Sep 9, 2013

ஒரு தேசத்தின் வேஷம் கலைகிறது !



அது 2001 செப்டம்பர் 11 திகதி வழமை போலவே விடிந்த அந்தப் பொழுது ஒவ்வொரு அமெரிக்க குடிமகன் உள்ளத்திலும் 1940 களில் ஜப்பான் நடத்திய 'பேர்ல் ஹார்பர் ' தாக்குதலை விட பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது .

9/11 என்ற சுருக்கப் பெயரோடு அழைக்கப்படும் இந்த நாள் சர்வதேச அரசியலின் நகர்வுப் பாதையை உத்தியோக பூர்வமாக இன்னொரு திசையை நோக்கி நகர்த்தியது . இன்னொரு வகையில் சொல்வதானால் முதலாளித்துவ ஏகாதிபத்தியம் தன் பெற்றோலிய கொள்ளைக்கான ஆயுத பூஜையை தன் சுய பலியோடு தொடங்கிய நாளாக குறிப்பிடலாம் .

பலியிட கடாக்களை வளர்ப்பதும் ,அதில் சிலதை தன் மார்பில் பாய வென்றே வளர்த்து அந்த நியாயத்தில் அதை உருட்டி ,பிரட்டி பின் தேவையான சந்தர்ப்பத்தில் பலியிடுவது கபிடலிச பொலிடிக்ஸ் பயன் படுத்தும் அடிப்படை விதி என்பது புரியாவிட்டால் நான் இங்கு பதிவிடுவது உணரக் கூடியதாக இருக்காது .

சதாம் ஹுசைனோ , கடாபியோ , அல்லது 9/11 தாக்குதலின் முக்கிய குற்ற வாளியாக இனம் காட்டப்பட்ட ஒசாமா பின் லாடனோ இந்த புரபிட் பெனிபிட் பலிக்கடா அரசியல் விதியில் தப்பிக்க வில்லை .

அமெரிக்கா என்ற தேசத்தின் ஆரம்பமே இரத்தக் கரை படிந்தது தான் .
அது செவ்விந்தியர் என்ற அந்த நிலத்தின் சுதேசிகளை கொன்று குவித்து ,அடிமைப்படுத்தி ஆக்கிரமிப்பு செய்ததுடன் தான் ஆரம்பித்தது .

இந்த வகையில் இவர்கள் சொல்லும் ஜனநாயகம் எனும் அரசியல் அகீதாவை நாம் இப்படியும் நோக்கலாம். சில ஏமாளிகளான மக்களால் , சில ஏமாளிகளான மக்களை அழித்து ,அடக்கி சில குறிப்பிட்ட மேட்டுக்குடி மக்களை வளத்தோடும் ,பலத்தோடும் வாழவைப்பதாகும் .

அந்த வகையில் இந்த 9/11 சம்பவம் சிலருக்காக பல எதிர்கால அரசியல் , பொருளாதார இலாபங்களை நோக்கிய சுய அழிப்பின் மூலமான ஒரு ஆதார வடிவ நியாயத்தை ஏற்படுத்தும் திட்டமாக இருக்கலாம் ; எனும் சந்தேகத்தை வலுப்படுத்த அதன் பின்னால் நடந்த வளம் மிக்க முஸ்லீம் உலகம் மீதான அதன் இராணுவ ஆக்கிரமிப்பு சிறந்த ஆதாரமாகப் படுகின்றது . இப்படிப் பார்த்தால் united state இன் ஒவ்வொரு குடிமகனும் கூட பக்குவமாக வளர்க்கப்படும் குறித்த சில முதலாளிகளின் பலிக்கடாக்கள் தான் என்று ஆகிவிடும் .

இந்த 9/11 சம்பவம் அடிப்படைவாதி ,தீவிரவாதி என்ற வார்த்தைகளை தாண்டிய ஒரு பதப் பிரயோகமான இஸ்லாமிய பயங்கர வாதம் என்ற கருத்தியலை பின் லாடன் மீதும் ' அல் கைதா ' மீதும் அள்ளி வீசுவதன் மூலம் முழு மனித குலத்துக்கும் ஒரு பொது எதிரியை உருவாகிவிட்டான் ! என்ற பிரச்சார யுத்தம் மூலம் தான் செய்யப்போகும் சில எதிர்கால வேலைகளுக்காக 'advance நியாயத்தையும் ,அதற்கான கூட்டு அணியையும் தயார்படுத்தியது .

எது எப்படியோ இந்த முதலாளித்துவ மேட்டுக்குடிகளின் இலாப அறுவடைக்கான பலிக்கடாக்கள் முஸ்லீம்கள் மட்டுமல்ல ,அமெரிக்கர்களும் ,ஏன் முழு மனித சமூகமும் தான் என்ற வகையில் ஒரு உண்மையான விடுதலைப்போரை நியாயமான பார்வையுள்ள முழு உலகும் எதிர் பார்த்துள்ளது . அது அந்த முதலாளித்துவமே தேர்ந்துள்ள எதிர் சக்தியான இஸ்லாத்தின் நிழலில் இருந்துதான் என்பது புரியும் காலம் வெகுதூரத்தில் இல்லை .

No comments:

Post a Comment