Aug 22, 2013

இஸ்லாமிய பார்வையில் கல்வி……!


முஸ்லிம்களிடம் இஸ்லாமிய நற்பண்புகளையும், இஸ்லாமிய மனப்பாங்கையும், உணர்வுகளையும் கொண்ட இஸ்லாமிய தனித்துவத்தை உருவாக்குவதே ஒரு முஸ்லிமைப்பொருத்தவரையில் கல்வியின் நோக்கமாக அமையவேண்டும். 

கல்வி கற்பித்தலின் அனைத்து நிலையிலும் (பள்ளிப் பரவம் முதல் பல்கலைக் கழகம் வரை) இஸ்லாமிய கலாச்சாரம் மற்றும் பண்பாடுகள் போதிக்கப்படவேண்டும்.

இதற்கு இஸ்லாமிய அகீதாவின் அடித்தளத்தின்மீது மட்டுமே கல்விக் கொள்கை அமைய வேண்டும்.

ஆகவே பயிற்றுவிக்கப்படவேண்டிய பாடங்களும் பயிற்றுவிப்பு முறைகளும் இந்த அடிப்படையில் இருந்து விலகிச் செல்லாதவாறு அவைகளை உருவாக்க வேண்டும்.

இவ்வாறானதொரு கல்விக் கொள்கையை கொண்ட அரசு இருக்குமாயின் அங்கு மக்களிடம் இஸ்லாமிய அறிவு, கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றை கொண்ட இஸ்லாமிய பிரஜைகளை உருவாக்க முடியும்.

ஆனால், துரதிஸ்டவசமாக இன்று நாம் மேற்கினது காலனித்துவ கல்விக் கொள்கையை பின்பற்றி நிலையில் உலகில் பெரும்பாலான முஸ்லிம் நாடுகள் ஆட்சி செய்யப்படுவதால் இஸ்லாத்தைப் புரிந்துகொள்வதிலும் அதனை ஒழுகிடுவதிலும் மிகப்பெரிய இடைவெளி உருவாகியுள்ளது.

மேற்கத்தேய மதஒதுக்கல் சிந்தனையை அடிப்படையாக கொண்ட முதலாளிகளது நலன்களை பேணுவதற்கு தேவையான வெறும் மனித மூளைசாலிகளையும் தொழில் வல்லுனர்களையும் உருவாக்கும் சடவாதக் கல்விமுறையில் எமது சிறுவர்கள் முதல் பெரியோர்வரை பயிற்றுவிக்கப்படுவதால் இக்கல்வியை பெற்ற கல்வி நிபுனர்கள் மற்றும் கல்விமான்களிடம் இஸ்லாமிய உணர்வு, அறிவு, பண்பாடுகள் மிகவும் அரிதாகவே பிரதிபலிப்பதனைக் காணலாம்.

இதனால்தான் இன்று எமது கற்ற இளைஞர்களிடம் ஒழுக்கம், பண்பாடு, இஸ்லாமிய அறிவு இல்லாத நிலையில் மேற்கினது கலாச்சார பண்பாட்டினது தாக்கத்திற்கு ஆட்பட்டு தான்தோன்றித்தனமாக வாழ்வதனையும் மறுமைபற்றிய சிந்தனை மிகக் குறைவாக இருப்பதனையும் காணலாம்.

இத்தகைய துர்பாக்கிய நிலையில் இருந்து முஸ்லிம் சமூம் எழுச்சி பெறத் தேவையான இஸ்லாமிய கல்விக்கொள்கைகள் உலகில் அமுல்படுத்தப்படவேண்டும்.

அதற்குத் தேவையான இஸ்லாமிய உலக தலைமைத்துவம் மீள நபி வழியில் உருவாக்கப்படவேண்டும்.

அந்த தலைமைத்துவத்தினால் இஸ்லாமிய அடித்தளத்தில் வகுக்கப்படும் கல்விக்கொள்கையின் தாக்கம் மற்றும் பிரதிபலிப்பு இன்றுள்ள முதலாளித்துவ கல்விக் கொள்கையை மாற்றீடு செய்ய வேண்டும். அதுவே மனித சமூகம் அறிவு, கலாச்சாரம். பண்பாடு போன்றவற்றில் மேலோங்கிடவும் நீதி, நிறுவாகம் சிறக்கவும் மனித சமூகம் ஈருலகிலும் ஈடேற்றம் பெறவும் வழிவகுக்கும்.

No comments:

Post a Comment