Aug 6, 2013

இஸ்லாம் வெறுமனே ஆத்மீகத்தை போதிக்கும் மதமல்ல. அது ஒரு முழுமையான வாழ்க்கைச் சித்தாந்தமாகும்.

மனிதகுலம் முழுவதற்கும் பொதுவான செய்தியாக இஸ்லாம் விளங்குகிறது. 

மனிதனது வாழ்வியல் விவகாரங்கள் மற்றும் மனிதர்களுக்கு இடையிலான அனைத்து உறவுகளையும் அது நிர்ணயம் செய்கிறது. அனைத்து வாழ்வியல் விவகாரங்களில் எழும் பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வை இஸ்லாம் வழங்குகிறது. 

மேலும் படைப்பாளனான அல்லாஹ்வுடன் மனிதன் கொண்டுள்ள உறவு மனிதன் தனக்குத் தான்னே கொண்டுள்ள உறவு மனிதன் இதர மனிதர்களுடன் கொண்டுள்ள அனைத்து வகையான உறவுகளையும் அனைத்துக் காலங்களுக்கும் அனைத்து இடங்களுக்கும் பொருந்தும் வகையில் இஸ்லாம் நிர்ணயம் செய்துள்ளது.

இஸ்லாம் தனித்தன்மை கொண்ட தீர்க்கமான கருத்துக்களை கொண்டிருப்பதுடன் அவற்றில் இருந்து தனித்தன்மையான கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளது.

இக்கலாச்சாரம் வாழ்வியல் கண்ணோட்டம் குறித்து கோடிட்டுக் காட்டுவதுடன் அக்கலாச்சார வட்டத்தினுள் உறுதியான நிலைப்படுத்துகிறது.

அத்துடன் தனித்துவம் கொண்ட சிந்தனைகளையும் ஹலால் ஹறாம் அடிப்படையிலான வாழ்வியல் கண்ணோட்டத்தையும் தனித்துவம் கொண்ட வாழ்க்கை முறையையும் இஸ்லாமிய ஷரீஆ உருவாக்கியுள்ளது.

இஸ்லாத்தின் செய்தி ஒரு முழுமையான செயலாக்க அமைப்புகளைக் கொண்டுள்ளது.

ஆட்சியமைப்பு, பொருளாதாரம், சமூகம், கல்வி, உள்நாட்டு விவகாரம், வெளிநாட்டு விவகாரம் தொடர்பான அரசின் கொள்கைகளையும் அரசிற்கும் சமூகத்திற்கும் மத்தியில் உள்ள உறவுகளையும், அரசிற்கும் குடிமக்களுக்கு மத்தியில் உள்ள உறவுகளையும், போர் மற்றும் அமைதி ஆகியவற்றில் ஏனைய அரசுகள் மற்றும் சமூகங்களுக்கு மத்தியிலும் உள்ள உறவுகளையும் நிர்ணயித்துள்ள ஒரு முழுமையான வாழ்க்கைச் சித்தாந்தமாகும்.

இவ்வாழ்க்கைச் சித்தாந்தத்தை அமுல்படுத்தும் இஸ்லாமிய அரசே கிலாபத்து அரசாகும்

ஆனால் அத்தகைய இஸ்லாமிய அரசை இன்று முஸ்லிம் உம்மத் இழந்து நிற்கிறுது. அதனை மீள உருவாக்க உழைப்பது ஒவ்வொரு முஸ்லிமிதும் கடமையாகும்.

No comments:

Post a Comment