Sep 9, 2013

அல்ஹு கும் ஷரியா (பகுதி-2) Divine Rules (AlHukm Shar’iah)


இஜ்திஹாத் பற்றிய சில அறிவை பெற்றவராக இல்லாத நிலையில் ஒருவர் ஆதாரங்களை அறிந்து கொள்ள இயலாமல் ஒரு முஜ்தஹிதை தக்லீத் செய்வரானால் அவர் ஆம்மி (AAMMI) எனப்படுவார். இந்த ஆம்மி முஜ்தஹிதீன்கள் அபிப்ராயத்தை கண்டிப்பாக தக்லீத் செய்யவேண்டும் மேலும் முஜ்தஹிதீன்கள் இஸ்தின்பாத் செய்து கொண்டுவந்தால் அல்ஹு கும் ஷரியாவை நடைமுறைப்படுத்த வேண்டும். அவரைப் பொறுத்தவரை அவர் பின்பற்றும் முஜ்தஹித் கொண்டு வந்ததுதான் அவர் நடைமுறைப்படுத்த வேண்டிய அல்ஹு கும் ஷரியாவாகும். ஆகவே இஜ்திஹாத் செய்வதற்கு தகுதியுள்ள ஒரு முஜ்தஹித் இஸ்தின்பாத் செய்து கொண்டுவந்த ஹு கும்தான் அல்ஹு கும் ஷரியா எனப்படுகிறது. அது அல்லாஹ்(சுபு)வுடைய ஹு குமாகும். அதை விடுத்து வேறேரன்றை தக்லீத் செய்வதிற்கு அந்த முஜ்தஹிதுக்கு அனுமதி இல்லை மேலும் அந்த முஜ்தஹிதை பின்பற்றுகிறவர்களுக்கும் அதுதான் அல்லாஹ்(சுபு)வுடைய ஹு குமாகும் அதை விட்டுவிடுவதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை.

ஒரு விஷயத்தில் ஒரு முக்கலித் (MUQQALID- பின்பற்றுவர்) ஒரு முஜ்தஹிதை தக்லீத் செய்து அதனடிப்படையில் ஒரு ஹு குமை செயல்படுத்துவாரேயானால் பிறகு அந்த விஷயத்தில் வேறு முஜ்தஹிதை தக்லீத் செய்யவதற்காக அந்த ஹு குமை விடுவதற்கு அவருக்கு அனுமதி இல்லை. எனினும் ஒரு முக்கலித் மற்ற விசயங்களில் வேறு ஒரு முஜ்தஹிதை தக்லீத் செய்யவதற்கு அனுமதி உண்டு. ஏன் எனில் இஜ்மாஅஸ்ஸஹாபாவின் அடிப்படையில் வெவ்வேறுவிசயங்களில் வெவ்வேறு ஆலிம்களை ஒரு முக்கலித் கோருவதற்கு அனுமதி உண்டு. ஷாபி மத்ஹுப் போன்ற ஒரு மத்ஹுப்பை முற்றிலுமாக தக்லீத் செய்யவதற்கு ஒரு முக்கலித் மேற்கொள்வாரேயானால் பின்பு அவர் கிழ்கண்ட நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர் தக்லீத் செய்யும் மத்ஹுப்பின்படி ஏற்கனவே அவர் நடைமுறைப்படுத்தவரும் விசயங்களில் வேறு ஒரு முஜ்தஹிதை தக்லீத் செய்யவதற்கு அவருக்கு இல்லை. அவர் ஏற்கனவே நடைமுறைப் படுத்தாத விசயங்களில் மற்ற ஒரு முஜ்தஹிதீன்களை தக்லீத் செய்யவதற்கு அவருக்கு உண்டு. ஒரு முஜ்தஹித் தன்னுடைய இஜ்திஹாதை நான்கு ஷரத்துக்களின் அடிப்படையில் விட்டுவிட வேண்டும்:

1) ஒரு முஜ்தஹித் மற்றொரு முஜ்தஹிதின் இஜ்திஹாத் வலுவான ஆதாரத்தைப் பெற்றுருக்கிறது என்பதை அறியும் போது தன்னுடைய இஜ்திஹாதை விட்டுவிட்டு வலுவான ஆதாரத்தைப் பெற்றுள்ள இஜ்திஹாதை தக்லீத் செய்யவேண்டும்.

2) ஒரு முஜ்தஹித் மற்றொரு முஜ்தஹித் இஜ்திஹாதிலும், இஸ்தின்பாதிலும் சிறந்தவராக இருக்கிறார் என்பதை அறியும் போது தன்னுடைய இஜ்திஹாதை விட்டுவிட்டு தன்னைவிட சிறந்த முஜ்தஹிதின் இஜ்திஹாத் தக்லீத் செய்யவேண்டும்.

3) ஒரு முஜ்தஹித் இஜ்திஹாத் மூலமாக ஒருவிசயத்தில் ஒரு ஹு குமை பெற்றுருக்கும் நிலையில் உஸ்மான் (ரலி) அவர்களுடைய பையாத் சமயத்தில் நிகழ்ந்ததைப் போல முஸ்லிம்கள் அனைவரும் ஒரே அபிப்ராயத்தின் கீழ் ஒன்றுபட அவசியம் ஏற்பட்டால், அப்போது அந்த முஜ்தஹித் இஜ்திஹாதை விட்டுவிட்டு உம்மாஹ்வின் ஒற்றுமைக்கு ஏறுபுடைய இஜ்திஹாதை தக்லீத் செய்யவேண்டும்.


4) கலிபா ஒரு ஹு குமை ஏற்றுஅமுலாக்கம் (ADOPTION) செய்திருக்கும் நிலையில் அதே விசயத்தில் ஒரு முஜ்தஹித் வேறு ஒரு அபிப்ராயத்தை பெற்று இருந்தாலும் அப்போது தன்னுடைய இஜ்திஹாதை விட்டுவிட்டு கலிபா ஏற்றுஅமுலாக்கம் செய்துள்ள ஹு குமை அவர் தக்லீத் செய்யவேண்டும்.

No comments:

Post a Comment