Jun 4, 2011

தவ்ஹீத் அர் ருபூபியா


ருபூபியா என்ற சொல் ’ரப்’ என்ற வேர்ச்சொல்லிலிருந்து பிறந்ததாகும். தவ்ஹீத் அர் ருபூபியா என்பது படைப்பினங்கள் அனைத்தையும் அவன் ஒன்றுமில்லா நிலையிருந்து உயிர் பெறச் செய்து, வாழ செய்பவன் அவன் ஒருவனே என்பதை ஏற்றுக் கொள்வதாகும்.

தவ்ஹீத் அர் ருபூபியாவை ஏற்றுக் கொண்டால் கீழ்கண்டவற்றை நம்ப வேண்டும்.

Ø எல்லாவற்றிக்கும் காரணகர்த்தா அல்லாஹ் ஒருவனே

Ø அனைத்தையும் ஒன்றுமில்லா நிலையிலிருந்து உயிர் பெற செய்து வாழ செய்பவன் அல்லாஹ் ஒருவனே.

Ø அல்லாஹ் தன் படைப்பினங்களின் உதவி தேவைப்படாதவன், மாறாக உலகின் அனைத்து படைப்பினங்களும் அல்லாஹ்வின் உதவி தேவைப்படுபவர்களாக உள்ளனர்.

Ø அல்லாஹ்வே இப்பிரபஞ்சத்திற்கும் அதில் உள்ளவற்றிக்கும் அதிபதியாவான்

Ø அல்லாஹ்வின் ஆளுமையை எதிர்க்கும் ஆற்றல் யாருக்கும் இல்லை.

Ø அல்லாஹ்வின் அனுமதியின்றி படைப்பினங்களில் எந்த செயலும், அசைவும் இருக்காது.

தவ்ஹீத் அர் ரூபூபியாவின் அடிப்படைகளை நாம் திருமறையின் பின்வரும் வசனங்களில் பார்க்கலாம்.

“அல்லாஹ் தான் எல்லா பொருட்களையும் படைப்பவன். இன்னும் அவனே எல்லா பொருட்களின் பாதுகாவலன் ஆவான்” (திருக்குர் ஆன் 39 : 62)

”நிகழும் நிகழ்ச்சிகளெல்லாம் அல்லாஹ்வின் அனுமதி கொண்டேயல்லாமல் வேறு இல்லை. மேலும் எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்கிறாரோ அவருடைய இதயத்தை அவன் நேர் வழியில் செலுத்துகிறான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன்” (திருக்குர் ஆன் 64 :11)

மக்காவில் இஸ்லாத்தை எதிர்த்த மக்கத்து குறைஷிகள் கூட ருபூபியத்தை வாயளவிலாது ஏற்றுக் கொண்டனர் என்பதை கீழ்காணும் திருமறை வசனம் தெளிவுபடுத்துகிறது.

“(நபியே!) நீர் அவர்களிடம் “வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?” என்று கேட்டால், “யாவற்றையும் மிகைத்தவனும், எல்லாவற்றையும் அறிந்தவனுமாகிய அவனே அவற்றை படைத்தான்” என்று நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள்.


sources from islamiyakolgai.blogspot.com

No comments:

Post a Comment