ஒரு முறையான திட்டமிட்ட கொள்கையே இஸ்லாமாகும் . அது தனது நடத்தையில் அங்கொன்றும் இங்கொன்றும் சிதறியதாக சில விடயங்களை சொல்லிவிட்டு அதை நாம் நினைத்த ஒழுங்கில் பின்பற்ற தூண்டுவதில்லை . அதாவது முறைமைகள் அற்ற வெறும் ஆன்மீக பரிசுத்தம் பற்றி பேசி செல்லும் மதமும் அல்ல . அதே போல ஆன்மீக பரிசுத்தத்தில் சில இபாதாக்களின் படித்தரங்களை ஏற்படுத்தி அதன் பின்தான் ஒருவனுக்கு தன்னை முஸ்லீம் என்று கூற முடியும் என்ற புரோகித வாடை கலந்த மதமும் அல்ல .
மாறாக இஸ்லாம் சொல்வது அதன் அகீதாவை அறிவு பூர்வமாக ஏற்று அதனடியாக அதன் கட்டளைகளை எவ்வித அதிர்ப்தியும் அற்ற நிலையில் செயல் படுத்த துணிவது . எனவே (சிர்க்,பித் அத் போன்ற )சிந்தனை வீழ்ச்சிகளின் அடிப்படை அகீதா தெளிவின்மையே . எனவே இங்கு அகீதாவை மீண்டும் மீண்டும் சொல்வதன் ஊடாகவே( சிர்க் ,பித் அத் போன்ற பாவங்களை தடுக்க முடியுமே தவிர சிர்க் ,பித் அத் போன்ற பாவங்களை )விமர்சிப்பதன் மூலம் மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியாது .எனவேதான் இஸ்லாம்' லா இலாஹ இல்லல்லாஹ் ' என்பதை தனது ஆரம்ப பிரகடனமாக முன்வைத்து வாழ்க்கை தொடர்பான இஸ்லாத்தின் வழிமுறை பிரகடனமாக முன்வைக்கின்றது .
இந்த ' லா இலாஹ இல்லல்லாஹ் ' என்பதன் ஊடான ஒரு முஸ்லிமின் போராட்டம் தனக்கென பிரத்தியோகமான கலாச்சாரத்தையும் ,நாகரீகத்தையும் உத்தரவாதப்படுத்த வேண்டும் இப்போது அதன் பாதுகாப்பு அதிகார மயப்பட்ட அரசியலில் பிணைத்துக்கொள்ள வேண்டும் . இதுவே இறைவனின் எதிர் பார்ப்புமாகும் .எனவேதான் இஸ்லாம் மதீனாவின் அதிகார கட்டமைப்புக்குள் வரும் வரை அதன் இபாதத் தொடர்பான கட்டளைகள் மட்டுப் படுத்தப் பட்டிருந்தமைக்கான காரணுமாகும்.
அதாவது அருளப்படவில்லை .
மேலும்" மனிதன் தவறுக்கும் மறதிக்கும் இடையில் படைக்கப் பட்டுள்ளான்" என்ற இஸ்லாத்தின் பொது விதிக்கமைய அவன் வாழும் சமூக சூழலை பாதுகாக்கவும் நெறிப்படுத்தவும் குற்றவியல் தொடபான சட்டங்களும் , சிவில் உறவுகள் தொடர்பான கட்டளைகளும் மதீனாவில் வைத்தே அருளப்பட்டுள்ளன . இதிலிருந்து இஸ்லாத்தின் அரசியல் தொடர்பான தெளிவான காத்திரமான பார்வை எம்மால் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும் . மேலும் அல்லாஹ்வின் தூதரின் (ஸல் ) தெளிவான நகர்வு பிரத்தியோகமான பாதை, வழிமுறை கொண்ட அரசியலாகவே இருந்தது என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும் .

No comments:
Post a Comment