எகிப்தில் ஏற்பட்டுள்ள பரிதாபகரமான நிகழ்வு


இன்று எகிப்தில் ஏற்பட்டுள்ள பரிதாபகரமான நிகழ்வில் முஸ்லிம் உம்மத் பல படிப்பினைகளைப் பெறவேண்டியுள்ளது.

இஸ்லாத்தை ஆளுகை நிலைக்கு கொண்டுவருவதில் எதிரிகளது சதிமுயற்சிகளும் மேற்கினது கைபொம்மைகளான முஸ்லிம் ஆட்சியாளர்களும் செயற்பட்டுவருகிறார்கள். ஏனெனில் இஸ்லாத்தினது எழுச்சியும் வருகையும் அவர்களது நலன்களை பெருமளவு பாதிக்கும். அவர்களுக்கு மிகப்பெரிய ஆபத்தாக அமையும் என்பதனாலாகும்.

இஸ்லாத்தை ஆளுகைக்கு கொண்டுவருவதில் முஸ்லிம் இராணுவத்தினது நுஸ்றா இன்றியமையாயது. ஏனெனில் அவர்கள்தான் இஸ்லாமிய அரசின் பாதுகாவலர்கள். அவர்கள் மூலமாகவே இஸ்லாத்தின் எதிரிகளை இராணுவ ரீதியில் எதிர்கொள் முடியும்.

ஏனெனில் இன்று முஸ்லிம்களிடம் சுமார் 4.7 மில்லியன் இராணுவ படைவீரர்கள் இருக்கிறார்கள். இவர்களது தொகை அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இந்தியாவில் உள்ள மொத்த இராணுவத்தினது தொகையிலும் அதிகமாகும்.

ஆனால் எமது முஸ்லிம் இராணுவம் தேசத்தின் எல்லைக்குள் வரையறுக்கப்பட்ட நிலையில் முஸ்லிம்களின் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் எதிராக இன்றைய முஸ்லிம் ஆட்சியாளர்களாலும், மேற்கினாலும், ஏகாதிபத்திய அமெரிக்காவினாலும் பயன்படுத்தப்படும் துர்பாக்கிய நிலையில் நாம் உள்ளதால் இன்று முஸ்லிம்களது உயிர் மற்றும் உடைமைகள் துச்சமாக கருதப்பட்டு சூரையாடப்படும் துர்பாக்கிய நிலையில் நாம் உள்ளோம்.

இந்நிலையில் இருந்து விடுபட முஸ்லிம் இராணுவத்துக்கு மத்தியில் நன்கு திட்டமிடப்பட்ட தஃவா முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு முஸ்லிம் உம்மத்தின் மீட்சிக்கான இஸ்லாமிய அரசாகிய கிலாபா அரசு நிறுவப்பட எமது தஃவாக்கள் அமையவேண்டும். இது காலத்தின் தேவையாகும்.

முஸ்லிம்கள் இன்று பரந்தளவு சிந்திக்கும் உம்மத்தாக மாறவேண்டும். இதற்கு மேற்கினது காலனித்து கற்பனைத் தேசத்தின் எல்லைக்கு அப்பால் உம்மத் எனும் சிந்தனைக்குள் ஈர்க்கப்பட்டு உலகில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் ஒரு உடலைப்போன்று மாறவேண்டும். அப்போதுதான் எதிரிகளது சதிவலையில் இருந்து நாம் விடுபடவும் எதிரிகள் எமது பலம்பற்றிய அச்சம் கொள்ளவும் வழிவகுக்கும். அந்த நிலைமைக்குத் தேவையான சிந்தனை மாற்றம் பற்றிய வேலைத்திட்டம் மிகவும் அவசியமாகும்.

மேற்கினது காலனித்துவத்தின் நலனுக்காக அறிமுகப்படுத்தி முஸ்லிம் உம்மத்தை பிரித்தாளும் சிந்தனையாகிய ஜனநாயக ஆட்சிமுறையில் உள்ள நம்பிக்கையை தூக்கி வீசிவிட்டு 1300 வருடத்திற்கு மேலாக முஸ்லிம் உம்மத் வழிநடாத்தப்பட்ட ஆட்சிமுறையாகிய கிலாபா ஆட்சிமுறையில் நம்பிக்கை வைத்து அதனை கோரியபடி இன்றுள்ள முஸ்லிம் நாட்டில் உள்ள புரட்சிகள் திசைதிருப்பப்பட்டு நபி வழியில் இராணுவ நுஸ்றாவுடன் கிலாபாவை நிறுவிட பாடுபடவேண்டும்.

இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக சிரிய மக்கள் புரட்சியை நாம் கொள்ளவேண்டும். அவர்களைப்போன்று தைரியமாக இஸ்லாம் மட்டும் வேண்டும், கிலாபாமுறையில் நாங்கள் ஆளப்படவேண்டும், மேற்கினது ஆட்சிமுறை வேண்டாம் என்ற கோசங்கள் வலுப்பெறவேண்டிய தருணத்தில் எகிப்து உள்ளது. இத்தகைய சிந்தனை மாற்றத்தை நோக்கி அங்குள்ள மக்கள் வழிநடாத்தப்பட வேண்டும்.

இத்தகைய உண்மைகளை நாம் உணர்ந்து இஸ்லாத்தினதும் முஸ்லிம்களதும் நலன் காக்கப்பட உரிய தஃவா பற்றிச் சிந்திப்போம், செயற்படுவோம்.

No comments:

Post a Comment