Aug 23, 2013

"சகோதரச்சிந்தனையால்"


"சகோதரச்சிந்தனையால்" இஸ்லாமிய அகீதாவின் பிணைப்பால் இணைவோம்! இஸ்லாம் மீள் எச்சிபெற ஆக்கபல தாவாக்களை முன்னெடுப்போம்!

இன்று முஸ்லிம் உம்மத் வேண்டி நிற்கும் சிந்தனை சகோதரத்துவச் சிந்தனை! களையவேண்டிய சிந்தனை தேசியவாதச்சிந்தனை!

இன்று முஸ்லிம் உம்மத் உணரவேண்டிய அடிப்படைச் சிந்தனை சகோதரத்துவச் சிந்தனையாகும்!

ஆனால் இன்றைய முஸ்லிம் உம்மத் துண்டாடப்பட்டிருப்பதும், காலனித்துவ வாதிகளது நலனுக்கு உம்மத்தை பலவீனப்படுத்த பயன் படுத்ப்பட்டிருப்பதுமான சிந்தனை தேசியவாதமாகும்.

இன்று தேசிய எல்லைக்குள் சிந்திக்கும் முஸ்லிம் ஆட்சியாளர்கள் மேற்கினது முகவர்களாக தொழிற்பட்டு முஸ்லிம்களை கறுவருக்க வழிவகுப்பதுடன் மேற்கினது அரசியல் மற்றும் பொருளாதார நலன்களுக்காக தொழிற்படுவதனை நாம் காணலாம்.

இன்றைய முஸ்லிம் ஆட்சியாளர்கள் இஸ்லாமிய எழுச்சி மற்றும் மறுமலர்ச்சியின் எதிரிகளாக தொழிற்படுகிறார்கள். இந்த இழிநிலையில் இருந்து மீள நாம் தேசத்திற்கு அப்பால் இணையவேண்டிய தருணத்தில் உள்ளோம்!

எமது பெறுமதிமிக்க முஸ்லிம் இராணுவம் இன்றைய முஸ்லிம் ஆட்சியாளர்கள் எனும் கயவர்களால் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு யகிப்திலும் சிரியாவிலும் பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள் முதல் வயோதிபர்கள் வரை கொன்று குவிக்கும் துர்பாக்கிய நிலைக்கு வித்திட்டுள்ள இந்த தேசியவாதச் சிந்தனையை நாம் களைந்து சகோதரச் சிந்தனையை வலுப்படுத்துவேண்டும்.

இன்று முஸ்லிகளிடம் விதைக்கப்பட்டுள்ள மதஒதுக்கல் சிந்தனை மற்றும் ஜனநாயவழிமுறையிலான இஸ்லாமிய ஆட்சிமுறைபற்றிய பிழையான சிந்தனைகளைக் களைவோம். இஸ்லாத்திற்கு பலம்சேர்போம். சிந்தனைத் தெளிவைப் பெறுவோம்!

அத்துடன் முஸ்லிம் உம்மத்தை இந்த இழிநிலையில் இருந்து விடுவிக்கும் இஸ்லாமிய அரசாகிய கிலபாவின் மீள் உருவாக்கம் பற்றி சிந்தித்து ஆக்கபல தஃவாக்களை முன்னெடுப்போம்

No comments:

Post a Comment