Showing posts with label Islamic Dawah (தஃவா). Show all posts
Showing posts with label Islamic Dawah (தஃவா). Show all posts

Jul 22, 2016

ஜூம்ஆ ஒரு அழகிய தலைமைத்துவக் கட்டமைப்பு.!


சமூகப் புணரமைப்பில் மச்ஜிதுகளின் வகிபாகம் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படுதலும் குத்பாப் பேருரைகள் தரம் வாய்ந்தவையாக அமைவதனை உறுதிசெய்வதும் காலத்தின் கட்டாயமாகும்.

அடிப்படையான சன்மார்க்கக் கடமைகளான தொழுகை ஸகாத்து ஹஜ்ஜு என்பவற்றை கூட்டாக செய்யுமாறு வலியுறுத்தி சமூக வாழ்வின் ஆன்மீக அடித்தளங்களை ஆழமாக இட்டுள்ளது.


நோன்பு தனக்கும் அடியானுக்கும் இடையிலான தனிப்பட்ட விவகாரம் அதற்கு நானே கூலி வழங்குவேன் என்று எல்லாம் வல்ல அல்லாஹ் குறிப்பிட்டிருந்தாலும் அதன் கால நேர வரையறைகள் இப்தார் சஹர் பித்ரா தொடர்பான சட்டதிட்டங்கள் ஆர்வமூட்டல்கள் கூட்டு சமூக வாழ்வின் ஆன்மீக அடித்தளங்களை பலப்படுத்துவதனையே நாம் காண்கின்றோம்.


தினமும் ஐவேளை தொழுகையில் ஜமாத்தாக ஒன்றுபடுகின்ற ஒரு சமூகம் வாரம் ஒருமுறை கண்டிப்பான ஒரு தலைமைத்துவக் கட்டுக்கோப்பின் வழி காட்டல்களிற்கும் நெறிப் படுத்தலிற்கும் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.


ஒவ்வொரு அடிமட்ட மஹல்லாவிலும் சமூகத்தை வழி நாட்த்துகின்ற அன்றாட சமூகவியல் வாழ்வியல் வழிகாட்டல்களை வழங்குகின்ற உத்தியோகபூர்வமான மேடையாக மிம்பர் மேடை முக்கியத்துவம் பெறுகின்றது.


"விசுவாசிகளே.! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் - நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்." (ஸுரத்துல் ஜும்ஆ 62:9)


பருவமடைந்த ஒவ்வோறு ஆண் மீதும் ஜும்ஆ வுடைய குளிப்பு கடமையாகும். அன்றி அவர் மிஸ்வாக்கும் செய்யவும், நறுமண பொருள் இருப்பின் அதையும் பூசிக்கொள்ளவும்.என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அறிவிப்பவர் அபூஸஈதுல்குத்ரீ (ரலி) புஹாரி, முஸ்லீம்)


வெள்ளிக்கிழமை அன்று உங்களில் எவரும் வீட்டில் அமர்ந்துவிட்டு இமாம் மிம்பரின் மீது ஏறி நின்று குத்பா பேருரை நடத்தும் போது மக்களின் பிடரியை பதற்றத்துடன் தாண்டி தொழச்செல்வதைவிட அவர் பின்னிருந்து சுடுகின்ற தரையில் தொழுவது அவருக்கு மேலாக இருக்கும் என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) ஆதாரம் முஅத்தா)


வெள்ளிக்கிழமை சொற்பொழிவின் போது மௌனமாக இரு(ந்து காது தாழ்)த்தல்.


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வெள்ளிக்கிழமை அன்று இமாம் உரை யாற்றிக் கொண்டிருக்கும் போது, உன் அருகில் இருப்பவரிடம் நீ "மௌனமாக இரு' என்று கூறினாலும் நீ வீண்பேச்சு பேசியவனாவாய்.


இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.10


முஸ்லிம் சமூகத்திற்கு ஒவ்வொரு வாரமும் அழகிய உபதேசங்களையும், காலத்திற்கு தேவையான வழிகாட்டல்களையும் வழங்குவதற்காக வெள்ளிமேடைகளாக ஜும்மாப் பேருரைகள் எல்லாம் வல்ல அல்லாஹ்வினால் வழங்கப்பட்டுள்ளது.


குறித்த ஒரு மணி நேரமும் முஸ்லிம்கள் குளித்து சிறந்த ஆடைகள் அணிந்து ஜும்மாவுக்கு வருகை தந்து வாய்மூடி மௌனமாக இருந்து கேட்கின்ற குத்பாப் பேருரைகள் ஒவ்வொரு தனி மனித மணித்தியாலங்களுக்கும் வலுவை சேர்க்கின்ற கால சூழ்நிலைகளுக்கு ஏற்ற தராதரங்களில் இருக்க வேண்டும் என்பது எல்லோரும் அறிந்த விடயமாகும்.


அந்த வகையில் ஒவ்வொரு ஜும்மா தினத்திலும் நிகழத்தப்பட வேண்டிய குத்பாக்களை மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் அழகாக அர்த்தமுள்ளவையாக நிகழ்த்தப்படுவதனை அந்ததந்த மஹல்லாவில் உள்ள புத்திஜீவிகளும் உலமாக்களும் கூட்டுப் பொறுப்பாக உணர்ந்து உறுதி செய்து கொள்வது காலத்தின் கட்டாயமாக உள்ளது.


கருத்து வேறுபாடுகளுக்கும் சர்ச்சைகளுக்கும் உரிய விடயங்களுக்கு அப்பால் சகலரும் உடன்படுகின்ற பொதுவான விவகாரங்களை அடிப்படையாக வைத்து காலோசிதமாக குத்பாக்களை தயாரித்துக் கொள்வதில் உலமாக்களுக்கு உதவுவதும், அவ்வாறான குத்பாப் பேருரைகள் இருந்தால் பெற்றுக் கொடுப்பதும், அல்லது முடியுமான ஏனைய உலமாக்கள் தயாரித்து அவர்களிடம் கொடுப்பதும், வெளிநாடுகளில் உள்ளவர்கள் அனுப்பி வைப்பதும் ஒவ்வொருவர் மீதும் விதிக்கப்பட்ட கடமையாகும்.


குத்பாப்ப் பேருரைகளை சுமார் ஏழு இலட்சம் பேர்கள் கேட்கின்றார்கள் என்றால் ஏழு இலட்சம் மனித மணித்தியாலங்கள் செலவிடப்படுகின்றன அந்த பெறுமதியான கால அவகாசத்தை சுமார் 1200 பேசும் இமாம்களின் தெரிவுகளுக்கும், சௌகரியங்களுக்கும் சிலவேளை விருப்பு வெறுப்பு கருத்து வேறுபாடுகளுக்கும் விட்டு விடுவது மிகப் பெறும் தவறாகும்.

Jul 9, 2016

ஆதாரம் கொண்டு வர முடியுமா – மீடியாக்களுக்கு பகிரங்க சாவல் விடுத்துள்ள ஜாகிர் நாயக்

பிஜேபி மீது தற்போது எழுந்துள்ள 45 ஆயிரம் கோடி ஊழல் குற்றச்சாட்டுகளை திசை திருப்புவதற்காக மொட்ட தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் விதம் ஜாகிர் நாயக் குறி்த்த சர்ச்சையை எழுப்பியுள்ளது பிஜேபி அரசு.

பிஜேபி அரசு மீது எழுந்த 45 ஆயிரம் கோடி ஊழல் குற்றசாட்டை குறித்து வாய் திறக்காத நேஷனல் மீடியாக்கள் ஜாகிர் நாயக் சர்ச்சையை தூக்கி பிடிக்கின்றது.

இஸ்லாம் மதத்தை சாராத சமூக ஆர்வலர்கள் இது குறித்து சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.



மீடியாவில் ஜாகிர் நாயகிற்கு எதிராக பேசும் டைம்ஸ் நவ் அர்னாப் பிஜேபியின் பின்னனியை சோ்ர்ந்தவர் என சோசியல் மீடியாவில் பல முறை விமர்சிக்கப்பட்டவர் என்பதும் இதை உறுதிப்படுத்துகின்றது.



தனது மீது எழுந்துள்ள விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஜாகிர் நாயக் அவர்கள் ஒட்மொத்த இந்திய மீடியாவிற்கு பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

அதில் , ”பங்களாதேஷ் ல் நடந்த தாக்குதலுக்கு நான் தான் காரணம் எனது பேச்சால் தான் அவ்வாறு நடந்தது என பங்களாதேஷ் அரசு தெரிவித்திருப்பதாக ஆதாரப்புர்வமான ஒரு செய்தியை கொண்டு வாருங்கள் பார்ப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் சமீபத்தில் தான் மலேசியாவிற்கு சென்று அங்குள்ள அனைத்து அமைச்சர்களையும் சந்தித்து வந்தேன் எனக்கு அங்கு தடை விதித்துள்ளதாக மீடியாக்கள் அப்பட்டமாக அவதூறு பரப்புகின்றது எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

பங்களாதேஷ் அரசு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு தானே பேசியதாகவும் அவர்கள், நாங்கள் எதுவும் அப்படி சொல்ல வில்லை அந்த செய்தியை நாங்கள் நம்புவும் இல்லை எனக் பங்களாதேஷ் அரசு அதிகாரிகள் தெரிவித்ததாகவும் ஜாகிர் நாயக் அவா்கள் இதில் கூறியுள்ளார்கள்.

ஜாகிர் நாயக்கின் இந்த பேச்சை உறுதிப்படுத்தும் விதமாக பங்களாதேஷ் அரசு இன்று ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. இதில் பங்களாதேஷ் ன் உள்துறை அமைச்சர் அசாத்துஸ்ஸமான் அவர்கள் இந்த தாக்குதலில் இஸ்ரேலுக்கு தொடர்பு உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

Source :

http://www.bbc.com/news/world-asia-36462026

சம்பந்தபட்ட அரசே ஒன்றும் சொல்லதா நிலையில் வரிந்து கட்டிக் கொண்டு பிஜேபி அரசு வருவது ஏன் மீடியாக்கள் முனைப்பு காட்டுவது ஏன் ? முஸ்லிம்களுக்கு இந்தியாவில் நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் தான் இதற்கு காரணம் என்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை.

ஜாகிர் நாயகம் வெளியிட்டுள்ள வீடியோ அவரது இந்த சாவை ஏற்க மீடியாக்கள் தயாரா ?


Source
kaalaimalar.net

May 3, 2016

தஃவா, களப்பணி, சிறை: ரிஷ்க் பற்றிய புரிதல்

     
 
அண்மையில் பங்களாதேஸுக்கு சென்று வந்த ஒரு நண்பர் எழுதிய, எமது சிந்தனையை தூண்டக்கூடிய ஓர் சிறிய ஆக்கத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். கிலாஃபத்தின் மீள்வருகைக்காக தீவிரமாகக் களப்பணிகளில் ஈடுபட்டு அடிக்கடி சிறைவாசம் அனுபவித்த சகோதரர்களை சந்தித்த அவரின் வார்த்தைகள் ஆழ்ந்து சிந்திக்கத் தூண்டுபவை. நிச்சயம் அது உங்களையும் சிந்திக்கத் தூண்டும் என நம்புகிறோம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
 
 
அண்மையில் பங்களாதேஸுக்கு சென்றிருந்த எனக்கு நீண்டகாலமாகத் அறிமுகமான ஒரு நண்பரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. என்னை விட மிகவும் வயதில் குறைந்தவராய் இருந்தாலும் வாழ்வின் சோதனைகளை முகம் கொடுப்பதில் அவர் மிகவும் பக்குவப்பட்டவர். அவர் ஒரு அரசியல் செயற்பாட்டாளர். இஸ்லாத்தை முழுமையான வாழ்க்கை நெறியாக ஏற்று, அதன்படி வாழ்கின்ற, ஐக்கியப்பட்ட ஓர் உம்மத்தை உருவாக்குவதை நோக்கி அழைத்தல் என்ற அடிப்படையில் எங்களது செயற்பாடுகளுக்கு மத்தியில் பெரிய வேறுபாடு கிடையாது. ஒரேயொரு வித்தியாசம் என்னவென்றால், அவர் அந்த அரசியல் கருத்துக்களைக் கொண்டிருப்பதால் முகம் கொடுத்த சோதனைகள்தான்.
 
அவர் பல முறை சிறைவாசம் அனுபவித்ததால் அவரது கல்வியிலும், தனிப்பட்ட வாழ்விலும் அது பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தியது. ஒருவருக்கு சிறை அனுபவத்தை வழங்க அவர் சிறைகளின் இழிவான வாழ்க்கைத் தரத்தையும், சித்திரவதையும் அனுபவிப்பது கட்டாயமானது என்பது முஸ்லிம் உலகின் சிறைகளின் யதார்த்தத்தை நீங்கள் அறிந்திருந்தால் தெரிந்திருக்கும்.
 
ஏன் அவர் அடிக்கடி சிறைக்குச் செல்ல வேண்டும்? அவர் ஒரு நல்ல குடும்பத்தைச் சேர்ந்த நல்ல மனிதர். வன்முறைகளை பரப்புரை செய்பவருமல்ல. எனினும் முஸ்லிம் உலகின் துரதிஷ்டமான நிலை என்னவென்றால் மாற்றுக்கருத்துக்களைக் கொண்டிருப்பது மாத்திரம் அரச இயந்திரத்தினால் இரும்புக்கரம் கொண்டு நசுக்கப்பட போதுமானது என்பதே.
 
இம்முறை அவரை சந்தித்த பொது பல மணிநேரங்கள் பல விடயங்கள் குறித்து கலந்துரையாடினோம். எனினும் விடைபெற முன்னர் அவர் எனக்கு ரிஷ்க் பற்றி புகட்டிய பாடத்தை, அத்தலைப்பில் பல கட்டுரைகளை வாசித்த பின்னரும், பல குத்பாக்களை நிகழ்த்திய பின்னரும் கூட அவர் விளக்கியது போல நான் புரிந்து கொண்டிருப்பேன் என்று நம்பவில்லை.
 
முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் ரிஷ்க் அல்லாஹ்விடமிருந்துதான் வருகிறது என நாம் நம்புகிறோம். அந்த உறுதியான நம்பிக்கை எமது வாழ்வில் தொழிலை இழக்க நேரிடல், வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படல் போன்ற சில பாதகமாக விடயங்கள் நடக்கின்றபோது எமது ஜீவனோபாயத்திற்கு என்ன செய்யப்போகிறோமோ தெரியவில்லை என்று அங்கலாய்ப்பதிலிருந்து எம்மை விடுவிக்க வேண்டும். மேலும் இந்த நம்பிக்கை வாழ்வாதாரம் பாதிப்படைந்து விடுமோ என அஞ்சி அல்லாஹ்(சுபு) எம் மீது சுமத்தியிருக்கின்ற கடமைகளை செய்வதில் சமரசம் செய்யாதிருக்க உதவ வேண்டும்.
 
ஒன்றை அறிந்து வைத்திருப்பது வேறு அதன்படி வாழ்வது என்பது வேறு
 
அந்த சகோதரர் வெளியேறிச் செல்லமுன் எனக்கு ஒரு கதை சொன்னார். அவர் ஐந்தாம் அல்லது ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கையில் அவரது குடும்பம் வேறொரு இடத்தில் சென்று வாழவேண்டியேற்பட்டதாம். அதனால் அதுவரை காலமும் படித்த பாடசாலையை விட்டு விலக வேண்டிய நிலை. அது அவரது பழைய நண்பர் வட்டத்திலிருந்து அவரைத் தூரமாக்கியதாம். பின்னர் புதிய நண்பர் வட்டம் ஒன்றை அவர் ஏற்படுத்திக் கொண்டாராம். அவருக்கு புதிய நண்பர்கள் கிடைந்த அதே சமயம் அவரது பழைய பாடசாலை நண்பர்கள் போதை பொருட்களுடனும், குற்றச்செயல்களுடனும் சம்பந்தப்பட்டு இருக்கின்றனர். அந்தத் தருணத்தில் தனக்கு நல்ல நண்பர்களை பெற்றுத்தந்தது அல்லாஹ்(சுபு) செய்த பேரருளாகும் என்று அவர் சொன்னார்.
 
பின்னர் அவரது பழைய நண்பர்கள் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களது படிப்பும், தனிப்பட்ட வாழ்வும் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. எனது நண்பரும் ஏறத்தாழ அதே அனுபவத்தைதான் பெற்றிருக்கிறார். அவரும் சிறைக்கு சென்றிருக்கிறார். அவரது படிப்பும், தனிப்பட்ட வாழ்வும் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இருபாலாரினதும் அனுபவமும் ஒன்றாக இருந்தாலும் அதனை  அவர்கள் அடைந்த பாதை முற்றிலும் வேறுபட்டது. அவரது நண்பர்கள் தமது சுய இச்சையை திருப்த்திப்படுத்தும் பாதையில் அதனை அடைந்து கொண்டார்கள். எனது நண்பரோ அல்லாஹ்(சுபு)வை திருப்த்திப்படுத்தும் பாதையில் அதனை அடைந்து கொண்டிருக்கிறார்.
 
அவர் இறுதியாக ஒன்று சொன்னார், அதாவது அவரது ரிஷ்க் சிறைக்குள்தான் கிடைக்கும் என்று முன்பே எழுதப்பட்டிருந்தால் எந்த வகையிலோ நான் சிறைக்கு வந்து சேர்ந்துதான் இருப்பேன்;. ஆனால் அந்த ரிஷ்க்கை பெற்றுக் கொள்வதற்கு நாம் பாவிக்கும் வழியே கவனத்திற்குரியது என்று ரிஷ்க் பற்றிய புரிதலை மிக தத்ரூபமாகக் கூறி  முடித்தார்.
 
பின்னர் அவரை அழைத்துச் செல்ல வந்து விட்டார்கள். அவரும் விடைபெற்று சென்றுவிட்டார். அவரை திரும்ப எப்போது காணுவேனோ என சிந்தித்துக் கொண்டு எனது வீட்டுத்தொகுதிக்கு வந்துவிட்டேன். சில நிமிடங்கள் கழித்து எனது வீட்டு அழைப்பொலி கேட்டது. உள்ளே நுழைந்த எனது அன்னை  “பார், யாரை நான் திரும்ப அழைந்து வந்துள்ளேன்” என்று சொல்லி அந்த நண்பரைக் காட்டினார். அந்த நண்பர் எங்கள் வீட்டிலிருந்து வெளியேறிய போது அம்மா வீட்டில் இருக்கவில்லை, மாடிப்படியால் அவர் இறங்கிச் சென்று கொண்டிருந்தபோதுதான் வீடு திரும்பிக்கொண்டிருந்த அம்மா அவரைக் சந்தித்திருக்கிறார். அவர் வெளியேறிய போது இரவுச் சாப்பாட்டு நேரம் ஆகியிருந்தது. அவர் உணவருந்தாது சென்றதை அனுமதிக்காத எனது அம்மா அவரை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார். பின்னர் எங்களுடன் இராபோசனத்திற்காக மேசையில் அமர்ந்த அவர் பின்வருமாறு கூறினார், “இன்றிரவு எனது ரிஷ்க் இங்குதான் என எழுதப்பட்டிருக்கிறது” என்று.
 
sources:

Jan 27, 2016

ஓரின சேர்க்கை திருமணப் பிரச்சாரம்

- ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை அமல்படுத்தியதால் ஏற்பட்ட கோர விளைவுகள்


பாலியில் இரண்டு ஆண்கள் இணைந்து செய்து கொண்ட ஓரின சேர்க்கை திருமணத்தின் புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து அதனை குறித்த விமர்சனங்களும் மற்றும் அதை எதிர்த்தும் ஏகப்பட்ட பிரச்சினைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இதனை தொடர்ந்து அரசும் மற்றும் சமூகத்தில் உள்ள முக்கிய நபர்களும்,பாரளுமன்ற உறுப்பினர்களும், பொது மக்களும் இந்த ஒழுங்கீனத்தை கண்டித்தும் தடை செய்ய கோரியும் போராடி வருகின்றனர். இச்சம்பவங்கள் ஓரின சேர்க்கை சட்ட விரோதமானது மற்றும் தடை செய்யபட வேண்டியது என்ற கருத்திற்கு வலுசேர்க்கிறது.
 
இருந்த போதிலும், பெரும்பாலானோர் இது போன்ற சபிக்கப்பட்ட செயல்களான லெஸ்பியன், கேய், இருபாலின மற்றும் திருநங்கை(எல்ஜிபிடி- Lesbian, Gay, Bisexual and Transgender (LGBT)) குறித்த கேவலமான செயல்பாடுகள் ஒரு வழியாக சமூகத்தில் புற்றீசல் போல பரவி வருவது குறித்து அறியாமலே உள்ளனர். மேலும் பல்வேறு நபர்களும் மற்றும் இயக்கங்களும் அதன் வளர்ச்சிக்கு ஆதரவளித்தும், ஊக்கப்படுத்தியும் வருகின்றனர். ஐ.நாவின் ‘Being LGBT in Asia’ன் அறிக்கையின்படி 119 எல்ஜிபிடி இயக்க ஆதரவாளர்கள் இந்தோனேசியாவின் எல்லா மாஹாணத்திலும் பரவி வருகின்றனர் என்று குறிப்பிடுகிறது. இந்த ஓரின சேர்க்கையாளர்கள் பல்வேறு வழிகளை கையாண்டு தங்களுடைய கோணலான பாதைக்கு அங்கீகாரம் பெற முயற்சிக்கின்றனர். உண்மையில் அவர்கள் தங்களுடைய நடத்தையை நியாயப்படுத்த ஒரு சட்ட அடிப்படையை பெறும் பொருட்டு நாட்டினுடைய கொள்கை உருவாக்கத்தில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டே இருக்கின்றனர்.
 
1. சமூகத்தின் அனைத்து மட்டத்தில் உள்ளவர்களும் இந்த ஆபத்தான LGBT ஒழுங்கீனம் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். ஓரின சேர்க்கை திருமணத்தின் புகைப்படங்கள் வெளியாவது ஒரு எச்சரிக்கை தானே தவிர, இந்தோனேசியாவின் தற்போதைய அரசியல் மற்றும் சமூக நிலையை பொருத்த வரை LGBTக்கு இருக்கும் ஆதரவைப் பொறுத்து அவர்கள் தங்களின் பிரச்சாரத்தை இன்னமும் அதிகரிக்க வாய்ப்புண்டு. சமூகத்தில் உள்ள மக்களும் இது போன்ற மாறுபட்ட நடத்தைகளை கண்டும் காணாத்து போல் அனுமதிக்கும் போக்கும் அதிகரித்திக்கிறது. மேலும் ஜனநாயக ஆட்சி அமைப்பின் விளைவுகளான சுதந்திரம்-மனித உரிமைகள் தொடர்பான அமலாக்கங்கள் LGBT இயக்க வளர்ச்சிக்கும் அவர்களால் சமூகத்திற்கு ஏற்பட இருக்கும் பாதிப்பிற்கும் முக்கிய காரணங்களாக இருக்கின்றன.
 
 2. இந்த ஓரின சேர்க்கை திருமணத்தை நிராகரிப்பது என்பதை நோயை அதன் வேரிலிருந்து முற்றிலும் அழிப்பதை போல் கையாள வேண்டும். அதாவது ஜனநாயக ஆட்சியமைப்பை முற்றிலும் ஒதுக்குவதின் மூலம் சுதந்திரம்-மனித உரிமைகள் தொடர்பான கொள்கைகளை வேரறுத்து , அதனூடாக சமூகத்தில் நன்மையை ஏவி தீமையை தடுக்க கூடிய உன்னத கலாச்சாரத்தை உருவாக்குவதின் மூலம் சாதிக்க முடியும். இது செய்யாமல் இருந்தால், தற்போது ஓரின சேர்க்கை திருமணத்தை தடை செய்யும் சட்டங்கள் விரைவிலேயே சர்வதேச சூழலில் LGBTக்கு இருக்கும் ஆதரவை பொறுத்து சட்ட பூர்வமாக ஆக்குவதற்கான அபாயமும் உண்டு. நவூதுபில்லாஹ்.
 
3. இஸ்லாமிய ஷரீயாவும், கிலாஃபா அரசும் LGBT ஒழுங்கீனங்களை தடுப்பதற்கான பல்வேறு அஹ்காம்களை அமல்படுத்தும். ஐந்து வகைகளில் LGBT ஒழுங்கீனத்தை தடுக்க வழியுண்டு. அவையாவன
 
(1) இதில் அரசு ஒரு முக்கிய பங்காற்றுகிறது, அதாவது LGBT ஒழுங்கீனங்களை பெரும் பாவம் என்ற அடிப்படையில் தனி மனித தக்வாவை அதிகரிப்பதன் மூலம் தடுக்கலாம்.
 
(2) குழந்தை வளர்ப்பிலும், கல்வி முறையிலும் ஆண் மற்றும் பெண்ணிண் அடையாளங்களை மனதில் பதிவதற்கு இஸ்லாம் கட்டளை இடுவதன் வழியாகவும். ஆண்கள் பெண்களோடு கலப்பதை தடை செய்வதிலும், அதே போல் பெண்கள் ஆண்களோடு கலப்பதை தடுப்பதிலும்.
 
(3) இஸ்லாமிய ஷரீயா இளைஞர்கள் மற்றும் யுவதிகளை பிரித்து சமூக ஒழுக்க விதிகளை இவர்களுக்கு தருவதின் மூலம் மாறுபட்ட நடத்தைகள் உருவாவதில் இருந்து தடுக்கிறது.
 
(4) செக்ஸ் உணர்ச்சிகள் உந்தப்படுவதிலிருந்து பொது மக்கள் காக்கப்படுவதற்காக ஆபாசங்களை தடை செய்ய இஸ்லாமிய அரசுக்கு இஸ்லாம் கட்டளை இடுகிறது. அதே போல் LGBT ஒழுங்கீனங்களுக்கு இழுத்து செல்லும் வழிவகைகள் எதுவாகிலும் அதை முற்றிலுமாக தடை செய்ய கோருகிறது.
 
(5) மேலும் இஸ்லாம் இது போன்ற நோயினை ஏற்படுத்துகின்றவர்களுக்கு தண்டணையும் பரிந்துரைக்கிறது. மேலும் சமூகத்தின் சுழற்சியை உடைக்கக்கூடிய LGBTயை வேரறுக்க ஒரு பால் சேர்க்கையினருக்கு மரண தண்டணை வழங்குமாறு கூறுகிறது.
 
 நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்,
 
“ எவரொருவர் லூத் சமூக மக்களின் செயலை செய்வதை காண்கிறாரோ, அக்குற்றவாளியை கொல்லட்டும்”
 
 ”Whoever you find committing the people of Lut, then kill the culprit”. [Tirmidhi: 1456, Abu Dawud: 4462, Ibn Majah: 2561 and Ahmad: 2727].
 
எவர் மரியாதையும் , கண்ணியம், ஒழுக்கமும் சமாதானமும் நிறைந்த ஒரு சுத்தமான சமூகத்தை விரும்புகிறாரோ அவர் இந்நாட்டில் இஸ்லாமிய ஷரீயாவை நிலை நாட்டப்படுவதையே கோரட்டும். மேலும் நபித்துவதின் வழிமுறையை பின்பற்றி கிலாஃபாவின் நிழலில் ஒரு புகழ்பெற்ற நாகரீகத்தை உருவாக்க முற்படுவோமாக.

Aug 21, 2015

குழப்பமான சூழ்நிலையில் தனித்திருக்க இஸ்லாம் வலியுறுத்துகிறதா?


ஹுதைஃபா இப்னு யமான்(ரலி) அவர்களிடமிருந்து அபூஇத்ரீஸ் அல்கவ்லானி அறிவித்ததாக புஸ்று இப்னு உபைதுல்லாஹ் அல்ஹளரமி அறிவித்துள்ள ஹதீஸ் புஹாரி மற்றும் முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
كَانَ النَّاسُ يَسْأَلُونَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْخَيْرِ، وَكُنْتُ أَسْأَلُهُ عَنِ الشَّرِّ مَخَافَةَ أَنْ يُدْرِكَنِي، فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ، إِنَّا كُنَّا فِي جَاهِلِيَّةٍ وَشَرٍّ، فَجَاءَنَا اللهُ بِهَذَا الْخَيْرِ، فَهَلْ بَعْدَ هَذَا الْخَيْرِ شَرٌّ؟ قَالَ: «نَعَمْ» ، فَقُلْتُ: هَلْ بَعْدَ ذَلِكَ الشَّرِّ مِنْ خَيْرٍ؟ قَالَ: «نَعَمْ، وَفِيهِ دَخَنٌ» ، قُلْتُ: وَمَا دَخَنُهُ؟ قَالَ: «قَوْمٌ يَسْتَنُّونَ بِغَيْرِ سُنَّتِي، وَيَهْدُونَ بِغَيْرِ هَدْيِي، تَعْرِفُ مِنْهُمْ وَتُنْكِرُ» ، فَقُلْتُ: هَلْ بَعْدَ ذَلِكَ الْخَيْرِ مِنْ شَرٍّ؟ قَالَ: «نَعَمْ، دُعَاةٌ عَلَى أَبْوَابِ جَهَنَّمَ مَنْ أَجَابَهُمْ إِلَيْهَا قَذَفُوهُ فِيهَا» ، فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ، صِفْهُمْ لَنَا، قَالَ: «نَعَمْ، قَوْمٌ مِنْ جِلْدَتِنَا، وَيَتَكَلَّمُونَ بِأَلْسِنَتِنَا» ، قُلْتُ: يَا رَسُولَ اللهِ، فَمَا تَرَى إِنْ أَدْرَكَنِي ذَلِكَ؟ قَالَ: «تَلْزَمُ جَمَاعَةَ الْمُسْلِمِينَ وَإِمَامَهُمْ» ، فَقُلْتُ: فَإِنْ لَمْ تَكُنْ لَهُمْ جَمَاعَةٌ وَلَا إِمَامٌ؟ قَالَ: «فَاعْتَزِلْ تِلْكَ الْفِرَقَ كُلَّهَا، وَلَوْ أَنْ تَعَضَّ عَلَى أَصْلِ شَجَرَةٍ حَتَّى يُدْرِكَكَ الْمَوْتُ وَأَنْتَ عَلَى ذَلِكَ
அல்லாஹ்வின் தூதர் அவர்களிடத்தில் மக்கள் நன்மையைப்பற்றி வினவிக்கொண்டிருந்தார்கள். தீமை என்னை பீடித்து விடக்கூடாது என்ற அச்சத்தில் அதுபற்றி நான் அவர்களிடம் வினவினேன்.அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் ஜாஹிலிய்யத்திலும்,தீமையிலும் மூழ்கிக் கிடந்தோம்.அப்போது அல்லாஹ் (இஸ்லாம் என்ற) நன்மையை எங்களிடம் கொண்டு வந்தான்.ஆகவே இந்த நன்மைக்குப் பிறகு ஏதேனும் தீமை ஏற்படுமா? என்று நான் கேட்டேன்.ஆம்! என்று அவர்கள் பதிலுரைத்தார்கள்.அந்த தீமைக்குப் பிறகு ஏதேனும் நன்மை ஏற்படுமா? என்று நான் வினவினேன். ஆம்! அதில் புகைமூட்டம் (கலங்கல்) இருக்கும்!என்று அவர்கள் கூறினார்கள்.புகைமூட்டம் என்றால் என்ன? நேர்வழியல்லாத ஒன்றைக்கொண்டு வழிகாட்டுவார்கள். அவற்றில் நன்மையையும், காண்பாய்; தீமையையும் காண்பாய்; அந்த நன்மைக்குப் பிறகு ஏதேனும் தீமை ஏற்படுமா? என்று நான் வினவினேன். ஆம்! ஒரு கூட்டத்தினர் நரகத்தின் வாயிலை நோக்கி (மக்களை) அழைப்பார்கள். அதை ஏற்றுக்கொண்டவர்கள் அதில் (நரகத்தில்) எறியப்படுவார்கள்! என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அவர்களைப்பற்றி எங்களுக்கு விவரியுங்கள் என்று நான் கூறினேன். அவர்கள் நம்மை சேர்ந்தவர்களாகவும், நமது மொழிகளை பேசக்கூடியவர்களாகவும் இருப்பார்கள் என்று பதிலளித்தார்கள். அது என்னை பீடித்துக் கொள்ளும் பட்சத்தில் எனக்கு என்ன கட்டளையிடுகிறீர்கள்? என்று நான் கேட்டேன். முஸ்லிம்களின் ஜமாஅத்தையும், இமாமையும் பற்றிப்பிடிப்பீராக என்று கூறினார்கள். மக்கள் மத்தியில் அந்த ஜமாஅத்தும் இமாமும் இல்லை என்றால் என்ன செய்ய? என்று நான் வினவினேன். ஒரு மரத்தின் வேர் பாகத்தை உமது பற்களால் கவ்விப் பிடிக்க நேர்ந்து, அதே நிலையில் உமக்கு மரணம் ஏற்பட்டாலும் இந்த பிரிவினர்கள் அனைவரையும் விட்டு விலகியிருப்பீராக! என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸை சிலர் மேற்கோள் காட்டி குழப்பமான காலகட்டத்தை முஸ்லிம்கள் அடைந்துவிட்டதால் ஒவ்வொரு முஸ்லிமும் தனித்து செயல்படவேண்டுமென்றும்,இனி வர இருக்கும் காலகட்டம் இன்னும் மோசமாக இருக்குமென்றும்,காடுகளுக்கு சென்று விவசாயம் செய்தும் கால்நடைகளை வளர்த்தும் உயிர் வாழ வேண்டுமென்றும், அல்லது அவரவர் தங்கள் ஈமானை பாதுகாத்துக்கொள்ள தனித்து வாழவேண்டுமென்றும் கிலாஃபத்தின்மூலம் அல்லாஹ் அருளிய சட்டங்களை இந்த பூமியில் நிலைநிறுத்துவதற்கான உழைப்பை செய்யாமல்  ஒதுங்கி இருக்கவேண்டுமென்றும் பல்வேறு கருத்துக்களை கூறிவருகின்றனர்.
இந்த ஹதீஸில் பல்வேறு கால கட்டங்களில் முஸ்லிம்கள் சந்திக்க இருக்கும் நல்ல சூழ்நிலை குறித்தும், மோசமான சூழ்நிலை குறித்தும்,அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் ஒவ்வொரு முஸ்லிமும் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.மக்களிடமிருந்து விலகி தனித்திருப்பதைப்பற்றி கூறப்பட்டுள்ள இதுபோன்ற ஹதீஸ்களைப் பொறுத்தவரை அவை வணக்க வழிபாடுகளில் பின்பற்றவேண்டிய விஷயங்களில் தொடர்புடையவை என்பதையும் கலீஃபாவிடமிருந்து விலகி இருப்பதற்கோ,முஸ்லிம்களுக்கான அமீரான கலீஃபா இல்லையெனில் கிலாஃபத்தை நிலைநாட்டும் பணியிலிருந்து விலகி இருப்பதற்கோ அனுமதி அளிக்கவில்லை என்பதையும் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
முஸ்லிம்கள் தங்களுக்கான ஜமாஅத்தையும்(கிலாஃபா)  இமாமையும்(கலீஃபா) பெற்றிராதபோது என்னசெய்வது என்பது பற்றியும்,நரகத்தின் வாயிலை நோக்கி அழைப்பவர்களைப் பொறுத்து என்னசெய்வது என்பது பற்றியும் ஹுதைஃபா(ரலி) அவர்கள் வினவியபோது, இத்தகைய பிரிவினரை விட்டு விலகிவிட வேண்டுமென்று அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கட்டளையிட்டுள்ளார்களே ஒழிய, முஸ்லிம்களை விட்டு பிரிந்துவாழ வேண்டுமென்றோ,கிலாஃபா இல்லாத சூழலில் கிலாஃபத்தை நிலைநிறுத்தும் கடமையிலிருந்து விலகிக்கொள்ளவேண்டும் என்றோ கட்டளையிடவில்லை! ஆகவே வழிகெடுக்கும் கூட்டத்தினரை விட்டு விலகிக்கொள்ளவேண்டும் என்ற இறைத்தூதர் صلى الله عليه وسلم அவர்களின் கட்டளை தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. மரத்தின் வேரை தமது பற்களால் கவ்விப்பிடித்தவாறு இருக்கும் நிலையில் தமக்கு மரணம் நேர்ந்தாலும் வழிகெடுக்கும் கூட்டத்தினருடன் இணையாமல் விலகியிருக்க வேண்டும் என்று இங்கு நபி صلى الله عليه وسلم அவர்கள் அழுத்தமாக கூறியுள்ளார்கள்.
“மரத்தின் வேரை தமது பற்களால் கவ்விப்பிடித்தவாறு” – என்று அலங்காரமாக (metaphorical – مَجَازِيّ) கூறப்பட்டுள்ளதை, காட்டிற்கு செல்லவேண்டுமென்றும் முஸ்லிம்களை விட்டும் விலகி வாழ வேண்டுமென்றும் சிலர் தவறாக விளக்குகின்றனர்.இதுபோன்ற அலங்கார பதங்கள் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் ஏராளமாக உபயோகிக்கப்பட்டுள்ளன. இவற்றை எவ்வாறு விளங்கிக் கொள்ளவேண்டுமென்ற அடிப்படை கல்வியினை பெறாதவர்கள் இதுபோன்ற தவறான விளக்கங்களை அளிப்பது ஆபத்தானதாகும்.இங்கு ஒரு காரியத்தை அழுத்தமாக கூறுவதற்காக “மரத்தின் வேரை தமது பற்களால் கவ்விப்பிடித்தவாறு” என்று கூறப்பட்டுள்ளது; எந்த சூழ்நிலையிலும் தீனை விட்டுவிட அனுமதியில்லை என்பதே இதன் பொருளாகும்.நரகத்தின் வாயிலில் நின்றுகொண்டு மக்களை வழிகேட்டின் பக்கம் அழைக்கும் வழிகெடுக்கும் கூட்டத்தினரை விட்டு முற்றிலும் விலகி ஒருவர் தமது தீனை பின்பற்றவேண்டும் என்று இங்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.இந்த ஹதீஸில் கலீஃபாவை நிலைநிறுத்தும் பணியைவிட்டு விலகியிருப்பதற்கான அனுமதியோ அல்லது விதிவிலக்கோ எவருக்கும் அளிக்கப்படவில்லை.மாறாக, தீனை பின்பற்றவேண்டும் என்ற கட்டளைக்குள் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு நரகத்தின் வாயிலை நோக்கி அழைப்பவர்களை விட்டும் விலகியிருக்கவேண்டும் என்றுதான் கூறப்பட்டிருக்கிறது.அந்நிலையில் கூட கலீஃபாவை நிலைநிறுத்தும் பணியில் அவர் ஈடுபடாவிடில் அவர்மீது பாவம் நிலைகொண்டிருக்கும். ஆகவே அவர் மரத்தின் வேரை தமது பற்களால் கடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவருக்கு மரணம் நேர்ந்தாலும் நரகத்தின் வாயிலை நோக்கி அழைக்கும் வழிகெடுக்கும் கூட்டத்தினரை விட்டு விலகியிருந்து தன்னுடைய தீனை பாதுகாத்துக் கொள்ளவேண்டுமே ஒழிய, முஸ்லிம்களின் ஜமாஅத்திலிருந்து விலகிக்கொள்வதற்கோ அல்லது தீனின் சட்டங்களை நிலைநாட்டும் பணியை மேற்கொள்ளாமல் புறக்கணித்து விடுவதற்கோ அல்லது முஸ்லிம்களுக்குரிய இமாமை (கலீஃபாவை) ஏற்படுத்தும் கடமையை விட்டு ஒதுங்கியிருப்பதற்கோ அவருக்கு ஒருபோதும் அனுமதி கிடையாது.
நபி  صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்:-
يُوشِكُ أَنْ يَكُونَ خَيْرَ مَالِ المُسْلِمِ غَنَمٌ يَتْبَعُ بِهَا شَعَفَ الجِبَالِ وَمَوَاقِعَ القَطْرِ، يَفِرُّ بِدِينِهِ مِنَ الفِتَنِ
“ஆடு ஒரு முஸ்லிமின் சிறந்த சொத்தாக ஆகும்நிலை ஏற்படும்போது அவர் அதனுடன் மலையின் உச்சிக்கு சென்றுவிடுகிறார். அவருடைய தீனை ஃபித்னாவிலிருந்து காக்கும் விதத்தில் மழை பொழிகிறது”
                                                                    (அபூ ஸயீதுல் குத்ரி(ரலி),புஹாரி)
குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுவிட்டதால் முஸ்லிம்களைவிட்டு தனித்து வாழவேண்டுமென்றும் காட்டிற்கு சென்று கால்நடைகளை மேய்த்து வாழ்க்கையை நடத்தி தீனை பாதுகாக்க வேண்டுமென்றும் சிலர் இந்த ஹதீஸை மேற்கோள் காட்டி விளக்கமளிக்கின்றனர்.ஒருவர் முஸ்லிம்களின் ஜமாஅத்தான கிலாஃபத்தைவிட்டு விலகியிருக்க வேண்டுமென்பதையோ அத்தகைய கிலாஃபா இல்லாத போது அதை நிலைநாட்டுவதிலிருந்து ஒதுங்கியிருக்க வேண்டுமென்பதையோ இந்த ஹதீஸ் சுட்டிக்காட்டவில்லை. மாறாக உணர்சிப்பூர்வமான பாமர முஸ்லிம் ஒருவருக்கு எது சிறந்த சொத்தாக இருக்கும் என்பதையும், ஃபித்னாவுடைய காலகட்டத்தில் அவர் எவ்வாறு பாதுகாப்பு பெறுகிறார் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.எனவே மக்களிடமிருந்து விலகி தன்னை தூரமாக்கிக் கொள்வதற்கு இந்த ஹதீஸ் ஆர்வமூட்டவில்லை என்பதை விளங்கிக்கொள்ளலாம்.
இஸ்லாமிய நிலப்பரப்பானது பல நாடுகளாக பிரிந்து கிடப்பதற்கோ பல ஆட்சியாளர்களின் கீழ் ஆளப்படுவதற்கோ அறவே அனுமதி கிடையாது என்ற நிலையில், முஸ்லிம் உலகின் ஆட்சியாளர்களின் தயவில் இருப்பவர்கள் இது போன்ற மார்க்க விளக்கங்களை அதிகமாக அளித்துக் கொண்டிருக்கிறார்கள்.அல்லாஹ் سبحانه وتعالى வழங்கியருளிய இஸ்லாமிய சட்டங்களைக் கொண்டு ஆட்சி செய்யும் முஸ்லிம்களின் ஒரே ஜமாஅத்தான கிலாஃபா என்பது ஒரே இமாமையும்(கலீஃபா) ஒரே தேசத்தையும் கொண்டதாகும். அத்தகைய முஸ்லிம்களின் ஒரே தலைமையான கிலாஃபத்தை மீண்டும் நிறுவுவதற்கான உழைப்பில் ஈடுபடுவதை திசை திருப்புவதற்காகத்தான் இதுபோன்ற விளக்கங்களை பரவலாக்கிவிட்டுள்ளனர்.
நபி  صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்:-
وَمَنْ بَايَعَ إِمَامًا فَأَعْطَاهُ صَفْقَةَ يَدِهِ، وَثَمَرَةَ قَلْبِهِ، فَلْيُطِعْهُ إِنِ اسْتَطَاعَ، فَإِنْ جَاءَ آخَرُ يُنَازِعُهُ فَاضْرِبُوا عُنُقَ الْآخَرِ
“எவரேனும்  ஒருவர்  தமது   கரத்தால்   கைலாகு  செய்வதன் மூலமும் தமது  இதயத்தால் நம்பிக்கை கொள்வதன் மூலமும் ஓர் இமாமுக்கு   பைஆ செய்தால்,  பிறகு    இயன்றவரை   அவருக்கு கட்டுப்பட்டு நடக்கட்டும்.  இந்நிலையில் மற்றொருவர்   வந்து (அதிகாரத்தில்)  அவரிடம்  சர்ச்சை செய்தால்  அவரது கழுத்தை வெட்டுங்கள்”                         ( அப்துல்லாஹ்  இப்னு அம்ர் இப்னு ஆஸ்(ரலி),   முஸ்லிம் )
مَنْ أَتَاكُمْ وَأَمْرُكُمْ جَمِيعٌ عَلَى رَجُلٍ وَاحِدٍ، يُرِيدُ أَنْ يَشُقَّ عَصَاكُمْ، أَوْ يُفَرِّقَ جَمَاعَتَكُمْ، فَاقْتُلُوهُ
“உங்களின் விவகாரங்கள் ஒருவரின்   தலைமையின் கீழ் ஒன்றுபட்டிருக்கும்போது  (கலீஃபாவிற்கு  போட்டியாக  வருவதின் மூலம்) உங்கள் பலத்தை  குறைப்பதற்கோ அல்லது உங்கள் ஒற்றுமையை குலைப்பதற்கோ நாடியவராக எவரேனும்   வந்தால் அவரை கொன்றுவிடுங்கள்”            (அரஃபஜா(ரலி), முஸ்லிம் )
إِذَا بُويِعَ لِخَلِيفَتَيْنِ، فَاقْتُلُوا الْآخَرَ مِنْهُمَا
“இரண்டு கலீஃபாக்களுக்கு   பைஆ பெறப்பட்டால் இரண்டாவது நபரை கொன்றுவிடுங்கள்”
 (அபூஸயீது  அல் குத்ரி(ரலி),  முஸ்லிம் )
அபூஹாஸிம்  அறிவித்து முஸ்லிமில்  பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது:-

قَاعَدْتُ أَبَا هُرَيْرَةَ خَمْسَ سِنِينَ فَسَمِعْتُهُ يُحَدِّثُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «كَانَتْ بَنُو إِسْرَائِيلَ تَسُوسُهُمُ الْأَنْبِيَاءُ، كُلَّمَا هَلَكَ نَبِيٌّ خَلَفَهُ نَبِيٌّ، وَإِنَّهُ لَا نَبِيَّ بَعْدِي، وَسَتَكُونُ خُلَفَاءُ فَتَكْثُرُ»، قَالُوا: فَمَا تَأْمُرُنَا؟ قَالَ: «فُوا بِبَيْعَةِ الْأَوَّلِ، فَالْأَوَّلِ، وَأَعْطُوهُمْ حَقَّهُمْ، فَإِنَّ اللهَ سَائِلُهُمْ عَمَّا اسْتَرْعَاهُمْ
 “நான் ஐந்து வருடங்கள் அபூஹுரைராவுடன்  இருந்துள்ளேன். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள்   கூறியதாக அவர் அறிவித்துள்ளதை  செவியுற்றிருக்கிறேன்:- பனூஇஸ்ராயீல்  மக்களை  நபிமார்கள் ஆட்சி செய்தார்கள். ஒரு நபி மரணித்ததும் மற்றொரு நபி அவரிடத்திற்கு அனுப்பப்பட்டார். நிச்சயமாக! எனக்குப் பிறகு நபிமார்கள் வரமாட்டார்கள்;  ஆனால் கலீஃபாக்கள்  வருவார்கள். அவர்கள்  அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள்.   (அதுகுறித்து)  எங்களுக்கு  என்ன  கட்டளையிடுகிறீர்கள்? என்று(ஸஹாபாக்கள்)   வினவினார்கள்.  அவர்கள் அனைவருக்கும்  ஒருவருக்குப்பின் ஒருவராக பைஅத்  கொடுங்கள். அவர்களின் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு நடந்துகொள்ளுங்கள். நிச்சயமாக!   அவர்களிடம்   ஒப்படைக்கப்பட்ட   பொறுப்பு பற்றி அல்லாஹ் அவர்களிடம் விசாரிப்பான்”
முஸ்லிம் உலகில்  ஒன்றிற்கு மேற்பட்ட ஆட்சியாளர்கள் இருப்பதற்கு அனுமதியில்லை என்பதை மேற்கண்ட ஹதீஸ்கள் தெளிவாக உணர்த்துகின்றன. எனவே இஸ்லாத்தின் எதிரிகளால் வரையறுக்கப்பட்ட இன்றைய முஸ்லிம் நாடுகளின் எல்லைக்கோடுகள் தகர்த்தெறியப்பட்டு அனைத்து நிலப்பகுதிகளும் ஒரே கலீஃபாவின் கீழ் ஆளப்பட வேண்டுமென்றால் அத்தகைய கிலாஃபத்தை மீண்டும் நிறுவுவதற்காக முஸ்லிம்கள் அயராது உழைக்கவேண்டும்.

Jul 23, 2015

நபி(ஸல்) அவர்களை அவமதிப்பதை முஸ்லிம்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்!


முஸ்லிம்களின் ஆத்திரத்தை தூண்டக்கூடிய பிரான்ஸ் வார இதழின் நடவடிக்கை பற்றி பத்திரிக்கைகளும் ஊடகங்களும் பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டன. நபி(ஸல்) அவர்களை அவமதிக்கும் வகையில் சார்லி ஹெப்டோ (Charlie Hebdo) என்ற ஃபிரான்ஸ் பத்திரிக்கை கேலிச்சித்திரம் ஒன்றை வரைந்துள்ளது. கடந்தவாரம் சார்லி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலக ஊழியர்களில் 12 பேர்கள் முகமூடி அணிந்த போராளிகளால் கொல்லப்பட்டதற்கு பதிலளிப்பாக மீண்டும் கேலிச் சித்திரம் வரையப்பட்டுள்ளது! கடந்த சில வருடங்களாக நபி(ஸல்) அவர்களை இழிவுபடுத்தும் வகையில் தொடர்ந்து கேலிச்சித்திரங்களை வரையும் நடவடிக்கைகளில் சார்லி ஹெப்டோ பத்திரிக்கை முன்னணியில் இருந்துவருகிறது.

சார்லி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலக ஊழியர்களின் கொலை பற்றி உணர்ச்சி மேலிட விவாதம் மேற்கொண்ட பத்திரிக்கைகளும் செய்தி ஊடகங்களும் பேச்சு சுதந்திரம் (Freedom of speech) தொடர்பான முஸ்லிம்களின் உடன்பாடற்ற மனநிலை குறித்து கேள்வி எழுப்பின! முஸ்லிம்கள் எதிர்செயல்பாடு கொண்டவர்கள் என்றும் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள் என்றும் சுதந்திரம்-(யீக்ஷீமீமீபீஷீனீ) என்ற சிந்தனையை ஏற்றுக் கொள்ளக் கூடியவர்கள் அல்ல என்றும் அவை குற்றம் சுமத்தின!

 

முஸ்லிம்கள் இதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்?

மேற்குலகின் ஜனநாயக மதச்சார்பின்மைவாதிகள்தான் முஸ்லிம்களை மீண்டும் மீண்டும் தூ£ண்டிவிட்டு வருகிறார்கள் என்ற உண்மையை நாம் மறந்துவிடக்கூடாது. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் (War on Terror) என்ற கோஷத்தை முன்வைத்து இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் திட்டத்தில் மேற்குலகம் எத்தகைய நடிவடிக்கையையும் விட்டுவைக்கவில்லை.

செப்டம்பர் 11 க்கு பின்னர் முஸ்லிம்கள் பல்வேறு துயரங்களை எதிர்கொண்டு வருகிறார்கள். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, அச்சுறுத்தல்கள், அவமானங்கள், ஆக்கிரமிப்புகள் என்று பல்வேறு இடர்பாடுகளை தங்களுடைய ஈமானின் நிமித்தம் முஸ்லிம்கள் சந்தித்து வருகிறார்கள். இஸ்லாமிய நிலப்பரப்புகளை வெறித்தனமாக ஆக்கிரமித்ததார்கள்! அபூகுரைப் மற்றும் குவான்டனாமோ சிறைகளில் முஸ்லிம்களிலுள்ள ஆண்களையும் பெண்களையும் அடைத்துவைத்து கொடூரமாக சித்ரவதை செய்தார்கள்! நபி(ஸல்) அவர்கள்மீது கேலிச்சித்திரம் வரைந்து வெளியிட்டார்கள்! நபி(ஸல்) அவர்களையும் அவர்களின் கண்ணியமிக்க மனைவியரையும் இழிவுபடுத்தும் வகையில் புத்தகங்களை வெளியிட்டார்கள்! புனிதமிக்க குர்ஆனை இழிவுபடுத்ததினார்கள்! ஃபிரான்ஸ் போன்ற நாடுகளில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு தடைவிதித்தார்கள்! ஸ்வீடன் நாட்டில் மஸ்ஜிதுகளுக்கு மினாரா கட்டுவதற்கு தடைவிதித்தார்கள்! மேலும் இதுபோன்று இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான எண்ணற்ற அநீத செயல்பாடுகளை கட்டவிழ்த்து வருகிறார்கள். 

முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹ்வின்மீது நம்பிக்கை கொண்டுள்ளோம், மனித சமுதாயத்திற்கு அல்லாஹ் அனுப்பிய நபிமார்களில் முஹம்மது(ஸல்) அவர்கள் இறுதித்தூதராக இருக்கிறார்கள் என்பதிலும் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். இதற்கு முற்றிலும் முரண்பாடாக, மேற்குலக மதச்சார்பற்ற ஜனநாயக அரசுகள் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொண்டுவரும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, அச்சுறுத்தல், இழிவுபடுத்துதல், ஆக்கிரமிப்பு ஆகியவற்றிற்கு எதிராக அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தால் முஸ்லிம்கள் சுதந்திரத்தை மதிப்பதில்லை என்று மேற்குலகவாதிகள் கூக்குரல் எழுப்புகிறார்கள்.

மதச்சார்பின்மை‎‎க்கும் மக்களாட்சிக்கும் பாதுகாவலன் என்று பறைசாற்றிக்கொள்ளும் ஃபிரான்ஸ் அரசு சமீபத்தில் முஸ்லிம்களின் சுதந்திரத்திற்கு மதிப்பளிக்காமல் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கும் பொது இடங்களில் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்கும் தடைவிதித்துள்ளது! எனினும் முஸ்லிம்கள் உயிரினும் மேலாக கருதுகின்ற மாண்புமிக்க விவகாரங்களை காஃபிர்கள் தொடர்ந்து இழிபடுத்துவதை எதிர்க்கும்வகையில் அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தால், முஸ்லிம்கள் உணர்ச்சிவசப் படக்கூடியவர்களாகவும் எதிர்மறை செயல்பாடுகளை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்று புலம்புகிறார்கள்! ஸவ்பான்(ரளி) அறிவித்துள்ள ஹதீஸில் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உணவருந்தும்போது ஒருவர் மற்றொருவரை விருந்திற்கு அழைப்பது போல் உங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக மக்கள் விரைவாக மற்றவர்களை அழைப்பார்கள். அந்நாட்களில் நாங்கள் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதின் காரணமாக இவ்வாறு நிகழுமா?’ என்று ஒருவர் வினவினார். இல்லை! அப்போது நீங்கள் திரளான எண்ணிக்கையில் இருப்பீர்கள், எனினும் கடல்நீரில் அடித்துச் செல்லப்படும் நுரை போன்று இருப்பீர்கள்! உங்கள் எதிரிகளின் உள்ளங்களில் உங்கள் மீதுள்ள அச்சத்தை அல்லாஹ் எடுத்துவிட்டு உங்கள் உள்ளங்களில் வஹ்னைபோட்டுவிடுவான்!என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின்தூதர்(ஸல்) அவர்களே! வஹ்ன் என்றால் என்ன?’ என்று ஒருவர் வினவினார். உலகத்தின் மீதுள்ள பற்று மற்றும் மரணத்தின் மீதுள்ள வெறுப்புஎன்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்  (அபூதாவூது, அஹ்மது)‎‎‎‎‎‎‎‎

இன்றைய முஸ்லிம்களின் உண்மைநிலை குறித்து இந்த ஹதீஸ் தெளிவாக விவரிக்கிறது, 170 கோடி மக்கள் தொகையையும் பெட்ரோலியம், நிலவாயு போன்ற அரிய இயற்கை வளங்களையும் பெருங்குவியலாக பெற்றிருந்தபோதும் இன்றைய முஸ்லிம்களுக்கு எத்தகைய முக்கியத்துவமும் இல்லை! அவர்கள் கடலின் நுரையைப் போன்ற சிறுமையடைந்து கிடக்கிறார்கள்!

 

இதற்குரிய தீர்வுதான் என்ன?

ஆர்ப்பாட்டம் நடத்துவதன் மூலமாகவோ அல்லது ஃபிரான்ஸ் அரசுத்தூதருக்கும் ஐ.நா. பொதுச் செயலாளருக்கும் கடிதம் எழுதுவதன் மூலமாகவோ இந்த விவகாரத்திற்கு தீர்வு ஏற்படுத்தமுடியாது; மாறாக இத்தகைய விவகாரங்கள் கடந்த காலத்தில் ஏற்பட்டபோது அன்றைய முஸ்லிம் தலைவர்கள் அவற்றிற்கு எவ்வாறு தீர்வுகண்டார்கள் என்ற முன்னுதாரணத்திலிருந்து நாம் படிப்பினை பெறவேண்டும். சத்தியத்திற்கும் & அசத்தியத்திற்கும், இஸ்லாத்திற்கும் & குஃப்ருக்கும் எதிரான இப்போர் புதிதானதல்ல! இந்த தாக்குதல்கள் அனைத்தும் இஸ்லாத்திற்கு எதிராக நடத்தப்படும் போரின் வெளிப்பாடாகவே இருக்குகிறது. கடந்த 19 ம் நூற்றாண்டில் முஸ்லிம்களுடைய ஈமானுக்கு எதிராக காஃபிர்கள் தாக்குதல் நடத்தும் பொருட்டு நபி(ஸல்) அவர்களையும், அவர்களுடைய கண்ணியமிக்க மனைவி ஆயிஷா(ரளி) அவர்களையும் கேலி செய்யும் நாடகம் ஒன்றை அரங்கேற்ற முயற்சித்தார்கள்! இதற்கு பதிலளிப்பாக அன்றைய முஸ்லிம்களின் கலீஃபாவாக இருந்த அமீருல் மூஃமினீன் இந்த இழிசெயலை மேற்கொண்ட நாடுகளின் அரசுத்தூதர்களை அழைத்து அந்த நாடகத்தை நிறுத்தும்படி எச்சரிக்கை செய்தார், உடனடியாக அவை கலீஃபாவின் எச்சரிக்கைக்கு அஞ்சி தங்களுடைய நடவடிக்கையை நிறுத்திவிடுவதாக கூறிவிட்டன! அந்நாடுகள் பிரிட்டன் மற்றும் ஃபிரான்ஸ் ஆகியவையாகும்!

கிலாஃபா ஆட்சியின்கீழ் பல்வேறு மதத்தை சார்ந்த மக்கள் ஒன்றாகவும் அமைதியாகவும் வாழ்ந்தார்கள், அதில் சிறுபான்மையினர் நசுக்கப்படவில்லை, ஏழைகள் கவனிப்பின்றி விட்டுவிடப்படவில்லை! உண்மையாகவே முஸ்லிம்கள், ஹிந்துக்கள், கிருஸ்த்தவர்கள், யூதர்கள், பௌத்தர்கள் ஆகியோர் கிலாஃபா அரசின்கீழ் நிம்மதியாக வாழ்ந்தார்கள் என்பதற்கு வரலாறே சான்றாக திகழ்கிறது.

பிரிட்டன் மற்றும் காலனியாதிக்க மேற்கத்திய அரசுகளின் பிரித்தாளும் கொள்கையின் அடிப்படையில்தான் முஸ்லிம்களின் நிலப்பரப்புகள் துண்டு துண்டுகளாக உடைக்கப்பட்டன! ஒற்றுமையாக வாழ்ந்துவந்த பல்வேறு மதத்தை சார்ந்தவர்கள் மத்தியில் பரஸ்பர வெறுப்பும் காழ்ப்புணர்ச்சியும் ஏற்படுத்தப்பட்டு ஓரிரவில் அவர்கள் எதிரிகளாக ஆக்கப்பட்டர்கள்!

 

கண்ணியமிக்க முஸ்லிம்களே!

நாம் மிகச்சிறந்த சமுதாயம் என்பதை நிச்சயமாக நினைவில் கொள்ள வேண்டும், மேற்கத்தியர்கள் நிச்சயமாக இதை உணர்ந்துள்ளார்கள். அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக பெரும்பெரும் திட்டங்களை தீட்டி செயலாற்றியபோதும் நம்மை சிறிதும் பலவீனப்படுத்த முடியவில்லை! எனவே நாம் உயிரினும் மேலாக கருதுகின்ற நமது இந்த விவகாரத்தில் இப்போது அவர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்! ஆம்! நமது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மீதும் அல்லாஹ்வின் வேதத்தின் மீதும் அவர்கள் தாக்குதல் நடத்த துணிந்துள்ளார்கள்! நபி(ஸல்) அவர்கள்மீது கேலிச்சித்திரம் தீட்டுவதை நாம் கண்டித்தால் அவர்கள் மேலும் அதுபோன்ற கேலிச்சித்திரங்களை வரைந்து வெளியிட்டு வருகிறார்கள். அல்லாஹ்வின் வேதத்தை கழிவறையில் வீசியெறிகிறார்கள்! அதை தீயிட்டு கொளுத்துகிறார்கள்! இந்த இழிவான நடவடிக்கைகள் வாயிலாக நம்முடைய இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மீதும் இறை வேதத்தின் மீதும் நாம் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை அசைத்துவிடலாம் என்று நம்புகிறார்கள்.

கிலாஃபா எனும் உண்மையான தலைமை இல்லாவிடில் நாம் மிகநெருக்கடியான சூழலில் தள்ளப் பட்டுவிடுவோம் என்பதை முஸ்லிம்கள் உணர்ந்துகொள்ளவேண்டும். நேர்வழிகாட்டப்பட்ட கிலாஃபாதான் நம்முடைய கண்ணியத்தையும், சிறைபட்டுக் கிடக்கும் நம்முடைய சகோதரர்களையும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நமது நிலங்களையும் நமது மஸ்ஜிதுகளையும் திரும்பவும் மீட்டுக்கொடுத்து இஸ்லாமிய மாண்புகளை அடித்தளமாகக் கொண்ட சமூகத்தை அமைப்பதற்கு ஆற்றல்பெற்றது. இஸ்லாத்தின் கண்ணியத்தையும் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் கண்ணியத்தையும் முஸ்லிம்களின் கண்ணியத்தையும் பாதுகாக்க அது போராடும்!

 

இதற்கு நாம் எவ்வாறு பதிலளிக்கவேண்டும்!

நமது இருப்பிடங்களில் அமர்ந்துகொண்டு முஸ்லிம் உலகத்தின் இக்கட்டான நிலையை செய்திஊடகங்களில் பார்த்து துயரங்கொள்வதால் மட்டும் எத்தகைய பயனும் ஏற்படப்போவதில்லை. மாறாக எந்த நிலப்பரப்பில் நாம் இருந்தபோதும் இணைந்து செயலாற்றி நிச்சயமாக மாற்றத்தை கொண்டுவர வேண்டும்.

மேற்கத்தியர்களின் அச்சுறுத்தல்கள், நமது சகோதரர்களும் சகோதரிகளும் எதிர் கொண்டுள்ள இன்னல்கள் துயரங்கள், நமது இஸ்லாமிய நிலப்பரப்புகளின் ஆக்கிரமிப்புகள், வாழ்வியலில் நாம் அடைந்துள்ள பின்னடைவு போன்ற அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் ஒரேயொரு தீர்வுதான் நமக்கு முன்பாக இருக்கிறது! ஆம்! ஒரே தலைமையின்கீழ் நாம் ஒன்றிணைய வேண்டும்! மனித சமுதாயம் முழுமைக்கும் நீதி செலுத்துவதற்கு திறன்பெற்ற செயலாக்க அமைப்பின்பால் நாம் ஒன்றிணையவேண்டும்! நமக்கு ஏற்பட்டுள்ள துயரத்திலிருந்தும் கீழ்நிலையிலிருந்தும் விடுபட வேண்டுமென்றால் நாம் நமது கரங்களை ஒன்றிணைக்க வேண்டும்! ஆம்! கிலாஃபத்திற்காக விடுக்கப்படும் அழைப்பில் நமது கரங்களை ஒன்றிணைக்க வேண்டும்!

எனவே நமது கட்டாயக்கடமை என்னவென்றால்,

·நமது உம்மத்தை பாதிக்கும் விவகாரங்கள் பற்றிய அறிவையும் அது பற்றிய விழிப்புணர்வையும் நாம் வளர்த்துக் கொள்ளவேண்டும்.

·இந்த குறிக்கோளுக்கான ஹுகும்களையும் தீர்வுகளையும் குர்ஆன் சுன்னா அடிப்படையில் நாம் விளங்கிக் கொள்ளவேண்டும்.

·அல்லாஹ் அருளியுள்ள ஷரீஆவை நிலைநாட்டுவதற்காகவும் முஸ்லிம்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காகவும் அழைப்புவிடுக்கும் உலக முஸ்லிம் சகோதரர்களுடன் நாம் இணைந்து நிற்கவேண்டும்.

·நமது சகோதர சகோதரிகளுக்காகவும் அல்லாஹ்வின் உதவிக்காகவும் நாம் துஆ செய்யவேண்டும்.

·இஸ்லாத்தையும் நபி(ஸல்) அவர்களையும் இழிவுபடுத்துவதை நிறுத்துவதற்குரிய தீர்வு என்பது நேர்வழிகாட்டப்பட்ட கிலாஃபா எனும் அரசியல் கட்டமைப்பை உருவாக்குவதுதான் என்பதை நாம் விளங்கிக்கொள்ளவேண்டும். அது முஸ்லிம்களின் கேடயமாகும்! அதுவே தீனுடைய பாதுகாப்பாகும்! அதுதான் இஸ்லாத்தின் சின்னமாகவும் அதன் அச்சாணியாகவும் விளங்குகிறது! இன்னும் முஸ்லிம்களின் வாழ்வாகவும் அவர்களுடைய கண்ணியமாகவும் உடமையாகவும் விளங்குகிறது!

 

ஈமான்கொண்டவர்களே! அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உங்களுக்கு உங்களுக்கு வாழ்வளிக்கும் விஷயத்தை நோக்கி அழைப்பு விடுத்தால் அதற்கு பதிலளியுங்கள்!    (அல்அன்ஃபால் : 24) 

 

 

www.sindhanai.org

Jul 4, 2014

ஜிஹாத் - மேற்குலகின் பிரச்சாரமும், உண்மை நிலையும் (காலத்தின் தேவை கருதிய மீள்பதிவு )


கடந்த பல தசாப்தங்களாக மேற்குலகைப் பொருத்தவரையில் ஜிஹாத் என்பது ஒரு வாதப்பொருளாக இருந்து வருகிறது. இஸ்லாத்தின் உண்மையான சக்தியினை வெளிப்படுத்தி நிற்கிறது என்பதை உணர்ந்ததாலேயே, மேற்குலகு, ஜிஹாத் என்ற சொல்லிற்கு அஞ்சுகிறது. எனவே அதனது உண்மை அர்த்தத்தினை திரிக்க அவர்கள் முயற்சிப்பது ஒன்றும் முஸ்லிம்களுக்கு புதிதானது அல்ல.


முஸ்லிம் உம்மத்திற்கு எதிராக சிலுவைப்போர் மேற்கொள்ளப்படும் போதெல்லாம், ஜிஹாதினுடைய உண்மையான அர்த்தம் திரிக்கப்படுகிறது என்பதனை நாம் வரலாறு நெடுகிலும் காண்கின்றோம். ஆனால்; அதன் வடிவங்கள் வேறுபடக்கூடும். உதாரணமாக, டோனி பிளயெரின் கூற்றில் 'இஸ்லாம் ஒரு சமாதானத்திற்கான மார்க்கம்" என்பதாகவும், மேற்குலகை ஆதரிக்கும் இஸ்லாமியவாதிகளின் அர்த்தத்தில், "ஒருவர் தமது மனோ இச்சைகளுக்கு எதிராகப் போராடும் ஒரு விஷயம்" என்பதாகவும் இருக்கலாம்.

இவ்வாறான அர்த்தங்களை திரிக்கும் முயற்சிகள் ஒருபுறமிருக்க, மேற்குலகானது, ஜிஹாதினை ஒரு 'பயங்கரமான விஷயமாக" சித்தரிக்கின்ற உபாயங்களையும் தனது வழிமுறையாக கையாண்டு வருகிறது. உதாரணமாக, ஜிஹாத் தொடர்பாக உரை நிகழ்த்தப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு இங்கிலாத்திலுள்ள பின்ஸ்பெரி பார்க் பள்ளிவாசல் இழுத்து மூடப்பட்டதை நாம் ஊடகங்களினு}டாக அறிந்திருப்போம். பள்ளிவாசல்களை மூடப்படுவதைப்போன்ற இத்தகைய செயற்பாடுகள், ஜிஹாத் தொடர்பான இஸ்லாத்தின் கருத்துக்கள் பள்ளிவாசல்களில் பேசப்படுவதை பெரும்பாலும் தடுத்து விடுகின்றன. உம்மத்திற்கெதிராக அதிகளவில் அடக்குமுறைகள் இடம்பெறுகின்ற இன்றைய சூழலில் ஏன் நீங்கள் ஜிஹாத் தொடர்பாக பேச மறுக்கின்றீர்கள் என பொதுமக்கள் பள்ளிவாசல் நிர்வாகங்களை வினவும்போது, அவர்கள், 'பள்ளிவாசல்கள் இழுத்து மூடப்படுவதை நாங்கள் விரும்பவில்லை", என தெரிவிக்கின்றனர். இவ்வாறான எத்தகைய வழிமுறைகளையும் கடைப்பிடித்து, ஜிஹாதினுடைய உண்மையான அர்த்தத்தினை திரிபுபடுத்த முயற்சிப்பதில் அவர்கள் கண்ணும்கருத்துமாக இருக்கின்றனர்.

இவற்றையெல்லாம் நாம் எதிர்கொள்ளத் தயாராக வேண்டும். ஏனெனில் யுத்தம் என்பது எமது வாழ்வில் தவிர்க்கமுடியாத ஒன்றாகும். பாரம்பரியமாகவே, தமது இலக்கினை அடைந்து கொள்வதற்காக, மேற்குலகு, தமது பலத்தினை உபயோகப்படுத்த என்றும் தயங்கியதில்லை. அமெரிக்க கூட்டுப்படையின் ஈராக்கிய யுத்தம் இதற்கொரு சிறந்த உதாரணமாகும். ஆனால், 'இஸ்லாம் பலப்பிரயோத்திற்கு எதிரானது" என முஸ்லிம்களையே கூறவைக்கும் நயவஞ்சக முயற்சிகளை மேற்கொள்வதிலும் அவர்கள் வல்;;லவர்கள். இத்தகைய யுக்திகளை பயன்படுத்துவதன் மூலமாக முஸ்லிம்களின் மனோநிலையை பலவீனப்படுத்தி தமது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எளிதுபடுத்துவதில் அவர்கள் குறிப்பிடத்தக்க அளவு வெற்றிகண்டுள்ளார்கள்.

யுத்தம் ஏன் தவிர்க்கப்பட முடியாதது?

தனது இறையாண்மையை பாதுகாக்கும் தற்காப்பு உணர்வு உலகின் அனைத்து நாடுகட்கும் அதன் மக்கட்கும் உண்டு. அதனை பாதுகாப்பதற்காக அந்த தேசம் எந்த விலையினையும் கொடுக்கத் தயாராகி விடுகிறது. அதேபோன்று ஒவ்வொரு தேசத்திற்கும் அடிப்படையான இலக்குகளும் காணப்படுகின்றன. மகிழ்ச்சியின் உச்ச நிலையை அடைவதே மேற்கத்தியத்தின் அடிப்படை நோக்கமாகும். எனினும் இஸ்லாத்தினை பொருத்தமட்டில் அல்லாஹ் (சுபு) வின் திருப்தியை பெற்றுக்கொள்வதே அதனது ஏக இலக்காகும். எனவே இவற்றில் எந்த தேசத்தினை எடுத்துக்கொண்டாலும் அது தனது சித்தாந்தத்தை மேலோங்கச்செய்து தனது இலக்கினை அடைவதற்கு பலம் அவசியமாகும். இதற்காக உள்நாட்டிற்குள் காவல்துறையும் புலனாய்வுத்துறையும் செயற்படுத்தப்படுவதுடன் வெளிநாட்டுறவில் இராணுவமும் புலனாய்வுத்துறையும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே பொதுவாக எந்தவொரு தேசத்தை பொருத்தவரையிலும் அதனது வரவுசெலவுத்திட்டத்தில் பெரும் ஒதுக்கீட்டை பெறுவது பாதுகாப்புத்துறையேயாகும். எனவே எவராவது ஒருவர் பலப்பிரயோகம் தேவையற்றது எனக்கூறுவாரேயானால் அவர் யதார்த்தத்தை மறுக்கிறார் என்பதே உண்மையாகும். பலம் இல்லாத நிலையில் குழப்ப நிலை தொடர்வது தவிர்க்க முடியாதது. இந்த யதார்த்தத்தை நாம் ஏற்றுக்கொண்டால் எமது வாதம் யுத்தத்தை மறுப்பதாக அல்லாமல் அது எதற்காக மேற்கொள்ளப்படுகிறது என்பதை நோக்குவதாக இருக்கும்.

சோசலிஷவாதிகள், மனிதாபிமானவாதிகள் போன்றோர்களுடன் யுத்தம் தொடர்பாக உரையாடும்போது, 'யுத்தம் தவறானது" என்ற வாதத்தின் வாயிலாக இஸ்லாத்தினை யுத்தத்திற்கு எதிரான ஒன்றாக இனம்காட்டும் முயற்சியின்போதும், 'யுத்தம் குறித்து இஸ்லாத்தில் எவ்வித கொள்கையும் இல்லை' என்பதை நிறுவ முயற்சிக்கும் விஷயத்திலும் முஸ்லிம்கள் கவனமாக இருக்க வேண்டும்.

விசுவாசம் கொண்டோரே! நிராகரிப்போரிலிருந்து உங்களை அடுத்து இருப்போருடன் போர் செய்யுங்கள்; அவர்கள் உங்களிடம் கடுமையையே காண வேண்டும்: இன்னும், நிச்சயமாக அல்லாஹ், பயபக்தியுடையோருடன் இருக்கின்றான். (அத்தவ்பா:123)

முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் இல்லை என இறை நிராகரிப்பாளர்கள் கூறும் வரையில் போர் புரியுமாறு நான் ஏவப்பட்டுள்ளேன்.
இதேபோன்று, அல்லாஹ்வின் வார்த்தையை மேலோங்கச்செய்வதற்கான முயற்சியில் ஏற்படும் தடைகளை அகற்றும் பொருட்டு காபிர்களுடன் போராடுவதே ஜிஹாத் என்பதாக உலமாக்கள் ஏகோபித்த முடிவினைக் கொண்டுள்ளனர்...

இங்கு கவனிக்கத்தக்க முக்கிய இரு விஷயங்கள் இருக்கின்றன.
அதாவது.

செயல் குறித்தது: தடைகளை களைவதற்காக காபிர்களுடன் போராடுவது. 
நோக்கம் குறித்தது: அல்லாஹ்வின் வார்த்தையை மேலோங்கச் செய்வது.
அனைத்து சித்தாந்தங்களையும், கொள்கைகளையும் பொருத்தவரையிலும், அதனை மேலோங்கச்செய்வதிலும், பரப்புவதிலும், பாதுகாப்பதிலும் போராட்டங்களும் யுத்தங்களும் ஒரு முக்கிய கருவியாக பயன்படுத்தப்படுத்தப்பட்டு வந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். மேற்குலகின் யுத்தத்திற்கான அடிப்படை உலக இலாபங்களை அடைந்து கொள்வதாகும். அதனை இவ்வாறு சொல்லலாம். ஆதாவது உலக இலாபங்களை அடைந்து கொள்ளும் முயற்சியில் ஏற்படும் தடைகளை அகற்றுவதற்காக போராடுதலாகும்.

இங்கும் கவனிக்கத்தக்க முக்கிய இரு விடயங்கள் இருக்கின்றன.
அதாவது

செயல் குறித்தது: தடைகளை களைவதற்காக எவருடனும் போராடுவது. 
நோக்கம் குறித்தது: உலக இலாபங்களை அடைந்து கொள்வது. 

இந்த அடிப்படையில் பார்க்கும் போது தமது இலக்குகளை அடைந்து கொள்வதற்காக முதலாளித்துவ தேசமும் இஸ்லாமிய தேசமும் பலத்தையினை பிரயோகிப்பதை நம்மால் காணமுடிகிறது. எனினும் மிகத்தெளிவான வேறுபாடு அதனது நோக்கத்திலேயே இருக்கிறது. எனவே நோக்கத்தில் காணப்படும் இந்த அடிப்படை வேறுபாட்டினை புரிந்து கொண்டு காபிர்களின் வலையில் சிக்கிவிடுவதிலிருந்து முஸ்லிம்கள் தம்மை பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.

அதாவது ஜிஹாத்தினுடைய அர்த்தத்தினை தமது மனோ இச்சைகளுக்கு எதிரான போராட்டமாக மட்டும் இனம்காட்டுவதன் மூலம் அதனது உண்மை அர்த்தத்தினை மறைத்து முஸ்லிம்களை பாதுகாப்பற்ற ஒரு சூழலுக்குள் தள்ளுவதற்கான சகல முயற்சிகளையும் காபிர்கள் எடுப்பார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஜிஹாத் என்பது வெறுமனவே தமது மனோ இச்சைகளுக்கு எதிரான ஒரு போராட்டமா?
இந்த வினா இஸ்லாமிய ஷரியத்திலிருந்து விளங்கிக்கொள்ளப்படவேண்டும். ஜிஹாத் தொடர்பான மேற்குறித்த வாதமானது மிக அரிதான ஷரிஆ ஆதாரத்தின் அடிப்படையிலேயே விளங்கப்படுத்தப்படுகிறது. இந்த இடத்தில் ஜிஹாத்தினுடைய நேரடி மொழியியல் அர்த்தம் தொடர்பான விளக்கத்திலும்; அதனது ஷரிஆ hPதியான அர்த்தத்திற்குமிடையிலான வேறுபாட்டினையும் நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

மொழியியல் ரிதியான ஜிஹாத் என்பதன் அர்த்தம் முயற்சித்தல் அல்லது போராடுதல் ஆகும்

எது பற்றி உனக்கு அறிவு (ஆதாரம்) இல்லையோ அதை எனக்கு நீ இணையாக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால் அவ்விஷயத்தில் நீ அவ்விருவருக்கும் கீழ்படிய வேண்டாம். ( லுக்மான்:15)
மேலும் அல்லாஹ்வுடைய வழியில் எவர் ஜிஹாத் செய்கிறாரோ அவர் ஜிஹாத் செய்வதெல்லாம் (அதன் பலனெல்லாம்) தனக்காகத்தான் நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன்.
( அல் அன்கபூத்:6)


மேலும் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படியாக நாம் மனிதனுக்கு நல்லுபதேசம் செய்திருக்கிறோம். அன்றியும் எதைப்பற்றி உனக்கு அறிவு இல்லையோ அதை எனக்கு இணையாக்குமாறு (மனிதனே) அவர்கள் இருவரும் உன்னை நிர்ப்பந்தித்தால் (அவ்விடயத்தில்) நீ அவ்விருவருக்கும் கீழ்படிய வேண்டாம். (அல் அன்கபூத்:8)

மேலும் விசுவாசம் கொண்டு நற்கருமங்களையும் செய்கிறார்களே அத்தகையோர் - அவர்களை நிச்சயமாக நாம் நல்லோர்களி(ன் கூட்டத்தாருடன் சுவனத்தி)ல் நுழைவிப்போம். (அல் அன்கபூத்:9)

மொழியியல் ரிதியாக ஜிஹாத்திற்கான அர்த்தம் வழங்கபடுவது மேற்குறிப்பிட்ட நான்கு ஆயத்களில் மாத்திரமேயாகும். இந்த ஆயத்துக்களும் மக்காவில் அருளப்பட்ட மக்கீ ஆயத்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

எனவே இந்த ஆயத்துக்களைப்பொருத்தமட்டில் அது உண்மையாகவே யுத்தத்தைக் குறிக்கவில்லை. எனவே இந்த ஆயத்துக்களுக்கு சண்டையிடுதல் அல்லது கொல்லுதல் என அர்த்தம் கற்பிப்பது தவறானதாகும். எனினும் சண்டையிடுவதையும் கொல்வதையுமே ஜிஹாத்திற்கான ஷரிஆ ரிதியாக விளக்கமாகக் குறிக்கின்ற 120இற்கும் மேற்பட்ட ஆயத்துக்கள் குர்ஆனில் காணப்படுகின்றன.

விசுவாசிகளில் தங்கடம் உடையவர்களை தவிர (வீட்டில்) உட்கார்ந்து கொண்டவர்கள், (யுத்தத்திற்குச்சென்று) தங்களுடைய செல்வங்களாலும் உயிர்களாலும் அல்லாஹ்வுடைய பாதையில் அறப்போர் செய்வோருக்கு சமமாக மாட்டார்கள். (ஏனென்றால்) தங்கள் செல்வங்களாலும் தங்கள் உயிர்களாலும் அறப்போர் புரிந்தோரை படித்தரத்தால் ( வீட்டில்) உட்கார்ந்து விட்டவர்களை விட அல்லாஹ் சிறப்பாக்கி வைத்திருக்கிறான்.( அன்நிஸா:95)

இலேசாகவும் கவனமாகவும் ( இளைஞர்கள், முதியவர்கள், செல்வந்தர்கள், செல்வம் இல்லாதவர்கள், வாகனத்தில் ஏறியவர்கள், நடப்பவர்கள் ஆகியோர்) புறப்பட்டு, உங்களின் செல்வங்களாலும், உங்களின் உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் போர் செய்யுங்கள்: நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் இதுவே உங்களுக்கு மிகச்சிறந்ததாகும். (அத்தவ்பா: 41)

(அத்தகைய வியாபாரமானது ) நீங்கள் அல்லாஹ்வையும் அவனுடைய (இத்) துதரையும் ஈமான் கொண்டு உங்களுடைய பொருட்களையும் உங்களுடைய உயிர்களையும் அல்லாஹ்வுடைய பாதையில் அறப்போர் (ஜிஹாத்) செய்யுங்கள். நீங்கள் அறியக்கூடியவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிகச்சிறந்ததாக இருக்கும். (அஸ்ஸவ்ப்:11)

இந்த ஆயத்துக்களை பொருத்தமட்டில் இவைகள் நேரடியான சண்டையிடுதலையே குறிப்படுகிறதேயொழிய இவற்றிற்கு நேரடி சொல் விளக்கத்தினை எடுப்பது தவறானதாகும்.

ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து உலமாக்களும் ஜிஹாத்திற்கான ஷரிஆ அர்த்தமாக யுத்தம் புரிவதையே சரிகாண்கின்றனர்.

ஹனபி மத்ஹப் - பாதியா அஸ்ஸானியா மாலிக் மத்ஹப் - மன்ஹல் ஜலீல் ஷாபி - அல் இக்னா ஹன்பலி - அல் முஹ்னி சிலர் ஷரிஆ அர்த்தத்தை ( சண்டையிடுதல், கொல்லுதல்) பொருள் ரிதியான அர்த்தத்தை (மனோஇச்சைகளுக்கு எதிரான போராட்டம்) விடவும் குறைவாக கணிக்கின்றனர். அதற்காக அவர்கள் கீழ்வரும் ஹதீஸினை முன்வைக்கின்றனர்.

நான் சிறிய ஜிஹாத்திலிருந்து பெரிய ஜிஹாதிற்கு திரும்பியுள்ளேன். இதற்கு ஸஹாபாக்கள் எது பெரிய ஜிஹாத் என நபிகளாரிடம் வினவியபோது அதற்கு அவர்கள் மனோ இச்சைகளுக்கெதிரான ஜிஹாத் என்றார்கள்.

மேற்கூறப்படும் ஹதீஸானது ஏற்றுக்கொள்ளப்படத்தக்கதன்று. ஏனெனில் இது புனைந்துரைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹதீஸ் கலை நிபுணர் இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸ் இப்ராஹீம் பீ அபி அப்லா என்வரின் கூற்று மட்டுமே என அறிவிக்கின்றார்கள்.

மேலும் கீழ்வரும் காரணங்களினால் இதனது கருத்தில் தவறு இருப்பது புலப்படுகிறது.

1. மேற்படி கூற்றானது ஜிஹாதின் மேன்மை குறித்த உறுதியான குர்ஆனின் கருத்திற்கு மாறுபாடானது.

விசுவாசிகளில் சங்கடம் உடையவர்களை தவிர (வீட்டில்) உட்கார்ந்து கொண்டவர்கள், (யுத்தத்திற்குச்சென்று) தங்களுடைய செல்வங்களாலும் உயிர்களாலும் அல்லாஹ்வுடைய பாதையில் அறப்போர் செய்வோருக்கு சமமாக மாட்டார்கள். (ஏனென்றால்) தங்கள் செல்வங்களாலும் தங்கள் உயிர்களாலும் அறப்போர் புரிந்தோரை படித்தரத்தால் ( வீட்டில்) உட்கார்ந்து விட்டவர்களை விட அல்லாஹ் சிறப்பாக்கி வைத்திருக்கிறான்.( அன்நிஸா:95)

2.மொழியியல் ரிதியான பொருளானது பொதுவானதாகும். ஆதாவது அது 'நப்ஸ்" யிற்கு எதிராக போராடுவதையும் சண்டையிடுவதையும் உள்ளடக்கியுள்ளது. எனினும் அதனது ஷரிஆ ரிதியான அர்த்தமானது காபிர்களுக்கு எதிரான போராட்டமேயாகும்.

3. மேற்படி ஹதீஸானது யுத்தம் செய்வதா, செய்யாது விடுவதா என்பது குறித்து தீர்மானிக்கும் ஒன்றாக இருக்கவில்லை. இது யுத்தத்தினை தடை செய்வதற்கான எவ்வித அறிகுறியையும் தெரிவிப்பதாக இல்லை.

இதேநேரத்தில் சிலர் ஜிஹாதினை தற்பாதுகாப்பிற்கான ஒரு விடயமாக மாத்திரம் இனம்காட்ட முயற்சிக்கின்றனர். இது மிகமிகத் தவறானதாகும். நபி (ஸல்) அவர்களின் வாழ்வை மேலோட்டமாக பார்த்தால் கூட இது தவறான கருத்து என புரிந்து கொள்ளலாம்.

முஅத்ஆ யுத்தமானது ரோமாபுரிக்கெதிராக முஸ்லிம்களாலேயே தொடுக்கப்பட்டது. இந்த யுத்தத்தில் 200,000 விரர்கள் கொண்ட ரோம இராணுவத்தினை 3000 முஸ்லிம்கள் எதிர்கொண்டனர். அதேபோன்று மக்காவெற்றியானது ஹ{னைன் யுத்ததினை தவிர்க்கமுடியாததாக மாற்றியமைத்ததையும் நாம் அறிவோம். தபூக் யுத்தமும் கூட முஸ்லிம்களாலேயே தொடுக்கப்பட்டு அது ரோமர்களை முற்றுமுழுதாக அழித்தொழிப்பதற்கு ஏதுவாக அமைந்ததும் குறிப்பிடத்தக்கது.
ஸஹாபாக்களின் இஜ்மா ( ஏகோபித்த முடிவு) விலும் அவர்கள் ஜிஹாத்தினை ஷாம், ஈராக், ஈரான், எகிப்து, வட ஆபிரிக்கா போன்ற பிரதேசங்களில் ஆரம்பித்திருப்பதை நாம் காணலாம். மேலும் ஷஹீத்களின் அந்தஸ்த்தானது இஸ்லாத்தில் மிகவும் உயர்ந்ததாகும். எனவே எவ்வாறு ஜிஹாத்தானது ஏனைய விடயங்களை விட குறைவாக மதிப்பிடப்படலாம்?

இஸ்லாத்தை நோக்கிய முறையான அழைப்பிற்கு பின்பு காபிர்களை இஸ்லாத்தினை ஏற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்துவதை இஸ்லாம் தடைசெய்கிறது. மார்க்கத்தை ஏற்றுக்கொள்வதில் நிர்ப்பந்தம் இல்லை என்ற குர்ஆனியக்கருத்தும் இதனையே வலியுறுத்துகிறது. எனினும் உலகில் அனைவரையும் இஸ்லாத்தின் ஆளுகைக்குள் கொண்டுவருவதற்காகவே இந்த தீன் இறக்கப்பட்டுள்ளது. இதனை அடைந்து கொள்வதற்கான கருவியே ஜிஹாதாகும். ஜிஹாத் இல்லாமல் அல்லாஹ் கூறுவதைப்போன்று இஸ்லாம் மறைந்து விடும்.

அவன் எத்தகையோன் என்றால் அவன் தன்னுடைய து}தரை நேர்வழியைக்கொண்டும் உண்மையான மார்க்கத்தைக்கொண்டும் அனுப்பி வைத்தான். இணைவைத்துக்கொண்டிருப்போர் வெறுத்தபோதிலும் மற்ற எல்லா மார்க்கங்களைவிட அதை மேலோங்கச்செய்யவே (தன் துதரை அனுப்பிவைத்தான்.)
( அஸ் ஸவ்ப்:9)


முஸ்லிம்கள் காபிர்களிடமிருந்தும் தம்முள் காணப்படும் காபிர்களின் முகவர்களிடமிருந்தும் இஸ்லாத்தினை பாதுகாக்க உறுதி கொள்ளவேண்டும். அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்

எவர் அல்லாஹ்வின்பால் (மனிதர்களை) அழைத்து(த் தாமும்) நற்கருமங்களையும் செய்து, நிச்சயமாக நான் (அல்லாஹ்விற்கு முற்றிலும் கீழ்படிந்த) முஸ்லிம்களில் உள்ளேன் என்றும் கூறுகின்றாரோ அவரைவிட சொல்லால் மிக்க அழகானவர் யார்? (புஸ்ஸிலத்:33)

Jun 2, 2014

இஸ்லாமிய தஃவா என்பது நபி வழியில் அமையவேண்டும்….!


இன்று பல்வேறு விதமான தஃவா முறைகள் எமது முஸ்லிம் உம்மத்திடம் காணப்படுகிறது. இவை அனைத்தும் ஏதோ ஒரு குறித்த இலக்கை அடிப்படையாக கொண்டு இஸ்லாத்திற்கு பலம் சேர்க்கும் விதத்தில் அமைந்தாலும் அவைதானா நபி (ஸல்) அவர்களது தஃவா முறை என்பது பற்றி நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.
நபி (ஸல்) அவர்களது தஃவா முறையை நாம் பார்போமானால் அவர்களது தஃவா முறையில் மூன்று முக்கிய கட்டங்களை நாம் காணலாம்.
முதல் கட்டம்:
தனிமனிதர்களை இலக்குவைத்து தாருல் அர்கத்தில் அவர்களை மிக இரகசியமாக சிந்தனைரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் பண்படுத்தி, புடம்போட்டு, பக்குவப்படுத்தி, இஸ்லாமிய தஃவாவை முன்னெடுக்கும் ஒரு திட்டமான திடமான ஒரு குழுவை உருவாக்கினார்கள். இதற்கு சுமார் 3 வருடம் நபி (ஸல்) அவர்களுக்கு தேவைப்பட்டது.
இரண்டாம் கட்டம்:
இதில் நபி (ஸல்) அவர்களது இலக்கு தனி நபர்களை இலக்குவைத்த தஃவா முறையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட போக்கை கொண்ட தஃவா முறையாக மாறுவதனை நாம் காணலாம்.
நபி (ஸல்) அவர்கள் இரண்டாம் கட்டமாக தாருல் அர்க்கத்தில் பயிற்றப்பட்ட இஸ்லாமிய தலைமைகளை கொண்ட அந்த அணியுடன் "அவர்கள் வாழ்ந்த சமூகத்தில் உள்ள அனைத்து ஜாஹிலிய்ய முறைகளுக்கும் எதிராக குரல் எழுப்பி சமூகத்தலைவர்களை கண்டிப்பதுடன் அந்த சமூகத்தலைவர்கள் முன்னெடுத்த அடக்குமுறை மற்றும் அநீதிமிக்க வாழ்வியல் முறைகளுக்கு எதிராக சிந்னையை தூண்டி மக்களிடம் ஹக்கை எடுத்தியம்புகிறார்கள்".
இதன்போது அந்த சமூகத்தில் புரையோடிப்பபோன ஜாஹிலிய்ய நடைமுறைகள், பெண்கள் நடாத்தப்பட்ட முறை, அநாதைகள் மற்றும் ஏழைகள் சுரண்டப்பட் முறை, வியாபார முறையில் உள்ள மோசடி போன்ற "அரசியல், பொருளியல் மற்றும் சமூகவாழ்வு" குறித்த அத்தனை அநீதிகளையும் கண்டித்து மாற்றீட்டு வாழ்க்கை முறைகுறித்த கருத்துக்களை சமூகத்தில் முன்வைக்கிறார்கள்.
இதனால் பொதுமக்கள் மத்தியில் உள்ள வாழ்க்கை முறைபற்றிய "சிந்தனை மற்றும் உணர்வுகள்" தூண்டப்பட்டு இஸ்லாத்தின் மீதான நல்லெண்ணம் உருவாக்கப்பட்ட அதேவேளை அந்த சமூகத்தலைமைகளது அடக்குமுறைகள் துண்பங்கள் அனைத்தையும் சகித்தபடி தொடர்ந்தும் தமது ஹக்கை எடுத்தியம்புவதில் பின்வாங்காது பொறுமைகாத்தார்கள்.
இதற்கு உதாரணமாக சுமையா (ரழி), அம்மார் (ரழி), யாசிர் (ரழி), மற்றும் பிலால் (ரழி) ஆகியோரை குறிப்பிடலாம்.
மாத்திரமின்றி பல சஹாபாக்களை சிறையில் அடைத்து வேதனையும் செய்தார்கள்.
இது ஹக்கை உள்ளபடி எடுத்தியம்பும்போது ஏற்படும் இயல்பான நிலை. இவ்வாராண அடக்குமுறைகள் இன்றும் ஹக்கை எடுத்தியம்பும் எமது இஸ்லாமிய சகோதரர்கள் அனுபவித்து வருவதனையும் நாம் காணலாம். அது இந்த தஃவாமுறையின் இயற்கையான தன்மை.
மூன்றாம் கட்டம்:
இது நபி (ஸல்) அவர்கள் "சமூகத்தில் நிலைத்திருந்த வாழ்வியல் ஒழுங்குமுறைகளை அதிகாரம் ஒன்றைப் பெற்று மாற்றியமைக்க முற்படும் போக்கை கொண்ட நுஸ்றாவை கோரும் ஒரு தஃவா முறை" என்பதனை நாம் உணர கடமைப்பட்டுள்ளோம்.
நபி (ஸல்) அவர்களது சீராவை நாம் படிக்கும் போது தெளிவாக தென்படுத் இந்த தஃவா முறையில் அவர்கள் 20 க்கு மேற்பட்ட கோத்திரங்களை அணுகி நுஸ்றாவை கோருகிறார்கள்.
இறுதியில் "அவ்ஸ் -ஹஸ்ரஜ் கோத்திரங்களது நுஸ்றாவின் மூலமே" மதீனாவில் "இஸ்லாமிய அரசை நிறுவி" அவ்வரசின் மூலமான தஃவா முன்னெடுப்புகளை மேற்கொண்டு "ஹக்கை உலகெங்கும் எடுத்துச் செல்வதற்கும்" "தாருல் குப்ரை தாருல் இஸ்லாமாக மாற்றுவதற்கும்" முற்படுகிறார்கள். இதுதான் நபி (ஸல்) அவர்களது மூன்றாம் கட்ட தஃவா முறை.
இவ்வாறு இஸ்லாத்தில் நபி (ஸல்) அவர்கள் முன்னெடுத்த தஃவா முறை மிகத்தெட்டத் தெளிவாக உள்ள போது இன்று எத்தனையோ பெயர்பெற்ற தஃவா அமைப்புக்கள் இந்த தஃவா முறைகளுடன் பாரிய வேறுபாடுகளை கொண்டதாக இருப்பதால் நபி (ஸல்) அவர்கள் சமூகமாற்றத்தை ஏற்படுத்திய முறையினை விட்டுவிட்டு பல்வேறு முறைகளை கையால்வதனால் முஸ்லிம் உம்மத் உரிய மறுமலர்ச்சியை அடையத் தவறி வருவதனை நாம் கண்கூடாக காணமுடிகிறது.
எனவே, "ஒட்டுமொத்த இஸ்லாத்தையும் நன்மையாக ஏவி இஸ்லாம் அல்லாத வாழ்க்கை முறைகளையும் கலாச்சாரத்தையும் கேள்விக்குட்படுத்தி ஹக்கை நிலைநாட்ட நபி (ஸல்) அவர்கள் மேற்கொண்ட தஃவா முறையில்" இருந்து மீண்டும் பாடம்பெறவேண்டிய பாரிய பொறுப்பு முஸ்லிம் உம்மத்திறகு உள்ளது.
“மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.”(Imran: 104)
அதேவேளை, இஸ்லாமிய அழைப்புப்பணியின் போது எமது பொறுமையையும், கட்டுப்பாட்டையும், உறுதியையும் அல்லாஹ் சோதிக்கின்றான். அதற்கு கூலியாக விரிந்த இந்த பிரபஞ்சத்தைவிட விசாலமாக சுவர்க்கத்தை எமக்கு தயார்ப்படுத்தி வைத்திருப்பதாக எமக்கு நன்மாராயம் கூறுகிறான்.
“உங்களுக்கு முன்னிருந்தோருக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்துவிடலாம் என்று நீங்கள் எண்ணுகின்றீர்களா? அவர்களை (வறுமை,பிணிபோன்ற) கஷ்டங்களும், துன்பங்களும் பீடித்தன“அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்” என்று து}தரும் அவரோடு ஈமான் கொண்டோரும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள் “நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது”(என்று நாம் ஆறுதல் கூறினோம்)” (2:214)