Feb 6, 2013

மேற்கின் கண்டு பிடிப்புகளை பயன்படுத்திக் கொண்டு மேற்கை விமர்சிப்பது சரியா!?

அறிவியல் தொழில் நுட்ப சாதனங்கள் , மற்றும் கலாச்சார நாகரீக மாற்றங்கள் என்பவற்றின் வித்தியாசத்தை முஸ்லீம்கள் புரிந்து கொள்ள வேண்டும் . மேற்கை விமர்சித்துக் கொண்டு அதன் சாதனங்களை முஸ்லீம்கள் பயன் படுத்துகிறார்கள் என்னும் அழுத்தமான குற்றச்சாட்டு அந்நிய சமூகங்களால் முவைக்கப்படும் போது அதற்கான பதில்களில் சற்று தளம்பல் தெரிவதை நான் அவதானித்தேன் . மேற்கின் கல்வியும் அதன் நாகரீக பாதிப்பும் தொனிக்கும் பதில்களே அங்கு அதிகமாக உள்ளது .

இயற்கையாக கிடைக்கும் வளங்கள் மீது ஒரு குறிப்பிட்ட சமூகம் சொந்தம் கொண்டாட முடியாது . அதே போல மனித சமூகத்திட்கென்ற கண்டுபிடிப்பான பொது உற்பத்தியின் மீது உரிமை தரத்தை தனியுரிமையாக்குவது ஒரு தவறான செயல் . முஸ்லீம்கள் அதிகாரத்திலும் ,அறிவியல் நாகரீகத்திலும் முன்னணி நின்ற ஒரு காலப்பகுதியில் பல விடயங்களை கண்டு பிடித்து மனித சமூகத்திற்கு அளித்துள்ளார்கள் . 'அல்க்கஹோல்' உட்பட விஞ்சானம் , மருத்துவம் , வானியல் இப்படி பல்வேறு கண்டுபிடிப்புகளை அவர்கள் அளித்துள்ளார்கள் .

இவைகளை எல்லாம் இன்று வரை பயன்படுத்திக் கொண்டேதான் மேற்குலகும் , அதன் அடிவருடிகளும் முஸ்லீம்களை மற்றும் இஸ்லாத்தை எதிர்க்கிறார்கள் . இப்னு சீனாவின் மருத்துவ குறிப்புகள் இன்றும் கூட பிரான்சின் மருத்துவ பீட கல்வித்துறையில் பயன் படுவதாக அறிந்தேன் . அதில் குறிப்பிடப்படும் உடல் உறுப்புகள் பற்றிய கருத்துக்களுக்கும் , அதே பிரான்சின் திறந்த பாலியல் கலாச்சாரத்தின் கீழ் ஒரு விலை மாது தனது உடலை விளம்பரப் படுத்துவதற்கும் இடையில் வித்தியாசம் உண்டு .

இதில் இப்னு சீனாவின் கருத்து அறிவியல் மற்றும் மருத்துவத்துறை என்ற வகையில் முழு மனித சமூகத்திற்கும் பொதுவானது . அதே நேரம் அந்த விலைமாதுவின் நடத்தை குறிப்பிட்ட அந்த சமூகத்துக்கே உரிய நாகரீகம் . அதே போலவே அறிவியல் ,தொழில் நுட்ப ரீதியான எந்த ஒன்றையும் முஸ்லீம் சமூகம் தான் கண்டு பிடித்திருந்தாலும் தனது என உரிமை கொண்டாடாது . அடுத்தவர்களின் கண்டு பிடிப்புகளையும் பொதுவானதாக பயன்படுத்தும் .

அதே நேரம் நாகரீக மாற்றத்தையும் , சமூகத் தீமைக்கு இட்டுச் செல்லும் என தெளிவான விடயங்களை இஸ்லாம் தெளிவாகவே எதிர்க்கும் . மேற்குலகிட்கும் , இஸ்லாத்திற்கும் இடையிலானமுரண்பாடே இந்த நாகரீகங்களுக்கிடையிலான யுத்தமே ஆகும் . கம்பியூட்டரையும் , செல் போனையும் வெஸ்டர்ன் மேட் என பாவிப்பதில் நாம் வெட்கப்பட வேண்டியதில்லை . 

அதே போல அறிவியலையும் தொழில் நுட்பமும் மேற்கின் நாகரீகத்திற்கு இட்டுச் செல்லத் தக்க பயன்பாட்டை செய்வதும் குற்றமாகும் . ஒரு இயற்கை காட்சியை ரசிக்கும் நிலைக்கும் , ஒரு பெண்ணின் நிர்வாணத்தை கலை என்ற ரீதியில் ரசிப்பதும் மாறுபட்டது .இங்கு இயற்கை காட்சி பொதுவானது ,ஆனால் பெண் தொடர்பான பார்வை நாகரீகம் சம்பந்தப் பட்டது . நேரடியாக முடியாத எந்த ஒரு செயலையும் தொழில் நுட்ப சாதனங்களிலும் இஸ்லாம் அனுமதிக்காது .

'அல்கஹோளின் ' பயன்பாடு போதை என்ற நிலைக்கு மாறாத வரை இஸ்லாம் அதை தடை செய்யாது . போதை எனும் நிலை வந்தால் அது தடைக்குரியதாக ஆகிவிடும் . இந்த சிறிய விளக்கம் அறிவியல் தொழில் நுட்பத்திற்கும் , நாகரீகத்திற்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ளவும் , அறிவியல் தொழில் நுட்பம் நாகரீகத்தை நோக்கி எவ்வாறு திருப்பப் படுகின்றது என்பதையும் ஓரளவு புரிந்து கொள்ள போதுமானதாகும் என நம்புகிறேன் . இதிலிருந்து மேற்கு தொடர்பில் இஸ்லாம் எதை எதிர்க்கிறது ? என்பதையும் நன்கு புரியக் கூடியதாக இருக்கும் .

No comments:

Post a Comment