Showing posts with label பெண்கள் மீதான வன்முறைகள். Show all posts
Showing posts with label பெண்கள் மீதான வன்முறைகள். Show all posts

Oct 26, 2015

காமத்திபுரா பெண் விடுதலையின் கௌரவச் சின்னமா !?

 
( இது 16/11/2011 இல் ' குமுதம் ' இதழில் வந்த ஒரு நேரடி ரிபோர்டின் சுருக்கம்.

வல்லரசாகும் தகுதிக்கான தராதரங்களில் இந்தியா மேற்கின் முதலாளித்துவ சித்தாந்த தரத்திலும் அதிலிருந்து உதிக்கும் சிந்தனை தரத்திலும் எவ்வகையிலும் குறைந்ததல்ல என்பதை உணர்ந்து கொள்ள இந்த விடயங்கள் சிறந்த உதாரணமாகும் .
 
                                                 குடி குடியை கெடுக்கும் என்பார்கள் வரி வருமானத்துக்காக அதை குடியிருக்கவும் விட்டிருப்பார்கள் ! சாதிப் பூசல் நாட்டைக் கெடுக்கும் என்பார்கள் சாதி , மத ,பேதங்களில் இருந்துதான் ஆதிக்க அரசியலுக்கு கடிவாளம் போடுவார்கள் ! 
 
                             அதிகாரத்தின் மாற்றமோ அதிகாரிகளின் மாற்றமோ காலத்தின் தேவையல்ல .அவர்களின் தலையில் ஏறி அமர்ந்து சாவகாசமாக அவர்களை இயக்கும் முதலாளித்துவ சித்தாந்தம் மாற்றப்படாத வரை உருப்படியாக எதுவும் நடக்கப் போவதில்லை . இன்று காமாத்திபுரா எப்படி இருக்கிறது என எனக்குத் தெரியாது. ஆனால் நேரு முதல் மோடி வரை இந்தியா அப்படியே தான் இருக்கிறது என்பது மட்டும் உண்மை. ஏன் முழு உலகமே இத்தகு சுயநலப் பேய்களின் பிடியில் தான் இருக்கிறது. அது செவ்வாய்க்கு ராக்கெட் விட்டாலும் சரியே !) 


இந்தியாவின் மும்பாயின் மையப்பகுதியில் இருக்கும் ஒரு சின்ன தெருதான் இந்த காமத்திபுரா. ஆனால் அதைச் சுற்றி இருக்கும் பல தெருக்களில் குடிசைத் தொழில் போல் விபச்சாரம் வியாபாரமாக நடைபெறுகிறது . இருந்தாலும் இந்த காமத்திபுரா மட்டுமே இதற்கு விசேடமாக அடையாள படுத்தப் படுகிறது . 1795 இல் கட்டுமானப் பணிகளுக்காக ஆந்திராவில் இருந்து அழைத்து வரப்பட்ட கூலித் தொழிலாளிகள் வாழ்ந்த பகுதியே இந்த காமத்திபுரா.


ஹிந்தி மொழியில் 'காம் வாலி ' என்றால் வேலைக்காரி என்று அர்த்தம் .அந்த அடிப்படையிலேயே இத்தகு பெயர் அப்பகுதிக்கு ஏற்பட்டுள்ளது . பிற்பாடு 1880 இல் பிரிட்டிஷ் ஆட்சியில் அந்தப்பகுதி இராணுவ பாதுகாப்பு வளையமாக்கப் பட்டிருந்தது . அன்று காலனித்துவ சிப்பாயின் காமவெறி தீர்க்க இங்கிருந்த பெண்கள் தள்ளப்பட்டார்கள் . அவர்கள் சுதந்திரம் என்ற போலிப்பெயரோடு வெளியேறியபின் அவர்களின் இடத்தை நவ காலனித்துவத்தின் கைக்கூலிகளான இந்தியப் பணக்காரர்கள் பிடித்துக் கொண்டதால் வேறுவழியின்றி அந்தப் பெண்கள் அதே தொழிலை தொடர்ந்தார்கள் . 


அந்த இடத்தில் இருந்து கொஞ்ச தூரம் சென்றால் ' காங்கிரஸ் ஹவுஸ் ' என்ற தெரு உள்ளது . இங்கிருக்கும் விபச்சார விடுதிகள் 'காஸ்ட்லியானவை' இங்குதான் கடத்தி வரப்படும் பெண்கள் விற்கப் படுகிறார்கள் .'மேக்ஸிமம்' பயன்படுதப்பட்டதன் பின்னர் 'லோக்கல்' விடுதிகளுக்கு விட்கப்படுவார்கலாம் !


இன்னும் ஒரு சகிக்க முடியாத கொடுமை இந்த 'காமத்திபுராவில் ' இருந்து சில நிமிட தூரத்தில் 'பீலா ஹவுஸ் ' எனும் தெருவுக்குள் நுழைந்தால் இளம் பெண்களோடு சிறுமிகளும் நின்று அழைப்பு விடுப்பார்களாம் ! ஒரு தெருவில் பாதிவரை விபச்சார விடுதிகளும் மீதி குடும்பங்களும் வாழும் குடியிருப்புகள் என வினோதமான பகுதியாக இந்த காமத்திபுரா இருக்கின்றது ." மும்பை குடும்பப் பெண்களை காக்கும் காவல் தெய்வங்களாக காமத்திபுரா பெண்கள் இருப்பதாக ஒரு ஒரு போலீஸ்காரர் பெருமை வேறு பேசிக் கொள்கிறாராம் ! காரணம் அப்படி இல்லா விட்டால் பாலியல் கிரைம் மும்பாயில் பன்மடங்காகி விடுமாம் !? 


கிடைத்த தகவல்களின் படி இப்படியான பல பகுதிகள் இந்தியாவில் இருக்கின்றது . மலாலாவுக்காக குரல் கொடுக்கும் பெண்ணுரிமை அமைப்புகளின் பார்வையில் இது பெண் விடுதலையை காட்டி நிற்கும் கௌரவமான சுய தொழில் போலத்தான் தெரிகின்றதோ !?

நன்றி
ஹந்தக் களம்
 

Feb 9, 2013

தொடரும் பெண்கள் மீதான வன்முறைகள் தீர்வு என்ன !!? (பகுதி 13)

வேங்கைகளின் வேட்டைக்கு தயார்படுத்தப் படும் வெள்ளாடுகள் !?

" ........ ஒரு காலம் வரும் அன்று சண் ஆ வில் இருந்து ஹல்றல் மௌத் வரை ஒரு பெண் தனியாகச் செல்லாலாம் ......" --- நபி (ஸல்)

மனித சமூகத்தின் மீது மிகுந்த அக்கறையுடன் இஸ்லாம் கொடுத்த பல்வேறு வாக்குறுதிகளிள் ஒன்றே இந்த பெண் பாதுகாப்பாக வாழும் சூழல் பற்றியதாகும் . இன்று அத்தகு வாக்குறுதிகளை செயல் படுத்த விடாமல் தீமையின் அதிகார ஆணிவேர்கள் போடும் ஆட்டத்தின் விளைவு மிகப் பயங்கரமாக உள்ளது . சத்தியம் பயங்கர வாதமாக்கப்பட்டு அசத்தியம் நியாமாக்கப்பட்டுள்ள இன்றைய சூழலை விளக்க கீழ்வரும் இரண்டு சம்பவங்களை ஒப்பிட்டுப் பாருங்கள் .

தென்னாபிரிக்காவில் 17 வயதான இளம்பெண்ணொருவர் குழுவொன்றினால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு பின்னர் உயிரிழந்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பெண் கேப்டவுனிலிருந்து சுமார் 130 கிலோமீற்றர் தொலைவிலுள்ள பிரடஸ்டோர்ப் நகரில் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு பின்னர் வீசப்பட்ட நிலையில் கண்டிபிடிக்கப்பட்டுள்ளார்.

அப் பெண் மிகவும் மோசமான முறையில் துன்புறுத்தப்பட்டுள்ளதுடன் அவரின் வயிற்றிலிருந்து, பெண்ணுறுப்பு வரை வெட்டப்பட்டிருந்ததாக அந்நாட்டு பத்திரிக்கையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் உயிரிழப்பதற்கு முன்னர் அப் பெண் குற்றவாளிகளில் ஒருவரை பொலிஸாருக்கு அடையாளங்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்திற்கு மகளிர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இப்படி நடப்பதற்கான காரணம் என்ன ? கீழே வரும் சம்பவத்தை பாருங்கள் .

இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவின் மனைவி, எம்.பி.க்கள் பதவி ஏற்பு விழாவின் போது, கவர்ச்சி உடையில் வந்திருந்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந் நாட்டில், கடந்த மாதம் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில், பிரதமர் நேதன்யாகு மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

புதிய பாராளுமன்றத்தின், உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா கடந்த 5ஆம் திகதி நடைபெற்றது.

இப் பதவி ஏற்பு விழாவுக்கு, பிரதமர் நேதன்யாகுவின் மனைவி சாராவும் வருகை தந்திருந்தார்.

மெல்லிய துணியால் உள்ளாடைகள் தெரியும் வகையில் அவர் அணிந்திருந்த ஆடையை, அந்நாட்டு பத்திரிகைகள் விமர்சனம் செய்துள்ளன.

அமெரிக்க நடிகையும், பொப் பாடகியுமான பியொன்ஸே போன்று, சாரா உடை அணிந்து வந்தமை அவருடைய மட்டமான ரசனையையை காட்டுகிறது.இந்த வயதில் அவர் இதுபோன்று உடை அணிவது சகிக்க முடியவில்லை' என, பத்திரிகைகள் கருத்து தெரிவித்துள்ளன.

இவ் ஆடை விவகாரம் அங்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தலைகீழ் மற்றம் என்பது கீழிருந்து மேல் நோக்கி செல்ல வேண்டுமா ? மேலிருந்து கீழ் நோக்கி அமுல் நடத்தப் படவேண்டுமா ? என்பதை மனித சமூகம் தீர்மானிக்க வேண்டிய தருணம் இது . பேய் அரசாண்டால் பிணம் திண்ணும் சாத்திரங்கள் என்பதை பெண்கள் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும் . இப்படி ஒரு அநீதி பெண் மீது நடக்கக் கூடாது, என்று முதலாவது சம்பவம் சொல்லி நிற்க ,இரண்டாவது சம்பவம் இப்படி ஒரு பெண் இருக்கக் கூடாது என்பதை அவர்களை அதிகாரத்தில் ஏற்றிய சமூகமே கூறி நிற்கின்றது .

இந்த இரண்டு சம்பவங்களும் வெவ்வேறு காலப்பகுதியில் நிகழ்ந்தவை அல்ல , கடந்த ஒரு சில நாட்களுக்குள் நடந்தவை . இது போல் பல சம்பவங்கள் உலகம் தோறும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன . தவறான கலாச்சார மயப்படுத்தல் தவறான விளைவுகளை பெற்றுத் தருகின்றது . இஸ்லாம் 'ஔரத்' கோட்பாட்டின் கீழ் உடலை மறைக்கச் சொன்னால் மட்டும் போர்க்கொடி தூக்கும் பெண்ணுரிமை அமைப்புகள் இந்த தீமையின் ஆணி வேர்களின் ஆட்டம் பற்றியும் ஒரு போராட்டம் நடத்தலாமே !? முஸ்லீம் பெண் போட்டதை கலட்டும் பெண் உரிமை போராட்டங்கள் பற்றி மட்டும் தான் இப்போது உங்கள் கவனம் திருப்பப் பட்டுள்ளது . வேங்கைகள் வேட்டையாட வெள்ளாடுகள் தயார் படுத்தப் படுகின்றது . இதுதான் முதலாளித்துவ வழிமுறை . ரொம்ப நல்லாயிருக்கு .

Feb 7, 2013

தொடரும் பெண்கள் மீதான வன்முறைகள் தீர்வு என்ன ? (பகுதி 12)

' கபிடலிச அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா !!! '

உலகில் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில் சமூக தொடர்பாடல் ஊடகங்கள் எவ்வாறு தொழிற்பட வேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக பின்வரும் சம்பவம் அமைந்துள்ளது . செர்பியாவில் நடந்துள்ள இந்த சம்பவம் தொடர்பில் ஒவ்வொரு மனிதனும் வெட்கித்துப் போக வேண்டியுள்ளது . ஆனால் 'கபிடளிசத்தின் ' 'ப்ரோபிட் அண்ட் பெனிபிட் ' தரத்தில் 'ஜஸ்ட் பிரக்டிகள் ஜோக்ஸ் ' வகையை சேர்ந்த இந்த சம்பவம் உலகம் எங்கே உள்ளது ? என்பதற்கு ஒரு நல்ல ஆதாரமாகும் .

சேர்பிய நாட்டின் பிரதமர் பங்குபற்றிய நேர்காணலின்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பெண் தனது காலை அகற்றிக் காட்டிய காட்சி அடங்கிய காணொளி வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் இச் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவது,சேர்பிய நாட்டு பிரதமரான இவிகா டாசிச் அண்மையில் நேர்காணலொன்றில் பங்குபற்றியுள்ளார்.இந்நிகழ்ச்சியை கவர்ச்சியான ஆடை அணிந்த பெண்ணொருவர் தொகுத்து வழங்கியுள்ளார்.ஆரம்பம் முதலே அவரது நடவடிக்கைகள் பிரதமருக்கு கிளர்ச்சியூட்டும் விதமாக அமைந்துள்ளன.

இந்நிலையில் நிகழ்ச்சியின் இடைநடுவே அவர் தனது கால்களை அகற்றிக் காட்டியுள்ளார். இதன் போது அப்பெண் உள்ளாடை எதனையும் அணியவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.இதனை சற்றும் எதிர்ப்பார்க்காத பிரதமர் இவிகா டாசிச் பெரும் அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளார்.இதனையடுத்து இந்நிகழ்ச்சி தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த நிகழ்ச்சியானது உண்மையான அரசியல் நிகழ்ச்சியொன்றல்ல எனவும் மாறாக இது தொலைக்காட்சிகளில் நபரொருவரை அவர் அறியா வண்ணம் குழப்பத்தில் ஆழ்த்தும் Practical Joke/ Prank வகையைச் சேர்ந்த வேடிக்கை நிகழ்ச்சியொன்றெனவும் தெரியவந்துள்ளது.

எனினும் இந்நிகழ்ச்சிக்கு சேர்பிய பிரதமர் அலுவலகம் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளதுடன் இது தொடர்பில் விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது. குறித்த பெண் தொகுப்பாளர் பிளே போய் சஞ்சிகையில் தோன்றிய மொடல் அழகியென்றும் தெரியவந்துள்ளது.

வீரகேசரி feb 7. 2013

ஒரு பெண் ஒரு ஆணின் பார்வையில் எவ்வாறு நோக்கப்பட வேண்டும் என்பதை இந்த மீடியாக்கள் மிக அழகாகவே காட்டி நிற்கின்றன ! ஒரு பெண் பாலியல் ரீதியாகவோ வேறு எதோ ஒரு வகையிலோ வன்முறைக்கு ஆளாவதை பற்றி கவலையோடு கூக்குரலிடும் இந்த மீடியாக்களின் நோக்கமும் பணத்தால், பணமிட்டு , பணத்திற்காக என்ற கேவலமான இயங்கியலை சுற்றியே பிண்ணப் பட்டுள்ளது . என்பதை உணர்த்த இந்த சம்பவம் நல்ல ஆதாரமாகும் . 

கிளர்ச்சியை தூண்டும் கவர்ச்சித் தூண்டிலில் பெண்ணை இரையாக்கி பாலியல் இரைதேடும் இயல்பான ஆணின் முன் வீசி எறிந்தால் !! விளைவு என்னவாகும் ? சுத்தமான ஒரு சில மீடியாக்கள் தவிர அநேக மீடியாக்கள் செய்வது இந்த 'பெண் போட்டு பிரபல்யம் பிடிக்கும் ' தரக்குறைவான தந்திரமே ! பின்னர்' ஐயோ ! பத்திக்கிச்சு !' என அரசியல் தரத்தில் குற்றம் சுற்றம் பேசுவதுமாகும் . சமூக ஒழுக்கத்தை சாக்கடையாக்கும் முதலாளித்துவ முதலைகளின் சிந்தனைப் பீரங்கிகள் தான் இந்த மீடியாக்கள் என்றால் அது தவறான கணிப்பல்ல .

பெண்ணுரிமை ,பெண் சுதந்திரம் , பெண் கல்வி , என போராட்டம் நடத்தும் உத்தமர்கள் இந்த 'கற்ப் பொழுக்கம் ' பற்றியும் ஒரு போராட்டம் நடத்திக் காட்டலாமே ? 'கணவன் மட்டும் காணும் அழகை கடைகளில் போட்டுக் காட்டும் எல்லோரையும் ஒரு கை பார்க்க பெண்கள் சமூகமே நீ ரெடியா ? ஸ் ..ஸ் .. ஊடக சுதந்திரம் அவர்களின் கேடயமாக அப்போதும் நீங்கள் அடக்கத்தான் படுவீர்கள் . மலாலாவை தாலிபான் சுட்டால் மட்டும் தான் நீங்கள் பெண்ணுரிமை பற்றிப் பேசலாம்!அபீஹம்சாவை அமெரிக்க சிப்பாய்கள் சிதைத்துக் கொன்றபோது கூட நீங்கள் மௌனம் காக்கத்தான் வைக்கப்பட்டீர்கள். உங்களது போராட்டத்தின் நியாயத்தையும் உங்களால் தீர்மானிக்க முடியாது ! ' கபிடலிச அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா !!! '

Jan 27, 2013

தொடரும் பெண்கள் மீதான வன்முறைகள் தீர்வு என்ன ? (பகுதி 11)

'மின்னலுக்குப் பயந்து இரும்புக் கூட்டில் ஒளித்தல்' என்றால் என்ன ?

பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் குறைக்கப்பட விபச்சாரத் தொழிலை சட்ட பூர்வமாக்கி பரவலாக்குங்கள் என்ற கருத்து இன்று இந்தியாவில் சிலரால் முன்வைக்கப் படுகின்றது .அண்மையில் டெல்லியில் நடந்த கொடூரமான பாலியல் வன்முறையுடன் கூடிய படுகொலை சம்பவம் தொடர்பில் கொதித் தெழுந்த மக்கள் கூட்டத்தின் முன் மேட்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் கிடைக்கப் பெற்ற பல்வேறு ஆலோசனைகளில் இதுவும் ஒன்றாகும் .

இந்தக் கருத்து மிகத் தவறானது மட்டுமல்ல பெண்கள் சமூகத்தின் மீது மட்டுமல்ல மிகக் கொடூரமான சிந்தனா ரீதியான சமூக நோய்க்கு வித்திடுவதுமாகும் . 'மின்னலுக்கு பயந்து இரும்புக் கூண்டில் ஒழிப்பது ' போல் ஒரு செயல் தான் இதுவாகும்; என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும் .

மேற்கின் சிந்தனா வாதத்தின் கீழ் படுதோல்வியடைந்த ஒரு வழிமுறையே திறந்த பாலியல் கொள்கையாகும் . அதன் ஒரு அம்சமே விபச்சாரத்தை 'லைசென்ஸ்' கொடுத்து பரவலாக்கினால் பாலியல் மூர்க்கத்தனம் குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பாகும் . ஆனால் இது நடந்ததா ? என்ற கேள்விக்கு பதிலை கீழே வரும் புள்ளி விபரத்தை பார்த்தாலே புரிந்து விடும் .

திறந்த பாலியல் பின்பற்றப் படும் நாடான அமெரிக்காவில் 1990 இல் இருந்து 2000 ம் ஆண்டு வரையான பத்து வருடங்களுக்குள் 2006093 பாலியல் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன . அதே போல 2000ம் ஆண்டில் இருந்து 2010 வரையான பத்து வருடங்களுக்குள் 2871732 பாலியல் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன . இவ்வளவிற்கும் தொழில் முறை விபச்சாரம் தாராளமாக கொடிகட்டிப் பறக்கும் நாடு ! மேற்கை 'காப்பி ' அடிக்கும் தவறான பாதை நல்ல விளைவை அல்ல இன்னும் பல சமூக நோய்களையே பெற்றுத்தரும் என்பதற்கு இது சிறந்த ஆதாரம் .

(அதே நேரம் அந்தக் கருத்துக் கணிப்பில் சவூதி அரேபியாவின் புள்ளி விபரங்கள் பின்வருமாறு இருந்தது . 1990 இல் இருந்து 2000 ம் ஆண்டு வரையான பத்து வருடங்களுக்குள் 25 பாலியல் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன . அதே போல 2000ம் ஆண்டில் இருந்து 2010 வரையான பத்து வருடங்களுக்குள் 22 பாலியல் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன . )

திறந்த பாலியல் கொள்கையின் கீழ் விபச்சாரத்தை மேற்கு சட்டபூர்வமாக்கியதன் அடுத்த விளைவு அது நேரடியாக தாக்கிய அடுத்த விடயம் குடும்பவியல். இன்றும் அங்கு தொழில் நுட்பத்தாலும் ,அறிவியலாலும் மேம்படுத்திக் காட்டப் படும் ஒரு போலியான நாகரீகத்தையே காட்ட முடிந்தது தவிர சிதைந்து சின்னா பின்னமான குடும்பக் கட்டமைப்பே அங்கு காணப்படுவது அவர்களே ஏற்றுக்கொண்ட விடயம் . இப்படியான நிலையை ஏற்படுத்தக் கூடிய திறந்த பாலியலின் விபச்சார 'லைசென்ஸ்' எமக்கு தேவையா ?

(தொடரும்...)

Jan 25, 2013

பெண் நிர்வாண சுகத்தில் நியாயம் காணும் உலகம்


(தொடரும் பெண்கள் மீதான வன்முறைகள் தீர்வு
என்ன ? (பகுதி 10))

பெண்ணை நிர்வாணப் படுத்தி பார்ப்பதில் பண்டைய ரோம் , கிரேக்கம் , அரேபியா , இந்த வரிசையில் நவீனத்தின் சொந்தக்காரர்களாக மார்தட்டிக் கொள்ளும் இன்றைய மேற்கின் சிந்தனையை அடிப்படையாக கொண்ட உலகும் சற்றும் சளைத்தது அல்ல . அவளை காட்சிப் பொருளாக்கி காமக் கண்களால் ரசித்து ருசித்து பார்ப்பதில் இன்று முழு உலகும் ஒருமித்த கருத்திலேயே உள்ளது .

ஆணின் இயல்பான காமப் பசிக்கு முன் அவள் அரை ,முழு நிர்வாணமாக நடமாடுவது என்பதில்தான் பெண் விடுதலை எனும் முட்டாள் தனமான அழைப்பில் அவளும் மயங்கினால் , விளைவு உள ரீதியான விபச்சாரம் கம்பியூட்டர் தொடங்கி மொபைல் போன் வரை சாதாரணமானது . வீதியல் தெரியும் ஒவ்வொரு விளம்பரமும் விபச்சாரத்தின் அழைப்பாக புரியப்படாமல் ஒரு கலை அம்சமாக காட்டப்பட்டது .

ஆண்கள் சமூகம் முன் காமக் காட்சிச் சாலையாக பெண்ணை உத்தியோக பூர்வமாக மாற்றிய பெருமை முதலாளித்துவத்தையே சாரும் . உங்களுக்கு தெரியுமா
'கொக்கா கோலா ' போத்தல் ; அதை சற்று கூர்ந்து பாருங்கள் . அதன் அமைப்பு ஒரு பெண்ணின் உடல் அமைப்பை மையப்படுத்தி செய்யப் பட்டது . கலை என்ற பெயரில் காமத்தை தூண்டும் வகையில் ஒரு குளிர்பானம் !

சிக்மன் புரைட் என்ற யூதனின் சிந்தனை தான் 'எல்லாமே செக்ஸ் ' குழந்தை விரல் சூப்புவதும் செக்ஸ் ! தாயின் மார்பில் சுரக்கும் பாலை அது குடிப்பதும் செக்ஸ் !
தொட்டில் முதல் செக்ஸ் தொடங்கி விடுமாம் !!! இதை கெட்டியாக பிடித்த முதலாளித்துவம் பெண்ணை பண்டமாக்கி ஆணின் முன் அனுபவி ராஜா அனுபவி .... என இவர்களே தாலாட்டுப் பாடி வெறித்தனத்தை தொடங்கி விட்டு பாலியல் வல்லுறவு என்ற அதன் கொடிய விளைவை அனுபவிக்கும் போது மட்டும் சட்டம் ஒழுங்கு என கத்திக் கதறுவதில் என்ன பயன் ?

(தொடரும் ...)

Jan 23, 2013

விபச்சார அழைப்பாக பெண் விடுதலை வாதம் .


விபச்சார அழைப்பாக பெண் விடுதலை வாதம் .
(தொடரும் பெண்களுக்கெதிரான வன்முறைகள் தீர்வு என்ன ?(பகுதி 09) )

இஸ்லாத்திற்கு முற்பட்ட அரேபியாவில் நான்கு முறையான ஆண் , பெண் உடலுறவுக்கான உறவு முறைகள் இருந்தன முதலாவது முறை இன்று இருப்பதைப் போல ஒருவன் தான் விரும்பும் பெண்ணின் தந்தையிடம் முறையாக பெண் கேட்பார் . அவரின் சம்மதத்துடன் அந்தப் பெண்ணால் நிர்ணயிக்கப் பட்ட ஒப்பந்தத் தொகையை கொடுத்து திருமணம் செய்து (தாம்பத்திய உறவில் ஈடுபட்டுக் ) கொள்வார் .

இரண்டாவது முறை கணவன் தன் மனைவியின் மாதவிடாய் காலம் முடிந்த பின் , ஒரு குறிப்பிட்ட உயர்ந்த குல ஆணை தன் மனைவியுடன் கூடச் செய்வான் . அவள் அதன் மூலம் கருவுறும் வரை அந்தக் கணவன் அவளை நெருங்க மாட்டான் . இங்கே இந்தக் கணவனின் நோக்கம் உயர்ந்த குலத்தில் இருந்து ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே ஆகும் .

மூன்றாவது முறை பத்து அல்லது அதற்கு குறைவான ஆண்கள் கூட்டம் , ஒரு குறிப்பிட்ட பெண்ணுடன் உடலுறவு கொள்ளுவார்கள் . அவள் கருவுற்று பிள்ளை பெற்றபின் அந்த ஆண்களை அழைப்பாள் .அந்த ஆண்களில் யாரும் அந்த அழைப்பை மறுக்கக் கூடாது . அவர்களிடம் அந்தப் பெண் பின் வருமாறு கூறுவாள் .

" நீங்கள் ,உங்கள் உறவால் விளைந்ததைக் கண்டீர்கள் . அது இந்தக் குழந்தைதான் " என்பாள் பின் அவர்களில் ஒருவனைக் காட்டி "இது உங்கள் குழந்தைதான் " என்று கூறுவாள் அதை அவன் மறுக்க முடியாது .

நான்காவது முறை ஒரு பெண் தன் வீட்டுக்கு முன்னாள் ஓர் கொடியை நாட்டி வைப்பாள் .அதன் அர்த்தம் உடல் சுகம் வேண்டுபவர்கள் தாராளமாக வாருங்கள். என்ற பகிரங்க அழைப்பே ஆகும் .பலரும் வருவார்கள் கூடுவார்கள் ,செல்வார்கள் . அவள் கருவுற்று குழந்தை பெற்ற பின் உறவு கொண்ட ஆண்கள் எல்லோரும் அழைக்கப் படுவர் .

பின்னர் குழந்தையின் சாயலைக் கொண்டு தந்தையை அடையாளம் காணும் திறமை உள்ளவள் என கருதப் படும் ஒரு குறிசொல்லும் பெண் அழைத்து வரப்படுவாள் . அவள் அந்த ஆண்களில் இருந்து ஒருவரை இனம் காட்டுவாள் அதுதான் அந்தக் குழந்தையின் தந்தை எனக் கூறப்படும் .அதை அவன் மறுக்க முடியாது .

ஆதாரம் :- புஹாரி

மேலே கூறியது நாம் கண் காணாதது .இதில் முதல் முறையை தவிர மற்றைய அனைத்தும் அப்பட்டமான விபச்சாரம் என்பதில் சந்தேகமில்லை . இதில் ஆணாதிக்கத்திற்கான வாசலை ஒரு பெண் சாதாரணமாகவே திறக்கிறாள் . அதே நேரம் அவமதிப்புக்கான மகுடத்தையும் அவளே சூடிக் கொள்கிறாள் . ஆனால் துரதிஷ்ட வசமாக இன்றைய நிகழ்காலமும் பெண்ணுரிமை என்ற பெயரில் வேண்டுவது இத்தகு தவறான பாதையினைத்தான் . பின்வரும் சம்பவத்தை படியுங்கள் .

இது நடந்தது 1990 களில் , திருமணமான முதலிரவிலேயே தன் கணவனை வெளியே இருத்தி விட்டு , இன்னொரு ஆணோடு சல்லாபித்தாள் ஒரு பங்களாதேச பெண் . அவள் உலகு அறிந்த 'செக்ஸ் ' எழுத்தாளர் . அவளது பெயர் 'தஸ்லிமா நஸ்ரின் '. பெண்ணுரிமையின் கீழ் அவள் கேட்டது ' ஒரு பெண் தனது கருப்பைக்குள் தாங்கள் விரும்பும் ஆணின் விந்துவை செலுத்தும் உரிமை ! (FREEDOM OF THE UTERUS) அதாவது கருப்பைச் சுதந்திரம் .

இந்த விபச்சார அழைப்புக்கு மேற்கின் பெண் விடுதலை வாதிகள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது . ஒரு பெண்ணை ஆண் எப்படி ரசிக்க ,அனுபவிக்க , பயன்படுத்த முடியுமோ அதற்கான வாயிலை அவளே திறக்கிறாள் . இவர்களும் பரிசோடும் ,மாலையோடும் படையெடுத்தார்கள் . புனிதமான் உறவை
கழிவரையாக்கும் இந்த நா(ய் )கரீகத்தின் பார்வையில் எப்படி ஒரு பெண் பாதுகாப்பாய் வாழ முடியும் ? மேலே தந்த அரேபிய ஆண் ,பெண் உடலுறவு முறையோடு இந்த (FREEDOM OF THE UTERUS) அதாவது கருப்பைச் சுதந்திரத்தை ஒப்பிட்டுப் பாருங்கள் நிறைய உண்மைகள் புலப்படும் .
(தொடரும் ...)

Jan 20, 2013

(தொடரும் பெண்கள் மீதான வன்முறைகள் தீர்வு என்ன ? (பகுதி 08) )

'குரங்கு கையில் பூமாலை ' என்றால் என்ன ?
(தொடரும் பெண்கள் மீதான வன்முறைகள் தீர்வு
என்ன ? (பகுதி 08) )

1961 இல் இந்த சம்பவம் பிரித்தானிய பாராளுமன்றத்தில் நடந்தது. இந்த சம்பவத்தோடு சம்பத்தப் பட்டவர் ஒரு அமைச்சர் .சாதாரண அமைச்சர் அல்ல பிரித்தானிய பாதுகாப்புத் துறையோடு சம்பத்தப் பட்ட அமைச்சர் . அவரின் பெயர் 'JOHN PROFUMO ' . அவரின் கேவலமான நடத்தைக்கு உதாரணமான சம்பவமே கீழேவருகின்றது .இது ஒரு தனி மனித தவறு என்பதால் சுட்டிக்காட்டவில்லை ஆனால் அந்த சமூகத்தின் பிரதானிகள் , அந்த சமூகத்திற்கு சட்டம் இயற்றக் கூடியவர்கள் . இது சம்பந்தமாக என்ன தீர்ப்பைக் கூறினார்கள் என்பதை எடுத்துக் காட்டவே ஆகும் .

இந்த அமைச்சருக்கும் 'கிரிஸ்டைன் கீலர் ' என்ற மொடல் அழகிக்கும் இடையில் தவறான பாலியல் தொடர்பு இருந்தது . இந்த கள்ளத் தொடர்பு வெளியே தெரிந்தது . கோபத்தோடு
அந்த பாராளுமன்றம் சம்பவத்தை பற்றி கடுமையாக விசாரிக்கத் தொடங்கியது . (சில நேரம் தங்களுக்கு அந்த காம சுகம் கிடைக்க வில்லையே ! என்ற கவலையாக கூட இருக்கலாம் .) காரணம் இது தான் .

அவர்கள் கோபப்பட்ட காரணம் 'கிரிஸ்டைன் கீலர் ' என்ற அந்தப் பெண் ஒரு ரஷ்ய உளவாளி .ஒரு ரஷ்ய கடற்படை அதிகாரியுடனும் அவளுக்கு 'செக்ஸ்' உறவு இருந்தது,பிரித்தானிய இராணுவ இரகசியங்களை அவளது உடலைக் காட்டி இந்த அமைச்சரிடம் இருந்து வாங்கி , அந்த கடற்படை அதிகாரி மூலம் ரஷ்யாவிற்கு கடத்தப்பட்டதும் தெரிய வந்தது .

அந்த அமைச்சர் தான் தப்பிக்கொள்ள பல பொய்களை கூறினார் . ஆனால் சம்பவங்கள் யாவும் ஆதாரத்தோடு நிரூபிக்கப் பட்டது .பிரித்தானிய பாராளுமன்றம் என்றால் இன்றைய சர்வதேச ஜனநாயக வடிவத்தின் தந்தை என்று கூட கூறலாம் . இந்த சம்பவம் தொடர்பில் கொடுத்த தீர்ப்பு என்ன ?அது இதுதான் .

" குறித்த சம்பவத்தில் அமைச்சர் 'JOHN PROFUMO' 'கிரிஸ்டைன் கீலர் ' உடன் 'செக்ஸ்' உறவு வைத்துக் கொண்டது தவறில்லை . அது அவரது தனிப்பட்ட விடயம் . அத்தோடு அது எமது பண்பாட்டு எல்லைகளுக்கும் உட்பட்டது ! ஆனால் இராணுவ இரகசியங்கள் வெளியிடப் பட்டது தான் தவறானது !எனவே அதற்காக அவர் தண்டிக்கப் பட வேண்டும் "

# இங்கு அந்த அமைச்சரின் தவறான 'செக்ஸ்' உறவு அவர்களின் பண்பாட்டு எல்லைகளுக்கு உட்பட்டதாம் !

# தவறு கண்டு பிடிக்கப் பட்டும் தன்னை நிரூபிக்க அமைச்சர் 'JOHN PROFUMO' பொய் சொன்னது கூட தவறில்லையாம் !!

# உலகத்திற்கே ஒளி கொடுத்த ஐரோப்பா என சொல்லப்பட்டாலும் , பெண் தொடர்பில் தனது வரலாற்று மனப் பாங்கை மாற்றிக் கொள்ளவில்லை !!!

இப்படி இங்கே கவனிக்க வேண்டிய பல விடயங்கள் இருக்கின்றன . ஆனால் இந்த உதாரண சம்பவத்தோடு ஒத்துப் போகக் கூடிய பல சம்பவங்கள் . இன்னும் பல நாடுகளிலும் நடந்துள்ளன . எல்லா பாராளு மன்றங்களும் இத்தகு துப்புக்கெட்ட தனத்தோடுதான் இருக்கின்றன . இப்படிப் பட்டவர்கள் தான் மனிதனுக்காக சட்டம் இயற்றப் போகிறார்களாம் !!! இவர்களின் மூலம் தான் பெண்கள் மீது தொடரப்படும் வன்முறைகளுக்கு பாதுகாப்பு கிடைக்கப் போகிறதாம் !!! இதை 'குரங்கு கையில் பூமாலை ' என்று நாம் சுருக்கமாக கூறலாம் .

(தொடரும் ...)

Jan 17, 2013

தொடரும் பெண்கள் மீதான வன்முறைகள் தீர்வு என்ன ? (பகுதி 07)



ஐரோப்பாவின் அறிவியல் ஆதிக்கம் மதத்தை சர்ச்சுகளுக்கு உள்ளே மட்டும் அங்கீகரித்து
மதச் சார்பற்ற அரசியலை கொள்கையாக்கியது . இங்கும் முதலாளித்துவம் புகுந்து விளையாடியது . எதிலும் இலாபம் என்ற சுயநலம் மனித மூளைகளை இயக்கியது . அடக்கி ஆளப்பட்ட பெண்கள் சமூகம்
தனது உரிமைகளை வென்றெடுக்க காலம் கணிந்ததாக நினைத்து களமிறங்கினார்கள் .

தொழில் புரட்சியின் மூலம் இலாபத்தை குறிவைத்த முதலாளி வர்க்கம் சந்தர்ப்பத்தை சாதகமாக்கியது . பெண் வீதிக்கு இறங்கினாள் ; அவளின் விடுதலைப் பாதை 'மோடேர்ன் ஐரோப்பாவின் 'தொழில் புரட்சியின் விலை குறைந்த தொழிலாளியாக சந்தைப் படுத்தியது . அவளின் தாகத்திற்கு கானல் நீர் காட்டப் பட்டது . ஒரு ஆணை விட குறைந்த சம்பளத்தில் பெண் வேலை வாங்கப் பட்டாள் !

உலகப் போர்கள் ஆண்களின் தொகையை பெருமளவில் குறைத்தது . பெண்கள் வேலை செய்வதற்கான ஊக்கம் அதிகரிக்கப் பட்டது . குடும்பம் எனும் அமைப்பு ஏறத்தாள சிதைந்தே போனது . இந்த இயந்திர வாழ்க்கை தான் அவளது விடுதலையா ? ஆனாலும் அவள் 'செக்ஸ் மெசின் ' என்ற பார்வை அழுத்தமாகவே அதையும் அவளது சேவையாக்கியது .

* தொழில் முறை விபச்சாரம் சட்டங்களால் வேலியோடு தொடரப் பட்டது .

* அனுசரிப்பு விபச்சாரம் தொழில் நிறுவனங்களில் சாதாரணமானது .

காமத்தில் இலாபம், இலாபமான காமம் இந்த இயங்கு விதியோடு பெண் நோக்கப் பட்டதுதான்
தொழில் புரட்சியின் பெண் தொடர்பான மகத்தான
புரட்சி !

(தொடரும் ...)

Jan 16, 2013

தொடரும் பெண்கள் மீதான வன்முறைகள் தீர்வு என்ன ?(பகுதி 06)

ஜனநாயகத்தில் பெண் .

ஜனநாயக நெருப்பின் முன் 
ஒரு விட்டில் பூச்சியாய் பெண் 
உலகில் உலா வந்தாள் !
சம வாழ்வுரிமை ,வாக்குரிமை 
தொழில் உரிமை , ஆணோடு சம உரிமை 
எல்லாம் கிடைத்தது 
காமப் பார்வைகளின் தொடரில்
நிம்மதியை மட்டும் விலை பேசியதாக !

கருப்பை சுதந்திரத்தின் முன்
கட்டில் சுகத்தோடு அவள்
விடுதலை வீட்டில் அவமானத்தை
உரிமையோடு தொட்டில்
கட்டவும் கேட்டாள் !
அந்த விபச்சார விலாசத்தை தேடி
'நோபல் ' பரிசோடு அணிவகுத்தார்கள்
அந்த நவீனத்தின் காவலர்கள் !

(தொடரும் ...)

Jan 15, 2013

தொடரும் பெண்கள் மீதான வன்முறைகள் தீர்வு என்ன ?(பகுதி 05)

" பேய் அரசாண்டால் பிணம் திண்ணும் சாத்திரங்கள்! அதன் கொள்கைகள் கொலைக் களங்களை பிரசவிக்கும் !அதன் சட்டங்களும் கோரமாக இரத்தம் குடிக்கும் !சுயநல மேடை போட்டு நீதியை மிதித்து அங்கு அநீதி ஆனந்தக் கூத்தாடி மகிழும் ! - இதுதான் இன்றைய அதிகாரங்கள் அரசியலாக கற்றுத் தருபவை " டெல்லியில் நடந்த அந்த மிருகத் தனமான பாலியல் வன்முறையோடு கூடிய படு கொலையோ , அல்லது அதே இந்தியாவில் காஸ்மீரில் இந்த முஸ்லீம் உம்மத்தின் சகோதரிகளின் உடல்கள் மீது படுபயங்கரமாக இந்திய இராணுவ ஜவான்களால் நிகழ்த்தப் படும் பயங்கர வாத எதிர்ப்பு யுத்தமோ, அரசியல் தரத்தில் இரண்டு வேறுபட்ட பார்வைகள் . மனித குலத்தின் கீழ்த்தரமான அணுகு முறைகளுக்கு இது சிறந்த உதாரணம் . பார்வையின் கோணத்தில் இருந்தே நடைமுறைகள் தீர்மானிக்கப் படுகின்றன . அந்த பார்வையை தீர்மானிப்பது கொள்கைகள் என்றால் அது மிகையான கருத்தல்ல .இது பொதுவாக எல்லா விடயங்களுக்கும் பொருந்தும் . எப்போதும் எமக்கு முன் ஏற்படும் அநீதமான வன்முறைகள் தொடர்பாக எமது தீர்வுகள் தற்காலிகமான சில உணர்ச்சி கரமான நடவடிக்கைகள் பற்றியே சிந்திக்கின்றன . ஒரு அடிப்படைக் கொள்கையின் தவிர்க்க முடியாத விளைவாக அந்த வன்முறை பார்க்கப் படுவதில்லை . இன்று எம்முன் நிற்கின்ற ஒட்டு மொத்த கொள்கைகள் ,சிந்தனைகள் பெண்கள் தொடர்பில் எவ்வாறான கருத்தை வைத்திருக்கின்றது ? என ஆராயப் போகும் போது ஒரு விரிவான தேடல் அவசியமாகின்றது . ஆனால் பொதுக்கருத்தில் பெண்கள் தொடர்பான கருத்தில் பல உடன்பாடுகளை அவை கொண்டிருக்கின்றது ; என்பதை நிரூபிக்க பக்கம் பக்கமாக ஆராயும் அவசியம் இருக்காது . கிரேக்கமோ , ரோம் சமூகமோ , அல்லது ஐரோப்பாவோ , அரேபியாவோ ,ஆபிரிக்காவோ , ஆசியாவோ , தமது கருத்தில் பெண்கள் தொடர்பான நிலைப்பாட்டை விளக்க , அல்லது அவைகளின் பெண் தொடர்பான பொதுப் பண்பை விளக்க சில உதாரண சம்பவங்களே போதுமாக இருந்தது . இந்த விதி இன்று எம்முன் நிற்கும் கொள்கைகள் , சிந்தனைகள் பற்றி ஆராயவும் போதுமானதாகும் . அந்த வகையில் முதலாளித்துவமோ , கம்பியூனிசமோ , பெண் தொடர்பில் பார்த்த பார்வை என்ன ? என்று நாம் ஆராய முற்படுகையில், எல்லாம் பாலியல் கவர்ச்சியே என்ற 'சிக்மன் புரைடின் ' சிந்தனை ஆதிக்கமும் , சார்ல்ஸ் டாவினின் கூர்ப்புக் கொள்கையும் அறிந்தும் அறியாமலும் இரண்டறக் கலந்த கோட்பாடுகளாகவே (முதலாளித்துவமும் , கம்பியூனிசமும் ) இருக்கின்றன . என்ற முடிவிற்கு எம்மால் வரமுடியும் . இந்த விடயத்தை ஆராய முன் இன்னும் ஒரு விடயத்தை விளக்க வேண்டிய தேவை எனக்கிருக்கின்றது . அது ஒரு கேள்விக்கான விடையாய் வந்து எம்மை ஆச்சரியப் படுத்தும் . அந்தக் கேள்வி இதுதான் ' மனித குல வரலாற்றின் மிகப் பழமையான தொழில் எது ?' என்ற வினாவே அதுவாகும் . பல வருடங்களுக்கு முன்னர் உளவுத்துறை சம்பந்தமான ஒரு ஆய்வு நூலில் இது பற்றி நான் படித்துள்ளேன் . அதன் விடையைக் கண்டு நான் சற்று ஆச்சரியம் அடைந்தேன் . அதன் விடை இவ்வாறு இருந்தது 1. விபச்சாரம் , 2. உளவு வேலை என்பதாக இருந்தது . அதிலும் இந்த இரண்டு தொழில்களிலும் வெற்றிகரமாக இயங்கியவர்கள் பெண்கள் என்பதாகவும் , பல்வேறுபட்ட நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இன்றும் இலாபகரமாக இயங்கும் நிறுவனங்கள் இவைதான் என்றும் அதில் குறிப்பிடப் பட்டிருந்தது . (தொடரும் ...)

Jan 14, 2013

தொடரும் பெண்கள் மீதான வன்முறைகள் தீர்வு என்ன ?(பகுதி 04)

முன்னைய சமூகங்களில் பெண்களின் நிலை பற்றி ஆராயும் தொடரில் ,கிரேக்கம் ,ரோம் , ஐரோப்பா போன்ற பகுதிகளை நாங்கள் இதுவரை பார்த்தோம் . இன்றைய உலகின் ஆதிக்க சக்தியாய் வீற்றிருக்கும் முதலாளித்துவ சிந்தனா வாதத்தின் ஆரம்ப அத்திவாரமாக குறிப்பிடப் படும் சமூகங்களே நான் இதுவரை குறிப்பிட்டவை .இதே வரிசையில் இஸ்லாத்திற்கு முந்திய அரேபியா, மற்றும் ஆபிரிக்க ,ஆசிய பகுதிகளோடு தொடர்பு பட்ட நாகரீகங்களில் பெண்கள் தொடர்பான பார்வை மற்றும் நடத்தை பற்றியும் சிறிதளவு ஆராய்வது பொருத்தம் .

உண்மையில் இந்த நாகரீகங்களிலும் வழிவரான கலாச்சாரம் , மதக் கோட்பாட்டு அழுத்தங்களுடன் கூடிய சாதிக் கோட்பாடு என்பவற்றின் கீழ் பெண்கள் சமூகம் தரக்குறைவாக நடத்தப் பட்டமைக்கு பல ஆதாரங்களை நாம் காண முடியும் . ஒப்பீட்டளவில் கிரேக்கம் ,ரோம் , ஐரோப்பா போன்ற பகுதிகளை ஒத்த செயலையே சில வடிவ மாறுபாட்டோடு இந்த சமூகங்களும் செய்துள்ளன .
# பெண் சிசுக் கொலை
# தேவதாசிக் கோட்பாடு
# தாழ் சாதி விதியின் கீழ் மேலாடை அணியத் தடை .
# உடன் கட்டை ஏறுதல் .
போன்ற விதிகளின் கீழ் தனது சமூகத்திற்கு உள்ளும் ,பிற சமூகங்களுக்கு மத்தியிலும் மிக அதிகமாகவே பெண்கள் சமூகம் தாழ்த்தப்பட்டது.இந்த தரக்குறைவான நியதிகளின் கீழ் பேசும் விலங்கு என்ற போலித் தத்துவத்தை அவள் உருவப் படுத்தினாள் . சில ஆபிரிக்க பழங்குடியினர் அவளின் மீதான நம்பிக்கையீனத்தின் சான்றாக அவளின் யோனித் துவரங்களை கூட குறிப்பிட்ட காலம் தைத்து விடுவார்களாம் !

தொட்டில் பழக்கத்தில் இருந்து பெண்கள் தொடர்பில் தவறான கருது கோள்களே சமூகங்காளால் கற்றுத் தரப்படுகின்றன . அதாவது கலாச்சாரப் பாரம்பரியங்கள் ,மதங்கள் ,சிந்தனைகள் போன்ற எல்லாமே பெண்கள் தொடர்பில் ஒரு வகையான வன்முறைப் பார்வையையே கற்றுக் கொடுக்கின்றன .

(தொடரும் ...)

Jan 11, 2013

தொடரும் பெண்கள் மீதான வன்முறைகள் தீர்வு என்ன ? (பகுதி 03)

ஐரோப்பிய சமூகம் பெண்களைப் பற்றி எவ்வாறு கருதியது ?
ஐரோப்பிய நாகரீகத்தில் பெண்கள் என்ற விடயத்தை நாம் ஆராயும் போது , இன்றைய நவீனத்தின் நாம் ஆராயும் விடயத்தின் அடிப்படையை தொட்டவர்களாக ஆகிவிடுவோம் . இருண்ட ஐரோப்பா என்ற வரைவிலக்கணத்தை வரலாற்றுப் பாடத்தின் ஒரு தகவலாக அனேகமாக எல்லோரும் கற்றுள்ளோம்.அதில் 'கிறிஸ்தவ சர்ச்சுகளின் ' சர்வதிகாரம் சகலதையும் கடவுளின் பெயரால் தவறாக செய்தது . அந்த தவறில் இருந்து பெண்ணியத்தின் கண்ணியமும் அகௌரவமாக சித்தரிக்கப்பட கிரேக்க ,ரோம நாகரீகத்தை விட சற்று வித்தியாசமான அடக்கு முறையை பெண்களின் மீது மதத்தின் பெயரால் கிறிஸ்தவம் செய்தது .

'முதல் பாவம் ' என்ற கோட்பாட்டில் இருந்து பெண் நோக்கப்பட்டாள் . ஆதம் (அலை ),ஹவ்வா (அலை ) என்ற முதல் மனித படைப்பின் ஆரம்பத்தில் தடுக்கப்பட்ட சுவனத்தின் கனியை சுவைக்கத் தூண்டியது ஹவ்வாவே (ஏவாள் ).ஆகவே முதலில் பாவத்தின் பக்கம் மனிதனை தூண்டியவள் பெண்; இதுவே ஆதி பாவம், இதனால் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் பாவத்திலேயே பிறக்கின்றன என்ற கோட்பாட்டை சமூக மயமாக்கினார்கள் .

விளைவு அது ஐரோப்பாவையே 'பெண்களுக்கு ஆன்மா உண்டா,இல்லையா ? என்ற விவாதத்தில் ஈடுபடவைத்தது . ஒரு உயர் குடி சீமான்களின் குழு அன்று அவளுக்கு ஆன்மா இல்லை என அடித்துக் கூறியது . TERTULIAN என்ற கிறிஸ்தவப் பாதிரியார் பின்வருமாறு பெண் விடயத்தில் கருத்துக் கூறினார் .

" அவள் சாத்தானிய உணர்வுகளை தூண்டுபவள் . மனிதனை தடுக்கப்பட்ட மரத்தின் பக்கம் கொண்டு சென்றவள் ,இறைவனின் கட்டளைகளை உடைத்தவள் ,மனிதனை ஒழுக்கக் கேட்டில்
ஆழ்த்துபவள் ." என்று கூறி நின்றார் . இதனடிப்படையில் பெண்கள் தாழ்வாக பார்க்கப் பட்டார்கள் . அவளது அடிப்படை உரிமைகள் கூட இங்கு கேள்விக்குறியானது .

இந்த காலகட்டத்தில் தான் கிறிஸ்தவ சர்வாதிகாரத்திற்கும் , அறிவியலுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு சமரசத்தின் அடிப்படையில் தவறான ஆன்மீகம், உலகியலில் இருந்து பிரிக்கப் பட்டு சர்ச்சுகளுக்குள் முடக்கப் பட்டது , மதச்சார்பின்மை வாழ்வியல் கொள்கையாக ஆட்சி ஏறியது . அடங்கியிருந்த பெண்களும் தமது விடுதலை உணர்வுக்கு அது சிறந்த உணவு தரும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தார்கள் . விஷத்திற்கு அமுதம் என்ற பெயர் கொடுத்து அவளது விடுதலை கீதம் இங்கும் இசைக்கப்பட்டது . எவ்வாறு ? என்பதை தொடர்ந்தும் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ் .

(தொடரும் ...)

தொடரும் பெண்கள் மீதான வன்முறைகள் தீர்வு என்ன ? (பகுதி 02)

சமூகக் கோட்பாட்டில் பெண்கள் ஒரு சுருக்க வரலாற்றுப் பார்வை .

வரலாற்று ரீதியில் பெண்கள் தொடர்பான பல்வேறு சமூகங்களின் கருத்துக்களை முதலில் நாங்கள் ஆராய்வது பொருத்தமானது . ஏனென்றால் இந்த ஆய்வின் மூலம் இன்றைய சூழலில் அவ்வாறான பார்வைகள் இருக்கின்றதா என்பதை எம்மால் உணர்ந்து கொள்ள முடியும் .

கிரேக்க சமூகம் பெண்களைப் பற்றி எவ்வாறு
கருதியது ?
'பண்டோரா ' எனும் பெண்ணே முதல் பெண் , இவளே எல்லா தீமைகளுக்கும் ஆணி வேராகும் . இந்த அடிப்படையில் பெண்களிடமிருந்தே எல்லாத் தீமைகளும் உற்பத்தியாகின்றன . அவள் மனிதப் பிறவியே அல்ல . இந்த பார்வையின் கீழ் அவர்கள் பெண்களை விலங்குகளை விட கேவலமாக நடாத்தினார்கள் . அங்கு பெண்களின் உரிமை பற்றியோ ,சலுகை பற்றியோ எவ்வித பேச்சுக்கும் இடமிருக்கவில்லை , எவ்வளவு மோசமாக கேவலப் படுத்த முடியுமோ அவ்வளவு மோசமாக கேவலப் படுத்தினார்கள் .

ஆனால் காலப் போக்கில் பெண்கள் தொடர்பான இவர்களது அணுகுமுறைகளில் சற்று மாற்றம் ஏற்பட்டது அதுவும் சிலகாலம்தான் ; மீண்டும் கிரேக்கம் நாகரீகத்தின் உச்சமாக தன்னை காட்டி நின்ற இன்னொரு பொழுதில் காமம் என்ற உணர்வு கட்டுப்பாடிழந்து விபச்சாரம் கட்டாய சேவையாகியது . திருமணம் என்பது ஒரு வகையான அனாவசியமான கட்டுப்பாடு என எண்ணினார்கள் .

இந்த மாற்றத்தில் கிரேக்கத்தில் பெண்ணுக்கான தரத்தை கடவுள் அந்தஸ்தில் உயர்த்தினார்கள் . அதுவும் சாதாரண கடவுள் அல்ல ; காதலுக்கே உரிய கடவுள் . அவளின் பெயர்
'APHRODITE ' இவள் ஒரு ஆண் கடவுளின் மணைவி .அத்தோடு இன்னும் மூன்று ஆண் கடவுள்களோடு
காதல் தொடர்பு வேறு (கள்ளமாக ) வைத்திருந்தாள் . இந்த தகாத தொடர்பால் 'CUPID' எனும் இன்னொரு
கடவுளும் பிறந்தார் என தொடர்கிறது அந்த அசிங்கப் புராணம் .

ரோம் சமூகம் பெண்களைப் பற்றி எவ்வாறு கருதியது ?
இவர்களது அணுகு முறையும் கிரேக்கர்களைவிட சற்றும் குறைந்ததாக இருக்க வில்லை . 'பெண்ணுக்கு ஆன்மாவே இல்லை ' என்பதே இவர்களின் தத்துவம் .பின்னர் கிரேக்கர்களை போலவே ஒரு தளர்வான மனோ நிலையில் சில காலம் வாழ்ந்தார்கள் . இவர்களது வேதாளமும் கிரேக்கர்களைப் போல் சற்று வித்தியாசமாக முருங்கை மரத்தில் ஏறியது .

' பெண்கள் அனுபவித்து சுவைக்கவே ' என்ற கொள்கை இங்கு நடைமுறை
ஆகியது . விளைவு அவர்கள் பாலியல் கருவியாகி (SEX MACHINES ) பாவிக்கப் பட்டார்கள் . அவர்களின்
இந்த அடாத செயல்களுக்கு ஒரு வரலாற்றுச் சம்பவம் இதோ .

'ப்ளோர ' எனும் ஒரு விளையாட்டு ; இதில் பெண்கள் முழு நிர்வாணமாக
ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்வார்கள் . ஆண்கள் அந்த விளையாட்டை கண்டு களிப்பார்கள் . இங்கு பெண்கள் பல ஆண்களை அடக்கி ஆண்டார்கள் அதிகாரத்தால் அல்ல , உரிமைகளால் அல்ல , மாற்றமாக
தங்கள் உடல்களால் !

(தொடரும் ....)

தொடரும் பெண்கள் மீதான வன்முறைகள் தீர்வு என்ன ?(பகுதி01)

பெண் விடுதலை , கருப்பை சுதந்திரம் , ஆணுக்கு நிகரான பெண் சமத்துவம் ,போன்ற கோஷங்கள் அன்றாடம் எழுப்பப்பட்டும் , சட்டரீதியான அதன் வடிவங்கள் நடைமுறைப்படுத்தப் பட்டும் இருக்கும் நிலையிலும், பெண்களுக்கெதிரான வன்முறைகள் ,அடக்கு முறைகள் , அத்துமீறல்கள் உலகெங்கும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது . இது தொடர்பில் சட்டத்தின் பாதுகாப்பும் , கிரிமினல் குற்றங்களுக்கான தண்டனைகளும் கேள்விக்குறியான நிலையில் ஒவ்வொரு பெண்ணும் தனது சமூக வாழ்வு குறித்து அச்சப்பட்டே காலம் நகர்த்த வேண்டியுள்ளது . 

தொட்டில் முதல் மயானம் வரை தொடரும் இந்த அநியாயம் தடுக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை . ஆனால் பெண்கள் சமூகம் மீண்டும் மீண்டும்
கவர்ச்சிகரமான பாதையில் தவறான இலக்குகளை நோக்கியே இது விடயத்தில் இழுத்துச் செல்லப் படுகின்றது .இறுதியில் அனுசரித்தால் வாழலாம் என்ற தத்துவத்தை சொல்லாமல் சொல்லி பெண்கள் சமூகத்தை ஒரு கருத்துப் போலிக்குள் முடக்கி விடுவதே காலம் காலமாக நடந்து வரும் தீர்வெனும் தவறாகும் .

இது விடயத்தில் தீர்வு என முன்வைக்கப்படும் நவீனம் ,விடுதலை என்ற அப்பட்டமான முதலாளித்துவ சுயநலக் கண்களினால் பெண்ணை ஒரு இலாபம் தரும் நடமாடும் பண்டமாகவே அலைய விட்டுள்ளது . இந்த பார்வையின் உச்ச விளைவை வன்முறை வடிவில் எதிர்நோக்கும் போது மட்டும் அவ்வப்போது ஆவேசமாக கூக்குரலிடுவதில் அர்த்தமில்லை . எனவே இதற்கு சரியான தீர்வென்ன ? இந்த அடிப்படையில் என்னால் முடிந்த வரையான ஒரு பதிவை தொடராக முன்வைக்க முயற்சிக்கிறேன் இன்ஷா அல்லாஹ் . அதன் ஆரம்பப் பந்திகளே மேலே தந்தவை .

(தொடரும் ...)