Apr 14, 2013

குர்ஆனியக் குணாதிசயங்களை உருவாக்குதல் Part-1

நடத்தையில் அல்குர்ஆனைப் பிரதிபலிபோம், அதனை விளங்கிக் கொள்வோம், அதைமனனமிடுவோம், ஓதுவோம்.

முஸ்லிம்களைப் பொறுத்தளவில் அல்குர்ஆன் ஆனது இஸ்லாமிய மார்க்கத்தின்அடித்தளமாகும் என்பது ஐயத்துக்கிடமற்றதுஅதுவே அல்லாஹ் (சுப்தன்னுடையசெய்திகளை மனிதனுக்கு அறிவிப்பதற்காகத் தேர்ந்தெடுத்துக் கொண்டஊடகமாகும்இவ்வேதமே நம் தலைவர் முஹம்மத் (ஸல்அவர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் சரியையும் பிழையையும் பிறித்தறிவிக்கும் அளவுகோலாகவும்இறக்கியருளப்பட்டு அதை முழு மனித சமுதாயத்துக்கும் எடுத்தியம்பி மனித குலத்தைஇருளிலிருந்தும் விடுவித்து இஸ்லாத்தின் ஒளிக்குக் கொண்டு வருமாறும்பணிக்கப்பட்டது.

இதன் காரணமாகவே முஸ்லிம்கள் பல நூற்றாண்டுகளாக அல்லாஹ்வின்திருமறையை ஈருளக வாழ்வுக்கும் வழிகாட்டியாக அதியுயர் ஸ்தானத்தில் வைத்துமதித்து வந்துள்ளார்கள்.

அல்குர்ஆனானது 23 வருட காலப்பகுதியில் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்பஅருளப்பட்டமை ஸஹாபா சமூகம் அதன் கட்டளைகளைத் தம் வாழ்வில்செயல்முறையில் நடைமுறைப்படுத்தி அதனை அரேபிய சமூகத்துக்கு எத்திவைக்கவும் ஏதுவாக இருந்தமை நன்கறியப்பட்ட விடயம். ஒவ்வொரு வருடத்தின்ரமழான் மாதத்திலும் றசூல் (ஸல்) அவர்கள் அதுவரை இறக்கப்பட்டிருந்த குர்ஆன்வசனங்களை ஜிப்ரீல் (அலை) முன்னிலையில் ஓதிக் காண்பிப்பார்கள். இவ்விதம்நபியவர்களின் மனனமும் குர்ஆனை மனனமிட்டிருந்த ஏனையவர்களின் மனனமும்சரிபார்த்துக் கொள்ளப்பட முடிந்தது.

றசூல் (ஸல்அவர்கள் தம் வாழ்வின் கடைசி வருடத்தின் ரமழானில் திருக் குர்ஆனைஇரண்டு முறை ஜிப்ரீல் (அலைஅவர்களுக்கு ஓதிக் காண்பித்தார்கள்நபியவர்கள்வபாத்தாகும் போது ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் அல்குர்ஆனைமுழுவதுமாகவோ பகுதியாவோ மனனம் செய்திருந்ததுடன் அதனை எழுதிப்பாதுகாக்கவும் ஏற்பாடாகியிருந்ததுஇவ்வாறே அல்குர்ஆனானது கவனமாகச்சேகரிக்கப்பட்டு அதன் உள்ளடக்கத்திலோ ஓதும் முறையிலோ எவ்விதமாற்றமுமின்றிப் பாதுகாக்கப் படும் பொருட்டுத் தலைமுறை தலைமுறையாகக்கைமாற்றப்பட்டு இறைவனின் வேத வெளிப்பாடு அதன் தூய வடிவில் பாதுகாக்கப்பட்டுவந்துள்ளது.

நபியவர்கள் கூறியதாக உஸ்மான் (றழி) அவர்கள் அறிவிப்பதாவது:

‘உங்களில் சிறந்தவர் அல்குர்ஆனைக் கற்று அதனை அடுத்தவருக்கும் கற்பிப்பவரே’. –(புஹாரி)

இது போன்ற பல ஹதீஸ்களே அன்றும் இன்றும் முஸ்லிம்கள் அல்குர்ஆனைக் கற்றுக்கொள்ளவும் விளங்கிக் கொள்ளவும் மற்றவருக்குக் கற்பிக்கவும் பெரும் உந்துசக்தியாக இருந்துள்ளன.

குர்ஆன் வாசிக்கப் படுவது மட்டுமல்லாது அதை ஓதுதல் (திலாவத்ஒருவணக்கமாகவும் உள்ளதெனும் வகையில் குர்ஆன் மார்க்க நூல்களில்தனித்துவமானதாய்த் திகழ்கிறதுகுர்ஆனை ஓதுவதன் சிறப்புகளையும் அதற்கானகூலிகளையும் விளக்கும் ஏராளமான ஹதீஸ்கள் காணப்படுகின்றன.

நபியவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஹூத் (ரழி) அறிவிப்பதாவது: ‘எவரொருவர் அல்குர்ஆனின் ஒரு அட்சரத்தை ஓதுகிறாரோ அவருக்கு ஒருஹஸனாத் (நன்மை) வழங்கப்படுகிறது. ஒரு ஹஸனாத் ஆனது அதைப்போல் பத்துமடங்கு நற்கூலிக்குச் சமனானது. நான் அலிஃப் லாம் மீம் ஒரு அட்சரம் என்றுசொல்ல வில்லை. மாறாக அலிஃப் ஒரு அட்சரம், லாம் ஒரு அட்சரம் மேலும் மீம் ஒருஅட்சரம்.’ (திர்மிதி)

No comments:

Post a Comment