Feb 2, 2013

நாளைய பொறியை தவிர்க்கும் இன்றைய குறிகள் .

'ஓநாயாக இருந்து பார்த்தால் தான் ஓநாயின் நியாயம் புரியும்' என்பார்கள் . சிரிய விவகாரத்தில் இன்றைய நிகழ்வுகள் பற்றி சொல்ல இந்த வார்த்தைகள் 100% பொருத்தமானவை . நான் சொல்ல வருவது சிரியாவின் டமஸ்கஸ் அருகில் ஜாம்றாயா என்ற இடத்தில் அமைந்திருந்த சிரிய இராணுவத்தின் ' இராணுவ ஆய்வு மையம் ' இஸ்ரேலிய விமானத் தாக்குதலுக்கு உள்ளான சம்பவத்தையே ஆகும் .

சிரியாவின் இரசாயன ஆயுதங்கள் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாக்களுக்கு சென்று விடக்கூடாது என்பதனால் இந்தத் தாக்குதல் நடத்தப் பட்டதாக இஸ்ரேல் நியாயம் கூறினாலும் , அந்தத் தாக்குதல் தொடர்பில் சிந்திக்க வேண்டிய இன்னொரு பக்கம் இருக்கின்றது . அது இதுதான் .

இந்த ஆய்வு மையத்தை கைப்பற்றுவதற்கான முயற்சிகளை நோக்கி இஸ்லாமிய இராணுவம் தனது வியூகத்தையும் , படை நகர்த்தலையும் மேற்கொள்ளத் தொடங்கி விட்டதன் பின்னர்தான் இஸ்ரேலின் விமானத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக ஒரு தகவல் வெளிவந்திருப்பதை நாம் மறுப்பதற்கில்லை . ஏனென்றால் சிரியாவின் அரச இராணுவம் ஏறத்தாள முக்கியத்துவம் மிக்க பல தளங்களையும் நிலைகளையும் விட்டு பின் வாங்கியது உலகறிந்த உண்மை . அந்தவகையில் இந்த இராணுவ ஆய்வு மையமும் இஸ்லாமிய இராணுவத்திடம் பறிபோகும் சந்தர்ப்பங்களே அதிகமாக இருந்தன . உண்மையான இஸ்ரேலின் அச்சம் இந்த இடம்தான் .

அந்த வகையில் இஸ்ரேல் சொல்லும் இந்த ஹிஸ்புல்லா பூச்சாண்டி அரசியல் தனமான ஒரு போலித் தகவல் ஆகும் ; அத்துடன் தமது எதிர்கால அச்சத்தை நிவர்த்திக்கும் இராணுவ இராஜ தந்திரங்களை சியோனிசக் கூட்டு தொடங்கி விட்டது என்பதற்கான ஒரு ஆதார நடவடிக்கையாகவே இதை கருத வேண்டியுள்ளது .

ஏனென்றால் சிரியாவில் கிலாபா அரசு தோற்றம் பெற்றால் அது ஆக்கிரமிக்கப் பட்ட பாலஸ்தீனாகவே இஸ்ரேலை பார்ப்பதோடு அதற்கு எதிராக யுத்தப் பிரகடனத்தை வெளிவிடுவது தவிர்க்க முடியாதது . என்பதை சியோனிசம் உணர்ந்துள்ளது . இஸ்ரேல் தரப்புக்கு இப்போதுள்ள தலைவலி இராணுவ வலுச் சமநிலையில் இஸ்லாமிய இராணுவம் தனக்குப் போட்டியாக களமிறங்கி விடக்கூடாது என்பதே . அந்த நாளைய பொறியை தவிர்க்கும் இன்றைய குறிகளில் ஒன்றே சிரிய இராணுவத்தின் ' இராணுவ ஆய்வு மையம் ' மீதான பாரிய விமானத் தாக்குதல் ஆகும் .

இன்னும் இதுபோல் இஸ்ரேலின் பல இராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்தும் எதிர்பார்க்கலாம் எதுவரை என்றால் இஸ்ரேலின் பாதுகாப்புச் சுவர்களில் 'அல்லாஹு அக்பர் ' என்ற கோசத்தோடு பாலஸ்தீன சமூகம் அடுத்த 'கைபரை' கண்களால் காண அணிவகுத்து நிற்கும் அந்த தூய நாள் வரை .

No comments:

Post a Comment