شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِّلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَىٰ وَالْفُرْقَانِ ۚ فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ ۖ وَمَن كَانَ مَرِيضًا أَوْ عَلَىٰ سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ ۗ يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَىٰ مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்;. எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்;. அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்). ( 2:185)
அல்லாஹ்வின் திருத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் பின்வருமாறுகூறியுள்ளார்கள்,
"ரமழான் பிறையைக் காணாதவரை நோன்பு நோற்காதீர்கள்; (மறு)பிறையைக் காணாதவரை நோன்பை விடாதீர்கள்; உங்களுக்கு மேகமூட்டம்தென்பட்டால், அந்த மாதத்தை (முப்பது நாட்களாக)க் கணக்கிட்டுக்கொள்ளுங்கள்" (ஸஹீஹ் முஸ்லிம்)
புனித ரமழான் மாதத்திற்கான தலைப் பிறை ஷரியாஹ் விதிமுறைகளின்படிதிங்கள்கிழமை உறுதி செய்யப்படாததால், இன்ஷா அல்லாஹ் நாளை,செவ்வாய்க்கிழமை ஷஹ்பான் மாதத்தின் 30 ஆவது நாளாகவும், புதன்கிழமை(ஜூலை 10ஆம் திகதி) புனித ரமழான் மாதத்தின் முதல் நாளாகவும்தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஹிஸ்ப் உத் தஹ்ரிர் அமீர், அல் ஆலிம் அதா பின்கலீல் அபூ ரஷ்தாவின் அலுவலகம் அறிவித்துள்ளது.
இந்த புனித மாதத்தில், வறுமையாலும், ஆக்கிரமிப்பாலும்,அடக்குமுறையினாலும் உலகெங்கிலும் துன்பப்படும் நம்முஸ்லிம் உம்மாஹ்வை எமது துஆக்களிலும்பிரார்த்தனைகளிலும் நினைவு கூறுவோம்.
No comments:
Post a Comment