இஸ்லாம் எழுச்சி பெறுவதற்கு தேவையான அடிப்படைச் சிந்தனைகளை தெளிவாக விளங்கி மக்களுக்கு அறிவூட்டும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இன்று முதலாளித்துவத் தலைமைகளால் மத ஒதுக்கல் சிந்தனையை அடிப்படையாக கொண்டு தாராண்மைவாதக் கொள்கைகளை அமுல்படுத்தும் நிலையில், மக்கள் அதனால் அடையும் துன்பங்கள், அசௌகரியங்கள் என்பவற்றிலிருந்து மீளுவதற்கான வழிகாட்டலையும் தீர்வையும் இஸ்லாமே கொண்டுள்ளது என்ற சிந்தனையை விதைக்கும் பணியை மேற்கொள்ள தன்னை பக்குவப்படுத்திக் கொள்ளவேண்டும்.
இஸ்லாம் ஒரு மாற்றீடாக முன்வைக்கப்படுவதாலும், இஸ்லாம் எழுச்சிபெறுவதாலும் அதன் வளர்ச்சியை, எழுச்சியை தாமதிக்க மேலும் கட்டுப்படுத்த மேற்கினது முகவர்கள் மேற்கொள்ளும் சிந்தனை யுத்தத்தை விளங்கி உணர்ந்து இஸ்லாத்திற்கு எதிரான நச்சுக்கருத்துக்கள் விதைக்கப்படும் போது அதனை எதிர்கொள்வதற்கு தேவையான ஆளுமையை, பக்குவத்தை வளர்த்து உரிய தஃவா முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும்.
முஸ்லிம்களை நிரந்தரமாக பிரித்துவைத்துள்ள மேற்கினது அடிப்படைச் சிந்தனைகளான “மதஒதுக்கல் சிந்தனை”, “தேசியவாதச் சிந்தனை” மற்றும் “முதலாளிகளது நலன்களை சட்டமாக்கும் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட ஜனநாயக ஆட்சிமுறை” போன்ற சிந்தனைத் தெளிவைப் பெற்று அதுகுறித்து “மக்கள் மனப்பாங்கை” மாற்றி இஸ்லாத்திலும் அதன் ஆட்சிமுறையான கிலாபாவிலும் நம்பிக்கையூட்டும் தஃவா பணியை மேற்கொள்ள வேண்டும்.
இன்று முஸ்லிம் நாட்டுத் தலைமைகள் மேற்கினது அடிவருடிகளாக செயற்படும் போக்கையும், மேற்கினது கருவியாக ஐ.நா.சபை, நேட்டோ, சர்வதேச நாணயநிதியமும் வங்கியும், அரசசார்பற்ற நிறுவனங்களும் திருச்சபைகளும், மற்றும் மனித உரிமை அமைப்புக்களும் தொழிற்படுவதனை உணர்த்த வேண்டும்.
இது குறித்த தெளிவை அறிவைப்பெற்று உரிய சிந்தனைகளை சமூகத்தில் விதைத்து சிந்தனை மாற்றத்தின் பங்காளிகளாக மாறவேண்டும். அதுவே இஸ்லாம் எழுச்சி பெறவழிவகுக்கும் என்பதனை உணர்ந்து செயற்படவேண்டும்.
No comments:
Post a Comment