Aug 30, 2013

அமெரிக்க நலன்களுக்கு சாவுமணி அடிக்கப்படும் தருணமாக சிரியா மாறுமா?


ஈராக்கினுள்ளும் சிரியாவினுள்ளும் குப்ருடைய ஆட்சியாகிய ஜனநாயகத்தை கொண்டுவருவதற்கு போலியான காரணங்களை முன்வைத்து களமிறங்கும் அமெரிக்க நலன்களுக்கு சாவுமணி அடிக்கப்படும் தருணமாக சிரியா மாறுமா?

ஆம், நிச்சயம் அல்லாஹ்வின் உதவி ஷாம் தேசத்து மக்களுக்கு உண்டு. ஏனெனில் அவர்கள்


1.மேற்கினது வழிமுறையிலான எந்த ஆட்சிமுறையும் வேண்டாம் என்று கோருகிறார்கள்!

2.அசாத்தும் அவனது குப்ரிய ஆட்சியும் இல்லாமல் போகவேண்டு கோருகிறார்கள்! 

3.அல்லாஹ் அருளியபடி ஷரீஆவின் அடிப்படையில் தங்களது வாழ்வியல் விவகாரங்கள் ஒழுங்கு படுத்தப்பட தேவையான கிலாபா ராஷிதா வேண்டும் என்றும் கோருகிறார்கள்!


இத்தகைய கோஷங்களுடன் தங்கள் உயிர்களை துச்சமாக கருதி போராடும் நிலையில் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் அவர்களுக்கு வெற்றியைக் கொடுப்பான். குப்பார்களது அனைத்து சதி முயற்சிகளையும் தவிடுபொடியாக்குவான்.

அவர்கள் சிறிய கூட்டமாக இருந்தாலும் ஹக்கில் இருந்து கொண்டு இஸ்லாம் மீள நபிவழியில் அமுலாக்கப்பட வேண்டிய அரசாகிய கிலாபா ராஷிதாவை கோரியபடி போராடுகிறார்கள்.

இன்ஷா அல்லாஹ் நிச்யமாக அல்லாஹ் அவர்களது கரத்தைப் பலப்படுத்துவான்! எதிரிகளை விரண்டோடச்செய்வான்.

எமது வீரவரலாற்றில் எத்தனையோ படிப்பினைகளை முஸ்லிம் உம்மத் சந்தித்துள்ளது. “ஹந்தக்” எமக்கு மிகப்பெரும் படிப்பினையைத் தருகிறது. “பத்ர்” எமக்கு மேலும் நமது நம்பிக்கையைப் பலப்படுத்துகிறது.

அல்லாஹ் ஷாம் மக்களது கால்பாதங்களை நிச்சயம் இஸ்திரப்படுத்துவான். அவன் எப்போதும் முஃமீன்களுடன் இருப்பவன். நிச்சயம் அவனது நூரை பிரகாசமடையச் செய்வான்.

எமது இந்த நம்பிக்கைக்கும் பிரார்த்தனைக்கும் பலம்சேர்க்கும் பல நன்மாராயங்களை நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

சலமா பின் நுபைல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ரஸூல் (ஸல்) கூறினார்கள்.

'முஃமீன்களின் சாம்ராஜியம் கட்டியெழுப்பப்படுவது ஷாமில் இருந்துதான்' (தபராணி)

No comments:

Post a Comment