Jan 12, 2013

மேற்கின் தலையில் இடிவிழும் வார்த்தை ' கிலாபாவின் மீள் உதயம் '.

"அரேபிய சாம்ராஜ்யத்தில் முஸ்லீம்கள் ஓன்று பட்டு விட்டால் ,அவர்கள் உலகுக்கு ஆபத்தாகவும் 
சாபமாகவும் மாறலாம் .அல்லது அருட் கொடையாகவும் மாறலாம் .என்றாலும் ,அவர்கள் பிரிந்து காணப் 
பட்டர்களானால், எந்தவொரு பெறுமானமும் தாக்கமும் அற்றவர்களாகவே இருப்பார் "
- லோரென்ஸ் பிரேவின் -
( ஒரு மேற்கத்தேய சிந்தனையாளர் )

'(கிலாபா வடிவில் )இஸ்லாத்தின் தலைமையகமாக இருந்து உலகினை ஆட்டிப் படைத்த துருக்கி இப்பொழுது ஒரு சாதாரண பால்கன் நாடாக வீழ்ந்து விட்டது '.
- தி டைம்ஸ் நாளிதழ் (1924 மார்ச் 07) -

மேலே தந்த கருத்துக்களில் முதலாவது இஸ்லாமிய 'கிலாபத்தின் ' வீழ்ச்சிக்கு சற்று முன்னும், இரண்டாவது செய்தி 'கிலாபத்' வீழ்த்தப்பட்ட சூட்டின் சுகத்தோடும் வெளிவந்தவைகள் .
அன்றிலிருந்து இன்று வரை இந்த சாபக்கேட்டு அரசியலில் முஸ்லீம் சமூகம் ஒரு தூய நாகரீகம் படைத்த சமூகம் ;என்ற வரலாற்று உண்மை ஏட்டளவில் இருக்க , பின்தங்கிய தங்கி வாழும் சமூகமாகவே உதாரணப்படுத்தப் படுகின்றது .
உலகத்தையே ஆட்டிப் படைக்கக் கூடிய ஏறி சக்தி வளத்தின்
சொந்தக்காரர்கள் யார் ? என்ற வினா தொடுக்கப் பட்டால் முஸ்லீம் உலகம் தான் என்ற பெயரளவு
பெறுமானம் எஞ்சியிருக்க ' செக்கு மாட்டுத் தத்துவத்தில் ' புண்ணாக்கு மாட்டுக்கு எண்ணை எனக்கு
என வளச் சுரண்டலில் மேற்கின் முதலாளித்துவ அதிகாரமே அரபுலகில் மேலோங்கி உள்ளது .
அரபுலகை இந்த முதலாளித்துவம் மட்டுமல்ல காலனித்துவம் ,நவ காலனித்துவ பொம்மையாட்சி என்ற அரசியலில் 'கம்பியுனிசம் ' எனும் இன்னொரு போலிக் கொள்கையும் தமக்குள் மோதலோடு இந்த வளப் பிடுங்களில் பங்குபோட்டு சுரண்டியது .
இந்த பிரித்தாளும் விதிக்குள் முஸ்லீம் உலகை மன்னராட்சி தேசியவாதம் , மதச்சார்பின்மை , ஜனநாயகம் ,இஸ்லாமிய சோஷலிசம் , பசுமைப் புரட்சி ....போன்ற மாயைக்குள் முடக்கி வைத்திருந்தது. 'கம்பியுனிசத்தின்' வீழ்ச்சியின் பின்னர் தனிக்காட்டு ராஜாவாக
முதலாளித்துவம் தனது அனுபவிப்புகளை பெருக்க முயன்றது .
கம்பியுனிச அடிவருடி அதிகாரங்களை அழித்தல் , வளைத்தல் ,
தமது விசுவாசிகளாக்குதல் ,என்ற கோட்பாட்டின் கீழ் அமுல் நடத்தப் பட்டதே ' அரேபிய வசந்தம் ' எனும்
'ஜெஸ்மின் புரட்சி' ! இந்த 'அஜெண்டாவில் ' ஒரு அங்கமே சிரிய விவகாரம் ஆகும் .
ஆனால் இவர்கள் தமது தேவைக்கு தோண்டிய கிணறில் இருந்து அவர்கள் எதிர்பார்க்காத அவர்கள் அஞ்சி நடுங்கிய பூதம் கிளம்பியது அதுதான் இஸ்லாம் !
வழமையான' திமோசிரசி ' மெஜிக்கில் ' பிரச்சினையை அமுக்கி விடலாம் என்ற ஆரம்ப எதிர்பார்ப்புகள்
C . I .A பாணியில் பெண்டகன் திட்டமிட இந்த மரங் கொத்திகளுக்கு வாழை மரங்களே அங்கு காத்திருந்தன .
இப்போது நிலமை என்னவென்றால் 'பசர் அல் அசாத் ' பரவாயில்லை என்ற மனோ நிலைக்கு மேற்குலகு வந்துள்ளதா ? என்ற சந்தேகம் ஏற்படும் நகர்வுகளே அந்த விவகாரத்தில் தெரிகின்றது . U .N (சினிமாக் கம்பனியின் ) சிறப்புத் தூதுவர் காட்டுமிராண்டி 'பசர் அல் அசாத்தை ' சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தி விட்டு வந்துள்ளார் . சில வேலை' பசர் அல் அசாத்துக்கு ' மறைமுக உதவியும் வழங்கப் படலாம் ஏனென்றால் அமெரிக்கா ,ரஷ்யாவுடன் கூட்டுச் சேர்ந்து சிரிய விவகாரத்தை கவனிப்பது என்ற முடிவிற்கும் வந்துள்ளது .

மேலும் NATO வைப் போட்டு ஒரு 'பொலிடிகல்' மாற்றத்துக்கான இராணுவ நடவடிக்கையை மேற்கொள்வதா ? இப்படி பல்வேறு சிக்கல்களை மேற்கு இவ்விடயத்தில் எதிர்
கொண்டுள்ளது .சிரியக் களம் அமர்க்களமாக நகர்கின்றது .எமது 'துவாக்களால் ' இஸ்லாத்தின் மறுமலர்ச்சிக்காக பலமான பிரார்த்தனைகள் இப்போது அவசியமானது . அது இந்த உலகின் சேவைக்காக
கிலாபா அரசு நாளைய செய்தியாய் தலைப்புச் செய்தியாகுமா ? மேற்கின் முதலாளித்துவ முதலைகளின்
தலையில் இடி விழும் அந்த சுப செய்தியை முஸ்லீம் உலகு ஆவலோடு எதிர்பார்க்கின்றது .

அராபிய வசந்தமும் 'ஷாமில்' வைக்கப் பட்ட ஆப்பும் .சிரியா விவகாரத்தில் மீடியாக்களின் திடீர் மௌன மொழி ஏன் ? ஒரு பார்வை.

எனக்கு நிணைவு தெரிந்த நாளில் இருந்து அநீதமான இரத்த வரலாற்றை நியாயச் சாயத்தில் 
மையிட்ட பேனாக்கள் தந்த மீடியா வரிகளில் உலகம் பயங்கர வாத முத்திரையை இஸ்லாத்தின் மீது
பதித்து முற்றாக சுருங்கித்தான் போனது .

பாலஸ்தீன வரலாறு சியோனிசத் திரைகளில் இஸ்ரேலிய நியாயங்களில் மானபங்கம்செய்யப்பட்டது .
காஸ்மீரில் இரத்த வரிகளில் எழுதப்படும் கண்ணீர் கதை இந்திய தேசியத்தின் சுத்த வரிகளில் தீவிர வாதமாக நியாயக் கதை பேசியது .

ஆப்கானின் அற்புத வரலாறு முதலாளித்துவ அன்பளிப்பில் அமெரிக்க சேலை கட்டி' R A M B O'பார்ட் 3
ஆக திரையிடப்பட ,"கடாபிசம் " பசுமைப் புரட்சியாக வசந்த காலம் பேச , "பாத் " சோசலிசத்தின் தேசிய நிழலின் கீழ் மக்களை அழைத்து 'சதாம் ' சிங்கமாக கர்ஜித்தார் .

அந்த சாக்கடைகள் சந்தனமாக்கப் பட்டு இந்த முஸ்லீம் உம்மத்தின்மீதும் பலாத்காரமாக தெளிக்கப் பட்டது .கருத்தியல் போராட்டங்கள் கொதிக்கும் உணர்வுகளால் அவசரமாக் மீறப்பட தற்காப்பு வேலிக்குள் மட்டுமே 'ஜிஹாத் ' முடக்கப் பட்டு முன்னெடுக்கப் பட்டது .

எதிரிக்கு எதிரி நண்பன் தத்துவம் ஏகமனதாக இந்த உம்மத்தால் ஜீரனிக்கப் பட பேயை விரட்ட பிசாசோடு கூட்டுச் சேரும் கைக்கூலித்தனம் காலத்தின் தேவையாகியது !சத்துரு தோழனாகி எம் நிலங்களில் 'டென்ட் 'அடித்தது. வியாதியையே முஸ்லீம் உம்மத் மருந்தாக்கியது .

வியாபித்த வைரசோடு விடுதலைக்கு வழிதேட, அரேபிய வசந்தத்தை அந்த 'தாகூதே' தந்தான். அதில்
'திமோகிரசி ' ஒரே தீர்வாக்கப்பட இஸ்லாம் அங்கு சமாளிப்பாக ஒரு பூசுபொருளாகியது ! அது தான்
நவ காலனித்துவத்தின் மூன்றாம் பாகம் .

சுரண்டல் தத்துவத்தின் இலாப அறுவடை அமோகமாக நடக்க திட்டமிட்ட பாலில் பழங்களும் வீழ்ந்தன .தேசியவாதமும் , மதச் சார்பின்மையும் மார்க்க நியாயத்தில் மக்கள் மயமாகியது. அதில் இறைவனின் மார்க்கம் முன்னுரிமை அங்கமாம் !!!

'ஷாமிலும் ' கனியும் என முதலாளித்துவம் காத்திருக்க , அங்கு வெள்ளை எழுத்துக்களில் கருப்படித்த அந்த கொடிகள், இவர்களை அச்சப்படுத்தி சுயநல வரலாற்றின் நாளைய முற்றுப்புள்ளியை அதிர்ச்சி கரமாக முன்னறிவிப்பு செய்தது .இன்று மீடியாக்களின் திடீர் மௌன மொழிகளில் அந்த ஆப்பு அப்பட்டமாக தெரிகின்றது . உங்களுக்கும் புரிகின்றதா ?

இதுதான் இஸ்லாத்தின் அகீதா வேலி இட்ட சமூகம் .

அந்த சஹாபிப் பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) அவர்களின் சபைக்கு வந்து தான் விபச்சாரம் செய்துவிட்டேன் அதற்கான தண்டனையை தருமாறு கேட்கிறாள் ! இவ்வளவிற்கும் அவள் திருமணமானவள் . இஸ்லாத்தின் தண்டனை அதற்கு மரண தண்டனை ; அதுவும் பகிரங்கமாக கல்லால் 
அடித்துக் கொலை செய்ய வேண்டும் . அந்தப் பெண்மணி கர்ப்பம் தரித்து வேறு இருக்கிறாள் .
அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) விடயத்தை உறுதிப்படுத்திய நிலையில்
அந்தப் பெண் கருத்தரித்திருந்த காரணத்தினால் , குழந்தை பிறந்தவுடன் தண்டனை நிறைவேற்றப்படும் ;
என்று கூறி அனுப்பி விடுகிறார் . சில நேரம் யாரும் அறியாமல் சாட்சிகள் அற்ற நிலையில் செய்யப்பட்ட தவறு இந்த இடைப்பட்ட காலத்தில் கூட தனது நிலைப்பாட்டை மாற்றியிருக்கலாம் .
ஆனால் அந்தப் பெண்மணி குழந்தையை பெற்றெடுத்து ,அந்த கைக் குழந்தையை சுமந்தவளாக தனக்கான தண்டனையை வேண்டி மீண்டும் வருகிறாள் ! குழந்தை பால்குடி மறக்க வேண்டும் என மீண்டும் கால அவகாசம் கொடுக்கப்படுகின்றது . தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது .ஆனால் அந்தப் பெண்மணி சில கால நகர்வின் பின் மீண்டும் தனது குழந்தையின் கையில் ஒரு ரொட்டித் துண்டை கொடுத்தவளாக தண்டனையை வேண்டி விரைகிறாள் .
இறை திருப்திக்காய் தன்னை தண்டனை எனும் மரணத்தின் மூலம் தூய்மை படுத்த வேண்டும் ,இந்த ஒரே எதிர்பார்ப்பின் முன் அவளின் உலக வாழ்வு அவளுக்கு சுமையாகி மரணம் சுகமாகியது . குற்றவாளி தானே முன்வந்து கேட்டுப் பெற துடித்த தண்டனை ! ஒரு சமூகம் எப்படி இருக்க
வேண்டும் என்ற பண்பிற்கு ஒரு பெண்மணி எடுத்துக் காட்டாய் ஆகிறாள் . அந்த சமூகத்தின் நிலை உணர்த்த இது ஒரு உதாரணம் .ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் . அந்தப் பிள்ளையை ஒருவர் பொறுப்பெடுக்கிறார் . தண்டனையும் நிறைவேற்றப் படுகின்றது . கற்கள் சிதைக்கும் மண்டையோட்டில் இருந்து சீறிப் பாய்கின்றது இரத்தம் . இதுதான் இஸ்லாத்தின் அகீதா வேலி இட்ட சமூகம் .

ஒரு வினா விடை தேடுகிறது

அரேபிய வசந்தத்தில் மேற்கின் சதித்தனம் தெரிகின்றது என குற்றம் சாட்டும் நீங்கள் அதற்கான ஆதாரத்தை தர முடியுமா ? எனும் வினா என்னிடம் தொடுக்கப் பட்டது . அதற்கான விடையை சுருக்கமாக தருகின்றேன் . முஸ்லீம் உம்மத்தின் இயல்பான இஸ்லாத்தின் தேடல்களை நான் இங்கு குறை கூற வரவில்லை .ஆனால் அதன் வழிகாட்டிகள் மேற்கின் பெருமானத்தால் இஸ்லாத்தை வரைவிலக்கணப் படுத்திய சிந்தனைத் தரத்தில் தான் இருக்கின்றார்கள் . 

என்னுடைய கருத்து பலமான விமர்சனத்துக்கு உட்படும் என்பது திண்ணம் .ஆனால் நான் இன்னும் ஆப்கானின் நிகழ்வுகளை மறக்கவில்லை . ஆனால் அதே நேரத்தில் சிரிய விவகாரத்தை நான் விதி விலக்காக பார்க்கின்றேன் . காரணம் அதன் அழைப்பில் இஸ்லாமிய அரசியலும் . ஆதாரத்தில் தெளிவான முன்னறிவிப்புகளையும் கொண்டது . சரி இனி அந்த கேள்விக்கான பதில் இதுதான் .

அரேபிய வசந்தத்தில் மேற்கின் சதித்தனம் தெரிகின்றது. கரணங்கள் இதுதான் .

1.அராபிய புரட்சியின் ஆரம்ப கட்டத்தில் இருந்தே மேற்குலகு அதற்கான பகிரங்க அங்கீகாரத்தை வழங்கி இருந்தது .
2.புரட்சி நடந்த அனைத்து பகுதிகளும் கம்பியுனிசசார்பு ஆட்சி நிலவிய பகுதிகள் .
3.துருக்கி மொடேர்ன் (ஜனநாயகம் + மதச் சார்பின்மை கொண்ட )இஸ்லாமிய அரசாக எடுத்துக் காட்டப் பட்டது .
4. இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரித்த இஸ்லாமிய தேசியங்கள் எனும் சிந்தனை நடைமுறை அரசியலாக்கப் பட்டுள்ளது .
5. கிலாபா அரசு ஒரு நடைமுறை சாத்தியமற்ற வாதம் எனும் கருத்தியலை இஸ்லாமிய இயக்கங்களே (ஜனநாயகத்தை) சாத்தியமாக்கி பேசுகின்றன .
6. மக்களின் இயல்பான போராட்ட உணர்வு தேசிய அபிலாசைகள் உள்ளடங்கிய இஸ்லாமிய 'சரியா' எனும் சாத்தியப்பாடு கொண்டதாக மட்டுப்படுத்தப் பட்டுள்ளது .
7. அராபிய புரட்சியின் வன்முறை சார் பகுதிகளில் புரட்சிப் படைகளுக்கு ஆதரவாக வான்வழி உதவித் தாக்குதல்கள் N A T O நடாத்தியமை பகிரங்க உண்மை ( உதாரணம் லிபியா ).

சம்பவங்களின் வடிவத்தை வைத்து மட்டுமே சதிகளை உணர்ந்து கொள்ள முடியும் . பகிரங்க ஆதாரங்களை வைத்து சதிகள் செய்யப்படுவதில்லை . ஆனாலும் எதேச்சையான ஆதாரமே புரட்சிப் படைகளுக்கு ஆதரவாக வான்வழி உதவித் தாக்குதல்கள் N A T O நடாத்தியமை பகிரங்க உண்மை ( உதாரணம் லிபியா )

சிரியாவில் இஸ்லாமிய மக்கள் படைக்கெதிராக களமிறங்கியுள்ளது 'ஹிஸ்புத் தாகூத் '.



சூடு பிடித்துள்ள சிரியக் களத்தில் இன்றைய நிலையில் முஸ்லீம் உம்மத் உணர்ந்து கொள்ளவேண்டிய இரகசிய சதி முகங்கள் தங்களை அம்பலப் படுத்த தொடங்கியுள்ளன .' டமஸ்கஸ் ' விமான நிலையத்தை கைப்பற்றும் கடுமையான சமரில் இஸ்லாமிய மக்கள் இராணுவம்
ஈடுபட்டுள்ளது. பாதுகாப்பு காரணம் கருதி விமான நிலையத்தை மூடியதாக 'தாகூத்திய ' அரசு அறிவித்தாலும் , சமர் இஸ்லாமிய மக்கள் இராணுவத்திற்கு சாதகமாகிய நிலையை மறைக்கவே இந்த தகவல் வெளிப்படுத்தப் பட்டுள்ளது .

மேலும் மேற்கின் மீடியாக்கள் இன்னும் சில போலித் தகவல்களை
அடுக்கடுக்காக வெளியிட்டுக் கொண்டுள்ளது ; அது இஸ்லாமிய மக்கள் இராணுவத்தின் வசமாகிய சில
பகுதிகளை அசாத் படை மீண்டும் கைப்பற்றியுள்ளது எனும் பொய்யான தகவலே அதுவாகும் . இது எதிர்பார்ப்போடு இருக்கும் முஸ்லீம் உம்மத்தை திசை திருப்பும் ஒரு நடவடிக்கையாகும் . சரி அப்படியானால் 'டமஸ்கஸ்' விமான நிலையத்தை சுற்றி நடக்கும் சமர் யாரின் கை ஓங்கியுள்ளது என்பதை எடுத்துக் காட்டும் ஒரு ஆதாரமில்லையா ? எனும் வினா இங்கு எழுகின்றது .

ஆனால் இங்கு இன்னோர் அரசியல் மிக நுணுக்கமாக உள் நுழைந்துள்ளது .
அது ஈரானின் ஷியா அரசியல் . இஸ்ரேலுக்கெதிரான தனிப்பெரும் எதிர்சக்தியாக படம் காட்டப் பட்ட
இந்த 'அப்துல்லாஹ் இப்னு சபா ' எனும் சதி நாசகாரியின் சந்ததி, நேற்று லெபனானை மையம் கொண்டு
'ஹிஸ்புல்லாஹ்' எனும் பெயரில் இஸ்ரேலை பெயருக்கு சமர் கண்டது . அது ஈரானிய ' சபாயிசத்துக்கு ' சார்பான கண்துடைப்பு போர் தான் என்பதை இன்று நிரூபிக்கும் தகவலாக அதன் சிரியாவின் உள்நுழைவு உள்ளது .

இந்த 'ஹிஸ்புல்லாக்கள் ' (தம்மை' ஹிஸ்புத் தாகூத் ' எனும் பெயர் மாற்றம்
செய்யாமல் ) அசாத் பயங்கர வாதத்துக்கு சார்பாக, இஸ்லாமிய மக்கள் இராணுவத்திற்கு எதிராக களமிறங்கியுள்ளது .இந்த அசாத் உண்மையில் 'அளவி ஷியா' பிரிவை சார்ந்தவன் . மேலும் ஈரானோடு
நெருங்கிய உறவும் கொண்டவன் என்பது பகிரங்க உண்மை . மேலும் ஈரானின் அரசியல் நோக்கங்களுக்காக பயன் படுத்தப்படும் இரகசிய' பிரிகேட் ' 'ஹிஸ்புல்லாஹ் ' என்பதும் அது இஸ்ரேலுக்கெதிராக மட்டும் போராடும் அமைப்பல்ல என்பதும் இப்போது வெளிப்படை உண்மையாகியுள்ளது .

மேலும் ஈரானின் அரசியல் உருவம் மேற்கின் எதிர்பர்ப்பிட்கு அமைய ஒரு எதிர் சக்தியாக தன்னை இனம் காட்டுவதே . இங்கு 'ஷியா ' இசத்தை காட்டி சுன்னிகளோடு சார்புத்தாளம்
முதலாளித்துவத்தால் செய்யமுடியும் .அரசியல் பொருளாதார ரீதியில் கொழுத்த இலாப அறுவடையையும் செய்ய முடியும் .இதைத்தான் மேற்கு இதுவரை செய்து வந்துள்ளது . இந்த சர்வதேச
சதிகளுக்கெல்லாம் ஆப்பு வைக்கும் அத்திவரமாகவே சிரிய களம் மாறியுள்ளது .

இஸ்லாமிய கிலாபா அரசு தோற்றம் பெற்றால் அது யூத ,கிறிஸ்தவ அநியாக்காரர்களுக்கு மட்டுமல்ல , அவர்களின் இரகசிய படைப்பான 'ஷியாக்களுக்கும் ' கூட பலத்த அடியாகி விடும் . எனவேதான் சத்தியத்தை கொச்சைப்படுத்தும் இந்த சதி முகங்கள், தமக்குள்
எழுதப்படாத ஒரு உடன்பாட்டுடன் சிரியாவில் களமாடத் துணிந்துள்ளனர் என்றால் அது மிகையான கருத்தல்ல .

2013 முதல் நேட்டோவின் இராணுவ பங்காளியாக இஸ்ரேல் .

ஜெரூஸலம் போஸ்ட்டின் தலைப்பு செய்தியே இன்று உலக செய்தியாக மாறியுள்ளது. கைபரை கைப்பற்றிய் சந்தோஷம் போல யூத உடகங்கள் கடந்த சில நாட்களாக ஆர்ப்பரிக்கின்றன. என்ன அந்த செய்தி?. “2013ம் ஆண்டு முதல் இஸ்ரேல் நேட்டோவின் கண்காணிப்பு, பாதுகாப்பு மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடலாம்” என நேட்டோ அங்கீகாரம் வழங்கிய செய்தியே அது. யூத பூதத்தின் ஸியோனிஸ வெறிப்பற்களை இப்போது ஆழமாகவும் அகலமாகவும் பதிக்கலாம். முழு மத்திய கிழக்கிலும். மத்திய ஆசியாவிலும். வட ஆபிரிக்காவிலும். எவ்வளவு சந்தோஷகரமான செய்தி இது. யூத லொபிகள் நியூயோர்க்கில் சந்தோஷ நடனம் ஆடுவது இதனால் தான். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அவர்கள் முதலீடு செய்ததற்கான இலாபம் இப்போது அவர்களிற்கு பங்கிடப்பட்டுள்ளது.

இந்த செய்தி இன்னொரு தேசத்திற்கு கசப்பானது. வெறுப்பானது. யாருக்கு?. துருக்கி இதனை கவலையுடன் பார்க்கிறது. நேட்டோவின் இன்னொரு பங்காளி தேசம். உலக முஸ்லிம்களின் கோட்பாதராக தன்னை பரிணாமப்படுத்தி வரும் இந்த வேளையில் இப்படியொரு இடி இறங்கியிருக்கிறது துருக்கிக்கு. சிரியாவில் இஸ்ரேலை முந்திக்கொண்டு ஆட்சி மாற்றத்தை தான் விரும்பியவாறு ஏற்படுத்த அனைத்து பிரயத்னங்களும் இந்த அறிவிப்பால் மண்கவ்வியுள்ளன.

நேட்டோவின் இன்னொரு அங்கத்தவ தேசமான துருக்கி இஸ்ரேலின் இராணுவ பிரசன்னம் நேட்டோவில் உருவாகியுள்ளதை நேரடியாகவே விமர்சனம் செய்துள்ளது. ஆனால் நேட்டோவின் மத்திய குழு துருக்கியை உறுப்பு நாடு என்ற வகையில் இஸ்ரேலுடன் நெகிழ்ச்சிப்போக்கு அரசியலை மேற்கொள்ளுமாறும், அதுவே நேட்டோவின் பலம் என்றும், முரண்பட்ட செயற்பாடுகள், வெளிப்பாடுகளினால் நேட்டோவின் பலம் பலவீனப்பட்டு விடல் கூடாது என்று எச்சரி்க்கை கலந்த வார்த்தைகள் அடங்கிய தூதினை அங்காராவிற்கு அனுப்பியுள்ளது. இப்போது துருக்கிக்கு நேட்டோவா? அல்லது வெளியேறுவதா? என்ற சத்திய சோதனை காலம். இதில் எந்த முடிவை நோக்கியும் துருக்கி செல்லலாம். சில வேளைகளில் கேம்ப் டேவிட்டில் எகிப்து அடித்த பல்டி போல ஒரு அந்தர் பல்டியை அடித்து நேட்டோவின் கட்டளைக்கு அடிபணியலாம். தாகூத்திய அரசியல் இதையெல்லாம் அனுமதிக்கும்.

இஸ்ரேல் நேட்டோவின் பங்காளியாக இருந்தாலும் இதுவரை காலமும் பயிற்ச்சிகள், ஒத்திகைகள், செமினார்கள், திட்டமிடல் வகுப்புக்கள் போன்ற அமர்வுகளிளேயே பங்கு பற்றியுள்ளது. 2013 முதல் இஸ்ரேல் நேட்டோவின் களங்களிற்கு தனது இராணுவத்தை அனுப்புவது என்பது பாரிய அரசியல் நெருக்கடிகளை ஏற்படுத்தவல்லது. அமெரிக்காவின் நண்பர்களான சவுதி, குவைத், பஹ்ரைன், கட்டார், இஹ்வான்கள் என யாரும் இதனை எதிர்க்கவில்லை. மௌனம் சம்மதம் என்பது போல் எதுவும் தெரியாதது போல் இருக்கின்றனர்.

யூத இராணுவ பூட்ஸ்கள் முஸ்லிம் தேசங்களின் வேலிகளின் ஓரம் நடைபயிலும் காலம் வெகு தூரத்தில் இல்லை. ஐ.நா.வின் அங்கீகாரத்துடன் அமைதி காக்கும் படை என்ற பெயரில் இதனை அது செய்து முடிக்கும். மனிதாபிமான இராணுவ உதவிகள் என்ற பெயரில் இதனை அது செய்து முடிக்கும். அகண்ட யூத சாம்ராஜ்யத்திற்கான நகர்வுகளும், நவசிலுவை போரின் நகர்வுகளும் சமகாலத்தில் ஆரம்பமாகியுள்ளன. உலக அரசியலை பற்றிய நீண்ட கால தீர்மானிக்கப்பட்ட திட்டத்தின் ஒரு கட்டமே நேட்டோவில் இந்த இஸ்ரேலிய இராணுவ பிரசன்னம்.

நேட்டோவின் 28 நாடுகளும் வீட்டோ பவரை கொண்டுள்ளன. துருக்கிக்கு பற்றியட் ஏவுகணைகளை வழங்கிய அதே நேரம் இஸ்ரேலை நேட்டோவின் இராணுவ நாடாக அங்கீகரித்து அதிகாரமளித்த வேளையை அமெரிக்கா அழகாக செய்து முடித்துள்ளது. நக்குண்டார் நாவிழந்தார் என்ற தமிழ் பழமொழி துருக்கிக்கும் பொருந்தும் போலும்.

நேட்டோவின் பேச்சாளர் இது பற்றி குறிப்பிடுகையில் “மத்திய கிழக்கின் இரு பலமிக்க இராணுவங்கள் தேசங்கள் எம்முடன் இணைந்துள்ளன. இஸ்ரேலுடன் எமக்கு பல இராணுவ உறவுகள் உள்ளன. இதன் மூலம் அது மேலும் மேன்படும். எதிர் பயங்கரவாத தாக்குதல் முறைமை, சைபர் தாக்குதல் முறைமை, ஏவுகணை தொழில்நுட்ப விருத்தியும் தாக்குதல் முறைமையும் என பல பயன்பாடுகள் நேட்டோவை வலுப்படுத்தும். துருக்கி இதனை புரிந்து கொண்டுள்ளது என்று நம்புகிறோம். இஸ்ரேலுடன் தெளிவான உறவினை ஏற்படுத்தவதன் மூலம் துருக்கி தன்னை மேலும் பலப்படுத்திக்கொள்ளும்” என்றார்.

Matthew Mark Horn. “இஸ்ரேல் நேட்டோ திட்டத்திற்கான” பொருப்பாளர். பென்டகனின் முன்னாள் அதிகாரி. யூத காங்கிரஸினால் நிதியுதவி அளிக்கப்பட்டே இந்த திட்டம் செயற்படுத்தப்பட்டது. (இஸ்ரேலை முழு அளவிலான செயற்பாடுடைய நாடாக நேட்டோவினுள் உருவாக்கல்) அது இப்போது அவர்களிற்கு வெற்றியளித்துள்து. நீண்டகால ஸியோனிஸ கனவுகளை இந்த வாய்ப்பின் ஊடாக தங்களால் அடைந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை அவர்களிற்கு. மத்தியூவ் ஹோர்ன் இது பற்றி குறிப்பிடுகையில் நான் எனது அசைன்மென்டை வெற்றிகரமாக முடித்து விட்டேன். அடுத்த கட்டம் இஸ்ரேலிய அரசியல் தலைவர்கள் கைகளில் இருக்கிறது. அவர்கள் நேட்டோவி்ன் தலைமையை கைப்பற்றுவதன் ஊடாக தங்கள் கனவுகளை நனவாக்க முடியும் என்று கூறியுள்ளார்.!!

தியேட்டர் ஹெஸலின் இஸ்ரேலை உருவாக்கிய திட்டத்திற்கு அடுத்த தரத்தில் மத்தியூவ் மார்க் ஹோர்னின் செயற்பாடுகள் அமைந்துள்ளதாக சர்வதேச ஸியோன் மையம் ஆர்ஜன்டீனாவில் பிரகடனம் செய்துள்ளது. டெல்அவிவே முஸ்லிம் தேசங்களை நோக்கி திட்டமிடுகிறது என்று ஊற்று நோக்கிய எம்மை அதற்கும் அப்பால் பல திட்டமிடல்கள் உள்ளன என்பதனை இந்த நிகழ்வுகள் உணர்த்தி நிற்கின்றன.

தூதர் (ஸல் ) வழியில் பதில் சொல்வோம்

காலனித்துவ வேலிக்குள் அசத்திய அணிவகுப்பில் 
சகோதரத்துவம் தொலைத்து 'ஜாஹிலீயத்துக்கு '
'சல்யூட் ' அடிக்க யகூதி கற்றுத் தந்தான் அந்த
அவமானத்தை பலமாக்கி தேசிய சகதிக்குள் 
இஸ்லாம் தொலைத்து வாழ்க்கையோட்டினோம் !

உலகத்தை நேசிக்கும் அந்த இனிப்பான நஞ்சில் 
தியாகத்தை கசப்பாக்கி மரணத்தை அச்சம் சுமக்க 
கோழைத்தனம் புது வரவாகி கொள்கைத் தனம்
இருட்டுப் பாதையில் குருட்டுப் பயணிகளாக
கோமா நிலையில் அடங்கியே போனது .

தொடர்ந்தும் அந்த சாபத்தின் சந்ததி ஆடம்பர முதலிட்டு
பழிவாங்கும் சந்தையில் எமது வீரத்தை விலைபேசி
அந்த பலவீனத்தில் இரத்த விளையாட்டை
இந்த உம்மத்தின் மீது இயல்பாக்கினான் அதன் பின்
உலகமே அத்துமீறி ஆனந்தம் கண்டது .

கசப்பான இந்த அநீத வரலாற்றின் முற்றுப்புள்ளிக்கு
சத்தியத்தின் மொழியில் இன்னும் ஓர் தொடர்கதை
ஒரே தலைமையில் மட்டுமே சாத்தியமானது .
பிரிவினைகளில் பிரித்து மேய்ந்த யூதக் கூட்டுக்கு
ஓர் அணி நின்று தூதர் (ஸல் ) வழியில் பதில் சொல்வோம் .

' அஷ்ஷாம் ' சத்தியத்தின் மீள் வரவிற்காய் இரத்தத்தால் கழுவப்படும் தியாக நிலம்

கெரில்லா போரியல்யுக்திகளை தாண்டிய மரபுப் போரியலை உதாரணப்படுத்தும் களமாகவே இன்று சிரியா அமைந்துள்ளது . ஆணவமான ஒரு அரச பயங்கர வாதத்தை எதிர்த்ததோடு மட்டுமல்லாமல் இஸ்லாம் தங்களை ஆளவேண்டும் என்ற மக்களின் நியாயமான எதிர்பார்ப்பை தடுத்தல் ,அழித்தல் , தவிடு பொடியாக்கள், என்ற தெளிவான முடிவோடு தாகூதிய அதிகாரம் இங்கு களமிறங்கியது .


இழப்புக்களால் அந்த தூய போராட்டம் சோர்ந்து போய்விடவில்லை . அல்லாஹ்வின் உதவியும் அந்த இலட்சியச் சமரில் இரண்டறக் கலந்தது . சிரிய இராணுவக் கட்டமைப்பின் பலம் மிக்க
படைப்பிரிவுகள் அதன்' ஜெனரல் ' தரத்தில் உள்ள அதிகாரிகள் , மற்றும் ஆயுத தளபாடங்கள் சகிதம் ஆரம்பத்திலேயே மக்கள் தரப்புடன் சத்தியத்தின் காவலர்களாக களமிறங்கினர் . விளைவு அரச யுத்த இயந்திரம் சாவகாசமான தனது மக்கள் அழிப்பு நிலையை மீறி தற்காப்பு நிலையெடுத்து பின்வாங்கியது .

மக்கள் புரட்சிக்கு ஆதரவான இந்த திருப்பம் முஸ்லீம் உலகு எதிர்கொண்ட பல புரட்சிகள், களமாடல்களுடன் ஒப்பிடும் போது விரைவான ,அதே நேரம் தெளிவான தள மாற்ற வடிவத்தை பெற்றுத் தந்தது . ஏனெனில் ஒரு பலம் மிக்க மரபுப் படையணிக்கு எதிராக இன்னொரு தகுதி வாய்ந்த மரபுச் சமரணி களமாடல் என்பது குறுகிய கால உள்நாட்டு யுத்தத்தில் நடக்க முடியாத ஒரு விடயம் . பலம் வாய்ந்த சிரிய அரச இராணுவம் தனது நிலைகளை விட்டு அவசரமாக பின்வாங்கியதன் காரணம் இதுதான் . தனக்கு நிகரான மரபுச் சமரணியை போரின் ஆரம்பத்தில் இருந்தே எதிர் கொண்டதே .


ஒரு சிறந்த கெரில்லா அணியின் ஆற்றல் மரபு முறை இராணுவத்தை பொறிமுறையான தாக்குதல் உத்திகள் மூலம் நிலைகுலையச் செய்வதோடு ,அதன் மனோவலிமையை
சிறிது சிறிதாக குறைப்பதன் ஊடான உளவியல் தாக்கத்தின் மூலம் ,போரியல் ஆற்றலை சிதைத்து கால ஓட்டத்தில் சடுதியான ஒரு கூட்டுத் தாக்குதல் மூலம் எதிரியை பின் வாங்கச் செய்வதே . ஆனால் சிரியாவில் அப்படியான களமாடல் வடிவம் (ஆங்காங்கு நடந்த சில தாக்குதல் நடவடிக்கைகள் தவிர )
பெரிதாக இருக்கவில்லை .

இங்கு இன்னொரு கேள்விக்கும் நாம் விடைதேட வேண்டும் அது சிரிய மக்கள் அவசரமாக இராணுவ தாரிகளாக பரினமித்ததன் மர்மம் என்ன ? என்பதே அந்த வினாவாகும் .
உண்மை என்னவென்றால் அங்கு பாடசாலைக் கல்வி முடிந்தவுடன் இரண்டு வருடங்கள் இராணுவத்தில் கட்டாய சேவை என்பதை அது சட்டமாக கொண்டியங்கிய நாடாகும் என்பதே ஆகும் .

இங்கு புரிந்து கொள்ள வேண்டிய உண்மை என்னவென்றால் மேற்குலகு போடநினைக்கும்
அரசியல் , இராணுவ கடிவாளங்களை புறந்தள்ளிய ஒரு புரட்சியே அங்கு பரிணமித்துள்ளது . மேலும்
மக்கள் தரப்பில் இருந்து களமாடும் 'ஜெனரல்களின் ' வார்த்தைகளில் பண்படுத்தப்பட்ட இஸ்லாமிய சிந்தனா வாதத்தின் தெளிவான கருத்துக்களை காண முடிகின்றது .அந்த நுணுக்கமான பன் படுத்தல்கள்
இஸ்லாம் தொடர்பான சிரிய மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு மிகச் சரியாக பயன்பட்டுள்ளது .
1. வளம் மிக்க நிலம் .
2. இஸ்லாத்தை நேசிக்கும் மக்கள் + தலைமைகள் .
3. எதையும் எதிர்கொள்ள தயாரான இராணுவம் .
இன்ஷா அல்லாஹ் எதிர்காலம் இனி இஸ்லாத்திற்கே என்பதற்கு
மிகச் சிறந்த ஆதாரமாகும் . அல்லாஹு அக்பர்.

'அஷ் ஷாமில்' அம்பலமாகும் வரலாற்று பாத்திரமான ஒரு 'ஸியோனிஸ' சதிமுகம் .

இஸ்ரேலிய எதிர்ப்பாளர் என்ற வெளிப்படையான வடிவம் 'அல்லாஹ்வின் கட்சி ' எனும் இந்த அமைப்பினருக்கு, முஸ்லீம் உம்மத்தினர் மத்தியில் அதீதமான ஈடுபாட்டை கொண்டு வந்த சிறந்த முகமூடி ஆகியது . கெரில்லா தந்திரங்கள் , அதிரடியான தாக்குதல் நடவடிக்கைகள் என, லெபனானை மையம் கொண்டு இயங்கிய இந்த இயக்கம் யூத ஆக்கிரமிப்புக்கு எதிராக , உணர்வு ரீதியாகவும் , பழிவாங்கும் வேகத்தோடும் இருந்த முஸ்லீம் உம்மாவின் கருத்தில் தனிப்பெரும் இடத்தையும் பெற்றுக் கொண்டது .

இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டின் மீது மிகக் காரசாரமான கருத்துக்களையும் , இரண்டாம் பனிப்போர் பூச்சாண்டித் தர யுத்த இயங்கு விதிகளின் கீழ் ஈரான் சார் பகிரங்க பங்காளிகளாகவும்; தொழிற்பட்ட இந்த இயக்கம் தனது சுய ரூபத்தை புலப்படுத்தும் தெளிவான முகத்தை இன்று சூடு பிடித்துள்ள சிரியக் களத்தில் வெளிப்படுத்தியுள்ளது . அது தான் பசர் அல் அசாத் எனும் 'தாகூத்' படைகளுக்கு சார்பாகவும் , முஸ்லீம்களுக்கு எதிராகவும் நேரடியாகவே தனது 5000 கெரில்லா தர துருப்புக்களை களமிறக்கியுள்ளது .


இந்த செய்தி ஏற்கனவே நான் குறிப்பிட்டிருந்த பழைய செய்தியாக இருந்தாலும் 'நேட்டோ ' வடிவிலோ , யூ .என் வடிவிலோ மேற்கு இங்கு களமிறங்கும் என காத்திருந்த எமக்கு, ஒரு பலத்த 'அம்புஸ் ' தாக்குதலாக இந்த நேரடி ஊடுருவல் அமைந்துள்ளது . தனது மத்திய கிழக்கு அரசியலின் அந்திம தருணம் புரிந்து விட்ட பின்பு ,இஸ்லாமிய போராளிகளின் அதி வேகமான முன்னகர்வுகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது ? என கையை பிசைந்து கொண்டிருந்த அமெரிக்க தரப்பிற்கு ,இதுவரை தனது அரசியல் நாடகங்களுக்கு எதரி பாத்திரம் போட்டு சிறப்பாக நடித்த இரகசிய நண்பனான ஈரானை பயன் படுத்துவதில் மிகுந்த இலாபங்கள் காணலாம் என்ற இறுதி நப்பாசையின் வெளிப்பாடே இந்த களவிறக்கம் என்றால் அது மிகையான கருத்தல்ல .

மேலும் 200 அதி நவீன கவச வாகனங்கள் ,அதி நவீனஆயுதங்கள் மிக அவசரமாக லெபனானுக்கு அனுப்பப் பட்டதில் இருந்து , இந்த இராணுவ அரசியல் சதி வடிவம் உருத்தெரிய ஆரம்பித்தது . அதாவது லெபனான் அரசியலோ அதன் இராணுவமோ இந்த 'ஹிஸ்புல்லாக்கைளின் ' கட்டுப் பாட்டில் தான் இருக்கின்றது என்பது , மத்திய கிழக்கு அரசியலின் பாலர் பாடமாகும் . மேலும் ஆரம்பத்தில் இருந்தே ஈரான் சிரிய விவகாரத்தில் பசர் அல் அசாத் தரப்புக்கு சார்புக் கருத்துகளையே வெளியிட்டு
வந்துள்ளது .

மேலும் இது அமெரிக்க சதிகளின் பகிரங்க வடிவம் ஆகும் .அதாவது 1.பசர் அல் அசாதின் வீழ்ச்சியில் அமேரிக்கா திருப்தி காணவில்லை . 2. இஸ்லாமிய போராளிகளின் முன்னேற்றத்தை அமெரிக்கா விரும்பவில்லை . 3. முஸ்லீம் உம்மத்தின் தொடர்ச்சியான அழிவுகளை தொடருதல் . 4. முஸ்லீம் உம்மத் தமக்குள் உடன்பாடான ஒரே தலைமையின் அரசியலில் வந்து விடக்கூடாது .போன்ற காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடே இந்த இறுதி முயற்சி .ஆனால் பகிரங்கமாக முஸ்லீம் உம்மத்திற்கு சார்பாக பேசுவது; என்ற அமெரிக்க இரட்டை வேடத்தை இப்போதாவது முஸ்லீம்கள் புரிந்து கொள்ள வேண்டும் .

இந்த 'ஹிஸ்புல்லாக்களின் ' உள் நுழைவு மூலம் இராணுவ ரீதியில் எதிர்பார்க்கப் படுவது என்ன ? அதற்கான விடை இதுதான் சிரிய இராணுவத்தின் முக்கியமான சில படைப்பிரிவுகள் மக்களோடு இணைந்து மரபு சார் சண்டைக் களங்களை திறந்து விட்டதும் , அதன் விளைவாக மிக அவசரமாக அரச படைகள் பின் வாங்கியதும் நீங்கள் அறிந்த ஒன்றே . இந்த கள வடிவத்தை அவசரமாக மாற்ற வேண்டுமானால் சிதறிய குழு முறையான கெரில்லா படையணிகளை களமிறக்க வேண்டும் . அவை சிதறிய நிலையில் ஓன்று குவிந்துள்ள இஸ்லாமிய படையணியின் பலத்தை பல்வேறு சிறு சிறு களங்களாக பிரிக்க முடியும்.

இந்த நடவடிக்கை மூலம் சிரிய மக்கள் இராணுவத்தை பலவீனப்படுத்த முடியும் .அதன் பின்னால் மரபு சார் சிரிய அரச இராணுவம் மீண்டும் கடுமையான தாக்குதல்களின் மூலம் இழந்த நிலைகளை கைப்பற்ற முடியும் என்பதே ஆகும் . அத்தோடு குழறுபடியான இந்த கள மாற்றத்தின் மத்தியில் அமைதி காத்தல் , மக்களுக்கான உதவி, நிவாரண உதவி என்ற அடிப்படையில் யூ .என் , நேட்டோ ,என்பவற்றையும் களமிறக்கக் கூடிய பௌதீக காரணங்கள் மேற்குலகுக்கு சாதகமாகிவிடும் .முஸ்லீம்களாகிய நாங்கள் எங்கள் தொடரான 'து ஆக்களின் 'மூலம் இஸ்லாமிய போராளிகளின் கரத்தை பலப்படுத்த வேண்டுவோம்.

மனிதாபிமான உதவியின் ஆதார வடிவம் 'அமீருல் மூமினீன் ' கால்வாய்

அது கலீபா உமர் இப்னு கத்தாப் (ரலி )யின் ஆட்சிக்காலம் . 'ஹிஜாஸ் ' மாகாணத்தில் கடுமையான பஞ்சம் ஏற்படுகின்றது . அந்த சோதனையை எதிர்கொள்ள கலீபா பாரசீகம் ,சிரியா , எகிப்து ,எமன் போன்ற பாதிக்கப் படாத பகுதிகளின் கவர்னர்களுக்கு நிவாரண உதவிகளை அனுப்புமாறு கட்டளை இடுகிறார்கள் .பல்வேறு பகுதிகளிலும் இருந்து உணவுப் பொருட்களும் ,தானியங்களும் வந்து சேர்கின்றது .ஒரே ஒரு ஆளுகை பகுதியில் இருந்து மட்டும் உதவிகள் வந்து சேரவில்லை . அது எகிப்து .

கவர்னர் அம்ர் இப்னு ஆஸ் (ரலி ) இது விடயத்தில் கலீபாவினால் காரணம் கேட்கப் படுகின்றார்கள் . எகிப்திலிருந்து உதவிகள் தரைவழியாக வருவது என்றால் மிக நீண்ட கடினமான தரைவழி பாதையில் பயணித்தே 'ஹிஜாசை ' அடைய வேண்டும் .அந்த கால தாமதமே உரிய நேரத்தில் உதவி அளிக்கா முடியாமல் போனது . என கவர்னர் அம்ர் இப்னு ஆஸ் (ரலி ) காரணத்தை கூறியதும் . கலீபா எகிப்தின் உதவி விரைவாக கிடைக்கும் மார்க்கம் பற்றி ஆராய்கிறார்கள் .

முடிவாக எகிப்திலிருந்து செங்கடல் வழியாக கப்பல்கள் மூலம் விரைவாக 'ஹிஜாஸ் ' நோக்கி உதவிகள் அனுப்பமுடியும் ; ஆனால் 69 மைல் நீளமான ஒரு தரைப்பகுதி எகிப்தின்
நைல் நதியோடு இணைக்கப்பட கப்பல்கள் செல்லத்தக்க ஒரு கால்வாய் வெட்டப்பட வேண்டும்."அப்படியானால் கால்வாயை வெட்டுங்கள் ." இது கலீபாவின் கட்டளை .ஆறு மாதங்களில் செங்கடலோடு நைல் நதியை இணைக்கும் அந்த கால்வாய் வெறும் மனிதக் கரங்களால் வெட்டி முடிக்கப் பட்டது .அதுதான் 'அமீருல் மூமினீன் ' கால்வாய் என இன்றும் அழைக்கப் படுகின்றது .

ஆனால் இன்று ? தேச ,தேசிய எல்லைகளுக்குள் சுயநலத்தை காலனித்துவம் கற்றுத் தந்தது . அதனால் மனிதாபிமானம் இங்கு எல்லைப் படுத்தப் பட்ட பொருள் ! மனிதாபமான உதவிக்கான இவர்களின் எதிர்பார்ப்பு தேசிய இராஜ தந்திர அரசியல் இலாபம் ! காட்டு விலங்கு வாழ்க்கையை விட கேவலமானது இந்த எதிர்பார்ப்பு .

Jan 11, 2013

தொடரும் பெண்கள் மீதான வன்முறைகள் தீர்வு என்ன ? (பகுதி 03)

ஐரோப்பிய சமூகம் பெண்களைப் பற்றி எவ்வாறு கருதியது ?
ஐரோப்பிய நாகரீகத்தில் பெண்கள் என்ற விடயத்தை நாம் ஆராயும் போது , இன்றைய நவீனத்தின் நாம் ஆராயும் விடயத்தின் அடிப்படையை தொட்டவர்களாக ஆகிவிடுவோம் . இருண்ட ஐரோப்பா என்ற வரைவிலக்கணத்தை வரலாற்றுப் பாடத்தின் ஒரு தகவலாக அனேகமாக எல்லோரும் கற்றுள்ளோம்.அதில் 'கிறிஸ்தவ சர்ச்சுகளின் ' சர்வதிகாரம் சகலதையும் கடவுளின் பெயரால் தவறாக செய்தது . அந்த தவறில் இருந்து பெண்ணியத்தின் கண்ணியமும் அகௌரவமாக சித்தரிக்கப்பட கிரேக்க ,ரோம நாகரீகத்தை விட சற்று வித்தியாசமான அடக்கு முறையை பெண்களின் மீது மதத்தின் பெயரால் கிறிஸ்தவம் செய்தது .

'முதல் பாவம் ' என்ற கோட்பாட்டில் இருந்து பெண் நோக்கப்பட்டாள் . ஆதம் (அலை ),ஹவ்வா (அலை ) என்ற முதல் மனித படைப்பின் ஆரம்பத்தில் தடுக்கப்பட்ட சுவனத்தின் கனியை சுவைக்கத் தூண்டியது ஹவ்வாவே (ஏவாள் ).ஆகவே முதலில் பாவத்தின் பக்கம் மனிதனை தூண்டியவள் பெண்; இதுவே ஆதி பாவம், இதனால் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் பாவத்திலேயே பிறக்கின்றன என்ற கோட்பாட்டை சமூக மயமாக்கினார்கள் .

விளைவு அது ஐரோப்பாவையே 'பெண்களுக்கு ஆன்மா உண்டா,இல்லையா ? என்ற விவாதத்தில் ஈடுபடவைத்தது . ஒரு உயர் குடி சீமான்களின் குழு அன்று அவளுக்கு ஆன்மா இல்லை என அடித்துக் கூறியது . TERTULIAN என்ற கிறிஸ்தவப் பாதிரியார் பின்வருமாறு பெண் விடயத்தில் கருத்துக் கூறினார் .

" அவள் சாத்தானிய உணர்வுகளை தூண்டுபவள் . மனிதனை தடுக்கப்பட்ட மரத்தின் பக்கம் கொண்டு சென்றவள் ,இறைவனின் கட்டளைகளை உடைத்தவள் ,மனிதனை ஒழுக்கக் கேட்டில்
ஆழ்த்துபவள் ." என்று கூறி நின்றார் . இதனடிப்படையில் பெண்கள் தாழ்வாக பார்க்கப் பட்டார்கள் . அவளது அடிப்படை உரிமைகள் கூட இங்கு கேள்விக்குறியானது .

இந்த காலகட்டத்தில் தான் கிறிஸ்தவ சர்வாதிகாரத்திற்கும் , அறிவியலுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு சமரசத்தின் அடிப்படையில் தவறான ஆன்மீகம், உலகியலில் இருந்து பிரிக்கப் பட்டு சர்ச்சுகளுக்குள் முடக்கப் பட்டது , மதச்சார்பின்மை வாழ்வியல் கொள்கையாக ஆட்சி ஏறியது . அடங்கியிருந்த பெண்களும் தமது விடுதலை உணர்வுக்கு அது சிறந்த உணவு தரும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தார்கள் . விஷத்திற்கு அமுதம் என்ற பெயர் கொடுத்து அவளது விடுதலை கீதம் இங்கும் இசைக்கப்பட்டது . எவ்வாறு ? என்பதை தொடர்ந்தும் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ் .

(தொடரும் ...)

தொடரும் பெண்கள் மீதான வன்முறைகள் தீர்வு என்ன ? (பகுதி 02)

சமூகக் கோட்பாட்டில் பெண்கள் ஒரு சுருக்க வரலாற்றுப் பார்வை .

வரலாற்று ரீதியில் பெண்கள் தொடர்பான பல்வேறு சமூகங்களின் கருத்துக்களை முதலில் நாங்கள் ஆராய்வது பொருத்தமானது . ஏனென்றால் இந்த ஆய்வின் மூலம் இன்றைய சூழலில் அவ்வாறான பார்வைகள் இருக்கின்றதா என்பதை எம்மால் உணர்ந்து கொள்ள முடியும் .

கிரேக்க சமூகம் பெண்களைப் பற்றி எவ்வாறு
கருதியது ?
'பண்டோரா ' எனும் பெண்ணே முதல் பெண் , இவளே எல்லா தீமைகளுக்கும் ஆணி வேராகும் . இந்த அடிப்படையில் பெண்களிடமிருந்தே எல்லாத் தீமைகளும் உற்பத்தியாகின்றன . அவள் மனிதப் பிறவியே அல்ல . இந்த பார்வையின் கீழ் அவர்கள் பெண்களை விலங்குகளை விட கேவலமாக நடாத்தினார்கள் . அங்கு பெண்களின் உரிமை பற்றியோ ,சலுகை பற்றியோ எவ்வித பேச்சுக்கும் இடமிருக்கவில்லை , எவ்வளவு மோசமாக கேவலப் படுத்த முடியுமோ அவ்வளவு மோசமாக கேவலப் படுத்தினார்கள் .

ஆனால் காலப் போக்கில் பெண்கள் தொடர்பான இவர்களது அணுகுமுறைகளில் சற்று மாற்றம் ஏற்பட்டது அதுவும் சிலகாலம்தான் ; மீண்டும் கிரேக்கம் நாகரீகத்தின் உச்சமாக தன்னை காட்டி நின்ற இன்னொரு பொழுதில் காமம் என்ற உணர்வு கட்டுப்பாடிழந்து விபச்சாரம் கட்டாய சேவையாகியது . திருமணம் என்பது ஒரு வகையான அனாவசியமான கட்டுப்பாடு என எண்ணினார்கள் .

இந்த மாற்றத்தில் கிரேக்கத்தில் பெண்ணுக்கான தரத்தை கடவுள் அந்தஸ்தில் உயர்த்தினார்கள் . அதுவும் சாதாரண கடவுள் அல்ல ; காதலுக்கே உரிய கடவுள் . அவளின் பெயர்
'APHRODITE ' இவள் ஒரு ஆண் கடவுளின் மணைவி .அத்தோடு இன்னும் மூன்று ஆண் கடவுள்களோடு
காதல் தொடர்பு வேறு (கள்ளமாக ) வைத்திருந்தாள் . இந்த தகாத தொடர்பால் 'CUPID' எனும் இன்னொரு
கடவுளும் பிறந்தார் என தொடர்கிறது அந்த அசிங்கப் புராணம் .

ரோம் சமூகம் பெண்களைப் பற்றி எவ்வாறு கருதியது ?
இவர்களது அணுகு முறையும் கிரேக்கர்களைவிட சற்றும் குறைந்ததாக இருக்க வில்லை . 'பெண்ணுக்கு ஆன்மாவே இல்லை ' என்பதே இவர்களின் தத்துவம் .பின்னர் கிரேக்கர்களை போலவே ஒரு தளர்வான மனோ நிலையில் சில காலம் வாழ்ந்தார்கள் . இவர்களது வேதாளமும் கிரேக்கர்களைப் போல் சற்று வித்தியாசமாக முருங்கை மரத்தில் ஏறியது .

' பெண்கள் அனுபவித்து சுவைக்கவே ' என்ற கொள்கை இங்கு நடைமுறை
ஆகியது . விளைவு அவர்கள் பாலியல் கருவியாகி (SEX MACHINES ) பாவிக்கப் பட்டார்கள் . அவர்களின்
இந்த அடாத செயல்களுக்கு ஒரு வரலாற்றுச் சம்பவம் இதோ .

'ப்ளோர ' எனும் ஒரு விளையாட்டு ; இதில் பெண்கள் முழு நிர்வாணமாக
ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்வார்கள் . ஆண்கள் அந்த விளையாட்டை கண்டு களிப்பார்கள் . இங்கு பெண்கள் பல ஆண்களை அடக்கி ஆண்டார்கள் அதிகாரத்தால் அல்ல , உரிமைகளால் அல்ல , மாற்றமாக
தங்கள் உடல்களால் !

(தொடரும் ....)

தொடரும் பெண்கள் மீதான வன்முறைகள் தீர்வு என்ன ?(பகுதி01)

பெண் விடுதலை , கருப்பை சுதந்திரம் , ஆணுக்கு நிகரான பெண் சமத்துவம் ,போன்ற கோஷங்கள் அன்றாடம் எழுப்பப்பட்டும் , சட்டரீதியான அதன் வடிவங்கள் நடைமுறைப்படுத்தப் பட்டும் இருக்கும் நிலையிலும், பெண்களுக்கெதிரான வன்முறைகள் ,அடக்கு முறைகள் , அத்துமீறல்கள் உலகெங்கும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது . இது தொடர்பில் சட்டத்தின் பாதுகாப்பும் , கிரிமினல் குற்றங்களுக்கான தண்டனைகளும் கேள்விக்குறியான நிலையில் ஒவ்வொரு பெண்ணும் தனது சமூக வாழ்வு குறித்து அச்சப்பட்டே காலம் நகர்த்த வேண்டியுள்ளது . 

தொட்டில் முதல் மயானம் வரை தொடரும் இந்த அநியாயம் தடுக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை . ஆனால் பெண்கள் சமூகம் மீண்டும் மீண்டும்
கவர்ச்சிகரமான பாதையில் தவறான இலக்குகளை நோக்கியே இது விடயத்தில் இழுத்துச் செல்லப் படுகின்றது .இறுதியில் அனுசரித்தால் வாழலாம் என்ற தத்துவத்தை சொல்லாமல் சொல்லி பெண்கள் சமூகத்தை ஒரு கருத்துப் போலிக்குள் முடக்கி விடுவதே காலம் காலமாக நடந்து வரும் தீர்வெனும் தவறாகும் .

இது விடயத்தில் தீர்வு என முன்வைக்கப்படும் நவீனம் ,விடுதலை என்ற அப்பட்டமான முதலாளித்துவ சுயநலக் கண்களினால் பெண்ணை ஒரு இலாபம் தரும் நடமாடும் பண்டமாகவே அலைய விட்டுள்ளது . இந்த பார்வையின் உச்ச விளைவை வன்முறை வடிவில் எதிர்நோக்கும் போது மட்டும் அவ்வப்போது ஆவேசமாக கூக்குரலிடுவதில் அர்த்தமில்லை . எனவே இதற்கு சரியான தீர்வென்ன ? இந்த அடிப்படையில் என்னால் முடிந்த வரையான ஒரு பதிவை தொடராக முன்வைக்க முயற்சிக்கிறேன் இன்ஷா அல்லாஹ் . அதன் ஆரம்பப் பந்திகளே மேலே தந்தவை .

(தொடரும் ...)