Showing posts with label யார் இந்த சிசி?. Show all posts
Showing posts with label யார் இந்த சிசி?. Show all posts

Sep 14, 2013

ஒரு யூதப்பயங்கரவாதியின் பார்வையில் ஜெனரல் அப்தல் பதாஹ்ஃ அல்-சிசி





Major General Amos Gilad. இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சின் அரசியல் இராணுவ உறவுகளிற்கான பீரோவின் இயக்குனர். பலஸ்தீன விவகாரங்களிலும் மத்தியகிழக்கின் அரசியல் இராணுவ விககாரங்களிலும் நீண்ட அனுபவங்களை தொடராக கொண்டவர். கடந்த ஞாயிற்று கிழமை நடந்த பயங்கரவாதத்திற்கு எதிரான பாதுகாப்பு தொடர்பான சர்வதேச மையத்தில் நடைபெற்ற ஒன்று கூடலில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் Herzliya-ல் இந்த மையம் அமைந்துள்ளது. அதில் அவர் கூறினார்...

“எகிப்தின் General Abdel Fattah al-Sisi எகிப்தினை இஸ்லாமிய பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து பாதுகாத்துள்ளார். எகிப்திய வரலாற்றின் மறக்க முடியாத நாயகன் ஜெனரல் சிசி. இஹ்வான்கள் எனும் எகிப்தின் சகோதரத்துவ இயக்கம் தொடர்ந்தும் ஆட்சியில் இருந்தால் அது இஸ்ரேலை அழிக்க முயற்ச்சிக்கும். முழு மத்திய கிழக்கிலுமே அமைதியின்மையை ஏற்படுத்தும். முஸ்லிம் தேசங்களை பல துண்டுகளாக பிரித்திருக்கும்”

“ஹமாஸ் என்பது பலஸ்தீன பயங்கரவாதிகளின் கும்பல். இஸ்ரேல் எனும் அமைதி நாடும் தேசத்தை அழிப்பதே அவர்கள் நோக்கம். ஹமாஸின் காஸா பிரதமர் இஸ்மாயில் ஹனீயேஹ் முர்சியின் அரசை வரவேற்றார். ஏனென்றால் அடிப்படையில் ஹமாஸ் என்பது இஹ்வான்களில் அடிப்படை சிந்தனைகளை கொண்ட இயக்கம். இப்போது அவர்கள் நிலை கவலைக்கிடமாக மாறியுள்ளது. இந்த உன்னத செயலை செய்து முடித்தவரும் General Abdel Fattah al-Sisi யாவார்”

“மன்னர் அப்துல்லாஹ் புத்திசாலியாக செயற்பட்டுள்ளார். அவரது ஆட்சியில் இது ஒரு வரலாற்று சிறப்பாகும். ஜெனரல் சிசி பதவிக்கு வர பில்லியன் கணக்கான டொலர்களை வழங்கினார். அத்தோடல்லாமல் ஐக்கிய அரவு இராஜ்ஜியத்தையும் முர்சியின் அரசை கவிழ்கும் புரட்சிக்கு பணவுதவி செய்ய வேண்டினாரல். சவுதி அரேபியாவிற்கு இரண்டு பயங்கரவாத பிரச்சனைகள் இருந்தன. ஈரான். மற்றையது இஹ்வான். இப்போது இஹ்வான்களிற்கு சவுதி அரேபியா முற்று புள்ளி வைத்துள்ளது. இது போலவே அந்த தேசம் ஈரான் விடயத்திலும் செயற்பட வேண்டும்” என மேஜர் ஜெனரல் கிலாட் வேண்டுகோள் விடுத்தார்.

அவர் மேலும் பேசுகையில் “General Abdel Fattah al-Sisi இன்னொரு சாகசத்தையும் செய்து முடித்துள்ளார். தஹ்ரீரில் கூடிய பயங்கரவாதத்தின் ஆதரவாளர்களை கருணையின்றி அழித்தமையாகும். இது பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் ஒரு படி. அதனை அவர் உறுதியாகவும் வெற்றிகரமாகவும் செய்து முடித்தார்”


”General Abdel Fattah al-Sisi-யின் இன்னொரு போற்றத்தக்க சிறந்த நடவடிக்கையே சினாய் யுத்தமாகும். அல்-காயிதா அமைப்பின் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தளங்களை நோக்கு குண்டு தாக்குதல்களை அவர் நிகழ்த்துகிறார். சினாயிற்கு எந்த உணவும் செல்லாமல் தடுத்துள்ளார். எகிப்திய இராணுவத்தின் தாக்குதல்களை அதிகரித்தும் வருகிறார். இது விடயத்தில் நான் திருப்தி அடைந்துள்ளேன். எனது திருப்தியை இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சிற்கும் தெரிவித்துள்ளேன். அவை காத்திரமான செயற்பாடுகள். ரபாவின் நிலக்கீழ் சுரங்கங்களை தகர்த்ததன் மூலம் அவர் தன்னை ஏற்கனவே நிரூபித்து கொண்டவர்” என ஜெனரல் கிலாட் தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

Sep 3, 2013

எகிப்திற்கு வந்துள்ள புது ஃபிர்அவ்ன்

சென்ற வாரம் கெய்ரோவில் நடந்த படுகொலை சம்பவத்தைக்கண்டு உலகமே அதிர்ச்சிக் குள்ளானது. இந்த படுகொலை, பாதுகாப்பு அமைச்சர் மற்றும் ராணுவ தலைமை தளபதி அப்துல் ஃபத்தாஹ் அல் சிசியின் தலைமையில் நடந்தது. 03-07- 2013 – ல் நடந்த இராணுவப் புரட்சியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் முர்சி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தை சார்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் அமைதியான போராட்டத்தில் பல வாரங்களாக ஈடுபட்டார்கள்.

கெய்ரோவில் உள்ள ராபியத்துல் அதவியா சதுக்கத்தில் தொடர்ச்சியாக அமைதி போராட்டம் நடந்துவந்த நிலையில், 12 -8 2013 -ல் இராணுவ முகாம் முன்பு எதிர்பாராதவிதமாக நடைபெற்ற துப்பாக்க்கிச்சூட்டில் சில ராணுவத்தினரும் பொதுமக்களும் உயிரிழந்தனர். இதைக் கண்டித்து இராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 51 பேர் உயிரிழந்தனர், 400 -க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். ஆனால் 14 -8- 2013 அன்று, இந்த போராட்டத்தை கலைக்கும் வண்ணம், ராபியத்துல் அதவியா சதுக்கம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் எகிப்து இராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அமைதியாக போராடிய பொதுமக்களில் 600 பேர் உயிரிழந்தனர், 3717 பேர் காயமுற்றனர். ராபியத்துல் அதவியா பள்ளிவாசல் ஒரு அவசர மருத்துவமனையாக மாறி, பெண்களும் குழந்தைகளும் அடைக்கலம் தேடும் இடமாக ஆகியது. தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தில் அந்த பள்ளிவாசல் முற்றிலும் எரிந்து போனது.

15 -8 2013 அன்று அந்த பள்ளிவாசலில் 12 க்கும் மேற்பட்ட உடல்களை யாரும் உரிமை கோரவில்லையென செய்திகள் வந்தன. இறந்தவர் யாரென்று அடையாளம் காண்பதற்காக உறவினர்கள் பிளாஸ்டிக் ஷீட்களை விலக்கி தேடியது நெஞ்சை உருக்கியது. இறந்தவர்களை அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட பலருக்கு அனுமதி கிடைக்கவில்லை. 16 -8- 2013 அன்று இராணுவத்தினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் நடந்த மோதலில் மேலும் 64 பேர் உயிரிழந்து மொத்த எணிக்கை ஒரே வாரத்தில் 700 ஐ கடந்தது.

அப்துல் ஃபத்தாஹ் அல் சிசி அமெரிக்காவின் கைக்கூலி

இந்த சம்பவம் ஒரு யதார்த்தமான அத்துமீறல் மட்டுமன்றி வாஷிங்டனால் முழுமையாக திட்டமிடப்பட்ட ஒன்றாகும். அமெரிக்க உதவி செயலாளர் வில்லியம் பர்ன்ஸ் மற்றும் இரு அமெரிக்க செனட்டர்களான ஜான் மெக்கெயின் மற்றும் லிண்ட்சே கிரகாம் ஆகியோர் அப்துல் ஃபத்தாஹ் சிசியை சந்தித்து முர்சி ஆதரவாளர்களை எப்படி கலைக்கவேண்டுமென்று திட்டமிட்டனர். இதையடுத்து, சிசி முஸ்லிம் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து முர்சிக்கு எதிராக இராணுவத்துடன் செயல்படவேண்டுமென்று எச்சரிக்கை விடுத்தார். ஆனால், சர்வதேச அழுத்தம் இருந்தும் முஸ்லிம் எதிர்க்கட்சியினர் அதை ஏற்கவில்லை.

அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் தங்களின் வஞ்சனை, மோசடி மற்றும் கபடத்தை திரும்பவும் காண்பித்துவிட்டனர். அது போதாதென்று சிசி ஆட்சியை ஊக்குவிக்கும் வண்ணம் 1.3 பில்லியன் டாலரை அமெரிக்காவும், 5 பில்லியன் டாலரை அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியான சவுதி அரேபியாவும் அளித்துள்ளது. இதிலிருந்து அமெரிக்கா எகிப்தை எந்த அளவிற்கு முக்கியமான பிராந்தியமாக கருதிகிறது என்பதை விளங்கிக்கொள்ளலாம்.அமெரிக்கா தன்னுடைய இராணுவ தளவாடங்களை, ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளுக்கு எடுத்துச் செல்ல எகிப்து கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உள்ளது. ஹெரிடேஜ் நிறுவன ஆய்வாளர் ஜேம்ஸ் பிலிப்ஸ் கூறுகையில், “மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவம் பிரவேசிக்க எகிப்து ஒரு முக்கிய மைல் கல் ஆகும் “. சென்ற ஆண்டு மட்டும் – 2000 க்கும் மேற்பட்ட அமெரிக்க விமானப்படையின் விமானங்கள் எகிப்து வழியாக சென்றுள்ளது, 35 க்கும் மேற்பட்ட அமெரிக்க கடல்படை கப்பல்கள் எகிப்தின் சூயஸ் கால்வாய் வழியாக சென்றுள்ளது. மேலும் சூயெஸ் காழ்வாய் வழியாக சென்ற அமெரிக்க கப்பற்படையின் கப்பல்கள், நிற்காமல் கடந்து சென்றுள்ளது. காசாவிலிருந்து எகிப்துக்கு முக்கிய நுழைவாயிலான ரபாஹ் எல்லையை இஸ்ரேலின் பாதுகாப்பிற்காக மூடி வைத்துள்ளது.

பான்-ஆப்ரிக்கன் பத்திரிக்கையாளர் பயோமி அஜிகிவே கூறுகையில், 03 – 7- 2013 -ல் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் சாக் ஹகெலுக்கும் எகிப்து இராணுவத்திற்குமிடையே தொடர்ந்து விரிவான பேச்சுவார்தைகள் நடைபெற்றது. மேலும் அமெரிக்காவின் பொருளாதாரம் மற்றும் இராணுவ தேவைகளுக்கு எகிப்து முக்கியமாக இருப்பதால் இதை இராணுவ புரட்சி என்று கூட அமெரிக்க கூறவில்லை என்கிறார்.

முஸ்லிம் சமுகத்தின் பொறுப்புகளும் ஒற்றுமைக்கான அவசியமும்

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்:- உங்களில் யாரேனும் காலையில் எழும் போது, முஸ்லிம்களின் விவகாரங்களைப்பற்றிய அக்கறை இல்லாமல் இருப்பாரானால், அவர் நம்மை சார்ந்தவரல்லர் (முஸ்லிம்). இந்த ஹதீஸின் மூலம் முஸ்லிம்களின் விவகாரங்களை நாம் அறிந்துகொண்டு செயல்பட வேண்டும் என்பதை விளங்கிக்கொள்ளலாம். முஸ்லிம்களின் ஒற்றுமைக்கும் நலனுக்கும் எவ்வித தீங்கும் நேராமல் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டியது நம்மீது கடமையாக உள்ளது.அமெரிக்கா மற்றும் மற்ற மேற்கத்த்திய நாடுகள் முஸ்லிம்களுக்கு எதிராக செய்யும் சூழ்ச்சிகளை அறிந்து செயல்பட வேண்டும். முஸ்லிம்களின் விவகாரங்களில் இஸ்லாமிய ஷரிஆ வராமல் இருக்க அந்நாடுகள் செய்யும் சூழ்ச்சிகள்தான் எகிப்து மற்றும் மற்ற அரபு நாடுகளில் நடக்கும் நிகழ்வுகள் என்பதை நாம் உணரவேண்டும். மேலும் இதற்காண ஒரே தீர்வான ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் நமக்கு விட்டுசென்ற முஸ்லிம்களின் கேடயமான கிலாஃபத்தின் மூலம் இஸ்லாத்தை நிலைநாட்டி முஸ்லிம்களின் ஒற்றுமையை ஒங்க செய்யவேண்டும்.

நம்முடைய பொறுப்புகள்

1. அல் சிசி, அமெரிக்கா மற்றும் ஏனைய மேற்கத்திய அரசியல் சூழ்ச்சிகளுக்கு துணை புரிந்து துரோகம் புரிவதை அம்பலப்படுத்த வேண்டும்

2. மனித உயிர்களுக்கு மதிப்பின்றி செயல்பட்ட சிசி ஆட்சியை தட்டிக்கேட்கவேண்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரி, தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தவேண்டும்

3. எகிப்து மற்றும் ஏனைய அரபு நாடுகளில் நடக்கும் நிகழ்வுகளை குறித்து முஸ்லிம்களுடன் கலந்துரையாட வேண்டும் . நபி (ஸல்) அவர்கள் காட்டி தந்த வழியில் நம்முடைய அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக அமைப்புகளை சீர் செய்யவேண்டும் என்று விளக்கவேண்டும்

4. எகிப்தில் உள்ள தைரியமுள்ள நம்முடைய சகோதர சகோதரிகளுக்காக நாமும் துஆ செய்து மற்றவர்களையும் துஆ செய்ய கூற வேண்டும் .

அன்றியும், நம்பிக்கை கொண்டவர்களை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான்; நயவஞ்சகர்களையும், அவன் நிச்சயமாக நன்கறிவான். [அல் குர்ஆன் 29:11]

எகிப்து தூதரகத்திற்கு வைக்க வேண்டிய கோரிக்கைகள்

1. முகம்மது முர்சி மற்றும் அவருடைய ஆதரவாளர்களை உடனடியாக விடுவிக்கவேண்டும்.

2. இராணுவ ஆட்சியை புறக்கணித்து அமெரிக்க சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும்.

3. கட்டுப்பாடற்ற ஜனநாயக ஆட்சிமுறையை புறக்கணித்து, இஸ்லாமிய அடிப்படையிலான கிலாஃபத்தை நிலைநாட்ட வேண்டும்.

Aug 23, 2013

யார் இந்த சிசி?


இது ஒரு 'தாகூதிய' செருப்பு பற்றிய அறிமுகம் .

இப்னு சலூல் தொடங்கி இப்னு சபாவை ஊடறுத்து முஸ்தபா கமால் வரை இந்த முஸ்லீம் உம்மா துரோகத்தின் வடிவங்களை நிறையவே கண்டு வந்துள்ளது .குப்ரிய 'தாகூத்' களோடு கூட்டுச் சேர்ந்து அந்த எதிரி காலில் செருப்பாய் மாறி' பாசிசம்' புரியும் சிரியாவின்' அசாத்' எகிப்தின் 'சிசி' என இந்த துரோக வரலாறு இரத்த தாகத்தோடு முஸ்லீம் உம்மத்தை துரத்துகின்றது .அந்த வகையில் எகிப்தில் முஸ்லீம் இரத்தம் குடிக்கும் ஒரு காட்டேரியை பற்றிய ஒரு பதிவை கீழே தருகிறேன் .

யார் இந்த சிசி? - Abdel Fattah Saeed Hussein Khalil el-Sisi. எகிப்தின் இராணுவ ஏதேச்சாதிகாரி. ரபா படுகொலைகளை புரிந்து வரலாற்றில் தனது பெயரையும் ஏரியல் ஷரோன், பொல்பொட்டின் வரிசையில் பதிந்தவன். 12 ஓகஸ்ட் 2012 முதல் எகிப்தின் இராணுவ தளபதியாகவும், ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரியாகவும், எகிப்தின் பாதுகாப்பு அமைச்சராகவும் ஒரே நேரத்தில் மூன்று அதிகாரமிக்க பதவியை வகித்தவன்.

General Command and Staff Course-னை ஐக்கிய இராச்சியத்திலும், War Course மற்றும் Basic Infantry Course-னை அமெரிக்க குடியரசிலும் கற்று தேறியவன். சவுதி அரேபிய இராணுவ அகடமியிலும் கூட்டு கற்கை நெறிகளை பூர்த்தி செய்தவன். Master's Degree in Military Sciences இலும் Fellowship of the High War College இலும் தனது உயர் கற்கை நெறிகளை எகிப்தில் முடித்தவன். மொத்தத்தில் ஒரு மேற்கின் இராணுவ ஜெனரலிற்கு இருக்கும் அனைத்து அறிவுகளும், நுட்பங்களும், பண்புகளும் இவனிற்கு உண்டு. Defense diplomat ஆக சவுதி அரேபிய குடியரசில் பணியாற்றிய காலமுதல் சவுதி யின் ரோயல் இராணுவ தளபதிகளிற்கும் இவனிற்கும் நல்ல நெருக்கம். அது போலவே அமெரிக்க கற்கை நெறிகளின் போது அதே கற்கை நெறியை பூர்த்தி செய்ய வந்திருந்த யூத இஸ்ரேலிய ஜெனரல்களுடனும் மிக நெருக்கமான தோழமை இவனிற்கு உண்டு .

இவனது தாய் பிறப்பில் யூத பெண்மனி. இவனது தாய் மாமன் இஸ்ரேலிய பாராளுமன்ற அங்கத்தவர். முஹம்மத் ஹுஸைன் தன்தாவியை பதவி விலகும் நிர்ப்பந்த நிலைக்கு தள்ள இஹ்வானிய சாணாக்கியம் எல்-சிசியை கைகளை விரித்து செயற்பட அனுமதித்தது. இப்போது இரண்டாம் நாஸராக அவர்கள் சிசியை பற்றி கட்டுரை எழுதும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பொதுவாக ஒரு தேசத்தில் ஒன்று பலத்த மக்கள் அதரவை கொண்ட தலைவன் இருப்பான். இல்லையென்றால் பலத்த இராணுவ மற்றும் முப்படை ஆதரவை கொண்ட தலைவன் இருப்பான். இதில் எது ஒன்றை கொண்டும் நிலையான அதிகாரத்தை செலுத்த முடியாது. இந்த இரண்டு சக்திகளும் இரண்டு கரங்களாக தொழிற்பட முனையுமானால் அவன் சர்வஅதிகாரம் மிக்க தலைவனாக உருவாவான். அடோல் ஹிட்லர் இவ்வாறே உருவானவன். பிடல் கஸ்ரோவும் இராணுவத்தையும் மக்களையும் தம் இரு கரங்களாக கொண்டவர். சாதம் ஹுஸைனும் மக்கள் இராணுவம் இரண்டையும் லாவகமான கையாளும் வித்தை தெரிந்தவர். இப்படி சில தேசங்களில் இரண்டு பலமிக்க சக்திகளையும் தம் வசம் கொண்டுள்ளவர்கள் தனித்துவமிக்க தலைவர்களாக உருவாகியுள்ளனர்.

பாகிஸ்தானின் பர்வேஸ் முஷாரப்பிற்கு இராணுவ பலம் இருந்த போதும் மக்கள் பலம் இருக்கவில்லை. அதனால் அவர் மண் கவ்வினார். மொஹமட் முர்ஸியிடம் மக்கள் பலம் இருந்த அளவிற்கு இராணுவ பலம் இருக்கவில்லை. அதனை கையாளும் வியூகங்களும் தெரியவில்லை. இதனை ஜெனரல் சிசி நன்குணர்ந்துள்ளான். அதனாலேயே அவன் இராணுவத்தில் தன் நிலையை வலுப்படுத்திய பின் மிலிட்டரி கூவை ஆரம்பித்தான். அப்போதும் கூட அவனிற்கு மக்கள் பலம் பற்றிய சந்தேகம் இருந்தது.

மதச்சார்பற்றவர்கள், மேற்கத்தைய மோகமிக்க சடவாதிகள், இஸ்லாமியவாத எதிர்ப்பாளர்கள், கொப்ஸ்டிக் கிறிஸ்தவர்கள் என பல தரத்தவரையும் ஒன்று திரட்டி சவுதி அரேபியா வழங்கிய பணத்தை தண்ணீரை இறைந்து, ஒரு பெரிய மக்கள் ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணையத்தான். இந்த இஹ்வானிய அரசிற்கு எதிரான ஆர்ப்பாட்டம் இஸ்ரேலிய ஸியோனிஸ்ட்களால் மிகவும் கவனமாக திட்டமிடப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த இரண்டும் தன் வசம் வந்த நிலையிலேயே அவன் ரபாவின் படுகொலைகளை மேற்கொண்டான். அவனது கொலை வெறிச்செயலை இரு புனித நகரங்களின் காவலர் என தன்னை புகழ்ந்து கொள்ளும் சவுதி அரேபிய தேசத்து அரசரே ஆதரிக்கும் அளவிற்கு அவனது அரசியல் செயற்பாடுகள் அகன்றுள்ளன.

தன்னை ஒரு சிறந்த மனிதாபிமானமிக்க, தராள பொருளாதார கொள்கைவாதியாகவும் இவன் காட்டிக்கொள்ள தவறிவில்லை. தன்னை ஒரு லிபரல் தலைவனாக இவன் எப்போதும் வெளிக்காட்டி வந்துள்ளான். இவன் பேஸ்-புக்கில் ( https://www.facebook.com/Egyptian.Defense.Minister ) இதற்காக மிக சிரத்தையுடன் பல பதிவுகளை வெளியிட்டு வெற்றிகரமாக மக்களை தன் கருத்துக்கள் சென்றடையும் வண்ணம் செயற்பட்டுள்ளான். இன்று இன்னொரு நாஸர்பாதி, கமால் பாஷா பாதி கலந்து செய்த கலவையாக ஆளவந்தான் சிசி உருவாகியுள்ளான்.

http://khandaqkalam.blogspot.ae/2013/08/blog-post_23.html?spref=fb