Jul 7, 2013

இது என் இனிய சகோதரனுக்கு......


இலட்சிய தேடலில் ஆழமான போராட்டம் .
அதிர்ந்து போன எதிரி தந்த ஆழமான காயங்கள்
அதற்கும் மருந்தாய் அவனே தர நினைக்கும்
தீர்வெனும் 'கான்சர் செல்கள் '!! - அது
'வஹி ' வழி மறந்த அதே வரலாற்று தவறு நோக்கி !!
சத்திய அகீதாவையே அசைக்கும்
விலை கொடுத்தா உன் விடுதலை !!

'கிரேக்க கைசர்கள் ' மக்களை மயக்கி
'மாக்களாக்கி ' அடக்கி ஆள கொடுத்த மாய விஷம்
'த கிரேட் திமோகிரசி ' அதுதான் உன்னையே கடவுளாய்
காட்டி கானல் நீரால் தண்ணி காட்டி கனவோடு
காலம் தள்ளும் மனிதப்பண்ணை அரசியல் !!
இன்று சியோனிச சந்தையில் அபூர்வமாய்
முலாம் பூசப்பட்ட ஜாஹிலீய கற்காலம் !!
அதனால் வருமா உன் பொற்காலம் !! - இறைமறை
உனக்கிருக்க இந்த அரைகுறை உனக்கெதற்கு !!

"நிச்சயமாக அல்லாஹ் அங்கீகரித்தது
இஸ்லாம் ஒன்றே ஒன்றுதான் ."
"படைத்ததும் கட்டளையிடுவதும்
அவனுக்குரியதல்லவா "!? இரவு பகல்
இதைப்படித்தும் "உலகத்தை தேடவேண்டும்
எனும் பேராசைதான் பராக்காக்கி விட்டதோ !?"
மார்க்கத்தை 'மஸ்ஜிதுல்' முடக்கி
மத வேலியிட்டு மடக்கி விட்டு சிலுவை நிழலிலும்
யூத தயவிலும் வாழ்வை தொடர்ந்து
"உடும்பின் பொந்திலும் அவனோடு நுழைவதா !?"

'தாகூத்திய ' குப்பைகளில் சத்துரிஞ்சி
சத்திய மரம் வளர்ப்பது தான் எமக்கு 'சுன்னா'
தந்த தூய வழிமுறையா !? நபியின் சீறாவுக்கு
சில்லறை விளக்கம் கொடுத்து அசிங்கத்தை
அரவணைக்க எதிரி அழைக்க அம்மதத்தை
சம்மதமாக்கி சறுக்கி விழாமல் நீ போராடு
" நிராகரிப்போர் வெறுத்த போதிலும் மற்ற எல்லா
தீனையும் மிகைக்கவே அவன் (அல்லாஹ் ) தன்
தூதரை ஹக்குடனும் நேர்வழியுடனும் அனுப்பினான்
அதற்கு சாட்சியாய் இருக்க அவனே போதுமானவன் .

No comments:

Post a Comment