Apr 14, 2013

குர்ஆனியக் குணாதிசயங்களை உருவாக்குதல் Part-2


நியாயத் தீர்ப்பு நாளில் இத்திருமறை பரிந்துரை செய்யக் கூடியதாகும்றசூல் (ஸல்)அவர்கள் கூறினார்கள் ‘ அல்குர்ஆன் ஒரு பரிந்துரையாளன்அது (அல்லாஹ்வின்அனுமதியுடன்பரிந்துரை செய்யும்மேலும் அது ஒரு உண்மையான்எதிராலியுமாகும்யார் அதனைத் தன் வழி காட்டியாக ஆக்கிக் கொள்கிறாரோ அதுஅவரைச் சுவனத்துக்கு இட்டுச் செல்லும்யார் அதைப் புறந்தள்ளி விடுகிறாரோஅவரை அது நரகுக்கு இட்டுச் சென்று விடும்.’ (பைஹகி)
இவ்விதம் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுக் கொண்டு மறுமைக்காக வாழ முயற்சிசெய்வதின் அடிப்படையிலேயே இஸ்லாமிய உம்மத் தன் வரலாற்றில் பலமேன்மக்களைக் கண்டு கொண்டது. அவர்கள் அல்குர்ஆனைத் தம் வாழ்வின்மையமாக ஆக்கிக் கொண்டு இத்திரு வேதத்தைக் கற்றுக் கொள்வதற்காகவும் அதன்தூதைத் தூய வடிவில் விளங்கிக் கொள்வதற்காகவும் அரபு மொழியிலும் ஏனையகுர்ஆனியக் கலைகளிலும் பாண்டித்தியம் பெற்றார்கள். இவர்களே அறிவின் வழியில்பயணித்து ஷரீ’ஆவின் அடிப்படையில் தம் ஆளுமைகளை வடிவமைத்துக் கொண்டுதீனுக்காக உண்மையாக் வாழ்ந்தவர்கள்.

அல்லாஹ் (சுப்கூறுகின்றான்,


كِتَابٌ أَنزَلْنَاهُ إِلَيْكَ مُبَارَكٌ لِّيَدَّبَّرُوا آيَاتِهِ وَلِيَتَذَكَّرَ أُوْلُوا الْأَلْبَابِ

(நபியே!) பாக்கியம் பெற்ற இவ்வேதத்தை உம்மீது அருளியுள்ளோம் - அவர்கள் இதன்வசனங்களைக் கவனித்து ஆய்வதற்காகவும்அறிவுடையோர் நல்லுணர்வுபெறுவதற்காகவும். (38:29)


துரதிஷ்ட வசமாக இன்று நாம் குர்ஆனைத் திலாவத் செய்யக்கூடியவர்கள் பலர்இருந்தும் அதிலிருந்து வாழ்வின் வழிகாட்டுதலைத் தேடக்கூடியஅதன்சட்டதிட்டங்களைத் தம் வாழ்வில் அமுல் நடத்தக்கூடிய வெகு சிலரேஇருக்கக்கூடிய ஒரு காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்அல்குர்ஆனின்கருத்துக்களையும் அதன் கட்டளைகளையும் ஆழ்ந்துணர்ந்து அதனைப்பிரதிபலிப்பதன் முக்கியத்துவத்தை உணரக் கடப்பட்டவர்களாய் நாம் இருப்பதோடுநம் உள்ளங்களை ஊடுறுவிச் சென்று நிரந்தரமான தடயங்களை விட்டுச் செல்லும்விதத்தில் அது ஓதப்படவும் வேண்டும்இவ்வாறான ஓதலின் விளைவாகஆக்கத்திறனுள்ள இஸ்லாமிய ஆளுமைகள் உருவாதல் ஏதுவாகும்.இவ்வாழுமையுள்ள முஸ்லிம்கள் இஸ்லாமிய அகீதாவை இருகப்பற்றி ஷரீஆவைத் தம்வாழ்வின் விதிமுறையாக ஒழுகுவதுடன் இஸ்லாமிய வாழ்க்கை நெறியை இராசாங்கஅளவில் மறுமலர்ச்சியடையச் செய்வதற்கான தஃவாவிலும் ஈடுபடுவார்கள். 

அல்குர்ஆனை ஆழ்ந்துணர்ந்து பிரதிபலிப்பது தொடர்பில் றசூல் (ஸல்அவர்களின்கீழ்வரும் ஹதீஸ் காணப்படுகிறது.

எனது உம்மத்திலிருந்து ஒரு கூட்டம் உருவாகுவார்கள்அவர்கள் குர்ஆனைப் பால்அருந்துவது போல் அருந்துவார்கள்.’ (தபரானி)


இந்த ஹதீஸுக்கான விளக்கம் எழுதுகையில் அல்-முனாவி ஃபயத் அல் கதிர் நூலில்சொல்கின்றார்; “....அதாவது அவர்கள் தங்கள் நாவைக்கொண்டு குரலைஉயர்த்துவார்கள்ஆனால் அதன் கருத்துகளைச் சிந்தித்துணர மாட்டார்கள்.மாற்றமாகபால் எவ்வாறு விரைவாக அவர்களின் நாவைக் கடந்து செல்லுமோ(குர்ஆனானதுஅதுபோல் கடந்து செல்லும்.




குர்ஆனை அதன் கருத்து விளங்காமல் ஓதினாலும் அதற்காக நன்மை உண்டென்பதுஉண்மையேயாயினும் இது எங்களை அதன் கருத்துகளை ஆய்ந்தறிந்து உணர்வுபெறுவதை விட்டும் பாராமுகமாக்கி விடக்கூடாது. இல்லையெனில் ஒரு சிலரேஇத்திருமறையைக் கற்று அமல் செய்யக் கூடியவர்களாயிருக்கபெரும்பான்மையானவர்கள் இதனை விளங்குவதை விட்டுவிட்டு வெறுமனே ஓதுகின்றஇபாதாவில் மட்டுமே ஈடுபடக் கூடிய நிலையே தொடரும்.



அல்லாஹ் (சுப்) கூறுகின்றான்,



أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ أَمْ عَلَى قُلُوبٍ أَقْفَالُهَا



மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லதுஅவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டுவிட்டனவா? (47:24)



முனாஃபிக்குகளின் நிலை இவ்வாறே இருந்தது. அவர்கள் குர்ஆனை ஓதியும் அதைஅல்லாஹ்வின் பேச்சு என்ற வகையில் உளச்சுத்தியுடன் விளங்கிக்கொள்ளமுயலவில்லை.. இதன் காரணமாகவே தங்கள் தாய் மொழியில் குர்ஆனைப்பாராயணம் செய்யக் கூடியவர்களாயிருந்தும் அதிலிருந்து படிப்பினை பெறவோஅதன்படி ஒழுகவோ இல்லை.
ஆகவே, ஒருவர் குர்ஆனை ஓதுவதானது அதை ஆழமாக விளங்கிக்கொண்டுஅதனைத் தங்கள் நடைமுறை வாழ்வில் செய்ல்படுத்தும் அவாவுடன் செய்யப்படல்வேண்டும். சரியாக விளங்கிப் பின்பற்றப் படும்போது இவ்வற்புதத் திருமறை தன்னைஅமுல் படுத்துபவர்களுக்கு

ஒரு உயிரோட்டமுள்ள வழிகாட்டியாக ஆகிவிடுகிறது.
وَهَٰذَا كِتَابٌ أَنزَلْنَاهُ مُبَارَكٌ فَاتَّبِعُوهُ وَاتَّقُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ 
أَن تَقُولُوا إِنَّمَا أُنزِلَ الْكِتَابُ عَلَىٰ طَائِفَتَيْنِ مِن قَبْلِنَا وَإِن كُنَّا عَن دِرَاسَتِهِمْ لَغَافِلِينَ

أَوْ تَقُولُوا لَوْ أَنَّا أُنزِلَ عَلَيْنَا الْكِتَابُ لَكُنَّا أَهْدَىٰ مِنْهُمْ ۚ فَقَدْ جَاءَكُم بَيِّنَةٌ مِّن رَّبِّكُمْ وَهُدًى وَرَحْمَةٌ ۚ فَمَنْ أَظْلَمُ مِمَّن كَذَّبَ بِآيَاتِ اللَّهِ وَصَدَفَ عَنْهَا ۗ سَنَجْزِي الَّذِينَ يَصْدِفُونَ عَنْ آيَاتِنَا سُوءَ الْعَذَابِ بِمَا كَانُوا يَصْدِفُونَ 


(மனிதர்களே!) இதுவும் வேதமாகும்; இதனை நாமே இறக்கிவைத்துள்ளோம் - (இது)மிக்க பாக்கியம் வாய்ந்தது ஆகவே இதனைப் பின்பற்றுங்கள் - இன்னும் (அவனை)அஞ்சி (பாவத்தை விட்டு விலகி)க் கொள்ளுங்கள். நீங்கள் (இறைவனால்) கிருபைசெய்யப்படுவீர்கள். நமக்கு முன் இரு கூட்டத்தினர் மீது மட்டுமே வேதம்இறக்கப்பட்டது - ஆகவே நாங்கள் அதனைப் படிக்கவும் கேட்கவும் முடியாமல்பராமுகமாகி விட்டோம் என்று நீங்கள் கூறாதிருக்கவும்; அல்லது மெய்யாகவேஎங்கள் மீது ஒரு வேதம் அருளப்பட்டிருந்தால், நிச்சயமாக நாங்கள் அவர்களைவிடமிக்க நேர்மையாக நடந்திருப்போம் என்று நீங்கள் கூறாதிருக்கும் பொருட்டும்(இவ்வேதத்தை அருளினோம்); ஆகவே உங்களுடைய இறைவனிடமிருந்தும்மிகத்தெளிவான வேதமும், நேர்வழியும், அருளும் வந்துவிட்டது - எவனொருவன்அல்லாஹ்வின் வசனங்களைப் புறக்கணித்து, அவற்றைவிட்டு விலகிவிடுகின்றானோஅவனைவிட அதிக அநியாயக்காரன் யார்? நம்முடைய வசனங்களை விட்டுவிலகிக்கொள்கிறவர்களுக்கு, அவர்கள் விலகிக் கொண்ட காரணத்தால் கொடியவேதனையைக் கூலியாகக் கொடுப்போம். (6:155-157)

No comments:

Post a Comment