Jul 7, 2013

நிஜாமான செய்தி


Atha Ullah
நீ சொல்ல வந்த செய்தி
நான் சொல்ல மறந்த செய்தி
நாம் வெல்ல இருந்த செய்தி - இப்போது
எம்மை சல்லடையாக்கிய செய்தி-இது
பிந்திய செய்தி - அல்ல - அல்லது
பின்தங்கிய செய்தி யும் அல்ல - இது தான்
சத்தியத்தின் செய்தி.........

வஹி சொன்னது - செய்தி
அண்ணல் எம் பெருமானுக்கு

வஹி நிழலில் சீரா சொல்லுது - செய்தி
அண்ணலாரின் உம்மாஹ்
என்று சொல்லிக் கொள்ளும் எமக்கு

நிஜாமான செய்தி....

எதிரிகள் புடை சூழ
எதார்த்தமே இல்லாத
மனிதனே மனிதனை தம் இஷ்டப்படி
சட்டம் இயற்றி கஷ்டப் படுத்தி
ஆள்வோருக்கு ஒரு நீதி
ஆளப் படுவோருக்கு ஒரு நீதி - என
நீதியே இல்லாத அரசுகளை ,
அம்முறைமைகளை - தான்
எம் பெருமான் முஹம்மதே முஸ்தபா (ஸல்)
ஜாகிலிய்யா என அடையாள படுத்திய - செய்தி
நிஜாமான செய்தி

சட்டம் இயற்றும் அதிகாரம்
உலகையும், அதன் படைப்புகளையும்
படைத்தவனுக்கும் -
அப்படைப்புகளின் அனைத்துத் தன்மைகளையும்
அறிந்தவனும் ஹாகீமும் -ஆன ஏகன்
அல்லா ஒருவனுக்கே உண்டு என்று
அவன் அருளிய சட்ட யாப்பாம்
அல்குர் ஆணை நடைமுறைப் படுத்திய - செய்தி
நிஜாமான செய்தி

அனைத்து அரச முறைமைகளும்,
அரச சிந்தனைகளும் அகற்றப்பட்டு
இஸ்லாம் மட்டுமே அரச முறைமையாக
நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஆள்வோருக்கும், ஆளப்படுவோருக்கும்
சமமான நீதி
முஸ்லிமுக்கும் முஸ்லிம் அல்லதவனுக்கும்
சமமான நீதி
அனைத்துத் தீமைகளுக்கும்
சமமான நீதி
இஸ்லாம் வழங்கியது
இது நிஜாமான செய்தி.

ஜீரணிக்க முடியாத செய்தி
அதே ஜாகிலிய்யா இன்று
ஜனநாயகம் என்றும்
சோசலிசம் என்றும்
பெயர் மாற்றம் பெற்று
முஸ்லீம்களையும் ஏற்க வைத்திருக்கும் செய்தி...

அண்ணலார் இவற்றுக்கு எதிராக
எவ்வாறு போராடினார்
எவ்வாறு இஸ்லாத்தை மாத்திரமே
அரச முறைமையாக்கினார
என்பது
வருடக் கணக்காக
படிக்க படிக்க - பயான் என்று
கேட்க கேட்க
விளங்காத செய்தி
விளங்கிக் கொள்ள முடியாத செய்தி -என்னால்
ஜீரணிக்க முடியாத செய்தி from athaullah

No comments:

Post a Comment