Showing posts with label Dangerous Concepts. Show all posts
Showing posts with label Dangerous Concepts. Show all posts

Jan 27, 2016

இஸ்லாமியத் தலைமைத்துவத்திலிருந்து ஜனநாயகம் முரண்படுகிறது – பாகம் – 2

அல்லாஹ்(சுபு)வின் நேசம் மனிதன்மீது இறங்குவதுதான் ஈமான் மற்றும் இறைவனுக்கு கட்டுப்படுதல் ஆகியவற்றின் மிகஉயர்ந்த நிலையாக இருக்கிறது. இறைவன்மீது ஈமான் கொண்டு அவனுக்கு கட்டுப்படும் மக்கள் அவனுடைய நேசத்திற்கு தகுதியானவர்களாக இருக்கிறார்கள். அல்லாஹ்(சுபு)வின்ஹ நேசத்தை பெற்றுக்கொள்வதில் அவன் விதித்துள்ள நிபந்தனையை கடை பிடிப்பவர்களுக்கு எல்லாம்வல்ல இறைவன் அருள்பாலிக்கிறான். நபி(ஸல்) அவர்களை மட்டுமே தலைவராகவும் கட்டளையிடும் அதிகாரம் பெற்றவராகவும் ஏற்றுக்கொண்டு பின்பற்றுவதுதான் அல்லாஹ்(சுபு)வின் நேசத்தில் உண்மையாக இருப்தற்குரிய நிபந்தனையாக இருக்கிறது. குர்ஆன் மற்றும் சுன்னா ஆகியவற்றின் சட்டரீதியான விதிமுறைகளுக்கு மட்டும் கட்டுப்படுவதுதான் வாழ்வியல் பயணத்தில் பங்குகொள்வதற்கும் வாழ்வியலின் கடும்பணிகளை நிறைவேற்று வததற்கும் உரிய நிபந்தனையாக இருக்கிறது. அல்லாஹ்(சுபு)வும் அவனுடையதூதர் முஹம்மது (ஸல்) அவர்களும் பரிந்துரை செய்துள்ள சிந்தனையுடன் முரண்படுகின்ற சிந்தனையின் அடிப்படையில் எவரேனும் தனது வாழ்க்கை பயணத்தை அமைத்துக்கொண்டால், அல்லாஹ் (சுபு) அருளியவற்றிற்கு அந்நியமான சட்டத்தை எவரேனும் மனநிறைவுடன் பின்பற்றினால், தனது அபிப்ராயம் மற்றும் சிந்தனை அடிப்படையில் தன்னை பின்பற்றவேண்டும் என்று அழைப்புவிடுக்கும் தலைவரை எவரேனும் பின்பற்றினால், அல்லாஹ்(சுபு)வின் சட்டங்களை பின்பற்றி செயலாற்றாத குழுவை எவரேனும் பின்பற்றினால், தலைவர் குழுக்கள் ஆட்சியாளர் ஆகியவர்களின் கூற்றுகள் அல்லாஹ்(சுபு)வின் கட்டளைகளுக்கும் சட்டங்களுக்கும் இணக்கமாக இருக்கிறதா அல்லது முரண்பாடாக இருக்கிறதா என்பதை ஆய்வுசெய்யாமல் எவரேனும் அவற்றை பின்பற்றினால் நிச்யமாக அவர்கள் அல்லாஹ்(சுபு)வின் கேள்விக்கணக்கிலிருந்து தப்பித்துச்செல்ல முடியாது!
 
     ஆகவே அல்லாஹ்(சுபு) அருளியவற்றிற்கு அந்நியமானவற்றின்பால் மக்களிலுள்ள தலைவர் ஒருவர் அழைக்கும் நிலையில் அதை ஒருமுஸ்லிம் பின்பற்றினால், அல்லது முஸ்லிம்களை ஏமாற்றும் பொருட்டு குறிப்பிட்ட சட்டம் உண்மையாக இறைசட்டமாக இல்லாத நிலையில் அது அல்லாஹ்(சுபு)வின் சட்டத்திற்கு இணக்கமாக இருக்கிறது என்று கூறும் நிலையில் அதை ஒருமுஸ்லிம் பின்பற்றினால் அவர் அல்லாஹ்(சுபு)வும் அவனுடைய தூதர்(ஸல்) அவர்களும் வழங்காத சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடப்பவர்களாகவே கருதப்படுவார்கள். மறுமைநாளில் அவருடைய நிலை மகத்துவமிக்க அல்லாஹ்(சுபு) கூறுவதை போன்று இருக்கும்,
 
إِنَّ اللَّهَ لَعَنَ الْكَافِرِينَ وَأَعَدَّ لَهُمْ سَعِيرًا خَالِدِينَ فِيهَا أَبَدًا لَا يَجِدُونَ وَلِيًّا وَلَا نَصِيرًا يَوْمَ تُقَلَّبُ وُجُوهُهُمْ فِي النَّارِ يَقُولُونَ يَا لَيْتَنَا أَطَعْنَا اللَّهَ وَأَطَعْنَا الرَّسُولَا وَقَالُوا رَبَّنَا إِنَّا أَطَعْنَا سَادَتَنَا وَكُبَرَاءَنَا فَأَضَلُّونَا السَّبِيلَا رَبَّنَا آَتِهِمْ ضِعْفَيْنِ مِنَ الْعَذَابِ وَالْعَنْهُمْ لَعْنًا كَبِيرًا  ‎ ‎‎‎‎‎‎  ‎
     நிச்சயமாகஅல்லாஹ்நிராகரிப்பவர்களைசபித்துகொழுந்துவிட்டெரியும்நெருப்பைஅவர்களுக்காகதயார்படுத்திவைத்திருக்கிறான். அவர்கள்என்றென்றும்அதில்தங்கிவிடுவார்கள்.
 
அவர்களுக்குபாதுகாப்புஅளிப்பவர்களையோஉதவிசெய்பவர்களையோஅவர்கள்அங்குகாணமாட்டார்கள். நரகத்தில்அவர்களுடையமுகங்கள்புரட்டிப்புரட்டுபொசுக்கப்படும்நாளில்எங்களுடையகேடே!
 
நாங்கள்அல்லாஹ்வுக்கும்அவனுடையதூதருக்கும்வழிபட்டிருக்கவேண்டாமா?! என்றுகதறுவார்கள். அன்றியும்எங்கள்இறைவனே!
  நிச்சயமாகநாங்கள்எங்கள்தலைவர்களுக்கும்எங்கள்பெரியவர்களுக்கும்வழிபட்டோம். நாங்கள்தவறானவழியில்செல்லும்படிஅவர்கள்செய்துவிட்டார்கள். எங்கள்இறைவனே!
 
நீஅவர்களுக்குஇருமடங்குவேதனையைகொடுத்துஅவர்கள்மீதுபெரும்சாபத்தைகொண்டுசபிப்பாயாக!’ என்றுகூறுவார்கள். (அல்அஹ்ஸாப் : 64 – 68)
 
உண்மையில் தனிமனிதரை அல்லது (சட்டரீதியாக அமைக்கப்படாத) குழுவை அல்லது அல்லாஹ்(சுபு)வின் வழிகாட்டுதலிலிருந்து விலகிச்செல்லும் சட்டத்தை, இஸ்லாத்திற்கு அந்நியமான சிந்தனையை பின்பற்றி வரும் நிலையில் தாங்கள் அல்லாஹ்(சுபு)வுக்கு கட்டுப்பட்டு நடப்பதாகவும் அவனுடைய நேசத்தை பெறுவதற்கு பணியாற்றி வருவதாகவும் கருதிக்கொண்டு வழிகேடான் பயணத்தடத்தில் செல்லும் முஸ்லிம்களை பற்றிய துல்லியமானதும் உறுதியானது மான விவரிப்பாக இது இருக்கிறது. இந்த வழிகெட்ட கூட்டம் மறுமைநாளில் மிகுந்த வருத்தத் தையும் வேதனையையும் அனுபவிக்கும்! அப்போது ‘நாங்கள் எங்களிலுள்ள தலைவர்களுக்கும் பெரிய மனிதர்களுக்கும் கட்டுப்பட்டு நடந்தோம்! அவர்கள் எங்களை வழிகேட்டில் ஆழ்த்தி விட்டார்கள்!’ என்று கூறுவார்கள். தனிமனிதரை தலைவராகவும் கட்டளையிடும் அதிகாரம் உடையவராகவும் ஆக்கிக்கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளது என்பது தொடர்பான இரகசியம் இங்குதான் இருக்கிறது! ஏனெனில் தன்னுடைய வாழ்க்கை பாதையில் சட்டத்திற்கு புறம்பான கட்டுப்படுதல் எதுவும் தான் அறியாத வண்ணம் உட்புகுந்துவிடாத வகையிலும் ஏமாறு தலுக்கும் வழிகேட்டிற்கும் இட்டுச்செல்லாத வாழ்க்கை முறையில் இருப்பதை உறுதிசெய்யும் வகையிலும் விஸ்வாசியான ஒருவர் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். இதன்காரணமாகவே அல்லாஹ்(சுபு) தன்மீது நேசம் கொண்டுள்ள விஸ்வாசிகளை பாதுகாத்து வருவதோடு அவர்களுக்கு தனது மன்னிப்பையும் கிருபையையும் வழங்குகிறான்! எனவே தலைமைத்துவமும் கட்டளையிடும் அதிகாரமும் அல்லாஹ்(சுபு)விற்கும் அவனுடைய தூதர்(ஸல்) அவர்களுக்கும் உரியது என்பதாலும் கட்டுப்படுதல் என்பது அல்லாஹ்(சுபு)வும் அவனுடைய தூதர்(ஸல்) அவர்களும் தீர்மானிக்கும் அடிப்படையில் மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறதுஹ என்பதாலும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இந்தவிஷயத்தில் அல்லாஹ்(சுபு) விஸ்வாசிகளை நேர்வழியில் செலுத்து கிறான். எனவே அல்லாஹ்(சுபு)விற்கு மாறுசெய்வது மூலமாக மட்டுமே ஒரு மனிதருக்கு கட்டுப்படமுடியும் என்ற நிலை ஏற்படும் பட்சத்தில் அந்த மனிதரை நேசிப்பதற்கோ அல்லது அவருக்கு கட்டுப்படுவதற்கோ அனுமதியில்லை.ஹ கட்டுப்படுதலை அவசியமாக்கும் நேசம் என்பது அல்லாஹ்(சுபு)விற்கு மட்டுமே உரியதாகும். கீழ்ப்படியும் குறிப்பிட்ட செயல் தொடர்பான இறைசட்டத்தை அறிந்திராத நிலையில் அந்த செயலில் ஒருவருக்கு கட்டுப்பட்டு நடப்பதற்கு அனுமதியில்லை. இஸ்லாத்தில் தலைமைத்துவம் என்பது சட்டரீதியான செயலை நிறைவேற்றுதலில் மற்றவரை வழிநடத்தும் வகையில் மட்டுமே வரையறை செய்யப்பட்டுள்ளது; எனவே தலைவர் அல்லது அமீர் ஆகியவர்கள் வாழ்வியலில் மேற்கொள்ளும் கடும்பணி என்பது இஸ்லாமிய சட்டங்கள் அங்கீகாரம் செய்துள்ள நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு முஸ்லிம்களின் ஆற்றல்களை ஒருங்கிணைப்பதாக இருக்கிறது. தலைமைத்துவம் மற்றும் கட்டளையிடும் அதிகாரம் ஆகியவற்றில் மிகஉயர்ந்த அந்தஸ்த்தை பெற்றுள்ள ஆட்சியாளர் அல்லாஹ்(சுபு)வின் கட்டுப்படுதலில் சமுதாயத்தின் பயணத்தடத்தை பாதுகாப்பதற்கும் அது தொடர்பான நிர்வாக மேலாண்மையை ஒழுங்குபடுத்துவதற்கும் பொறுப்பு வகிப்பவர் என்ற முறையில் அவருடைய தலைமைத்துவம் என்பது அல்லாஹ்(சுபு)வின் சட்டங்களை பின்பற்றி ஒழுகும் உம்மாவின் பாதையை மேற்பார்வையிட்டு சீர்படுத்துவதற்குரிய அதிகாரமாக மட்டுமே வரையறை செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம்களிலுள்ள தனிமனிதர் எவரும் நரகத்தின் பாதையில் நடந்து சென்றுவிடாத வண்ணம் உம்மாவை வழிநடத்தும் பொறுப்பு ஆட்சியாளரை சார்ந்த இன்றியமையாத பணியாக இருக்கிறது!
 
     அல்லாஹ்(சுபு) அருளியவற்றுக்கு அந்நியமான சட்டங்களை கொண்டு மக்களை வழி நடத்தும் ஒருவரை பற்றி எளிமையாக கூறவேண்டுமானால் அவர் நரக நெருப்புக்கு உரியவரான நயவஞசகர் ஆவார், ஏனெனில் மக்களை வழிநடத்துவதில் இஸ்லாத்தின் விதிமுறைகள் தொடர்பான அல்லாஹ்(சுபு)வின் உரிமையையும் ‎அவனுடைய தூதர்(ஸல்) அவர்களுக்குரிய உரிமையையும் சட்டத்திற்கு புறம்பாக அவர் அபகரித்துக்கொண்டார். தாங்கள் பின்பற்றும் தலைவரின் நயவஞ்சக தன்மையில் ஏமாந்துபோய் அவரை பின்பற்றிய மக்களும் நரக நெருப்பில் இருப்பார்கள் ஏனெனில் அல்லாஹ்(சுபு)விற்கும் அவனுடைய சட்டங்களுக்கும் மட்டுமே கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்ற இஸ்லாத்தின் கட்டளைக்கு எதிராக அவர்கள் கலகம் செய்கிறார்கள். மறுமை நாளில் இந்த இருசாராரும் ஒருவரையொருவர் சபித்துக்கொள்வார்கள்; ஒருவருக்கு எதிராக மற்றொருவர் வெளிப்படையாக பகைமை கொள்வார்கள்; ஒவ்வொரு சாராரும் மற்றவருக்கு எதிராக வெறுப்பை வெளிப்படுத்துவார்கள்; ஒவ்வொருவரும் மற்றவரின் நிராகரிப்பிற்கு பொறுப்பேற்க மறுப்பார்கள்! குற்றவாளிகள் ஒவ்வொருவரும் மற்றவர் மீது சாபம் இடுவார்கள்; ஒருவர் மற்றவரின் குற்றங்களை பகிரங்கப்படுத்துவார்; மகத்துவமிக்க அல்லாஹ்(சுபு) சங்கைமிக்க குர்ஆனில் தனது வார்த்தை மூலமாக இந்த காட்சியை நமக்கு எடுத்துக்காட்டுகிறான்.
 
وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَنْ نُؤْمِنَ بِهَذَا الْقُرْآَنِ وَلَا بِالَّذِي بَيْنَ يَدَيْهِ وَلَوْ تَرَى إِذِ الظَّالِمُونَ مَوْقُوفُونَ عِنْدَ رَبِّهِمْ يَرْجِعُ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ الْقَوْلَ يَقُولُ الَّذِينَ اسْتُضْعِفُوا لِلَّذِينَ اسْتَكْبَرُوا لَوْلَا أَنْتُمْ لَكُنَّا مُؤْمِنِينَ قَالَ الَّذِينَ اسْتَكْبَرُوا لِلَّذِينَ اسْتُضْعِفُوا أَنَحْنُ صَدَدْنَاكُمْ عَنِ الْهُدَى بَعْدَ إِذْ جَاءَكُمْ بَلْ كُنْتُمْ مُجْرِمِينَ وَقَالَ الَّذِينَ اسْتُضْعِفُوا لِلَّذِينَ اسْتَكْبَرُوا بَلْ مَكْرُ اللَّيْلِ وَالنَّهَارِ إِذْ تَأْمُرُونَنَا أَنْ نَكْفُرَ بِاللَّهِ وَنَجْعَلَ لَهُ أَنْدَادًا وَأَسَرُّوا النَّدَامَةَ لَمَّا رَأَوُا الْعَذَابَ وَجَعَلْنَا الْأَغْلَالَ فِي أَعْنَاقِ الَّذِينَ كَفَرُوا هَلْ يُجْزَوْنَ إِلَّا مَا كَانُوا يَعْمَلُونَ  
 
நிச்சயமாகநாங்கள்இந்தகுர்ஆன்மீதும்இதற்குமுன்னுள்ளவேதங்கள்மீதும்நம்பிக்கைகொள்ளமாட்டோம்என்றுஇந்தநிராகரிப்பவர்கள்கூறுகின்றனர்.ஆகவேஇந்தஅக்கிரமக்காரர்கள்தங்கள்இறைவன்முன்புநிறுத்தப்படும்போதுஅவர்களில்சிலர்சிலர்மீதுகுற்றம்சுமத்துவதைநீர்காண்பீர்!அவர்களில்பலவீனமானவர்கள்கர்வம்கொண்டவர்களைநோக்கி‘நீங்கள்இல்லாவிடில்நிச்சயமாகநாங்கள்ஈமான்கொண்டிருப்போம்’என்றுகூறுவார்கள்!கர்வம்கொண்டவர்கள்பலவீனமானவர்களைநோக்கி‘உங்களிடம்நேரானவழிவந்தபின்னர்(அதைவிட்டும்)நாங்களாஉங்களைதடுத்துக்கொணடோம்?அவ்வாறு)இல்லை!
 
நீங்கள்தான்குற்றவாளிகள்’என்றுகூறுவார்கள்.பலவீனமானவர்கள்கர்வம்கொண்டவர்களைநோக்கி‘அவ்வாறுஇல்லை!நாங்கள்அல்லாஹ்வைநிராகரிக்குமாறும்அவனுக்குஇணைவைக்குமாறும்நீங்கள்ஏவவில்லையா?இரவுபகலாகசூழ்ச்சிசெய்யவில்லையா?’என்றுகூறுவார்கள்.ஆகவேஇவர்கள்அனைவரும்வேதனையைகாணும்சமயத்தில்தங்கள்துக்கத்தைமறைத்துக்கொள்வார்கள்.எனினும்நிராகரித்தவர்களின்கழுத்தில்நாம்விலங்கிடுவோம்,இவர்கள்செய்துகொண்டிருந்தவற்றிற்குரியகூலியைதவிர்த்துவேறெதுவும்கொடுக்கப்படுவார்களா?!
(ஸபா : 31 – 33)
      மேற்கண்ட குர்ஆன் வசனங்கள் மறுமைநாளின் நிகழ்வை தெளிவாக எடுத்துக்காட்டும் அதேவேளையில் மரணத்திற்கு முன்னர் மக்களின் வாழ்வில் இடம்பெற்றுள்ள நான்கு எதார்த்த உண்மைகளை குறிப்பிடுகின்றன.
தலைவர்கள் மற்றும் உயர்ந்த அந்தஸ்த்து கொண்ட பெரியவர்கள் ஆகியவர்களிடம் அவர்களை பின்பற்றிய மக்கள் கூறும் வார்த்தைகள் : “நீங்கள் இல்லாவிடில் நாங்கள் ஈமான் கொண்டிருப்போம்” தனது குற்றத்திற்காக அல்லது தனக்கு ஏற்பட்ட தோல்விக்காக மற்றவரை குறைகூறுதல் என்பது பெரும்பான்மையான மனிதர்களின் இயல்பாக இருக்கிறது; இத்தகைய அனுபவங்களை நாம் ஒவ்வொருவரும் சந்தித்திருக்கிறோம்; ஒருவரிடம் உள்ள குறிப்பிட்ட குறை பற்றி அவரிடம் சுட்டிக்காட்டும்போது அவர் அந்த குற்றச்சாட்டை மற்றவர் மீது திருப்பி விடுவார். ஆனால் உண்மையில் குற்றச்சாட்டை கூறுவதும் அதை மறுப்பதும் விவகாரத்தின் உண்மைநிலையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிடுவதில்லை, ஏனெனில் குற்றச்சாட்டை கூறுவதால் மட்டும் அதை நிரூபித்துவிட முடியாது, மாறாக அதை நிரூபனம் செய்யும் சட்ட ரீதியான ஆதாரத்தை அளிக்கவேண்டியது அவசியமாகும். ஏனெனில் பலவீனமானவர்கள், தலைவர்களை பின்பற்றும் நபர்கள், கர்வம் கொண்டவர்கள் ஆகியவர் கூறும் குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆதாரம் அவர்களுடைய வாழ்க்கை நிகழ்வுகள் தொடர்பான எதார்த்த நிலையிலிருந்து கொண்டுவரப்படுமே தவிர அந்த எதார்த்த நிலையைவிட்டு அவர்கள் நீங்கிய பின்னருள்ள நிலையின் அடிப்படையில் கொண்டுவரப்படாது. நமது தலைவர்களும் நமக்கு கட்டளையிடுவதற்கு அதிகாரம் பெற்றுள்ளவர்களும் நம்மை ஏமாற்றுபவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் நம் அனைவருடைய வாழ்வின் உண்மை நிலையாக இருக்கிறது, அவர்கள் நம்மை தவறான பாதையில் வழிநடத்துவதோடு அல்லாஹ்(சுபு)வுக்கு முழுமையாக மாறுசெய்யும் வழியிலேயே செலுத்திவருகிறார்கள், வாழ்வியல் விஷயங்களை தீர்மானிப்பதிலும் செயல்பாடுகள் மற்றும் அவற்றின் நோக்கங்களை நிர்ணயம் செய்வதிலும் முழுமையான நிராகரிப்பை கொண்டுள்ள வாழ்க்கையில்தான் நாம் வாழ்ந்துவருகிறோம்!
     எனினும் ‘நீங்கள் இல்லாவிடில்’ என்ற சொற்றொடர் குர்ஆன் வசனத்தில் இடம் பெற்றுள்ளது, வாழ்வியலில் தலைவர்கள், பெரியவர்கள் போன்றவர்களை பின்பற்றியவர்கள் வாழ்ந்துவந்த சூழல்தான் அவர்களுடைய நிராகரிப்புக்கு காரணமாக இருந்தது என்பதும் செயல்பாடுகள் தொடர்பான அல்லாஹ்(சுபு)வின் சட்டங்களை அறிந்துகொள்வதில் அவர்கள் அலட்சியம் காட்டவில்லை என்பதும்தான் இதற்கு அர்த்மாகும்!ஹ அல்லாஹ்(சுபு) அவர்களை படைத்துள்ள நோக்கத்தை பற்றி அறியாமல் இருந்ததற்கும் அல்லாஹ்(சுபு)வுக்கு கீழ்ப்படிவதற்கு பதிலாக தலைவர்களுக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்ததற்கும் அவர்கள் வாழ்ந்துவந்த சூழல்தான் காரணம் என்றும் அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் கர்வம் கொண்ட தலைவர்கள் இருந்தது வந்த காரணத்தினால்தான் அவர்கள் நிராகரிப்பவர்களாக இருந்தார்கள் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். பின்பற்றியவர்கள் தாங்கள் பின்பற்றிய தலைவர்கள் மீது குற்றத்தை சுமத்திவிட்டு தாங்கள் மேற்கொண்ட செயல்பாடுகளை மறைத்துவிடுகிறார்கள். இக்கூற்று அவர்களுடைய நிராகரிப்பையும் அவர்கள் நரகத்தின் வேதனைக்கு தகுதியானவர்கள் என்பதையும் அவர்கள் நிராகரிப்பில் வாழ்ந்து வந்ததை மறுக்கவில்லை என்பதையும் உறுதிப்படுத்துவதாக இருக்கிறது. அல்லாஹ்(சுபு)வின் ஹகேள்வி கணக்கிற்கு உட்படும் அந்த மகத்தான நாள் என்பது உண்மையில் பாவங்களையும் குற்றங்களையும் ஒப்புக்கொள்ளும் நாளாகவே இருக்கிறது! மனிதன் தனது வாழ் நாளில் இடம்பெற்றிருந்த உண்மையையோ அவன் மேற்கொண்ட செயலையோ அவன் கூறிய வார்த்தையோ ஒருபோதும் மறுக்கமுடியாது! இதன்காரணமாகவே ‘நாங்கள் ஈமான் கெண்டிருப் போம்’ என்று பலவீனமானவர்கள் கூறுவார்கள். பலவீனமானவர்கள் அவர்களுடைய வாழ் நாட்களில் நிராகரிப்பாளர்களாக இருந்தார்கள் என்பதும், அவர்கள் ஈமான் கொண்டுள்ள விஸ்வாசியாக இல்லை என்றநிலையில் அவர்கள் நிராகரிப்பை கொண்டுள்ள நிராகரிப்பாளராக இருந்தார்கள் என்பதும்தான் இதற்கு அர்த்தமாகும். அல்லாஹ்(சுபு)வுக்கு கீழ்ப்படியாத மனிதர் களை பொருத்தவரை அவர்கள் நிராகரிப்பாளர்களாக இல்லை, மாறாக கீழ்ப்படியாத காரணத் தால் ஒருமுறையோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளோ தண்டனைக்கு உட்படும் முஸ்லிம்களாகவே இருக்கிறார்கள், எனவே அவர்கள் நிராகரிப்பிற்குரிய தண்டனையை அடைய மாட்டார்கள். அல்லாஹ்(சுபு)வுக்கு அந்நியமானவர்களை பின்பற்றவதிலும் அவர்களுக்கு கட்டுப் படுவதிலும் தங்கள் வாழ்நாட்களை கழித்தார்கள் என்பதை அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.
     எனினும் நிராகரிப்பாளர்களாக இருந்தவர்கள் தங்களுடைய நிராகரிப்புக்கு காரணமாக மற்றவர்களை காட்டுவதற்கு முனைகிறார்கள் என்றபோதும் அது உண்மையில்லை என்பதால் அவர்கள் என்றென்றும் நரகத்தில் இருப்பார்கள், நரகத்தில் அவர்கள் தலைகள் வெப்பத்தில் உருகிவிடும்! ஆரம்பமும் முடிவும் இல்லாத நரகத்தில் நிராகரிப்பவர்கள் இழிவில் வீழ்ந்து கிடப்பார்கள்! எனினும் பலவீனமானவர்கள் கர்வம் கொண்டவர்களை நோக்கி ‘நீங்கள் இல்லா விடில் நாங்கள் ஈமான் கெண்டிருப்போம்’ என்று கூறும் வார்த்தையில் உண்மையில்லை! பூமியில் தலைவர்களாகவும் பெரியவர்களாகவும் உயர்ந்தநிலையில் வாழ்ந்தவர்கள் தங்களை பின் பற்றியவர்களை அல்லாஹ்(சுபு)வுக்கு மாறுசெய்யும் தீயவழியில் செலுத்தினார்கள் என்றபோதும், தலைவர்கள் தங்களை பின்பற்றியவர்களை அல்லாஹ்(சுபு)வின் ஈமானிலும் அவனுக்கு கீழ்ப் படிவதிலும் வழிநடத்தியிருக்க முடியும் என்றபோதும், உண்மைநிலையின் அடிப்படையில் மக்களின் நிராகரிப்பிற்கு அல்லது ஈமானிற்கு தலைவர்கள் காரணமாக இருப்பதில்லை, ஏனெனில் தலைவரின் கட்டளை அடிப்படையில் ஒருவர் நிராகரிப்பையோ அல்லது ஈமானையோ தேர்வுசெய்து கொள்ளுதல் என்பது தலைவரை பின்பற்றுதல் என்ற விவகாரத்தை சார்ந்ததாக இருக்காது மாறாக எஜமானரின் கட்டளைக்கு அடிமை கட்டுப்படுதல் என்ற விவகாரத்தை சார்ந்ததாகவே இருக்கும்! எனவே தலைவரை பின்பற்றுதல் என்ற விவகாரத்தில் மனிதர்கள் தங்கள் செயல்பாடுகளுக்கு பொறுப்பு ஏற்கக்கூடியவர்களாகவே இருக்கிறார்கள். இதன்காரணமாகவே நிராகரிப்பவர்கள் மறுமைநாளில் இருக்கும்நிலை மற்றும் அவர்கள் கூறும் வார்த்தைகள் ஆகியவை பற்றி  எல்லாம்வல்ல அல்லாஹ்(சுபு) கூறுகின்ற விவரிப்பு என்பது அவனுடைய(சுபு) அற்பதமாகவும் அவனுக்கு(சுபு) மட்டுமே உரித்தான தெய்வீக தன்மையின் வெளிப்பாடாகவும் இருக்கிறது என்பதை நாம் காண்கிறோம், மகத்துவமும் உயர்வும் அவனுக்கே உரியது! இது நமக்கும் ஓர் எச்சரிக்கையாகவே அமைந்துள்ளது, எனவே நாம் அல்லாஹ்(சுபு) வுக்கு மாறுசெய்யும் வகையில் கீழ்ப்படியாத வாழ்க்கையை தேர்வுசெய்து கொள்வதற்கு எத்தகைய காரணங்களையும் கற்பிக்க முடியாது! இத்தகைய நிலையை தேர்வுசெய்து கொள்ளும் ஒருவர் தான் குற்றமற்றவர் என்று எத்தகைய சாக்குப்போக்குகளை கூறியபோதும் தனது செயல்பாடுகளை இரகசியமாக மறைத்துக் கொண்டபோதும் தனக்குத்தானே பொய்யுரைத்து கொண்டபோதும் அல்லது தன்னுடைய தீனின் விதிமுறைகளை அலட்சியப்படுத்திய போதும் அவர் குற்றமற்றவர் என்ற மறுப்புரைக்கு உரிய ஆதாரத்தை நிரூபனம் செய்யாதவரையில் அவருடைய தற்போதைய நிலையை மாற்றிக்கொள்ளாதவரை அல்லாஹ்(சுபு) அவரிடமிருந்து எதையும் ஏற்றுக்கொள்ள மாட்டான்! ஏனெனில் ஒவ்வொரு மனிதரின் உடலிலுள்ள உறுப்புகளும் மறுமைநாளில் அவருடைய கீழ்ப்படியாமை குறித்து அவருக்கு எதிராக சாட்சியம் அளிக்கும்! எந்த அளவுக்கு அவர் கீழ்ப்படியாமையில் வாழ்கிறாரோ அந்த அளவுக்கு அவருக்கு எதிராக அவருடைய உடலுறுப்புகள் சாட்சியம் அளிக்கும்! நமக்கு எதிராக மலக்குகள் சாட்சியம் அளிப்பார்கள்! உண்மையும் நம்பகத்தன்மையும் கொண்ட தூதர் முஹஹஹம்மது(ஸல்) அவர்களும் சாட்சியம் அளிப்பார்கள்! மறுமைநாளில் நாம் எவர்களுக்கு கட்டுப்பட்டு நடந்தோமோ அந்த தலைவர்களின் நாவுகளின் சாட்சியத்தை கொண்டு உலக வாழ்க்கையில் எவ்வாறு இருந்தோம் என்பது பற்றிய உண்மைகளை எல்லாம்வல்ல அல்லாஹ்(சுபு) நமக்கு அறிவித்து காட்டுவான்!
* இன்றைய நாட்கள் பூமியில் இஸ்லாமிய அரசு இல்லாத காலகட்டமாகவும், இஸ்லாமிய விதிமுறைகள் அடிப்படையில் மக்கள் மத்தியில் இருக்கும் உறவுகளை ஒழுங்குபடுத்துவதும் அந்த உறவுகளின் விளைவாக சமூகத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கக்கூடியதுமான  அல்லாஹ்(சுபு)வின் ஆட்சியை ஹமக்கள் மத்தியில் நிறுவதை தடுக்கக்கூடிய காலகட்டமாகவும் இருந்துவருகிறது! இஸ்லாமிய சமூகத்திலுள்ள முஸ்லிம்களின் உறவுகளை முஸ்லிம் அல்லாத சமூகங்களுடன் அல்லாஹ்(சுபு)வின் சட்டங்கள் அடிப்படையில் நிறுநிறுத்துவதை தடுக்கக்கூடிய காலட்டமாகவும் இன்றை காலகட்டம் விளங்குகிறது. இந்த குறுகிய வாழ்க்கையில் இருந்து வரும் நிலையில் அதனுடன் தொடர்புள்ள இஸ்லாமிய நோக்கத்தை நிறைவுசெய்துகொள்ளும் வகையில் ஒருமுஸ்லிம் இஸ்லாமிய விதிமுறைகளின் அடிப்படையில் தனது வாழ்க்கையை வழிநடத்தி செல்வதையும், முஸ்லிம்கள் தங்களுடைய மரணத்திற்கு முன்பாக இஸ்லாமிய சட்டங்களை பொருத்த நோக்கங்களை நிறைவுசெய்து கொள்வதை தடைசெய்யக்கூடியதாகவும் இன்றைய காலகட்டம் இருந்துவருகிறது! இது மக்கள் மத்தியில் குர்ஆனின் சட்டங்களை நிலைநிறுத்த வேண்டும் என்ற அல்லாஹ்(சுபு)வின் கட்டளைக்கு கட்டுப்படுவதை தடுக்கும் வகையில் தலைவர்களும் புகழ்பெற்ற மனிதர்களும் இறை மார்க்கத்திற்கு எதிராக போரிடும் காலகட்டமாகும்! எல்லாம்வல்ல இறைவன் கட்டளையிட்டுள்ள அடிப்படையில் மக்கள் மத்தியில் ஷரீஆவை நிலைநிறுத்தும் அதிகார அமைப்பை நிறுவுவதற்கு உகந்த காலகட்டம் இதுதான்! அதை அல்லாஹ்(சுபு)வின் கட்டளை அடிப்படையில் நிறைவேற்ற வேண்டுமே ஒழிய ஹஇஸ்லாமிய சிந்தனைகளை சிதைப்பதின் மூலமும் அதன் கோட்பாடுகளை அழிப்பதன் மூலமும் இஸ்லாத்தை அழிப்பதற்கு வழிவகைகளை தேடுபவர்களின் விருப்பங்களின் அடிப்படையில் அல்ல!

இஸ்லாமியத் தலைமைத்துவத்திலிருந்து ஜனநாயகம் முரண்படுகிறது – பாகம் – 1

மனிதன் கலிமண்ணிலிருந்து படைக்கப்பட்டான், கலிமண்ணிலிருந்து அவனை படைத்து அவனுடைய உடலில் அல்லாஹ்(சுபு) ரூஹை ஊதுவதற்கு முன்னர் அவன் இந்த பிரபஞ்சத்தில் நிலைத்திருக்கவில்லை! பிறப்பின் எதார்த்த நிலையை பொருத்தவரை அது வெறுமையிலிருந்து ஏற்படுகிறதே ஒழிய வாழ்விலிருந்து ஏற்படுவதில்லை. வாழ்வு என்பது மனிதன் மீது விதிக்கப் பட்டுள்ளது, ஆரம்பம் முதற்கொண்டே இந்த விஷயத்தில் அவனுக்கு எத்தகைய தேர்வுரிமையும் அளிக்கப்படவில்லை. அவனுடைய வாழ்க்கை தவணையும் அவன் மீது விதிக்கப்பட்டுள்ளது, அது வரையறுக்கப்பட்ட காலத்திற்குள் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது, அதன்மீது மனிதன் எத்தகைய விளைவையும் ஏற்படுத்தவும் முடியாது தவணை முடிந்தபின்னர் கனப்பொழுது கூட இவ்வுலகைவிட்டு வெளியேறுவதிலிருந்து தாமதிக்கவும் முடியாது. துல்லியமாக நிர்ணயிக்கப் பட்ட ஒழுங்குமுறை அடிப்படையில் மரணம் அவனை எதிர்கொள்கிறது. மரணத்திற்கு முன்னர் நிர்பந்தமாகவும் சுய விருப்பத்திற்கு அப்பாற்பட்ட முறையிலும் வாழ்வு அவனில் தோன்றுகிறது. துல்லியமாக நிர்ணயிக்கப்பட்ட இதே ஒழுங்குமுறை அடிப்படையில் நிர்பந்தமாகவும் மனிதனின் சுய விருப்பத்திற்கு அப்பாற்பட்ட முறையிலும் வாழ்வு அவனிடமிருந்து வெளியேறும்போது மரணம் அவனை வந்தடைகிறது. வாழ்விற்கு முன்னர் இருந்த வெறுமை குறித்தும் தனது உடலை உயிர்ப்பித்துள்ள வாழ்வு குறித்தும் சுய விருப்பத்திற்கு அப்பாற்பட்டு வாழ்வு அவன்மீது தோன்றியது குறித்தும் மனிதன் சிந்திக்கிறான். வாழ்வியல் நோக்கங்கள் நிறைவுசெய்யப்பட்ட பின்னர் அவன் எதிர்கொள்ளப்போகும் மரணம் குறித்தும் மனிதன் சிந்திக்கிறான். இந்நிலையில் அல்லாஹ்(சுபு) அவனை படைத்து இறை மார்க்கமான ஹஇஸ்லாத்தின்பால் வழிகாட்டியது ஏன் என்பதற்குரிய காரணத்தை அவன் தீர்மானிக்கலாம், அவன்மீது வாழ்வு தோன்றுவதற்கு முன்னரும் அவன்மீது மரணம் நிகழ்ந்ததற்கு பின்னரும் இறை மார்க்கமான இஸ்லாம் மட்டுமே அவனுடைய மார்க்கமாக உள்ளது என்பதை அவன் விளங்கியிருக்கலாம். எனவே அவனுடைய வாழ்வில் அவன் அல்லாஹ்(சுபு)விற்கு கீழ்ப்படியவேண்டும் என்பதை பிரகடணப்படுத்துகிறான், அன்றியும் அல்லாஹ்(சுபு)விற்கு கீழ்ப்படிதல் அல்லது அவனுக்கு(சுபு) மாறுசெய்தல் ஆகியவை தான் வாழ்விற்குரிய காரணத்தின் நிரூபனமாக இருக்கிறது என்பதையும் அவன் அறிந்து கொள்கிறான். அல்லது மரணத்தை எதிர்கொள்பவர்கள் சிலதருணங்களில் அதிலிருந்து தப்பித்து வாழ்வை பெற்றுக்கொள்கிறார்கள் என்பதால் மரணிக்கும் முறைகளில் குளறுபடிகள் நிறைந்துள்ளது என்று கருதுவதின் அடிப்படையில் பிறப்பும் வாழ்வும் வெறுமைக்கும் மரணத்திற்கும் மத்தியிலுள்ள இடைவெளி என்று நம்புவதை அவன் தேர்வுசெய்துகொள்ளலாம். எனினும் மரணத்திலிருந்து சிலர் தப்பித்துக்கொள்ளுதல் என்பது வாழ்வியலின் இயல்பான நிகழ்வாக இருக்கிறதே ஒழிய மரணம் ஏற்படும் முறைகளில் உள்ள குளறுபடியாக இல்லை, ஏனெனில் வாழ்வு என்றாலும் மரணம் என்றாலும் மனிதர்கள் அதிலிருந்து நழுவிச் சென்றுவிட முடியாது! வாழ்வு என்பது கேளிக்கைகளில் ஈடுபடுவதற்கும் விரும்பிய வகையில் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்தவதற்கும் மனஇச்சைகளையும் நிறைவு செய்து கொள்வதற்கும் வேண்டிய அளவிற்கு சுகபோகங்களை அனுபவிப்பதற்கும் விரும்பிய முறையில் இன்பங்களை துய்ப்பதற்கும் சொத்துக்களையும் பெருமைகளையும் அடைந்து கொள்வதற்கும் கிடைக்கப்பெற்ற வாய்ப்பு என்று ஒருவர் கருதலாம். திண்ணமாக இவர்தான் நிராகரிப்பாளர்! வாழ்வியலின் நோக்கம் மற்றும் இறைவன் அவரை படைத்திருப்பதற்குரிய காரணம் ஆகியவற்றிலிருந்து அவர் தன்னைத் தானே விலக்கிக்கொள்கிறார். இறைவன் எதற்காக அவரை படைத்தானோ அந்த நோக்கத்தை இவர் மறுத்துவிடுகிறார், வாழ்வு அவர்மீது ஏன் ஏற்பட்டுள்ளது என்பது குறித்த காரணத்தை அவர் சிந்திக்க விரும்பமாட்டார். இத்தகைய மனிதர் இயல்பிற்கு புறம்பான நோக்கத்தில் மக்களை வழிநடத்துபவராகவும் இறைவனுக்கு மாறுசெய்வதில் முன்னுதாரணமாக விளங்கும் மனிதராகவும் மனித இனத்தை இறைவன் படைத்துள்ள நோக்கத்திற்கு எதிராக போராட்டம் செய்பவராகவும் விளங்குகிறார்! அல்லது இயல்பிற்கு புறம்பான பாதையில் செல்வதில் மற்றவர்களை பின்பற்றும் மனிதராகவும் இறைவன் மனிதனை படைத்ததற்கு பின்னணியிலுள்ள காரணத்தை உணர்ந்து கொள்வதிலிருந்து மக்களை தடுப்பவராகவும் இவர் விளங்குகிறார். இயல்பிற்கு புறம்பான வழியில் செல்வதில் ஒருவர் மற்றவரை பின்பற்றுபவராக இருந்தாலும் அல்லது மற்றவர்களால் பின்பற்றப்படுபவராக இருந்தாலும் இருவரும் ஒன்றுபோலவே இருக்கிறார்கள்! அல்குர்ஆனில் அல்லாஹ்(சுபு) வாக்களித்துள்ளது போல இந்த இருசாராரும் இறைவனிடமிருந்து இருமடங்கு தண்டனையை பெற்றுக்கொள்வார்கள் என்பது நிச்சயமாகும்!

தலைமைத்துவம் என்பது கட்டளையிடுவதற்குரிய அதிகாரமாகும், மக்களின் தலைவர் என்பவர் அவர்களை வழிநடத்தி செல்பவராக இருக்கிறார். ஏனெனில் மக்களில் ஒருவர் தலைவராக இருக்கிறார் மற்றவர்களில் பெரும்பான்மையின் அவரை பின்பற்றுபவர்களாகவே இருக்கிறார்கள்.ஹ ஜனநாயக கோட்பாட்டை பொருத்தவரை தலைமைத்துவம் என்பது அலங்காரமான விஷயங்களையும் சுயநலமிக்க குறிக்கோள்களையும் அடைந்துகொள்ளும் சாதனமாகும்! ஆனால் இஸ்லாத்தை பொருத்தவரை தலைமைத்துவம் என்பது அல்லாஹ் (சுபு)விற்கு கீழ்ப்படிவதாகவும் இறைவனின் மார்க்கத்திற்கு உதவுவதாகவும் இருக்கிறது, அதே வேளையில் இலட்சியம் என்பது கீழ்ப்படிதலை நிறைவேற்றுவதற்குரிய ஆற்றலாக விளங்குகிறது. வெற்றியை அடையவேண்டும் என்ற தீர்மானத்தின்பால் அழைப்பதற்கு இந்த ஆற்றல் பயன் படுத்தப்படுகிறது. ஏனெனில் இலட்சியத்தை போலவே, தலைமைத்துவம் மற்றும் கட்டளை யிடுதல் என்பது இஸ்லாத்தில் சட்டரீதியான நோக்கத்தை அல்லது சட்டரீதியான விதிமுறையை நிறைவேற்றுவதற்குரிய நிபந்தனையாக இருக்கிறது. இஸ்லாத்தை பொருத்தவரை தலைமைத்துவம் அல்லது கட்டளையிடும் அதிகாரம் என்பது அசலாக அல்லாஹ்(சுபு)விற்கும் அவனுடைய தூதர்(ஸல்) அவர்களுக்கும் உரியதாகும், அல்லாஹ்(சுபு)வின் சட்டங்களை நிலைநிறுத்துவதற்கும் அவற்றின் நோக்கங்களை நிறைவு செய்வதற்கும் அவசியமானவற்றில் தனிமனிதர் ஒருவர் தலைமைத்துவத்தின் பொறுப்பை சுமந்து கொள்கிறார். இஸ்லாத்தை பொருத்தவரை தலைவரின் அலங்கார விருப்பங்கள் அல்லது அவருடைய சுயநல குறிக்கோள்கள் தலைமைத் துவத்திற்குரிய நோக்கமாக இல்லை. மாறாக, இறைவனுக்கு கீழ்ப்படியும் செயல்பாட்டில் மக்களை முன்னின்று வழிநடத்துவதற்கும் இஸ்லாத்தின் சட்டரீதியான விதிமுறைகளை நிலை நிறுத்துவதற்கும் சட்டரீதியான பலன்களை விளைவிப்பதற்கும் உரிய சாதனம்தான் தலைமைத்துவ அதிகாரமாகும்! இஸ்லாத்தை பொருத்தவரை இஸ்லாமிய சட்டங்களை நிலை நிறுத்துவதற்காக அல்லது சட்டரீதியான நோக்கத்தை நிறைவுசெய்வதற்காக மட்டுமே தலைவருக்கு அல்லது ஆட்சியாளருக்கு மக்கள் கட்டுப்பட்டு நடக்கிறார்கள். ஏனெனில் இஸ்லாத்தில் ஒவ்வொரு முஸ்லிமுடைய வாழ்க்கைப்பாதை என்பது சட்டரீதியான நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு இஸ்லாமிய சட்டங்களை நிலைநிறுவுவதற்கு கடுமையாக முயற்சிப் பதாகவும், அதேவேளையில் தலைமைத்துவம் என்பது சட்டரீதியான நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு இஸ்லாமிய சட்டங்களை நிலைநிறுத்துவதற்காக முஸ்லிம்களின் ஆற்றல்களை ஒருங்கிணைப்பதாகவும் உள்ளது. (தலைமையை) பின்பற்றுபவர்களின் நேசம் தலைமைத் துவத்தை பெற்றுள்ளவருக்கு அவசியமானதாக இருக்கும் நிலையில், எல்லாம்வல்ல இறைவன் அடியார்களின் நேசத்தை தனக்கு மட்டும் உரியதாக வரையறை செய்துள்ளான். அல்லாஹ் (சுபு)வின் நேசத்தையும் அவனுடைய முஸ்லிம் அடியார்களின் நேசத்தையும் முஸ்லிம்கள் பெற்றுக் கொள்ளவேண்டும் என்றால் இஸ்லாத்தின் சட்டங்களையும் அவற்றை கொண்டுவந்த அல்லாஹ்வின்தூதர்(ஸல்) அவர்களையும் பின்பற்றவேண்டும் என்பதை அல்லது சட்டரீதியான நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு இஸ்லாமிய சட்டங்களை நிலைநிறுத்துவதற்கு நபி(ஸல்) அவர்களின் சார்பாக செயலாற்றும் ஒருவரை பின்பற்றவேண்டும் என்பதை அல்லாஹ்(சுபு) ‎நிபந்தனையாக ஆக்கியுள்ளான். அல்லாஹ்(சுபு) தன்மீதுள்ள நேசத்திற்கு ஈமானை நிபந்தனை யாக ஆக்கியுள்ளான், அல்லாஹ்(சுபு) மீதுள்ள நேசம் உறுதியானதாகவும் ஏற்றுக்கொள்ளத் தக்கதாகவும் இருக்கவேண்டும் என்றால் அதற்கு இஸ்லாத்தின் சட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்பது மட்டுமே நிபந்தனையாக இருக்கிறது.‎‎‎‎‎ தனிமனிதர்கள், (சட்டத்திற்கு புறம்பான) குழுக்கள், அலங்கார கோட்பாடுகள் அல்லது அல்லாஹ்(சுபு)வின் நேசத்திலிருந்து ஒருவரை வெளியேற்றிவிடும் சட்டத்திற்கு புறம்பான நோக்கங்கள், அல்லாஹ்(சுபு)வின் நேசத்தை புறக்கணிக்கும் வகையில் கூறப்படும் வார்த்தைகள் போன்ற சட்டத்திற்கு புறம்பானவற்றிற்கு கீழ்ப்படிவதை அல்லாஹ்(சுபு) இஸ்லாமிய சட்டங்களுக்கு மாறுசெய்யும் செயலாகவே ஆக்கியுள்ளான். அல்லாஹ்(சுபு)வின் சட்டங்களுக்கு அப்பாற்பட்ட ஒன்றிற்கு கீழ்ப்படிவதின் மூலமும் தனிமனிதர் தலைமைத்துவம், (சட்டத்திற்கு புறம்பான)குழுக்கள் ஆகியவற்றிற்கு கீழ்ப்படிவதின் மூலமும் அல்குர்ஆன் மற்றும் சுன்னா ஆகியவற்றின் மூலமாக அருளப்பட்ட இறைசட்டங்களுக்கு அந்நியமானவற்றின் அடிப்படையில் மக்களை வழிநடத்தும் மனிதருக்கு கீழ்ப்படிவதின் மூலமும் ஒருவர் அல்லாஹ்(சுபு)வின் நேசத்தை துறந்துவிடுகிறார்!


அல்லாஹ்(சுபு) கூறுகிறான்,


‎‎‎‎‎‎‎‎‎قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ قُلْ أَطِيعُوا اللَّهَ وَالرَّسُولَ فَإِنْ تَوَلَّوْا فَإِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْكَافِرِينَ ‎ ‎ ‎‎


கூறுவீராக! நீங்கள் மெய்யாகவே அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னை பின்பற்றுங்கள்! அப்போது அல்லாஹ் உங்களை நேசிப்பான் உங்கள் பாவங்களை மன்னிப்பான். நிச்சயமாக அல்லாஹ் ‎மன்னிப்பவனாகவும் மிக்க கிருபை உடையவனுமாகவும் இருக்கிறான்!


கூறுவீராக! அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடந்துகொள்ளுங்கள்! எனினும் நீங்கள் இதை புறக்கணித்தால், நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பவர்களை நேசிக்க மாட்டான்! (ஆலஇம்ரான் : 31-32)



செயல்பாடுகளை மேற்கொள்ளும் முறைகள், மக்களுக்கு மத்தியிலுள்ள உறவுகளை ஒழுங்கு படுத்தும் இஸ்லாமிய விதிமுறைகள், உறவுகள் அடிப்படையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை ஏற்படுத்துதல், வாழ்வியல் சுமைகளையும் கடும்பணிகளையும் நிறைவேற்றும் வழிமுறைகள், இஸ்லாத்தின் விலக்கல்கள் ஆகியவற்றில் இஸ்லாமிய சட்டங்களை பின்பற்றி செயலாற்றவதின் மூலமாக மட்டுமே இஸ்லாமிய சட்டங்களை நிலைநிறுத்த முடியும். சட்டம் இல்லாத நிலையில் எத்தகைய உறவுகளும் மக்களுக்கு மத்தியில் இடம்பெறவில்லை, அது ஏவல்கள் என்றாலும் விலக்கல்கள் என்றாலும் சரியே; மேற்கொள்ளும்முறை பற்றி தெளிவு படுத்தப்படாத வகையில் எந்த செயல்பாடுகளும் இஸ்லாத்தில் இடம்பெறவில்லை. இதன் காரணமாகவே முஸ்லிம்களின் வாழ்வியல் செயல்பாடுகள் அனைத்தும் இஸ்லாமியசட்டங்களை நிலைநிறுத்துவதுடன் தொடர்புடையதாக இருக்கின்றன. பணிகளை மேற்கொள்ளும்போதும் கட்டாயக்கடமைகளை நிறைவேற்றும்போதும் இஸ்லாம் அங்கீகரித்துள்ள சட்டரீதியான முறையை பின்பற்றுவதன் மூலம் சட்டரீதியான இஸ்லாமிய நோக்கத்தை நிறைவுசெய்வதை சாத்தியமாக்க முடியும். பணிகளை மேற்கொள்ளுதல் மற்றும் பணிகள் தொடர்பான நோக்கத்தை நிறைவேற்றுதல் என்ற முறையில் இஸ்லாமிய சட்டங்களின் நோக்கம் தனிமனிதரின் நோக்கத்திலிருந்து வேறுபடுகிறது. இஸ்லாமிய சட்டங்களை பின்பற்றுவதின் மூலமாக மட்டுமே இஸ்லாமிய நோக்கத்தை நிறைவுசெய்துகொள்ள முடியும் ஏனெனில் அவற்றை பின்பற்றுவதில் தனிமதர்களின் வாழ்வும் மற்றவர்களின் வாழ்வும் தொடர்புடைதாக இருக்கிறது. உதாரணமாக, உண்மையை கடைபிடித்தல் என்பது இஸ்லாமிய சட்டங்களில் ஒன்றாக இருக்கிறது, எனினும் அதனால் ஏற்படும் விளைவுகள் என்பது உண்மையை கடைபிடிக்கும் மனிதர், மற்றவர், சட்டத்திற்கு புறம்பான விஷயங்கள் பரவிவிடாமல் சமூகத்தை பாதுகாப்பது தொடர்பான அல்லாஹ்(சுபு)வின் விதிமுறைகள் அல்லது மக்கள் மத்தியில் நம்பிக்கை, மகிழ்ச்சி, நல் ஒழுக்கம் ஆகியவற்றை பரப்புதல் தொடர்பான அல்லாஹ்(சுபு)வின் விதிமுறைகள் ஆகியவற்றின் நோக்கத் துடன் தொடர்புடையதாக இருக்கிறது. இஸ்லாத்தின் சட்டங்களை கடைபிடிப்பதின் மூலம் தனிமனிதர் விளைவுகளை ஏற்படுத்திய போதிலும் இஸ்லாமிய சட்டங்களின் நோக்கத்துடன் இணைந்துள்ள விளைவுகள் என்பது தனிமனிதரின் நோக்கத்துடன் இணைந்துள்ள விளைவு களிலிருந்து வேறுபட்டது. முஸ்லிம்களிலுள்ள தனிமனிதர் ஒவ்வொருவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயல்பாடுகளிலும் நிறைவுசெய்யப்பட வேண்டிய இஸ்லாமிய நோக்கம் இடம் பெற்றுள்ளது, அதை தனிமனிதர் அறிந்திருந்தாலும் அறியாவிட்டாலும் சரியே!‎‎

Dec 1, 2015

தேசிய கீதம் பாடும்போது எழுந்து நிற்காத தேசப்பற்றும் முஸ்லிம்களும்....

முஸ்லிம்களை தேச பற்று இல்லாதவர்களாய் சித்தரித்து அன்னியர்களாய் சித்தரிக்கும் காட்சிகளை பார்த்து வருகிறோம்....

அதற்கான பதில்:

முஸ்லிம்கள் தேசியவாதிகள் அல்லர்....

பல தேசங்களை ஒன்றாக்க பிறந்தவர்கள்....

800 ஆண்டுகள் இந்தியாவை ஆண்டவர்கள்...

ஆக்கிரமித்த பிரிட்டனிடமிருந்து கடன் வாங்கி

எல்லை பிரித்து இந்திய தேசியம் என்று கூறினால் அதை

ஏற்று கொள்ளாதவர்கள்....

மொரொகோவிலிருந்து இந்தோனெசியா வரை....

கன்னியாகுமரியிலிருந்து கிரீமியா வரை....

தேசங்களை இணைக்க காத்திருப்பவர்கள்...

அவர்களுக்கு இஸ்லாம் தந்த அடையாளத்தை தவிர

வேறொரு அடையாளம் இல்லை...

முதலாளித்துவ ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்து

இந்தியா முதல் சவுதி வரை அனைத்து நாடுகளையும்

விடுவிக்க உழைப்பவர்கள்....

ஏகாதிபத்தியவாதிகளின் தேசியவாதம் எங்களிடம்

செல்லாது....

நாங்கள் முஸ்லிம்கள் தேசியவாதிகள் அல்ல....

நபி (ஸல்) கூறினார்கள்" (இன மத மொழி) வெறியின் அடிப்படையில் மக்களை அழைப்பவன் நம்மை சார்ந்தவன் அல்லன். அதற்காக போராடுபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன். அதற்காக உயிரை விடுபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன்". (நூல்:அபுதாவூத்)

May 28, 2014

தவறு துரோகம் என்பவற்றில் எழும் இஸ்லாமிய எழுச்சி !!

காலத்தின் தேவை , நவீனம் ,வினைத்திறன் ,நடைமுறை சாத்தியம் இந்த
வார்த்தைகளை இன்றைய முஸ்லீம் உலகில் சர்வசாதாரண பயன் பாடாய் நாம் காணமுடியும் . அறிவியல் தொழில் நுட்பத்தையோ , இயந்திரமயமாக்கல
ை நோக்கியோ முஸ்லீம் உம்மாவின் மீது இந்த வார்த்தையாடல்கள்
பிரயோகிக்கப்பட்டிருந்தால் மேட்கத்தேயத்திடம் தங்கி வாழாத
தன்னிறைவு பொருளாதாரம் பற்றி இவர்கள் சிந்திக்கிறார்கள் என
சந்தோசப்பட்டிருக்கலாம் ஆனால் இந்த வார்த்தைகள் இன்றைய
உலகின் தனிப்பெரும் அதிகாரமாய் தன்னை பிரகடனப்படுத்தியிருக்கும்
முதலாளித்துவ ஏகாதிபத்திய நிர்ப்பந்த அரசியலின் கொள்கை சார்
வடிவமாக முஸ்லீம் உம்மாவை ஆக்கிரமிக்கப்பார்க்கும்
தவறு என்பதால் அதன் ஆபத்தை பற்றி பேசவேண்டிய அவசியம்
சத்தியத்தை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் உண்டு .
உண்மை என்னவென்றால் இந்த முதலாளித்துவம் என்பது மக்கள்
நலன் எனும் நோக்கத்தை கொண்ட ஒரு சிந்தனை அல்ல அது கிறிஸ்தவ மதப்
புரோகிதத்திட்கும் ,ஐரோப்பிய அறிவு ஜீவிகளுக்கும் இடையில்
நிகழ்ந்த நீண்ட இரத்தம் சிந்திய போராட்டத்தின் தீர்வாக சமரச
பேரத்தின் அடிப்படையில் உருவான ஒரு கொள்கை (அதற்குள்ளே ஜனநாயகம் ,மனித உரிமைகள் ,கருத்துச் சுதந்திரம் ,பன்மை வாதம் போல் பல
விடயங்களை கொண்டது ) ஆகும் .அதன் அடிப்படையே வாழ்வியலில்
இருந்து மதத்தை பிரிப்பது .இங்கு புரிந்து கொள்ள வேண்டியது இறைவனை அது மறுக்காது மாற்றமாக அவனது வழிகாட்டலை புறக்கணிக்கும்
அவ்வளவுதான் .இந்த சிந்தனை அசத்தியத்தை சத்தியத்திற்கு நெருக்கமாக்கும்
நிராகரிப்பை விசுவாசத்திற்கு நெருக்கமாக்கும் .( இஸ்லாமிய
ஷரீயாவை நிலைநாட்ட முஸ்லீம்களிடமே 51 %
வாக்குகளை எதிர்பார்க்கும் இரகசியமும் ,பெரும்பான்மை விரும்புகிறது எனக்காட்டி ஷரீயா சட்டங்களை இன்று இஸ்லாமிய வாதம் பேசும் மனிதர்கள் புறக்கணிப்பதன் இரகசியம் உங்களுக்கு புரிந்திருக்கும் )
அதாவது இங்கு சத்தியம் மாதிரி இருக்கும் அசத்தியம் . மதச்சார்பின்மை வேறு மத சுதந்திரம் வேறு ஆனால் இங்கு இந்த இரண்டும்
மதச்சார்பின்மை என இனம் காட்டப்பட்டு அது இஸ்லாத்தில் உள்ளது தான் என நிறுவப்படும் .

(இப்போது இஸ்லாமிய சமூகம் என்பது முஸ்லீம் ,முர்தத் ,முஷ்ரிக் ,
பாசிக் என்பவற்றின் கூட்டு !)

Apr 7, 2014

ஜனநாயகம் அதன் முகமூடி கிழியட்டும் !


 
 
தமது வாழ்வியலுக்கான வழிமுறைகளை பெரும்பான்மை எனும் பிரமாண்டமான மக்கள் தொகையின் உருவத்தில் சட்டங்களையும் , யாப்புகளையும் மக்களே உருவாக்கி (அல்லது கிடைப்பதை அங்கீகரித்து) அதே பிரமாண்டமான வாக்குத் தெரிவின் அடிப்படையில் மக்களே தீர்மானிக்கும் அதிகாரிகளிடம் அவர்கள் தீர்மானித்த சட்டங்களையும் , யாப்புகளையும் தம்மை நோக்கியே பிரயோகிக்கும் அதிகாரத்தை கொடுப்பதே ஜனநாயகமாகும் .

இதை கூர்ந்து அவதானியுங்கள் ஒரு உண்மை புலப்படும் . அதுதான் இங்கு கடவுள் வடிவத்தில் பெரும்பான்மை மக்கள் அமர்ந்திருக்க அவர்களின் வரத்தின் மூலம் அவர்களுக்கே பணிவிடை செய்ய பூசாரிகளாக அரசு இயங்க வேண்டும் என்பதே அந்த கோட்பாட்டுச் சுருக்கமாகும் .அதாவது இந்த ஜனநாயக அரசியல் பொறியின் மூல மந்திரமே மக்களின் விருப்பு எனும் மேற்போக்கான கருத்தியலை கொண்டதல்ல மாற்றமாக சட்டங்களை,யாப்புக்களை ஆக்கும் உரிமையும், அங்கீகரிக்கும் உரிமையும் கொண்ட 'சுப்பர் பவர் ' மக்களிடமே உள்ளது என்பதாகும் .

இந்த கருத்தியலின் ஆழ்ந்த முடிவானது ஒவ்வொரு தனி மனிதனும் குட்டிக் கடவுள்கள். ஆனால் அவர்களின் ஆதிக்க திறன் தம்மோடு கூட்டுச் சேர்க்கின்ற பெரும்பான்மை விகிதா சாரத்தின் அடிப்படையிலேயே என்பதிலேயாகும் . சரி இப்போது நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய இன்னொரு விடயம் இருக்கின்றது . அது அல் குர் ஆனிய பரிபாசையில் ' தாகூத் ' எனும் சொற்பதம் விளக்குவது என்ன ? என்பது பற்றியதாகும் .

'தாகூத் ' எனும் அரபுச் சொல்லுக்கு வரம்பு மீறுதல் என்பது பொருளாகும் 'வஹியின் ' மொழி மரபில் இஸ்லாத்தின் கட்டுப்பாட்டில் தன்னை இணைக்காமல் ,அதற்கு கட்டுப் படாமல் தான்தோன்றித் தனமாக மற்றவர்கள் மீது அதிகாரம் செலுத்தும் ஒவ்வொருவரையும் குறிக்கும் .


இன்னும் சற்று இது பற்றி விரிவாக சொன்னால் ;
1. இச்சைகளின் பால் இட்டுச் செல்லும் மனம் .
2.பொய்மையின் பக்கம் அழைப்புக் கொடுக்கும் அழைப்பாளன் .
3.அல்லாஹ்வின் (சுப ) சட்டங்களுக்கு எதிராக , அல்லது மாற்றமாக (சாணாக்கியம் ,காலத்தின் தேவை போன்ற நியாயங்களை காட்டிய நிலையிலோ ,அல்லது அல்லாமலோ ) வேறு சட்டங்களை ,யாப்புகளை பிரயோகிக்க நிணைக்கும் தனி மனிதன் ,சமூகம் ,அல்லது இயக்கம் ஆகிய அனைத்துமே இந்த தாகூத் எனும் பதத்தில் உள்ளடங்கி விடும் .

இதனடிப்படையில் இன்று ஒவ்வொரு முஸ்லிமும் தம்மை மறு பரிசீலனை செய்ய வேண்டிய தேவை இருக்கின்றது . இந்த 'தாகூதியத்தின் ' பின்னால் அணி திறலும் தவறை முஸ்லீம்கள் கைவிட வேண்டும்.

http://khandaqkalam.blogspot.ae/2014/03/blog-post_9323.html

Mar 14, 2014

முதலாளித்துவம் ஒரு சுயநலவாதம் !





இன்று உலகை ஆள்வது முதலாளித்துவம் அது சிலரின் நலனில் பலரின் வாழ்கையினை பனையம் வைத்து பயணம் செய்யும் ஒரு சுயநல அரசியல். அது இன்று தனக்கான மாற்று அரசியல் இல்லாதநிலையில் தனிப்பெரும் சக்தியாக தன்னை நிலைநாட்டி வாழ்ந்து கொண்டு இருக்கின்றது .

இயல்பிலேயே சுயநலப்பார்வை உள்ள மனித குலமும் அதன் தாக்கத்தினால் அது அழைக்கும் இலக்கு நோக்கியே பயணிக்கின்றது. உலகின் ஒவ்வொரு பொருளிலும் விடையத்திலும் அதன் தாக்கத்தை நாம் காண முடியும் . குடும்ப உறவுகள் ,சமூகஉறவுகள் ,சர்வதேசஉறவுகள், கல்வி , தொழில் ,நட்பு ,இப்படிஎல்லா விடயங்களும் அதன் கட்டுப்பாட்டில்தான் என்றால் அது மிகையான கருத்து அல்ல .

ஆனால் இந்த முதலாளித்துவம் காலனி ஆதிக்கமாய் பல நூற்றாண்டுகள் உலகை ஆண்டு தமது மூல தேசம் நோக்கி ஆளும் தேச வளங்களையும் மனித உழைப்பையும் சுரண்டி சென்ற போது அதற்கு எதிராக சுதந்திரப்போராட்டத்தை மேற்கொண்ட மனித குலம் இன்று மௌனமாகவோ அல்லது மட்டுப்படுத்தப்பட்ட அளவிலே தான் தமது எதிர் கருத்தை,போராட்டத்தை முன்வைக்கின்றது.காரணம் முதலாளித்துவ சித்தாந்தத்தை தனது வாழ்க்கை வழி முறையாக ஏற்றுக்கொண்டுவிட்டு அதனால் வரும் விளைவு களுக்கு எதிராக மட்டுமே தமது எதிர்ப்பை காட்டுகின்றது ! அதுவும் அந்த சித்தாந்தத்தின் இன்னொரு தீர்வின் ஊடாகவே அந்த எதிர்ப்பும் காட்டப்படுகின்றது .

தமது காலனி ஆதிக்கத்தை விட்டு முதலாளித்துவம் மற்றைய நாடுகளுக்கு உண்மையில் சுதந்திரம் கொடுத்தது என்பது ஒரு வேடிக்கையான கருத்து !! இங்கு நடந்தது என்னவென்றல் ஒரு பறந்த நவ காலனித்துவ சாம்ராஜ்யம் உருவாக்கப்பட்டது தான் !! இங்கு அவர்கள் வைத்திருந்த நேரடி மனித அடிமைத்துவம் உரிமை சீட்டு எழுதப்பட்ட அடிமைத்துவமாக மாற்றப்பட்டது மட்டும்தான்!!! உண்மையில் மனிதர்களாகிய நாம் ஏமாற்றப்பட்டுளோம் ! ஏமாற்றப்படுகின்றோம்!! இனியும் மிகச்சரியாக சிந்திக்காதவரை ஏமாற்றப்படுவோம் !!

http://khandaqkalam.blogspot.ae/2014/02/blog-post_24.html

Mar 10, 2014

கலாச்சாரம் என்பது…?


வாழ்க்கை பற்றிய கண்ணோட்டமான அகீதாவில் இருந்து உருவாகும் அம்சமாக கலாச்சாரம் உள்ளது. இன்றுள்ள நவீன உலகில் ஒரு முஸ்லிம் நாகரீகம் எனும் பெயரில் மேற்கினதுகலாச்சாரத்தை சர்வசாதாரணமாக Copy யடித்து உள்வாங்கி பின்பற்றி வாழ்வதனை நாம்காணலாம்.
மேற்கினது கலாச்சாரம் வாழ்வியல் பற்றிய கண்ணோட்டத்தை பார்க்கும் பார்வை இஸ்லாத்தினதுவாழ்வியல் கண்ணோட்டத்தில் இருந்து முற்றிலும் வித்தியாசமானதாகும்.

மேற்கினது கலாச்சாரம் வாழ்வியலில் மதத்தின் தலையீட்டை நீக்கிவிடுதல் எனும் அடிப்படையில்மனோ இச்சையை பின்பற்றி வாழும் வழிமுறைகளில் உச்சகட்ட புலன் இன்பங்களை எந்தவிதமானவரையறைகளின்றி அனுபவிக்க வேண்டும் என்பதிலும் நிறுவப்பட்டுள்ளது. இந்த பார்வையில் ஒருமுஸ்லிம் தமது வாழ்வொழுங்கை அமைக்க முடியாது. அவன் அல்லாஹ் விதித்த வரம்புகளைமீறமுடியாது. அவ்வரம்புகளை பேணியபடி இறை திருப்பதியை நாடிய நிலையில்தான அவனதுபுலன் இன்பங்களை அவன் ஒழுங்குபடுத்தவேண்டும்..

ஆதலால் ஒரு முஸ்லிம் மேற்கினது காலாச்சாரத்தை பிரதிபலிக்கும் எந்த ஒன்றையும் பின்பற்றமுடியாது. அது அவனை இஸ்லாத்தை விட்டும் தூரமாக்கும் தன்மையை அவனதுவாழ்வொழுங்கில் ஏற்படுத்தும்.

இன்று மேற்கினது காலாச்சாரம் ஒரு முஸ்லிமின் ஆடைமுதல் விளையாட்டுவரை வாழ்வின்அனைத்துத் துறையிலும் ஊடுறுவியுள்ளது. இதுபற்றி ஒவ்வொரு முஸ்லிமும் ஆழ்ந்து சிந்தித்துஎமது கலாச்சாரத்தை பண்பாட்டை வாழ்வில் ஒழுகிட முற்படவேண்டும். அதுவே எமது ஈருலகபாக்கியத்திற்கும் ஈடேற்றத்திற்கும் வழிவகுக்கும். இறை திருப்தியை பெற்ற மக்களாக வாழவழிவகுக்கும் என்பதனை உணரவேண்டும்.

அன்னிய கலாச்சாரங்களை எம்வாழ்வில் இருந்து களைந்திடுவோம்! அது பற்றிய சிந்தனைத்தெளிவைப் பெறுவோம்!

Oct 16, 2013

இஸ்லாத்தின் பார்வையில் மக்களாட்சி!


முதலாளித்துவக்கொள்கையின் ஆட்சிமுறையில் அனைத்து ஆட்சி அதிகாரமும் மக்கட்கேயாகும். எனவே மக்களே தமக்காக சட்டமியற்றுபவர் ஆவர். அவர்களே தாம் விரும்பிய சட்டத்தை நடைமுறைபடுத்தும் அதிகாரம் பெற்றவர்கள்.

மக்களாட்சிமுறையில் ஆள்வது இறைநம்பிக்கையற்ற முறையில் ஆள்வதாகும்.

மக்களாட்சி முறைக்காக அழைப்பு விடுப்பது குஃப்ர் முறைக்காக அழைப்பு விடுப்பதாகும். இஸ்லாத்தில் இது முற்றிலும் தடுக்கப்பட்டதாகும்.

மக்களாட்சிமுறை இஸ்லாமிய சட்டதிட்டங்கட்கு அப்பாற்பட்டதாகும். ஏனெனில் ஒரு முஸ்லிம் நடைமுறைபடுத்தவேண்டிய சட்டம் அல்லாஹ்விடமிருந்தே வருவதாகும்.

ஒரு முஸ்லிம் அல்லாஹ்வின் அடிமை. ஆதலால் அல்லாஹ்(சுபு) அமைத்த பாதை வழி நடப்பதும், அவன் அனுமதிக்காதவற்றினின்று விலகியிருப்பதும் கடமையாகும்.

அனைத்து ஆட்சி அதிகாரமும் அல்லாஹ்(சுபு)விடமே இருப்பதால் முஸ்லிம் உம்மா தனது விருப்பப்படி நடக்க இயலாது. ஷாPஆவிடமே அனைத்து அதிகாரமும் இருப்பதால் அதன் வழி மட்டுமே செல்ல இயலும்.

சட்டமியற்றுபவன் அல்லாஹ் மட்டுமே. அதனால் முஸ்லிம் உம்மா தானாக சட்டமியற்ற இயலாது.

முஸ்லிம் உம்மா அல்லாஹ்(சுபு) விலக்கியவற்றை (உதாரணம்:வட்டிப்பணம்) நடைமுறைப்படுத்த இசையுமானால் அச்சட்டத்திற்கு எவ்வித அங்கீகாரமும் இஸ்லாத்தில் இல்லை.

அடிப்படையில் அது ஷாPஆவிற்கு எதிரானது. அதனை எதிர்த்து போராடுவது கடமையாகும்.

ஆனாலும் மக்களை ஆட்சி புரியவும், ஷாPஆவை நடைமுறைபடுத்தவும் அதிகாரம் படைத்த ஆட்சியாளரை தமக்காக தேர்ந்தெடுக்கும் உரிமை முஸ்லிம் உம்மாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

அந்த ஆட்சியாளர் சத்தியப்பிரமாணம் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

எனவே ஆட்சியாளர் என்பது அல்லாஹ்வின் சட்டமனைத்தையும் நடைமுறைபடுத்துபவரே!

ஏனெனில் சட்டமனைத்தும் அல்லாஹ்விடமிருந்தே அருளப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களாட்சி முறை இஸ்லாமிய முறை அல்ல.

மேலும் அது இஸ்லாத்திற்கு எதிரான ஒரு கோட்பாடாகும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இது குறித்து அல்குர்ஆன் இவ்வாறு கடுமையாக கண்டிக்கிறது!

"ஆகவே அல்லாஹ் அருளியவற்றைக் கொண்டு அவர்கள் மத்தியில் ஆட்சி செய்வீராக மேலும் உம்மிடம் சத்தியம் வந்தபின்னர் அவர்களின் மனோ இச்சைகளைப் நீர் பின்பற்ற வேண்டாம்." (அல்குர்ஆன் 5:48)

"அல்லாஹ் அருளியவற்றைக் கொண்டு அவர்களிடையே ஆட்சி செய்வீராக. மேலும் அல்லாஹ் உமக்கு அருளிய சிலவற்றில் அவர்கள் உம்மைக் குழப்பத்தில் ஆழ்த்திவிடக் கூடும் என்பதால் நீர் எச்சரிக்கையுடன் இருப்பீராக" (அல்குர்ஆன் 5:49)

"எவர்கள் அல்லாஹ் அருளியவற்றைக் கொண்டு ஆட்சி செய்யவில்லையோ அவர்கள் காபிர்களாவார்கள்" (அல்குர்ஆன் 5:44)

எனவே அல்லாஹ் அருளியவற்றைக் கொண்டு ஆட்சி செய்யத்தேவையான ஆட்சிமுறையாகிய கிலாபா ஆட்சிமுறைபற்றி அதீத கவனம் செலுத்தவேண்டியது இன்றைய முஸ்லிம் உம்மத்தின் மிகப்பாரிய பணியாகும்.

இதற்குத் தேவையான நுஸறாவை எமது முஸ்லிம் இராணுவத்திடம் கோரவேண்டும்.

மேற்கினது ஆட்சியமைப்பாகிய ஜனநாயக வழிமுறையில் இஸ்லாத்தை பகுதியாக அமுல்படுத்த முற்படும் போக்கை கைவிடவேண்டும்.

தேசியவாதச் சிந்தனையை களைந்து உம்மத் எனும் சிந்தனையை வலுப்படுத்த வேண்டும்.

மீண்டும் நபி வழியில் இஸ்லாமிய அரசாகிய கிலாபாவை நிறுவ பாடுபடவேண்டும். அதற்காக உழைப்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் வாஜிபாகும்

இன்றைய முதலாளித்துவ பொருளாதாரமும் அதன் உலக தலைமைத்துவமும்……?


47 மில்லியன் மக்கள் வறுமையிலும் 97 மில்லியன் மக்கள் ஏழ்மையடைந்த நிலையிலுமாக சுமார் 146 மில்லியன் மக்கள் (அமெரிக்காவின் சனத்தொகையில் அரைவாசி) பட்டினியால் வாடும் நிலைக்கு வழிவகுத்துள்ள இன்றைய முதலாளித்துவ பொருளாதாரமும் அதன் உலக தலைமைத்துவமும்!

ஆனால் இஸ்லாம்தான் இந்த ஏற்றத்தாழ்வை நிவர்த்திக்கும்! உலகில் வறுமையை நீக்கும்!
 

Oct 9, 2013

ஜனநாயகம் பற்றி முஸ்லீம்கள் சிந்திக்க வேண்டிய பக்கங்கள். (காலத்தின் தேவை கருதிய மீள் பதிவு)



ஆட்சியாளர்களை தேர்ந்த்தேடுக்கும் உரிமை ,தட்டிக் கேட்கும் உரிமை ,போன்ற சில மாயைப் பண்புகளை அது சுமந்திருப்பதால் "ஜனநாயகம்" (Democracy ) சத்தியமாகிவிடாது!! அதன் தோற்றம் ,நோக்கம் என்பன இஸ்லாத்தின் அரசியலான மக்களுக்கு நன்மை செய்தல் என்ற விடையத்தை அடிப்படையாககொண்டதுமல்ல. .மாறாக 'குப்ரிய'ஆளும் வர்க்கத்தின் ஒரு எமாற்றுக்கருவி ; அதை இஸ்லாத்திற்குள் எடுக்கும் தேவை ஏன்?

ஆன்மீக வாழ்வையும் ,உலக வாழ்வையும் பிரிப்பது ! எனும் அடிப்படையில் கிறிஸ்தவ உலகம் இந்த ஜனநாயகத்தை தனது கட்டாயத்தேவையாக பயன் படுத்தியது . பண்டைய கிரேக்கரின் பின் மத்திய ஐரோப்பாவின் மதகுரு சர்வாதிகாரத்தை எதிர்த்து கடவுளுக்குரியதை கடவுளுக்கும் ,அரசருக்குறியதை அரசருக்கும். எனும் விதியின் கீழ் மதச்சார்பின்மை கோட்பாட்டை நோக்கியதாக திசை மாற்றியது . ஜனநாயகத்தின் நவீன பயண்பாடு இவ்வாறுதான் ஆரம்பிக்கின்றது.

முஸ்லிம் சமூகம் இதன்பக்கம் வழிகாட்டப்படும் நோக்கத்தை சரியாக புரிந்துகொள்ள வேண்டும் . இஸ்லாத்த்தினில் பிரத்தியோகமானதும் நிலையானதுமான ஒரு அரசியல் வழிகாட்டல் இல்லையா ?!! 'வஹி' இந்தவிடையத்தில் குறைபாடு செய்துவிட்டதா ?!! அல்லாஹ் (சுபு ) எம்மை பாதுகாக்க வேண்டும் .


அல்லாஹ் வெளிப்படுத்தியதை கொண்டு எவர் தீர்ப்பு செய்யவில்லையோ
அவர்கள் நிராகரிப்பாளர்கள் ! (TMQ 5:44)


அல்லாஹ் வெளிப்படுத்தியதை கொண்டு எவர் தீர்ப்பு செய்யவில்லையோ
அவர்கள் அநியாயக்காரர்கள் ! (TMQ 5:45)


அல்லாஹ் வெளிப்படுத்தியதை கொண்டு எவர் தீர்ப்பு செய்யவில்லையோ
அவர்கள் பாவிகள் ! (TMQ 5:47)


(நபியே !)"நிச்சயமாக அல்லாஹ்விற்கே வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி
உரித்தானதென்பதை நீர் அறியவில்லையா? ... (TMQ 5:40)


போன்ற அல்குர் ஆன் வசனங்களும் இன்னும் பல ஏராளமான அல்குர் ஆன் வசனங்களும் தெளிவாக இருக்க முஸ்லிம்' உம்மாவை ' தவறான ஒரு படு பாவத்தை நோக்கி இந்த ஜனநாயகம் இட்டுச்செல்கின்றது என்பது ஒரு வெளிப்படையுண்மை.

இந்த ஜனநாயகத்தை பயன்படுத்தி இஸ்லாத்தை மறுமலர்ச்சி அடையவைக்கமுடியும் எனும் வாதமே நகைப்புக்கிடமானது ! ஏனெனில் இதனோடு இணைவு என்பதே முதலாளித்துவத்தை தலுவச்சொல்லும் 'கலிமா ' ஆகும் . ஏனெனில் அது தனக்கென பிரத்தியோகமான ஓர் அரசியல் ,பொருளாதார, சமூகவியல் வழிமுறைகளை கொண்டது .

அதனூடாக பயணிக்க நிணைப்பவர்களுக்கு தனது சிந்தனைகளோடும் , வழிமுறைகளோடும் முரண்படாத வரை ஒரு செயல் சுதந்திரத்தை தாராளமாக அள்ளிவழங்கும் அமெரிக்காவின் வாசிங்க்டன் முதல் இஸ்ரேலின் டெல்அவிவ் வரை இதில் தடையே இருக்காது ! அதன் கொள்கை சார் சுயரூபத்தை புலப்படுத்துமிடம் எது என்றால் , அவர்கள் தனிமனித சுதந்திரமாக கருதுமிடங்களில் இஸ்லாம் தனது சட்டங்களை சொல்லவரும்போதுதான் தனது கொடூர முகத்தை காட்டத் தொடங்கும் .மதச் சார்பின்மை என்ற தனது அடிப்படையை பாதுகாக்க சர்வாதிகாரத்தையும் சர்வ சாதாரணமாக பயன் படுத்தும் .

இன ,மத, குல, நிற ,வர்க்க, பிரிவுகளை மறைமுகமாகவோ ,வெளிப்படையாகவோ அங்கீகரித்து அது மனித உரிமையாகவும் ,தனி மனித சுதந்திரமாகவும் வரையறுக்கும் ! தேச, தேசிய எல்லைகளை இயல்பாக்கி கீழ்த்தரமான இன, மத, சாதி மோதல்களை தூண்டிவிடும் .இதுதான் ஜனநாயகத்தின் சுயரூபம் !!!! மேலே தந்த சுருக்கமான ஜனநாயகத்தின் விளைவுப்பொருட்கள் எந்த அடிப்படையில் இஸ்லாத்தோடு ஒத்துப்போகும் ! சற்று இது பற்றி சிந்திப்போமா?

http://khandaqkalam.blogspot.ae/2013/10/blog-post_9.html?spref=fb

Oct 5, 2013

முதலாளித்துவ சித்தாந்தத்தின் அடிப்படை கோட்பாடாக….

வாழ்வியலிலிருந்து மார்க்கத்தை பிரித்து வைக்கும் இந்த கொள்கைதான் முதலாளித்துவ சித்தாந்தத்தின் அடிப்படை கோட்பாடாக இருக்கிறது. 
மேற்கத்திய நாகரீகத்திற்கும், அறிவார்ந்த தலைமைக்கும் இதுதான் அடித்தளமாக விளங்குகிறது.

மேற்கத்திய காலனி ஆதிக்கவாதிகள் அழைப்பு விடுப்பதும் உலகம் முழுவதிலும் பிரச்சாரம் செய்வதும் இந்த கொள்கையைத்தான். அதன் கலாச்சாரத்தின் பிரதான தூணாக இந்த சிந்தனை விளங்குகிறது.

இந்த கோட்பாட்டின் அடித்தளத்தில் நின்று கொண்டுதான் மேற்கத்தியர்கள் முஸ்லிம்கள் இஸ்லாத்தில் வைத்திருக்கும் நம்பிக்கையை அசைப்பதற்கு முயற்சிக்கிறார்கள்.

கிருஸ்தவத்துடன் ஒப்புநோக்கி இஸ்லாத்தை அவர்கள் கணக்கிடுகிறார்கள். இவை இரண்டையும் மதங்கள் என்று எண்ணுகிறார்கள்.

எனவே வாழ்வியலிலிருந்து மார்க்கத்தை பிரிக்க வேண்டும் என்ற இந்த கருத்தை எவர் கொண்டிருக்கின்றாரோ அவர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மேற்கத்திய அறிவார்ந்த தலைமையினால் இயக்கப்படும் முகவர் (Agent) ஆவார்.

அறிந்த நிலையிலோ அல்லது அறியாத நிலையிலோ மேற்கத்திய காலணி ஆதிக்கத்தின் முகவராகவே அவர் பணியாற்றுகின்றார்.

Oct 4, 2013

இஸ்லாமோஃபோபியா!

இஸ்லாமோஃபோபியா எனும் பெயர் புதிதாக புனையப்பட்டது 1990-ன் மத்தியில் தான். உலகின் பல்வேறு பண்பாடு மற்றும் பன்முகத்துவம் அமைந்த சூழல்களில் தோன்றியதே இந்த சொல்லாடல். 
இஸ்லாம் பற்றிய எதிர்மறை சிந்தனைகளை தன்னுள் அடக்கியிருக்கும் மேற்கத்திய உலகம், இஸ்லாத்தின் மீதான அச்சம் மற்றும் எதிர்ப்பு விஷயத்தில் மிகவும் தொன்மையான வரலாற்றைத் தன்னுள் கொண்டுள்ளது.

அன்றிலிருந்து இன்று வரை இஸ்லாமும் முஸ்லிம்களும் மேற்கத்திய ஊடகங்களால் திட்டமிட்டு சித்தரிக்கப்படும் மோசமான முறைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

ஒரு விஷயத்தில் ஒருவருக்கு அதீத அச்சம் தோன்ற அவ்விஷயத்தைக் குறித்த முழுமையான விஷய ஞானம் இல்லாமல் இருப்பதோ அல்லது அதனைக் குறித்த தவறான வழிகாட்டல்கள் மற்றும் பிரச்சாரங்களோ தான் முழு காரணமாக அமைய முடியும் என்பதோடு, தான் வேறூன்றி இருக்கும் ஒரு நம்பிக்கையின் மீதான அழுத்தமான விடாப்பிடியான சிந்தனை ஓட்டமும் என்று கூறலாம்.

ஆனால் இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் இஸ்லாமோஃபோபியா என்னும் இஸ்லாத்தின் மீதான அதீத அச்ச மனப்பாங்கு இஸ்லாத்தை தவறாக விளங்கியுள்ளவர்களின் மனதில் மட்டும் காணப்படவில்லை.

மாறாக, இவ்வாறு இஸ்லாத்தை தவறாக மக்கள் விளங்க வேண்டும் என்பதற்காகவே முழுவீச்சில் பணியாற்றும், இஸ்லாத்தைக் குறித்த முழு அறிவும் உடைய, அதன் வளர்ச்சியை எவ்வகையிலாவது தடுத்து நிறுத்த பாடுபடும் சிலரிடையே தான் அது அதிகமாக காணப்படுகிறது.

ஜனநாயக வழிமுறையில் இஸ்லாமிய ஆட்சி....?

“ஜனநாயகம்” எனும் கருவியை பயன்படுத்தி இஸ்லாத்தை இஸ்லாத்தை ஒரு போதும் ஆளுகைநிலைக்கு கொண்டுவரமுடியாது. அது நபிவழியும் அல்ல.

ஜனநாயகம் என்பது...
“மக்களுக்காக மக்களைக்கொண்டு மக்களே செய்யும் ஆட்சிதான் மக்களாட்சி அல்லது ஜனனாயகம் என்றழைக்கப்படுகிறது.”

ஜனனாயக த்தில்...
1. இங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் மக்களின் நலனுக்காக ஆட்சிசெய்கிறார்கள்.

2. சட்டம் இயற்றும் அதிகாரம் ஆட்சி அதிகாரம் தேர்தல் நடாத்தும் அதிகாரம் மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் ஆகிய அனைத்தும் மக்களுக்குரியது.

3. இங்கு இறையான்மை எனும் உச்சகட்ட அதிகாரம் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இவர்கள் விரும்பிய சட்டத்தை ஆக்கவும் நீக்கவும் அதிகாரம் பெற்றுள்ளார்கள்.

இஸ்லாத்தில்…..
1. இறையான்மை சரீஆவிற்குரியதாக இருப்பதுடன் சட்டம் இயற்றும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மாத்திரமே உரியது.

2. ஆட்சி செய்வதற்கும் இஸ்லாத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் உரிய உரிமையை அல்லாஹ் உம்மாவுக்கு வழங்கியுள்ளான்.

3. ஆகவே உம்மாவின் சார்பாக ஆட்சி செய்வதற்கும் இஸ்லாத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் ஒரு ஆட்சியாளரை தேர்வு செய்வதற்குரிய உரிமையை அல்லாஹ் உம்மாவிற்கு வழங்கியுள்ளான்.

இஸ்லாத்தில் சட்டம் இயற்றும் அதிகாரம் “உம்மாவிற்கு இல்லை”. இதனாலேயே ஜனனாயக ஆட்சியமைப்பு குப்ருடைய ஆட்சியமைப்பாகும். இதனால் “இந்த ஆட்சியமைப்புக்கு அழைப்பு விடுப்பதும் குப்ருக்காக விடுக்கப்படும் அழைப்பாகும்”.

இன்று முஸ்லிம் நாடுகளில் மேற்கினது ஆட்சியமைப்பாகிய ஜனனாயக வழிமுறையில் ஆட்சிக்காக அழைப்பு விடப்படுவதுடன் “அல்லாஹ்வுடைய சட்டம் பகுதியாக அமுல்படுத்தப்படும்” துர்பாக்கிய நிலையையும் நாம் காணலாம். இது மிகப்பெரிய ஆபத்தாகும்.

அத்துடன் ஜனநாயகம் எனும் மேற்கினது ஆட்சியமைப்பு கருவியை பயன்படுத்தி எதிர்கட்சியில் மதஒதுக்கல் சிந்தனையை கொண்ட ஏகபிரதிநிதிகளையும், குப்பார்களது பொம்மைகளையும் வைத்தபடி இஸ்லாத்தை அமுல்படுத்த முற்பட்டு அழிவை சந்தித்த வரலாற்றை “அல்ஜீரியாவிலும்” “ பலஸ்தீனத்திலும்” கண்ட நாம் இன்று “எகிப்தில் “ அனுபவிக்க ஆரம்பித்துவிட்டோம்.

எனவே, “குப்பார்களது அரசியல் நலன்களுக்கும்” “ முதலாளிகளுக்கு தேவையான சட்டவாக்கத்திற்கும்” வடிமைக்கப்பட்ட ஒரு ஆட்சிமுறை யான “ஜனநாயக ஆட்சிமுறைக்” கருவியை பயன்படுத்தி இஸ்லாத்தை ஆளுகைக்கு கொண்டுவருவது பற்றிய சிந்தனையை களைந்து “கிலாபா ஆட்சிமுறை” பற்றிய கோசத்தை வலுப்படுத்தி இராணுவ நுஸ்றாவை முஸ்லிம் நாடுகளில் பெற்று ஆட்சியமைக்க தஃவா முன்னெடுப்புக்கள் அமையவேண்டிய இக்கட்டான காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம்.

இது குறித்து அல்குர்ஆன் இவ்வாறு கடுமையாக கண்டிக்கிறது!

"ஆகவே அல்லாஹ் அருளியவற்றைக் கொண்டு அவர்கள் மத்தியில் ஆட்சி செய்வீராக மேலும் உம்மிடம் சத்தியம் வந்தபின்னர் அவர்களின் மனோ இச்சைகளைப் நீர் பின்பற்ற வேண்டாம்." (அல்குர்ஆன் 5:48)

"அல்லாஹ் அருளியவற்றைக் கொண்டு அவர்களிடையே ஆட்சி செய்வீராக. மேலும் அல்லாஹ் உமக்கு அருளிய சிலவற்றில் அவர்கள் உம்மைக் குழப்பத்தில் ஆழ்த்திவிடக் கூடும் என்பதால் நீர் எச்சரிக்கையுடன் இருப்பீராக" (அல்குர்ஆன் 5:49)

"எவர்கள் அல்லாஹ் அருளியவற்றைக் கொண்டு ஆட்சி செய்யவில்லையோ அவர்கள் காபிர்களாவார்கள்" (அல்குர்ஆன் 5:44)

Oct 3, 2013

முதலாளித்துவம் கூறும் மனித உரிமையும் இஸ்லாத்தில் அதன் நிலைப்பாடும்?

முதலாளித்துவக்கொள்கையில் ஒரு குறிப்பிடப்படும்படியான அம்சம் மனிதஉரிமை மற்றும் அதனை பாதுகாத்தல் ஆகும்.

அவ்வுரிமைகளாவன, வழிபாட்டு உரிமை, பேச்சுரிமை, சொத்துரிமை மற்றும் தனிமனித உரிமைகளாகும்.

சொத்துரிமையானது இலாபத்தை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவக் கொள்கையின் வழித்தோன்றலேயாகும். இதன் மூலம் தனியுடமைக்கம்பெனிகள் தோன்றி மக்களை காலனிகளாக்கி அவர்களின் வளங்களை அபகரிக்கத் தூண்டுகின்றன.

மேற்கண்ட உரிமைகள் இஸ்லாத்திற்கு முற்றிலும் மாறுபட்டவையாகும். ஒரு முஸ்லிமிற்கு அல்லாஹ்வை தவிர வேறொரு கடவுளை வணங்க அனுமதியில்லை.

இஸ்லாத்தின் கருத்துக்களைத்தவிர வேறு எந்தக்கருத்துக்களையும்; ஏற்றுக்கொள்ள ஒரு முஸ்லிமிற்கு அனுமதியில்லை.

சொத்துரிமை என்பதும் இஸ்லாத்தின் அடிப்படையில் அமைவதேயாகும். முதலாளித்துவக் கொள்கையான “முடிந்தால் எந்தவகையான சொத்துக்களையும்எப்படிவேண்டுமானாலும் அடையலாம்" என்பது இஸ்லாத்தில் இல்லை.

இஸ்லாத்தில் தனி மனிதனுக்கு தடுக்கப்பட்டவையான சொத்துக்களை அடைய முடியாது. வட்டி கொடுத்தல் வாங்குதல் மூலம் சம்பாதிப்பது தடுக்கப்பட்டுள்ளது. மேலும் மதுபானம், விற்றல், பன்றி இறைச்சி மூலம் சம்பாதித்தல் போன்றவை தடுக்கப்பட்டுள்ளன.

எனவே எவ்வழிகளில் சொத்துக்களை சம்பாதிக்க முடியும் என்பதை இஸ்லாம் வரையறைசெய்துள்ளது.

தனிமனித சுதந்திரம் என்பது. இஸ்லாத்தில் இல்லை. எந்த மனிதனும் இஸ்லாமிய சட்டதிட்டங்கட்கு உட்பட்டே நடக்கவேண்டும்.

எனவே சுதந்திரம் என முதலாளித்துவக்கொள்கையில் வரையறுக்கப்பட்ட எவையும் சுதந்திரம் அல்ல. மேலும் அவை இஸ்லாத்திற்கு எதிரான கொள்கைகளாகும்.

Oct 1, 2013

தேசியவாதம்!


தேசியவாதம் என்பது மனிதர்களுக்குள் காணப்படுகின்ற ஆதிக்க உணர்வின் வெளிப்பாடு ஆகும்.

தேசியவாதம் மனிதாபிமானமற்றதும் இனவாதத்திற்கு வழி கோலுவதும் தரக்குறைவான சிந்தனையின் வெளிப்பாடுமாகும். இஸ்லாத்திற்கு முரணான ஒரு கருத்து ஆகும். 

இரண்டாம் உலக மகாயுத்த காலங்களின்போது முதன் முறையாக அரபுத் தேசியவாதம் தலை தூக்கியது.

இன்று எமது உம்மத்தின் மீட்சிக்குத் தடையாக உள்ள மிகக் கெட்ட பிணைப்பு இதுவாகும்!

உம்மத்தை பிரித்துள்ள பிணைப்பாகும்!

பிரித்தாளும் தந்திரத்தை கொண்ட மேற்கு மற்றும் அமெரிக்காவின் மிகவும் பலம்வாய்ந்த கருவியாகும்!

இன்று நாம் உடைத்தெறிய வேண்டிய ஒரு சிந்தனை!

நாளைய இஸ்லாமிய உலக ஒழுங்கு உருவாவதற்கான தடைக்கல்லாகும். உம்மத் எனும் சிந்தனையும் சகோதரத்ததுவ பிணைப்பும் வலுவுறும் போதே இந்த கீழ்த்தரமான சிந்தனை தகர்க்கப்பட முடியும்!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“பிரிவினைவாதம் கெடுதியானது. அதை விட்டு விடுங்கள். பிரிவினை கோருபவன் அதற்காகப் போராடுபவன் அதற்காக உயிர் கொடுப்பவன் எவனும் எம்மைச்சார்ந்தவர்களல்ல.”

எனவே மக்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்துகின்ற தேசியவாதம் என்பது மிகவும் பின்னடைவானதும் இஸ்லாத்திற்கு முரணானதுமான ஒரு வாழ்க்கைப்பிணைப்பு ஆகும்.



by Mohideen Ahamed Lebbe

Sep 30, 2013

முஸ்லிம்களை ஏன் "பயங்கரவாதிகளாக" சித்தரிக்க முற்படுகிறார்கள்?

அவர்களது பிழையான நம்பிக்கை மற்றும் வாழ்கை முறைக்கு தலைசாய்க்க மறுக்கும் முஸ்லிம்கள் அவர்களுக்கு எதிரிகள், பயங்கரவாதிகள்! 

இன்று உலகினது வளங்களின் பெரும் பகுதியை கொண்ட நாடுகள் முஸ்லிம் நாடுகள். அதுவே இவர்களது ஏற்றுமதிச் சந்தைகளாகவும் உள்ளது. 

இஸ்லாம் எழுச்சிபெற்று அது ஒரு தலைமையின் கீழ் ஒழுங்குபடுத்தப்படுமானால் அவர்கள் அஞ்சும் விடயங்கள்:

1. “முஸ்லிம் நாடுகளது வளங்களை சூரையாட முடியாது”.

2. “முஸ்லிம் நாடுகளது நுகர்வுச் சந்தைகளை கட்டுப்படுத்த முடியாது”.

3. “அவர்களது வட்டிப் பொருளாதார ஒழுங்கை முஸ்லிம் நாடுகளில் அமுல்படுத் முடியாது”.

4. “அவர்களது பொருளியல் ஒழுங்கிற்கும் அவர்களது வாழ்க்கை முறைக்கும் அச்சுறுத்தலாக இஸ்லாம் மாறிவிடும்”.

இந்த அச்சம் அவர்களை நிம்மதியிழக்கச் செய்கிறது. அதனால் அந்த பயங்கரத்தை எண்ணி “பயங்கரவாதிகள்” என முஸ்லிம்களுக்கு பெயர்சூட்டுகிறார்கள்.

மேலும், மனித சட்டங்களை பின்பற்ற மறுத்து இறை சட்டங்களை அமுல்படுத்த முற்படும் முஸ்லிமகளை "காட்டுமிராண்டிகளாக" சித்தரிக்க முற்படுகிறார்கள்!

பெண்களை போகப்பொருளாக காட்சிப்படுத்தி அவர்களை உசுப்பேற்றி சுரண்டிவாழும் மேற்கத்தேய வாழ்க்கை முறைக்கு அச்சுறுத்தலாக முஸ்லிம்களது ஆடைக்கலாச்சாரத்தை பார்கிறார்கள்.

தனிமனித சுதந்திரம் எனும் பெயரில் சீரழித்துள்ள மேற்கினது சமூகவாழ்வினது அச்சுறுத்தலாக முஸ்லிம்களது வாழ்க்கைமுறையையும் அவர்களது பண்பாட்டு விழுமியங்களையும் கண்டு அதனை ஒரு அச்சுறுத்தலான மாற்றீட்டு வாழ்க்கை முறையாக உணர்கிறார்கள்.

இதனல் "அபாயாவிற்கு எதிரான" மற்றும் "சரீஆ வாழ்வுக்கு எதிரான" கருத்துக்களையும் பிரச்சாரங்களையும் முடுக்கிவிட்டு முஸ்லிம்களது வாழ்வை கொச்சைப்படுத்த முற்படுகிறார்கள்.

இத்தகைய குற்றச்சாட்டுக்களைக் கொண்டு அனைத்து குப்ர் தேசங்களையும் ஒன்று திரட்டி இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கருவறுக்க துடிக்கிறது ஏகாதிபத்திய அமெரிக்கா.

ஆனால் இவர்கள் எவ்வளவுதான் வெறுத்த போதிலும் அல்லாஹ் தனது ஒளியை பூரணப்படுத்தியே தீ ருவான்.

“அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் காபிர்கள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான்.” (அல்குர்ஆன்- 61:8)

இவ்வாறான விஷமிகளைக் குறித்து அல்லாஹ் இவ்வாறு எச்சரிக்கிறான்

“நாம் சத்தியத்தை கொண்டு, அசத்தியத்தின் மீது வீசுகிறோம்; அதனால், (சத்தியம் அசத்தியத்தின் சிரசைச்) சிதறடித்துவிடுகிறது பின்னர் (அசத்தியம்) அழிந்ததே போய்விடுகிறது. ஆகவே, நீங்கள் (கற்பனையாக இட்டுக்கட்டி) வர்ணிப்பதெல்லாம் உங்களுக்கு கேடுதான்” (அல்குர்ஆன்-21:18)

May 2, 2013

இந்தியா ,பாகிஸ்தான் , பங்களாதேஷ் காட்டும் அரசியல் முதலாளித்துவ பொய் முகங்களா!?( 02)

( சற்று இந்த அல் குர் ஆன் வசனங்களை படித்து, பின் தொடரவும்.)

"அவனே தன்னுடைய தூதரை நேர்வழியைக் கொண்டும் ,சத்திய மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பினான் ;இணைவைப்பாளர்கள் (அதனை) வெறுத்த போதிலும் ,(உலகில்) உள்ள எல்லா
மார்க்கங்களையும் விட அதனை மேலோங்கச் செய்யவே " ( TMQ 9 : 33 )

"அவனே தன்னுடைய தூதரை நேர்வழியைக் கொண்டும் ,சத்திய மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பினான் ;இணைவைப்பாளர்கள் (அதனை) வெறுத்த போதிலும் ,(உலகில்) உள்ள எல்லா
மார்க்கங்களையும் விட அதனை மேலோங்கச் செய்யவே " ( TMQ61 : 09 )

"அவனே தன்னுடைய தூதரை நேர்வழியைக் கொண்டும் ,சத்திய மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பினான் ;,(உலகில்) உள்ள எல்லாமார்க்கங்களையும் விட அதனை மேலோங்கச்
செய்யவே " இன்னும் இதட்கு சாட்சியாக இருக்க அல்லாஹ் போதுமானாவன் ( TMQ 48: 28 )

பாகிஸ்தான் அரசியலில் இந்துக்களுக்கு இட ஒதுக்கீடு பற்றி இந்திய அரசியலை விமர்சிக்கும் இந்திய முஸ்லீம் புத்தி ஜீவிகள் இஸ்லாமிய அரசியலின் பார்வையில் பாகிஸ்தானின் அரசியல் இந்தியாவின் அரசியலோடு எங்காவது முரண்படுகிறதா? எனும்
அடிப்படை உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். அது இதுதான் பாகிஸ்தானின் அரசியல் சில மேல் பூச்சு இஸ்லாமிய அடையாளங்களோடு நடைமுறைப் படுத்தப்படும் தெளிவான
'குப்ரிய' அரசியல்! இந்திய அரசியல் தன்னை தெளிவான 'குப்ரிய' அடையாளங்களோடு வெளிப்படுத்தும் தெளிவான 'குப்ரிய' அரசியல்! அதாவது தெளிவான இஸ்லாம் என்பது இந்த இரண்டு நாட்டுக்கும் பொது எதிரி !!?

பாகிஸ்தான் முஸ்லீம் பெரும்பான்மையை கொண்டிருப்பதால் அங்கு இஸ்லாம் இருப்பதாக யாரும் கருதினால் அது அப்பட்டமான பகல் கனவு ! (பங்களாதேஷ் , உட்பட முழு முஸ்லீம் பெரும்பான்மையும் இத்தகு கீழ்த்தர குப்ரிய வழிமுறையில் பங்காளிகளே!) சரீயாவை கொண்டு வர 51% விகிதாசாரம் கேட்கும் இலட்சணத்தில் இருந்து மதச் சார்பின்மை மதமாகி இஸ்லாம் இங்கும் பூரண வாழ்வியலாக அமூலாக முடியாமல் (90 % முஸ்லீம்கள் இருந்தும்) தவித்துக் கொண்டிருப்பதையும் இன விகிதாசார அடிப்படையில் பிரித்தானிய காலானித்துவத்தால் பிரிக்கப்பட்டு அவர்களது பொம்மை ஆட்சியாளர்களால் நிர்வகிக்கப்படும் நவ காலானித்துவ சிறைகளில் வளம் கொழிக்கும் ஒரு சிறந்த நிலமே பாகிஸ்தான்;என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும் .

(தொடரும் )

இந்தியா ,பாகிஸ்தான் , பங்களாதேஷ் காட்டும் அரசியல் முதலாளித்துவ பொய் முகங்களா!??


முக நூலில் சில பதிவுகளை நான் பார்த்தேன். இன்றைய தூய்மை கெட்ட அரசியல் அதிகாரங்களின் போலி நியாய சதிப் பொறியில் பக்குவமாக சிக்கிய முஸ்லீம் உம்மாவின் குரலாகவே இந்த விடயத்தை கருதவேண்டியுள்ளது. அந்த விபரம் இதுதான்.

பாகிஸ்தான் அரசியலில் இந்துக்களுக்கு விகிதாசார இட ஒதுக்கீடு கொடுக்கப் பட்டுள்ளது தொடர்பில் பாகிஸ்தானின் நடத்தையை ஒரு பெருந்தன்மையாக காட்டி இந்திய அரசியலை விமர்சித்து அந்த விபரம் அமைந்திருந்தது.

இந்தியா , பாகிஸ்தான், பங்களாதேஷ் என்பனவற்றின் நிகழ்கால அரசியல் வடிவத்தின் அத்திவாரமே முரண்பாட்டு அரசியல் அல்லது முரண்பாட்டு அரசியலுக்கான சந்தர்ப்பவாத கூட்டு என்பதாகவே காணப்படுவதை வரலாறு தெரியாதவர்களே மறுக்க முடியும்.

அந்த வகையில் கொலை வெறித்தனம் , சந்தர்ப்பவாதம் , காடைத்தனம், ஏமாற்று என்பவற்றின் சர்வதேச மொத்த உருவங்களின் பிராந்தியப் பிரதிகளாக முதலாளித்துவ காலானித்துவம் சுயலாபம் கருதி இந்த தேசியங்களை உருவாக்கியுள்ளது.

இத்தகு தவறான அரசியல் வடிவத்தின் போலி நியாயங்களை அந்த முதலாளித்துவ சர்வாதிகாரத்தின் சேவகர்களாக பணியாற்றும் பொம்மை ஆட்சியாளர்கள் அவ்வப்போது வெளியிடும் போது இந்த கொடூர வைரஸ் சிந்தனையை ஒருமாற்று மருந்தாக மக்கள்
கருதிக் கொள்கிறார்கள். சில நேரம் தூரத்துப் பச்சையாக தெரியும் சில விடயங்கள் அக்கரைக்கு செல்லும் போது கானல் நீராகி இல்லாமல் போய்விடும். அதுதான் 'தீமோ கிரஸி' காட்டும் தெளிவான 'மாஜிக்'!

உலகம் ஒரு தவறான சித்தாந்த வழிமுறையை இன்று தனது வாழ்வியலாக எடுத்துக் கொண்டுள்ளது. இதிலிருந்து தான் மனித சிந்தனை தனது தீர்வுகளையும் ,ஆதாரங்களையும் எடுக்கப் பழகி விட்டது. இதில் முஸ்லிமும் விதிவிலக்கல்ல. இஸ்லாத்தின் அரசியலும் அதன் இறந்த கால பிரயோகம் , நிகழ்கால நிலை , அதன் எதிர்கால மீள்வருகை தொடர்பில் சுன்னாவை முன்னிறுத்தி சிந்திப்பதில் முஸ்லீம் பாமரர் முதல் மாக்கம் படித்த இஸ்லாமிய
இயக்கங்கள் வரை ஒரு 'தியறியாக' கருதி 'பிரேக்டிகல் வே' ஆக சொல்வது ஜெர்மனியின் ஜனநாயகத்தையும் , பாகிஸ்தான் அரசியலில் இந்துக்களுக்கானஇட ஒதுக்கீடு பற்றியும் தான் என்றால் அது தவறான முடிவு.

அப்துல் கலாமை குடியரசுத் தலைவர் ஆக்கிய இந்தியா சிலநேரம் சில பாகிஸ்தான் முஸ்லீம்களுக்கு உள்நாட்டுக் கொடுமை காரணமாக சிறந்த அரசியல் முன்மாதிரியாக தெரியலாம்!? எது எப்படியோ ஒரு சாக்கடை சித்தாந்தம் சந்தனமாக உலா விடப் படுகிறது. 'ஆலையில்லாத ஊருக்கு இலுப்பம் பூ சர்க்கரையாம் !? '

(தொடரும்)

Apr 27, 2013

சர்வதேச அமைதிக்காகவா ஐ .நா சபை?

மூன்று தசாப்த இனவாத யுத்தத்தின் முற்றுப்புள்ளியை முல்லைத்தீவின் நந்திக்கடல் களப்பில் இட்டதன் பின்னர் ஒரு தொடர்ச்சியான விசாரணைக்கான அழுத்தத்தை ஐநாவின் மனித உரிமை கமிஷன் இலங்கை அரசு மீது இட்டுக்கொண்டு வருகின்றது .

ஆனால் இறுதிக்கட்ட யுத்தத்தில் இலங்கை அரச படைகள் நடந்து கொண்ட விதம் சரியா தவறா ? என்ற விடயம் ஒரு பக்கம் இருக்க யுத்தக் குற்றம் என்ற தூண்டிலில் சர்வதேச சட்டம் என்ற இரையை இட்டு, விரும்பியோ அல்லது விரும்பாமலோ அதை விழுங்க வைத்து விசாரணை எனும் ஆப்படித்து தீர்ப்பு எனும் சதிக்கு விதி என்ற பெயரிட்டு விடுவதா ? அல்லது ஆதார அச்சப்படுத்தல் மூலம் ஒரு இராஜ தந்திர கட்டுப்பாட்டில் இலங்கை அரசை கொண்டு வந்து ஒரு நாகரீக அடிமைத்துவ உழைப்பை இலங்கை அரசிடமிருந்து ஐ .நா சபை எதிர்பார்க்கிறதா ? இந்தக் கேள்விகள் சிலருக்கு அர்த்தமற்றதாக இருக்கலாம் ஆனால் ஐ .நா .சபையை பற்றி நீங்கள் புரிந்து கொள்ள இப்படி இரு வினாக்களை கேட்டுவிட்டே விடயத்துக்கு வரவேண்டியுள்ளது .

சுருக்கமாக சொன்னால் யாருக்காகவோ ஒரு குறித்த 'அசைன்மெண்டை ' நிறைவேற்ற துள்ளியமான திட்டங்களோடு ஐ .நா சபை துடிக்கின்றது என்பதுதான் நான் சொல்லவரும் உண்மை . அந்தவகையில் யார் இந்த ஐ .நா சபை ? எனும் வினாவுக்கு நீங்கள் விடையை தெரிந்து கொண்டால் இந்த ஐ .நாவின் விசாரணை என்ற வண்ட வாளம் உண்மை என்ற தண்டவாளத்தில் ஏறி விடும் .

இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின் சர்வதேச அமைதிக்காக அமைக்கப் பட்ட பொது நிறுவனம் என்பது தான் அனேகமாக எல்லோரும் அறிந்தது .ஆனால் நீதி ,நியாயம் என்ற போர்வையினில் அநீதி மறைக்கப்பட்ட அதன் அதர்ம வடிவம் பற்றி உலகம் ஏமாந்து போனது என்பது புரிந்தும் புரியப்படாத ஒரு உண்மையாகும் .

' ஹிட்லர் ' அழிந்தாலும் 'ஹிட்லரிசத்தை கூட்டாக வாழவைப்போம் ' என்ற ஏகாதிபத்திய விதியை கௌரவ தோற்றத்தில் சர்வதேச மயப்படுத்தல் என்பதற்கு துணை போனதுதான் ஐ .நா இதுவரை செய்துள்ளது . அந்த வகையில் இந்த ஐ .நா. சபைக்கு நான் கொடுக்கும் வரைவிலக்கணம் இது தான்.

'ஏகாதிபத்திய அதர்மத்தில் உலகை பங்காளியாக்கி அநியாயத்தை ,நியாய வடிவத்தில் காட்சிப்படுத்தி சந்தர்ப்பத்துக்கு ஏற்றால் போல் சம்பவங்களை தனக்கு சாதகமாக காட்டி தனக்கான இலாபங்களை அறுவடை செய்ய ஏகாதிபத்தியத்தால் அமைக்கப் பட்ட ஒரு சர்வதேச நிறுவனம் ஐ .நா .சபை ' என்று கூற முடியும் .

இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் வல்லரசு கோட்பாடு வலுப்பெற்ற நிலையில் இந்த ஐ .நாவை மீறிய சக்திகளாக நேட்டோ ,மற்றும் வார்சோ ஒப்பந்தங்கள் பனிப்போரின் கொடும் பிடிக்குள் உலகை ஆட்டுவித்த போது 'வீட்டோ 'என்ற மகுடித்தாளத்தில் ஆடி வல்லரசுகளின் பெட்டிப்பாம்பாக அடங்கி விடுதல் என்பது தான் ஐ.நாவின் வரலாறு . அதாவது ஊருக்கு உபதேசம் என்பதும் அது சிலருக்கில்லை என்பதே ! அந்த வகையில் கொள்கையளவில் ஐ .நா .சபை கையாலாகாத தோல்வி நிறுவன வடிவம் .

அணு ஆயுதங்கள் , இரசாயன ஆயுதங்கள் , பயலோஜிகள் ஆயுதங்கள் என வகை தொகையற்று சிலர் தயாரிப்பார்கள் பரீட்சிப்பார்கள் ,பயன் படுத்துவார்கள் ! இன்னும் சிலர் அது பற்றி மூச்சு விடவும் கூடாது !? தடை நிபந்தனைகள், குற்றங்கள் யாருக்காக பிரயோகிக்க வேண்டும் என்பதைக்கூட இந்த வல்லரசுகளே தீர்மானிக்குமாம் !

முதலாளித்துவம் , கம்யூனிசம் என்ற இரு கொடும் பேய்களின் பொண்டாட்டியாய் இந்த ஐ .நா பணியாற்றினாலும் அதன் உண்மையான விசுவாசம் என்னவோ இந்த முதலாளித்துவத்தோடு தான் ! இந்த உண்மை உலகத்திற்கு தெளிவாக தெரிந்தது கம்பியூனிசத்தின் வீழ்ச்சியின் பின்னர் தான் .

அந்த வகையில் யுத்தக் குற்றம் ,மனித உரிமை மீறல் என்பன உலகில் இலங்கையில் மட்டுமா கண்ணுக்கு தெரிந்த விடயம் !? வியட்நாமில் , பலஸ்தீனில் ,ஆப்கானில் ,ஈராக்கில் ,ஏன் மியன்மாரில் ,இந்தியாவில் என நீண்டு செல்லும் பட்டியலில் இலங்கை குறிப்பாக குறிவைக்கப் பட்டுள்ளது தமிழர் நலனுக்காக என்று யாரும் நினைத்தால் அப்படியான ஏமாளிகள் கணக்கில் ஐ .நா .சபை இன்னும் உயிர் வாழ்கின்றது

யார் இந்த ஐ .நா சபை?

அந்த' நான் கடவுள் ' என்ற அகம்பாவ தேசங்களின் நெற்றிக்கண் நியாயங்களில் பயங்கர குற்றங்கள் கூட இந்த ஐ .நாவின் பார்வையில் சுத்தமாகவே எப்போதும் மொழி பெயர்க்கப்படும் ! அந்த அராஜகமான கழுகுக் கொள்கையை , அரிவாளும் சம்மட்டியும் கொண்டு எதிர்ப்போம் என்ற புரட்சிகர பூச் சுத்தளில் உலகின் ஒரு பகுதி அணி திரண்டதும் உண்மைதான் .ஆனால் நடந்த கதை வல்லரசுகளின் அடியாட்களாக அந்த குண்டர் படைக்கு தொண்டர் படையாக பனிப்போரில் மனித குலம் பணி செய்தது மட்டும்தான்; இதில் வேடிக்கை என்னவென்றால் சில நடுநிலை நாயகங்கள் 'அணிசேராமலும் ' அடியாளானது !

M 16 இற்கு AK 47 , F 16 இற்கு MIC 29 , 'குரூஸ் ' இற்கு 'ஸ்கட் ' , C .I .A இற்கு K .G .B என கொலைகாரத்தனத்தின் மயானக் கோட்பாட்டில் தேச ,தேசிய ,பிராந்திய கோமாளிகளாய் மனித குலம் அறியாமல் பனிப்போர் நாடகம் அரங்கேற்றப்பட்டது . K .G .B இற்காக 'வந்தே மாதரம் ' இந்தியா சொன்னால் C .I .A இற்காக பாகிஸ்தான் ' ஜிந்தாபாத் சொல்லும் ' ! சர்வதேச பக்கா ரவுடிகளின் பிராந்திய சமநிலை பேணும் பேட்டை ரவுடித் தனத்தில் அந்த நாசக் கரங்களோடு நேசக்கரமாய் பலர் இணைந்தது 'ஓப்பன் சீக்கிரட்' .

தடைகளை மீறி இந்தியா 'நியூ கிளியர் 'ஆயுதம் செய்தபோது ,பாகிஸ்தானின் அணுத்துறையில் மறுமலர்ச்சி கண்டு சில வருடங்களில் 'அட்டாமிக் பாம் ' அங்கும் 'சக்சஸ் புல் ' இந்த விதி மீறலை ஐ .நா கேட்டால் , 'சோவியத் வீட்டோ ' இந்தியாவை காக்க ,'U . S வீட்டோ ' வில் பாகிஸ்தான் பதுங்கும் ! 1990 களில் சோவியத்தின் வீழ்ச்சியில் இந்த 'வீட்டோ பவர் ' கம்பியூனிச அணிக்கு சற்று' டாட்டா காட்டியது ' ! 'சீனா தாங்கும் என்ற நப்பாசைக்கும் 'வெஸ்டன் பீஜிங்கின் ' விளம்பரப் பலகைகள் அங்கும் முதலாளிகளின் நாச வரவை நேசமாகக் காட்டியது .

இந்த 'கபிடலிச' ஏகாதிபத்தியத்தில் சந்தை பிடிப்பு நியாயத்தில் 'சமரசம் சாதாரணமாக ' வீட்டோ பவர் ' 'நேட்டோ பவர் 'ஆக அநியாயமாக 500 வருட மசகு எண்ணை கொள் நிலம் ஈராக் அமெரிக்க வசமானது . இந்த 'அப் டு டேட் ' வளக் கொல்லைக்கு பூரண இணை அனுசரணை இந்த ஐ .நா தான் . இந்த ஐ. நா எப்போது 'நேட்டோவில் ' சேர்ந்தது !? என்ற வினாவுக்கு ஈராக் ஒரு தெளிவான சாட்சி . (இப்போதும் 'ஒபெக் ' ஓரமாக இருந்து வேடிக்கை தான் பார்த்தது !? மசகு எண்ணை வளத்தின் கட்டுப்பாட்டுக்காக இந்த 'ஒபெக் 'என்றால் ஏன் இங்கு மௌனம் !? அதன் பதிலை அமெரிக்கன் 'பெப்சி கோலாவே ' சொல்ல வேண்டும் .)

'சர்வதேச அமைதிக்கு ஐ .நா.சபை என்று ஒரு அமைப்பு இல்லை என்பதற்கு இப்படி ஆதாரங்களை அடுக்கிக் கொண்டே போகலாம் . அது முதலாளித்துவ அணியாயங்களுக்கான அரங்கேற்ற அமைப்பு ! இங்கு மேற்கின் வெள்ளையனுக்காக ஆபிரிக்கனும் ,ஆசியனும் கூட தலைவராவான் .ஆனால் இலாபம் அடையப் போவது என்னவோ முதலாளித்துவ ஏகாதிபத்தியமே .