Apr 13, 2013

வரலாற்று ஒளியில் தாயிப் சம்பவம்.(பகுதி 2)

மக்காவுக்கு வெளியில் (நுஸ்ரா) இஸ்லாத்தை தங்கு தடை இன்றி அமுல் படுத்த உதவி தேடிய முதல் நடவடிக்கையாக அல்லாஹ்வின் தூதரின் (ஸல்) தாயிப் நோக்கிய பயணம் அமைந்துள்ளது இது நபித்துவத்தின் 10 ம் ஆண்டு நிகழ்ந்த சம்பவமாகும். தாயிப் மக்காவில் இருந்து 60 மைல் தொலைவில் இருக்கும் ஒரு பலம் பொருந்திய நகரமாக அன்று திகழ்ந்தது .

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தனது அடிமையான ஜைத் இப்னு ஹாரிசாவுடன் கால்நடையாகவே தாயிப் நோக்கி சென்றார்கள். அங்கு 10 நாட்கள் தங்கி இருந்து முக்கியமான சமூகத் தலைவர்களை ,பிரமுகர்களை சந்தித்து இஸ்லாம் தொடர்பான அறிமுகத்தையும்
(இஸ்லாத்தை பிரயோகிக்க ஒரு செயல் நிலத்தையும் வேண்டி) உதவியையும் வேண்டினார்கள்.
ஆனால் அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியில் முடிவடைந்தது.

புறக்கணிப்பு , அவமதிப்பு , ஏளனம் , இறுதியாக வன்முறை என்ற சராசரி பதிலே இஸ்லாம்
எனும் தூய கொள்கை வாத அழைப்புக்கு பதிலாக கிடைத்தது. இறுதியாக தாயிபில் இருந்து
ஏறத்தாழ 3 மைல் தூரம் வரை வன்முறைக் கரங்களோடு தாயிப் சமூகம் அந்த இருவரையும்
தூரத்தியது. உத்பா , சைபா என்ற இருவருக்கு சொந்தமான திராட்சை தோட்டம் வரை இந்த
கொடூரம் தொடர்ந்தது.

திராட்சை கொடிகளின் நிழலில் இரத்தச் சகதி படிந்தவர்களாக அந்த இருவரும் அமர்ந்திருந்த
போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒரு பிரபபல்யாமான பிரார்த்தனையை புரிந்தார்கள்.
அதில் நடந்த நிகழ்வுகளின் கவலையை விட அவர்களது நிலை குலையாமை மிகத் தெளிவாகவே வெளிப்படுத்தப் படுகின்றது. அந்தப் பிரார்த்தனை பற்றியும் அதன் பின்னால்
நடந்த மிக முக்கியமான நிகழ்வுகள் பற்றியும் இன்ஷா அல்லாஹ் மறுமுறை தருகிறேன்.

(தொடரும்)

No comments:

Post a Comment