எர்துர்கான் அவர்களே!

முதலில் குப்பார்களிடம் முஸ்லிம்கள் விடயத்தில் மனித உரிமையை எவ்வாறு நீங்கள் எதிர்பார்க்க முடியும். அவர்கள் முஸ்லிம்களை கறுவறுத்த வரலாறு கண்முன்னே இருக்கும் போது இஸ்லாம் மீள் எழுச்சி பெற அது ஆட்சிநிலையில் வர அனுமதிப்பார்களா?

குர்ஆன் சுன்னாவின்படி சரீஆ அடிப்படையில் மக்கள் ஆளப்பட மேற்கினது ஜனநாயக வழிமுறையை நிச்சயம் அனுமதிக்கமாட்டது மேற்குலகு. இந்த வரலாற்று உண்மையை அல்ஜீரியாவிலும் பலஸ்தீனத்திலும் பார்த்த நாம் எகிப்தில் அனுபவிக்க ஆரம்பித்து விட்டோம்! முதலில் மேற்கிலும் அதன் ஆட்சி முறையிலும் உள்ள நம்பிக்கையை கைவிட்டு கிலாபா பற்றிய இஸ்லாமிய ஆட்சியில் நம்பிக்கை வையுங்கள்.மேற்கு நாடுகளே!

பலஸ்தீனில், காசாவில் மக்கள் படுகொலை செய்யப்பட்ட போது நிங்கள் மவுனித்திருந்தது போன்று எகிப்தில் உங்கள் கண் முன் படுகொலைப் படலமொன்று அரங்கேறிக்கொண்டிருக்கும் போதும் மவுனம் காக்கின்றீர்கள்.

மானுட விழுமியங்கள், மனித உரிமைகள், ஜன நாயகம் பற்றி எல்லாம் இனி எவ்வாறு உங்களால் பேச முடியும்?

தய்யிப் எர்தூகான் - துருக்கிப் பிரதமர்
No comments:

Post a Comment