Apr 9, 2013

இலங்கையின் முஸ்லீம் சகோதரியே ! சூரா அல் புரூஜில் நீயும் பங்காளி ஆகலாம்!


Sources from....  Abdur Raheem
இலங்கையின் முஸ்லீம் சகோதரியே ! சூரா அல் புரூஜில் நீயும் பங்காளி ஆகலாம்!

முஸ்லீம் உம்மா முழு உலகிலும் வன்முறைக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகி இருக்கும் ஒரு சமூகம் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. குப்ரியத்தின் மேலோங்கிய அரசியல் மேலாதிக்கத்தின் கீழ் ஏறத்தாள அவர்களால் காலத்துக்கு காலம் குப்ரிய இலாபங்களுக்காக உழைக்கும் தரத்திலும் ,அத்துமீறப்படும் பலவீண வடிவத்திலும் ஒரு
அரசியல் கைதியின் தரத்தில் தான் பார்க்கப் படுகிறான் என்பது ஒரு மிகைப்படுத்திய கருத்தும் அல்ல.

ஆனால் 1.5 பில்லியன் மக்கள் தொகையையும் பாரிய நிலப்பரப்பையும், ஏராளமான கனிய வளங்களையும் கொண்ட இந்த உம்மா தேசியம், மன்னாராட்சி எனும் தவறான சிந்தனா வாதத்தின் கீழ் பலவீணப் படுத்தப் பட்டுள்ளது. இந்த அவலமான அரசியல் முஸ்லீம் உம்மா பெரும்பான்மையாக வாழும் நிலங்களில் தொடரும் அதே நேரத்தில் குப்ரியத்தின் நேரடி மேலாதிக்கத்தின் கீழ் இழிவான ஒரு பார்வையோடு கூடிய சிறுபான்மை வாழ்வு எனும் அரசியலின் கீழும் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.

இந்த நிர்ப்பந்த அரசியலின் கீழ் குப்ரிய சிந்தனா வாத தாக்கம் தவிர்க்க முடியாமல் இந்த
உம்மாவை தாக்க அதன் இயல்பான வடிவமான இஸ்லாமியம் காட்டிய வாழ்வியல் நோக்கிய
போராட்ட ஒழுங்கை கைவிட்டு தனது உலகியல் இருப்புக்கான குப்ரிய சிந்தனா சார்
அரசியலில் இருந்து தான் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு தேடவும் தலைப்பட்டது.

ஜனநாயகம், மனித உரிமை , மற்றும் ஜாஹிலீய நிர்வாக ஒழுங்குகளின் கீழ் நிகழ்கால பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் வரிசையில் இஸ்லாம் ஒரு தனித்துவமான மதமாக மட்டும் குப்பார்களால் காட்டப்பட்டு வெறும் அறிவியல் தொழில் நுட்ப முன்னேற்ற மமதையில்
இஸ்லாமிய சித்தாந்த வடிவம் காலம் கடந்த ஒன்றாக நம்ப வைக்கப்பட்டது.

சில பல இயல்பான பாரிய சிந்தனைத் தவறுகளுடன் முஸ்லீம் உம்மா இருந்தாலும் , இஸ்லாமிய வாழ்வியலின் சில பகுதிகள் அதனோடு ஒட்டி நின்று குப்ரிய வாழ்வியலின் முன் எட்டிப் பார்த்த போது குப்ரியத் அதை ஒரு மத அந்தஸ்தில் பார்க்கவில்லை; மாறாக தனது அரசியல் சமூக வாழ்வியல் மீதான எதிர் வடிவமாகவே நோக்கியது. விளைவு குறித்த விடயத்தை விட்டும் முஸ்லீம் உம்மத்தை திருப்ப தனது சுய ரூபத்தை காட்டியது.

இந்த சுயரூபம் வன்முறை வடிவங்களையும் , சமரச பேரங்களையும் கொண்ட ஜாஹிலீயத்தின்
இயல்பான பாரம்பரிய வழிமுறைகளையும் கொண்டது . இந்த ஜாஹிலீய வடிவமான அரசியலின் ஒரு வடிவமே இலங்கையின் பொது பல சேனா எனும் மதவாத அமைப்பு சொல்லும் அரசியலும் ஆகும். அரச சார்பு அற்ற எனும் வடிவத்தை அது கொண்டிருந்தாலும் பகிரங்கமான அரச சார்பு அதன் நடவடிக்கைகளில் காணப்படுவதை யாராலும் மறுக்க முடியாது.


இங்கும் இராஜ தந்திர பாதுகாப்பற்ற அரசியல் அனாதை தனமே 1.5 பில்லியனுக்கு முன் தனித்து நோக்கப்படும் கீழான தரத்துக்கு காரணமாகும். உண்மையில் ஹறாம் , ஹலால் என்பது தான் முஸ்லீம் உம்மாவின் வாழ்வு அதிலும் வலுக்கட்டாயமாக சமரச பேறத்தை
முன்னிறுத்தி வெற்றி பெற்ற அந்த பொது பல சேனா அடுத்து ஹிஜாப் தடை விவகாரத்தை
போராட்டமாக முன் வைக்கப் போவதாகவும் சவால் விட்டு இந்த முஸ்லீம் உம்மாவின் சூனிய அரசியலை மீண்டும் ஒருமுறை சொல்லிக் காட்டியுள்ளது.

இந்த இடத்தில் 'இப்னு கல்தூண்' எனும் வரலாற்று ஆசிரியர் சொல்லும் ஒரு விடயத்தை
முஸ்லீம் உம்மத் புரிந்து கொள்ள வேண்டும். " தன் இறந்த கால வரலாற்றையும் நிகழ் கால
வரலாற்றையும் புரிந்து கொள்ளாத சமூகத்துக்கு எதிர் காலமே கிடையாது" எனும் வார்த்தைகள் பல உண்மைகளை எமக்கு உணர்த்திச் செல்கிறது.

அது உமய கிலாஃபா ஆட்சியில் இருந்த காலம் அப்போது இன்றைய இந்தியா, பாகிஸ்தான்,
ஆப்கான் போன்ற பிரதேசங்களை உள்ளடக்கியதே சிந்து என அழைக்கப் படுகிறது அக்காலத்தில் சிந்துவின் ஒரு மன்னனின் கேவலமான நடத்தை ,மமதை என்பன ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்களுக்கு அப்பால் இருந்த களீபாவிடம் முறையீடு செய்யப்படுகிறது. 'உபைதுல்லாஹ் ' எனும் தூதுவர் அனுப்பப் பட்ட போது அவரும் அந்த மன்னன் கொலை செய்தும் விடுகிறான். இப்படி தொல்லைகள் தொடர்ந்தன.

கடல் கொள்ளை , கைதிகளை தான் விரும்பியவாறு நடத்துதல் போன்ற இழிவான செயல்களை செய்து வந்த இவன் ஒரு முஸ்லீம் பெண்ணை கைதியாக்கி தனது அநியாயத்தை தொடர்ந்த போது இஸ்லாமிய கிலாஃபா அரசிடம் உதவி வேண்டிய அவளது கூக்குரல் ஒரு பாரிய வரலாற்று மாற்றத்தை தந்தது. முஹம்மது பின் காசிம் தளமையில் அந்த அநீதியை தட்டிக் கேட்க ஒரு படையே அனுப்பப்பட்டுள்ளது. அதன் பின் சிந்து கிலாஃபாவின் கீழ் வந்த கதை ஒரு தனி வரலாறு.

இன்று ஆப்கானில் ,காஸ்மீரில் , மியன்மாரில் , பல்வேறு துன்பங்களை கண்டு வரும் எம் சகோதரிகளின் அவலக் குரல் வரிசையில் இலங்கையின் சகோதரிகளும் தமது பங்கை செலுத்த தயாராகி விட்டார்கள். முஸ்லீம் உம்மாவே ! நீ சிந்திக்க வேண்டிய தருணம் கிலாஃபா
வந்தால் இந்த அநீதியாளர்கள் பதில் சொல்ல வேண்டியது கட்டாயம் . ஆனால் இப்போது இஸ்லாம் எனும் உனது கொள்கையா ? அதில் விட்டுக் கொடுப்போடு வாழ்வா ? எனும் கேள்விக்கு முன் உனது பதில் என்ன?

முஸ்லீம் சகோதரிகளே! சிரியாவில் ஒரு பல்கலைக்கழக மாணவி இடம் ஒரு பத்திரிகை யாளன் கேட்ட கேள்வி "இந்த கடும் சூடான காலத்திலும் நீங்கள் அணிந்துள்ள ஹிஜாப் ஒரு தொல்லையாக இல்லையா?" என்பதே அதட்கு அந்த முஸ்லீம் பெண் சொன்ன பதில் "நரக நெருப்பு மிகக் கடுமையான வெப்பம் உடையது" (9: 81) எனும் வஹி இன்
வார்த்தைகளே! 'அல்ஹம்து லில்லாஹ்' இன்னும் இந்த உம்மாவின் மிகச் சரியான உயிர் ஓட்டம் அழிக்கப் படவில்லை! இலங்கையின் சகோதரிகளே ! சுவனத்தின் உங்கள் பங்கை பெற நெருப்பில் நீராடவும் தயாரா? சூரா அல் புரூஜில் நீயும் பங்காளி ஆகலாம்.
Mar 27  Sent from Web

No comments:

Post a Comment