Jan 16, 2013

Hiding Naveed Butt's Abduction from the Public will not Hide it from Allah, Al-Baseer!



Hizb ut Tahrir condemns the Kayani-Zardari regime for locally blocking the website demanding the release of its spokesman in Pakistan, Naveed Butt, called www.freenaveedbutt.com. The regime blocked this website in response to Hizb ut Tahrir's global campaign demanding the immediate release of the highly respected and capable advocate for the Khilafah in Pakistan, Naveed Butt.
Muslims from around the world have held demonstrations and sent delegations to Pakistan's embassies demanding the release of Naveed. Hizb ut Tahrir Wilayah Pakistan calls upon the respected members of the legal, media and human rights communities to raise their voice against this cheap censorship of the call for Islam and support of its advocates. Are Muslims not human, that they should not have rights to advocate their belief and demand to be ruled by that belief? Is this Ummah not a people, that they do not have the right to determine that Allah سبحانه وتعالى is Sovereign over its lands?
Hizb ut Tahrir Wilayah Pakistan reminds the Muslims that the Khilafah will be established in Pakistan soon inshaaAllah and they will see the proper policy for media and information, whether websites, television channels and print media. As Hizb ut Tahrir 2013 Manifesto for Pakistan declares, "Sound information is essential for the state, unification of the Muslim Lands and carrying Islam to the rest of humankind. The media is essential in presenting Islam in a powerful manner, linking the Islamic thoughts to the emotions of the people, so as to stimulate people to turn to Islam, in study and contemplation. It will also expose the false and corrupt kufr thoughts so that the Ummah remains firm in the face of the colonialist cultural onslaught. Accordingly the Khilafah will ensure the eradication of the low values of capitalism and the promotion of the sublime values of Islam."
Hizb ut Tahrir Wilayah Pakistan warns Kayani, Zardari and the other cheap thugs of the regime, that their crimes can never be hidden from Allah سبحانه وتعالى. Moreover Hizb ut Tahrir will soon seize them and hold them to account for all their crimes against this Ummah and its Islam. Hide all that you like tyrants, hide yourselves if you like, for you will be seized by the will of Allah سبحانه وتعالى and soon, even if it be from the sewers and abodes of rats!
وَلَا تَحْسَبَنَّ اللَّهَ غَافِلًا عَمَّا يَعْمَلُ الظَّالِمُونَ ۚ إِنَّمَا يُؤَخِّرُهُمْ لِيَوْمٍ تَشْخَصُ فِيهِ الْأَبْصَارُ
مُهْطِعِينَ مُقْنِعِي رُءُوسِهِمْ لَا يَرْتَدُّ إِلَيْهِمْ طَرْفُهُمْ ۖ وَأَفْئِدَتُهُمْ هَوَاءٌ
"Do not consider Allah to be unaware of what the wrongdoers perpetrate. He is merely deferring them to a Day on which their sight will be transfixed, rushing headlong – heads back, eyes vacant, hearts hollow."
(Ibrahim, 14:42-43)
Media Office of Hizb ut Tahrir, Wilayah of Pakistan
29 Safar 1434
12/01/2013
Trackback(0)

Write comment

தொடரும் பெண்கள் மீதான வன்முறைகள் தீர்வு என்ன ?(பகுதி 06)

ஜனநாயகத்தில் பெண் .

ஜனநாயக நெருப்பின் முன் 
ஒரு விட்டில் பூச்சியாய் பெண் 
உலகில் உலா வந்தாள் !
சம வாழ்வுரிமை ,வாக்குரிமை 
தொழில் உரிமை , ஆணோடு சம உரிமை 
எல்லாம் கிடைத்தது 
காமப் பார்வைகளின் தொடரில்
நிம்மதியை மட்டும் விலை பேசியதாக !

கருப்பை சுதந்திரத்தின் முன்
கட்டில் சுகத்தோடு அவள்
விடுதலை வீட்டில் அவமானத்தை
உரிமையோடு தொட்டில்
கட்டவும் கேட்டாள் !
அந்த விபச்சார விலாசத்தை தேடி
'நோபல் ' பரிசோடு அணிவகுத்தார்கள்
அந்த நவீனத்தின் காவலர்கள் !

(தொடரும் ...)

Jan 15, 2013

தீமையின் ஆணிவேர் எது ?

சட்டங்கள் ஆள்கின்றன என்பதை விட ,சட்டங்கள் ஆளப் படுகின்றன ; என்பது தான் உண்மை .வேலியாக வேண்டிய நீதி பயிரை மேய்கின்றது எனும் கருத்தியல் பரவலாக பேசப்படும் ஒரு பேசு பொருள் .யாரால் சட்டம் தரப்படுகின்றது ? யாருக்காக தரப்படுகின்றது ? எனும் வினாக்கள் இங்கு தொடுக்கப் பட்டால் மக்களால் மக்களுக்காக எனும் பொதுப்படையான அதன் ஜனநாயக பதிலில் கவர்ச்சி கரமான ஒரு போலித் தன்மை வெளிப்படுகின்றது .

குடி குடியைக் கெடுக்கும் என்பார்கள் , புகைத்தல் உடல் நலத்துக்கு கேடு என குறித்த 'சிகரட் ' பெட்டியிலேயே எழுதவும் பட்டிருக்கும் ; ஆனால் அதன் பாவனை ,பிரயோகம் தொடர்பில் சட்டம்
அத் தீமைக்கும் காவலனாகி அனுமதி கொடுத்து பாதுகாக்கும் . ஒவ்வொரு சிவில் ,கிரிமினல் சட்ட நுணுக்கங்களை ஆய்ந்து பார்த்தால் குற்றங்களை தடுத்தல் எனும் அவசியத்தை விடவும் அதை செய்த பின் அதிலிருந்து தப்ப முடியும் என்ற ஓட்டைகளே அதிகமாக இருக்கின்றது .

உண்மையைச் சொன்னால் தீமைகள் தடுக்கப் படுதல் ; என்பதை விட குற்றவாளி ,நிரபராதி என்ற பாரபட்சம் இன்றி 'புரெபெசனல் லெவலில் ' நீதித் துறை இயங்கிக் கொண்டிருக்கின்றது என்பது ஒரு வெளிப்படை உண்மை .சரியானது, நீதியானது என்பது வாதத் திறமையிலும் ,ஆதாரங்களில் குளறுபடி செய்வதிலும் தான் தங்கி நிற்கின்றது என்பதும் உண்மை . அப்படியானால் இந்த விபரீதமான வேலியின் தேவைதான் என்ன ?

கொள்கைகளே உண்மையில் வாழ்வியல் வழி முறைகளை தீர்மானிக்கின்றன . என்ற பொதுவான அடிப்படையில் தான் சட்டத் துறையும் அரசின் கீழ் தஞ்சமடைகின்றது . நீதிக்கு முன் யாவரும் சமன் என்று பொதுவாக சொல்லப் பட்டாலும் அதன் தூய்மைத் தன்மை அரசியல் கொள்கைகளால் விலை பேசப்பட்ட நிலையிலேயே மக்கள் மயமாகி உள்ளது .

அந்த வகையில் இன்றைய தீமைகளின் ஆணி வேறாய் இருப்பது தீய அரசுகள் தாம் ; என்றால் அது மிகையான கருத்தல்ல . அதாவது தூய்மையற்ற கொள்கைகளோடு அரசுகள் இயங்கும் போது நீதித் துறையும் தூய்மை அற்றே இருக்கும் . இங்கு சட்டம் ஒழுங்கிலும் சுயநலமே மேலாதிக்கம் செலுத்தும் . முதலாளித்துவம் அமெரிக்காவில் மட்டுமல்ல இந்தியாவிலும் , முழு உலகிலும் ஒரே விளைவையே ஏற்படுத்தியுள்ளது 

காரணம் தப்பினால் மரணம் எனும் விதியின் கீழ் தவிக்கும் யகூதி நசாரா கூட்டு ....

இந்த முஸ்லீம் உம்மத் மிக நீண்ட காலம் தனக்கு முன் எதிர்ப்படும் தடைகளை முற்றுப்புள்ளியாக்கி எஞ்சிய மார்க்கத்தோடு (தனது அடயாளப் படுத்தலோடு )திருப்தி காணுவது; எனும் முடிவுரையிலேயே தனது போராட்ட சிந்தனைகளை மழுங்கடித்து வாழ்ந்து வந்தது . ஆனால் தடைகளை தாண்டுவது என்பது தான் இலட்சிய வாத போராட்டத்தின் உண்மையான வடிவம் ஆகும் . இங்கு இழப்புகள் இறப்புகள் , ஒரு விடயமே அல்ல . கொள்கை கொச்சைப் படுத்தப்படக் கூடாது . இலட்சியம் கோமா நிலைக்கு கொண்டு செல்லப் பட்டு தகுதியற்றதாக மாற்றப்படக் கூடாது . ஆனால் இதுவரை நடந்தது இந்த நாசகாரம் தான் .

இந்த உம்மத்தின் சிந்தனை தெளிவின்மையும் , தலைமைகளின் தவறான வழி நடாத்தலும் இஸ்லாத்தின் நடைமுறை சாத்தியம் பற்றி' குப்பார்களின் ' தடைகளுக்கு முன் ,' குப்பார்களின் ' சதிகளுக்கு முன் அதில் ஒரு அங்கமாக நின்று பிரதிபளிப்பது தான் இஸ்லாத்தின் போராட்டம் என தவறான சாயம் பூசப்பட்டது . விளைவு முஸ்லிமிட்கே 'வஹி' வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறியது .

வாழ்க்கையே' வஹியாக்க ' வேண்டிய சமூகம் காலத்தையும் ,சூழ்நிலையையும் கூட்டுச் சேர்த்து ஒரு இணைவைப்பை இபாதத் ஆக்கியது . அதாவது வஹி மாற்ற வேண்டிய காலமும் சூழ்நிலையும் வஹியையே காலாவதி ஆக்கியது. இந்த தவறை சுட்டிக் காட்டுபவர்களிடம் " நீங்கள் சித்தாந்த வாதிகள் உங்களது போதனைகள் சாத்தியமற்றது " என கூறவும் பட்டது . (ஆகக் கொடுமையானது 'வஹியின்' முன்னுரிமை தொடர்பில் முஸ்லீம்களின் வாக்குப் பலத்தை கேட்கத் தொடங்கியதே . )

ஆனால் 'அல்ஹம்துலில்லாஹ் ' இந்த கசப்பான நிலை மாறிக்கொண்டே வருகின்றது .
இஸ்லாத்தின் முன்னுரிமை தொடர்பில் முஸ்லீம்கள் தெளிவோடு இருக்கிறார்கள் என்பதை நடப்பு நிலவரங்கள் தெளிவு படுத்துகின்றன . எதிரி ஜனநாயக மாயையில் வாக்குப் பலம் மூலம் கேள்விகேட்டாலும் " குப்ரே" வெளியேறு என தெளிவாகவே பதில் அளிக்கப் பட்டு விட்டது ! கொடுமையான கொலைக்கருவி அச்சுறுத்தல் மூலம் முஸ்லீம்களை வாய்ப்பூட்டு போட்டு அடக்கி ஆளலாம் என்ற வழமையான பாணியும் மக்கள் போராட்டத்தின் முன் மண்டியிடத் தொடங்கி விட்டது !

உலகின் ஒவ்வொரு முஸ்லிமும் இஸ்லாம் தன்னை ஆளவேண்டும்
எனும் இயல்பான மனோபாவத்தை நோக்கி திரும்பத் தொடங்கி விட்டார்கள் . ' மத்திய கிழக்கின்
நஜீசான யூத ஆக்கிரமிப்புப் பகுதிகள் அதிகமாக அஞ்சத் தொடங்கி விட்டன . அதன் பிரதி விளைவாக
'சிரிய' எல்லைகளை நோக்கி யூதப் படை மற்றும் ஏராளமான ஆயுதங்கள் குவிக்கப் படுகின்றன .

மேலும் NATO அங்கத்துவ நாடு என்ற அந்தஸ்தில் இருந்து மிக அவசரமாக
'இஸ்ரேல்' (எனும் கள்ளப் பிறப்பு ) தாக்குதல்களில் பங்கு கொள்ளும் அந்தஸ்திற்கு உயர்த்தும் தரத்தை வழங்குதல் எனும் உத்தியோக பூர்வ அறிவிப்பை வெளியிடவும் அமேரிக்கா தயாராகி வருகின்றது . இதுவரை கொடுக்கப்படாது இருந்த இந்த தரம் இன்று ஏன் அவசியப் பட்டுள்ளது ? காரணம் இதுதான் அமெரிக்க மதச் சார்பின்மையோடு கூடிய ஜனநாயக சதிவலை எனும் சர்வதேச பாதுகாப்பு வேலி மத்திய கிழக்கில் பலமிழந்து வருகின்றது .


இஸ்லாத்தின் எழுச்சியின் அடுத்த கட்டம் இஸ்ரேலின் மரணம் தான் என்பது தெளிவான செய்தி .எனவே ஒரு மிகப் பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்றை 'யூதக் கூட்டோடு 'சிரியாவிட்குள்' உட் புகுத்த வேண்டிய அவசியம் NATO விற்கு இருக்கின்றது . அதாவது இது அவர்களின் 'கரணம் தப்பினால் மரணம் '
எனும் இறுதிக்கட்ட முஸ்தீபு . அதாவது பசர் அல் அசாத் (எனும் பிர் அவ்னின் வாரிசு ) வீழ்த்தப் படுதல் என்பது இஸ்ரேலின் அழிவிற்கான அத்திவாரமே . அதற்கு முன் நாம் முந்த வேண்டும் என்பதுதான் NATO
வின் நகர்வு .

ஷாமில் இரத்த சரித்திரத்தில் இருந்து வரையப்படும் சுத்த சரித்திரம்

'சஹாதத்தின்' வேட்கையில் பகைவனை எதிர்த்து 
சிதறி வீழ்வதிலும் எமக்கு வாழ்வுள்ளது .
சந்தன சுகந்தமாய் இங்கு சூழ்ந்துள்ள கந்தக வாசங்கள் 
சத்திய ஒளியில் சுவனத்தையல்லவா திசை காட்டுகின்றன !

எதிரியின் தடைகளை தகர்த்து பாரில் உண்மையான 
ஏகனின் மார்க்கத்தை தொடுப்பதில் ஓரணி நிற்க வாரீர் .
பிரித்து மேய்வதால் 'தாகூத்திய' சில் வண்டுகளும் 
சிறுத்தைகளாகி எம்மீது சீறியல்லவா பாய்கின்றன !

பதவியின் வெறியில் மக்களை மாக்களாக்கி எம்
வாழ்க்கையை வேட்டைக் காடாக்கிய வேதாளங்களுக்கு
எமது பிரிவினை நிலத்தில் நாமே முருங்கை மரம்
வைத்துக் கொடுத்து தேசியப் பசலை போட்டோம் !

பிணம் திண்ணும் சாத்திரங்களை அவை தந்தபோது
எமது வரலாற்று வரிகள் அநீத காட்சிகளை காட்டி
இரத்த சரித்திரங்களை உதாரணப் படுத்தியது .
இந்த இறந்த காலம் இன்னும் உணரப்படவில்லையா !

எமது தேசம்' தாருல் இஸ்லாம் இன்ஷா அல்லாஹ் '
எமது தேடல் இஸ்லாத்தின் கீழ் வாழ்வு இன்ஷா அல்லாஹ் '.
எமது பயணம் இறைவனை நோக்கி இன்ஷா அல்லாஹ் '.
எமது முயற்சி இறைவனின் திருப்தி இன்ஷா அல்லாஹ் '

சிறுபான்மையாக வாழும் முஸ்லீம்கள் செய்ய வேண்டிய பணி என்ன என்ன ?

சிறுபான்மையாக வாழும் முஸ்லீம்கள் செய்ய வேண்டிய பணி என்ன என்ன ? தற்காப்பு உணர்வு ஒவ்வொரு தனிமனிதனுக்கும் , சமூகங்களுக்குமான பொது விடயம் . ஆனால் முஸ்லீம் உம்மத்தை பொருத்தவரை இந்த தட்காப்புணர்வைக் கூட இஸ்லாத்தின் வரையறைக்கு வெளியில் இருந்து பெற்றுக்கொள்ள முடியாது . இஸ்லாமிய தெளிவற்ற சூழ்நிலை வாதத்தை முற்படுத்திய போராட்டப் பாதை என்பது காலத்தின் கட்டாயம் போல் இருந்தாலும், அதன் நகர்வின் விளைவுப் பெறுமானம் சரணடைவு அல்லது சுய அழிவு அரசியலில் தான் முடியும் . அனேகமாக ஒவ்வொரு சிறுபான்மை வாழ்விடங்களிலும் இன ,மத வாத பெரும்பான்மை அரசியலின் இரத்தம் குடிக்கும் மேலாதிக்க அரசியல் இருந்து கொண்டே இருக்கும் என்பது எழுதப் படாத விதி!இந்த விடயத்தில் அடிப்படைக் காரணத்தை பற்றி தெளிவு பெறாமல் விளைவுப் பகுதியில் இருந்து தீர்வு நோக்கி சிறுபான்மையை நகர்த்துவது ஒரு தவறான அணுகு முறை . இந்தத் தவறுதான் மிகச் சிறந்த போராட்ட பாதையாக ஒவ்வொரு சிறுபான்மை நிலங்களிலும் உணர்த்தப் படுகின்றது . எல்லோராலும் மார்தட்டிப் பேசப்படும் ஜனநாயகமும் இந்த பக்கச் சார்பு அரசியலில் பெரும் பான்மையின் பக்கமிருந்து தான் தனது நியாயத்தை காட்டி நிற்கும் . பெரும்பான்மைக்கு எதிராக வெளிப்படையாக சிறுபான்மையின் எந்த நடவடிக்கையும் பெரும்பான்மையின் ஆக்ரோசமான எதிர்ப்பு நிலையை மேலோங்கச் செய்து , மூர்க்கத் தனமாக சிறுபான்மைகள் மீது அத்து மீறவைக்கும் . மிக அண்மைய தசாப்த இன,மத வாத அரசியல் நிகழ்வுகளில் இதற்கு சிறந்த ஆதாரங்களை எம்மால் காண முடியும் . இந்த அடிப்படையில் வன்முறையோ , சார்பு ,எதிர் நிலை அரசியலோ பெரும்பான்மையை எதிர் கொள்வதில் ஒரு வெற்றிகரமான பாதையாக உணர முடியாதுள்ளது . ஒரு தேசிய எல்லைக்குள் சிறுபான்மை உள்வாங்கப் படும் போதே ஒரு வகையான அடிமை வரையறைக்குள் புதைந்து போய் விடுகின்றன . இந்த பக்கச் சார்பு ஆதிக்க அரசியலின் அதி உச்ச நிகழ்வுதான் பெரும்பான்மையின் வன்முறை அடக்கு முறைகள் . இந்த அநியாயத்தின் சூட்டில் இருந்து தான் சிறுபான்மை தனது வாழ்வுக்கான போராட்டப் பாதையை நியாமாக சிந்திக்க வேண்டியுள்ளது . உரிமைகள் சலுகைகள் போல் காட்டப் பட ,தப்பிப் பிழைத்து முடிந்தால் வாழு என்ற 'jungle law ' பெருந்தன்மையுடன் அள்ளி வீசப்பட ,பெரும்பான்மை அபிலாசை மீது நேர்ந்து விடப்பட்ட பலிக்கடா வாழ்வே சிறுபான்மை வாழ்வாகும் .மேலும் பெரும்பான்மை எதிர்பார்ப்புகளை மீறிய ஒரு அரசியல் வடிவமெடுக்க சிறுபான்மை முயலும் சந்தர்ப்பங்களில் அத்தகு சிறுபான்மை தலைமைகள் திட்ட மிட்டு அழிக்கப்படும் , சிதறடிக்கப்படும் என்பதும் நாம் கண் கண்ட உண்மைகள் . ஆகவே சிறுபான்மையை பொருத்தவரை (மற்றும் பொதுவாகவும் )ஜனநாயகம் ஒரு தோல்வி நிலை கோட்பாடுதான் என்பதில் சந்தேகமில்லை .அதில் தீர்வை விட பக்கச் சார்பும் ,அத்து மீறலும் அதிகமாக இருக்கின்றது .இந்த அரசியல் வடிவத்தை ஏற்றுக்கொண்டு சிறுபான்மை உரிமை ,மற்றும் சுயாதிபத்தியம் பற்றி சிந்திப்பது ஒரு வீண் வேலையாகும் . அப்படியானால் சிறுபான்மையாக வாழும் முஸ்லீம்கள் செய்ய வேண்டிய பணி என்ன என்ன ? அதற்கான விடை மிக அவசரமாக இஸ்லாமிய அகீதாவின் ஆழ்ந்த தெளிவில் இருந்து தனது சிந்தனைத் தரத்தையும், கருத்து வெளிப்பாட்டையும் ,நடத்தையையும் தீர்மானிப்பதோடு , இஸ்லாத்தின் சித்தாந்த வாதத்தின் கருத்தியலை முற்படுத்திய பகிரங்க பிரச்சாரத்தை பெரும்பான்மை நோக்கி செய்வதாகும் . இதன் பிரதி விளைவாக இஸ்லாத்தை ஏற்காத நிலையிலும் அதன் உலகியல் தேவைப் பாட்டை புரிந்து கொண்ட நிலையில் ,பெரும்பான்மைக்குள் இருந்து ஒரு சார்பாளர் வட்டத்தை உருவாக்க முடியும் . இந்த நிலை முஸ்லீம் உம்மாவை இன ,மத அடையாளப் படுத்தலை தாண்டிய அதன் இயல்பான தோற்றத்தை காட்ட முடியும் . மேலும் இஸ்லாத்தின் பொதுத் தலைமையான 'கிலாபா ' அரசியல் எனும் ஒரே தலைமையின் கீழான ஒன்றிணைவு தொடர்பில் ஆழமானதும் தெளிவானதுமான அறிவையும் அது பெற்றுத் தரும் 'இன்ஷா அல்லாஹ் '. "இமாம் ஒரு கேடயம் ஆவார் .அவருக்கு பின்னால் இருந்து மக்கள் போர் புரிவார்கள் . அவர் மூலமாகவே பாதுகாப்புத் தேடிக் கொள்வார்கள் " (முஸ்லீம் )

இது உங்கள் சிந்தனைக்கு

இது உங்கள் சிந்தனைக்கு . * நான் யார் ? *எங்கிருந்து வந்தேன் ? *எதற்காக வந்தேன் ? *எங்கே செல்லப் போகின்றேன் ? இந்த வினாக்களுக்கு மனிதன் சரியான விடை தேடாத வரை அவனால் உலகம் பற்றியும் அதில் அவனது வாழ்வு குறித்தும் தீர்க்கமான முடிவிற்கு வரமுடியாது .இந்த தேடல் சரியாக அமையாத நிலையில் , அல்லது தெளிவற்ற நிலையில் மனித வாழ்வு ,அவனை ஒரு பேசும் விலங்கு என்ற நிலைக்குள் சுழல வைத்து விடும் . அறிவியல் ரீதியாகவும் , தொழில் நுட்ப ரீதியாகவும் ,அவனது அடைவுகள் பல மடங்காக அதிகரித்த போதும் ;அவனது தேடல்களில் மேற்கூறிய வினாக்களுக்கு விடை காணாதபோது நாகரீகம் என்ற பெயரில் வேட்டைப் பண்புள்ள சுயநலவாத ஆதிக்க வாழ்வையே அவனால் உருவாக்க முடியும் . இங்கு நான் ,எனது ,என்னுடைய , எனக்காக ,என்ற வாதங்களே முன்னுரிமை பெறும் . அவ்வாறான மனிதன் தனது சுயநலத்தின் தேவைக்கான சட்டங்களையும் ,யாப்புகளையும் கொண்டு ஒரு கலாச்சாரத்தை சமூக மயப் படுத்துவான் . அந்த அதிகாரம் மக்களுக்காக எனது சேவை என்பதாக இருக்காது . மாற்றமாக எனக்காகவே மக்கள் என்ற அழுத்தமான சர்வாதிகாரத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ மக்கள் மீது திணித்து ,ஒரு அடிமைத்துவ அரசியலை ஏற்படுத்தி நிற்கும் . இன்று உலகை ஆளும் முதலாளித்துவத்தின் தவிர்க்க முடியாத இயங்கு விதியும் இதுதான் .நேற்று அதை எதிர்க்க எழுந்து பூர்சுவாக்களை (முதலாளிகளை ) அழிப்போம் என்று கங்கணம் கட்டி ,பின்னர் பேயை விரட்டு வந்து பிசாசாய் மாறிய கம்யூனிசம், பாட்டாளி வர்க்க சர்வாதிகார வடிவம் எடுத்த காரணமும் இது தான் . நான் மேலே தந்த வினாக்களுக்கு மிகச் சரியான விடையை புரிந்த மனிதர்களால் தான் வாழ்வு பற்றிய சரியான கண்ணோட்டத்தை சொல்ல முடியும்

தொடரும் பெண்கள் மீதான வன்முறைகள் தீர்வு என்ன ?(பகுதி 05)

" பேய் அரசாண்டால் பிணம் திண்ணும் சாத்திரங்கள்! அதன் கொள்கைகள் கொலைக் களங்களை பிரசவிக்கும் !அதன் சட்டங்களும் கோரமாக இரத்தம் குடிக்கும் !சுயநல மேடை போட்டு நீதியை மிதித்து அங்கு அநீதி ஆனந்தக் கூத்தாடி மகிழும் ! - இதுதான் இன்றைய அதிகாரங்கள் அரசியலாக கற்றுத் தருபவை " டெல்லியில் நடந்த அந்த மிருகத் தனமான பாலியல் வன்முறையோடு கூடிய படு கொலையோ , அல்லது அதே இந்தியாவில் காஸ்மீரில் இந்த முஸ்லீம் உம்மத்தின் சகோதரிகளின் உடல்கள் மீது படுபயங்கரமாக இந்திய இராணுவ ஜவான்களால் நிகழ்த்தப் படும் பயங்கர வாத எதிர்ப்பு யுத்தமோ, அரசியல் தரத்தில் இரண்டு வேறுபட்ட பார்வைகள் . மனித குலத்தின் கீழ்த்தரமான அணுகு முறைகளுக்கு இது சிறந்த உதாரணம் . பார்வையின் கோணத்தில் இருந்தே நடைமுறைகள் தீர்மானிக்கப் படுகின்றன . அந்த பார்வையை தீர்மானிப்பது கொள்கைகள் என்றால் அது மிகையான கருத்தல்ல .இது பொதுவாக எல்லா விடயங்களுக்கும் பொருந்தும் . எப்போதும் எமக்கு முன் ஏற்படும் அநீதமான வன்முறைகள் தொடர்பாக எமது தீர்வுகள் தற்காலிகமான சில உணர்ச்சி கரமான நடவடிக்கைகள் பற்றியே சிந்திக்கின்றன . ஒரு அடிப்படைக் கொள்கையின் தவிர்க்க முடியாத விளைவாக அந்த வன்முறை பார்க்கப் படுவதில்லை . இன்று எம்முன் நிற்கின்ற ஒட்டு மொத்த கொள்கைகள் ,சிந்தனைகள் பெண்கள் தொடர்பில் எவ்வாறான கருத்தை வைத்திருக்கின்றது ? என ஆராயப் போகும் போது ஒரு விரிவான தேடல் அவசியமாகின்றது . ஆனால் பொதுக்கருத்தில் பெண்கள் தொடர்பான கருத்தில் பல உடன்பாடுகளை அவை கொண்டிருக்கின்றது ; என்பதை நிரூபிக்க பக்கம் பக்கமாக ஆராயும் அவசியம் இருக்காது . கிரேக்கமோ , ரோம் சமூகமோ , அல்லது ஐரோப்பாவோ , அரேபியாவோ ,ஆபிரிக்காவோ , ஆசியாவோ , தமது கருத்தில் பெண்கள் தொடர்பான நிலைப்பாட்டை விளக்க , அல்லது அவைகளின் பெண் தொடர்பான பொதுப் பண்பை விளக்க சில உதாரண சம்பவங்களே போதுமாக இருந்தது . இந்த விதி இன்று எம்முன் நிற்கும் கொள்கைகள் , சிந்தனைகள் பற்றி ஆராயவும் போதுமானதாகும் . அந்த வகையில் முதலாளித்துவமோ , கம்பியூனிசமோ , பெண் தொடர்பில் பார்த்த பார்வை என்ன ? என்று நாம் ஆராய முற்படுகையில், எல்லாம் பாலியல் கவர்ச்சியே என்ற 'சிக்மன் புரைடின் ' சிந்தனை ஆதிக்கமும் , சார்ல்ஸ் டாவினின் கூர்ப்புக் கொள்கையும் அறிந்தும் அறியாமலும் இரண்டறக் கலந்த கோட்பாடுகளாகவே (முதலாளித்துவமும் , கம்பியூனிசமும் ) இருக்கின்றன . என்ற முடிவிற்கு எம்மால் வரமுடியும் . இந்த விடயத்தை ஆராய முன் இன்னும் ஒரு விடயத்தை விளக்க வேண்டிய தேவை எனக்கிருக்கின்றது . அது ஒரு கேள்விக்கான விடையாய் வந்து எம்மை ஆச்சரியப் படுத்தும் . அந்தக் கேள்வி இதுதான் ' மனித குல வரலாற்றின் மிகப் பழமையான தொழில் எது ?' என்ற வினாவே அதுவாகும் . பல வருடங்களுக்கு முன்னர் உளவுத்துறை சம்பந்தமான ஒரு ஆய்வு நூலில் இது பற்றி நான் படித்துள்ளேன் . அதன் விடையைக் கண்டு நான் சற்று ஆச்சரியம் அடைந்தேன் . அதன் விடை இவ்வாறு இருந்தது 1. விபச்சாரம் , 2. உளவு வேலை என்பதாக இருந்தது . அதிலும் இந்த இரண்டு தொழில்களிலும் வெற்றிகரமாக இயங்கியவர்கள் பெண்கள் என்பதாகவும் , பல்வேறுபட்ட நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இன்றும் இலாபகரமாக இயங்கும் நிறுவனங்கள் இவைதான் என்றும் அதில் குறிப்பிடப் பட்டிருந்தது . (தொடரும் ...)

Jan 14, 2013

சிரியாவில் இருளை உடைத்து தியாக ஒளியில் மீண்டும் நிமிர்ந்து நிற்கும் இஸ்லாத்தின் தூய அரசியலான ' கிலாபா கோட்பாடு'

சிரிய சண்டைக்களங்கள் தலைநகரான 'டமஸ்கசை ' சுற்றி மிகப் பரவலாக படர்ந்து விட்ட நிலையில் இன்னும் விரல் விட்டு எண்ணக்கூடிய சில பகுதிகளே 'தாகூதிய ' அசாத் படைகள் வசம் இருக்கின்றது . இஸ்லாமிய இராணுவத்தின் அடுத்த கட்ட நகர்வு பற்றி தீர்மானிக்க முடியாத நுணுக்கமான நகர்வுகளே அங்கு மேற்கொள்ளப் படுகின்றது .


தொழில் நுட்ப ரீதியில் நவீன போரியல் உத்திகளோடு பயிற்றப் பட்ட சிரிய இராணுவம் , நவீன யுத்தக் கருவிகளையும் கொண்டது . பின்வாங்கும் நிலையில் அந்த போர்க்கருவிகள் இஸ்லாமிய இராணுவத்தின் கைவசம் சிக்கிவிடக்கூடாது என்பதில் ரஷ்யா உட்பட மேற்குலகு மிகுந்த கரிசனை எடுத்து வருகின்றது . மேலும் சிரிய கடல் பரப்பில் ரஷ்ய போர்க்கப்பல்கள் தரித்து நிற்க , சிரிய தரை எல்லைகளை நேடோ ,மற்றும் ரஷ்ய விசேட படைகள் முற்றுகை கோணத்தில் நெருங்கியுள்ளனர் . இத்தகு நெருக்கடியான சூழ்நிலைகளிலும் இஸ்லாமிய இராணுவம் எவ்வித சலனமும் அற்ற நிலையில் முன்னேறிக் கொண்டிருக்கின்றது .


இதற்கிடையில் இன்னும் சில உறுதியான தகவல்களின் படி சிரிய இராணுவத்தில் 'பிரிகேட் கமான்ட் ' தரத்தில் இருந்த பிரிகேடியர்கள் உட்பட பல அதிகாரிகள் இஸ்லாமிய கிலாபத்தின் மீள்வருகைக்காக நிபந்தனை இன்றி உழைப்போம்; என்ற உறுதிப் பிரமாணம் எடுதவர்களாக இஸ்லாமிய இராணுவத்தின் அணியோடு இணைந்துள்ளார்கள் . அந்த வீடியோ காட்சிகளும் இப்போது வெளிவந்துள்ளன .இது ஒட்டு மொத்த' தாகூத் 'களுக்கும் வயிற்றில் புளியை கரைக்கும் புதிய செய்தியாக அமைந்துள்ளது .

தொடரும் பெண்கள் மீதான வன்முறைகள் தீர்வு என்ன ?(பகுதி 04)

முன்னைய சமூகங்களில் பெண்களின் நிலை பற்றி ஆராயும் தொடரில் ,கிரேக்கம் ,ரோம் , ஐரோப்பா போன்ற பகுதிகளை நாங்கள் இதுவரை பார்த்தோம் . இன்றைய உலகின் ஆதிக்க சக்தியாய் வீற்றிருக்கும் முதலாளித்துவ சிந்தனா வாதத்தின் ஆரம்ப அத்திவாரமாக குறிப்பிடப் படும் சமூகங்களே நான் இதுவரை குறிப்பிட்டவை .இதே வரிசையில் இஸ்லாத்திற்கு முந்திய அரேபியா, மற்றும் ஆபிரிக்க ,ஆசிய பகுதிகளோடு தொடர்பு பட்ட நாகரீகங்களில் பெண்கள் தொடர்பான பார்வை மற்றும் நடத்தை பற்றியும் சிறிதளவு ஆராய்வது பொருத்தம் .

உண்மையில் இந்த நாகரீகங்களிலும் வழிவரான கலாச்சாரம் , மதக் கோட்பாட்டு அழுத்தங்களுடன் கூடிய சாதிக் கோட்பாடு என்பவற்றின் கீழ் பெண்கள் சமூகம் தரக்குறைவாக நடத்தப் பட்டமைக்கு பல ஆதாரங்களை நாம் காண முடியும் . ஒப்பீட்டளவில் கிரேக்கம் ,ரோம் , ஐரோப்பா போன்ற பகுதிகளை ஒத்த செயலையே சில வடிவ மாறுபாட்டோடு இந்த சமூகங்களும் செய்துள்ளன .
# பெண் சிசுக் கொலை
# தேவதாசிக் கோட்பாடு
# தாழ் சாதி விதியின் கீழ் மேலாடை அணியத் தடை .
# உடன் கட்டை ஏறுதல் .
போன்ற விதிகளின் கீழ் தனது சமூகத்திற்கு உள்ளும் ,பிற சமூகங்களுக்கு மத்தியிலும் மிக அதிகமாகவே பெண்கள் சமூகம் தாழ்த்தப்பட்டது.இந்த தரக்குறைவான நியதிகளின் கீழ் பேசும் விலங்கு என்ற போலித் தத்துவத்தை அவள் உருவப் படுத்தினாள் . சில ஆபிரிக்க பழங்குடியினர் அவளின் மீதான நம்பிக்கையீனத்தின் சான்றாக அவளின் யோனித் துவரங்களை கூட குறிப்பிட்ட காலம் தைத்து விடுவார்களாம் !

தொட்டில் பழக்கத்தில் இருந்து பெண்கள் தொடர்பில் தவறான கருது கோள்களே சமூகங்காளால் கற்றுத் தரப்படுகின்றன . அதாவது கலாச்சாரப் பாரம்பரியங்கள் ,மதங்கள் ,சிந்தனைகள் போன்ற எல்லாமே பெண்கள் தொடர்பில் ஒரு வகையான வன்முறைப் பார்வையையே கற்றுக் கொடுக்கின்றன .

(தொடரும் ...)

Jan 13, 2013

ஷாமும்' முன்னரிவிக்கப்பட்ட பூமியே .


1. சலமா பின் நுபைல் (ரலியல்லாஹு அன்ஹு ) அவர்கள் அறிவிக்கிறார்கள் . ரசூல் (ஸல் ) அவர்கள் கூறினார்கள் ." மூமின்களின் சாம்ராஜியம் கட்டி எழுப்பப் படுவது ஷாமில் இருந்துதான் " (ஆதாரம் :- தபரானி )

2. ரசூல் (ஸல் ) சொல்லக் கேட்டதாக அலி (ரலியல்லாஹு அன்ஹு ) அவர்கள் கூறுகின்றார்கள்
அல் புதலாஉ (அப்தால்கள் ) என்பவர்கள் ஷாமிலேயே இருப்பார்கள் அவர்கள் நாற்பது பேர்களை கொண்டவர்கள் அவர்களில் ஒருவர் மரணித்து விட்டால் அந்த இடத்திற்கு வேறு ஒருவரை பகரமாக்குவான் . அவர்களுக்காகவே மழை பொழியும் , அவர்களுக்காகவே எதிரிகளுக்கெதிராக உதவி வழங்கப்படும் . அவர்கள் மூலமாகவே ஷாம் வாசிகளுக்குரிய வேதனை நீக்கப்படும் (ஆதாரம் :- அஹ்மத் )

இமாம் இப்னு தைமியா அவர்கள் கூறுகிறார்கள் :-
இங்கு இவர்களையே 'அல் அப்தால் ' என்று பேரறிஞ்சர்கள் கூறுவார்கள் .ஏனெனில் இவர்கள் நபிமார்களுக்கு பின் அவர்களது பணியை உண்மையாகவே நிறைவேற்ற வந்தவர்கள் . யதார்த்தம் புரியாது செயற்படக் கூடியவர்கள் அல்லர் . இவர்கள் ஒவ்வொருவரும் அறிவு , பேச்சாற்றல் ,மற்றும் இபாதத் ,சமயோசித ஆற்றல் என்பவற்றில் முழுமையானவர்கள் . நமார்களது பணியை மாற்றமில்லாத வகையில் அவர்களுக்கு பகரமாக செய்யும் ஆற்றல் மிக்கவர்கள் . இதன் காரணமாகவே அறிஞ்சர்கள் இவர்களையே " மறுமை வரை சத்தியத்தின் காவலர்களாக நின்று வெற்றி பெறும் கூட்டம் " எனக் கூறுகின்றார்கள் . (ஆதாரம் :- பதாவா இப்னு தைமியா )

பசர் அல் அசாத் எனும் கொடியவன் வீழ்த்தப் படுதல் மட்டுமே ஷாமின் கள நிலவரமல்ல , இஸ்லாத்தின் மீள்வருகை தொடர்பில் நபிமார்களின் பணியை தொடரக்கூடிய 'அல் அப்தால் ' களின் பாசறையும் ஷாம் தான் என்பதை நாம் மறந்து விடக் கூடாது . அங்கு நடப்பது சர்வ நிச்சயமாக கிலாபத்தின் மீள் வருகைக்கான போராட்டமே .

டமஸ்கசை நெருங்கி விட்டோம் இனி ....

அபூ ஹுரைரா(ரலியல்லாஹு அன்ஹு ) அறிவிக்கிறார்கள் ரசூல் (ஸல் ) அவர்கள் கூறினார்கள்
மிக உக்கிரமான இரத்தம் சிந்தும் போர் ஏற்படும் போது 'மவாளிகளில்' ஒரு படையணி ' டமஸ்கஸில் ' இருந்து புறப்படும் அவர்களே அரபிகளில் மிகச் சிறந்த குதிரை வீரர்கள் ஆவார்கள் , தேர்ச்சி பெற்ற யுத்த வீரர்களாகவும் இருப்பார்கள் . அவர்களைக் கொண்டே அல்லாஹ் இந்த மார்க்கத்தை பலமிக்கதாக்குவான் .(ஆதாரம் :- ஹாகிம் )

சிரியாவின் இரண்டாவது அதிமுக்கிய இராணுவ விமானத் தளமான' TAFTANAZ' இஸ்லாமிய போராளிகள் வசம் .

தொடர்ச்சியான ஒருமாத முற்றுகைச் சமரின் பின்னர் 'இட்லிப் ' நகரின் வடபுறம் அமைந்திருந்த இரண்டாவது அதிமுக்கிய சிரிய விமானப்படை விமானத்தளம் இஸ்லாமிய போராளிகள் வசம் (நேற்றைய தினம் அதாவது 11/ 01/2013 இல் ) வீழ்ந்ததாக சிரியாவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .இந்த இழப்பானது சிரியாவின் 'தாகூதிய ' அரசுக்கு மிகப்பெரிய ஒரு தோல்வி நிலையாகும் .

சிரியாவின் கேந்திர முக்கியத்துவம் மிக்க பல இடங்களை அரச படை தொடர்ச்சியாக இழந்து வந்ததன் வரிசையில் இந்த ' TAFTANAZ' விமானத் தளமும் மிக முக்கியமானதாகும் . மரபு ரீதியான இராணுவப் படையணிகளாக இஸ்லாமிய போராளிகள் முன்னேறி
வருவது ,சிரியாவின் தாகூதிய அரசு தரப்புக்கு மட்டுமல்லாமல் குப்ரிய ஆதிக்க உலகையே இப்போது
அதிர்ச்சி அடையச் செய்துள்ளது .

மேலும் ' TAFTANAZ' விமானத் தளம் உட்பட பல கேந்திர நிலைகளை கைப்பற்றிய 'JABATH AL NUSRAH' அமைப்பு தொடர்பாகவே குறிப்பாக அமெரிக்க தரப்பு பயங்கர வாத முத்திரை குத்தியது .சிரியாவின் இராணுவ போரியல் வல்லமையின் குறிப்பிடத்தக்க பலத்தை இந்த
அமைப்பு கொண்டுள்ளதென்பது இங்கு குறிப்பிடத் தக்கது . இவர்களையே 'கிலாபா பிரிகேட் ' எனும் சுட்டுப் பெயரால் மேற்கின் மீடியாக்கள் குறிகாட்டி(தமது நடுக்கத்தை வெளிக்காட்டி ) வருகிறார்கள் .

இந்த அமைப்பினரை பொருத்தவரை சிரியாவின் பல இராணுவ இரகசியங்களை அறிந்தவர்கள் , சிரிய இராணுவத்தின் பலம் ,பலவீனம் பற்றி நன்கு தெரிந்தவர்கள் . அதனால் அமெரிக்க மற்றும் ரஷ்ய தரப்புக்கு இப்போதுள்ள கவலை இரசாயன ஆயுதங்கள் மற்றும் நீண்ட
தூர சுடு சக்தி கொண்ட ஏவுகணைகள் இந்த 'JABATH AL NUSRAH' அமைப்பின் வசமாகி விடக்கூடாது என்பதே ஆகும் .

Jan 12, 2013

தாரிக் இப்னு ஸியாத். - Tharik bin Ziyad

மத்தியத் தரைக்கடல் வழியாக அட்லாண்டிக் மகா சமுத்திரத்திற்குள் நுழையும் ஒவ்வொரு கப்பலும் ஜிப்ரால்டர் ஜலசந்தியைக் கடந்தே சென்றாக வேண்டும் அல்லது அங்கு சிறிது தாமதித்து இளைப்பாறிச் செல்ல வேண்டும் என்பதுகட்டாயமாகும். இந்த ஜிப்ரால்டர் ஜலசந்தியானது ஐரோப்பாவின் தென்மேற்கு முனையில் மற்றும் மொராக்கோவுக்கு எதிர்புறமாக அமைந்துள்ளது.

சரி..! ஜிப்ரால்டர் என்று ஏன் அழைக்கப்படுகின்றது என்று தெரியுமா உங்களுக்கு? ஜிப்ரால்டர் என்பது ஜபல் அல் தாரிக் அல்லது ''தாரிக்(இப்னு ஸியாத்)மலைக்குன்று'' என்பதனை மொழிமாற்றி, சுருங்கச் சொல்லப் பொன்னால் அரபி மொழியை மோசடி செய்து, அதனை ஜிப்ரால்டர் என்று மேற்குலகு அழைத்துக் கொண்டிருக்கின்றது. இது நாம் காணப் போகும் வரலாற்று நாயகரான தாரிக் இப்னு ஸியாத் அவர்களின் பெயரைத் தாங்கித் தான் நிற்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. அத்தகைய வரலாற்றுச் சிறப்புக்குச் சொந்தக்காரரைப் பற்றி நாம் இங்கு சிறிது காண்போமா..!

வடக்கு ஆப்ரிக்காவில் உள்ள பெர்பர்களின் வம்சாவழியில், நஃப்ஸாவா என்னும் குலத்தில் தோன்றியவர் தான் தாரிக் பின் ஸியாத். உக்பா இப்னு நாஃபி அல் ஃபிஹ்ரி என்பவரின் தலைமையில் சென்ற முஸ்லிம்களின் படை வடக்கு ஆப்ரிக்காவைக் கைப்பற்றிய பொழுது, அதன் ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தைத் தன்னுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டவர் தான், தாரிக் இப்னு ஸியாத் தந்தை. தந்தை இறந்ததன் பின்பு, வாழ்க்கையின் வசந்த காலத்தில் வீற்றிருந்த தாரிக் பின் ஸியாத் அவர்கள், தன்னுடைய இளமைக்காலத்தை வடக்கு ஆப்ரிக்க முஸ்லிம் படையில் இணைந்து தனது உன்னத சேவையை ஆரம்பித்தார். இளமையின் வேகம்.., அதனுடன் இணைந்த இறைநம்பிக்கையின் உறுதி, இவை ஆப்ரிக்க மக்களின் மனங்களில் இஸ்லாத்தின் தூதுத்துவத்தை நிரப்புவதற்கான பணிகளில் முனைப்புடன் இவரை ஈடுபட வைத்தது.

தாரிக் இப்னு ஸியாத் அவர்களின் இளமைக்கால அர்ப்பணிப்புகளால் கவரப்பட்ட ஆட்சியாளர் மூஸா இப்னு நுஸைர், டேன்ஜியர் என்ற பகுதிகளை ரோமர் வசமிருந்து கைப்பற்றிக் கொண்டவுடன் அந்தப் பகுதிக்கு, அதாவது இன்றைய மொராக்கோ பகுதிக்கு தாரிக் பின் ஸியாத் அவர்களை ஆளுநராக நியமித்தார். ரோமப் பேரரசின் சியூடா பகுதிக்கு கவர்னராக இருந்த ஜுலியன் அவர்களைச் சந்தித்துப் பேசும் அதிகாரத்தை ஆட்சியாளர் மூஸா பின் நுஸைர் அவர்கள் தாரிக் பின் ஸியாத் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து, இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் புதிய அத்தியாயம் ஒன்று ஆரம்பமானது.

ஸ்nபியினின் உண்மையான ஆட்சியாளர்களிடமிருந்து, ரோட்ரிகஸ் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டது முதல் ஸ்பெயினில் கொடுமையான ஆட்சி முறை அரங்கேற ஆரம்பித்தது என்று ஸ்பெயின் வரலாறு கூறுகின்றது. நாம் ஏற்கனவே பார்த்த கவர்னர் ஜுலியன், தன்னுடைய மகளை டொலிடோ நகரில் அமைந்துள்ள ஸ்பானிஸ் அவைக்கு தனது மகளை கல்வி கற்றுக் கொள்வதற்காக அனுப்பி வைத்திருந்தார். அரச வம்சத்தவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற இங்கிதம் கூடத் தெரியாத ரோட்ரிகஸ், ஜுலியன் மகளைக் கைது செய்து சிறையிலடைத்து விட்டார். தனது மகள் சிறையிலடைக்கப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்ட ஜுலியன் சினத்தால் கொதித்தெழுந்தார். ரோட்ரிகஸ் மன்னனுக்கு சரியான பாடம் கற்பித்துக் கொடுக்க விரும்பிய ஜுலியன், தங்களுக்கு மிகவும் சமீபமாகவும், இன்னும் வடக்கு ஆப்ரிக்கா தேசம் முழுவதையும் தங்களது ஆளுகையின் கீழ் கொண்டு வந்திருக்கின்ற அரபுக்களிடமிருந்து உதவியைப் பெற்று அதன் மூலம் ரோட்ரிகஸ் மன்னனுக்கு பாடம் கற்பித்துக் கொடுக்க விரும்பிய ஜுலியன், தன்னுடைய திட்டத்திற்காக ஸ்பானிஷ் அரசவை அங்கத்தவர்களை சம்மதிக்கவும் வைத்து விட்டார்.

எனவே, இது குறித்த திட்டத்தை ஜுலியன் தாரிக் இப்னு ஸியாத் அவர்களிடம் கலந்தாலோசனை செய்த பொழுது, இது குறித்த விஷயத்தை தன்னுடைய அமீரும் துனிசியாவின் ஆட்சியாளராகவும் உள்ள மூஸா பின் நுஸைர் அவர்களிடம் பேசும்படி அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.

இதற்கு முன்னதாகவே, ஸ்பெயினின் ஊடாக இஸ்லாத்தை எவ்வாறு எடுத்துச் செல்வது என்ற திட்டம் ஒன்று குறித்து, மூஸா பின் நுஸைர் அவர்களும் தாரிக் பின் ஸியாத் அவர்களும் கலந்தாலோசனை செய்து, அதற்கான திட்டத்தை எவ்வாறு வரையறை செய்து கொள்வதென்ற ஆலோசனையில் இருந்தனர்.

இந்த நிலையில், ஜுலியன் அவர்களது வேண்டுகோளானது, ஸ்பெயினைப் பற்றி அறிந்து கொள்வதற்கானதொரு நல்வாய்ப்பை முஸ்லிம்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த நிலையில், ஸ்பெயின் மீது படையெடுப்பு நடத்துவதற்குண்டான சம்மதத்தைப் பெற்றுக் கொள்வதற்காக முழு இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் தலைமைப்பீடமாக அன்றிருந்த சிரியாவின் டமாஸ்கஸ் நகருக்கு ஒரு கடிதம் ஒன்றை, மூஸா பின் நுஸைர் அவர்கள் அனுப்பி வைத்தார்கள். போர்க்கலைகளில் நல்ல அனுபவம் வாய்ந்த கலீஃபா அவர்கள், மூஸா பின் நுஸைர் அவர்களின் திட்;டத்தினை அங்கீகரித்து, படையெடுப்பு நடவடிக்கைகளுக்கு சம்மதம் தெரிவித்ததோடு, சில ஆலோசனைகளையும் வழங்கினார். அதன்படி, முழுமையான போர் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக சிறு படை ஒன்றை ஸ்பெயினுக்கு அனுப்பி வைத்து, நிலைமைகளை ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தினார்.

இந்த ஆலோசனையின் அடிப்படையில், தரீஃப் என்பவரது தலைமையில் 400 வீரர்கள் கொண்டதொரு சிறு படையொன்று தயார்படுத்தப்பட்டது. இந்த முதல்படை வெற்றிகரமாகச் சென்று திரும்பி வந்தது. இந்த முதல் படையெடுப்பு வெற்றிகரமாக அமைந்து விட்டதையடுத்து, முழுமையான நுழைவுக்கான தயாரிப்பு ஆரம்பமானது.

இந்த நிலையில், ஜுலியன் அவர்களது வேண்டுகோளானது, ஸ்பெயினைப் பற்றி அறிந்து கொள்வதற்கானதொரு நல்வாய்ப்பை முஸ்லிம்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த நிலையில், ஸ்பெயின் மீது படையெடுப்பு நடத்துவதற்குண்டான சம்மதத்தைப் பெற்றுக் கொள்வதற்காக முழு இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் தலைமைப்பீடமாக அன்றிருந்த சிரியாவின் டமாஸ்கஸ் நகருக்கு ஒரு கடிதம் ஒன்றை, மூஸா பின் நுஸைர் அவர்கள் அனுப்பி வைத்தார்கள். போர்க்கலைகளில் நல்ல அனுபவம் வாய்ந்த கலீஃபா அவர்கள், மூஸா பின் நுஸைர் அவர்களின் திட்;டத்தினை அங்கீகரித்து, படையெடுப்பு நடவடிக்கைகளுக்கு சம்மதம் தெரிவித்ததோடு, சில ஆலோசனைகளையும் வழங்கினார். அதன்படி, முழுமையான போர் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக சிறு படை ஒன்றை ஸ்பெயினுக்கு அனுப்பி வைத்து, நிலைமைகளை ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தினார்.

இந்த ஆலோசனையின் அடிப்படையில், தரீஃப் என்பவரது தலைமையில் 400 வீரர்கள் கொண்டதொரு சிறு படையொன்று தயார்படுத்தப்பட்டது. இந்த முதல்படை வெற்றிகரமாகச் சென்று திரும்பி வந்தது. இந்த முதல் படையெடுப்பு வெற்றிகரமாக அமைந்து விட்டதையடுத்து, முழுமையான நுழைவுக்கான தயாரிப்பு ஆரம்பமானது. இந்த முதன்மைப் படைக்கு தாரிக் பின் ஸியாத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு, அவரது தலைமையின் கீழ் 5000 வீரர்கள் போர் செய்வதற்குத் தயார் செய்யப்பட்டு, ஸ்nபியினின் முடியாட்சியைக் காக்கும் பொறுட்டு களமிறங்கத் தயாராக இருந்தனர். தாரிக் பின் ஸியாத் அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கென, பெர்பர்கள் மற்றும் அரபுகளைக் கொண்ட சிறப்பு ஆலோசனைக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டது. மேலும், இந்தப் படைகள் யாவும் ஸ்பெயினின் கடற்கரையை அடைவதற்கு உதவியாக, ஜுலியன் தனது கப்பல் படைகளைக் கொடுத்து உதவியதோடல்லாமல், அவனே முன்னின்று ஸ்பெயின் நாட்டினுள் படைநகர்வதற்குண்டான வழியையும் காட்டிச் சென்றான். மேலும், இந்தக் கடற்போரானது பல வகையிலும் முக்கியத்துவம் பெற்றதாகவும், போர் வரலாற்றில் மிகவும் புகழ் பெற்ற திட்டமிடலையும் கொண்டதாகவும் அமைந்து விட்டது. அதன் காரணமென்னவெனில், முஸ்லிம் படைகள் தங்களது சொந்த கப்பலின் மூலமாக ஸ்பெயின் கடற்கரையை அடைந்திருந்தார்களென்றால், எதிரிகளின் கண்களுக்கு மிகவும் எளிதாக இவர்களது வருகை தெரிந்திருக்க வாய்ப்பிருந்தது. இந்த வாய்ப்பை எதிரிகள் இழந்ததோடல்லாமல், முஸ்லிம்கள் ஒட்டு மொத்தமாக படையை நகர்த்தாமல், சிறிய சிறிய கும்பலாக கடலைக் கடந்து பின் ஸ்பெயினுக்குள் சென்று, அங்கிருந்ததொரு குன்றின் கீழ் தங்களை ஒருங்கிணைத்துக் கொண்டனர். இந்தக் குன்று தான் இன்றைக்கு ஜிப்ரால்டர் (தாரிக் குன்று - ஆழரவெ ழக வுயசஙை) என்றழைக்கப்படுகின்றது. இந்தச் சாதனையை முஸ்லிம்கள் ஹிஜ்ரி 92 ல் அதாவது கி.பி.711 ல் நடத்திக் காட்டினர்.

இந்தப் போரின் முக்கியத்துவத்தையும், அதில் ஈடுபட்ட வீரர்களின் உளப்பாங்கையும் ஒருங்கிணைப்பதற்காக முஸ்லிம்களின் படைத்தளபதியாகிய தாரிக் பின் ஸியாத் அவர்கள் கையாண்ட முறைதான் இன்றைக்கும் போர் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்யப்பட்டு, காலங் கடந்தபின்பும் ஞாபகமூட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது

வீரர்கள் அனைவரும் கப்பலில் இருந்து இறங்கியவுடன், அவர்களைச் சுமந்து வந்த கப்பல்கள் அனைத்தையும் தீயிட்டுக் கொளுத்தி விடுமாறு தாரிக் பின் ஸியாத் அவர்கள் தனது படையினருக்குக் கட்டளையிட்டார்கள். அதன்படியே அந்தக் கப்பல்கள் யாவும் ஐபீரியன் தீபகற்பத்தில் வைத்துக் கொளுத்தப்பட்டது. அதன்பின் வீரர்களிடையே தாரிக் பின் ஸியாத் அவர்கள் ஒரு உணர்ச்சிப்பூர்வமான உரை ஒன்றை நிகழ்த்தினார்கள்.

ஓ என்னருமை மக்களே..! யுத்த பூமிக்கு வந்திருப்பவர்களே..! உங்களுக்குப் பின்னால் கடல்.., உங்களுக்கு முன்னால் நிற்பதோ எதிரிகள்..! யுத்தம் ஒன்றே இப்பொழுது மிச்சம்..! இறைவன் மீது சத்தியமாக..! (இந்த நிலையில் நீங்கள்) பொறுமையோடும் இன்னும் இறைநம்பிக்கையில் உறுதியோடும் இருப்பதை அன்றி வேறெதுவும் உங்களுக்கு உதவப் போவதில்லை. வெற்றி அல்லது வீரமரணம், இவற்றில் ஒன்றைத் தேர்வு செய்து கொள்ளுங்கள் என்றார்.

ரமளான் மாதம் 28 ம் நாள் ஞாயிற்றுக் கிழமை, அதவாது கி.பி. ஜுலை, 19, 711 அன்று, முஸ்லிம் படைகள் தாரிக் பின் ஸியாத் அவர்களின் தலைமையின் கீழும், ஸ்பானியப் படைகள் ரோட்ரிகஸ் தலைமயின் கீழும் களமிறங்கினர். இப்பொழுது முஸ்லிம்களுக்கு உதவுவதற்காக மேலும் 5000 பேர் கொண்ட படையை, முஸ்லிம்களுக்குச் சொந்தமான கப்பலிலேயே அனுப்பி வைக்கப்பட்டனர். இப்பொழுது ஜுலியன் தலைமையின் கீழ் இயங்கும் ஸ்பானியப் படையினர் முஸ்லிம்களைப் பற்றிய நன்மதிப்பை தங்களது சொந்த நாட்டு மக்கள் மத்தியில் பரப்ப ஆரம்பித்தனர்.

முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பாளர்களும் அல்லர் அல்லது நம்மை ஆக்கிரமித்து தங்களது சர்வாதிகாரத்தை நிலைநிறுத்த வந்தவர்களுமல்லர். மாறாக, அவர்கள்.., சாந்தியையும் சமாதானத்தையும் இன்னும் விடுதலையையும் பெற்றுத் தருவதற்காக வந்துள்ள சமாதானத்தூதுவர்கள் என்ற நற்சான்றினை மக்கள் மத்தியில் பரப்பினார்கள்.

இந்தச் செய்தியானது ரோட்ரிகஸ் தலைமையின் கீழ் வந்திருந்த இராணுவத்தினரிடையே நல்ல தாக்கத்தினை ஏற்படுத்தியது. ரோட்ரிகஸ் தலைமையின் கீழ் வந்திருந்த ஸ்பானிய வீரர்கள் படையிலிருந்து பின்வாங்க ஆரம்பித்தனர். ஸ்பானியப் படைகளுக்குள் இப்பொழுது குழப்பம் ஆரம்பமானது. குழப்பத்தின் விளைவாக ஸ்பானிய வீரர்கள் தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள படையை விட்டும் விலகி ஓடினார்கள். இருப்பினும், போர் தொடர்ந்தது, இறுதியில் படைகளை விட்டு விட்டு ரோட்ரிகஸ் தப்பி ஓடி விட்டான். இதன் மூலம் ஐபீரியன் தீபகற்பத்தில் முஸ்லிம்களின் முதல் போர் வெற்றிகரமாக முடிந்தது. இதன் பின் மீண்டும் முஸ்லிம்கள் தரப்பிலிருந்து படைகள் ஸ்பெயினுக்குள் வந்து குவிந்தார்கள். இந்த முறை மூஸா பின் நுஸைர் அவர்களே நிவாரணப் படையை முன்னின்று நடத்தி வந்தார்கள்.

படை எடுப்பு நடத்தி வந்த 14 மாதங்களுக்குள் ஸ்பானிய தேசத்தின் மிக முக்கிய நகரங்களான டொலிடோ, செவில்லி, மோர்டா மற்றும் பல நகரங்கள் முஸ்லிம்களின் கைவசமாகின. இன்னும் இரண்டே வருடத்தில் குறிப்பாக அனைத்து ஸ்பானிய நகரங்களும் முஸ்லிம்களின் கைவசம் ஆகின. இந்த நிலை கிட்டத்தட்ட 800 ஆண்டுகள் தொடர்ந்தன.

முஸ்லிம்களின் இந்தப் படையெடுப்பின் மூலமாக, ஐரோப்பாவானது இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வந்தது போல, முஸ்லிம்களின் மூலமாக கலாச்சாரப் புத்துணர்வைப் பெற்றுக் கொண்டது என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றார்கள். இதன் மூலம், சீனாவின் கிழக்குப் பகுதி முதல், இந்தியாவின் மேற்குப் பகுதி உண்டான பகுதிகள் உள்ளிட்ட நிலப்பகுதிகள் மற்றும் அவர்கள் தங்கள் மேன்மையான கலாச்சாரத்தை அட்லாண்டிக் பெருங்கடல் வரைக்கும் கொண்டு வந்தார்கள்.

முஸ்லிம்களின் ஆளுகையின் கீழ் ஸ்பெயின் வந்ததன் பின், நிர்மாணிக்கப்பட்ட இஸ்லாமியக் கல்விக் கூடங்களிலிருந்து கல்வியைக் கற்றுக் கொள்வதற்காக ஐரோப்பாவின் அறிஞர்கள் விரைந்தனர். இதன் மூலம் பல அறிஞர்களை உருவாக்கிய பெருமையை முஸ்லிம்களின் கல்விக் கூடங்கள் பெற்றுக் கொண்டன.

இன்றைக்கு ஸ்பெயின் முஸ்லிம்களின் கரங்களிலிருந்து சென்று விட்டாலும், ஐரோப்பிய உலகத்திற்கு நாகரீகத்தை வழங்கியதற்காகவும், வரலாற்றுச் சிறப்பு மிக்க தளங்களை விட்டுச் சென்றமைக்காகவும், அதாவது கிரணடா, கார்டோபா, செவில்லி மற்றும் பல நகரங்களில் இன்றளவும் முஸ்லிம்கள் ஏற்படுத்திய வரலாற்றுச் சுவடுகள் நினைவுச் சின்னங்களாக நிலைத்து நின்று கொண்டிருக்கின்றன. இதற்காக அவர்கள் என்றென்றும் முஸ்லிம்களுக்கு நன்றிக் கடன் செலுத்தக் கடமைப்பட்டவர்களாக இருக்கின்றார்கள். இந்த வரலாற்று நினைவுச் சின்னங்களைப் பார்வையிடுதற்காக வருடந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நகரங்களுக்கு வந்து சென்ற வண்ணம் இருக்கின்றார்கள்.

இத்தகைய அழியாத வரலாற்றுச் சுவடுகளை ஏற்படுத்தி விட்டுச் சென்றமைக்கான காரணகர்த்தவாக, இன்றளவுக்கும் வரலாற்று நாயகராக தாரிக் பின் ஸியாத் நினைவு கூறப்பட்டுக் கொண்டிருக்கின்றார். அதுமட்டுமல்ல, இஸ்லாமிய நாகரீகத்தையும், கலாச்சாரத்தையும் ஸ்பெயின் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு எடுத்துச் சென்றதில், தாரிக் பின் ஸியாதின் பங்கு மகத்தானது.

ஆம்..! காரிருள் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த ஐரோப்பாவுக்கு இஸ்லாத்தின் வெளிச்சப் புள்ளிகளை அறிமுகப்படுத்தி வைத்த பெருமை தாரிக் பின் ஸியாத் அவர்களையே சாரும்..!