக்கும் தொல்லை ஒருபுறம்இ இருக்க உறவுகள் அயலவர்கள் அடிக்கும் நக்கல் அவனது தைரியத்தை ஆட்டம் காண வைப்பதுடன் மனசையும் சுக்குநூறாக்கிவிட துவண்டுபோன நிலையில் வாழ்வை துவங்க வேண்டியுள்ளது!

அவ்வாறாயின் வழிதான் என்ன?

சமூகத்தின் வழக்காறுகளைச் சவாலாக மாற்றியமைக்கும் இளைஞர் தலைமுறை துணிகரமாக சமூகத்தில் புரையோடிப்போயுள்ள வழக்காறை மாற்ற முற்படவேண்டும்!

அவர்களுக்கு சிறுவயது முதலே இன்றைய இளம் பெற்றோர்கள் அதனை ஊட்டுவதுடன் தனது பிள்ளை இஸ்லாம் கூறுகின்றபடியான திருமண முறையில்தான் (மகர் கொடுத்து மணமகளுக்குரிய வாழ்விடம் மற்றும் வசதி செய்துதான்) மணமுடிப்பான். அதற்காக நான் என்னை மாற்றுவதுடன் அதற்குரிய வழிவகைகளை ஏற்படுத்தி கொடுப்பேன் என திடசங்கற்பம் பூணவேண்டும்!

கற்ற இளைஞர்கள் உயர்பதவி வகிக்கும் இளைஞர்கள் இதன் யதார்த்தத்தை உணர்ந்து சமூக மாற்றத்தில் தன்னை அர்பணித்து எதிர்கால சந்ததிக்கு இல்வாழ்வை இலகுவாக்க வழிசமைப்பேன என துணிகரமான முடிவுகளை எடுப்பதுடன் பெற்றோர்களை ஒருவாறு சமாளித்து தனக்குள்ள சவாலை வெல்வதற்கு முன்வரவேண்டும்!

இன்ஷா அல்லாஹ் மாற்றம் வரும்!

மணமுடித்துவைக்கும் பதிவாளர் முதல் மௌலவி வரை தனது கடந்தகால ஜாஹிலிய திருமணத்திற்கு பாவமன்னிப்பு கூறி சமூகத்தினது திருமண சடங்குகளை களைந்து இஸ்லாம் கூறுகின்ற முறைப்படி மணமகனிடம் உணவு உடை உறையுள் போன்றவற்றை சபையோர் சாட்சியா வழங்க தான் முன்வந்துள்ளதாக ஒப்புக் கொள்ள வைத்து அதற்கான ஹதீதையும் குர்ஆன் வசனத்தையும் ஓதி மக்களை உற்சாகப்படுத்தி திருமணங்களை முடித்துவைக்க முன்வரவேண்டும்! அதில் உள்ள அனைத்து சவால்களையும் அல்லாவுக்காக ஏற்கவேண்டும்!

இன்ஷா அல்லாஹ் மாற்றம் வரும்!

இளைஞர்களே சிந்தியுங்கள்!

பெற்றேர்களே சம்பிரதாய சடங்குகளை களைந்து வாழ்வை இலகுபடுத்தி உங்கள் பிள்ளைகளது வளமான வாழ்வுக்கு வழிவகுக்க முன்வாருங்கள்! அது முறையான சொத்துப்பங்கீட்டுக்கு உங்களுக்கு வழிவகுக்கும்!

ஒரு ஆண் தனது சக்திக்குட்பட்ட நிலையில் தனது வாழ்வை அமைக்க முன்வருவான்! பொருளீட்டல் அதிகரிக்கும் சமூகம் வளரும்! இம்மை மறுமை வாழ்வு சிறக்கும்!

அதற்கு உங்கள் சிறைவாழ்வை கொஞ்சம் யோசித்து மாற்றம் பற்றி யோசியுங்கள்!

ஒரு சமூகம் தன்னைதான் மாற்றிக் கொள்ளாத வரை அல்லாஹ் அந்த சமூகத்தை மாற்ற மாட்டான்!

சிந்திப்போம் ஆக்கபல முன்னெடுப்புக்களை எடுப்போம்!

இதுகுறித் சிந்தனைகளை பரவலாக்கம் செய்வோம்!

இன்ஷா அல்லாஹ் மாற்றம் வரும்!

Oct 3, 2013

கௌரவக் காட்டு மிராண்டிகளுக்கு செவ்விந்திய தலைவன் 'சியாட்டலின் ' அறிவுரை!



கிறிஸ்டோபர் கொலம்பஸ் கி .பி 1492 ஆம் ஆண்டு அமெரிக்கக் கண்டத்தின் ஹிஸ்பானியோலா தீவில் வந்து இறங்கியதோ ,அமெரிக்கோ வெஸ்புஸி பின் அமெரிக்காவை கண்டு பிடித்ததோ பற்றிய செய்திகளை சொல்லும் அளவு அங்கிருந்த சுதேசிகளான செவ்விந்திய சமூகத்துக்கு நிகழ்ந்த அநீதம் மிக்க இனத்துடைப்பு வரலாறு பெரிதாக பேசப்படுவதில்லை .

தங்களை நாகரீகம் மிக்கவர்களாக போற்றிக் கொள்ளும் மேற்குலகு ஒரு அப்பட்டமான மனித வேட்டையின் இரத்தச் சுவடுகள் மீதுதான் அமெரிக்கா எனும் ஏகாதிபத்திய நாகரீகத்தை வடிவமைத்துள்ளது .என்ற உண்மை புரியப்பட கீழ்வரும் வரலாற்று சம்பவம் சிறந்த ஆதாரமாகிறது .

நிர்ப்பந்த சமரசம் எனும் அடிமைத்துவ அரசியல் மீது கவர்ச்சிகரமான ஈர்ப்பை ஏற்படுத்தி தனது நன்மைகளையும் ,இலாபங்களையும் அடைவதே முதலாளித்துவ பொறிமுறை. இந்த சுயநலவாதம் தான் இன்றும் கூட உலகை ஆளும் சாபக்கேடாகும் .ஒரு சித்தாந்த மாற்றத்தை உலகம் அவசியம் வேண்டி நிற்கிறது .அதை உணர்த்துகிறான் ஒரு செவ்விந்திய தலைவன் 'சியாட்டல் 'எனும் அமெரிக்க சுதேசி !

கி ,பி 1853 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த பிராங்ளின் பியர்ஸ் என்பவர் தனது உயர் குடி ஆதிக்க குடிமக்களால் சுதேசிகளான செவ்விந்தியர் படும் துன்பங்களை கண்டு கவலை கொள்கிறார் ! ஆடு நனையும் போது அழும் ஓநாய் போல நிலைமையை வெறுமனே பார்த்துக் கொண்டிராமல் ஒரு கௌரவமான ஓநாயாக ஒரு தீர்வுத் திட்டத்தை கடிதம் மூலம் செவ்விந்திய தலைவனான 'சியாட்டலுக்கு 'அனுப்பி வைக்கிறார் .

அற்புதமான அந்த சமரச அழைப்பின் தீர்ப்பு இதுதான் ." நீங்கள் உங்கள் நிலங்களை வெள்ளையர்களுக்கு விற்று விட்டு சென்று விடுங்கள்" ! என்பதே அந்த தீர்ப்பாக இருந்தது . இன்னொரு புறத்தால் இதை ஒரு மிரட்டலாக கூட சொல்ல முடியும் .

இராணுவ தொழில் நுட்பம் ,ஆயுத வலிமை போன்றவற்றில் அனுபவம் இல்லாத அந்த செவ்விந்தியர்கள் இந்த நிர்ப்பந்த சமரசத்தில் வேறு வழியின்றி உடன்பட்டுப் போகிறார்கள் . பதில் கடிதத்தை அனுப்பும் முன் அந்த சமூகத்தின் தலைவனான 'சியாட்டல்' தன் மக்கள் முன் ஒரு வரலாற்று பிரசித்தம் மிக்க உரையை நிகழ்த்துகிறான் .அந்த உரையின் பகுதிகள் சில இதோ !

"வொசிங்க்டனில் வாழும் வெள்ளையர்களின் தலைவர் எமது நிலங்களை பணம் கொடுத்து வாங்க விரும்புவதாக தெரிவித்துள்ளார் , அத்துடன் எம்முடனான (சுரண்டல் ) நட்பையும் அவர் வெளிப்படுத்தி உள்ளார் .
அவரின் வேண்டுகோளின் பக்கம் எமது கவனத்தை திருப்பி உள்ளோம் .

"எமது நிலத்தை நாம் விற்காவிடின் ,அவர்கள் ஆயுத பலத்தால் அதை அபகரிப்பார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எனினும் நீலநிற வானத்தையும் வளமான நிலத்தையும் பணம் கொடுத்து வாங்க முடியுமா !?இதனை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை !?

" காற்றின் தூய்மையும் , நீரின் குளிர்மையும் எம்ம்முடையதல்ல .அவ்வாறாயின் அதனை எவ்வாறு விலை கொடுத்து வாங்க முடியும் !?..........

இப்படி இயற்கையை வர்ணித்து அற்புதமாக ஒரு நீண்ட உரையை தொடுத்து விட்டு பதில் கடிதம் அனுப்புகிறார் அதில் இவ்வாறும் கூறுகிறார் ."... எதோ ஒரு காரணத்தால் வெள்ளையர்களை இங்கு அழைத்து வந்து எம்மை வெற்றி கொண்டு அவர்களது ஆதிக்கத்தை பரப்பிட இடமளித்த இறைவனின் வல்லமையால் நீங்களும் அழிவுறக் கூடும் ! மனிதனின் விதி தீர்மானிக்கப் படுவது இன்னும் பரம இரகசியமாகவே உள்ளது ."

இந்த உரையும் ,பதில் கடிதமும் தாங்களே நாகரீகத்தின் உச்சத்தில் உள்ளோம் என்று மார்தட்டிக் கொள்ளும் கௌரவக் காட்டுமிராண்டிகள் குறித்த ஒரு தெளிவான விளக்கமாகவே உள்ளது .

Sep 24, 2013

ஈழ விடுதலையின் பெயரில் அகதியாக்கப்பட்ட 'சோனி 'எனும் முஸ்லிமின் நினைவுகளில் இருந்து .....(PART 02)




அந்த அக்டோபர் 1990 இலங்கையின் வடபுலத்தில் வாழ்ந்த ஏறத்தாழ 120000 முஸ்லீம்களுக்கு ஒரு கசப்பான அத்தியாயத்தை தொடக்கி வைத்தது . தமிழீழ விடுதலைப் புலிகள் அந்த முஸ்லீம்களை அவர்களது பூர்வீக வாழ்விடங்களில் இருந்து பலாத்காரமாக வெளியேற்றியது இந்த அக்டோபர் மாதத்திலே தானாகும் .ஒரு தெளிவான இனத்துடைப்பின் வடிவம் பக்குவமாக அரங்கேற்றப் பட்டது .

யாழ்ப்பாணம் ,மன்னார் ,முல்லைத்தீவு ,சாவகச்சேரி போன்ற முக்கியமான முஸ்லீம் குடிசன செறிவுமிக்க பகுதிகள் முதல் பட்டி தொட்டி எங்கும் தேடித்தேடி முஸ்லீம்கள் விரட்டப் பட்டனர் ! சில நாள் அவகாசத்திலும் , ஒரு நாள் அவகாசத்திலும் , இரண்டு மணிநேர அவகாசத்திலும் முஸ்லீம்கள் ஆயுத முனையில் வெளியேறப் பணிக்கப் பட்டனர் .

விடுதலைப் புலிகளின் இந்த நடவடிக்கை எதேச்சையான ஒன்றாக எனக்குப் படவில்லை .ஏறத்தாழ 65000 முஸ்லீம்கள் வாழ்ந்த மன்னாருக்கு 5 மணிநேர அவகாசம் கொடுக்கப் பட்டது . அத்தோடு எடுத்துச் செல்லும் பொருட்களின் அளவு வரையறுக்கப் படவில்லை . அதே நேரம் 15000 முஸ்லீம்கள் வாழ்ந்த யாழ்பாணத்துக்கு 2 மணிநேரம் மட்டுமே கொடுக்கப் பட்டது ! அத்தோடு 'சொப்பிங் பாக்கில் ' சில உடுப்புகளும் 200 அல்லது 300 ரூபாய் பணமும் தவிர கலட்ட முடியாத மோதிரம் கூட வெட்டி எடுக்கப் பட்டது ! யூதப் பாணியிலான இந்த நடவடிக்கை ஏன் !? இத்தகு கேள்விகளோடு கடந்து போன அந்தக் காலத்தினுள் எனது நினைவுக் குதிரையை தட்டிவிட்டேன் .....

இறுகிய முகத்தோடும் 'துப்பாக்கி சேம்பரில் ' ஏற்றிய 'தோட்டாவை எம்மீது துப்ப ஒரு சந்தர்ப்பம் வராதா ? என்ற ஏக்கத்தோடும் அந்த பாசிசக் கும்பல் நாம் வெளியேறக்கூடிய அணைத்து சந்திகளிலும் காவலரண் போட்டு எம்மை கொள்ளையடித்துக் கொண்டிருந்தது . குழந்தையின் பால் போத்தல் முதல் , வயதானவர்களின் வெத்திலைப் பெட்டிவரை ஒரே கண்ணோட்டமே அவர்களுக்கு இருந்தது .

சாதீயம் தலைக்கேறிய அந்த தமிழ் சமூகத்தில் சிற்சில நடவடிக்கைகள் தவிர வாழ்வியல் ஒழுங்கில் பெரிய மாற்றம் அவர்களோடு எமக்கு இருக்கவில்லை. 'அல்ஹம்துலில்லாஹ் ' எதோ ஒரு ஓரத்தால் ஒரு வேற்றுமை எம்மில் இருந்து எட்டிப்பார்த்தது ! அது எம்மில் இருந்த ஈமான் என்றால் மிகையான கருத்தல்ல .

இந்த நிகழ்வுகளுக்கு சில காலங்களுக்கு முன் இந்த பாசிசப் புலிகள் இஸ்லாமியத் தமிழர்கள் என்ற சாதீய அடையாளத்தை எம்மீது திணிக்க வந்தபோது எதிர்த்தோம் . நாம் தமிழ் பேசும் முஸ்லீம்கள் என்ற விடயத்தை அழுத்திச் சொல்லி விடாப்பிடியாக நின்றோம் .

அப்போது சரணடைந்து இருந்தால் சிலவேலை புலி நகத்துக்கு 'பாலிஸ் 'போடும் வேலையும் ,மனித சதை படிந்த அந்த கொடிய பற்களை துலக்கிவிடும் வேலையும் , இன்னும் சிலநேரம் அந்தப் புலிகளின் அதை .. கழுவிவிடும் வேலையும் அந்த காட்டுத் தர்பாரில் சிலகாலம் கிடைத்திருக்கலாம் .நாங்கள் எங்களை சத்தியத்தால் மட்டுமே அடையாளப்படுத்த இடம் கொடுத்தோம் .

அந்த இரண்டு மணிநேரம் பல ஆச்சரிய சம்பவங்களை சொல்லிப் போனது . தமிழ் 'யோனிக்காக ' போய் கலப்புக் குடும்பம் கட்டிவாழ்ந்த சோனகனுக்கும் ஈமான் வந்தது ! கள்ளுத் தவறணையில் தமிழனோடு 'பாட்னர் சிப் ' போட்டு பருகினவனுக்கும் ஈமான் வந்தது !

" நல்லூரில் முஸ்லீம் உம்மத்து வாழ்ந்தபோது குடிநீர் கிணற்றில் பன்றி வெட்டிப்போட்டு துரத்தினான் " என பழைய வரலாற்றை பாட்டன் சொன்ன போது நம்ப முடியவில்லை . ஆனால் முல்லிய வாய்க்காலில் மூளை சிதறி மாண்ட வேங்கையின் கட்டளையில் பல விடயங்கள் தெளிவாகப் புரிந்தது .

எம்மில் யாரும் பொட்டு வைத்து வீபூதி பூச தயாராக இருக்கவில்லை ! பிள்ளையாரை ,முருகனை , இயேசுவை கும்பிட தயாராக இருக்கவில்லை ! பல அழுக்குகள் படிந்திருந்தும் அல்லாஹ்வை மட்டுமே வணங்குவோம் என்ற தெளிவான முடிவோடு எஞ்சியிருந்த ஈமானுக்காகவே அகதியானோம் .

(இன்ஷா அல்லாஹ் இன்னும் வளரும் )

Sep 23, 2013

ஈழ விடுதலையின் பெயரில் அகதியாக்கப் பட்ட 'சோனி ' எனும் முஸ்லிமின் நினைவுகளில் இருந்து .......(PART 01)




ஒரு ஆறாத காயமாய் ஆகிவிட்ட அந்த அக்டோபர் 1990 களின் நினைவுகள் எப்போதும் என் விழி ஓரத்தில் ஒரு துளி கண்ணீரை விட்டுச் செல்வது தவிர்க்க முடியாதது .கலீல் ஜிப்ரான் போல் அந்த ஆழமான சோகத்தை ஒரு கவிதையில் வடித்து விடும் புலமை எனக்கில்லை . அந்த இரண்டு மணிநேரம் ..... பிறந்து வளர்ந்து உணர்வுகளோடு உறவாடிய அந்த பூமியை விட்டும் சென்று விட வேண்டுமாம் ....

அந்த இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு நடந்த அந்த சம்பவங்கள் என்னை விட்டு விலக மறுத்தன .நிர்ப்பந்த வெளியேற்றம் மூலம் கிடைத்த அகதி அந்தஸ்து போல விடாப்பிடியாக இருந்தது ! ஒரு தேசிய விடுதலை என்ற சுய அழிவு வன்முறை அரசியல் பலரது அர்த்தமற்ற தியாகங்களில் சிலரது சுயநலத்துக்காக பயன்பாட்டுப் போனது .இந்த விடயத்தை ஒரு சராசரி மனிதனாக இருந்து என்னால் பார்க்க முடியாது ஏனென்றால் நான் முஸ்லிம் .

"தாயின் மடியில் ஆடும் கால்கள் துள்ளி ஓடி வரும் பூவின் விரல்கள் குதிரை மீட்ட பயணம் தொடங்கி விடும் .... ஏங்கிடும் துவக்கு வீழ்ந்திடும் முன்னே புதுக்கரங்கள் அதை ஏற்கும் ..." என்ற விடுதலைப் புலிகளின் பாடல் போலவே 'ஹிட் அண்ட் ரன்னில் ' தொடங்கிய சிறுபிள்ளைதனமான இராணுவக் கலாச்சாரம் பக்தி பூர்வமாக அவர்களால் கட்டி வளர்க்கப் பட்டது .காட்டும் இலக்கை நோக்கி கண் மண் தெரியாமல் சுட்டால் ஈழம் கிடைத்துவிடும் ! என்ற அர்த்தமற்ற நம்பிக்கையில் சிறுவர் போராளிகள் முதல் பலர் களமிறக்கப் பட்டிருந்தனர் .

அலறி மாளிகை முதல் செங்கோட்டை வரை மட்டுமல்ல பாகிஸ்தான் முதல் வாசிங்டன் வரை இந்த சூடான இரத்தத்தில் சுகம் கண்டனர் ! இஸ்ரேல் முதல் சீனாவரை இந்த படுகொலை வியாபாரத்துக்கு பங்காளி ஆகினர். எதிலும் இலாபம் என்ற முதலாளித்துவ 'மாபியா ' அரசியலில் மனித உயிர்கள் முழு உலகத்தைப் போலவே இலங்கையிலும் மதிப்பிழந்து போனது ஆச்சரியமில்லைதான் .அர்த்தமற்ற இந்த அயோக்கியத் தனத்தில் வலுக்கட்டாயமாக முஸ்லீம் உம்மத்தும் முடிச்சுப் போடப்பட்டது .

'துவக்கு துவக்கு துவக்குப் போரை துவக்கு துவக்கு ..' என அரசியல் மேடைகளில் தூபமிட்டவர்கள் 'பார்லிமென்ட் பொலிடிக்ஸில் ' பக்குவமாய் 'பொசிசன் ' எடுத்துக் கொண்டனர் ! இந்த ஏமாற்றம் கண்டு நீண்டு வளர்ந்த துரோகிகள் 'லிஸ்டோடு' கொலைக் கலாச்சாரம் கொடிகட்டிப் பறந்தது . 'இவர்களை மண்டையில் போடுவதால் தமிழீழத் தாய் புன்சிரிப்பாள் ' என்ற புது மொழியோடு 'சோனியை '(முஸ்லிமை ) GUN பொயிண்டில் இம்சிப்பதால் தமிழீழத் தாய் பேரானந்தம் அடைவாள் !? என்ற வரிகளும் சேர்த்துக் கொள்ளப்பட்டது மிகப் புதுமையானது !

'கேட்டது தமிழ் ஈழம் கிடைத்தது ஜப்பான் JEEP ! ' என துரையப்பாவுக்கு சொன்ன தமிழ் போராளிகளும் ,அந்த முதலாளித்துவ சதுரங்கத்தில் 'சோசலிசத்' தமிழ் ஈழம் ! என பொய்க்கால் குதிரை ஓட்டிய தோழர்களும் , நேற்று இவர்களால் ' கிளைமோர் ' வைக்கப் பட்ட ஆமிக்காரன் 'டிபென்டரில் ' வந்து SCOT கொடுக்க இன்று ஜப்பான் கார்களில் போவதும் ,போதாக் குறைக்கு ஆட்சிக் கதிரைக்காக அடிபுடிப் படுவதும் . துரோகத்தின் வரைவிலக்கணம் பற்றி மீண்டும் இவர்களுக்கு சந்ததியாரும் , உரும்பிராய் சிவகுமாரனும் வந்து வகுப்பெடுக்க வேண்டும் போல்தான் இருக்கிறது .ஆனால் இவர்களால் பலவந்தமாக சொந்தமண்ணில் இருந்து விரட்டப்பட்ட நான் மட்டும் அன்றிலிருந்து இன்று வரை விடாப்பிடியாக முஸ்லிமாகவே இருக்கிறேன்.


(இன்ஷா அல்லாஹ் தொடரும்...)

http://khandaqkalam.blogspot.ae/2013/09/part-01.html?spref=fb