Apr 9, 2013

புனித பூமி விவகாரத்தில் இலங்கையில் யாரும் இனி ஆதாரம் கேட்க முடியாது!?

புனித பூமி விவகாரத்தில் இலங்கையில் யாரும் இனி ஆதாரம் கேட்க முடியாது!?
கௌதம புத்தர் எங்கு பிறந்தார் ? என்பது வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் சர்ச்சைக்குறிய
விடாயமாக இருந்து வரும் நிலையில் இப்போது அவர் இலங்கையில் பிறந்ததட்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக இலங்கையின் ரத்மாலானையில் அமைந்துள்ள பௌத்த தர்ம ஆய்வகப் பணிப்பாளர் 'ஹேகொட விபஸ்ஸி தேரர்' தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் தேரர்களுக்கு மத்தியில் பலத்த சர்ச்சைகளும் விவாதங்களும் இருந்து வந்தாலும் எமது கவனத்தை கவரும் ஒரு பார தூரமான அரசியல் இருப்பதே இந்த விடயத்தை நான் பதிய வேண்டிய அவசியத்தை உணர்த்தியது.


யார் இந்த 'ஹேகொட விபஸ்ஸி தேரர்' ? என்ற வினாவில் இருந்து விடயத்தை ஆராய வந்தால் எதிர்காலம் பேச இருக்கும் தொடரான அண்டப் புழுகு அரசியலுக்கு அத்திவாரமான இந்த ஆகாசப் புழுகு இதிகாச திரிபு ஏன் ? என்ற கேள்விக்கு விடை கிடைத்து விடும்.

இவர் தேசிய ஹெல உருமைய அமைப்பின் சார்பில் போட்டியிட்டு இலங்கை
பாராளுமன்றத்தில் உறுப்பினராக தெரிவு செய்யப் பட்டவர் . பழுத்த அனுபவம் மிக்க இனவாதி.
தட்போது இந்த ஹெல உருமைய அமைப்பு அரசியல் ரீதியில் இலங்கையின் ஆளும் கட்சியினால் உள் வாங்கப் பட்டும் உள்ளது. இந்த அமைப்பின் தலைவர் உட்பட பலர் முக்கிய அமைச்சு மற்றும் இதர பதவிகளில் அரசினுள் இருக்கின்றனர்.

1980 களில் அன்று ஆளும் கட்சியாக இருந்த யூ. என்.பி அரசியலில் ஒரு இதிகாச திரிபு சம்பவம் தமிழர்களுக்கு எதிரான எதிர்ப்பு அரசியல், வன்முறை நோக்கமாக முன்வைக்கப் பட்டது. அப்போது ஆளும் தரப்பின் அமைச்சர்களாக இருந்த லலித் அதுலத் முதலி , மற்றும் காமினி திஸ்ஸ நாயக ஆகிய இருவரும் இந்த அரசியல் நோக்கம் கருதிய இதிகாச திரிப்பை தொல் பொருள் ஆய்வின் ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாக கூறி முன் வைத்தனர் .

அதாவது தென் இந்தியாவில் இருந்து இலங்கை வந்து அநுராத புரத்தை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்த எள்ளாலன் எனும் மன்னனுக்கும் அவனுக்கு எதிராக அதிகார நோக்கில் போரிட்டதாக குறிப்பிடும் சிங்கள மன்னனான துட்ட கைமுணு எனும் அரசனுக்கும் இடையில் நிகழ்ந்த போரில் கொல்லப்பட்ட எள்ளாலனின் வீரத்தை மதித்து அவனது சமாதியில் துட்ட கைமுணு கட்டிய நினைவு தூபி என வரலாறு குறிப்பிடும் சம்பவத்தை மறுத்து குறித்த தூபி , சமாதி என்பன துட்ட கைமுணுவுக்கு சொந்தமானது
என பேசினர்!

ஆரம்பத்தில் சர்ச்சைகளும் , விவாதங்களும் அவர்களுக்கு மத்தியில் இருந்து எழுந்தாலும் இன்றைய சந்ததி அந்த பெரும்பான்மை கவர்சிக்கான குரோத அரசியலை ஜீரணித்வர்களாகவே வாழ்ந்து வருவது தெளிவான உண்மை. அடல்ப் ஹிட்லரின் வலது கையான கோயா பல்சூ குறிப்பிடுவது போல் "ஒரு பொய்யை திரும்ப , திரும்ப சொல்லும் போது காலத்தால் அது உண்மையாகி விடும்" எனும் கருத்தின் அடிப்படையில் இலங்கை அரசியல் பக்குவமாக படியேறி உள்ளது என்பதை புரிய இந்த ஆதாரங்கள் போதும் என்று நினைக்கிறேன்.

இப்போது இந்த தேரர் சொல்லும் கௌதமரின் பிறப்பு விடயமும் காலத்தால் முழு இலங்கையையும் புனித பூமியாக்கும் ஒரு கோட்பாட்டு அரசியலின் அடிக்கல்லாக அமையலாம்! இதே போல இந்தியாவின் அயோத்தி பாபர் மஸ்ஜித் விவகாரமும் ஒரு தெளிவான இதிகாச
திரிப்புடன் சொல்லப்பட்டதும், காலத்தால் பக்குவமாக இந்துப் பெரும்பான்மை மத்தியில் அது உண்மையாகி போனதும் நாம் கண்ட உண்மைகள் .

No comments:

Post a Comment