Showing posts with label இஹ்வான்கள். Show all posts
Showing posts with label இஹ்வான்கள். Show all posts

Sep 3, 2013

எகிப்திற்கு வந்துள்ள புது ஃபிர்அவ்ன்

சென்ற வாரம் கெய்ரோவில் நடந்த படுகொலை சம்பவத்தைக்கண்டு உலகமே அதிர்ச்சிக் குள்ளானது. இந்த படுகொலை, பாதுகாப்பு அமைச்சர் மற்றும் ராணுவ தலைமை தளபதி அப்துல் ஃபத்தாஹ் அல் சிசியின் தலைமையில் நடந்தது. 03-07- 2013 – ல் நடந்த இராணுவப் புரட்சியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் முர்சி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தை சார்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் அமைதியான போராட்டத்தில் பல வாரங்களாக ஈடுபட்டார்கள்.

கெய்ரோவில் உள்ள ராபியத்துல் அதவியா சதுக்கத்தில் தொடர்ச்சியாக அமைதி போராட்டம் நடந்துவந்த நிலையில், 12 -8 2013 -ல் இராணுவ முகாம் முன்பு எதிர்பாராதவிதமாக நடைபெற்ற துப்பாக்க்கிச்சூட்டில் சில ராணுவத்தினரும் பொதுமக்களும் உயிரிழந்தனர். இதைக் கண்டித்து இராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 51 பேர் உயிரிழந்தனர், 400 -க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். ஆனால் 14 -8- 2013 அன்று, இந்த போராட்டத்தை கலைக்கும் வண்ணம், ராபியத்துல் அதவியா சதுக்கம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் எகிப்து இராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அமைதியாக போராடிய பொதுமக்களில் 600 பேர் உயிரிழந்தனர், 3717 பேர் காயமுற்றனர். ராபியத்துல் அதவியா பள்ளிவாசல் ஒரு அவசர மருத்துவமனையாக மாறி, பெண்களும் குழந்தைகளும் அடைக்கலம் தேடும் இடமாக ஆகியது. தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தில் அந்த பள்ளிவாசல் முற்றிலும் எரிந்து போனது.

15 -8 2013 அன்று அந்த பள்ளிவாசலில் 12 க்கும் மேற்பட்ட உடல்களை யாரும் உரிமை கோரவில்லையென செய்திகள் வந்தன. இறந்தவர் யாரென்று அடையாளம் காண்பதற்காக உறவினர்கள் பிளாஸ்டிக் ஷீட்களை விலக்கி தேடியது நெஞ்சை உருக்கியது. இறந்தவர்களை அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட பலருக்கு அனுமதி கிடைக்கவில்லை. 16 -8- 2013 அன்று இராணுவத்தினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் நடந்த மோதலில் மேலும் 64 பேர் உயிரிழந்து மொத்த எணிக்கை ஒரே வாரத்தில் 700 ஐ கடந்தது.

அப்துல் ஃபத்தாஹ் அல் சிசி அமெரிக்காவின் கைக்கூலி

இந்த சம்பவம் ஒரு யதார்த்தமான அத்துமீறல் மட்டுமன்றி வாஷிங்டனால் முழுமையாக திட்டமிடப்பட்ட ஒன்றாகும். அமெரிக்க உதவி செயலாளர் வில்லியம் பர்ன்ஸ் மற்றும் இரு அமெரிக்க செனட்டர்களான ஜான் மெக்கெயின் மற்றும் லிண்ட்சே கிரகாம் ஆகியோர் அப்துல் ஃபத்தாஹ் சிசியை சந்தித்து முர்சி ஆதரவாளர்களை எப்படி கலைக்கவேண்டுமென்று திட்டமிட்டனர். இதையடுத்து, சிசி முஸ்லிம் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து முர்சிக்கு எதிராக இராணுவத்துடன் செயல்படவேண்டுமென்று எச்சரிக்கை விடுத்தார். ஆனால், சர்வதேச அழுத்தம் இருந்தும் முஸ்லிம் எதிர்க்கட்சியினர் அதை ஏற்கவில்லை.

அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் தங்களின் வஞ்சனை, மோசடி மற்றும் கபடத்தை திரும்பவும் காண்பித்துவிட்டனர். அது போதாதென்று சிசி ஆட்சியை ஊக்குவிக்கும் வண்ணம் 1.3 பில்லியன் டாலரை அமெரிக்காவும், 5 பில்லியன் டாலரை அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியான சவுதி அரேபியாவும் அளித்துள்ளது. இதிலிருந்து அமெரிக்கா எகிப்தை எந்த அளவிற்கு முக்கியமான பிராந்தியமாக கருதிகிறது என்பதை விளங்கிக்கொள்ளலாம்.அமெரிக்கா தன்னுடைய இராணுவ தளவாடங்களை, ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளுக்கு எடுத்துச் செல்ல எகிப்து கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உள்ளது. ஹெரிடேஜ் நிறுவன ஆய்வாளர் ஜேம்ஸ் பிலிப்ஸ் கூறுகையில், “மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவம் பிரவேசிக்க எகிப்து ஒரு முக்கிய மைல் கல் ஆகும் “. சென்ற ஆண்டு மட்டும் – 2000 க்கும் மேற்பட்ட அமெரிக்க விமானப்படையின் விமானங்கள் எகிப்து வழியாக சென்றுள்ளது, 35 க்கும் மேற்பட்ட அமெரிக்க கடல்படை கப்பல்கள் எகிப்தின் சூயஸ் கால்வாய் வழியாக சென்றுள்ளது. மேலும் சூயெஸ் காழ்வாய் வழியாக சென்ற அமெரிக்க கப்பற்படையின் கப்பல்கள், நிற்காமல் கடந்து சென்றுள்ளது. காசாவிலிருந்து எகிப்துக்கு முக்கிய நுழைவாயிலான ரபாஹ் எல்லையை இஸ்ரேலின் பாதுகாப்பிற்காக மூடி வைத்துள்ளது.

பான்-ஆப்ரிக்கன் பத்திரிக்கையாளர் பயோமி அஜிகிவே கூறுகையில், 03 – 7- 2013 -ல் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் சாக் ஹகெலுக்கும் எகிப்து இராணுவத்திற்குமிடையே தொடர்ந்து விரிவான பேச்சுவார்தைகள் நடைபெற்றது. மேலும் அமெரிக்காவின் பொருளாதாரம் மற்றும் இராணுவ தேவைகளுக்கு எகிப்து முக்கியமாக இருப்பதால் இதை இராணுவ புரட்சி என்று கூட அமெரிக்க கூறவில்லை என்கிறார்.

முஸ்லிம் சமுகத்தின் பொறுப்புகளும் ஒற்றுமைக்கான அவசியமும்

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்:- உங்களில் யாரேனும் காலையில் எழும் போது, முஸ்லிம்களின் விவகாரங்களைப்பற்றிய அக்கறை இல்லாமல் இருப்பாரானால், அவர் நம்மை சார்ந்தவரல்லர் (முஸ்லிம்). இந்த ஹதீஸின் மூலம் முஸ்லிம்களின் விவகாரங்களை நாம் அறிந்துகொண்டு செயல்பட வேண்டும் என்பதை விளங்கிக்கொள்ளலாம். முஸ்லிம்களின் ஒற்றுமைக்கும் நலனுக்கும் எவ்வித தீங்கும் நேராமல் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டியது நம்மீது கடமையாக உள்ளது.அமெரிக்கா மற்றும் மற்ற மேற்கத்த்திய நாடுகள் முஸ்லிம்களுக்கு எதிராக செய்யும் சூழ்ச்சிகளை அறிந்து செயல்பட வேண்டும். முஸ்லிம்களின் விவகாரங்களில் இஸ்லாமிய ஷரிஆ வராமல் இருக்க அந்நாடுகள் செய்யும் சூழ்ச்சிகள்தான் எகிப்து மற்றும் மற்ற அரபு நாடுகளில் நடக்கும் நிகழ்வுகள் என்பதை நாம் உணரவேண்டும். மேலும் இதற்காண ஒரே தீர்வான ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் நமக்கு விட்டுசென்ற முஸ்லிம்களின் கேடயமான கிலாஃபத்தின் மூலம் இஸ்லாத்தை நிலைநாட்டி முஸ்லிம்களின் ஒற்றுமையை ஒங்க செய்யவேண்டும்.

நம்முடைய பொறுப்புகள்

1. அல் சிசி, அமெரிக்கா மற்றும் ஏனைய மேற்கத்திய அரசியல் சூழ்ச்சிகளுக்கு துணை புரிந்து துரோகம் புரிவதை அம்பலப்படுத்த வேண்டும்

2. மனித உயிர்களுக்கு மதிப்பின்றி செயல்பட்ட சிசி ஆட்சியை தட்டிக்கேட்கவேண்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரி, தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தவேண்டும்

3. எகிப்து மற்றும் ஏனைய அரபு நாடுகளில் நடக்கும் நிகழ்வுகளை குறித்து முஸ்லிம்களுடன் கலந்துரையாட வேண்டும் . நபி (ஸல்) அவர்கள் காட்டி தந்த வழியில் நம்முடைய அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக அமைப்புகளை சீர் செய்யவேண்டும் என்று விளக்கவேண்டும்

4. எகிப்தில் உள்ள தைரியமுள்ள நம்முடைய சகோதர சகோதரிகளுக்காக நாமும் துஆ செய்து மற்றவர்களையும் துஆ செய்ய கூற வேண்டும் .

அன்றியும், நம்பிக்கை கொண்டவர்களை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான்; நயவஞ்சகர்களையும், அவன் நிச்சயமாக நன்கறிவான். [அல் குர்ஆன் 29:11]

எகிப்து தூதரகத்திற்கு வைக்க வேண்டிய கோரிக்கைகள்

1. முகம்மது முர்சி மற்றும் அவருடைய ஆதரவாளர்களை உடனடியாக விடுவிக்கவேண்டும்.

2. இராணுவ ஆட்சியை புறக்கணித்து அமெரிக்க சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும்.

3. கட்டுப்பாடற்ற ஜனநாயக ஆட்சிமுறையை புறக்கணித்து, இஸ்லாமிய அடிப்படையிலான கிலாஃபத்தை நிலைநாட்ட வேண்டும்.

Aug 26, 2013

சாத்வீகவழிப்போராட்டம் நபி வழியில் இஸ்லாமிய அரசை நிறுவிடும் வழிமுறையா?

இன்று எகிப்தில் ஆயிரக்கணக்காண உயிர்கள் பலியிடப்படும் துர்பாக்கிய நிலைக்கு எகிப்தினது அரசியல் வழிகாட்டல் வித்திட்டுள்ளது.

அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும் கை மேலோங்கிய நிலையில் இவர்களது வழிகாட்டலின் கீழ் ஆயிரக்கணக்கான உயிர்கள் சாத்வீக வழிப் போராட்டம் எனும் தோறணையில் பலியிடப்படும் பரிதாபகரமான சூழலிற்கு இன்று இஹ்வானுல் முஸ்லிமின் அமைப்பு வழிகாட்டுகிறது.

சாத்வீகவழிப்போராட்டம் நபி வழியில் இஸ்லாமிய அரசை நிறுவிடும் வழிமுறையா? சீராவில் அத்தகைய முன்மாதிரி உள்ளதா?

அல்சிசி எனும் கொடுங்கோலன் இஸ்வான்களை ஆறுமாத காலத்துக்குள் கருவறுத்துவிடுவேன் எனும் சூளுரைக்கும் இத்தருணத்தில் அமெரிக்காவும் இஸ்ரேலும் சிசியின் பின்னணியில் தொழிற்படும்போது சாத்வீகவழியில் மீள இஸ்லாம் மலருமா?

ஏற்கனவே அமெரிக்காவும் அதன் அடிவருடிகளான சவூதி அரேபியா, கட்டார், குவைத் போன்ற நாடுகளும் இஸ்ரேலும் சேர்ந்து இஸ்லாம் ஜனநாயகம் எனும் ஆட்சிமுறைக் கருவியினூடாக அமுல்படுத்தப்பட்டுவிடக் கூடாது என்பதற்கான சதித்திட்டத்தை தீட்டி ஆட்சியை கவிழ்த்திருக்கும் போது மீள முர்சியை பதவியில் அமர்த்துவதனால் இஸ்லாத்தை முழுமையாக அமுல்படுத்த விட்டுவிடுவார்களா?

அல்ஜீரியாவில் இதேபோன்றதொரு பாடத்தை படித்துவிட்டு மீள ஜனநாயகம் எனும் கருவியினூடாகவே இஸ்லாத்தை அமுல்படுத்துவோம் என்பதில் எந்தளவு சாத்தியம் உள்ளது என்பது பற்றி உணரமாட்டார்களா எமது இஹ்வானிய சகோதரர்கள்?

இவர்கள் மாற்றீட்டு அரசியல் பற்றி சிந்திக்க மாட்டார்களா? இராணுவ நுஸ்றா இல்லாத நிலையில் இஸ்லாத்தை பகுதியாகவும் தேசத்தின் எல்லைக்குள் அமுல்படுத்தவும் எதிரிகளிடம் இருந்து அரசை பாதுகாக்கவும் இராணுவ நுஸ்றா வேண்டும் என்பதனை உணரமாட்டார்களா?

அல்லாஹ் இவர்களுக்கு இந்த உண்மையை புரியவைக்க வேண்டும் என பிரார்த்திப்போம்! நபிவழியில் கிலாபா நிறுவிட, பாடுபட பிரார்த்திப்போம்!

Aug 19, 2013

எகிப்து படுகொலைகள் – சவூதி நயவஞ்சக அரசியலின் பின்னணி


ஜமால் அப்துல் நாசர் – 16 வருடங்கள்

அன்வர் சதாத் – 11 வருடங்கள்

ஹோஸ்னி முபாரக் – 31 வருடங்கள் என

மொத்தம் 58 வருடங்கள் மூன்று சர்வதிகாரிகளின் கீழ் பொறுமையாய் இருந்தஎகிப்து மக்களால் தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி முர்சியின்ஆட்சியை ஒரு வருடம் கூட பொறுத்து கொள்ள முடியாமல் போனதுஆச்சர்யப்பட கூடிய ஒரு எதேச்சையான நிகழ்வு அல்ல. மாறாக இதன்பின்னால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நயவஞ்சக வெறுப்பு அரசியல்இருப்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இக்வானுல் முஸ்லீமினின் தோற்றம்

எகிப்தை சுரண்டிய அன்னிய ஆட்சியை அகற்றுவதையும் கிலாபத்தைகட்டியெழுப்புவதையும் நோக்கமாக கொண்டு பள்ளிக்கூட ஆசிரியரான ஹசன் அல் பன்னா அவர்களால் 1928ல் ஆரம்பிக்கப்பட்ட ’இக்வானுல் முஸ்லீமின்’என்று அழைக்கப்படும் முஸ்லீம் சகோதரத்துவ இயக்கம் குறுகிய காலத்திலேயேபாலஸ்தீன், சிரியா, சூடான், ஜோர்டான், ஈராக் என பல்வேறு பகுதிகளுக்குபரவியது

இக்வானுல் முஸ்லீமினின் வளர்ச்சி தங்கள் முடியாட்சிக்கு ஆபத்தாய் முடியும்என்று கருதிய மன்னர் ஃபாரூக் 1948ல் இக்வானுல் பன்னாவை சுட்டு கொன்றுஷஹீதாக்கினார். பின்னர் பாருக்கின் ஆட்சியை கவிழ்த்து ஜமால் அப்துல் நாசர்ஆட்சிக்கு வர இக்வானுல் முஸ்லீமின் உதவினாலும் பதவி வெறி பிடித்த நாசர்1954ல் மீண்டும் இக்வானுல் முஸ்லீமீனை தடை செய்து அதன் தலைவர்கள்உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களை சிறையில் அடைத்து சித்ரவதைசெய்தார்.

சவூதியில் இஹ்வான்கள்

எகிப்தில் நிலவிய இக்கடும் போக்கால் சில உறுப்பினர்கள் சவூதி உள்ளிட்டமத்திய கிழக்கு நாடுகளில் சென்று குடியேறினர். இஹ்வான்களின் கனவானஇஸ்லாமிய ஆட்சி என்பது சவூதிக்கு எப்போதுமே அலர்ஜியான ஒன்று.ஏனெனில் கிலாபத்தின் வீழ்ச்சியில் முக்கிய பங்காற்றியதே சவூதி என்பதுவரலாறு பொறித்து வைத்திருக்கும் உண்மை. மேலும் 90களில் சதாமுக்குஎதிராக அமெரிக்கா போர் தொடுத்த போது அமெரிக்காவுக்கு உறுதுணையாகசவூதி உள்ளிட்ட வளைகுடா நாடுகள் நிற்க துனிஷியா, சூடான், ஏமன் மற்றும்துருக்கியில் இருந்த முஸ்லீம் சகோதரத்துவ கட்சியோ சதாமுக்குஆதரவளித்தது குறிப்பிடத்தக்கது.

சவூதியில் தொழுகை உள்ளிட்ட வணக்க வழிபாடுகளில் மட்டும் தீவிர போக்கைமேற்கொண்டிருந்த ஸலபிகள் அரசியல் ரீதியாக இஸ்லாமியப்படுத்தப்படுவதுசவூதிக்கு நிச்சயம் கோபத்தை ஏற்படுத்தும், இத்தவறை தான் இஹ்வான்கள்தெரியாமலேயே செய்தார்கள். ஆம் குறுகிய எல்லைக்குள்ளையே தங்களைநத்தையாக சுருக்கி கொண்டிருந்த ஸலபிகள் இஸ்லாமிய அரசியல் பற்றியவிழிப்புணர்வு பெற்றதற்கு சவூதியில் பணிபுரிந்து கொண்டிருந்த இஹ்வான்களேகாரணம் என்பதே சவூதியின் கோபத்திற்கான முக்கிய காரணம்.

சவூதியின் இரட்டை நிலைப்பாடு

தங்கள் மீது செலுத்தப்படும் விசுவாசத்தை இரு புனித தலங்களின்பாதுகாப்பாளர் எனும் போர்வையை கொண்டு புனிதமாக்கிய சவூதிய அரசுதங்கள் குடிமகன்கள் பரிபூரணமான அடிமைத்தனத்தை தங்களுக்கு மட்டுமேசெலுத்த வேண்டுமென்று நினைத்தனர். தங்களின் அமெரிக்க விசுவாசத்தைகேள்வி கணக்கின்றி ஒத்து கொள்ளும் சமூகமாகவே தம் குடிமக்களை சவூதிஆட்சியாளர்கள் நினைத்தார்கள். ஹஜ்ஜுக்கு வரும் பெண்களுக்கு மஹ்ரத்தைகடமையாக்கும் அதே வேளையில் தவறுகள் நிகழ சாத்தியம் அதிகமுள்ள வீட்டுபணியாள்கள் விஷயத்தில் மஹ்ரத்தை கண்டு கொள்ளாமல் இருப்பதிலிருந்துதங்கள் ஷேக்குகளின் ஆடம்பர வெளிநாட்டு வாழ்க்கை உள்ளிட்டஅனைத்தையும் கேள்வி கணக்கின்றி மக்கள் ஏற்று கொள்ளும் பொருட்டுமார்க்கத்தில் தீவிர நிலைப்பாடு கொண்டவர்களாகவும் தம்மை சவூதி அரேபியாகாட்டி கொண்டு வந்துள்ளது.

சவூதியுடன் முரண்பட்ட ஒசாமா

ஆப்கன் ஜிஹாதுக்கு ஒசாமாவுக்கு உதவி செய்த சவூதி ஏமன் ஜிஹாதுக்குஉதவ முயன்ற ஒசாமாவை முடக்கியது போன்ற காரணங்களால் சவூதி அதிகாரவர்க்கத்துடன் முரண்பட்டிருந்த ஒசாமா ஈராக் தாக்குதலை தடுக்க தாம் முன்வைத்த திட்டத்தை நிராகரித்து அமெரிக்க துருப்புகளை சவூதி அழைத்ததால்கடும் கோபம் அடைந்தார். பின் சவூது குடும்பம் தூக்கியெறியப்படுவதை தம்இலட்சியமாக அறிவித்தது அனைவரும் அறிந்ததே.

ஒசாமாவுக்கு முன்பே பல சீர்திருத்தவாதிகள் சவூதி அரசுக்கு எதிர்ப்புதெரிவித்தாலும் ஒசாமாவுக்கு பின்பே அந்த எதிர்ப்பு வீரியமடைந்தது. இவ்வாறுசவூதி அரசு கொண்டுள்ள மேற்கத்திய ஆதரவு கொள்கைக்கு எதிர்ப்பாகவும்கிலாபத்தை இலட்சியமாக கொண்டு போராடுவதற்கும் ஸலபிகள் முயல்வதற்குகாரணமாக இஹ்வான்களிடம் பெற்ற அரசியல் அறிவே காரணம் என்று சவூதிஉறுதியாக நம்பியது. ஒசாமாவின் வாழ்வு குறித்து புத்தகம் எழுதிய மைக்கேல்ஸ்கூயர் கூட ஒசாமாவின் சிந்தனையை வடிவமைத்த முக்கியமான நபர்களாக இஹ்வான்களின் சிந்தனை சிற்பி சையது குதுப், அப்துல்லா அஸ்ஸாம்போன்றாரை குறிப்பிடுகிறார். மேலும் சவூதியில் ஒசாமாவுக்கு கல்லூரியில்ஆசிரியராக சையது குதுபின் சகோதரர் முஹம்மது குதுப் இருந்ததுகுறிப்பிடத்தக்கது.
அதனால் தான் பெண் என்றும் பாராமல் ஜைனப் கஜ்ஜாலி உள்ளிட்டஇஹ்வான்களை கொடுமைப்படுத்திய சர்வதிகாரி முபாரக்கின் ஆத்ம நண்பராகசவூதி அரேபியா இருந்ததோடு முபாரக்குக்கு எதிரான மக்களின் போராட்டத்தைஏற்று கொள்ள மறுத்தது. மேலும் எகிப்தில் இஹ்வான்கள் ஆட்சிக்கு வரகூடாது என்பதற்காக எல்லா வித முயற்சியிலும் இறங்கினார்கள்.

ஆட்சியில் இஹ்வான்கள்

அல்ஜீரியா மற்றும் காஸா தந்த படிப்பினையை கணக்கில் கொள்ளாமல் இஹ்வானுல் முஸ்லீமின் எகிப்தில் நடந்த புரட்சிக்கு பின் தேர்தலில் பங்கு பெற்று வெற்றி பெற்றது. ஆனால் தேர்தலுக்கு முன்பே ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்து ராணுவம் அனைத்து அதிகாரங்களையும் தன் வசப்படுத்தியது. ராணுவம், சவூதி அரேபியா , அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து தரப்பினருடன் முர்ஸி சுமூக உறவை மேற்கொண்டாலும் அவர்கள் முர்ஸியை நம்பாமல் சந்தேக கண்ணோட்டத்துடனேயே பார்த்தனர்.

சர்வ வல்லமையுடன் ராணுவ தளபதியாக இருந்த தந்தாவி முர்ஸியால் பதவி நீக்கப்பட்டவுடன் முர்ஸி ஆட்சியில் இருப்பதன் அபாயத்தை உணர்ந்த ராணுவம், சவூதி அரேபியா மற்றும் அமெரிக்க அரசுகள் முர்ஸிக்கு எதிரான பிரச்சாரத்தை அங்குள்ள காப்டிக் கிறிஸ்துவர்கள், இடதுசாரிகள், தாராளவாதிகள்,மேலைத்தேய மோகிகள் என பல்வேறு தரப்பினரின் மூலம் மேற்கொண்டனர்.

அவர்களின் முயற்சியின் விளைவாக முர்ஸி ஜுலை 3 அன்று பதவி நீக்கம் செய்யப்பட்டு ராணுவம் முபாரக் ஆட்சி காலத்தில் நீதிபதியாக இருந்த கிறிஸ்தவரான மன்சூரை இடைக்கால அதிபராக நியமித்தது. ஆனால் ராணுவ தளபதியாக உள்ள சிசி தான் உண்மையான அதிகாரத்துடன் கோலோச்சுவது அனைவரும் அறிந்த ஒன்றே. சிசியின் தாய் ஒரு யூதர் என்று சமீபத்தில் வெளியாகியுள்ள செய்திகள் உண்மை என்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

ராணுவத்தின் வெறியாட்டம்

முர்ஸியின் நீக்கத்துக்கு எதிராக அவரது ஆதரவாளர்கள் நடத்திய போராட்டங்களை ராணுவம் ஒடுக்க நினைத்தது பலன் தராமல் போகவே தற்பொழுது நேரடியாகவே ராணுவம் களத்தில் இறங்கியுள்ளது. புனித மாதம் தொடங்குவதற்குள்ளாகவே முடித்து விட வேண்டுமே என்ற கவலையில் ராணுவம் கடந்த சில நாட்களாக அமைதியான முறையில் போராடி கொண்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களின் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.

இது வரை 600 நபர்கள் கொல்லப்பட்டிருப்பதாக ராணுவம் கூறினாலும் சுமார்5000 நபர்கள் கொல்லப்பட்டிருப்பதாக இஹ்வான்கள் தரப்பில் கூறப்படுகிறது. 3000 நபர்கள் இரட்டை கோபுர தாக்குதலில் கொல்லப்பட்டதற்காக ஆண்டுக்கணக்கில் நினைவஞ்சலி நடத்தி ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்ளிட்ட நாடுகளை சுடுகாடாக்கிய அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எகிப்து விஷயத்தில் நடந்து கொள்ளும் முறை தெளிவான நயவஞ்சகமே.

இஸ்லாத்தை கருவறுக்க நினைக்கும் அமெரிக்கா கூட வாயளவிலாவது இப்படுகொலைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. மேலும் ஜெர்மனி, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் எகிப்து படுகொலைகளை கண்டித்துள்ள நிலையில் இரு புனித தளங்களின் ஊழியராக தம்மை பிரகடனப்படுத்தியுள்ள சவூதி அரேபியோவின் நடவடிக்கையோ இதற்கு நேர்மாற்றமாக உள்ளது.

ஆயிரக்கணக்கான இஹ்வான்களையும் அவர்களுக்கு ஆதரவளித்த பொதுமக்களையும் கொன்று குவித்த எகிப்திய ராணுவம் பள்ளிவாயில்களில் தஞ்சம் புகுந்துள்ள இஹ்வான்களை வேட்டையாடும் நோக்கில் ராணுவம் புகுந்து வேட்டையாடுகிறது. தன்னை பிர் அவ்ன் என்று வர்ணித்து கொண்ட முபாரக்கின் ஆட்சி காலத்தில் கூட இத்துணை இஹ்வான்களும் பொதுமக்களும் கொல்லப்பட்டதில்லை என்றே சொல்லலாம். ஹசன் அல் பன்னாவின் பேரன்,இக்வானுல் முஸ்லீமினின் தலைவர் முஹம்மது பதியின் மகன் உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

சவூதியின் பச்சை துரோகம்

இத்துணை முஸ்லீம்களின் இரத்தத்தை ஓட்டிய எகிப்திய ராணுவத்தை கண்டிக்க மனமில்லாமல் தீவிரவாதத்திற்கெதிராக போராடும் எகிப்துக்கு தம் முழு ஆதரவையும் சவூதி மன்னர் அப்துல்லா தெரிவித்துள்ளார். முர்ஸி பதவியிலிருந்து விலக்கப்பட்டவுடன் முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்ததோடு பில்லியன் கணக்கில் நிதியுதவி அளித்த சவூதி அரேபியா எகிப்தின் போராட்டத்திற்கு அரபுகள் துணை புரிய வேண்டும் என்றும் கோரியுள்ளது.

தம் அதிகார ருசிக்காக கிலாபத்தையே உடைத்த சவூதி அரேபியா, தம் ஆட்சியை தக்க வைத்து கொள்ள உம்மத்தின் ரத்தத்தையே ஒட்டவும் தயங்காத இவர்களை இனியும் உம்மத்தின் பாதுகாவலர்கள் என நம்பி ஏமாற போகிறதா இச்சமூகம் அல்லது எகிப்தின் படிப்பினையிலிருந்து பாடம் பெற்று உண்மையான போராட்டத்தின் பக்கம் இஹ்வான்கள் சாய்ந்து இறைவனின் திருப்தி பெற்றவர்களாக மாற போகிறார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும் (இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான். இன்னும், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை “(அவர்கள்) இறந்துவிட்டார்கள்” என்று கூறாதீர்கள்; அப்படியல்ல! அவர்கள் உயிருள்ளவர்கள்; எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ள மாட்டீர்கள். நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள். இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன, இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள்.(இறைவனின் இறுதி வேதம் 2 : 151 – 155)

Sources from http://islamiyakolgai.blogspot.ae