Sep 9, 2013

இஸ்லாமிய ஆட்சி என்பது....?


வாழ்வில் எழும் அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வை குர்ஆன் சுன்னாவில் இருந்து எடுத்து மனிதனது வாழ்வியல் விவகாரங்களை ஒழுங்குபடுத்தும் ஆட்சிமுறைதான் இஸ்லாம் கூறும் ஆட்சிமுறையாகும்!

இஸ்லாம் ஆட்சிசெய்யப்படுவதென்பது குறித்த தேசத்திற்குள் மட்டுப்படுத்தப்பட்டதாக அமைய முடியாது.

அது தாவாமூலமும் ஜிஹாத் மூலமும் அவ்வரசினால் முன்னெடுக்ப்படவேண்டும்.

அத்துடன் ஒரு முஸ்லிமுக்கு பிரச்சினை என்றால் அந்த ஆட்சியாளன் அது குறித்து தீவிரமான நடவடிக்கை எடுத்து குறித்த இஸ்லாத்தின் எதிரியுடன் கடும்போக்கை கையாளவேண்டும்.

மக்கள் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியாளனை பதவிநீக்கம் செய்யும் வழிமுறையாக காலவரையறை என்பது கிடையாது.

4 வருடத்திற்கு ஒருமுறை விரும்பியவரை தெரிவுசெய்து ஆட்சிசெய்வது என்பது எமது வழிமுறை இல்லை!

ஆட்சித் தலைவராக ஒருவர் நியமிக்கப்பட்டால் அவரிடம் தெளிவான குப்ர் வெளிப்படும் வரை அந்த ஆட்சியாளரை பதவி நீக்கம் செய்ய முடியாது.

அவ்வாட்சியாளர் இன்று முஸ்லிம்கள் கருவறுக்கப்படும் போது கண்டுகொல்லாமல் மேற்கோடும் அமெரிக்கா போன்ற ஏகாதிபத்தியவாதிகளோடும் கைகுழுக்கியபடி முஸ்லிம்களது விவகாரங்களை கவனிக்க முடியாது.

அவ்வாட்சியாளர் எதிரிகளுடன் உரிய முறைப்படி நடந்து உம்மத்தை மீட்கவேண்டும்.

இவை யாவற்றையும் இந்த பல்கட்சி முறைகளுடன் கூடிய எதிர்கட்சி ஆளும்கட்சி அமைப்பினால் வடிவமைக்கப்பட்ட மனிதன் சட்டத்ததை ஆக்கும் சட்டசபை வடிவமைப்புக்குள் இருந்து கொண்டு நிறைவேற்ற முடியாது.

நிறைய விட்டுக் கொடுப்பபுடன் பகுதியாக தீனுல் இஸ்லாத்தை அமுல்படுத்த முடியுமே தவிர முழுமையாக இஸ்லாத்தை ஆளுகை நிலைக்குள் வைத்துக்கொள்ள முடியாது.

இஸ்லாம் வாழ்வின் அனைத்து துறைகளிலும் அமுலாக்கப்படத் தேவையான அரசு கிலாபா அரசு அதுவாகும்.

இவ்வரசு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில் நபி வழியில் மீள் உருவாக்கம் செய்யப்பட வேண்டும்.

அதுவே இன்று முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் அனைத்து விதமான சவால்களுக்கும் முகம் கொடுக்கும் அரசாகும்.

இவ்வரசு முஸ்லிம் நாட்டு இராணுவ நுஸ்றாவுடன் நிறுவப்படுவது நபி வழியாகும்.

அவ்வாறு நிறுவப்பட்டால் அவ்வரசு இன்றுள்ள முஸ்லிம் நாடுகளுக்கு இடையிலான தேசிய எல்லைகளை களையச் செய்யும். முஸ்லிம்களை உம்மத் எனும் சகோதரச் சிந்தனையால் இணைக்கும். பொது எதிரியை எதிர்கொள்ளும். தீனுல் இஸ்லாத்தை முழுமையான தனது அரசின் எல்லைக்குள் அமுல்படுத்தும். வெளிநாட்டு கொள்கை மூலமும் ஜிஹாத் மூலம் அவ்வரசு தீனுல் இஸ்லாத்தை உலகமுழுவதிலும் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கும்.

No comments:

Post a Comment