ஈரானிய புரட்சியின்போது பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரின் அருகிலுள்ள Neauphle-le-Château என்ற ஊரில் கொமைனி தங்கியிருந்தார். அப்போது அவரை வெள்ளை மாளிகையிலிருந்து அமெரிக்க அரசின் பிரதிநிதிகள் சந்தித்து அவரோடு பேச்சுவார்த்தைகள் நடத்தினர். பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகளின் முடிவாக அமெரிக்க அரசோடு இணக்கமாக நடந்து கொள்வது என்பதாக கொமைனி முழு சம்மதம் தெரிவித்தார். அப்போது அமெரிக்க பத்திரிக்கைகள் இந்த செய்தியை வெளியிட்டிருந்தன. இதை புரட்சிக்குப்பின் ஈரானிய குடியரசின் முதல் அதிபராயிருந்த அபுல் ஹசன் பனு சதர் 2000 ஆம் ஆண்டு அல் ஜசீராவிற்கு அளித்த பேட்டியில் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். வெள்ளை மாளிகை தரப்பினருக்கும் கொமைனி தரப்பினருக்கும் மத்தியில் ஏற்பட்ட பலவேறு பேச்சுவார்த்தையில் அமெரிக்கா, ஈரானின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை என்பதாக உடன்பாடு எட்டப்பட்டது. இதன் மூலம் ஈரானின் வெளிவிவகாரக் கொள்கையில் கொமைனி அமெரிக்காவிற்கு விட்டுக்கொடுத்து சமரசம் செய்துகொண்டார். இதன் பின்னர் கொமைனி பிரெஞ்சு விமானம் மூலம் ஈரான் வந்து சேர முழு ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. கொமைனிக்கு அதிகாரத்தை விட்டுக்கொடுக்கவேண்டுமென்று ஷா அரசால் பிரதமராக நியமிக்கப்பட்ட ஷஹ்புர் பக்தியாருக்கு அமெரிக்காவிடமிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதோடு கொமைனியோடு இணங்கி போகுமாறு ராணுவத்திற்கும் அச்சுறுத்தல் விடப்பட்டது.
ஈரானின் அரசியல் சாசன விதிமுறைகள், முஸ்லிம் நாடுகள் மேற்கத்திய முதலாளித்துவ அரசியல் சாசனத்தை மையமாகக் கொண்டு தொகுத்துள்ளதைப் போன்றே வரையறுக்கப்பட்டுள்ளது. ஈரானின் ஆட்சியமைப்பானது குடியரசு முறை, அமைச்சர்களுக்கு தனியதிகாரம், பாராளுமன்ற முறை, அதிகாரப் பகிர்வு போன்ற மேற்கத்திய ஆட்சியமைப்பு முறையை பின்பற்றியே இன்றும் உள்ளது. சில முஸ்லிம் நாடுகள் இஸ்லாத்தை அரசு மதமாக அறிவித்துள்ளது போன்றே ஈரானும் இஸ்லாத்தை அரசு மதமாக அங்கீகரித்துள்ளது. இதை வைத்து அதை இஸ்லாமிய அரசு என்றோ, இஸ்லாமிய சட்டங்கள் ஈரானை ஆட்சி செய்வதாகவோ ஒருபோதும் கருதிவிடக்கூடாது. ஏனெனில் அந்த நாட்டின் அரசியல் சாசனம் மற்றும் செயலாக்க அமைப்புகள் (Systems) இஸ்லாத்திற்கு முரணானவை. ஈரானுடைய அரசியல் சாசனம் இஸ்லாமிய அகீதாவைக் கொண்டு வகுக்கப்பட்டதல்ல. மாறாக தேசியவாத அடிப்படையில் மேற்கத்திய அரசியல் சாசன அமைப்பை தழுவி, பெரும்பாலான முதலாளித்துவ கோட்பாடுகளுடன் சில இஸ்லாமிய சட்டங்களை இணைத்து வகுக்கப்பட்டதாகும். மேலும் ஈரானிய புரட்சி ஏற்படுவதற்கு முன்னர், இஸ்லாமிய அமைப்பின் பிரதிநிதிகள் கொமைனியை சந்தித்து அமெரிக்காவிற்கு ஒத்துழைக்க வேண்டாம் என்று கூறியதோடு இஸ்லாமிய அரசியல் சாசனத்தை முன்மாதிரியாகக் கொள்ளுமாறும் விடுத்த வேண்டுகோளை கொமைனி முற்றிலும் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.
இமாம் ஜஃபர் சாதிக் அவர்களின் மத்ஹபான ஜஃபரி மத்ஹபை தழுவியே ஈரானின் சட்டங்கள் முன்னெடுத்து செல்லப்படுவதாக கூறுவது உண்மையல்ல. இஸ்லாமிய அறிஞர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஜஃபரி ஃபிக்ஹை, ஈரான் தன்னுடைய சுய விருப்பு வெறுப்புகளுக்காக புறந்தள்ளிவிட்டு முதலாளித்துவ சட்டங்களையே முன்னெடுத்து செல்கின்றது. சவூதி அரேபியா இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களில் சிலவற்றை மட்டும் பின்பற்றிவிட்டு, பொருளாதாரம், வெளியுறவுக் கொள்கை, இஸ்லாமிய ஆட்சியமைப்பு போன்ற விடயங்களில் இஸ்லாத்தை புறந்தள்ளி ஆட்சி நடத்துவது போன்றே ஈரானும் செயல்பட்டு வருகிறது. ஈரான் மேற்கொண்டுவரும் நேரடியான அல்லது மறைமுகமான அரசியல் நடவடிக்கைகள் அமெரிக்காவிற்கு எதிரானதாக இருந்ததில்லை. மாறாக அவை அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு இணங்கி போகின்றதாகவும் அமெரிக்காவின் திட்டங்களை அங்கீகரிப்பதாகவும் உள்ளது. இதற்கு ஏராளமான உதாரணங்களை கூறமுடியும். உதாரணமாக, லெபனானில் ஈரானால் உருவாக்கப்பட்டு ஈரானுடைய வழிகாட்டுதலில் செயல்பட்டுவரும் ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லாவை லெபனான் அரசு சிறப்பு ராணுவ பிரிவாக அங்கீகரித்துள்ளது. லெபனான் அரசாங்கம் மதச்சார்பற்ற கொள்கைகைகளையும் அமெரிக்க நலன்களை பேணி பாதுகாத்துவருவதையும், லெபனானில் வேறு எந்த பிரிவினருக்கும் இப்படிப்பட்ட இராணு பிரிவை வைத்திருக்க அனுமதியில்லை என்பதையும் நாம் அறிந்தே வைத்துள்ளோம். அமெரிக்க நலன்களை பேணி பாதுகாத்துக்கொண்டு சிரியாவில் மக்களை கொன்றுகுவித்து வரும் கொடுங்கோலன் பசர் அல் அசாதை காப்பாற்ற சிரியாவிற்கு ஹிஸ்புல்லாவை ஈரான் அனுபபிய செயல் மூலம் அமெரிக்க நலன்களை பாதுகாக்க ஈரான் உதவியுள்ளதை அறிந்துகொள்ளலாம். கொடுங்கோலன் பசர் அல் அசாத் ஷியா பிரிவைச் சார்ந்தவன் என்பதால் ஈரான் இவ்வாறு நடந்து கொள்கிறது என்று சிலர் கூறுவது உண்மையில்லை. ஈரானுடைய இந்த செயல்பாடு, இஸ்லாத்தை பாதுகாக்கவோ அல்லது ஷியா கொள்கைகளை பரப்புவதற்கோ ஒருபோதும் உதவாது. மாறாக அமெரிக்க நலன்களையே பாதுகாக்க உறுதுணையாக அமையும். பசர் அல் அசாத் பின்பற்றி வரும் இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிட்ட பிரிவான அலவிஷியா கோட்பாட்டிற்கும் ஈரானியஅரசால் அங்கீகரிக்கப்பட்ட பிரிவான இஸ்னா அஸரிய்யா பிரிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment