Jul 9, 2013

அல் பத்ர்' எனும் சமர்க்கள வெற்றி (ரமழானை நினைவுறுத்திய மீள் பதிவு )

ரமழான் வெற்றியின் மாதம் என முஸ்லிம்களால் பொதுவாக கூறப்படும் . ஆனால் இந்த மாதத்தில் முஸ்லிம் உம்மாவின் பலத்தை பறைசாற்றிய நிகழ்வுதான் 'அல் பத்ர்' எனும் சமர்க்கள வெற்றி என்றால் அது மிகையான கருத்தல்ல . பலமான எதிரி அவனின் வலுவான ஆயுதங்கள் இதற்கு முன்னாள் முஸ்லிம்களின் உள்ளிருந்தே நயவஞ்சகமாக
உடைந்து சென்ற ஒரு கூட்டம் வேறு ;தோற்றுப்போவதட்கே என என்னும் அளவிற்கு ஒரு சிறு படை ஒரு சில வேலை அப்படையை இஸ்லாத்தின் உயராயுதப் படை என்றல்ல மிஞ்சி இருந்த உயிராயுதப் படையணி என்று கூட சொல்லமுடியும் !
'பத்ர்" போரில் நீங்கள் மிகவும் சக்தி குறைந்தவர்களாக இருந்த போது, அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான். ஆகவே நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.(நபியே!) முஃமின்களிடம் நீர் கூறினீர்: 'உங்கள் ரப்பு (வானிலிருந்து) இறக்கப்பட்டமூவாயிரம் வானவர்களைக் கொண்டு உங்களுக்கு உதவி செய்வது உங்களுக்குப்போதாதா?" என்று.(ஆல் இம்ரான் 3:123 124)
இஸ்லாமிய வரலாற்றில் இது முதல் போரும் முதல் வெற்றியுமாகும்.

313 படைவீரர்கள்2 குதிரைகள் 70 ஒட்டகங்களுடன் நபிகளார் தலைமையில் மதீனாவினின்று சென்றஇஸ்லாமிய படையானது 1000 வீரர்கள் 100 குதிரைகள் 700 ஒட்டகங்களுடன் மக்காவினின்றும்அபு ஜஹல் தலைமையில் வந்த படையை வீழ்த்தியது. அப்போரின் போது இறைவன்நபிகளாருக்கு(ஸல்) வஹீ மூலம் அறிவிக்கின்றான்.

உங்களை இரட்சிக்குமாறு உங்கள் இறைவனின் உதவியை நாடியபோது: '(அணி அணியாக உங்களைப்) பின்பற்றி வரக்கூடிய ஓராயிரம் மலக்குகளைக் கொண்டு நிச்சயமாக உங்களுக்கு உதவி புரிவேன்" என்று இறைவன் உங்களுக்கு பதிலளித்தான். (8:9)

இதனைக் கேட்ட நபிகளார்(ஸல்) மகிழ்சியுற்று 'ஓ அபூபக்கர்! அல்லாவின் வெற்றி நம்மை வெகுவிரைவில் வந்தடையும். அல்லாவின் மீதாக ஜிப்ரயீல் குதிரையில் வருவதை என்னால் காணமுடிகிறது" என்றனர்.

இதனைப்போன்றே யூத அரசுக்கெதிரான போரில் வெற்றி பெருவோம் என்பது மட்டுமன்றி இஸ்லாத்தின் ஆதிக்கம் உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் என்பதையும் பல ஹதீத்கள் விளக்குகின்றன. அதற்காக நாம் துஆ செய்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் முஸ்லிம்கள் அனைவரும் இணைந்து ஒரே உம்மத்தாக நின்று ஒரே இஸ்லாமிய அரசினை நிலைநாட்டி அதன்மூலம் அவ்வெற்றிகளுக்காக பாடுபடவேண்டும் என்பது இஸ்லாம் நம்மீது விதித்த கடமையாகும்.

பத்ர் போரின் வெற்றி முஸ்லிம்களின் இறைநம்பிக்கையை வலுப்படுத்தி மதினாவில் ஒரு வலுவான அரசினை நிலைநாட்டி அதனை அரசியல், ஆன்மீக, ராணுவ மையமாக ஆக்கியது.

"முஃமின்களின் மீது அதிகாரம் செலுத்துவதற்கு எந்த வழியையும் அல்லாஹ் இறை நிராகரிப்பாளர்களுக்கு வழங்க மாட்டான். "(அந்நிஸா :141)
"விசுவாசிகள், விசுவாசிகளையன்றி இறைநிராகரிப்போரை தமது பாதுகாவலர்களாக ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம்." (ஆல இம்ரான் :28)
விசுவாசிகளே! ஏன்னுடைய விரோதியையும், உங்களுடைய விரோதியையும் உங்களுடைய உற்ற நண்பர்களாக ஆக்கிக்கொள்ளவேண்டாம்.(60:1)

*பத்ர் களத்தின் பின் மிக முக்கிய வெற்றியான 'பத்ஹ மக்கா ' அதாவது மக்கா வெற்றியும் இந்த ரமழான் மாதத்தில் தான் நிகழ்ந்தது .இதன் பின் பல வெற்றிகள் இந்த மாதத்தில் கிடைத்திருந்தாலும் இன்னும் இரு முக்கிய வெற்றிகளை உங்கள் முன் சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கின்றது .
ஓன்று ஏறத்தாள பதினெட்டு இலட்சம் முஸ்லிம்கள் ஈசல்கள் போல் கொல்லப்பட்டு மீண்டும் முஸ்லிம் உம்மா தலை தூக்குமா !!? என கருதிய தத்தாரிய சத்துருக்களை ஸைபுதீன் குத்ஸ் என்பவர் முஸ்லிம் படையை ஒருங்கிணைத்து ஐன் ஜலுத் எனுமிடத்தில் 26ம் ரமழான் 658ல் வீழ்த்தினார்.இறைவனது உதவியால் கிட்டிய இவ்வெற்றியினால் முழு உலகும் நிம்மதிப்பெருமூச்சுவிட்டது.இப்படி வரலாறு தொடர்ந்து இந்த நூற்றாண்டின் ஒரு நிகழ்வு இதோ .

அது 1990௦ களில் ரஷ்ய செங்கரடிகள் ஒட்டு மொத்தமாக அவர்களது அடிவருடிகளோடு ஆப்கனிலிருந்து விரட்டப்பட்டதும் ஒரு ரமழான் மாதத்தில்தான் !! இஸ்லாமிய வரலாறு எமது வெற்றிகளுக்ககவும் வாயில்களை திறந்தே வைத்துள்ளது ;அது வாழ்வதற்காக இறக்கும் உலகில் இறப்பதற்காக வாழ எம்மை தயார் படுத்தும்வரை ஒரு எட்டாக்கனி ! அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) குறிப்பிட்டது போல் உலகத்தை வெறுத்து மரணத்தை நேசிக்காத வரை நாம் குப்பார்களின் சுவையான உணவுப்பண்டம் தான் .

No comments:

Post a Comment