Aug 17, 2013

இஸ்லாம் கூறும் ஆட்சிமுறை என்பது மிகத்தெளிவானது.

அது 1300 ஆண்டுகாலம் உலகில் முன்றில் இரண்டுபகுதியை ஆட்சி செய்து இஸ்லாத்தை வாழ்வின் அனைத்துதுறைகளிலும் அமுல்படுத்தியதுடன் சிறுபான்மையாக வாழ்ந்த முஸ்லிம்களுக்கு தேவையான பாதுகாப்பை உறுதி செய்த கிலாபா ஆட்சிமுறைதான் இஸ்லாம் கூறும் ஆட்சிமுறை!

அது உருவாகும் முறைபற்றிய மிகத் தெளிவான ஹதீஸ்: நபிகளாரின் நுபுவத்துடைய ஆட்சி...குலபாஉர் ராசிதீன்களது ஆட்சி ... நீண்ட கால ஆட்சி ... சர்வாதிகாரிகளது ஆட்சி ..அதன் பின் மீண்டும் நபித்துவ வழியிலான கிலாபா ஆட்சி!

இன்று இந்த ஆட்சிமுறையை ஏற்படுத்துவதற்கு பல வழிமுறைகள் கையாளப்படுகிறது.

முதலாவது வழிமுறை:காலனித்துவ வாதிகளால்துன்டாடப்பட்ட தேசங்களை அடித்துப்பிடிக்கும் ஜிஹாதிய வழிமுறையிலானது.

இரண்டாவது வழிமுறை: இன்று துண்டாடப்பட்டுள்ள முஸ்லிம் நாடுகளது தலைமைகள் இஸ்லாமிய வாதிகளால் மாற்றீடு செய்யப்பட்டு அதன் மூலம் கிலாபாவை கொண்டுவருவது. இங்கு இவர்களது வழிமுறையில் ஆட்சியாளர்கள் மாற்றீடு செய்யப்படுகிறார்களே தவிர ஆளப்படும் முறை. இது மேற்கினது பாராளுமன்ற ஜனனாயக வழிமுறை! இது மேற்கினது ஒரு கருவி!

இது இன்று பல்வேறுவகையான பின்னடைவுகளையும் உயிரிழப்புகளையும் சந்திப்பதுடன் இஸ்லாத்தை பகுதியா படிப்படியாக அமுலாக்கும் அடிப்படையை கொண்டது. இது இஸ்லாம் எழுச்சி பெறுவதில் தடையாக உள்ள சிந்தனையாக உள்ளது.

மூன்றாவது வழிமுறை:
அது இஸ்லாமிய நாடுகளது இராணுவம் ஏற்கனவே இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பாதுகாப்பதற்கு தத்தமது தேசத்திற்குள் செயற்படுகிறது. அந்த இராணுவ தலைவர்களது ஒத்துளைப்பை (நுஸ்றாவை) பெற்று தேசத்திற்கு வெளியே இராணுவம் இணைக்கப்பட்ட அடிப்படையில் தேசத்தின் எல்லைகள் களையப்படும்.
இங்கு மேற்கினது ஜனனாயக வழியிலான தேர்தல் இல்லை. கலீபா நபிவழியல் நியமிக்கப்படுவார்- பின்னர் அவர் ஏனைய நாடுகளது நுஸ்றாவை கோருவார்.

No comments:

Post a Comment