Aug 6, 2013

அதுவே எமது கேடயம்!

இஸ்லாம் அரசியலை சியாசா எனும் மக்கள் நலன் பேணுதல் என்கிறது. அதற்காகவே நபிமார்கள் உலகிற்கு வந்தார்கள்!

மூசா (அலை) கொடுங்கோலன் பிர்அவ்னிடம் இருந்து மக்கள் நலனை காத்தார்கள்!

இப்றாஹீம் (அலை) நும்ரூத் எனும் கொடுங்கோலனிடம் இருந்து மக்கள் நலனைக் காத்தார்கள்!

நபி (ஸல்) அவர்கள் அன்றைய குறைசித் தலைவர்களிடம் இருந்து மக்கள் நலனைக் காத்தார்கள்!

அவர்களை தொடர்ந்து வந்த குலபாக்கள் மக்கள் நலனை நபிவழியில் காத்தார்கள். இது 1924 மார்ச் வரை தொடர்ந்தது.

உதுமானிய கிலாபா வீழ்ச்சியுடன் மக்கள் நலன் காக்கப்படுவதும் இஸ்லாமும் முஸ்லிம்களும் பாதுகாக்கப்படுவதும் இல்லாமல் போய்விட்டது என்பதற்கு நாம் இன்று ஈராக் ஆப்கான் மாலி காசா கஸ்மீர் மற்றும் பர்மா போன்ற நாடுகளில் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் நடைபெறும் அழிவினை பட்டியலிடலாம்!

இந்த நிலை மாற மீள நபிவழியில் கிலாபா உருவாக வேண்டும்! அதுவே எமது கேடயம்!

No comments:

Post a Comment