Apr 14, 2011

இஸ்லாத்தை வீழ்த்த அமெரிக்கா மேற்கொள்ளும் திட்டமிட்ட நடவடிக்கைகள் என்ற நூலிலிருந்து- பகுதி 02

அமெரிக்க பிரச்சார நடவடிக்கையின் தூண்கள்

இஸ்லாத்திற்கெதிரான அமெரிக்காவின் திட்டங்கள் பல தூண்கள் மீதுஅமைக்கப்பட்டுள்ளன.

முதல் தூண்


அதனுடைய சர்வதேச ஆற்றலும். செல்வாக்கும். உறவுகளும் இஸ்லாமியநாடுகளில் உறுதிபெற்று இருக்கின்றன, குறிப்பாக இரண்டாவது வளைகுடாபோருக்குப் பிறகு அதனுடைய செல்வாக்கு இஸ்லாமிய நாடுகளில்வலுவடைந்திருக்கிறது, இந்த ஆற்றல் மற்றும் செல்வாக்கின் காரணமாகஇப்போதுள்ள இஸ்லாமிய நாடுகள் அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு பணிந்து.அதனுடன் இணங்கி போக ஆரம்பித்து விட்டன, முதலாளித்துவ கொள்கைகோட்பாடுகளை முஸ்லிம்கள் தழுவுவதின் மூலமாக இஸ்லாத்தை வீழ்த்தும் தனதுதிட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளும் நோக்கத்தோடு அமெரிக்கா அந்த நாடுகளுக்குமிகுந்த நெருக்கடி கொடுத்து வருகிறது.

இரண்டாவது தூண்

முதலாளித்துவ நாடுகளுக்கு அமெரிக்கா தலைமை ஏற்று இருந்தாலும். இந்தநடவடிக்கைகளில் தனது தோழமை நாடுகளும் பங்கெடுத்துக் கொள்ளும்வண்ணமாக அது செயல்படுகிறது, அந்த நாடுகளின் செல்வாக்கையும்.ஒத்துழைப்பையும் அது பயன்படுத்திக் கொள்கிறது, இஸ்லாமிய நாடுகளிலுள்ளஅவர்களின் கங்காணிகள் (Agents) இந்த திட்டத்தின் வெற்றிக்கு உத்திரவாதம்தருகிறார்கள், ஏனெனில் இஸ்லாத்தின் விஷயத்திலும் அதன் அச்சுறுத்தல்விஷயத்திலும் அதன் எழுச்சியினால் தங்கள் நலன்களும் செல்வாக்கும் பாதிப்புஅடையும் என்ற விஷயத்திலும் இவர்கள் அமெரிக்காவுடன் வேறுபடுவதில்லை.

மூன்றாவது தூண்

சர்வதேச விதிகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை என்ற கருவி. அமெரிக்காவின்தனித்தன்மை அதனுடைய திட்டங்களை செயல்படுத்தவும் சர்வதேச விதிகளுடன்ஒத்துப்போகும் விதத்தில் காரியங்களை அமைத்துக் கொள்ளவும் ஒத்துழைக்கும்அதனுடைய பல சர்வதேச அமைப்புகள். துணை அமைப்புகள் மற்றும் சர்வதேசநிறுவனங்கள் ஆகியவைகள், மேலும் அரசியல் நடவடிக்கைகள். பொருளாதாரமற்றும் இராணுவ நடவடிக்கைகள் இவைகளில் எது எப்போது தேவை என்றுகருதுகிறதோ அத்தகைய திட்டமிட்ட நடவடிக்கைகள் இவையாவும் அதனுடையமூன்றாவது தூணாக அமைந்துள்ளன.

நான்காவது தூண்

அமெரிக்கா மற்றும் அதன் சர்வதேச நாடுகளின் ஆதிக்கத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் செய்தி ஊடகங்கள் (News Media) இந்த செய்தி ஊடகங்கள் ஒருபயங்கர ஆயுதமாக அமெரிக்கா அதன் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திக்கொள்கிறது, அவைகள் மூலமாக தனது கோஷங்களை உலகெங்கும் பிரச்சாரம்செய்கிறது, இந்த ஊடகங்கள் இஸ்லாத்தின் கொள்கைகளையும் அதனைபின்பற்றும் முஸ்லிம் மக்களையும் ஒரு தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கும்படிபொய்யான தகவல்களை பரப்பி விடுவதில் கைத்தேர்ந்தவை, இஸ்லாத்தைஅடிப்படை வாதம் என்றும் பயங்கரவாதிகள் என்றும் சித்தரிப்பதை முழு மூச்சாகக்கொண்டு இவைகள் இயங்கி வருகின்றன.அமெரிக்காவின் இந்த கொடிய ஆயுதத்தை நாம் குறைவாக எடை போட்டுவிடக் கூடாது, தொலைதொடர்புதுறையில் கடந்த நூற்றாண்டின் மத்தியில் ஏற்பட்ட முன்னேற்றம் உலகத்தை ஒருகிராமத்துக்குள் அடக்கி விட்டது, இப்போது வரி வடிவத்திலும். ஒலி வடிவத்திலும்.ஒளி வடிவத்திலும் இந்த ஊடகங்களின் பிரச்சாரம் உலகத்தின் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் ஒவ்வொரு குடியிருப்பு இல்லங்களிலும் சென்றடைந்துகொண்டிருக்கின்றன.

ஐந்தாவது தூண்


இதுதான் அனேகமாக அமெரிக்காவின் கோரம் நிறைந்த அதனுடைய ஆபத்தானதூணாகும், இஸ்லாமிய நாடுகளிலிருக்கும் அதன் கைபாவையான ஆட்சியாளர்கள்அதனுடைய கங்காணிகள். ஆட்சியாளர்களோடு கைகோர்த்து நிற்கும் நயவஞ்சகமுஸ்லிம்கள். சந்தர்ப்பவாதிகள். ஐந்தாம் படை வேலை செய்யும் எடுபிடிகள்.பணத்திற்காகவும். புகழுக்காகவும் பல்லிளிக்கும் உலக ஆதாய வாதிகள். மற்றும்குöப்பார்களின் கலாச்சாரத்தில் மோகம் கொண்ட போலிகள்,இவர்களெல்லாம் இஸ்லாமிய சமூகத்தின் அங்கங்களாகத்தான் இருக்கிறார்கள்என்பது வேதனைக்குரிய விஷயமாகும், இவர்களில் அனேகர் குöப்பார்களின்இழிவான கலாச்சாரத்தில் மோகம் கொண்டவர்களாக இருக்கும் நிலையில்இஸ்லாத்தின் மீது பற்றுள்ளவர்களைப் போல பாசாங்கு செய்பவர்கள், இவர்களில்சிலர் தங்களை அரசியல் அறிஞர்கள் என்று பறைசாற்றிக் கொள்பவர்கள், இன்னும்சிலர் சில இஸ்லாமிய(?) அமைப்புகளை வைத்துக் கொண்டு தங்களை பெரியமேதைகளாகவும் இஸ்லாமிய அறிவு பெற்றவர்களாகவும் இஸ்லாத்தில் தங்களுக்குநம்பிக்கை உண்டு என்று காட்டிக் கொள்பவர்களாகவும் இருக்கிறார்கள், இவர்கள்அனைவரும் உண்மையில் உலக ஆதாய வாதிகள், முஸ்லிம்கள் தங்கள்வாழ்வியல் விவகாரங்களிலிருந்து மார்க்கத்தை பிரிக்க வேண்டும் என்று கோரும்மதசார்ப்பின்மை கொள்கை (Secularism) உடையவர்கள்.

இவைகள் அனைத்தும் இஸ்லாத்தை வீழ்த்துவதற்காக திட்டமிட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளும் அமெரிக்காவும் உபகரணங்களாகும், இதன்படிமுஸ்−ம்களை அவர்களுடைய மார்க்கத்தி−ருந்து பிரித்து முதலாளித்துவகோட்பாட்டின்படி வாழ வைக்க திட்டமிடப்படுகிறது, அந்த நோக்கத்தைநிறைவேற்றுவதற்கு செய்தி ஊடகங்கள் மூலமாக தவறான கருத்துக்களையும்செய்திகளையும் பரப்புதல். இஸ்லாத்தின் சட்டங்களையும் நெறிமுறைகளையும்திரித்துக் கூறுதல், இஸ்லாம் அல்லாத குöப்ர் சட்டங்களை முஸ்−ம்கள் மீதுதிணித்தல். இந்த நடவடிக்கைகளை துரிதப்படுத்த அவ்வப்போது பல சட்டங்களைக்கொண்டு வருதல் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன, மேலும் இஸ்லாமியநாடுகளையும் அதன் மக்களையும் அடிமைப்படுத்த ஒப்பந்தங்கள் என்ற பெயரிலும்உடன்படிக்கைகள் என்ற பெயரிலும் தொடர்ந்து அவர்களை குöப்பார்களின்ஆதிக்கத்தில் வைப்பதற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன,இதன்மூலம் அவர்களை ஏழ்மைப்படுத்தவும் அவர்களின் உயர் மாண்புகளைஅழிக்கவும். சதித்திட்டம் தீட்டப்படுகின்றன, அச்சத்தினையும் அச்சுறுத்தும் அத்துமீறல்களையும் அவர்கள் மீது ஏவிவிட்டு விழித்துக் கொண்ட இஸ்லாத்தின்வீரப்புதல்வர்களை அச்சம் கொள்ளச் செய்ய அவர்கள் மீது தாக்குதல்நடத்தப்படுகிறது, இதன்மூலம் அவர்கள் செயல்படாமல் மௌனமாகிவிட கவனமாகதிட்டம் தீட்டப்படுகிறது, இதனால் முஸ்−ம்கள் எவரும் இஸ்லாத்திற்காகஉண்மைக்காக குரல் எழுப்ப முடியாமல் போகும் என்று இந்த குöப்பார்கள்மனப்பால் குடிக்கிறார்கள், குöப்ருக்கும் குöப்பார்களுக்கும் பணிந்து போகும் படிஇஸ்லாமிய சமூகத்துக்கு அமெரிக்கா கட்டளையிடுகிறது.

இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் வீழ்த்திடவும் அவர்களை குöப்ர்சட்டங்களுக்கு அடிபணிய வைக்கவும் அமெரிக்கா மேற்கொள்ளும் திட்டமிட்டநடவடிக்கைகளின் அனைத்து அம்சங்களையும் இது வரையில் கண்டோம்,இத்திட்டத்தின் ஒரு பகுதியான முதலாளித்துவ சித்தாந்தத்தின் பிரச்சாரம் நான்குவகையான கோஷங்களில் வெளிப்படுகின்றன,இந்த கோஷங்கள் இந்த சித்தாந்தத்தின் கருப்பொருளாகும்,

அவையாவன.

1. ஜனநாயகம் (DEMOCRACY)
 

2. பன்மை வாதம் (PLURALISM)



3. மனித உரிமை (HUMAN RIGHTS)

4. தாராள வர்த்தக கொள்கை (FREE MARKET POLICIES) ஆகியவைகளாகும்.


இந்த நான்கு கோஷங்களைப்பற்றியும் அடிப்படைகள் பற்றியும் பேசுவதற்குமுன்பு அவைகள் தவறான அடிப்படைகளில் உருவாகி இருக்கின்றன என்பதைவிளக்குவது அவசியமாகும்,இந்த கோஷங்களின் அடிப்படை முதலாளித்துவ சித்தாந்தமாகும், அதாவதுவாழ்வியல் விவகாரங்களிலிருந்து மதத்தை பிரிப்பது என்ற கொள்கையாகும், இந்தக்கொள்கை அறிவார்ந்த முறையிலோ அல்லது தர்க்க ரீதியாகவோ உருவாகவில்லை,மாறாக இருமுரண்பட்ட கருத்துக்களுக்குமிடையில் ஏற்பட்ட சமாதான பேரமாகும்,அதன் ஒரு கருத்தாவது. இது வரலாற்றின் இடைப்பட்ட காலத்தில் (Medieval Age) ஐரோப்பாவில் கிருஸ்தவ தேவ ஆலயங்களின் மதாச்சாரியார்களிடம் இருந்துவந்த கருத்து, இதன்படி வாழ்வின் அனைத்து விவகாரங்களும் மதத்தின்கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும், அதாவது கிருஸ்தவ மதத்தின் கட்டுப்பாட்டில்-இதன்மூலம் மக்களின் அனைத்து விவகாரங்களிலும் தலையிடும் அதிகாரம்கிருஸ்தவ ஆலயங்களின் மதாச்சாரியார்கள் கையில் இருந்தது,

இரண்டாவதுகருத்து, ஐரோப்பாவில் இருந்த சிந்தனைவாதிகள். தத்துவ மேதைகள் அரசியல்அறிஞர்கள். விஞ்ஞானிகள் ஆகியோரின் கருத்து, இதன்படி இந்த பிரபஞ்சத்துக்குசிருஷ்டி கர்த்தா என்ற படைப்பாளன் ஒருவன் இல்லை, எல்லா நிகழ்வுகளும்இயற்கையாகவே சுயமாக நடைபெறுகிறது என்பதாகும், அதாவது இறைநம்பிக்கையை நிராகரிக்கும் கொள்கை, இவ்விரு சாரர்களுக்குமிடையில் ஏற்பட்டசமாதான பேரமே முதலாளித்துவ சித்தாந்தம் என்பதாகும், அதாவது மனிதனின்வாழ்வியல் விவகாரங்களில் மதம் எந்த தலையீடு செய்யாமல் அதனை பிரித்துவிடுவது என்ற கொள்கையாகும்,இரண்டு உடன்பாடான கருத்துக்களுக்கிடையில் அவைகளில் சில வேறுபாடுஇருந்தாலும் சமாதானம் ஏற்படுவது என்பது நாம் புரிந்து கொள்ளக்கூடியது,

ஆனால் முற்றிலும் முரண்பட்ட இரண்டு கருத்துக்களுக்கிடையில் உடன்பாடுஏற்படுவதென்பது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளக் முடியாததும். புரிந்து கொள்ளமுடியாததும் அறிவுக்கு பொருத்தம் இல்லாததும் ஆகும், ஒன்று இறைவன் ஒருவன்இருக்கின்றான் அவனே மனித இனத்தையும். அனைத்து உயிர்களையும்பிரபஞ்சத்தினையும் படைத்தான் என்றும் அவன்தான் மனிதன் வாழ்வுக்குவழிகாட்டுவதற்காக சட்டங்களையும் நெறிமுறைகளையும் வகுத்து தந்துள்ளான்என்றும் அவனே மரணத்துக்குப் பின்பு இந்த நெறிமுறைகளின்படி மனிதன்வாழ்ந்தானா? என்று விசாரணை செய்வான் என்றும் விவாதம் சொல்ல வேண்டும்அல்லது இறைவன் ஒருவன் இல்லை ஆகவே மனிதனுக்கு இறைநம்பிக்கையைபோதிக்கும் மதம் தேவையில்லை. மனிதனின் வாழ்வியல் விவகாரங்கள்அனைத்தி−ருந்தும் மதம் கற்பிக்கும் நம்பிக்கைகள் அகற்றப்படுவதற்கு ஏதுவாக இறை நம்பிக்கை என்ற ஆன்மீக சிந்தனையே மனிதனிடமிருந்து அகற்றப்படவேண்டும் என்றும் விவாதம் சொல்ல வேண்டும்,

அரசிய−ருந்து மதத்தை பிரிப்பது அல்லது மனிதன் வாழ்வியல்விவகாரங்களி−ருந்து மதத்தை பிரிப்பது என்பது எவ்வகையிலும் அறிவுக்குஒவ்வாத கருத்தாகும்,இறைவனைப் பற்றிய சிந்தனையும் அவன் இருக்கின்றானா அல்லது இல்லையாஎன்ற விவாதமும் முக்கியமான விஷயமில்லை என்ற முதலாளித்துவ வாதிகளின்மனித உள்ளம் ஏற்றுக் கொள்ள முடியாத கருத்தாகும், எனவே இறைவன்இருக்கின்றான் என்ற நம்பிக்கை உடையவர்களும் இறைவன் இல்லை என்றகருத்து உடையவர்களும் ஒருபோதும் ஒரே பாதையில் செல்ல முடியாது,

இந்த இருசாரரும் முதலாளித்துவ சித்தாந்தத்தை அறிவுப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளவேமுடியாது,மனிதன் வாழ்வு மரணம் பிரபஞ்சம் ஆகியவைகளைப்பற்றி ஆழ்ந்து சிந்தனைசெய்யும் ஒரு மனிதன் அறிவார்ந்த பல ஆதாரங்களின் அடிப்படையில் இறைவன்என்ற படைப்பாளன் இருக்கின்றான் என்றும். அவனே அனைத்தையும்படைத்துள்ளான் என்றும். அவனே மனிதனுக்கு தேவையான வாழ்வியல்சட்டநெறிமுறைகளையும் வழிகாட்டுதலையும் வழங்கியுள்ளான் என்றும்.மரணத்திற்கு பின்பு அவனே விசாரனை செய்வான் என்றும் உறுதியானநம்பிக்கைக்கு வந்தே ஆக வேண்டும் என்றும் இப்போது நமது விவாதம் இறைவன்இருக்கிறானா அல்லது இல்லையா என்பது பற்றியோ அவன் மனிதனுக்குவழிகாட்ட சட்டங்களை வழங்கியிருக்கிறானோ என்பது பற்றியோ அல்ல, மாறாகநாம் முதலாளித்துவ சித்தாந்தம் பற்றியும் அதன் தவறான அடிப்படையை வெளிக்கொணர்வது குறித்தும் விவாதித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த சித்தாந்தம் இரு முரண்பட்ட வெவ்வேறு இரண்டு கருத்துக்களின் கலவை என்பதையும் இதில் உண்மையின் அடிப்படை இல்லை என்பதையும் நாம் உணர வேண்டும்.

முதலாளித்துவ சித்தாந்தம் தவறு என்று நாம் நிரூபணம் செய்துள்ளது,அதன்மீது கட்டமைக்கப்பட்டுள்ள அனைத்து கொள்கைகளையும்நெறிமுறைகளையும் தவறு என்று நிரூபிக்க போதுமானதாகும், இதன் அடிப்படைஅம்சங்களை ஆழமாக ஆராய வேண்டிய அவசியம் நமக்கு இல்லை, ஆனால்இதன் கருத்துக்கள் உலகம் முழுவதும் பரப்பப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில்.இவற்றின் சில அம்சங்களை முஸ்−ம்கள் ஏற்றுக் கொள்ள தயாராகிவிட்டார்கள்என்ற சூழ−ல்.இந்த கோஷங்களிலும் இதை நடைமுறைப்படுத்த செய்யப்படும் அமெரிக்காவின் திட்டமிட்ட நடவடிக்கைகளிலும் இஸ்லாத்தையும் அதன்மக்களையும் நெறியற்ற முறையில் நசுக்குவதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டிருப்பதால்.இதைப்பற்றி இங்கு விவாதிப்பது நமக்கு அவசியமாகிறது, அவைகளின் தவறானஅடிப்படையையும் அவை முற்றிலும் இஸ்லாத்திற்கு முரண்பட்டவை என்பதையும்நாம் எடுத்துக்காட்ட கடமைப்பட்டுள்ளோம், எனவே முஸ்−ம்கள் இந்தகோட்பாட்டையும் அதனின்று பிறந்த அனைத்து கொள்கைகளையும்.நெறிமுறைகளையும். வழிமுறைகளையும் முற்றாக நிராகரிக்க வேண்டும், அவற்றைகடைபிடித்து இஸ்லாத்தில் தடை கோட்பாடுகளை பிரச்சாரம் செய்வதையும் அதைசெயல்படுத்தும் நோக்கத்தோடு செய்யப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் முஸ்லிம்கள் முழுபலம் கொண்டு எதிர்க்க வேண்டும்,

Sources From warmcall.blogspot.com

To be Cont.....

No comments:

Post a Comment