Apr 9, 2013

ஓ என் சமூகமே !!

ஓ என் சமூகமே !!

“நபி (ஸல்) அவர்கள் கஃபாவை சுற்றி வரும் போது அதனைப் பார்த்து கூறினார்கள், உனது (கஃபா) சிறப்பு எத்தகையது! உனது (கஃபா) நறுமணமும், புனிதமும் எத்தகையது! ஆனால் எவனுடைய கரத்தில் இந்த முஹம்மதின் உயிர் உள்ளதோ அவன் மீது ஆணையாக, ஒரு விசுவாசியின் ஒரு துளி இரத்தமும், அவனது உடமைகளும் அல்லாஹ்(சுபு) முன்னிலையில் உன்னை (கஃபா) விட புனிதமானது. நல்லதைக்கொண்டல்லாமல் ஒரு விசுவாசியை கருத வேண்டாம்” (அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி), இப்னு மாஜா)


இன்று நடந்து கொண்டிருப்பது என்ன ? உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு முஸ்லிமின் உடல்,உயிர்,உணர்வு,உடைமைகள் எல்லாமே குப்பார்களின் கையில் ஒரு விளையாட்டுப்பொருள் போல இருக்கும் ஒரு நெருக்கடியான சுழல் !!!!
வேட்டைப் பொருளான மியன்மார் சகோதரர்களின் தொடர் துயரம் !!சிரியாவின் அவலம்!! காஸ்மீர் , இலங்கை என அவமானமும் , அவலமும் தொடர்கிறது!

மௌனிகளாக ஒவ்வொன்றையும் அவதானித்துக்கொண்டிருக்கிறோம் ! நேற்று பாலஸ்தீனிலும் ,ஈராக்கிலும் நிகழ்ந்த போது எமது குறைந்தபட்ச சகோதரத்துவ உணர்வை காட்டினோம் ;இன்று உறக்கமா அச்சமா ? எது எப்படியோ நாம் உலகில் ஒரு சிறந்த சமூகம் எம்பதை மறந்துவிட முடியாது . சகோதரத்துவம் ,சத்தியம் நீதி இதற்காக தனி மனிதனாகவேனும் நாம் போராடியே ஆகவேண்டியது எமது கடமை .

அநீதிக்கு எதிராக குரல் கொடுக்காதிருப்பது கோழைத்தனம்! ஒரு முஸ்லிம் கோழை என்பதை விட அவமானமான விடயம் வேறொன்றுமில்லை !

மேலும் இது ஈமானோடு மோதும் விடயம்
தீமையை கண்டும் மனத்தால் வெறுத்து ஒதுங்கும் நிலை ஈமானின் இறுதி நிலை !அதன் அர்த்தம் அதற்கு அப்பால் ஈமான் இல்லை என்பதுதான் . இப்போது இந்த
விடயம் எமது அகீதாவோடு மோதுகின்றதல்லவா !! எமது மறுமை வாழ்விலும் கேள்வி ஏற்படுத்தும் இந்த பலவீனத்தை உடைத்தெறிந்து சத்தியத்தின் காவலர்களாக எமக்கு அல்லாஹ் (சுப்) அளித்துள்ள காலத்தின் கடமை நோக்கி நகர்வது மட்டும் தான் எமது இம்மை மறுமை வெற்றி என்பதை மறந்துவிட வேண்டாம் .

இந்த இடத்தில் எது காலத்தின் கடமை
என்பதையும் சொல்லவேண்டியுள்ளது . நிச்சயமாக அது வன்முறை கலந்த உணர்வுக்கு மட்டும் வேலை கொடுக்கும் போராட்டம் அல்ல;
மாறாக எமக்கான கேடயத்தை அமைப்பது அது அரசியல் இராஜதந்திர ரீதியில் எம்மை பாதுகாக்கும் . அதன் பலம் நீங்கள் அறிந்ததுதான் ஒரு பெண்ணின்
அவலக் குரலுக்காக பல்லாயிரக்கணக்கான மைல்கள் தாண்டி இந்தியா வரை அது கேடயமாக வந்தது .

ஒரு கிறிஸ்தவ சமூகத்தின் அவலக்குரலுக்காக அசாதாரணமாக ஸ்பெயினிலும் நுழைந்து அவர்களை காத்தது . அதுதான்' கிலாபா 'எனும் அரசியல்
பலமும் எமது ஒரே தலைவரான அதன் கலீபாவினாலும் தான் சாத்தியமானது .இதுதான் இஸ்லாம் சொல்லும் ஒரே நிரந்தரத்தீர்வு .

"ஓ எனது உம்மாவே ! முஸ்லீம்களாகிய எமது உயிர்,உடமை ,உணர்வு அனைத்தும்
பாதுகாக்கப்பட்டு அதற்கான கண்ணியமும் வழங்கப்படுவதற்கான ஒரே வழியும்
இதுதான் .முஸ்லிம்கள் மீது 'காபீர்கள் ' எந்நிலையிலும் அடக்கு முறைகளை கட்டவிழ்த்து விடும் இழிவுகளில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கான ஒரே வழியும்
இதுதான். இதனையே 'அல்குர் ஆனில் ' அல்லாஹ்(சுப்) பின்வருமாறு குறிப்பிடுகிறான் ;"
"முஃமின்களின் மீது அதிகாரம் செலுத்துவதற்கு எந்த வழியையும் அல்லாஹ் இறை நிராகரிப்பாளர்களுக்கு வழங்க மாட்டான். "(அந்நிஸா :141)

No comments:

Post a Comment