Aug 21, 2013

இஸ்லாம் உலகில் மீள் எழுச்சிபெறுவதில் இன்றைய உலமாக்களின் பங்களிப்பு இன்றியமையாதது!


உலமாக்கள் நபிமார்களின் வாரிசுகள்…..! இவர்கள் மறுமைநாளை அஞ்சியவர்களாக “காலத்தின் தேவையாகிய தஃவாவை” முன்னெடுத்து “இஸ்லாம் மீண்டும் உலகில் எழுச்சிபெற” தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும்! தங்களது அமானிதம் பற்றி சிந்திக்க வேண்டும்!

உலமாக்கள் அல்லாஹ்வுக்கு மாத்திரம் அஞ்சக் கூடியவர்களாகவும் ஹக்கிற்காக போராடுபவர்களாகவும் தீனுல் இஸ்லாத்தினது பாதுகாவலர்களாகவும் திகழவேண்டும்!

இதுவே, இஸ்லாம் எழுச்சிபெற மறுமலர்ச்சிபெற இஸ்லாத்திற்கு எதிரான தீயசக்திகள் தோற்கடிக்கப்பட வழிவகுக்கும்!

நபி (ஸல்) கூறினார்கள் :
'உலமாக்கள் நபிமார்களின் வாரிசுகள். நபிமார்கள் தீனாரையோ திர்ஹமையோ வாரிசுச் சொத்தாக விட்டுச் செல்லவில்லை. எனவே எவர் ஒருவர் அவ்வறிவைப் பெற்றுக் கொண்டாரோ அவர் முழுமையானதொரு பங்கைப் பெற்றுக் கொண்டவராவார்.'

இந்த வகையில் “சித்தீக்” எனும் உண்மையை உரைக்கம் பண்பு “அமானா” எனும் அமானிதம் பேணும் பண்பு “பதானா” எனும் புத்திகூர்மை “தப்லீக் “ எனும் பிரச்சாரம் என்ற நான்கு வகைப் பண்புகளும் நபிமார்களது பண்புகளாகும்.

இத்தகைய உண்ணதமான பண்புகளுக்குச் சொந்தக்காரர்களாக, வாரிசா எமது உலமாக்கல் இருக்கும் போதுதான் வஹியின் ஒளியில் முழுமனித சமூகதிற்குமான நேர்வழி கிடைப்பதற்கும் குர்ஆன் சுன்னாவின்படி மனித சமூகம் வாழ்வியல் விவகாரங்களை ஒழுங்குபடுத்துவதற்கும் வழிவகுக்கும்.

இத்தகைய உண்ணதமான பணியை சுமந்த உலமாக்கல் அச்சமற்றவர்களாகவும், அல்லாஹ்வுக்கு மாத்திரம் அடிபணிந்து நடப்பவர்களாகவும், ஹக்கிற்காக போராடுபவர்களாகவும் இருக்கவேண்டும். அப்போதுதான் உலகில் நீதி நிலைக்கும்; மனித சமூகம் நல்வழிப்படும்.

இன்று உலகில் முஸ்லிம் ஆட்சியாளர்களது அநீதியை எதிர்த்து போராட வேண்டிய மிகப் பாரிய பணியை உலமாக்கள் கொண்டுள்ளதுடன் அல்லாஹ்வுடைய தீன் வாழ்வின் அனைத்து துறைகளிலும் ஒழுங்குபடுத்தப்பட முஸ்லிம்களது ஒரே தலைமை மீள நபி வழியில் உருவாக உழைக்கவும் கடமைப்பட்டவர்கள்.

இவர்களது மார்க்க உபதேசங்களில் இத்தகைய இஸ்லாமிய தலைமை உருவாகுவதன் அவசியம் பற்றி அதிகம் அழுத்தம் தொணிக்கவேண்டும்.

இது இன்றைய காலத்தின் தேவையாகும். இஸ்லாம் எழுச்சிபெற்றுவரும் இத்தருணத்தில் இன்றியமையாததாகும். ஹக்கிற்கும் பாதிலுக்கும் நடைபெற்றுவரும் போராட்டத்தில் இவர்களது பொறுப்புணர்ச்சியுடன் கூடிய ஈடுபாடும் அர்ப்பணிப்பும் மிகவும் அவசியமாகும் என்பதனை உணரவேண்டும்.

இவர்களுக்கு சமூகத்தை வழிநாடாத்துவதற்கான பாரிய பொறுப்புள்ளது. குப்பார்களுக்கு இஸ்லாத்தை தெளிவு படுத்தவும் அவர்களது நச்சுக்கருத்துக்களை எதிர்கொள்ள வேண்டிய தேவையும் உள்ளது.

இன்று உலமாக்களில் பெரும்பாலானவர்கள் மேற்கினது மதஒதுக்கல் சிந்தனைத் தாக்கத்திற்குற்பட்டு இஸ்லாத்தை பள்ளிக்குள் முடக்கிய நிலையில் தமது உபதேசங்களை நிறுத்திக் கொள்கிறார்கள்.

இவர்கள் இஸ்லாத்தை இன்றுள்ள முதலாளித்துவ உலக ஒழுங்கினது மாற்றீடாக அதன் வாழ்வியல் அம்சங்களை, பொருளாதார முறைமைகளை, அரசியல் ஒழுங்கை முன்வைத்து “ஒடுக்கப்பட்டுள்ள உலக மக்களுக்கு இஸ்லாம்தான் ஒரே தீர்வு” என்பது பற்றி ஆக்கபல கருத்தியல் முன்னெடுப்புகளை எடுக்க தவறியிருப்பதனை நாம் காணலாம்.

இன்று முஸ்லிம்களது ஈமானுக்கு வேட்டு வைக்கும், இருப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் போக்கை கண்டும் மௌனித்தபடி தானும் தன்பாடும் என்றபடி வாழும் மார்க்க அறிஞர்கள் தங்களது அமானிதம் பற்றி சிந்திக்கவேண்டும்.

“உலகில் நீதி நிலைத்திட, அல்லாஹ்வின் அருள் நிறைந்திட, மனிதகுலம் ஈடேற்றம் பெற, வாழ்வின் அனைத்து துறைகளிலும் இஸ்லாம் நிலைபெற” உலமாக்கள் நபிமார்கள் செய்த பணியாகிய “சியாசா” எனும் அரசியல் பணியை மேற்கொள்ளும் பாரிய பொறுப்பை சுமந்துள்ளார்கள்.

ஏனெனில் “இஸ்லாமிய அரசாகிய கிலாபா அரசை மீள நபி வழியில் நிறுவும் பணி ஒரு அரசியல் பணியாகும்”. அதன் “செயலாக்க அமைப்புகளை அடிப்படையாக கொண்டு மனித வாழ்வியல் விவகாரங்களை ஒழுங்குபடுத்தும் பணி” அரசியல் பணியாகும்.

இத்தகைய அரசியல் பணிமூலமே இஸ்லாம் வாழ்வின் அனைத்து துறைகளிலும் அமுலாக்கப்பட வழிவகுக்கும் என்பதனை இன்றை உலமாக்கள் உணர்ந்து நாளை அவர்களது அமானிதம் பற்றி வினவப்படும் அந்த மறுமைநாளை அஞ்சியவர்களாக காலத்தின் தேவையாகிய தஃவாவை முன்னெடுத்து இஸ்லாம் மீண்டும் உலகில் எழுச்சிபெற தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும். இது அவர்களது தார்மீகக் கடமையாகும்.

No comments:

Post a Comment