Aug 17, 2013

இலட்சியவாத போராட்டமா ? பெரும்பான்மையின் தீர்ப்பா ?





ஒரு இலட்சியவாதி தனது வாழ்வில் எத்தகு நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்ட போதும் தனது இலட்சியத்தை விட்டுக் கொடுக்காத மரண பயத்தை தாண்டிய போராட்ட உணர்வு கொண்டவனாகவே இருப்பான் . இப்போது அவனது மரணத்தில் கூட அவன் சுமந்த இலட்சியம் வாழவேண்டும் என்ற ஒரே எதிர்பார்ப்பு தவிர வேறு எதுவும் எஞ்சியிருக்காது .அவனது குரல்வளை மிதிக்கப் படும்போதும் வெளிப்படும் வேதனை முனகல் கூட இலட்சியமாகவே இருக்கும் . இங்கு சிறுபான்மை பெரும்பான்மை ஒரு விடயமே அல்ல .

'முஸ்லீம் உம்மாஹ் 'அல்லாஹ்வின் தூதரின் (ஸல் ) காலப்பகுதியில் மக்காவில் குரைசிக் காபீர்களின் கொடூரமான அணுகு முறையின் போதும் அது (அஹத் ,அஹத் )ஒருவன் ஒருவன் என்ற வார்த்தைகளோடு தனது நெஞ்சிலே 'தாகூத் ' ஏற்றிய பாரிய கருங்கல்லை சுமந்த அந்த பிலால் (ரலி ) யின் வலியை பற்றி நாம் கண்ணீரோடு பேசிக் கொள்கிறோம் ;தவிர அவர் இலட்சிய தாகத்தோடு கூறிய அஹத் , அஹத் என்ற அந்த சிறு வார்த்தைகள் குரைசிக் குப்பார்களின் உள்ளங்களை ஈட்டியை விட ஆழமாக குடைந்தது என்பது பற்றி பேசுவதே இல்லை . அங்கும் முஸ்லீம்கள் சிறுபான்மைதான் !

'ஹிஜ்ரா அபீசீனியா ' இன்னொரு உதாரணம் .'தாருல் அர்க்கம் ' எத்தகு ஆழமான பயிற்று விப்பை கொடுதுள்ளது என்பதற்கு இதோ ஒரு உதாரணம் . ஜௌபர் (ரலி )தனது அகீதாவிட்கு முற்றிலும் மாற்றமான ஒரு பெரும்பான்மை சமூகத்தின் முன்னால் எவ்வித அதிகார பலமும் அற்ற நிலையிலும் . அந்த சமூகத்தின் கேள்விகள் முன் அவர் ஒரே 'இலாஹ்' என்பது முதல் நாளை 'ஜிஸ்யாவா ' ஜிஹாதா ' !? எனும் விடயம் வரை அந்த பேசி விடுகிறார் ! அந்த ஆட்பலம் , அதிகாரம் ,படைபலம் இவற்றுக்கு முன் ஜௌபர் (ரலி) சார்ந்த அந்த சிறுகுழு சிறுபான்மைதான் !

சூரா அல் புரூஜ் சொல்லும் அந்த சமூகம், 'இஸ்லாமா ? நெருப்புக் குண்டமா ?' என்ற 'தாகூதிய' கேள்விக்கு இஸ்லாத்தின் தெளிவோடு அந்த சமூகம் பதில் சொன்னதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் ; அது கொள்கைச் சுவையுடன் மரணத்தை தேர்ந்தது !? எமக்கு கிட்டிய வரலாற்றில் கிறிஸ்தவ சிலுவை வீரர்கள் ஸ்பெயினில் அந்த சிறுபான்மை முஸ்லீம்களை நோக்கி கொலை இயந்திரமான ' கிளட்டேனுக்கு ' முன் நிறுத்தி மரணமா ?கிறிஸ்தவமா ? என்ற போது திருப்தியோடு தம் கழுத்தை 'கிளட்டேனுக்குள் ' கொடுத்து இன்றைய வரலாற்றில் தம்மை வீர புருஷர்களாக அடையாளப் படுத்தி நிற்கின்றனர் .வாட்களோ , துப்பாக்கிகளோ ,இல்லாமல் எதிரிக்கு கொடுக்கும் மரண அடிதான் இந்த இலட்சிய வாத போராட்ட உணர்வு ! சிதைந்தாலும் அது விதையாகும் தவிர மக்கி மண்ணாகிப் போகாது .

http://khandaqkalam.blogspot.ae

No comments:

Post a Comment