ஆளுக்கொரு பிறை ,நாளுக்கொரு பெருநாள்!!!

அவர்கள் அல்லாஹ்வை விடுத்தும் தம் அறிஞர்களையும் , துறவிகளையும் , மர்யமுடைய மகன் ஈசா மசீஹையும் தம் கடவுள்களாக்கி கொண்டனர் ; அவர்கள் ஒரே இறைவனை வழிபட வேண்டும் என்றே கட்டளை யிடப்பட்டனர் . அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை .அவர்கள் கற்பிக்கும் இணைகளை விட்டும் அவன் (அல்லாஹ் ) தூயவன் ஆவான் .

(சூரா அத்தௌபா : வசனம் 31)


இந்த அல் குர் ஆன் வசனத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) ஓதிக் காட்டியபோது போது அந்த சமயம் கிறிஸ்தவராக இருந்த அதீ இப்னு ஹாதிம் (ரலி ) எனும் சஹாபி கழுத்தில் வெள்ளிச் சிலுவை ஒன்றை தொங்கப் போட்டவர்களாக அல்லாஹ்வின் தூதர் முன் இருந்தார்கள் . அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடம் பின்வருமாறு கூறினார்கள் ."அவர்கள் (கிறிஸ்தவர்கள் ) தம் அறிஞர்களையும் , துறவிகளையும் , வழிபடுவதில்லையே ?" என ஆச்சரியத்தோடு கேட்க !?அல்லாஹ்வின் தூதர் (ஸல் )கூறினார்கள் "ஆம் இருப்பினும் அவர்கள் (அறிஞர்களும் , துறவிகளும் ) அல்லாஹ் தடை செய்தவற்றை அனுமதிக்கப் பட்டதாகவும் ,அனுமதிக்கப் பட்டதை தடை செய்யப்பட்டதாகவும் அறிவித்தனர் .(இந்த விடயத்தில் )மக்கள் அவர்களைப் பின்பற்றினார்கள் . இதுதான் மக்கள் செய்த (இபாதா)வழிபாடு ஆகும் எனக்கூறினார்கள் .

(இமாம் திர்மீதி அவர்கள் இந்த அறிவிப்பை பதிவு செய்துள்ளார் ,மேலும் இமாம் தபரி ,இமாம் இப்னு கஸீர் ஆகியோர் தமது தப்சீர்களில் குறித்த அல் குர் ஆன் வசனத்துக்கு (சூரா அத்தௌபா : வசனம் 31) விளக்கம் தரும்போது இந்த ஹதீஸை எடுத்துக் காட்டியுள்ளார்கள் .)

இஸ்லாத்தில் தொழுகை நேரங்கள் சூரிய ஓட்டத்தை அடிப்படையாக கொண்டே கணிக்கப்பட்டுள்ளது .இந்த அடிப்படையில் நேரக்கணிப்பீட்டுக்கான அடிப்படையாக சூரியனும் , நாள் ,மாதம் , வருடம் என்பன வஹியின் திட்டவட்டமான தீர்ப்பின் படி சந்திரனை வைத்தே கணிக்கப் பட வேண்டும் .என்பதும் அது ,தேச ,தேசிய, பிரதேச குப்ரிய பிரிவுகளை உள்வாங்கி எடுத்தார் கைப்பிள்ளை கலண்டராக அது மாறிவிடாமல் அது முழு உலகத்திற்கும் பொதுவானதாகவும் இருக்க வேண்டும் ஆளுக்கொரு பிறை ,நாளுக்கொரு பெருநாள் என்பது முஸ்லீம் உம்மத்தின் ஆத்மார்த்த சகோதரத்துவத்தை கேலிக்கூத்தாக்கி குப்பார் கைகொட்டிச் சிரிக்கும் ஒரு கோமாளித்தன வடிவத்தை வழங்கி விடும் இன்று அது நடந்துள்ளது .இந்த கசப்பான சூழ்நிலை இலங்கையில் மட்டுமல்லாமல் இந்தியா உட்பட இன்னும் பல நாடுகளிலும் நடக்கின்றது .

முஸ்லீம் உம்மா சர்வதேச சகோதரத்துவத்தை மானசீகமாகவேனும் பெற்றுக் கொள்ளும் ஒரு ஆக்கபூர்வமான பொழுது இந்த எடுத்தார் கைப்பிள்ளை பிறைக் கணிப்பீட்டால் முற்றாகவே தடைப்படுகிறது .ஒவ்வொரு தேசியமும் ,ஒவ்வொரு தேசமும் , ஒவ்வொரு பிரதேசமும் குப்பி விளக்கோடு காலம் தள்ளும் பண்டைய பஞ்சாயத்து மரபு கிராமங்களாக உலமாக்களாலும் , இஸ்லாமிய இயக்கங்களாலும் இன்று மாற்றப் பட்டுள்ளது . ஆளுக்கொரு கூட்டம் ,நாளுக்கொரு தீர்ப்பு என்ற வகையில் முஸ்லீம் சமூகம் திண்டாட வைக்கப் படுகிறது .

குப்ரிய தாகூதிய மேலாதிக்க சக்தியையும் அதன் அரசியலையும் நம்பி அதற்கு ஒத்தோதி அந்த சரணடைவு அரசியலில் கிடைக்கும் அற்ப சுகங்களுக்காக விலை போய் விட்ட உலமாக்களையும் இஸ்லாமிய இயக்கங்களையும் பற்றி என்ன சொல்வது ! தக்கன பிழைத்தலுக்கான ஒரு நியாயத்தில் மார்க்கத்தை அழகாக விலை பேசுபவர்களே இலங்கையின் உலமா சபை மற்றும் சில இஸ்லாமிய இயக்கங்கள் என்பது கடந்த பெப்ரவரி நான்காம் திகதி இலங்கை சுதந்திர தினத்தை முன்னிட்டு தாகூதின் சின்னமான தேசியக் கொடியை பள்ளிவாசல்களில் ஏற்றச் சொன்னபோதே (இவர்களின் தலைமைத்துவ வள்ளல்) புரிந்திருக்க வேண்டும்.

(தொடரும் .....)

No comments:

Post a Comment