Jun 5, 2011

ஷிர்க் அர் ருபூபியா


ஷிர்க் அர் ருபூபியாவை இரண்டாக பிரிக்கலாம்

1. படைப்பாளனுடைய ஆளுமையில் பிற தெய்வங்களை கூட்டாக்கல்

2. இறைவனே இல்லை என்ற நாத்திக கொள்கை

முதலாவது வகை ஷிர்க் அர் ருபூபியாவுக்கு அடையாளமாக பிற மதத்தை பின்பற்றுபவர்களை சொல்லலாம். உதாரணத்துக்கு இந்து மதத்தை பின்பற்றுபவர்கள் நிறைய தெய்வங்களை வணங்குபவர்களாக இருந்தாலும் மூன்று முக்கிய கடவுள்களை வணங்குவதோடு மட்டுமல்லாமல் அந்த ஓரே படைப்பாளனின் அதிகாரங்களை பிரம்மனுக்கு படைத்தல் என்றும் விஷ்ணுக்கு பரிபாலித்தல் என்றும் சிவனுக்கு அழித்தல் என்றும் பங்கிட்டு கொடுத்தனர். அது போல் கிறித்துவர்கள் கடவுளை பிதா, சுதன், பரிசுத்த ஆவி என்று ஒன்றை மூன்றாகவும் மூன்றை ஒன்றாகவும் சித்தரித்து இணை கற்பித்தனர். யூதர்கள் அல்லாஹ்வுக்கு மகன் இருப்பதாக இணை கற்பித்தனர். பாரசீகர்கள் நல்லவைகளுக்கு காரணமாக நெருப்பையும் தீயவைகளுக்கு காரணமாக இருட்டையும் சித்தரித்து இணை வைத்தனர்.

இரண்டாவது வகை ஷிர்க் அர் ருபூபியாவுக்கு அடையாளமாக தத்துவஞானிகள், அறிஞர்கள் (?, ? ) என சொல்லப்படுபவர்களை பார்க்கலாம். கடவுள் இல்லை என்று சொன்ன புத்தர் (பின்னாளில் புத்தரையே கடவுளாக்கி தனி மதமானது வேறு விஷயம்), நானே கடவுள் என தன்னை தானே பிரகடனப்படுத்திய பிர் அவ்ன், குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என இறைவனின் படைப்பாற்றலை மறுத்த டார்வின் போன்றோர் உட்பட நாத்திகவாதிகளை இப்பட்டியலில் சேர்க்கலாம்.

sources from islamiyakolgai.blogspot.com

No comments:

Post a Comment